நன்றி விகடன்.
கார்குழல் வகிடு கொஞ்சி
காற்பிறை நெற்றி கொஞ்சி
வில்லொத்த புருவம் கொஞ்சி
வீர வாள் மூக்கைக் கொஞ்சி
விரற்கடை கீழிறங்கி
வியர்த்த மேலுதடு கொஞ்சி
கருவிழி முத்தைக் காக்கும்
கவின்மிகு இமைகள் கொஞ்சி
சிவந்த உன் கன்னம் கொஞ்சி
சிரிக்கும் உதட்டோரம் கொஞ்சி
சங்குப் பூ காது கொஞ்சி
சங்கு போலுன் கழுத்தும் கொஞ்சி
துறுத்திய முகவாய் கொஞ்சி
துடிக்கும் கீழ் உதடும் கொஞ்சி
அணைத்து உன் அதரபானம்
ஆவலாய் உண்ணும்காலே
அமரனே வந்து நின்று
அமுதம் ஈந்திடினும் வேண்டேன்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தனக்குள் எழும்
எண்ண அலைகளை
அடக்கித் தவித்து
முடியாமல்
வளர்த்துச் சீராட்டி
வார்த்தைக் குழந்தையாய்
பெற்றெடுத்து
பதிவுலகில் வளைய வரவிடும்
ஏகலைவர்களின்
கட்டைவிரல் திருடும்
துரோணர்கள்.
54 comments:
தனக்குள் எழும்
எண்ண அலைகளை
அடக்கித் தவித்து
முடியாமல்
வளர்த்துச் சீராட்டி
வார்த்தைக் குழந்தையாய்
பெற்றெடுத்து
பதிவுலகில் வளையவிடும்
ஏகலைவர்களின்
கட்டைவிரல் திருடும்
//
அருமையான வரிகளில் நல்ல கவிதை.
//ஏகலைவர்களின்
கட்டைவிரல் திருடும்
துரோணர்கள்.//
அருமையான கவிதை தலைவா!
//அமரனே வந்து நின்று
அமுதம் ஈந்திடினும் வேண்டேன்!//
இச்சுவை தவிர யான்போய்
இந்திரலோகமாளும்
அச்சுவைப் பெறினும் வேண்டேன்...
(இங்கேயிருந்தானே சுட்டீங்க)
//விறர்க்கடை கீழிறங்கி
வியர்த்த மேலுதடு கொஞ்சி//
யப்பா....
இரண்டாவது இன்னும் புரியல...எங்க சேக்காளிங்க வரட்டும்....அப்பறமா மீட் பண்றேன்....
ஐயா....ஜாலி....1/3....
முடில இப்பிடி மைனஸ் ஓட்டு வாங்குறதுக்குன்னே நீ பதிவு போடுற போல
எத்தினி வாட்டி சொல்லியிருக்கேன் ஓட்டுக்காக நாம எழுதலை சும்மா ஒரு டயரி மாதிரின்னு...
மிஞ்சி போன தமிழ் மணத்துல இருந்து பத்து பதினஞ்சு பேர் வருவாய்ங்களா விடு நைனா ஏன் கவலைப்படுற
மைனஸ் ஓட்டு போடுறதுக்காகவாவது உன்னோட பதிவுக்கு வர்றாய்ங்களேன்னு சந்தோசப்படுவியா? இதுக்கு போயி அழுது ஆர்ப்பாட்டம் பண்ற போ...
//அணைத்து உன் அதரபானம்
ஆவலாய் உண்ணும்காலே
அமரனே வந்து நின்று
அமுதம் ஈந்திடினும் வேண்டேன்!//
ம்ம்ம்ம்ம் அருமைங்க...
//ஏகலைவர்களின்
கட்டைவிரல் திருடும்
துரோணர்கள்.//
யாரை திட்றீங்க...
தமிழ்மணம் விழல..அப்பறம் போடறேன்
//அணைத்து உன் அதரபானம்
ஆவலாய் உண்ணும்காலே//
மக்கா... மூனு ரவுண்ட் அடிச்ச மாதிரியிருக்கே....
//தனக்குள் எழும்
எண்ண அலைகளை
அடக்கித் தவித்து//
அவனா அடக்கச் சொன்னான்
//முடியாமல்
வளர்த்துச் சீராட்டி
வார்த்தைக் குழந்தையாய்
பெற்றெடுத்து //
இது வளர்ந்தா ஒரு வேளை அவன் கட்ட வெரல கட் பண்ணிடுமோ
//பதிவுலகில் வளையவிடும்
ஏகலைவர்களின்//
அட நம்ம பத்தி சொல்லியிருக்காரு
//கட்டைவிரல் திருடும்
துரோணர்கள். //
அட அந்த நாய்க்கு கட்டை வெரல கமுத்தறதா... நிமுத்தறதானு தெரியலீங்க
//கருவிழி முத்தைக் காக்கும்
கவின்மிகு இமைகள் கொஞ்சி
சிவந்த உன் கன்னம் கொஞ்சி
சிரிக்கும் உதட்டோரம் கொஞ்சி// செம ரொமண்டிக்க்க்க்க்கக்க்க்..... வரிகள் பாஸ்.
தமிழ்மணத்துல பிளஸ் ஓட்டு போட்டாச்சே :)
முதல் கவிதைல காதல்ரசம் சொட்டுது. "வாலி"பக் கவிஞர் ஆகிட்டிங்க போல?
//விறர்க்கடை//
விரற்கடை இல்ல?
//கட்டைவிரல் திருடும்
துரோணர்கள்.
//
ரெண்டு நாள் முன்னால அந்தம்மா எச்சரிக்கை விட்டுச்சி. இன்னிக்கி நீங்க ஆற்றாமையா சொல்லியிருக்கிங்க
//ஏகலைவர்களின்
கட்டைவிரல் திருடும்
துரோணர்கள்.//
அருமை
அன்பின் பாலா
அருமையான கவிதை - எளிமையான சொற்கள் - கற்பனை வளம் - கார்குழல் - காற்பிறை - வில் வாள் -
வியர்வை - கருவிழிமுத்து - கவின்மிகு இமை - சிரிக்கும் உதடு - சிவந்த கன்னம் - துடிக்கும் கீழுதடு - அதரபானம்
அமுதம் ஈந்திடினும் வேண்டேனே - இல்லை - அதனை மாந்தி விட்டு
இதனை - அதரபானத்தினை - ருசிப்பேனே
நல்வாழ்த்துகள் பாலா
காதல் சம்மந்தமான வர்ணனைகளில் உங்களை மிஞ்ச ஒருவர்தான் உண்டு. அது...
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
வானம்பாடிகள் அய்யாதான்!
தியாவின் பேனா said...
/ அருமையான வரிகளில் நல்ல கவிதை./
நன்றி தியா
சூர்யா ௧ண்ணன் said...
/ அருமையான கவிதை தலைவா!/
நன்றி சூர்யா.
க.பாலாசி said...
/ இச்சுவை தவிர யான்போய்
இந்திரலோகமாளும்
அச்சுவைப் பெறினும் வேண்டேன்...
(இங்கேயிருந்தானே சுட்டீங்க)/
ஏப்பா? அதுல அவரு போய் வேணாங்குறாரு. இங்க வந்து கெஞ்சினாலும் வேணாங்குறேன். அப்புறம்,என்னாத்த சுடுறது.
/ யப்பா....
இரண்டாவது இன்னும் புரியல...எங்க சேக்காளிங்க வரட்டும்....அப்பறமா மீட் பண்றேன்..../
அடங்கொன்னியா. இதுக்கு சேக்காளீங்க வந்து என்ன பண்ண.=))
கொஞ்சுவதில் இத்தனைவகையா?
நல்ல கவிதை.
க.பாலாசி said...
/ஐயா....ஜாலி....1/3..../
அதுக்குள்ள 2 துரோணனுங்க வந்தாசா?=))
பிரியமுடன்...வசந்த் said...
/முடில இப்பிடி மைனஸ் ஓட்டு வாங்குறதுக்குன்னே நீ பதிவு போடுற போல
எத்தினி வாட்டி சொல்லியிருக்கேன் ஓட்டுக்காக நாம எழுதலை சும்மா ஒரு டயரி மாதிரின்னு...
மிஞ்சி போன தமிழ் மணத்துல இருந்து பத்து பதினஞ்சு பேர் வருவாய்ங்களா விடு நைனா ஏன் கவலைப்படுற
மைனஸ் ஓட்டு போடுறதுக்காகவாவது உன்னோட பதிவுக்கு வர்றாய்ங்களேன்னு சந்தோசப்படுவியா? இதுக்கு போயி அழுது ஆர்ப்பாட்டம் பண்ற போ.../
இதுக்கெல்லாம் யாரு அழுறா. நம்ம கேரக்டரே புரியல உனக்கு. =)). இதான் வேணும்.
புலவன் புலிகேசி said...
/ ம்ம்ம்ம்ம் அருமைங்க...
நன்றிங்க
/ யாரை திட்றீங்க.../
திட்டலைங்க சீண்டுறேன்.
புலவன் புலிகேசி said...
/தமிழ்மணம் விழல..அப்பறம் போடறேன்/
=))
ஈரோடு கதிர் said...
/ மக்கா... மூனு ரவுண்ட் அடிச்ச மாதிரியிருக்கே....//
அதானா டவுட்டுன்னு இடுகை=))
ஈரோடு கதிர் said...
/ அவனா அடக்கச் சொன்னான்/
சொல்லீட்டாலும்...
/இது வளர்ந்தா ஒரு வேளை அவன் கட்ட வெரல கட் பண்ணிடுமோ/
அப்படித்தான் நினைக்கிறாய்ங்க போல.
/ அட நம்ம பத்தி சொல்லியிருக்காரு/
வளைச்சு வளைச்சு திருடுற நம்மளத்தான்.
/அட அந்த நாய்க்கு கட்டை வெரல கமுத்தறதா... நிமுத்தறதானு தெரியலீங்க//
திருட்டுல்ல. பதட்டமா இருக்கத்தான் செய்யும். போட்டும்
பூங்குன்றன்.வே said...
செம ரொமண்டிக்க்க்க்க்கக்க்க்..... வரிகள் பாஸ்.
தமிழ்மணத்துல பிளஸ் ஓட்டு போட்டாச்சே :)//
நன்றிங்க.:))
முகிலன் said...
/முதல் கவிதைல காதல்ரசம் சொட்டுது. "வாலி"பக் கவிஞர் ஆகிட்டிங்க போல?//
அவர் கவனம் வந்ததே பெரிய விடயம். நன்றி.
/ விரற்கடை இல்ல?/
ஆமாங்க. திருத்திட்டேன். நன்றிங்க.
/ ரெண்டு நாள் முன்னால அந்தம்மா எச்சரிக்கை விட்டுச்சி. இன்னிக்கி நீங்க ஆற்றாமையா சொல்லியிருக்கிங்க//
இது ஆற்றாமையில்லையே. சீண்டல்.
T.V.Radhakrishnan said...
//ஏகலைவர்களின்
கட்டைவிரல் திருடும்
துரோணர்கள்.//
அருமை
நன்றிங்க
cheena (சீனா) said...
அன்பின் பாலா
அருமையான கவிதை - எளிமையான சொற்கள் - கற்பனை வளம் - கார்குழல் - காற்பிறை - வில் வாள் -
வியர்வை - கருவிழிமுத்து - கவின்மிகு இமை - சிரிக்கும் உதடு - சிவந்த கன்னம் - துடிக்கும் கீழுதடு - அதரபானம்
அமுதம் ஈந்திடினும் வேண்டேனே - இல்லை - அதனை மாந்தி விட்டு
இதனை - அதரபானத்தினை - ருசிப்பேனே
நல்வாழ்த்துகள் பாலா//
=)). நன்றிங்க சீனா.
பிரபாகர் said...
/காதல் சம்மந்தமான வர்ணனைகளில் உங்களை மிஞ்ச ஒருவர்தான் உண்டு. அது...//
ஓஹோ=))நன்றி பிரபாகர்.
காதல் கலவியென்று
கருத்தில் பலவுஞ்சொல்லும்
வானம்பாடி நைனா
வாழ்க பல்லாண்டு!
(சந்தம் சரியா இருக்கா?)
எம்.எம்.அப்துல்லா said...
/காதல் கலவியென்று
கருத்தில் பலவுஞ்சொல்லும்
வானம்பாடி நைனா
வாழ்க பல்லாண்டு!
(சந்தம் சரியா இருக்கா?)/
ஒரு நாள் பொறுங்க. பழமைய கேப்போம். (அப்பாடி எஸ்கேப்)
தனக்குள் எழும்
எண்ண அலைகளை
அடக்கித் தவித்து
முடியாமல்
வளர்த்துச் சீராட்டி
வார்த்தைக் குழந்தையாய்
பெற்றெடுத்து
பதிவுலகில் வளையவிடும்
ஏகலைவர்களின்
கட்டைவிரல் திருடும்
துரோணர்கள். ................மலையை குடைவதால் எலிக்கு பெருமை இல்லை. விடுங்க, ஐயா!
தனக்குள் எழும்
எண்ண அலைகளை
அடக்கித் தவித்து
முடியாமல்
வளர்த்துச் சீராட்டி
வார்த்தைக் குழந்தையாய்
பெற்றெடுத்து
பதிவுலகில் வளையவிடும்
ஏகலைவர்களின்
கட்டைவிரல் திருடும்
துரோணர்கள். ................மலையை குடைவதால் எலிக்கு பெருமை இல்லை. விடுங்க, ஐயா!
உங்களை poke செய்யும் கட்டை விரலுக்கு கூட கவிதையா?
// கார்குழல் வகிடு கொஞ்சி
காற்பிறை நெற்றி கொஞ்சி //
சரி அப்புறம்...
// வில்லொத்த புருவம் கொஞ்சி
வீர வாள் மூக்கைக் கொஞ்சி //
இது வேறயா?
// கருவிழி முத்தைக் காக்கும்
கவின்மிகு இமைகள் கொஞ்சி //
ரொம்ப முக்கியம்
//சிவந்த உன் கன்னம் கொஞ்சி
சிரிக்கும் உதட்டோரம் கொஞ்சி //
அய்யோடா..!!
// சங்குப் பூ காது கொஞ்சி
சங்கு போலுன் கழுத்தும் கொஞ்சி //
ஆஹா..
// துறுத்திய முகவாய் கொஞ்சி
துடிக்கும் கீழ் உதடும் கொஞ்சி //
சூப்பரோ சூப்பர்
// அணைத்து உன் அதரபானம்
ஆவலாய் உண்ணும்காலே //
பிரமாதம்... அண்ணே பிரமாதம்
// அமரனே வந்து நின்று
அமுதம் ஈந்திடினும் வேண்டேன்! //
நீங்க சொன்ன அத்தனையும் அமுதம்.. அப்புறம் தனியா எதுக்கு...
இத்தனை செஞ்சபிறகும் பூரி கட்டை அடிக்கு தப்பிப்பது எப்படி என்று ஒரு கவிதை எழுதுங்க.
// தனக்குள் எழும்
எண்ண அலைகளை //
இருக்கு சொல்றீங்க...
//அடக்கித் தவித்து
முடியாமல்
வளர்த்துச் சீராட்டி
வார்த்தைக் குழந்தையாய்
பெற்றெடுத்து
பதிவுலகில் வளைய வரவிடும்
ஏகலைவர்களின் //
கிளிக்கு ரெக்க முளைச்சுடுச்சு.. அது பறந்துப் போச்சு மாதிரி... வளர்த்து சீராட்டி பாராட்டி அது பறந்து வலையுலக்குப் போயிடுச்சா?
//கட்டைவிரல் திருடும்
துரோணர்கள். //
துரோகிகள் அண்ணே..
arumai sir..
அண்ணே! 12 தடவ கொஞ்சியிருக்கீங்க. அண்ணே! கவித போரடிக்குதண்ணே! வழக்கம்போல பத்தி எரியற மாதிரி பதிவ போடுங்கண்ணே!
Chitra said...
//...............மலையை குடைவதால் எலிக்கு பெருமை இல்லை. விடுங்க, ஐயா!//
இது எலிக்கு வச்ச பொறிங்க.
Chitra said...
/உங்களை poke செய்யும் கட்டை விரலுக்கு கூட கவிதையா?/
=))
இராகவன் நைஜிரியா said...
// நீங்க சொன்ன அத்தனையும் அமுதம்.. அப்புறம் தனியா எதுக்கு...//
அதான் வேணாம்னுட்டேனே.
/இத்தனை செஞ்சபிறகும் பூரி கட்டை அடிக்கு தப்பிப்பது எப்படி என்று ஒரு கவிதை எழுதுங்க.//
அது கம்பேனி சீக்ரட். =))
இராகவன் நைஜிரியா said...
/ துரோகிகள் அண்ணே..//
நம்ம அகராதில சைக்கோ=))
கலகலப்ரியா said...
/ arumai sir..//
நன்றிம்மா. ஆனாலும் கலகல பின்னூட்டம் ரொம்ப நாளா மிஸ்ஸிங்.அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
இப்படிக்கு நிஜாம்.., said...
/அண்ணே! 12 தடவ கொஞ்சியிருக்கீங்க. அண்ணே! கவித போரடிக்குதண்ணே! வழக்கம்போல பத்தி எரியற மாதிரி பதிவ போடுங்கண்ணே!//
கொஞ்சினவன் கணக்குப் பாத்தா கஞ்சியும் மிஞ்சாதுன்னு புதுமொழிண்ணே=))
அட ரெண்டாவது கவிதை எரிச்சல்ல தானே போட்டேன். அதான் முந்தா நேத்து ஆளக் காணமா.வோட் மட்டும் போட்டுட்டு போய்ட்டீங்க=))
அருமைங்க, நாளை சந்திப்போம்.
நன்றி, வாழ்க வளமுடன்.
//ஏகலைவர்களின்
கட்டைவிரல் திருடும்
துரோணர்கள்.//
எக்கசக்கமா இருக்கு சார் இது. சூப்பர்
வி.என்.தங்கமணி, said...
//அருமைங்க, நாளை சந்திப்போம்.
நன்றி, வாழ்க வளமுடன்.//
நன்றிங்க தங்கமணி. சந்திப்போம்.
S.A. நவாஸுதீன் said...
/ எக்கசக்கமா இருக்கு சார் இது. சூப்பர்//
நன்றிங்க நவாசுதீன்.
உங்க போட்டோவ மட்டும் மாத்திடுங்க..., நீங்களும் யூத் தான்...
பேநா மூடி said...
/உங்க போட்டோவ மட்டும் மாத்திடுங்க..., நீங்களும் யூத் தான்.../
ம்கும். போடோ பார்த்துதான் யூத்துன்னு சொல்லிக்கறதா=))
//ஏகலைவர்களின்
கட்டைவிரல் திருடும்
துரோணர்கள்.//
யாரைன்னு புரியலயே.
ஸ்ரீ said...
/ யாரைன்னு புரியலயே.//
=)). லொல்லு தானே
:)
தாடி இல்லா வாலி நீங்க...அருமை.
Maheswaran Nallasamy said...
/:)
தாடி இல்லா வாலி நீங்க...அருமை./
ஆஹா வாங்கண்ணே. :) நன்றி
Post a Comment