பாரத தேசத்தின் ரத்த நாளங்களாய் பரவி நிற்கும் இரயில்வேயின் ஊழியன் என்பதில் மிகப் பெருமை எனக்குண்டு. பல்வேறு விமரிசனங்கள் இருப்பினும் சவாலான தருணங்களில் எங்கள் ஊழியர்களின் உழைப்பும் திறமையும் வியக்க வைப்பதாக இருக்கும். அதிலும் கட்டுமானப் பணியிலும், சீரமைப்புப் பணியிலும் ஈடு படுபவர்களை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கும்.
கையெழுத்து கூடப் போட வராத ஒரு தொழிலாளி பல படித்தவர்களின் ஒப்புதல் பெற்ற ஒரு வரைபடத்தைப் பார்த்து , இது வேலைக்காவாது சார் என்று மிக நுட்பமாக சுட்டும் ஒரு பிழை, அல்லது ஒரு மேம்பாடு வியக்க வைப்பதாக இருக்கும். பணியிடங்களில் இத்தனை கஷ்டங்களுக்கு நடுவேயும் ஏற்படும் இன்னல்களை ஒரு காமெடியாக ரசித்துச் சொல்லும் மனோபாவம் ஆச்சரியமாக இருக்கும்.
ஒரு சக அதிகாரி, கட்டுமானத்துறையில் பொறியாளர். மத்தியப் பிரதேசத்தில் ஒரு இடத்தில் கட்டுமானப் பணிக்கு டெபுடேசனில் சென்றிருந்தார். சுத்தமாக ஒரு வார்த்தை இந்தியில் பேசவும் தெரியாது. புரியவும் புரியாது.

கொள்ளைக் காரர்களுக்கு பேர் போன பகுதி அது. ஒரு நாள் கூடாரத்தில் உட்கார்ந்து வேலை பார்த்துக் கொண்டிருக்கையில் தட தடவென ஒரு ஜீப், மற்றும் சில குதிரைகளில் ஆறு ஏழு பேர் வந்தார்களாம்.
தலைவனானவன் படக்கென்று ரிவால்வரை நெற்றிப் பொட்டில் வைத்து பட படவென இந்தியில் பொரிந்து தள்ளியிருக்கிறான். மனுசன் வடிவேலு மாதிரி போயிடும் நிலைமைக்கு வந்து தமிழில் என்னய்யா வேணும் என்று அலற அவன் இந்தியில் இன்னும் துப்பாக்கியை அழுத்தியபடி அலறியிருக்கிறான். உதவிக்கு இருந்த ஆளையும் ஏதோ வேலையாய் அனுப்பி விட்டிருந்ததால் ஒரு வழியும் பிடிபடவில்லை.
கடைசியில் நொந்து போய், தமிழில் ஒன்னு சுட்டுடு, இல்லைன்னா என்னா வேணுமோ கொண்டு போ. இப்படி ஏன் சாவடிக்கற என்று தமிழில் சலித்தபோது, அந்த உடல்மொழி புரிந்தது போலும் அவனுக்கு. தர தரவென இழுத்துக் கொண்டு போய், வெளியில் நின்றிருந்த JCBயைக் காட்டி சாவி என்று கேட்டிருக்கிறான்.

உயிரா, சாவியா என்ற போராட்டமேயின்றி, இந்தா ராசா கொண்டு போ என்று உயிர் பிழைத்து, போலீசுக்கு சொல்வதா? மேலதிகாரிகளுக்குத் தகவல் சொல்வதா என்று குழம்பி ஒரு நிலைக்கு வருவதற்குள் மாலை வந்துவிட்டது.
திரும்பவும் தட தடவென சத்தம் வர மிரண்டு போய் நின்றவரை, காலையில் வந்த அதே கும்பல், ஹோய் என்ற கூக்குரலோடு வந்து தூக்கிக் கொண்டு கொண்டாடி கட்டியணைத்து, புரியாத இந்தியில் நன்றி சொல்லிப் போனார்களாம். அதன் பிறகு அங்கிருந்த இரண்டு வருட காலமும் ராஜா மாதிரி உபசரிப்பும் மரியாதையுமாய் கழிந்ததாம்.
நடந்தது என்னவெனில் அந்த ஊர் மேடும் பள்ளமுமான பிரதேசம். சமன்படுத்தி வீடு கட்டவோ, விவசாயம் பார்க்கவோ வழியற்ற ஏழை சனங்கள். இருப்புப்பாதை போட இந்த ராட்சத இயந்திரம் மிக விரைவில் சமன் படுத்திச் சீராக்குவதைப் பார்த்து, கேட்டால் செய்து கொடுக்க மாட்டார்கள் என்று கடத்திப் போய் வேலையை முடித்து விட்டிருந்தார்கள்.
நம்ம ஆள் உயிருக்கு பயந்து சுடு இல்லைன்னா விடு என்றதை அனுமதித்து விட்டார் எனப் புரிந்து கொண்ட அழகில் அதைக் கடத்திப்போய் விட்டு வந்து அய்யாவுக்கு ராஜ மரியாதை கொடுத்திருக்கிறார்கள். அங்கிருந்து மாற்றலாகிப் போகிறார் என்பதை அறிந்து மொத்த ஊரும் சேர்ந்து வந்து கண்ணீருடன் விடை கொடுத்ததைச் சொல்லும்போது குரல் உடைந்து போனது அவருக்கு.
நம்ம கணக்கன் புத்தி சும்மா இருக்குமா? ஆமாங்க அந்த நேரம் அதைப் பயன் படுத்தியமைக்கு காண்ட்ராக்டருக்கு கவுருமெண்டு துட்டு இல்லையா போச்சி. அதெப்புடி சரி கட்டினீங்கன்னேன்.

ஒரு மனுசன் உசிருக்கு போராடி அத்தனை உறவை சம்பாதிச்சி வந்திருக்கேன், உனக்கு கணக்கு புத்தி போகுதா என்றவர், அது அளவீட்டில் கூட்டிக் கழிச்சி எப்படியோ பண்ணேன் விடுவியா என்ற போது இயந்திரத்தோடு வாழும் ஒரு மனிதனைக் கண்டேன்.
62 comments:
மீ த ஃபர்ஸ்டோய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
இராகவன் நைஜிரியா said...
/மீ த ஃபர்ஸ்டோய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்/
வாங்கண்ணே. தமிழ்மணம் அமுக்குங்கண்ணே. நம்மள ஓரம் கட்ரானுனுவ
// வானம்பாடிகள் said...
இராகவன் நைஜிரியா said...
/மீ த ஃபர்ஸ்டோய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்/
வாங்கண்ணே. தமிழ்மணம் அமுக்குங்கண்ணே. நம்மள ஓரம் கட்ரானுனுவ //
அண்ணே நீங்க சொல்வதற்கு முன்னாடியே செஞ்சுட்டேன் அண்ணே... இடுகை எதுவும் காணப்படவில்லை என்று சொல்லுதுங்க
// நம்ம கணக்கன் புத்தி சும்மா இருக்குமா? ஆமாங்க அந்த நேரம் அதைப் பயன் படுத்தியமைக்கு காண்ட்ராக்டருக்கு கவுருமெண்டு துட்டு இல்லையா போச்சி. அதெப்புடி சரி கட்டினீங்கன்னேன். //
என்ன அண்ணே இது... கேட்டீங்க சரி... இப்படி பப்ளிக்கா சொல்லலாமா? ஏற்கனவே நம்மள பத்தி எவ்வளவு பேர் திட்டராங்க தெரியுமா?
// பாரத தேசத்தின் ரத்த நாளங்களாய் பரவி நிற்கும் இரயில்வேயின் ஊழியன் என்பதில் மிகப் பெருமை எனக்குண்டு. //
அண்ணே இந்த ரயில்வே பற்றி சொல்லித்தான் நானும் இங்க இருக்கிறவங்கள்கிட்ட பெருமை அடிச்சுக்கிறேன். இங்கு நிறையப் பேருக்கு ரயில் எப்படி இருக்கும் அப்படின்னு கூடத் தெரியாது
இராகவன் நைஜிரியா said...
/அண்ணே நீங்க சொல்வதற்கு முன்னாடியே செஞ்சுட்டேன் அண்ணே... இடுகை எதுவும் காணப்படவில்லை என்று சொல்லுதுங்க/
அவனுக்கென்ன கோவமோ தெரியல.விடுங்க
இராகவன் நைஜிரியா said...
/என்ன அண்ணே இது... கேட்டீங்க சரி... இப்படி பப்ளிக்கா சொல்லலாமா? ஏற்கனவே நம்மள பத்தி எவ்வளவு பேர் திட்டராங்க தெரியுமா?/
அவிய்ங்க திட்டினாதான் நமக்கு சர்டிஃபிகேட்டு. =))
இராகவன் நைஜிரியா said...
/ அண்ணே இந்த ரயில்வே பற்றி சொல்லித்தான் நானும் இங்க இருக்கிறவங்கள்கிட்ட பெருமை அடிச்சுக்கிறேன். இங்கு நிறையப் பேருக்கு ரயில் எப்படி இருக்கும் அப்படின்னு கூடத் தெரியாது/
இதென்ன கொடுமை. ரொம்ப வருஷத்துக்கு முன்னாடியே நைஜீரியன் ரயில்வே கார்பரேஷன்னு ஒண்ணு வச்சி நம்மாளுங்கள்ளாம் வந்து ரயிலுட்டாங்களே! அவ்வ்வ்வ்
// வானம்பாடிகள் said...
இதென்ன கொடுமை. ரொம்ப வருஷத்துக்கு முன்னாடியே நைஜீரியன் ரயில்வே கார்பரேஷன்னு ஒண்ணு வச்சி நம்மாளுங்கள்ளாம் வந்து ரயிலுட்டாங்களே! அவ்வ்வ்வ் //
அதெல்லாம் எப்பவோ காணாமப் போயிடுச்சுங்க...
ரயில் டிராக் கூட இங்க நான் பார்த்தது இல்லை.. இருந்த சுவடு கூட இல்லாம பண்ணிட்டாங்க.
// வானம்பாடிகள் said...
அவிய்ங்க திட்டினாதான் நமக்கு சர்டிஃபிகேட்டு. =)) //
நல்லாச் சொன்னீங்க..
இராகவன் நைஜிரியா said...
// அதெல்லாம் எப்பவோ காணாமப் போயிடுச்சுங்க...
ரயில் டிராக் கூட இங்க நான் பார்த்தது இல்லை.. இருந்த சுவடு கூட இல்லாம பண்ணிட்டாங்க.//
அடப் பாவிங்களா!
// கையெழுத்து கூடப் போட வராத ஒரு தொழிலாளி பல படித்தவர்களின் ஒப்புதல் பெற்ற ஒரு வரைபடத்தைப் பார்த்து , இது வேலைக்காவாது சார் என்று மிக நுட்பமாக சுட்டும் ஒரு பிழை, அல்லது ஒரு மேம்பாடு வியக்க வைப்பதாக இருக்கும்.//
சரியாகச் சொன்னீர்கள்.. இங்கு கட்டடம் கட்டும் பணியிலும் அப்படிதாங்க நிறைய பேர் இருக்காங்க..
இராகவன் நைஜிரியா said...
// சரியாகச் சொன்னீர்கள்.. இங்கு கட்டடம் கட்டும் பணியிலும் அப்படிதாங்க நிறைய பேர் இருக்காங்க..//
ஆமாங்க.
நல்லா இருக்கு....
பெயர் சொல்ல விருப்பமில்லை said...
/நல்லா இருக்கு..../
நன்றிங்க.
என்ன நடக்குது இங்க?
என்ன பஞ்சாயத்தா நடக்குது?
பெரிய மனிசங்க மட்டும் பேசிக்கிட்டே இருந்தா போதுமா? எங்கள மாதிரி இளவட்டங்களோட கருத்தையும் கேளுங்க!!!
//இராகவன் நைஜிரியா said...
மீ த ஃபர்ஸ்டோய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்//
ஒரு பெரிய மனிசன் பண்ணுற வேலையா இது????
யெளந்தாரிகளுக்கு வழிவிடாம என்ன விளையாட்டு இது?
அதுக்குத்தான நாங்க இருக்கோம்!!!
மீ த 17 - ஓய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
ஆமா, இடுகை எது சம்பந்தமானது? இருங்க படிச்சுட்டு வாறேன்.
// அப்பாவி முரு said...
//இராகவன் நைஜிரியா said...
மீ த ஃபர்ஸ்டோய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்//
ஒரு பெரிய மனிசன் பண்ணுற வேலையா இது????
யெளந்தாரிகளுக்கு வழிவிடாம என்ன விளையாட்டு இது?
அதுக்குத்தான நாங்க இருக்கோம்!!!
மீ த 17 - ஓய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் //
யெளந்தாரியா.. நீங்க.. சரி.. சரி ஒத்துகிட்டேன்
இந்த இடுகையில இருந்து தெரிவது என்னவென்றால்,
வெளியாட்களிடம் நமக்கு ஏதாவது தேவையென்றால் வேற்று மொழியில் மிரட்டி வாங்கலாம்.
நல்ல கருத்துள்ள இடுகை!!!
துறை(ரை) சார்(ய்)ந்த இடுகை
நல்லதொரு ரசிக்கத்தக்க இடுகை...நைனா
ஒரு சினிமாவே எடுக்கலாம் போலயே!
செமயா இருக்கு தல அவரோட மேட்டரு!
அப்பாவி முரு said...
/ பெரிய மனிசங்க மட்டும் பேசிக்கிட்டே இருந்தா போதுமா? எங்கள மாதிரி இளவட்டங்களோட கருத்தையும் கேளுங்க!!!/
அதான் சரி. எங்க ரொம்ப நாளா காணோம்.
அப்பாவி முரு said...
//இராகவன் நைஜிரியா said...
மீ த ஃபர்ஸ்டோய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்//
ஒரு பெரிய மனிசன் பண்ணுற வேலையா இது????
யெளந்தாரிகளுக்கு வழிவிடாம என்ன விளையாட்டு இது?
அதுக்குத்தான நாங்க இருக்கோம்!!!
மீ த 17 - ஓய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்//
அடேங்கப்பா. என்னா சவுண்டு=))
இராகவன் நைஜிரியா said...
// யெளந்தாரியா.. நீங்க.. சரி.. சரி ஒத்துகிட்டேன்//
ம்கும். நாம ஒத்துக்கலைன்னா மட்டும் அவிங்க ஒத்துக்கிடுவாங்களாக்கும்=))
அப்பாவி முரு said...
// இந்த இடுகையில இருந்து தெரிவது என்னவென்றால்,
வெளியாட்களிடம் நமக்கு ஏதாவது தேவையென்றால் வேற்று மொழியில் மிரட்டி வாங்கலாம்.
நல்ல கருத்துள்ள இடுகை!!!//
இதுக்குதானா இவ்வளவு ஆர்பாட்டம். நல்லா புடிக்கிறாய்ங்கப்பா பாயிண்டு.
பிரியமுடன்...வசந்த் said...
/துறை(ரை) சார்(ய்)ந்த இடுகை
நல்லதொரு ரசிக்கத்தக்க இடுகை...நைனா//
அது! என்னமோ நீ சொல்ற. போணியாவட்டும் பார்க்கலாம்:)
வால்பையன் said...
// ஒரு சினிமாவே எடுக்கலாம் போலயே!
செமயா இருக்கு தல அவரோட மேட்டரு!//
வாங்க வால். நன்றி !
ஒரு வேளை இந்தி தெரியாததால் தான் தப்பிச்சாரோ!!!
நல்ல கருத்துள்ள இடுகை சார்!!
ஈரோடு கதிர் said...
/ ஒரு வேளை இந்தி தெரியாததால் தான் தப்பிச்சாரோ!!!//
துப்பாக்கிக்கு முன்னாடி இந்தி என்ன தமிழென்ன. இவருக்கு டென்ஷன் தாங்கல. சுட்டு தொலையேன்னு கெஞ்சுற வெலவலாயிடிச்சி
Mrs.Menagasathia said...
/ நல்ல கருத்துள்ள இடுகை சார்!!//
நன்றிங்கம்மா.
:) .. நல்லா இருக்கு.ரசித்தேன்
ஆகா ஆகா பாலா இப்படி எல்லாம் அலுவலகத்துல நடந்த காமெடி எல்லாம் எழுதுங்க - நல்லாவே இருக்கு
நல்வாழ்த்துகள் பாலா
முத்துலெட்சுமி/muthuletchumi said...
/:) .. நல்லா இருக்கு.ரசித்தேன்/
முதல் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
நன்றிங்க.
cheena (சீனா) said...
/ஆகா ஆகா பாலா இப்படி எல்லாம் அலுவலகத்துல நடந்த காமெடி எல்லாம் எழுதுங்க - நல்லாவே இருக்கு
நல்வாழ்த்துகள் பாலா//
நன்றிங்க சீனா.:)
:)
கலகலப்ரியா said...
/ :)/
ஏன்? நல்லால்லையா?
//
தலைவனானவன் படக்கென்று ரிவால்வரை நெற்றிப் பொட்டில் வைத்து பட படவென இந்தியில் பொரிந்து தள்ளியிருக்கிறான். மனுசன் வடிவேலு மாதிரி போயிடும் நிலைமைக்கு வந்து தமிழில் என்னய்யா வேணும் என்று அலற அவன் இந்தியில் இன்னும் துப்பாக்கியை அழுத்தியபடி அலறியிருக்கிறான். உதவிக்கு இருந்த ஆளையும் ஏதோ வேலையாய் அனுப்பி விட்டிருந்ததால் ஒரு வழியும் பிடிபடவில்லை.
//
:0))))
//நம்ம கணக்கன் புத்தி சும்மா இருக்குமா //
அண்ணே, அடிப்படையில் நானும் கணக்கந்தான் தெரியுமா?
சின்ன கணக்கனா வேலைக்குச் சேர்ந்து இப்ப புரோமோஷனில் பெரிய கணக்கனா இருக்கேன்
:)
இந்திய ரயில்வேயின் முதுகெலும்பே அதன் ஊழியர்கள்தான். ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் நேர்மையாக இருந்த பல களப் பொறியாளர்கள் சமரசம் செய்துகொள்ள முடியாமல் தனியார் நிறுவனங்களில் இணைந்த கதையும் தெரியும். சரிங்க ஐயா, எங்க ஊரு(கோவை - மதுரை) ப்ராட் கேஜுக்கு ஃபண்ட் இருக்குங்களா இல்ல லல்லுஜி ஒதுக்குனது மட்டும்தானா? தண்டவாளத்த எல்லாம் உருவிட்டாங்க :(
நல்லா இருக்கு....
அது சரி said...
/ :0))))/
சிப்பாவா இருக்கு=))))
எம்.எம்.அப்துல்லா said...
/ அண்ணே, அடிப்படையில் நானும் கணக்கந்தான் தெரியுமா?/
ஆஹா!
/சின்ன கணக்கனா வேலைக்குச் சேர்ந்து இப்ப புரோமோஷனில் பெரிய கணக்கனா இருக்கேன்/
அட இதும் நம்மள மாதிரிதானா?
:)
நாகா said...
/ ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் நேர்மையாக இருந்த பல களப் பொறியாளர்கள் சமரசம் செய்துகொள்ள முடியாமல் தனியார் நிறுவனங்களில் இணைந்த கதையும் தெரியும்./
ஆமாங்க.
/சரிங்க ஐயா, எங்க ஊரு(கோவை - மதுரை) ப்ராட் கேஜுக்கு ஃபண்ட் இருக்குங்களா இல்ல லல்லுஜி ஒதுக்குனது மட்டும்தானா? தண்டவாளத்த எல்லாம் உருவிட்டாங்க :(/
கோவை சேலம் டிவிஷனுக்கு இல்லையா போயிடிச்சி. பாலக்காடுன்னா ஹ்ம்ம்ம்ம். ஒன்னும் சொல்றதுக்கில்லை. மந்திரி அவிட
T.V.Radhakrishnan said...
/நல்லா இருக்கு..../
நன்றிங்க.
// ஒரு மனுசன் உசிருக்கு போராடி அத்தனை உறவை சம்பாதிச்சி வந்திருக்கேன், உனக்கு கணக்கு புத்தி போகுதா என்றவர், அது அளவீட்டில் கூட்டிக் கழிச்சி எப்படியோ பண்ணேன் விடுவியா என்ற போது இயந்திரத்தோடு வாழும் ஒரு மனிதனைக் கண்டேன்//
இது தான் உங்க டச்...
காக்கா உக்கார பனம்பழம் விழுந்த கதை, கொஞ்சம் டெரரா நடந்திருக்கு அவருக்கு.
அண்ணே! மேட்டர் சீரியஸா இருந்தாலும் அடிவாங்குற வடிவேலைப் பார்த்து சிரிப்பு வர்ற மாதிரி ஹிந்தி மேட்டர் இருக்குது. பாவம் இன்னமும் ரயில்வேயில ஹிந்தி தெரியாம காலம் ஓட்டுறது எத்தனை பேர். ஒரு தடவை நான் ஹைதராபாத்திலிருந்து சென்னைக்கு சார்மினாரில் வந்து கொண்டிருந்தேன். டிடிஆர் என்னிடம் ஏதோ கேட்டார். அவர் ஹிந்தியில் கேட்க பிலீஸ் ஸ்பீக் இங்கிலீஸ் என்றேன். ஏற இறங்க பார்த்து விட்டு அவர் கேட்ட கேள்வி மதராஸியா என. கடும் கோபம் தான் வந்தது.
//தமிழ்மணம் அமுக்குங்கண்ணே. நம்மள ஓரம் கட்ரானுனுவ//
அப்படி எதுவும் இருக்கற மாதிரி தெரியலையேண்ணே! !
பேநா மூடி said...
/ இது தான் உங்க டச்.../
நன்றிங்க.
S.A. நவாஸுதீன் said...
/காக்கா உக்கார பனம்பழம் விழுந்த கதை, கொஞ்சம் டெரரா நடந்திருக்கு அவருக்கு./
வாங்க நவாசுதீன். நன்றி:))
இப்படிக்கு நிஜாம்.., said...
/ஏற இறங்க பார்த்து விட்டு அவர் கேட்ட கேள்வி மதராஸியா என. கடும் கோபம் தான் வந்தது.//
அடங்கொன்னியா! இவனுவதானே மதராஸ் மனதேன்னு போராடின பரதேசிங்க. இப்ப நாம மதராசியா?
இப்படிக்கு நிஜாம்.., said...
/ அப்படி எதுவும் இருக்கற மாதிரி தெரியலையேண்ணே! !/
ம்கும். தினம் இப்படி அய்யா சாமின்னு கெஞ்சி யாரோ பாவப்பட்டு அமுக்கி ஓட்டும் போடுறாங்க..அவ்வ்வ்
நல்லாருக்கு.
//பாரத தேசத்தின் ரத்த நாளங்களாய் பரவி நிற்கும் இரயில்வேயின் ஊழியன் என்பதில் மிகப் பெருமை எனக்குண்டு//
இந்தியா முழுக்க இலவச பாஸ் உண்டே....
//ஒரு மனுசன் உசிருக்கு போராடி அத்தனை உறவை சம்பாதிச்சி வந்திருக்கேன், உனக்கு கணக்கு புத்தி போகுதா என்றவர்...//
என்கிறீர்களா?
//ம்கும். தினம் இப்படி அய்யா சாமின்னு கெஞ்சி யாரோ பாவப்பட்டு அமுக்கி ஓட்டும் போடுறாங்க..அவ்வ்வ்//
அண்ணே! சட்டமன்றத்துக்கு எலக்சன் வரப்போகுதே! எந்த தொகுதி?????
ஸ்ரீராம். said...
/நல்லாருக்கு./
நன்றி.
/ இந்தியா முழுக்க இலவச பாஸ் உண்டே..../
ஆமாம். 6 செட்.:)). அதில்லாம 12 கன்செஷன். அத வெச்சி என்ன பண்ண?
/ என்கிறீர்களா?/
அவரு அவரு.
இப்படிக்கு நிஜாம்.., said...
/ அண்ணே! சட்டமன்றத்துக்கு எலக்சன் வரப்போகுதே! எந்த தொகுதி?????/
இங்கயே தமிழ்மணத்தில கள்ள ஓட்டு எதிர் ஓட்டா விழுது. இதில வேற=))
உங்கள் பணி அனுபவங்களை கண்டிப்பாக புத்தகமாக எழுதுங்கள் (ரிடையர் ஆன பிறகு தான்).
ரத்த நாளங்கள் என்பது உண்மையான வார்த்தை. குறைகள் இருப்பினும் (எங்கு தான் இல்லை), ரயில்வேயில் பணிபுரிவதற்காக நீங்கள் பெருமை அடையலாம்.
12 மணி நேரம் சென்ட்ரல் ஸ்டேஷனை மூடப்போகிறார்கள் போல
பின்னோக்கி said...
/உங்கள் பணி அனுபவங்களை கண்டிப்பாக புத்தகமாக எழுதுங்கள் (ரிடையர் ஆன பிறகு தான்)./
நன்றிங்க.
/ ரத்த நாளங்கள் என்பது உண்மையான வார்த்தை. குறைகள் இருப்பினும் (எங்கு தான் இல்லை), ரயில்வேயில் பணிபுரிவதற்காக நீங்கள் பெருமை அடையலாம்./
ஆமாம்.
/12 மணி நேரம் சென்ட்ரல் ஸ்டேஷனை மூடப்போகிறார்கள் போல/
பயணிகளுக்கு குறைந்த பட்ச அசௌகரியம் ஏற்படலாம். தவிர்க்க முடியாதது.
படித்தேன்.. ரசித்தேன் .நன்றி
யூர்கன் க்ருகியர் said...
/படித்தேன்.. ரசித்தேன் .நன்றி/
வாங்க யூர்கன். நன்றி:)
Post a Comment