Saturday, December 12, 2009

தண்ணி படும் பாடு!



சென்னையில் ஒன்பது ‍ பத்து வருடங்களுக்கு முன்பு தண்ணீர்ப் பஞ்சமும், எலிக்காய்ச்சலும் சற்றேறக் குறைய ஒன்றாய் புகுந்த காலத்தில் வேறு வழியின்றி மினரல் வாட்டர் என்று மிகச் சிலராலும் என்னவென்றே தெரியாமல் பிசில்ரி என்று பலராலும் அழைக்கப்படும் குடிநீர் வியாபாரம் மெல்லச் சூடு பிடித்தது.

ஆரம்பத்தில் பிஸ்லெரி, அக்வா ஃபினா என்ற தரம் வாய்ந்த குடிநீர்க் கேன்கள், பாட்டில்கள் விற்பனைக்கு இருந்தாலும், டெபாசிட் தொகை, தேவைக்கேற்ற அளவில் விநியோகமில்லாமை ஆகியவற்றின் காரணமாக புற்றீசல் போல் பல மினரல் வாட்டர் கேன்கள் வியாபரத்தில் வந்திறங்கின.

மக்களின் அறியாமையைப் பயன் படுத்தி, நீர்த்தட்டுப்பாடும் சேர லேபில் கூட இல்லாமல், புற்றீசலாய் பரவிய இந்த வியாபாரம் குடிசைத் தொழில் மாதிரி நன்றாக வேரூன்றியது. வட சென்னையில் புறநகர்ப் பகுதியில் உள்ள கம்பெனிகளில் இரவு நேரப் பணியாளர்கள் கடைகளிலிலிருந்து காலிக் கேன்களை சைக்கிளில் கொண்டு போய் சுத்தமான சுவையான நிலத்தடி நீரை பிடித்துக் கொண்டு வந்து கொடுத்து, கேனுக்கு 5ரூ பெறுவதும், அதை நமக்கு கேனுக்கு 15 முதல் 20 ரூ வரை விற்றதும் நான் கண்ணால் கண்டிருக்கிறேன்.

எந்தத் தரக்கட்டுபாடுமின்றி, லைசன்ஸ் இருக்கிறதா இல்லையா என்றே தெரியாமல் தற்போது பெருமளவில் 20 லிட்டர் கேன்கள் மட்டுமே சந்தையில் வெளிப்படையாக விற்கப்படுகின்றன. நடுவில் ஐ.எஸ்.ஐ முத்திரையுடன் மட்டுமே விற்க வேண்டும் என்ற சட்டம் வந்தாலும், காந்தி நோட்டு அடிக்கிறவர்களுக்கு இந்த முத்திரை அடிப்பதா கஷ்டம்.

ஆரம்பத்தில் சந்தையைப் பிடிப்பதற்காக பில்செரி, அக்வா ப்யூரா, அக்வா புண்ணாக்கு என்றெல்லாம் பெயரோடு வந்தாலும், இவன் நல்லவன் எல்லாம் தாங்குவான் என்ற மனோபாவத்தில் ப்ளூ, மவுன்டன் ஃபால்ஸ், சுகுணா, இன்ன பிற பெயர்களிலும் வரத் தொடங்கிவிட்டன. தண்ணீர் பஞ்சம் போயும், தாராளமான குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்கப்படினும், குடிசை வீடுகளில் கூட மினரல் தண்ணீர் பயன்படுத்துதல் ஒரு அந்தஸ்தான விடயமாகிவிட்டது.

பல நேரங்களில் என் வீட்டில் வரும் கேன்களுக்கு லேபில் கூட இருக்காது. கேட்டால், தண்ணி இல்லிங்களா, கொண்டு வாரயில பிச்சிக்குது என்ற பதில் வரும். சில நேரங்களில் வாசம் வருகிறது என்று ஃபோன் செய்தால், உடனே மாத்திடுறேங்க. புது சப்ளையர் கிட்ட வாங்கினேன் என்ற நொண்டிச் சாக்குதான் வருகிறது.

குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் பலகோடி ரூபாயில் விநியோகிக்கப்படும் நீர் துணி துவைக்க, குளிக்க என்ற பயன்பாட்டுக்கே உபயோகிக்கப்படுகிறது. சில குடிசைப் பகுதிகளில் அடிகுழாயில் தானாகவே நீர் வழிந்தோடுவதைப் பார்க்கையில் பதை பதைக்கும்.

தரக்கட்டுப்பாட்டை உறுதி செய்ய அரசின் துறை என்ன செய்கிறது? மக்கள் நலம் இரண்டாம் பட்சம் என்றே வைத்துக் கொண்டாலும் முறையான லைசன்ஸ் வழங்க வேண்டிய துறை, விற்பனை வரித்துறை ஆகியவை என்ன செய்கின்றன? அரசிடம் தமிழ்நாட்டில் முறையான லைசென்ஸ் பெற்று தரக்கட்டுப்பாட்டுடன் செயல் படும் நிறுவனங்கள் எத்தனை என்ற தகவலாவது இருக்கிறதா?

மாதம் ஒருமுறை கடைகளில் திடீர் சோதனை நடத்தினால் எத்தனை நிறுவனங்கள் பில் கூட இல்லாமல் எத்தனை லட்ச ரூபாய் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளது என்பது தெரியுமே. இதற்கெல்லாமா அதிகாரிகள் இருக்கிறார்கள். மொத்த விற்பனைக் கடைகளில் கலெக்ஷன் கட்டவே நேரம் போதாதே!

இதுவரை, முறையற்ற நிறுவனங்களைக் கண்டறிய எதாவது நடவடிக்கையாவது எடுத்திருக்கிறதா? எனக்குத் தெரிந்து இல்லை. தெருவோர தூசி படிந்து, வெயிலில் காய்ந்து, மழையில் நனைந்து அவன் கொடுக்கும் கிணற்று நீர் வியாபாரம் பலகோடி பெறும்.

ஆவின் மாதிரி, தமிழ்நாடு குடிநீர் வாரியம், அரசு மானியத்துடனோ, ஒப்பந்தம் மூலமோ கடுமையான தரக் கட்டுப்பாட்டுடன் மினரல் வாட்டர் வியாபாரத்தைச் செய்ய முடியாதா? கண்டிப்பாக முடியும்.

நியாயமான விலையில் வழங்கப்படின் ஒட்டு மொத்த மக்கள் ஆதரவு கிடைக்குமென்பதில் சந்தேகமேயில்லை. மக்களிடையே நம்பகத்தன்மையை உருவாக்குவதன் மூலம் அரசுக்கும், வாரியத்துக்கும் வருமானம் பெருகும். மக்களுக்குத் தேவையான இன்ன பிற கட்டமைப்புகளை உருவாக்க முடியும். செய்வார்களா?

89 comments:

க.பாலாசி said...

நான்தான் முதல்ல துண்டுபோட்டேன்...

நிஜாம் கான் said...

நான் தான் ரெண்டாவது துண்டு போட்டேன்

செ.சரவணக்குமார் said...

சமூக நோக்குடன் கூடிய மிக அருமையான இடுகை. பகிர்வுக்கு நன்றி சார்.

நிஜாம் கான் said...

அடப்போங்கண்ணே! இதெல்லாம் ஒரு மேட்டரா சொல்ல வந்திட்டீங்க. ரொம்ப நாளைக்கு மிந்தி சரவணா ஸ்டோர்ஸ் தண்ணீர் கேன்ல கரப்பான் பூச்சி கெடந்ததுண்ணு யாரோ பேமானி (கேஸ் போட்டவன இப்படித்தான் தொப்பிக்காரங்க சொல்லுவாங்க) கேஸ் போட அந்த விசயம் பரபரப்பாகி பெரிசா வெடிக்கும்னு பாத்தா, அண்ணாச்சி அடிக்க வேண்டியத அடிச்சி ஆஃப் பண்ணிட்டார். மொதல்ல அந்த மாதிரி அதிகாரிகள ஒழிக்காம நீங்க ஆயிரம் பதிவு போட்டாலும் ஃபாய்தா நஹி.

Azhagan said...

We must think why any og the Govt is not taking any interest in providing clean drinking water to the public. It is one of the basic duties of the Govt.

அகல்விளக்கு said...

அடப்போங்க சார்...
இதெல்லாம் நமக்கு தண்ணி பட்ட பாடு...

:-)))

vasu balaji said...

க.பாலாசி said...

/நான்தான் முதல்ல துண்டு போட்டேன்.../

அது சரி. பின்னூட்டம் எப்ப போடுவ:))

vasu balaji said...

இப்படிக்கு நிஜாம்.., said...

/நான் தான் ரெண்டாவது துண்டு போட்டேன்//

=))

ஈ ரா said...

மெட்ரோ வாட்டரை நம்பி குடிக்கறது இல்லை... மினரல் கேனை தான் நம்பி கேனை மாதிரி குடிக்கிறோம்..என்ன செய்ய..? பல பேர் அசால்ட்டாக அடி பம்பு தண்ணீரை அப்படியே குடித்து விட்டு ஆரோக்கியமாகத் தான் இருக்கிறார்கள்.. நமக்குத் தான் பழகி விட்ட தோஷம்...என்ன செய்ய..?

ஆனாலும் நீங்கள் சொன்னது போல், நிச்சயம் தரக் கட்டுப்பாடு தேவை..

இராகவன் நைஜிரியா said...

// "தண்ணி படும் பாடு!" //

ஒரு குடிமகன் சொன்னது “எந்த தணியா இருந்தாலும் கஷ்டம்தான் போலிருக்கு”

இராகவன் நைஜிரியா said...

// குடிநீர் வியாபாரம் மெல்லச் சூடு பிடித்தது.//

அது சரி... சூடான வியாபாரமாகத்தான் ஆரம்பிச்சது..

vasu balaji said...

செ.சரவணக்குமார் said...

/சமூக நோக்குடன் கூடிய மிக அருமையான இடுகை. பகிர்வுக்கு நன்றி சார்./

நன்றிங்க சரவணக்குமார்.

இராகவன் நைஜிரியா said...

// ஆரம்பத்தில் பிஸ்லெரி, அக்வா ஃபினா என்ற தரம் வாய்ந்த குடிநீர்க் கேன்கள், //

ஆரம்ப சூரத்தனம் அதிகம்...

இராகவன் நைஜிரியா said...

// புற்றீசல் போல் பல மினரல் வாட்டர் கேன்கள் வியாபரத்தில் வந்திறங்கின. //

அது கூட கம்மியாக இருக்கும்.. சரியான உதாரணம் சொல்லணும் என்றால்... என்ஞினியர்ங் காலேஜ் போல என்றுச் சொல்லலாம்..

vasu balaji said...

இப்படிக்கு நிஜாம்.., said...

//அடப்போங்கண்ணே! இதெல்லாம் ஒரு மேட்டரா சொல்ல வந்திட்டீங்க. ரொம்ப நாளைக்கு மிந்தி சரவணா ஸ்டோர்ஸ் தண்ணீர் கேன்ல கரப்பான் பூச்சி கெடந்ததுண்ணு யாரோ பேமானி (கேஸ் போட்டவன இப்படித்தான் தொப்பிக்காரங்க சொல்லுவாங்க) கேஸ் போட அந்த விசயம் பரபரப்பாகி பெரிசா வெடிக்கும்னு பாத்தா, அண்ணாச்சி அடிக்க வேண்டியத அடிச்சி ஆஃப் பண்ணிட்டார். மொதல்ல அந்த மாதிரி அதிகாரிகள ஒழிக்காம நீங்க ஆயிரம் பதிவு போட்டாலும் ஃபாய்தா நஹி.//

அண்ணாச்சியா சும்மாவா. அதுக்காக நாம் கூவாம விட முடியுமா. இதுக்காகவாவது வாரியம் வந்தா தேவலை தானே.

பூங்குன்றன்.வே said...

மீண்டும் ஒருமுறை சமூக அக்கறையின் பால் எழுதியுள்ள பதிவு தண்ணீரை பற்றியது. கேட்க நல்ல ஆட்களிருந்தாலும் பதில் சொல்லத்தான் யாருமில்லை பாஸ்.

தண்ணீருக்கே விலையே என்றிருந்த நிலை போய் இனி ஒரு பதிவுக்கே காசு என்று வந்தாலும் வரும் போல.. கலிகாலம் இல்ல :)

இராகவன் நைஜிரியா said...

// மக்களின் அறியாமையைப் பயன் படுத்தி, நீர்த்தட்டுப்பாடும் சேர லேபில் கூட இல்லாமல், //

அறியாமை மட்டுமல்ல... எங்க வீட்ல மினரல் வாட்டர்தான் குடிக்கிறது என்ற ஜம்பம்...

வாழை இலையை வெளக்கெண்ணை தடவி வெளியில் போடறாப் போல..

vasu balaji said...

Azhagan said...

//We must think why any og the Govt is not taking any interest in providing clean drinking water to the public. It is one of the basic duties of the Govt.//

I dont think the water supplied now is bad. In some areas due to corrosion there may be instances of drainage or other impurites mixing with drinking water. The only problem is strong chlorine mix which spoils the taste and health. Thank you sir for your views.

vasu balaji said...

அகல்விளக்கு said...

//அடப்போங்க சார்...
இதெல்லாம் நமக்கு தண்ணி பட்ட பாடு...

:-)))//

அதானே சொன்னேன்:))

இராகவன் நைஜிரியா said...

// வட சென்னையில் புறநகர்ப் பகுதியில் உள்ள கம்பெனிகளில் இரவு நேரப் பணியாளர்கள் கடைகளிலிலிருந்து காலிக் கேன்களை சைக்கிளில் கொண்டு போய் சுத்தமான சுவையான நிலத்தடி நீரை பிடித்துக் கொண்டு வந்து கொடுத்து, கேனுக்கு 5ரூ பெறுவதும், அதை நமக்கு கேனுக்கு 15 முதல் 20 ரூ வரை விற்றதும் நான் கண்ணால் கண்டிருக்கிறேன். //

தென் சென்னையில் இது இன்னும் அதிகம். அங்கேயாவது கேனல் பிடிப்பாங்க... தென் சென்னையில் லாரியில பிடிச்சு கொண்டுபோய் கம்பெனி டாங்கில் கொட்டி அதை பேக் பண்ணி அனுப்புவாங்க..

கோவிலம்பாக்கம், வேங்கைவாசல் பகுதிகளில் தண்ணீர் டாங்கர் லாரி எப்போதும் ஓடிக் கொண்டு இருப்பதைப் பார்க்கலாம்.

vasu balaji said...

ஈ ரா said...

// மெட்ரோ வாட்டரை நம்பி குடிக்கறது இல்லை... மினரல் கேனை தான் நம்பி கேனை மாதிரி குடிக்கிறோம்..என்ன செய்ய..? பல பேர் அசால்ட்டாக அடி பம்பு தண்ணீரை அப்படியே குடித்து விட்டு ஆரோக்கியமாகத் தான் இருக்கிறார்கள்.. நமக்குத் தான் பழகி விட்ட தோஷம்...என்ன செய்ய..?

ஆனாலும் நீங்கள் சொன்னது போல், நிச்சயம் தரக் கட்டுப்பாடு தேவை..//

ஆமாங்க. நான் அலுவலகத்தில் மெட்ரோ தண்ணிதான் குடிக்கிறேன்.=))

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...
/
ஒரு குடிமகன் சொன்னது “எந்த தணியா இருந்தாலும் கஷ்டம்தான் போலிருக்கு”//

அண்ணே வாங்கண்ணே.

இராகவன் நைஜிரியா said...

// எந்தத் தரக்கட்டுபாடுமின்றி, லைசன்ஸ் இருக்கிறதா இல்லையா என்றே தெரியாமல் தற்போது பெருமளவில் 20 லிட்டர் கேன்கள் மட்டுமே சந்தையில் வெளிப்படையாக விற்கப் படுகின்றன. //

கொடுக்க வேண்டியதை கொடுத்தா விஷம் கலந்து விற்க கூட அனுமதி உண்டுங்க..

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/ அது சரி... சூடான வியாபாரமாகத்தான் ஆரம்பிச்சது../

நேத்து ஒரே வேனில் 3க்கு அதிகமான ப்ராண்ட் கேன் போறதை பார்த்த விளைவுண்ணே.

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/ அது கூட கம்மியாக இருக்கும்.. சரியான உதாரணம் சொல்லணும் என்றால்... என்ஞினியர்ங் காலேஜ் போல என்றுச் சொல்லலாம்..//

இது அண்ணன் பஞ்ச்=))

இராகவன் நைஜிரியா said...

// தரக்கட்டுப்பாட்டை உறுதி செய்ய அரசின் துறை என்ன செய்கிறது?//

அண்ணே.. என்ன அண்ணே இப்படி ஒன்னும் தெரியாத அப்பாவியா இருக்கீங்க...

அவங்களுக்கு எவ்வளவோ வேலை இருக்கு. ஒவ்வொரு கம்பெனியா போய் ஒழுங்கா மால் வாங்கணும்.. அதை பிரிச்சு எல்லோருக்கும் கொடுக்கணும்..

vasu balaji said...

பூங்குன்றன்.வே said...

// மீண்டும் ஒருமுறை சமூக அக்கறையின் பால் எழுதியுள்ள பதிவு தண்ணீரை பற்றியது. கேட்க நல்ல ஆட்களிருந்தாலும் பதில் சொல்லத்தான் யாருமில்லை பாஸ்.

தண்ணீருக்கே விலையே என்றிருந்த நிலை போய் இனி ஒரு பதிவுக்கே காசு என்று வந்தாலும் வரும் போல.. கலிகாலம் இல்ல :)//

என்னங்க இப்படி டரியலாக்குறீங்க=))

இராகவன் நைஜிரியா said...

உங்களை யாரு 25 போடச் சொன்னது...

அவ்...அவ்...

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/ அறியாமை மட்டுமல்ல... எங்க வீட்ல மினரல் வாட்டர்தான் குடிக்கிறது என்ற ஜம்பம்...

வாழை இலையை வெளக்கெண்ணை தடவி வெளியில் போடறாப் போல.//

அந்த அப்பாவிங்கள ஏமாத்தி என்னா பொழைப்புண்ணே பாவம்.

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/ தென் சென்னையில் இது இன்னும் அதிகம். அங்கேயாவது கேனல் பிடிப்பாங்க... தென் சென்னையில் லாரியில பிடிச்சு கொண்டுபோய் கம்பெனி டாங்கில் கொட்டி அதை பேக் பண்ணி அனுப்புவாங்க..//

பரவலான கொள்ளை இது. மணல் கொள்ளை மாதிரி.

கோவிலம்பாக்கம், வேங்கைவாசல் பகுதிகளில் தண்ணீர் டாங்கர் லாரி எப்போதும் ஓடிக் கொண்டு இருப்பதைப் பார்க்கலாம்.

இராகவன் நைஜிரியா said...

// பல நேரங்களில் என் வீட்டில் வரும் கேன்களுக்கு லேபில் கூட இருக்காது. //

அண்ணே கேன் ஒழுங்கா இருக்கா பாருங்க மொதல்ல. சில இடங்களில் கிடைக்கும் கேனைப் பார்த்தாலே தண்ணி குடிக்க வேண்டும் என்ற நினைப்பு வரவே வராது..

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...


/ கொடுக்க வேண்டியதை கொடுத்தா விஷம் கலந்து விற்க கூட அனுமதி உண்டுங்க..//

அய்யோ. =))

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/ அண்ணே.. என்ன அண்ணே இப்படி ஒன்னும் தெரியாத அப்பாவியா இருக்கீங்க...

அவங்களுக்கு எவ்வளவோ வேலை இருக்கு. ஒவ்வொரு கம்பெனியா போய் ஒழுங்கா மால் வாங்கணும்.. அதை பிரிச்சு எல்லோருக்கும் கொடுக்கணும்..//

இவிங்களும் தேடிப்போய் தேத்துறாங்களா. விடிஞ்சிடும்.

இராகவன் நைஜிரியா said...

// குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் பலகோடி ரூபாயில் வினியோகிக்கபபடும் நீர் துணி துவைக்க, குளிக்க என்ற பயன்பாட்டுக்கே உபயோகிக்கப் படுகிறது. //

அண்ணே இதுல இன்னொரு விஷயம். காசு ஒழுங்கா கட்டுகின்றவனுக்கு தண்ணி வராது. ஆனா ரோட்டில் அது மாட்டுக்க ஆறு மாதிரி ஓடிகிட்டு இருக்கும்... அதைப் பார்த்து இருக்கீங்களா?

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/ அண்ணே கேன் ஒழுங்கா இருக்கா பாருங்க மொதல்ல. சில இடங்களில் கிடைக்கும் கேனைப் பார்த்தாலே தண்ணி குடிக்க வேண்டும் என்ற நினைப்பு வரவே வராது..//

வெளீய வெச்சிருக்கமா. காக்கா கக்கா பண்ணிடுச்சி கழுவிட்டா போயிடும்னு சொல்லுவாங்க.

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/அண்ணே இதுல இன்னொரு விஷயம். காசு ஒழுங்கா கட்டுகின்றவனுக்கு தண்ணி வராது. ஆனா ரோட்டில் அது மாட்டுக்க ஆறு மாதிரி ஓடிகிட்டு இருக்கும்... அதைப் பார்த்து இருக்கீங்களா?//

தண்ணி வரலைன்னு வரிகட்டாம இருக்கிறது சட்டப்படி தப்புன்னு நீதிமன்ற ஆர்டர் இருக்குண்ணே.

இராகவன் நைஜிரியா said...

// இதற்கெல்லாமா அதிகாரிகள் இருக்கிறார்கள். மொத்த விற்பனைக் கடைகளில் கலெக்ஷன் கட்டவே நேரம் போதாதே! //

சரியாகச் சொன்னீர்கள்.

அதிகாரிகளுக்கு மேலும் ஒரு பிரச்சனையும் இருக்கு என்றுக் கேள்விப் பட்டு இருக்கின்றேன். இந்த தண்ணீர் வியாபரத்தில் கீழ் மட்ட அரசியல் தலைகள் பலவும் ஈடு பட்டுள்ளதால் அவர்களால் எந்த ஆக்‌ஷனும் எடுக்க இயலவில்லை - நல்ல நேர்மையான ஒரு அதிகாரி சொன்ன விஷயம் இது..

இராகவன் நைஜிரியா said...

// ஆவின் மாதிரி, தமிழ்நாடு குடிநீர் வாரியம், //

அண்ணே ... ஏன் இந்த கொலை வெறி...

அரசில் இப்ப இருக்கின்ற வாரியம் போதாதா... அதுல அடிக்கிற கமிஷன் போதாதா... மினரல் வாட்டர் வாரியம் அப்படின்னு ஒன்னு ஆரம்பிக்க ஐடியா கொடுக்கின்றீர்களே..

ப்ரியமுடன் வசந்த் said...

நல்லதொரு அவசியமான இடுகை...

இராகவன் நைஜிரியா said...

மினரல் வாட்டர் வாரியம் ஆரம்பிச்சாலும்... அதை சுத்தமான தமிழ் பெயர் வக்கணும் அப்படின்னு அதுக்காக ஒரு பந்த், போராட்டம் வேற எல்லாம் நடக்கும்...

அப்புறம் அதுல எவ்வளவு கமிஷன் அடிச்சாங்கன்னு விஜாரிக்க ஒரு கமிஷன் போடணும்.

அந்த கமிஷனும் விஜாரிச்சு ஒரு 20 வருஷத்துகுள்ள ஒரு ரிப்போர்ட் கொடுத்துடும்..

நீங்க சொன்ன ஒரு சின்ன விஷயம் எவ்வளவு தூரத்துக்கு போகுது பாருங்க..

இராகவன் நைஜிரியா said...

// நியாயமான விலையில் வழங்கப் படின் ஒட்டு மொத்த மக்கள் ஆதரவு கிடைக்குமென்பதில் சந்தேகமேயில்லை. //

ஆமாங்க நியாயவிலைக் கடைகளில் வச்சு விக்கலாம்..

ரேஷன் கார்டில் மாசத்துக்கு 20 லிட்டர் ப்ரீ என்று அறிவிச்சு அதுல கமிஷன் அடிக்கலாம்..

அண்ணே இதுல நிறைய விஷயம் இருக்கண்ணே..

இராகவன் நைஜிரியா said...

அண்ணே சென்னையில் இந்த கஷ்டத்துக்காகத்தான் என் வீட்டில், ரிவர்ஸ் ஆஸ்மோ சிஸ்டம் (R.O. System) போட்டேன்.

ஆனா நம்ம அதிர்ஷ்டம் பாருங்க, அந்த சிஸ்டம் ரொம்ப நல்லா இரண்டு வருஷம் ஒர்க் பண்ணிச்சு.. இரண்டு வருஷம் முடிஞ்சு, மெயிண்டனெஸ் காண்ட்ராக்ட் ரினியூ பண்ணலாம் என்றுக் கூப்பிட்டால், அந்த கம்பெயியை மூடிகிட்டு போயிட்டாங்க..

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

தரக்கட்டுப்பாட்டை உறுதி செய்ய அரசின் துறை என்ன செய்கிறது?
அறிக்கை விடுகிறதே!!!!!!!!! கவனிப்பதில்லையா நீங்கள் .

முறையான லைசன்ஸ் வழங்க வேண்டிய துறை, விற்பனை வரித்துறை ஆகியவை என்ன செய்கின்றன?
லஞ்சம் வாங்குகின்றன.

லைசென்ஸ் பெற்று தரக்கட்டுப்பாட்டுடன் செயல் படும் நிறுவனங்கள் எத்தனை என்ற தகவலாவது இருக்கிறதா?
அந்தப் புண்ணாக்கு விஷயமெல்லாம் எதுக்கு?டயம் வேஸ்ட்.

இதுவரை, முறையற்ற நிறுவனங்களைக் கண்டறிய எதாவது நடவடிக்கையாவது எடுத்திருக்கிறதா?
வேற வேலை இருந்தா சொல்லுங்க பாஸ்.

மக்களுக்குத் தேவையான இன்ன பிற கட்டமைப்புகளை உருவாக்க முடியும். செய்வார்களா?
எம் பேரனுக்குப் பேரன் காலத்தில நடக்கலாம்.

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/ சரியாகச் சொன்னீர்கள்.

அதிகாரிகளுக்கு மேலும் ஒரு பிரச்சனையும் இருக்கு என்றுக் கேள்விப் பட்டு இருக்கின்றேன். இந்த தண்ணீர் வியாபரத்தில் கீழ் மட்ட அரசியல் தலைகள் பலவும் ஈடு பட்டுள்ளதால் அவர்களால் எந்த ஆக்‌ஷனும் எடுக்க இயலவில்லை - நல்ல நேர்மையான ஒரு அதிகாரி சொன்ன விஷயம் இது..//

இது வாஸ்தவம்தான். ஆனால் இவர்களால் கட்சிக்கு ஆகக் கூடியது என்ன? ஓட்டு தானே. மக்களுக்கு வசதி செய்வதால் அது போகாது தானே. பெரும்பாலும் பினாமிகள்.

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

// அண்ணே ... ஏன் இந்த கொலை வெறி...

அரசில் இப்ப இருக்கின்ற வாரியம் போதாதா... அதுல அடிக்கிற கமிஷன் போதாதா... மினரல் வாட்டர் வாரியம் அப்படின்னு ஒன்னு ஆரம்பிக்க ஐடியா கொடுக்கின்றீர்களே..//

நெறிப்படுத்தி அடிச்சா கணக்காவது இருக்கும்லண்ணே.

vasu balaji said...

பிரியமுடன்...வசந்த் said...

// நல்லதொரு அவசியமான இடுகை...//

வா வசந்த். நன்றி.

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/மினரல் வாட்டர் வாரியம் ஆரம்பிச்சாலும்... அதை சுத்தமான தமிழ் பெயர் வக்கணும் அப்படின்னு அதுக்காக ஒரு பந்த், போராட்டம் வேற எல்லாம் நடக்கும்...//

தண்ணீர்னு வெச்சிட்டா போச்சி.

// அப்புறம் அதுல எவ்வளவு கமிஷன் அடிச்சாங்கன்னு விஜாரிக்க ஒரு கமிஷன் போடணும்.

அந்த கமிஷனும் விஜாரிச்சு ஒரு 20 வருஷத்துகுள்ள ஒரு ரிப்போர்ட் கொடுத்துடும்..

நீங்க சொன்ன ஒரு சின்ன விஷயம் எவ்வளவு தூரத்துக்கு போகுது பாருங்க..//

இதையாவது யோசிச்சிருப்பாங்களா தெரியலையே=))

vasu balaji said...

ஸ்ரீ said...

// தரக்கட்டுப்பாட்டை உறுதி செய்ய அரசின் துறை என்ன செய்கிறது?
அறிக்கை விடுகிறதே!!!!!!!!! கவனிப்பதில்லையா நீங்கள் .

முறையான லைசன்ஸ் வழங்க வேண்டிய துறை, விற்பனை வரித்துறை ஆகியவை என்ன செய்கின்றன?
லஞ்சம் வாங்குகின்றன.

லைசென்ஸ் பெற்று தரக்கட்டுப்பாட்டுடன் செயல் படும் நிறுவனங்கள் எத்தனை என்ற தகவலாவது இருக்கிறதா?
அந்தப் புண்ணாக்கு விஷயமெல்லாம் எதுக்கு?டயம் வேஸ்ட்.

இதுவரை, முறையற்ற நிறுவனங்களைக் கண்டறிய எதாவது நடவடிக்கையாவது எடுத்திருக்கிறதா?
வேற வேலை இருந்தா சொல்லுங்க பாஸ்.

மக்களுக்குத் தேவையான இன்ன பிற கட்டமைப்புகளை உருவாக்க முடியும். செய்வார்களா?
எம் பேரனுக்குப் பேரன் காலத்தில நடக்கலாம்.//

நறுக்குக்கே நறுக்கா ஸ்ரீ:)).

புலவன் புலிகேசி said...

டாஸ்மாக் மாதிரி இந்தத் தண்ணிகும் ஒரு கடை ஆரம்பிக்கலாமுங்கறீங்க...என்ன செய்வது தமிழன் அரசியல்வியாதிகளிடமும் ஏமாற்று பேர்வழிகளிடமும் சின்னாபின்னப் படுகிறான்....

சங்கர் said...

//ஆவின் மாதிரி, தமிழ்நாடு குடிநீர் வாரியம், அரசு மானியத்துடனோ, ஒப்பந்தம் மூலமோ கடுமையான தரக் கட்டுப்பாட்டுடன் மினரல் வாட்டர் வியாபாரத்தைச் செய்ய முடியாதா? கண்டிப்பாக முடியும்.//

இருக்குற நிறுவனங்களில் எத்தனை அரசுக்கு சொந்தம்னு தெரியதப்போ ஏன் இப்படி யோசனையெல்லாம் சொல்றீங்க? (அரசு வேற, அமைச்சர்கள்/அதிகாரிகள் வேறன்னு யாரு சொன்னா?)

balavasakan said...

என்னதான் புதிசு புதிசா தண்ணி வந்தாலும் கிணத்து தண்ணி மாதிரி வராது நான் வேறு எங்கும் போனால் குளிர்பானங்கள் தான் குடிப்பன் இந்த கறுமம் புடிச்சதெல்லாம் குடிக்கமாட்டன்

சங்கர் said...

ஹை, மீ த 50 :)

நிஜாம் கான் said...

அண்ணே! இந்த தண்ணீ ஓக்கே! வேற "தண்ணி" பாக்கெட் பிரமாதமா பொட்டிக்கடைகளில் கூட கெடைக்குதாமே! ஏதாவது நீயூஸ் உண்டா???

நிஜாம் கான் said...

//அண்ணாச்சியா சும்மாவா. அதுக்காக நாம் கூவாம விட முடியுமா. இதுக்காகவாவது வாரியம் வந்தா தேவலை தானே.//

ஆகா அண்ணே! ஒரு புது வாரியத்துக்கு ஐடியா குடுத்து நல்லா மீட்டர் பாக்க வழி சொல்லீட்டீங்களே! அப்படி ஒரு வாரியம் அமைச்சா அந்த அமைச்சர் முதல் அதிகாரிகள் வரை உங்களை வாழ்த்துவார்கள் போங்க.

ஈரோடு கதிர் said...

ஆறுகளையும் ஏரிகளையும் கொன்ற பெருமைக்கு சொந்தக்கார்கள் நாம்....

இன்னும் ஓராயிரம் நோய்கள் வரும் தண்ணீரால்...

சொட்டுக் குடி தண்ணீர் கூட காசில்லாமல் இனி வாங்க முடியாத அளவுக்கு வசதியானவர்களாக இருப்பதை நினைத்து பெர்ர்ர்ர்ர்ருமைப் படுவோம்

RAMYA said...

சமுதாய அக்கறையோடு எழுதப்பட்ட இடுகை. நீங்கள் எடுத்து வைத்திருக்கும் கோரிக்கை மிகவும் நியாயமானது.

அரசாங்கத்தாரால் கவனிக்கப்பட வேண்டியது. கவனிக்க வேண்டியவங்க கவனித்து ஆவன செய்வாங்களா ??

குடிக்கும் நீர் சுத்தமாக இல்லாவிட்டால் ஏற்படும் பல கொடிய நோய்கள் நாம் அறிந்ததுதான்.
அதனால் பாதிக்கப் பட்டும் இருக்கிறோம். பார்ப்போம், விடியலுக்காக காத்திருப்போம்.

ஜிகர்தண்டா Karthik said...

இந்த தண்ணில கலப்படம் இருக்கறதாலதான்,
நம்ம குடிமகன்கள் டாஸ்மாக் தேடி போறாங்களோ.
அரசாங்கத்தின் பிசினஸ் டக்டிக்ஸ்...

vasu balaji said...

புலவன் புலிகேசி said...

//டாஸ்மாக் மாதிரி இந்தத் தண்ணிகும் ஒரு கடை ஆரம்பிக்கலாமுங்கறீங்க...என்ன செய்வது தமிழன் அரசியல்வியாதிகளிடமும் ஏமாற்று பேர்வழிகளிடமும் சின்னாபின்னப் படுகிறான்....//

தோ! தரமான தண்ணிங்குறேன். டாஸ்மாக்னா என்ன அர்த்தம்.

vasu balaji said...

சங்கர் said...

/ இருக்குற நிறுவனங்களில் எத்தனை அரசுக்கு சொந்தம்னு தெரியதப்போ ஏன் இப்படி யோசனையெல்லாம் சொல்றீங்க? (அரசு வேற, அமைச்சர்கள்/அதிகாரிகள் வேறன்னு யாரு சொன்னா?)//

சில குறைகள் இருந்தாலும் இருக்கிறதில இது தேவலாமில்லையா?

vasu balaji said...

Balavasakan said...

/என்னதான் புதிசு புதிசா தண்ணி வந்தாலும் கிணத்து தண்ணி மாதிரி வராது நான் வேறு எங்கும் போனால் குளிர்பானங்கள் தான் குடிப்பன் இந்த கறுமம் புடிச்சதெல்லாம் குடிக்கமாட்டன்//

இங்கல்லாம் கிணத்துத் தண்ணிங்கறதே கானல் நீராச்சே வாசு. குளிர்பானமும் இங்க மிஷின் வெச்சி இதே மினரல் வாட்டர்லதான் ஸ்டேஷன்லயெல்லாம்.அவ்வ்வ்வ்

vasu balaji said...

இப்படிக்கு நிஜாம்.., said...

//அண்ணே! இந்த தண்ணீ ஓக்கே! வேற "தண்ணி" பாக்கெட் பிரமாதமா பொட்டிக்கடைகளில் கூட கெடைக்குதாமே! ஏதாவது நீயூஸ் உண்டா???//

இது வேறயா. விசாரிச்சிருவோம்.

vasu balaji said...

இப்படிக்கு நிஜாம்.., said...

/ ஆகா அண்ணே! ஒரு புது வாரியத்துக்கு ஐடியா குடுத்து நல்லா மீட்டர் பாக்க வழி சொல்லீட்டீங்களே! அப்படி ஒரு வாரியம் அமைச்சா அந்த அமைச்சர் முதல் அதிகாரிகள் வரை உங்களை வாழ்த்துவார்கள் போங்க.//

ஏதும் விழா எடுத்து பாராட்டுவாங்களோ. =))

vasu balaji said...

ஈரோடு கதிர் said...

//ஆறுகளையும் ஏரிகளையும் கொன்ற பெருமைக்கு சொந்தக்கார்கள் நாம்....

இன்னும் ஓராயிரம் நோய்கள் வரும் தண்ணீரால்...

சொட்டுக் குடி தண்ணீர் கூட காசில்லாமல் இனி வாங்க முடியாத அளவுக்கு வசதியானவர்களாக இருப்பதை நினைத்து பெர்ர்ர்ர்ர்ருமைப் படுவோம்//

ஏனோ தேவையில்லாம இந்தியன் பட கவுண்டர் காமெடி கவனம் வருது=))

vasu balaji said...

RAMYA said...

// சமுதாய அக்கறையோடு எழுதப்பட்ட இடுகை. நீங்கள் எடுத்து வைத்திருக்கும் கோரிக்கை மிகவும் நியாயமானது.

அரசாங்கத்தாரால் கவனிக்கப்பட வேண்டியது. கவனிக்க வேண்டியவங்க கவனித்து ஆவன செய்வாங்களா ??

குடிக்கும் நீர் சுத்தமாக இல்லாவிட்டால் ஏற்படும் பல கொடிய நோய்கள் நாம் அறிந்ததுதான்.
அதனால் பாதிக்கப் பட்டும் இருக்கிறோம். பார்ப்போம், விடியலுக்காக காத்திருப்போம்.//

நன்றிங்க ரம்யா.

vasu balaji said...

Karthik Viswanathan said...

// இந்த தண்ணில கலப்படம் இருக்கறதாலதான்,
நம்ம குடிமகன்கள் டாஸ்மாக் தேடி போறாங்களோ.
அரசாங்கத்தின் பிசினஸ் டக்டிக்ஸ்...//

எக்ஸாம் பிஸில ந்யூஸ் படிக்கலைன்னு தெரியுது. டாஸ்மாக்ல கலப்படம்னு 2 வாரமா ஒரே அலப்பறை.

கலகலப்ரியா said...

//பில்செரி, அக்வா ப்யூரா, அக்வா புண்ணாக்கு//

என்னமோ கெட்ட கெட்ட வார்த்தைல திட்டுறீங்கன்னு புரியுது... யாரை... எதுக்கு... எப்டின்னு புரியல...!

கலகலப்ரியா said...

எனக்கென்னமோ... உங்க அக்காவ திட்டுற மாதிரி தோண்றது..! பிசுநாறி... நாதாரி.. புண்ணாக்குன்னெல்லாம்... அடுத்த வாட்டி வேலூர் போறச்சே சொல்லுறேன்..

vasu balaji said...

கலகலப்ரியா said...

/ என்னமோ கெட்ட கெட்ட வார்த்தைல திட்டுறீங்கன்னு புரியுது... யாரை... எதுக்கு... எப்டின்னு புரியல...!//

தோ! அதெல்லாம் லேபில்=))

vasu balaji said...

கலகலப்ரியா said...

//எனக்கென்னமோ... உங்க அக்காவ திட்டுற மாதிரி தோண்றது..! பிசுநாறி... நாதாரி.. புண்ணாக்குன்னெல்லாம்... அடுத்த வாட்டி வேலூர் போறச்சே சொல்லுறேன்..//

தோ! எதுனாலும் பேசி தீத்துக்கலாம். மிரட்டாத=)).

பா.ராஜாராம் said...

சாரி சார்.வேலை பளுக்களில் வரமுடியாமல் போச்சு.உங்களின் இந்த சமூக அக்கறை எப்பவும் பிரமிப்பு ஏற்படுத்தும்.இந்த இடுகையும் அப்படியே.பகிர்வுக்கு நன்றி சார்!

vasu balaji said...

பா.ராஜாராம் said...

/சாரி சார்.வேலை பளுக்களில் வரமுடியாமல் போச்சு.உங்களின் இந்த சமூக அக்கறை எப்பவும் பிரமிப்பு ஏற்படுத்தும்.இந்த இடுகையும் அப்படியே.பகிர்வுக்கு நன்றி சார்!//

நன்றி பா ரா.

ஜிகர்தண்டா Karthik said...

//எக்ஸாம் பிஸில ந்யூஸ் படிக்கலைன்னு தெரியுது. டாஸ்மாக்ல கலப்படம்னு 2 வாரமா ஒரே அலப்பறை.//
அட இது வேறயா.. இதுக்கு முதல்ல ஒரு டிபார்ட்மென்ட் அமைங்கப்பா. சாதாரண தண்ணிய விட இதுக்குதான் முக்கியத்துவம் அதிகம்

Chitra said...

எந்தத் தரக்கட்டுபாடுமின்றி, லைசன்ஸ் இருக்கிறதா இல்லையா என்றே தெரியாமல் தற்போது பெருமளவில் 20 லிட்டர் கேன்கள் மட்டுமே சந்தையில் வெளிப்படையாக விற்கப்படுகின்றன. நடுவில் ஐ.எஸ்.ஐ முத்திரையுடன் மட்டுமே விற்க வேண்டும் என்ற சட்டம் வந்தாலும், காந்தி நோட்டு அடிக்கிறவர்களுக்கு இந்த முத்திரை அடிப்பதா கஷ்டம். .............உண்மையை இப்படி போட்டு உடைச்சாலும், இவங்க திருந்த மாட்டாங்க. தண்ணி படுத்தும் பாடு ஒரு பக்கம். பணம் படுத்தும் பாடு ஒரு பக்கம். பாவம் மக்கள்!

பின்னோக்கி said...

கின்லே தாங்க எங்க வீட்டுல... இத குடிச்சுட்டு வேற தண்ணி குடிச்ச நல்லாவேயில்லை. 75 ரூபாய் ஒரு கேன். அதுக்கே மாசத்துக்கு 400 ரூபாய் ஆகுது :(

S.A. நவாஸுதீன் said...

///மக்களிடையே நம்பகத்தன்மையை உருவாக்குவதன் மூலம் அரசுக்கும், வாரியத்துக்கும் வருமானம் பெருகும். ///

நல்ல விஷயம்தான் சார் சொல்லியிருக்கிங்க. ஆனால் இப்ப எந்த அளவுக்கு சரிப்பட்டு வரும்னு தெரியலை. அப்படியே வந்தாலும் ஒருவேளை அரசுக்கும், வாரியத்துக்கும்னு சொல்றதுக்கு பதிலா அரசுக்கும் வாரிசுகளுக்கும் வருமானம் பெருகும்னு வேனும்னு சொல்லிப்பாருங்க. வர சான்ஸ் இருக்கு.

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமையான இடுகை.

Unknown said...

தமிழிஷ், தமிழ்மணம் ரெண்டுலயும் ஓட்டுப் போட்டுட்டேன் இந்த விசயத்துல இதுக்கு மேல என்னால வேற ஒண்ணும் பண்ண முடியாது.

அடுத்த தேர்தல்ல ஓட்டுப் போடுறதுக்கு முன்னாடி இந்த மாதிரி பதிவுகளைப் படிச்சிப் பாத்துட்டு ஓட்டுப் போடலாம். ஆனா யாருக்குப் போடுறது?

vasu balaji said...

Karthik Viswanathan said...

/ அட இது வேறயா.. இதுக்கு முதல்ல ஒரு டிபார்ட்மென்ட் அமைங்கப்பா. சாதாரண தண்ணிய விட இதுக்குதான் முக்கியத்துவம் அதிகம்//

இந்த கட்டிங்குக்கு வேற அடிச்சிக்கவா:))

vasu balaji said...

Chitra said...

//.............உண்மையை இப்படி போட்டு உடைச்சாலும், இவங்க திருந்த மாட்டாங்க. தண்ணி படுத்தும் பாடு ஒரு பக்கம். பணம் படுத்தும் பாடு ஒரு பக்கம். பாவம் மக்கள்!//

இப்புடியே இருந்துட்டு அப்புறம் கெடந்து அடிச்சி என்ன பண்ணங்க.

vasu balaji said...

பின்னோக்கி said...

//கின்லே தாங்க எங்க வீட்டுல... இத குடிச்சுட்டு வேற தண்ணி குடிச்ச நல்லாவேயில்லை. 75 ரூபாய் ஒரு கேன். அதுக்கே மாசத்துக்கு 400 ரூபாய் ஆகுது :(//

பாருங்க. அது கின்லேயும் சரி, பிஸ்லெரியும் சரி, நிஜம்மா ஒரு கேன் தண்ணி 75 ரூ விலை அனியாயம் இல்லைங்களா? இவங்களும் நியாயமான விலைக்கு வித்தா மக்கள் தரமான நீரை வாங்குவாங்க இல்லையா?

vasu balaji said...

S.A. நவாஸுதீன் said...

// நல விஷயம்தான் சார் சொல்லியிருக்கிங்க. ஆனால் இப்ப எந்த அளவுக்கு சரிப்பட்டு வரும்னு தெரியலை. அப்படியே வந்தாலும் ஒருவேளை அரசுக்கும், வாரியத்துக்கும்னு சொல்றதுக்கு பதிலா அரசுக்கும் வாரிசுகளுக்கும் வருமானம் பெருகும்னு வேனும்னு சொல்லிப்பாருங்க. வர சான்ஸ் இருக்கு.//

ஒரு விதத்தில இது கூட பரவால்லைன்னு தோணுதுங்க நவாஸ். மக்களுக்கு கெடுதல் பண்ண கட்டிங் வாங்கறத விட நல்லதுபண்ணிட்டு கட்டிங் அடிச்சா தேவலாம் தானே.

vasu balaji said...

T.V.Radhakrishnan said...

/அருமையான இடுகை.//

நன்றிங்க சார்.

vasu balaji said...

முகிலன் said...

//தமிழிஷ், தமிழ்மணம் ரெண்டுலயும் ஓட்டுப் போட்டுட்டேன் இந்த விசயத்துல இதுக்கு மேல என்னால வேற ஒண்ணும் பண்ண முடியாது.//

இந்த நேர்மைய நான் பாராட்டுறேன்=))

//அடுத்த தேர்தல்ல ஓட்டுப் போடுறதுக்கு முன்னாடி இந்த மாதிரி பதிவுகளைப் படிச்சிப் பாத்துட்டு ஓட்டுப் போடலாம். ஆனா யாருக்குப் போடுறது?//

என்னைப் போடாம இருந்தாச் சரி=))

ஸ்ரீராம். said...

MGR பாட்டு ஒன்றில், 'அன்புக்கு நான் அடிமை' என்று தொடங்கும் பாடலில், 'குடிக்கும் நீரை விலைகள் பேசி கொடுக்கும் கூட்டம் அங்கே...' என்று வரும். அது நடந்தது...
நன்றாக நடக்கிறதா என்றால் இல்லை. 'என்ன தண்ணி தர்றானோ' என்று தோன்றினாலும் நாம் அதை வாங்குவதை நிறுத்த முடிவதில்லை. கண் முன்னே வரும் அழுக்கு நீரை விட, எங்கிருந்தோ வடிகட்டப் பட்டு வரும் அழுக்கு நீர் நம் மனதுக்கு ஆறுதலாய் இருக்கிறது....!

Thamira said...

சிறப்பான பதிவு. தொடர்க..

ஆரூரன் விசுவநாதன் said...

அவசியமான அலசல்.....

புற்றீசல் போல் புதுப் புது நிறுவனங்கள், தரமில்லாத் குடிநீரையே வழங்குகின்றன என்பதில் ஐயம் இல்லை...குறிப்பாக பாக்கெட் குடிநீர் அநியாயம்.

vasu balaji said...

ஸ்ரீராம். said...

/MGR பாட்டு ஒன்றில், 'அன்புக்கு நான் அடிமை' என்று தொடங்கும் பாடலில், 'குடிக்கும் நீரை விலைகள் பேசி கொடுக்கும் கூட்டம் அங்கே...' என்று வரும். அது நடந்தது...
நன்றாக நடக்கிறதா என்றால் இல்லை. 'என்ன தண்ணி தர்றானோ' என்று தோன்றினாலும் நாம் அதை வாங்குவதை நிறுத்த முடிவதில்லை. கண் முன்னே வரும் அழுக்கு நீரை விட, எங்கிருந்தோ வடிகட்டப் பட்டு வரும் அழுக்கு நீர் நம் மனதுக்கு ஆறுதலாய் இருக்கிறது....!//

ஆமாங்க ஸ்ரீராம்.

vasu balaji said...

ஆதிமூலகிருஷ்ணன் said...

/சிறப்பான பதிவு. தொடர்க../

நன்றிங்க ஆதி.

vasu balaji said...

ஆரூரன் விசுவநாதன் said...

// அவசியமான அலசல்.....

புற்றீசல் போல் புதுப் புது நிறுவனங்கள், தரமில்லாத் குடிநீரையே வழங்குகின்றன என்பதில் ஐயம் இல்லை...குறிப்பாக பாக்கெட் குடிநீர் அநியாயம்//

வாங்க ஆரூரன். பாக்கட் குடிநீர் டாஸ்மாக்கால் சுத்தகரிக்கப்படும்=))