Thursday, June 11, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 76

காற்றுப்புக முடியாத அறைக்குள் வைத்து கூட்டமைப்பினரை பூட்ட வேண்டும் - அமைச்சர் மேர்வின் சில்வா

சாவடிக்க எப்படி எல்லாம் உக்காந்து யோசிக்கிறாய்ங்கப்பா. இதில அதிகாரப் பகிர்வுக்கு வேற வழி குடுப்பானுவ.
________________________________________________
ஈழத் தமிழர் படுகொலைக்கு இந்தியாவும் கருணாநிதியுமே காரணம் ‐ ராமதாஸ் குற்றச்சாட்டு

இப்போ தனியா வந்து கூவினா நீங்க யோக்கியமா? அதென்னா இந்தியாவும், ஏன் அதில மட்டும் தனிப்பட்ட ஆள சொல்ல முடியாது? தெரியுமுங்ணா.
________________________________________________
ஆயுதங்களைக் கண்டு பிடிக்கும்வரை மீளக்குடியமர்த்த முடியாது -உதய நாணயக்கார

வசதிடா சாமி. இத சொல்லியே கடைசி உசிர் இருக்கிற வரை கம்பிக்குள்ள வைக்கலாம்.
________________________________________________
வவுனியாவின் இராணுவ ஆயுதக்கிடங்கை எரித்தது புலிகள் என வைகோ தெரிவிப்பு

இருக்கிறது போறாதுன்னு இது வேறயா. சாமிகளா அவிங்க பண்ணா அவிங்களே சொல்லுவாய்ங்க.
________________________________________________
ஈழத்தமிழர்களைப் பற்றி ஜெயலலிதாவுக்குத்தான் அக்கறை என்று கூறுவதுதான் உலக மகா அதிசயம்: கலைஞர்

இருந்திருந்து ரொம்ப நாளைக்கப்புறம் ஈழத் தமிழர்னு பேச தோணுறப்ப கூட இந்த நக்கலும் நையாண்டியும் தானே!வேற உருப்படியா ஒண்ணும் பண்ண மாட்டிங்களா ஐயா?
________________________________________________
மத்திய அரசு இலங்கைத் தமிழர்களின் புனர் வாழ்விற்காக இந்திய அரசின் சார்பில் ரூ.500 கோடியை நிதியுதவி அளிக்க முன்வந்து, அதற்காக நாம் நன்றியும் தெரிவித்திருக்கிறோம்.:கலைஞர்

சவசங்கரன் நிபந்தனையில்லாம குடுக்க பரிந்துரைத்த அந்த 500 கோடி 19 சிங்களவனுக்கும் ஒரு முஸ்லிமுக்கும் தவிர ஒரு தமிழனுக்கும் சேரலைன்னு நேத்து சொன்னத படிக்கலையா தலைவரே?
________________________________________________
இலங்கை அரசின் நடவடிக்கை: கனடா கண்டனம்

கடன் குடுத்ததை திருப்பிக் கேளுங்கப்பு. இல்லைன்னா கொழும்பு ஜப்தின்னு நில்லுங்க. சாவட்டும். கண்டனமாம்.
________________________________________________
துணைமுதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கலைஞர்பாராட்டு

தந்தை மகற்காற்றும் உதவி போல. போன வாரமெல்லாம் அவரு இவரைப் பாராட்டினாரு. இப்படியே மாத்தி மாத்தி பாராட்டி மருத்துவருக்கு குடைச்சல் குடுப்பாய்ங்க போல.
________________________________________________
அதிக அளவில் ஆயுதம் வாங்கும் நாடுகள் பட்டியல்:2வது இடத்தில் சீனா

பின்ன. மத்தவங்களுக்கும் சேத்தில்ல வாங்குறது.
________________________________________________
அணு ஆயுதங்களை அழிக்க தயார்: ரஷிய பிரதமர்

என்னா உள்குத்து. யாருக்கு குடுக்க போறானோ தெரியலையே?
________________________________________________
வட இலங்கை முகாம்களில் மக்கள் நீண்ட நாட்கள் தங்க நேரிடலாம் என்று ஐ. நா அதிகாரி கவலை

ஐயோ பாவமே. நீங்க கவலை படுறதே பெரிய விடயம்.இதுக்கு பேரு தங்கறதா? ஆயுள் கைதின்னு சொல்லுங்களேன்.
________________________________________________
(நண்பர்களுக்கு வணக்கம். அழுத்தம் தாளாம புலம்பத் தலைப்பட்டு நறுக்கிச் சொதப்பினனோ சொதப்பி நறுக்கினனோ தெரியாது. உங்க ஆதரவில 76 நறுக்கியாச்சி. கத்திய தீட்டி என்ன பண்ணப் போறம். புத்திய தீட்டலாம்னு முடிவு. ஒரு 34 நாள் இடைவெளி. நடுவில வசதிப் பட்டால் வலை மேயக்கூடும். இழுத்து விட்டு எஸ்கேப் ஆன கலகலப்ரியா, வழிகாட்டியும் ஆதரவாகவும் இருக்கும் பழமைபேசி, ராஜ நடராஜன், கிரி, சூர்யா கண்ணன், சக்தி, நைஜீரியா இராகவன், சுப்பு, ஜூர்கன், நசரேயன், மற்ற அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. மீண்டும் நறுக்கும் வரை...பாலா.)

___/\___

Wednesday, June 10, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 75

தமிழர்கள் மின் வேலியிடப்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

விலங்குகள் வராம மின்வேலி போட்டாத்தான் சட்டப்படி குற்றம். மனுசனுக்கில்லை. வேணும்னா ஐ.நா. ல ஓட்டு எடுக்கலாமான்னு கேப்பானுவ.
________________________________________________
இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் இலங்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுக்காது: சிவ்சங்கர் மேனன்

தெரியாம கேக்குறேன். இந்த முடிவெல்லாம் இவர் எடுக்கிறது தானா? மந்திரி முந்திரி எல்லாம் மண்டையாட்டவா?
________________________________________________
20 நாடுகளின் உதவியுடனேயே விடுதலைப் புலிகளை அரசு தோற்கடித்தது: வெளியுறவு அமைச்சர் ரோஹித

அழிக்க 20 நாடு, அதில இருந்து தப்பிக்க 24 நாடு, தினம் உண்டு கொழுக்க நிவாரணம் கொட்டிக் கொடுக்க எல்லாரும்னு பிச்சைலயே போகுது பொழப்பு. இதுக்கு அலட்டல பாரு.
________________________________________________
இலங்கையில் நுழைய அனுமதி மறுப்பு: கனடா எம்.பி. தவிப்பு

கனடா டாலர் மட்டும் தான் மறுப்பில்லாம அனுப்பதிப்பான் ராஜபிச்ச.
________________________________________________
இலங்கை அரச பயங்கரவாதிகள் தமிழீழ மக்களை ஒரு பூச்சியை விட கேவலமாக நடத்துகின்றார்கள்

அரசா இருந்தா பயங்கரவாதத்துக்கு பேரு இறையாண்மை. எல்லாம் வந்து வந்து வேடிக்கை பார்த்துட்டு போறாங்க.
________________________________________________
இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனும், சிவ்சங்கர் மேனனும் எவ்வித நிபந்தனைகளும் இன்றி 500 கோடி ரூபாய்களை இலங்கைக்கு வழங்க பரிந்துரைத்துள்ளனர்:தேசிய பாதுகாப்பு ஆலோசனை சபையின் உறுப்பினரான பேராசிரியர் வி.சூரியநாராயணன்

கேடிங்கப்பா. பரிந்துரை எதுக்கு. போடு கையெழுத்துன்னா போடப் போறாங்க.
________________________________________________
20 பேரைக்கொண்ட குழு இந்த பணத்தை 19 சிங்களவர்கள் 1 முஸ்லிம் ஆகியோருக்கு செலவிட பரிந்துரைத்துள்ளது

பினாமி போல. எல்லாம் மந்திரிங்க சொந்தக் காரனா இருக்கும்.
________________________________________________
தமிழ்ச்சமூகத்திற்கு இந்தியா துரோகம் இழைத்து விட்டது: திருமாவளவன்

உங்க‌ளுக்கு இப்போவாவது உறுத்துதே.ச‌ந்தோஷ‌ம்.
________________________________________________
நேருக்கு நேர் மோதுங்கள்:பாகிஸ்தானிடம் அமெரிக்கா

வ‌ள‌ர்த்த‌ க‌டா முட்ட‌ வ‌ந்தான்னு பாடிட்டு போங்க‌ப்பு. ப‌க்ஸேக்கு சொல்ல‌க் காணோம். ஊர‌க் கூட்டி தேரிழுத்தான்.
________________________________________________
சீனாவுடன் மோதல் வருமா?:எல்லையில் விமானங்களை குவிக்கிறது இந்தியா

ப‌க்ஸேட்ட‌ மிச்ச‌ம் மீதி இருந்தா கேட்டுப் பாருங்க‌. குடுப்பான். காசுக்குதான். அதான் உசாரா உன் ச‌ண்டைய‌தானே நான் போட்டேன்னுட்டானே?
________________________________________________
பாவனைக்கு உதவாத பீரங்கி தோட்டாக்கள் வைக்கப்பட்டிருந்த களஞ்சியசாலையே தீயில் அழிவடைந்துள்ளது ‐ நாணயக்கார

பாவ‌ம்பா. புளுகி நாளாச்சின்னு வ‌ந்துட்டான். பீர‌ங்கி தோட்டா ப‌ஞ்சுல‌யா ப‌ண்ணி வெச்சாங்க‌?
________________________________________________
பாஜக-ஜனதா தளம் இணைந்து செயல்படும்: இல.கணேசன்-சு.சுவாமி அறிவிப்பு

டெபாசிட் கூட‌ இல்லாம‌ நாச‌மா போக‌ வ‌ழி.
________________________________________________

Tuesday, June 9, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 74

இலங்கையில் தமிழ் மக்களின் கஷ்டங்கள் தீரவில்லை: கனிமொழி

அதுக்கென்னாங்க. சிதம்பரம் கிட்ட சொன்னா மேனனோ நாராவோ போய் முகாமில ஆதித்யா, சிரிப்பொலி, சன்டிவி, எல்லாம் தெரிய வழி பண்ணிடுவாங்க. ஜனங்க கஷ்டத்த மறந்துடுவாங்க.
________________________________________
இலங்கைத் தமிழர் நிலை வேதனையளிக்கிறது: சுஷ்மா

இது யாரு புது முதலை?
_________________________________________________
ராமேஸ்வர மீனவர்கள் 9 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்

அட பாசமா விருந்துக்கு கூட்டி போயிருப்பாங்கப்பு. இங்க எவனும் சட்ட பண்ணப் போறதில்ல. விதி இருந்தா வந்துடுவாங்க. வேலைய பாருங்க.
________________________________________
இலங்கை ராணுவ தளமாக கச்சத்தீவு மாறும் அபாயம்: டி.ராஜா

நட்புறவின் அடையாளமா கொச்சில கூட இடம் குடுப்பாங்க. கச்சத்தீவு எதுக்கு..
________________________________________
இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இல்லை: ராமதாஸ்

ஏனோ? உங்க கட்சி கிழிச்சத அவங்க என்ன கிழிக்காம போய்ட்டாங்க. உள்சண்ட போட்டே நாசமா போவுதுங்க.
________________________________________
விடுதலைப் புலி ஆதரவாளர்களுக்கு இந்திய வீஸா வழங்கக் கூடாது – சுப்ரமணியம் சுவாமி

இந்தாள முதல்ல நாடு கடத்தணும். சம்பந்தமே இல்லாம கேனப்பயலுவ தமிழந்தான்னு இங்க வந்து உக்காந்து உசிரெடுக்குறான்.
________________________________________
அகில இந்திய ஆர்ய முன்னேற்ற கழகம்: எஸ்.வி.சேகர் தொடங்கும் புதிய கட்சி

அடுத்த நாடகத்துக்கு பெயரா? இருக்கிறதெல்லாம் போறாது. இவரு வேற வந்துட்டாரு. மனுசனா இருக்க வழி பாருமைய்யா முதல்ல.
________________________________________
திருப்பதி கோவிலைச் சுற்றி இரும்பு வேலி: பாதுகாப்பு ஏற்பாடு

சாமிக்கே வேலியா? ராஜ பக்சே வரானா என்னா பூஜைக்கு.
________________________________________
தீவிரவாதிகள் முகாம்களை அடியோடு அழிக்க வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு இந்திய பிரதமர் மன்மோகன் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தோடா. அது அவிங்க இறையாண்மைப்பா. அத சொல்ல இவரு யாரு? ஏன். நீடிப்பெல்லாம் குடுத்தீங்கள்ள. நாராவ அனுப்பறது. பேசித் தீத்துடுவாரு.
_________________________________________________

Monday, June 8, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 73

இலங்கை ராணுவ தாக்குதலில் ஒரு அப்பாவி தமிழர் கூட பலியாகவில்லையாம்! ரோகித பொகலகமா

ஒரு தமிழன்கூட அப்பாவி இல்லன்னு சொல்லிட்டானுவளே. அப்புறம் இது வேறயா?
****
மக்களோடு மக்களாக இலங்கையில் இருக்கிறார் பிரபாகரன்;விரைவில் போராட்டத்தை ஆரம்பிப்பார்

போச்சுடா. இப்போ எல்லாரையும் வதைக்கப் போரான். வரப்போ வரட்டும். எங்கயோ நல்லா இருக்கட்டும். விடுங்கையா.
****
இலங்கை பிரச்சனை:கலைஞர்-ப.சிதம்பரம் விவாதம்

இது நல்லதுக்கா தெரியலையே. வந்த நாள்ள இருந்து திருப்பி அனுப்பறேனு குதிக்குது அந்தாளு. என்னா சிதம்பர உள்குத்தோ.
****
இலங்கை அரசு தமிழர்களை பத்திரமான இடங்களில் குடியமர்த்த வேண்டும்:ப.சிதம்பரம்

அப்படி ஒரு இடம் இருக்கான்னு (அவ) நம்பியார், நாரா, சவசங்கரன் சொன்னாங்களா? ஏன்யா இப்படி வெறி பிடிச்சி அலையறீங்க.
****
தமிழர் பகுதிகளை பார்வையிடலாம்;ஆனால் எழுதக்கூடாது: ஊடகங்களை எச்சரிக்கும் ராஜபக்சே

பொருட்காட்சி லெவலுக்கு ஆக்கிட்டானா? போர் நின்னு போச்சி கலைக்ஷன் இல்லைன்னு.
****
இனி மொத்த இலங்கையையும் கைப்பற்றும் போர் நடக்கும்;ஒரு சிங்களன் கூட நிம்மதியாக இருக்க முடியாது:சீமான்

அண்ணாச்சி உணர்ச்சி வசப்படாதீங்க. அப்படி எல்லாம் பண்றதானா எப்பவோ பண்ணி இருப்பாங்க.
****
கலைஞரை இலங்கைக்கு அழைக்கிறார் ராஜபக்சே

பாராட்டவா? பண்ண வேண்டியது தான். ரொம்பதான்டா நக்கலு.
****
தமிழக அரசியல்குழு இலங்கை செல்லுமா?:கனிமொழி

ராணுவ உதவில நெறய போச்சு. இருக்கிறத சுருட்ட பயிற்சி குடுக்கவா?
****
அடித்தட்டு மக்கள் முதல் மேல்தட்டு மக்கள் வரை அனைவரையும் பாதுகாத்து ஆட்சி செய்யும் ஒரே தலைவர் முதல்வர் கருணாநிதி மட்டுமே: அன்பழகன்.

ஈழத் தமிழர் எந்த தட்டுங்கண்ணா? ஆமா தனி ஈழம்னு தானும் சவுண்டு விட்டாரே. என்னாச்சி கவனப் படுத்துங்க.
****
திருப்பதி கோவில்:ஒரேநாள் உண்டியல்வசூல்1.70 கோடி

சாமி கணக்கெல்லாம் சரியா வந்துடும். தலைவருங்க வசூல சொல்லுங்க பாப்பம்.
****
விடுதலைப்புலிகளை தோற்கடிப்பதற்கு இந்தியா எப்போதுமே எமக்கு உறுதுணையாக இருந்தது: கோத்தபாய தெரிவிப்பு

பஞ்ச சீலம் குடுத்த பரம்பரை. பாருக்குள்ளே நல்ல நாடுன்னு பாரதி. இப்படி நாதாரிங்க கிட்ட பாராட்டு வாங்க நாரடிச்ச நாசமா போனதுங்கள திட்ட புதுசா வார்த்தைதான் உக்காந்து யோசிக்கணும்.
****
பிரபாகரனின் சடலத்தில் காணப்பட்ட சீருடை அவர் மரணமடைந்தபோது அணிந்திருந்த ஆடையல்ல - 53ஆவது படையணி தளபதி

அடுத்ததா சீருடைக்குள்ள இருந்த சடலம் பிரபாகரன் அல்லன்னு ஒத்துக்க மாட்டானுங்களே?
****

Saturday, June 6, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 72

போர்க் குற்ற விசாரணை சர்வதேச அளவில்நடத்தப்பட வேண்டும்.இந்த விசாரணைக்கு இலங்கை அரசு ஒத்துழைக்க வேண்டும்: பான் கி மூன்

கோழி கோழி, குழம்பு வைக்கப் போறேன். மசாலா அரைச்சிக்கவான்னா, சரின்னு சொல்லப் போவுதா கோழி. ஒத்துழைக்கிறதாம்.
______________________________________________________
நீண்ட யுத்த வெற்றிக் கொண்டாட்டங்கள் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் :பான் கி மூன்

ஆமாப்பா. சட்டு புட்டுன்னு கொண்டாடி முடிங்க. இல்லன்னா இவங்களுக்கு குடைச்சல்.
______________________________________________________
இலங்கை அரசு மனித உரிமைமீறல்: ஐ.நா. விசாரணை நடத்த இந்தியா மீண்டும் எதிர்ப்பு

ஆமா. மூணுபேரையும் சேர்த்து விசாரிக்க முடியாதா? கூட்டுக் கள்ளனுங்கள்ள ஒருத்தன புடிப்பேன்னா மத்த ரெண்டு சும்மாவா இருக்கும்.?
______________________________________________________
20,000க்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை ராணுவம் கொன்று தீர்த்தது குறித்து பான் எதுவும் குறிப்பிடவில்லை:செய்தி

காணாத நரகல் கழுவாம போச்சின்னு கண்டுக்காம விட்டா நோண்ட மாட்டாங்கன்னு விட்டாரு போல.
______________________________________________________
யுத்தக் குற்றச் செயல்கள் குறித்து இலங்கை அரசாங்கம் விசாரணைகளை நடத்தும் ‐ பலிஹக்கார :

உசார் பார்ட்டி இவன். யார் செயல்னு சொல்லமாட்டானே. புலிகள்தான்னு அப்பாவிங்க கொஞ்ச பேர தீத்துக் கட்டுவான்.
______________________________________________________
இந்தியாவில் உள்ள அகதிகளை அழைத்து வருவது குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும்:அமைச்சர் அனுரபிரிதர்ஷன யாப்பா

யப்பா யாப்பா? நியாயமாப்பா? இருக்கிறவங்க செத்தா நான் பொறுப்பில்லன்னு சொல்லிட்டு திரும்ப வேற அழைக்கிறாராம்.
______________________________________________________
தமிழ் கிராமம் சிங்கள மயமாகிறது. ஜனாதிபதியின் பாரியார்,மகன் ஆகியோர் யாழ்ப்பாணம் சென்று திரும்பினர்

அதுக்குத் தானே இவ்வளவு பாடும். தமிழ் ஊருன்னு ஒன்னு இருந்துடப்படாது.
______________________________________________________
உள்விவகாரங்களில் தலையிட எந்தவொரு நாட்டுக்கும் சந்தர்ப்பம் அளிக்கப்பட மாட்டாது: மஹிந்த சமரசிங்க

சீனா, இந்தியா, ரஷ்யா தவிரவா?
______________________________________________________
புலிகளின் தோல்விக்கும், இலங்கை இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்துக்கும் தொடர்பில்லை: சிவ சங்கர மேனோன்

கேக்குறவன்லாம் கேனையன்னு தானெ ஒத்த பால‌ம்.
______________________________________________________
ஜனாதிபதி உரையில் தமிழீழ படுகொலை பற்றி ஏதுமில்லை: திருமாவளவன்

நிஜமா ஏதாவது இருக்கும்னா எதிர்பார்தீங்க?
______________________________________________________
தமிழகத்தில் காங்கிரசை வலுப்படுத்த ராகுல் திட்டம்

இளைஞர்களே கனவு காணுங்கள்னு கலாம் சொன்னாலும் சொன்னாரு அனியாயத்துக்கு காணுறாரு இவரு.
______________________________________________________

Friday, June 5, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 71

அகதிகள் பட்டினியால் மரணித்தால் ஐ.நா. சபையே பொறுப்பேற்க வேண்டும்: அமைச்சர் மஹிந்த சமரசிங்க

அகதியாக்கினதுக்கு இவரு பொறுப்பில்ல. இத விட என்னா வேணும். ஆமாம் நாந்தான் பொறுப்புன்னு படைய அனுப்பி அவங்கள ஊருக்குள்ள விடலாம்ல. அது அது தானே பிழைக்கும்.
_____________________________________________
போர்க் குற்றம் - மனித உரிமை மீறல் குறித்த விசாரணைகள் இனித் தேவையில்லை:மஹிந்த சமரசிங்க

என்டப்பன் குதிருக்குள்ள இல்லைன்னு ஏன் குதிக்கிற. ஒண்ணும் இல்லைன்னா ஏன் தடுக்கணும்.
_____________________________________________
13 ஆவது அரசியல் சாசனச் சட்டம் பூரணமாக அமுல்படுத்தப்படும்: அமெரிக்காவிடம் போகொல்லாகம உறுதி

காசு வாங்குற வரைக்கும் எல்லா உறுதியும் குடுப்பானுவ. அப்புறம் யாரும் எமக்கு அறிவுறுத்தத் தேவையில்லைம்பானுவ.
_____________________________________________
இலங்கை இறுதிகட்ட போரில் 5 ஆயிரம் தமிழர்கள் மட்டுமே இறந்தனர்:இலங்கை அரசு தகவல்

ஆமிக்காரன் செத்த கணக்குதான் புளுகறதுன்னா இது கூடவா? பூஜ்ஜியத்துக்கு மதிப்பில்லைன்னு விட்டுட்டான் போல.
_____________________________________________
இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்: ராமேசுவரம் மீனவர்களின் மீன்பிடி வலைகள் அறுப்பு பாதியிலேயே திரும்பி வந்தனர்

இப்போகூட நாம வாய் திறக்க மாட்டமே. அடிபட்டது ஆஸ்டிரியா சர்தார்ஜியா, ஆஸ்திரேலியா இந்திக்காரனா. தமிழன் ரொம்ப நல்லவன். அடி வாங்குறபோ கூட இறையாண்மைன்னு தான் அலருவான்.
_____________________________________________
இந்திய அரசும், ஐ.நா.சபையும் இணைந்து தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்:மதிமுக தீர்மானம்

மறை கழண்டு போச்சா? இந்தியாதான் காரணம்னு கூவிட்டு, இதென்னா வேலை.
_____________________________________________
தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க சென்னையில் உஷார் நிலை

400 பேரு ஊடுருவிட்டாங்கன்னு சொன்னாங்களே. அப்போ உஷாரில்லையா?
_____________________________________________
இலங்கை யுத்தப் பிரதேசத்தில் செயலாற்றிய மருத்துவர்கள் ஒரு வருடம் அல்லது அதற்கு மேற்பட்ட காலம் தடுத்து வைக்கப்பட்டிருப்பார்கள்

இது ஒண்ணே போதாதா இவனுங்க எவ்வளவு குரூர புத்திக் காரனுங்கன்னு. பாம்புக்கு ராஜா மூங்கித்தடி தான். போடுங்கப்பு!
_____________________________________________
கப்டன் அலி (வணங்காமண்) கப்பலை இலங்கைக் கடற்படை கைது செய்துள்ளது

நவநீதம் அம்மணி . வழக்கம் போல கோரிக்கையோ கண்டனமோ சொல்லிடுங்க. அதுக்கு மேல பண்ண தருவிசில்ல.
_____________________________________________

Thursday, June 4, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 70

இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்களின் நிலையை அறிய சிறப்பு தூதர்: இந்தியா பரிசீலனை

கைப் பொன்னுக்கு கண்ணாடி வேறயா. இவரு போய் ஐந்து நட்சத்திர ஓட்டல்ல தங்கி, அருமையாத் தின்னு அவன் எழுதிக் குடுத்ததுக்கும் மேல கூவப் போராரு. ஒரு தமிழன அனுப்புன்னு கேக்க கூட பயமா இருக்கு. அவந்தான் முதல்ல விலை போறான்.

__________________________________________
இலங்கை அரசை விசாரணை செய்து தண்டனை பெற்றுத்தர உலகநாடுகளிடம் வேண்டுகோள்: திராவிடர் கழகம்

முதல்ல உங்க தலைவர வேண்டுங்க. அப்புறம் உலகத் தலைவர்களை நோண்டலாம்.

__________________________________________
தமிழர் நிலை கண்டு பதைபதைத்தேன்: இலங்கை தலைமை நீதிபதி

வெள்ளை வேன் வரப் போகுது. அவதானமா இருங்கோவன்.

__________________________________________
இடம் பெயர்ந்த தமிழர்களுக்கு நிவாரண உதவி: ஐ.நா.

போங்கடா. நிர்வாணப் படுத்துற நாயிகிட்ட கொட்டிக் கொடுத்து நிவாரணம் பண்ணிடப் போறான்.

__________________________________________
வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மாதம் 25 கிலோ அரிசி: ஜனாதிபதி உரையில் அறிவிப்பு

2125 கோடி ம‌க்க‌ளுக்கு செல‌வு ப‌ண்ணி இருந்தா இந்த‌ப் பிச்சை தேவையா.

__________________________________________
பன்றி காய்ச்சல்: அதிகாரிகளுடன் அமைச்சர் ஆய்வு

காய்ச்சி எடுத்த‌ அமைச்ச‌ர‌ சொல்றாங்க‌ளா?

__________________________________________
இந்திய அரசியலில் சாதுர்யத்தை உருவாக்கி காட்டியிருப்பவர் முதல்வர் கருணாநிதி: துணை முதல்வர்

இடுப்பு கோவ‌ண‌த்த‌ உருவிட்டு போனா கூட‌ அர‌ஞாண் க‌யற்றில‌ கை வெச்சுடுவானான்னு ச‌வ‌டால் விடுற‌வ‌ங்க‌ள்ள‌ நாம‌. மான‌ங்கெட்டு போன‌துக்கு பேரு சாதுரிய‌மா?

__________________________________________
போலி அதிகம் உள்ளதால் ரேஷன் அட்டையை வாக்களிக்க பயன்படுத்தவில்லை: நரேஷ்குப்தா

ஆளு போலியா இருந்தா ப‌ர‌வாயில்லை. அட்டைதான் போலியா இருந்துட‌ப்ப‌டாது.

__________________________________________
பிரித்தானியாவில் 12 மணித்தியால தொடர் தமிழீழ தேசியக் கொடிப் போராட்டம் வெள்ளை இன பெண்ணால் முன்னெடுப்பு

யோவ். கொளுத்துற‌ வெயில்ல‌ காலைல‌ இருந்து க‌ர‌ன்ஸிமால‌, 86 வ‌கை வ‌ரிசைன்னு நிக்கிற‌ த‌மிழ‌ன‌ தெரிய‌ல‌. சட்ட‌க்கார‌ பொம்பிளை 12 ம‌ணி நேர‌ம் கொடிப் போராட்ட‌ம் ப‌ண்ண‌த செய்தி போடுறீங்க‌ளா?

__________________________________________
இலங்கையின் உள்விவகாரத்தில் அண்டை நாடுகளோ சர்வதேச நாடுகளோ தலையிடத்தேவையில்லையென சீனா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

நீ த‌லையிட்டு ஆயுத‌ம் குடுக்காம‌ இருந்திருந்தா உள்விவ‌கார‌மே வ‌ந்திருக்காதே.

__________________________________________

Wednesday, June 3, 2009

தகப்பன் சாமிகள் - 2

இதுவும் ஒரு நாள் மின்சார ரயிலில் பயணிக்கும்போது பெற்ற அனுபவம்.

ஆந்திரத்தின் பஞ்சத்துக்கு தப்பி தமிழ்நாட்டில் வந்தவர்கள் போலும். உட்கார இடமின்றி வழியில் நின்றிருந்தவர்களிடம், 'அன்னா. கொஞ்சம் ஜருகன்னா' என்று அந்தப் பெண் கூறிய பொழுது தான் பார்த்தேன். 13 அல்லது 14 வயது இருக்கலாம். ஒரு சிறுமி. சட்டென்று மனதில் பதிந்து போனது அந்த முகமும் கண்ணும். இந்தக் கூட்டத்தில் இடித்துக் கொண்டு போக வேண்டுமே என்றோ, இப்படிப் பிழைப்பாச்சே என்றோ கூச்சமும், நாணமும் காட்டும் முகம். கண்ணில் பசியும், வெட்கமுமாய்க் கவலை. மிக மிக மெதுவான குரலில் தயங்கி தயங்கி யார் மீதும் இடிக்காமல் அன்னய்யா அன்னய்யா என்று வழி கேட்டு ஒரு ஓரமாய் நின்றாள்.ஒன்பது வயதிருக்கலாம் ஒரு சிறுவன், 4 வயதில் ஒரு குழந்தை. எண்ணெய் காணாத செம்பட்டைத் த‌லை, பழைய உடையாயினும் அழுக்கின்றி உடுத்தி இருந்தார்கள் அந்தப் பெண்ணும் சிறுவனும். குழந்தையைக் கவனிப்பாரில்லையோ அல்லது என்ன காரணமோ அழுக்கு. முகம், கை எல்லாம் கறை. அந்தப் பெண்ணின் கழுத்தில் துணியால் கட்டப்பட்ட ஒரு ஆர்மோனியம். தோளில் ஒரு துணிப்பை. சிறுவனின் கையில் இரண்டு சிறிய அஸ்பெஸ்டாஸ் சில்லுகள். அந்தச் சிறுவனும் குழந்தையும் பின் தொடர ஒரு முறை அந்தச் சிறுவனைப் பார்த்தாள்.

நடையில் டக்கென நின்ற சிறுவன் அந்தக் குழந்தையை முன்னிறுத்தி, ரெண்டு சில்லையும் விரலில் இடுக்கி உள்ளங்கையில் தட்டி ஒலி எழுப்பினான். அந்தப் பெண் ஆர்மோனியத்தில் ஒரு முறை வாசித்து நிறுத்தினாள். பெட்டியில் ஒலி அடங்கி ஒரு நிமிடம் நிசப்தம். ஒரு முறுவலுடன் அந்த‌ப் பெண் ஒரு பழைய பாட்டு பாடத் தொடங்கினாள். 'நீ உன்னதா கொண்ட பை .. நா சாமி என நிறுத்திவிட்டாள். எப்படித்தான் தெரியுமோ. பிசிறின்றி சரியாக சில்லைத் தட்டி தாளமிட்ட சிறுவன் அடுத்த வரியைத் தொடர்ந்து நிறுத்தினான். அய்யா, தர்மம் செய்யண்டய்யா என்று மெதுவாக ஆரம்பிக்க, அந்தக் குழந்தை கை நீட்டிய படி சென்று, கொடுத்தால் வாங்கி மற்ற கையில் வைத்துக் கொண்டு, தராமல் முகத்தைத் திருப்பிக் கொள்பவர்களைச் சுரண்டத் தொடங்கியது. கை இழுத்தவர்களை விடாமல் அன்னா, அய்யா என்று சுரண்ட அருவெறுத்து கொஞ்சம் பேர் காசு கொடுக்க கொஞ்சம் பேர் மிரட்ட வரிசைக்குள் நுழைந்தது அந்தக் குழந்தை. இதே நாடகம் தொடர அடுத்த வரிசை, ஒரு வரி பாடல், தாளம், இணைந்து தனியாக என. சத்தியமாய் அப்படி ஒரு குரல் அந்தப் பசித்த வயிற்றில் எப்படித்தான் வருமோ. பிசிறின்றி ஒரு தேர்ந்த ஆர்கெஸ்ட்ரா போல் சேர்ந்தும் தனியாகவும் என்று பாடினார்கள். ஆதரவிருப்பின் ஒரு சுசீலா, கண்டசாலா என வந்திருப்பார்கள் நிச்சயம்.

இரண்டு வரிசை கடக்க ஒரு புரவலர் கேட்கிறார். பாட்டு ஃபுல்லா பாடுறியா. 50 காசு தர்ரேன் என. பாவமாய் நிற்கிறது அது. அறையலாம் போல வந்தது. நாள் முழுதும் பாடி, காசு சம்பாதித்து கொண்டு போனாலே இப்படி இருக்கிறார்கள். இவருக்குப் பொழுது போக்கு. அந்த 3 நிமிடத்தில் ஆளுக்கு கொடுக்கும் காசு கூட இல்லை. அந்தப் பையன் விடாமல் இரண்டாம் வரி பாட அந்தப் பெண்ணுக்குத் தெரியும் போலும் இப்படி ஆட்கள் இருப்பார்கள் என்று. அவளும் சேர்ந்து ஒரு பத்தி பாடி நிறுத்தினாள். அன்னா என்று சிறுவன் கேட்க புல்லா பாடு என்றான். அன்னா ஆகலி(பசி) என்றது அது. ஒரு நாளும் முழுசா பாட மாட்டாங்க என்று சலித்த படி 25 காசு கொடுத்தான் அந்த வள்ளல். கொஞ்ச நிமிசத்தில் ஒரு பெண் உயர்ந்த குர‌லில் திட்டுவது காதில் விழ எழுந்துவிட்டேன். ஒரு அம்மணி. திருமணத்துக்கு போகிறதோ தின்று கொழுத்து வருகிறதோ தெரியவில்லை. அந்தக் குழந்தை தொட்டு விட்டதாம். லோ லோ எனக் கத்தத் தொடங்கிவிட்டாள். கூடவே அவர் கணவனும் தன் பங்குக்கு திட்ட, பழகியும் மருண்டு நின்றார்கள் குழந்தையும் சிறுவனும். யாரும் வாய் திறக்கவில்லை. ஒரு நிமிடம்கூட இல்லை. கத்திக் கொண்டிருந்த அம்மணி கண்கள் சொருக மயங்கிவிட்டாள். கணவன் பதைத்து, தண்ணி இருக்குங்களா எனத் தேட, யாரிடமும் இல்லை. தயங்கி தயங்கி நகரச் சொன்ன அந்தப் பெண் தள்ளிக் கொண்டு முன்னேறி பையிலிருந்து ஒரு பாட்டிலிலிருந்த நீரை நீட்டியது. படக்கென வாங்கி முகத்தில் தெளித்து துடைத்து விட்டு விழித்ததும் கொஞ்சம் குடிக்கக் கொடுத்து திரும்பக் கொடுத்த கண்ணில் நன்றி இல்லை. கடு கடுவென நீட்டி காசும் நீட்ட, ஸ்டேஷன் வஸ்துந்தி ராரா (ரயில் நிலையம் வருகிறது. வாடா) என மெல்லச் சிரித்தபடி நகர்ந்தனர் மூவரும்.

திமிரப் பார்த்தியா என்றவனை அத்தனைக் கண்களும் காறி உமிழ்ந்தன.

கொசுறு
திரட்டிக் களத்தில்
பதிவர் சண்டை
கண்ணியக்கொலை!

Tuesday, June 2, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 69

அடெல் பாலசிங்கத்தை கைது செய்ய இலங்கை அரசு திட்டம்

ப‌ஸ்மாசுர‌ன் க‌தைதான். அப்ப‌டியாவ‌து அழிஞ்சா ச‌ரி.
____________________________________________
பிரித்தானியா இலங்கைக்கு ஆயுதங்களை விற்பனை செய்துள்ளது: த ரைம்ஸ் தகவல்

குர‌ங்குக்கு கொள்ளிக் க‌ட்டைய‌ கொடுத்துட்டு கொளுத்திடுச்சேன்னா எப்ப‌டி? காசா கொஞ்சம், ஆயுதமா கொஞ்சம், ஓட்டா கொஞ்ச‌ம்னு எல்லாருமே ஒட்டு மொத்த‌ ப‌ங்காளிங்க‌தான்.
____________________________________________
அனைத்துலக நாடுகளில் தடை செய்யப்பட்ட ஆயுதங்களாலேயே அதிகளவிலான மக்கள் கொல்லப்பட்டனர்: 'அமெரிக்கா' வார ஏடு

அப்போல‌ இருந்தே இதைத்தானே கூவுரோம். ஒரு ப‌ய‌ க‌ண்டுக்காம‌ இப்போ வாராய்ங்க‌ ஒரொருத்த‌ரா.
____________________________________________

பொதுமக்கள் உயிரிழப்புக்கள் குறித்து ஐ.நா அமைப்பு அலட்சிய போக்கை கடைபிடிக்கவில்லை – பான் கீ மூன்

அது தான் ல‌ட்சிய‌மாச்சே. அப்புற‌ம் எப்ப‌டி அல‌ட்சிய‌மாகும்.
____________________________________________
விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் காட்சிப்படுத்தப்பட மாட்டாது - இராணுவம்

முக்கால் வாசி நீ குடுத்த‌துதானே. காட்ட‌ முடியுமா?
____________________________________________
பிள்ளையான் குழுவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணையத் திட்டம்?

கொலைகார‌ன் கூட‌ கொள்ளைக்கார‌ன் சேராம‌ முடியுமா? ந‌ல்ல‌ கூட்டுடா சாமிக‌ளா.
____________________________________________
போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக ஐ.நா.சபை விசாரணை நடத்தமுடியும்: பிரிட்டிஷ் மனித உரிமைகள் சட்டத்தரணி ரொபேர்ட்சன்

முடியுமா முடியாதான்னு பிர‌ச்ச‌னை இல்லையே. தேவையா வேணாமான்னு தானே இழுப‌றி.
____________________________________________
தமிழில் பெயர் வைத்தால் தங்க மோதிரம்

மோதிர‌ம் மொத்த‌மா வாங்கி குவிச்சிட்டாங்க‌ளா? த‌மிழ்னு பேரு வெச்சிட்டு 'த‌மி'னு கூப்பிட்டா பிடுங்கிக்க‌ மாட்டிங்க‌ளே?
____________________________________________
விண்ணப்பித்த அனைவருக்கும் என்ஜினீயரிங் இடம் கிடைக்கும்: மன்னர் ஜவகர்

காலி நில‌த்தில‌ போர்ட் வெச்சாலே அனும‌தி த‌ராங்க‌ளே. இட‌த்துக்கு என்ன‌ ப‌ஞ்ச‌ம். வேலை கிடைக்குமா?
____________________________________________
இலங்கையில் தொடரும் அவலம்:மீண்டும் ஒரு பத்திரிக்கையாளர் தாக்கப்பட்டார்!

அவ‌ன் யார‌ விட்டுவெச்சான். ம‌னித‌ உரிமை மீற‌லா இல்லையான்னு விவாத‌ம் வேற‌ இதில‌.
____________________________________________
தே.பா.ஆலோசகர் நாராயணன் பதவிக்காலம் நீட்டிப்பு

வேற‌ ம‌ண்டையே கிடைக்க‌லியா இவ‌னுங்க‌ளுக்கு. கோவிந்தா. மிச்ச‌ம் மீதி இருக்க‌ற‌த‌ அழிக்க‌ ஆலோச‌னை சொல்ல‌வேணாமா?
____________________________________________
நிதி நெருக்கடி சமாளிப்பில் இந்தியாவுக்கு 3வது இடம்

ச‌மாளிக்கிற‌தில‌ கில்லாடிங்க‌ளாச்சே. நெருக்க‌டி எல்லாம் ம‌க்க‌ளுக்கு. பேரு யாருக்கோ.
____________________________________________
தமிழக அரசியலில் ஈடுபட்டிருந்தால் எம்.எல்.ஏ.,வாகி இருப்பேன்: ரோஜா

ராஜ‌ப‌க்சே சொன்ன‌துக்கே சுர‌ணை இல்ல‌ எங்க‌ளுக்கு. நீங்க‌ சொல்றதுக்கா கோவிச்சிக்க‌ப் போற‌ம்.
____________________________________________
ஊதிய உயர்வுக்குக் காரணம்என்ன?முதல்வர் விளக்கம்

போன‌ தேர்த‌லுக்கு விசுவாச‌ம் வ‌ர‌ப் போற‌ தேர்த‌லுக்கு அச்சார‌ம். இல்ல‌ன்னு சொல்ல‌ முடியுமா?
____________________________________________

Monday, June 1, 2009

தகப்பன் சாமிகள் - 1

சென்னை‍ ‍ அரக்கோணம் மார்கத்தில் ஓடும் மின்சார ரயிலில் இவரைப் பாராதவர் இருக்க முடியாது. சிறுவனுமன்றி வாலிபனுமன்றி கணிக்க முடியாத வயதும் தோற்றமும். மார்பில் குறுக்காக ஒரு கருப்பு ரெக்சின் பை. வலது கண்ணில் மட்டும் ஓரளவு பார்வை இருக்கும் போலும். கையில் ஒரு கண்ணாடிக் காகிதப் பையில் கடலை பர்பி. ஒரு ஒரு பெட்டியாய் ஏறி வியாபாரம். பார்க்கவே பிரமிப்பாய் இருக்கும். ஏறியதும் ஒரு சில நொடிகள் நிதானித்து ஒரு புன்னகை. கல்ல பர்பி. பாக்கட் 2 ரூவா பாஸ் டைம் பர்பி என்று குரல் கொடுத்த படி நகருவார். எத்தனை கூட்டத்திலும் யார் காலையும் மிதித்து நான் பார்த்ததில்லை.

காசு வாங்கி மேல் சட்டை பையில் 1 மற்றும் 50 காசு நாணயங்கள், கால்சட்டையின் இடப்புறப் பையில் 2 ரூ நாணயம், வலது பையில் 5 ரூ, நோட்டுக்கள் சட்டை உள் பையில் என ஒரு ஒழுக்கம். சந்தேகம் இருப்பின் கூடிய வரை வலது கண்ணால் பார்க்க முயன்று எவ்ளோண்ணா என்ற படியே தடவி, ஒட்டு இருக்குமானால் சிரித்தபடி வேற நோட்டு குடுண்ணா என்று வியாபாரம் செய்யும் நேர்த்தி. அதிகம் கத்த மாட்டார். அடுத்த ரயில் நிலையம் வரும் வரை இந்தக் கோடியிலிருந்து மறுகோடி அங்கிருந்து நடுவில் கதவோரம். அடுத்த நிலையத்தில் இரங்கி ஏற வாகாக நிற்கையில் வாயில் ஏதோ ஒரு சினிமா பாடல். அதே நேரம் சுருட்டி அடைத்த நோட்டுக்களை அடுக்கி (எப்படி முடியுமோ? ப்ரயத்தனமின்றி 10,5, 2 என்று நோட்டுக்களை அடுக்குவார்)கருப்புப் பைக்குள் புதைப்பார்.

ஒரு நாள் இரவு 8 மணிக்கு சென்னை சென்ட்ரலில் அலுவலகம் முடிய கிளம்பியபோது அதே பெட்டியில் இவர் குரல். ஒரு கும்பல் உட்கார்ந்து அரட்டை அடித்தபடி இருக்க, அவர்களுக்கு அருகில் வந்ததும் 'இன்னாண்ணா மணிண்ணா ரொம்ப சவுண்ட் விடுற?' என அவரும் வாடா எங்க நேத்து காணோம் என்றார். பேசிய படியே எத்தினிண்ணா என்று வியாபாரம். தினம் வாங்குவார்கள் போல. ஐந்து என்றதும் ஒரு பேர் சொல்லி அவரு வரலியா என்ற போது திகைத்துப் போனேன். இந்த இறைச்சலில் எப்படி அடையாளம் கண்டார் என? சுந்தரமண்ணன் 3வது பொட்டில தனியா இருக்காரு. லேட் போல. மிஸ் கால் குடுண்ணா என்று அட்வைஸ். வண்டி கிளம்பி சென்ட்ரல் தாண்டி சிக்னலுக்காக நின்றது. ஐயா வியாபாரம் முடித்து அங்கு நின்ற படியே, என்னா இவ்ளோ நேரம் போட்டான். பிருந்தாவன் லேட் போல. புளூமவிண்டன் க்ராஸ் போல இல்லண்ணா என்று கேள்வி. டேய் வியாபாரத்த பாருடா என்று அவர் கூற இந்த பொட்டில அவ்ளோதான். பேசின் ப்ரிஜ்ல லேடீஸ் கம்பார்மென்ட் பார்த்துட்டு வீட்டுக்கு போய்டுவேன் என்றார்.

சொல்லிக் கொண்டிருக்கவே ஒரு எக்ஸ்ப்ரஸ் ரயில் கடந்து போக பார்த்தியாண்ணா புளூ என்று ஒரு சிரிப்பு. ஆம். அவர் சொன்னது சரி. பார்த்துக் கொண்டே இருக்க சட்டைக்குள் இருந்து செல்போனை எடுத்து ஒலியில் நேரம் கண்டார். அந்த மணி என்பவர் நக்கலாக செல்லு பார்த்தியா? பிசினஸ் மேக்னட்டு இவரு என நக்கலடிக்க, சிரித்தபடி இல்லண்ணா டைம் பார்த்தேன். வாட்ச் இருக்கு. கும்பல்ல திறந்து மணி பார்க்கரப்போ இடிச்சி முள்ளு கோணிக்குது. ரிப்பேர். நீ இன்னா நெனச்ச என்ன? மட மட என்று நான்கு ஐந்து எம்.எல்.ஏ பெயர் சொல்லி, அவங்கள தெரியுமா. போய் நம்ம பேரு கேட்டு பாரு. அய்யா வெயிட் இன்னான்னு தெரியும். ணோவ். நீ போனா வெய்ட் பண்ணனும். நான் கேட்டாண்ட இருந்தே அண்ணேன்னா போதும். உள்ள இருக்கற ஆள வெளிய அனுப்பிட்டு நம்ம கேஸ் முடிப்பாங்க என்றார். அந்த ஆள் கெட்ட வார்த்தை சொல்லி கிண்டலடித்த படி நீ ஏண்டா அவங்க கிட்ட போற என்றார். வந்த பதிலில் அரண்டு போனேன்.

சோசல் சர்வீஸ்ணா. இப்போ கூட ஏன் மணி பார்த்தேன் தெரியுமா? 8.30 மணிக்கு ஒரு அம்மாவ வர சொல்லி இருந்தேன். அவங்க பாப்பாக்கு கால் இல்ல. 3 சக்கர வண்டி வாங்கி குடுத்தா ஸ்கோலுக்கு போவும். 10ம்பு படிக்கிது. எம்.எல்.ஏட்ட பேசி முடிச்சிட்டேன். இட்டுனு போய் ரெகமன்சன் லெட்டர் வாங்கிட்டா நாளைக்கு காலைல ஆபீஸ்ல குடுத்தா வேல முடிஞ்சது என்றார். நீ அவ்ளோ பெரிய ஆளாடா? என்னான்னாலும் காசு வாங்காம என்னா நடக்கும் என அந்தாள் கேட்க, அதான் இல்ல. நம்ம கேஸ்னா அதெல்லாம் கேக்க மாட்டாங்க. டக்னு முடியும். நாம சுத்தமா இருந்தா ஏன் கேப்பாங்க? ஏதோ நம்மால முடிஞ்சது. மனசுக்கு சோசல் சர்வீஸ். வயத்துக்கு தொயிலு. இன்னா சொல்ற என்றபடி, என்ன வண்டி எடுக்கல? ணோவ் ஒரு ரூபா சில்லற இருந்தா குடுண்ணா ஒரு 10 ரூபாய்க்கு என்றார். இப்போ ஏண்டா எனக் கேட்க, இவ்ளோ நேரம் போட்டான்ல. போரு. ஒரு ரவுண்ட் போனா வித்துடலாம். 2 பாக்கட் கேட்டு 5 ரூபா தருவாங்க. சில்லற இல்லன்னா வியாபாரம் போய்டும் என்றபடி, சொன்னாற் போலவே இன்னும் சில பாக்கட்டுகளை விற்றார். அடுத்த ரயில் நிலையம் வர, வரட்டாண்ணா என்றபடி பாடியபடியே சென்றார் அந்த மகாத்மா.

நறுக்குன்னு நாலு வார்த்த - 68

சிறிலங்காவின் கபடத்தனத்தை எதிர்கொள்ளும் அரசியல் கட்டமைப்பை வென்றெடுக்கும் பாரிய தேசியக்கடமை நம்முன் உள்ளது: செ.பத்மநாதன் அழைப்பு

அவன் கள்ளன் தெரியும். நீங்க தலைவர் இருக்கிறார்னு சொல்லி அப்புறம் இல்ல இறந்துட்டார்னு சொன்ன கபடம் என்ன?
__________________________________________
நடேசன், புலித்தேவன் சரணடையும் விடயம் கொல்லப்பட்டு 10 நிமிடத்தின் பின்பே தெரியும்: இராணுவ தளபதி தெரிவிப்பு

ஏன்? முடிச்சிட்டு சொல்ல சொன்னிங்களா?
__________________________________________
இருப்பினும் அவர்கள் தமது வெள்ளைக் கொடிகளைக் காண்பிக்க தாமதித்து விட்டனர் என்பதே உண்மையாகும்: ஃபொன்சேகா

என்னல்லாம் உண்மை பேசிட்டாரு இவரு. இது மட்டும் பொய்னு சொல்லதீங்கப்பா. நம்புங்க.
__________________________________________
இலங்கையில் ஏற்பட்ட தமிழ் பொதுமக்கள் இழப்பிற்கு இந்தியா பொறுப்பேற்கவேண்டும்: இந்திய முன்னாள் இராணுவ அதிகாரி

எப்பவுமே காலம் கடந்துதான் சொல்லுவீங்களா ஐயா மாரே?
__________________________________________
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகள் உள்நாட்டில் தான் நடைபெறும்: வெளியுறவு அமைச்சர்

அட எதுக்குங்க இதெல்லாம். ஒண்ணுமே நடக்கல. வெளிய இருந்தவங்கள்ளாம் வேலிக்குள்ள வரோம்னு வந்து இருக்காங்க. செத்த, கால் கை போன குஞ்சு குளுவான், கிழடெல்லாம் தடுக்கி விழுந்து அப்படி ஆச்சி. போங்கடா.
__________________________________________
கொழும்பு பல்கலைக்கழகம் ராஜபக்ஷ சகோதரர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்க திட்டம்

உயிரைக் காத்த மருத்துவர்களுக்கு துரோகி பட்டம், உயிரெடுத்த பக்ஸேக்களுக்கு டாக்டர் பட்டமா? விளங்கிடும்.
__________________________________________
இலங்கை போரில் தப்பிய 400 விடுதலைப் புலிகள், அகதிகள் என்ற போர்வையில் இந்தியாவுக்குள் ஊடுருவி உள்ளதாகவும், சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோர் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்றும் இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதென்னா புதுக்கரடி. நல்லா அடிக்குதுடா கிலி இவங்களுக்கு.
__________________________________________
எதிர்க்கட்சிகளுக்கு மரியாதை கொடுப்போம்: பிரதமர்

உசாருப்பா. தமிழர் நலனில் கவலை கொண்டுள்ளோம்னாரு. ஆயிரக் கணக்கில போய்ட்டாங்க. இப்பொ மரியாத குடுப்பாராமா.
__________________________________________
விடுதலைப்புலிகளுக்கு உதவ கூடாது: உலக நாடுகளுக்கு இலங்கை அரசு கோரிக்கை

ஆமாம். இவனுங்களுக்குதான் உதவணும். பரதேசிங்களா. நக்கலா?
__________________________________________
ஈழம் என்ற வார்த்தையை நீக்க வேண்டும்: கொக்கரிக்கும் ஐக்கிய தேசியக் கட்சி

வார்த்தையவே நீக்கணும்னு துடிக்கிற நாயி வாழவா விடும். எவனுக்கும் புரியாதா?
__________________________________________
பொட்டு அம்மான் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானது: சரத் பொன்சேகா

அட போடா. யாரு நம்பினாங்க. மறுப்பு வேறயா?
__________________________________________
விடுதலைப்புலிகளுடன் போர்: இலங்கை ராணுவ செலவு ரூ. 5 லட்சம் கோடி

கேடிங்க. அவனவன் அடிச்ச கோடிய சொல்ல மாட்டானுங்களே.
__________________________________________
உலங்கு வானூர்தி ஒன்று விடுதலைப் புலிகளின் ஏவுகணைத் தாக்குதலில் தாக்கியழிக்கப்பட்டபோது அதில் விமானியாக இருந்த ரஷ்ய விமானி கொல்லப்பட்டதாக விமானப்படைத் தளபதி மார்ஷல் ரோஷான் குணதிலக கூறியுள்ளார்.

கூட்டா சேர்ந்துதானடா பண்ணிங்க. அதானே ஐநா அடக்கி வாசிக்குது. நாறத்தான் போறிங்க.
__________________________________________