என்றோ வரும் மழை ஏமாற்றாதிருக்க
தினமும் குடையுடன்
வேலைக்குச் செல்லும் பெண்
*
நெருப்பாய் முதலாளி
சிரித்தபடி நம்ம கடைக்கு
அழைக்கும் சிப்பந்திகள்
**
கலப்படக்காரன் மாளிகைக்கு
கலவை போடும் சித்தாள் மேல்
சந்தேகக் கவலை.
***
முதிர்வு காட்டும் முகத்தில்
எருமை மேய்ந்த புல் தரைபோல்
அங்குமிங்கும் சிலவும்...
****
அசல் இங்கே.