Showing posts with label இயலாமை. Show all posts
Showing posts with label இயலாமை. Show all posts

Tuesday, January 19, 2010

பொழைக்கத் தெரியணும்...

வாழ்க்கையில் கட்டம் சரியில்லாமலோ, விதியோ, இதெல்லாம் யாரு நம்புறாங்கறவங்களுக்கு ஏன்னே சொல்லத் தெரியாமல் ஏதோ ஒன்றாலோ நடக்கும் சில நிகழ்வுகள் நம் மனத்தில் இவருக்குப் போய் ஏன் இப்படி நடந்தது என உச்சுக் கொட்ட வைக்கும்.

1975 முதல் 1978 வரை இந்திராகாந்தி அம்மையாரால் அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்ட காலம் அது. உண்மையில் அரசுத்துறைக்கு பொற்காலம் அது. இரயில்வேத் துறையில் அகில இந்திய அளவில் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.  வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது சட்ட விரோதமாக அறிவிக்கப்பட்டு, பங்கு பெறுபவர்கள் வேலை நீக்கம் செய்யப் படுவார்கள் என்று நிர்வாகத் தரப்பில் அறிவிக்கப்பட்டது. அலுவலகத்திற்கு செல்லக்கூடாது என தொழிற்சங்கத்தால் தடுக்கப்பட்டது.

சொந்தக் காரணங்களுக்காக திருப்பத்தூர், திண்டிவனம், நெல்லூர் என்று 100-150 கி.மீ.க்கு அப்பாலிலிருந்து தினசரி வந்து போகும் தொழிலாளர்கள் அதிகம். வேலை நிறுத்தம் காரணமாக வர முடியாமல் போக நேரலாம் என்று அலுவலகத்திலேயே பெரும்பான்மையானோர் தங்கிவிட்டனர். திடீரென தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்கள் அலுவலக வாயிலில் கூடி கோஷம் எழுப்புவதும், வேலைக்கு வருபவர்களைத் தடுப்பதும், போலீஸ் வந்து அள்ளிக்கொண்டு போவதும் தினசரி வழமையாகிப் போனது.

சக தொழிலாளர் ஒருவரும் அவர் சகோதரர்கள் மூவரும் செங்கல்பட்டிலிருந்து தினசரி வந்து செல்பவர்கள். அவர்களும் அலுவலகத்தில் தங்கியவர்கள். நண்பர் மிக நேர்மையான திறமையான அலுவலர். அலுவலக நேரத்தில் சீட் தேய பணி செய்தும், பயண நேரத்தில் முடிக்க முடியும் என வீட்டுக்கு அள்ளிக் கொண்டு செல்பவர். அதிகாரிகளிடத்தில் மிக நல்ல பெயர் எடுத்தவர்.

வேலை நிறுத்த நாள் ஒன்றில் அமாவாசை வந்துவிட அலுவலக நேரத்துக்கு முன் பதிவேட்டில் கையொப்பமிட்டுவிட்டு, அருகிலிருந்த கோவிலுக்குச் சென்று, யாரோ ஒரு ஏழைக்கு காலை உணவு வாங்கிக் கொடுத்துவிட்டு அலுவலகம் செல்ல வருகையில் கதவடைப்பு போராட்டம் துவங்கிவிட்டிருந்தது. இத்தனைக்கும் அலுவலகத்துக்கும், கோவிலுக்கும் 50மீ தூரம் கூட இல்லை. நண்பர் பதைத்துப் போய் செய்வதறியாமல் நின்றிருக்க, பின்பக்கமிருந்து வந்த போலீஸ் கதற கதற இவரையும் அள்ளிப் போட்டுக் கொண்டு போனதால் பணி நீக்கம் செய்யப் பட்டார்.

வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்து, பங்கேற்காதவர்களை ஊக்குவிக்கிறேன் என அரசுத் தரப்பு அவர்களின் பிள்ளைகளில் ஒருவருக்கு வேலை அல்லது அதற்குத் தகுதியற்றோருக்கு ஒரு இன்கிரிமெண்ட் என அறிவித்தது. வேலை நிறுத்தத்தில் பங்கேற்றவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டாலும், தேர்தல் சமயத்தில் ஒரு மன்னிப்புக் கடிதம் கொடுத்தால் பழைய சர்வீஸ் கணக்கெடுக்கப் படாமல் புதியதாக பணி நியமனம் என்ற எலும்புத்துண்டு நீட்டப்பட்டது.

நண்பரும் அப்படி கிட்டத்தட்ட 25 வருட பணிமூப்பைத் துறந்து வேலைக்குச் சேர்ந்தார். ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததும், அவர்கள் தலைமையில் நடந்த போராட்டம் என்பதால் பழைய பணியும் வேலை நிறுத்ததில் பங்கேற்றவர்களுக்கு சேர்த்துக் கொள்ளப்படும். வேலை நிறுத்தக் காலம் மன்னிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. நண்பரைத் தவிர அனைவரும் பயனடைந்தனர்.

காரணம் பதிவேட்டில் கையெழுத்துப் போட்டுவிட்டு கோவிலுக்கு சென்ற பாவம் (அலுவலக நேரத்துக்கு முன்பே) அலுவலகத்தில் முறைகேடாக கையெழுத்துப் போட்டுவிட்டு வேலை நிறுத்தத்திலும் பங்கேற்றமைக்காக பொதுமன்னிப்பு வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்ட ஒரே நபர் இவர்.

அடுத்த 15 வருடங்கள் தினசரி நரகம் ஆனது அவர் வாழ்க்கை. அதிகாரிகள் தரப்பில் எவரும் இவருக்காக எதுவும் செய்ய முடியாது என்பது ஒருபுறமிருப்பினும், அதற்கு மேல் அவருக்காக பரிந்துரைக்கவோ மேல் முறையீட்டில் உதவவவோ எவருமில்லை என்பதே உண்மை. அழுது, கெஞ்சி அலுவலக நடைமுறையில் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனைக்கும் ஒரே பதில் முடியாது என்பதே.

இருந்த ஒரே வழி, முதல் குடிமகனின் மன்னிப்பு. தூக்கு தண்டனைக் கைதிகளின் கடைசி நம்பிக்கைத் துளியாக இருக்குமே அந்த ஒரு வழி. பணிமூப்புக்கு 3 மாதம் முன் நேர்மையா உழைச்சேன், நல்லகாரியம்னு சொன்னதை செய்தேன், எனக்கு இதுதானா வழியென்று அழுதபடியே தயங்கித் தயங்கி கையொப்பமிட்ட மனு, பத்து நிமிடத்தில் காமாட்சி அருளால் ஏற்கப்பட்டது.

சரி! இது உணர்த்துவது என்ன?

அ)தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வும். தர்மம் வெல்லுமா?
ஆ)15 வருஷமா சரியில்லாத கட்டம் ஏதோ ஒரு கட்டத்துல சரியானதா?
இ)நேரத்தோட ஆளு அம்பு தேடாம பொழைக்கத் தெரியாம இருந்து அவஸ்தைப்பட்டது அவர் தப்பு என்ற யதார்த்தமா?

Tuesday, January 12, 2010

தேடுங்கள் கிடைக்குமென்றார்..




ஆல் இந்தியா ரேடியோவில் 70-80 கால கட்டத்தில் காலை 7.00 - 7.15 ஒரு கர்னாடக இசை நிகழ்ச்சி ஒலிபரப்பாகும். அப்புறம் இரவில் ரஸிக ரஞ்சனி என்று நேயர் விருப்பமாக வாரம் ஒரு நாள் (கிழமை கவனமில்லை) கர்னாடக இசை ஒலிபரப்பாகும். இரண்டுமே ஒலித்தட்டுகளிலிருந்து ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிகள்.

ஒரே ஒரு நிகழ்ச்சி கூட தவறவிட்டதில்லை. சில நாட்களில் கீறல் விழுந்த இசைத்தட்டால் ஒலிபரப்பு தடைபட்டாலும் சுனில் கங்கூலியின் எலக்ட்ரானிக் கிடார் இசை மனதைக் கொள்ளை கொள்ளும். அருமையான மிகப் பழைய இசைக் கலைஞர்கள் தண்டபாணி தேசிகர், பி. ராஜா அய்யங்கார், அரியக்குடி, முசிறி சுப்ரமணியம் ஆகியோர் அறிமுகமானது அப்போதுதான்.

இசைவிழாவின் நேரடி ஒலிபரப்புகள், சென்னை ஒன்று, இரண்டு அலை வரிசைகளில் ஒலிபரப்பாகும். அப்போதெல்லாம் வானொலி என்ற புத்தகமும் வரும். நிகழ்ச்சி நிரல்கள், கலைஞர்களின் படங்கள் என்று. வாங்கி வைத்துக் கொண்டு நிகழ்ச்சிகளைத் தெரிந்து கொள்வதில் அலாதி ஆர்வம் இருந்தது. அந்தப் படங்களை வெட்டி வைத்து ஆல்பம் கூட தயார் செய்து  வைத்திருந்தேன்.

ஆகாஷ்வாணி ரேடியோ சங்கீத் சம்மேளன் நிகழ்ச்சி மூலம் இந்துஸ்தானி இசையும் மனதை ஈர்த்த காலம் அது. எந்த ஔரங்கசீப் பொறுப்பேற்றதோ தெரியாது. எல்லாவற்றுக்கும் முற்றுப் புள்ளி வைத்தாகிவிட்டது. மெல்ல மெல்ல இசைத்தட்டுக்கள் அரிதாகி, ஒலி நாடாக்கள் அறிமுகமானது.

ஒலித் தட்டிலிருந்து ஒலி நாடாவுக்கு மாற்றித் தருவது ஒரு மிகப் பெரிய வியாபாரமாய் கால் ஊன்றத் துவங்கியது. வாக்மென் வாங்கிய காலத்தில் தி.நகருக்கு வாரா வாரம் படை எடுப்பது வழமையாகிவிட்டிருந்தது. ரங்கநாதன் தெருவில் கர்னாடக இசைத் தட்டுகள் அதிகமாக இருக்குமென்பதாலும், 12ரூ 15 ரூக்கெல்லாம் தெருவோரம் தேடினாலும் கிடைக்காத பாடல்களின் பதிவுகள் கிடைக்குமென்பதாலும் கூடுதலாக காய்கறிகள் வாங்கும் வேலையும் முடியுமென்பதாலும் அரை நாள் சந்தோஷமாக இதில் போய்விடும்.

என் நண்பனுக்கு பழைய தமிழ் சினிமாப் பாடல்கள் மேல் காதல். அது ஏனோ சென்னையில் புதுப் பாடல்களுக்குத்தான் மவுசு. பழைய பாடல்கள் ஒரு சில இடத்தில் மட்டுமே பதிவு செய்யப்படும். பழைய பாடல்களுக்கு சொர்க்க பூமி ஈரோடு மற்றும் சேலம். நண்பர் ஞாயிறு காலை கோவையில் கிளம்பி ஈரோடு போய் கடை பிடித்து பாடல்களை எழுதிக் கொடுத்துவிட்டு வந்து விடுவார். அடுத்த ஞாயிறு அடுத்த லிஸ்ட் கொடுத்து போன முறை கொடுத்ததைக் கொண்டு வருவார்.

இன்றும் அவரிடம் உள்ள பழைய பாடல்கள் பொக்கிஷம். சரி இந்த ராமாயணமெல்லாம் எதுக்குங்கறீங்களா. ஒரு தேடலுங்க. முதல்ல சொன்னேன் பாருங்க 7:00 - 7:15 அதில அடிக்கடி கேட்டது. என்னைக்காவது இந்த பாட்டை எனக்கு சொந்தமாக்கிக்கணும்னு ஒரு சபதம்.

அலையாத இடமில்லை. ஊரு ஊரா சொல்லிப் பார்த்துட்டேன். எனக்காக ப்ரியாவும் ரிகார்டிங் கம்பெனி, வேற தெரிஞ்சவங்க கிட்டல்லாம் மின்னஞ்சல் அனுப்பி கேட்டுச்சி. எங்கயும் சாதகமான பதில் இல்லை. சும்மா இல்லைங்க என்னுடைய 35 வருஷ தேடலுங்க இது.

இப்பதான் பதிவுலகம் பெரிய சக்தியா இருக்கே. கிடைக்கும்னு ஒரு நம்பிக்கை. எந்த தேசத்துல இருக்கிற சாமியாவது வரம் குடுக்காதான்னு ஒரு நம்பிக்கை. தகவல் இதோ:

பாடல்: தியாகராஜரின் ‘கலிகியுண்டே கதா’
ராகம்: கீரவாணி
கலைஞர்: திரு டி. என். கிருஷ்ணன்.
கருவி: வயலின்
இசைத்தட்டு: கொலம்பியா எல்.பி. ரிகார்ட்.


மக்கா, நெட்ல தேடிட்டு தோ புடி மோனேன்னு பட்டுன்னு லிங்க் குடுக்காதீங்க. அதே டி.என்.கிருஷ்ணன், மகள் விஜி கிருஷ்ணன் மகனுடன் வாசிச்சது இருக்கு. நான் தேடுறது சோலோ. கொஞ்சம் பெரிய மனசு வைங்க சாமிகளா! புண்ணியமா போகும்.

அப்படி ஒரு கீரவாணி கேட்கலை இது வரைக்கும். ஒரு வேளை அவரே இதைப் படிப்பாரோ, அவர் மகனோ மகளோ படிப்பாங்களோ. இப்படி ஒரு பைத்தியம் இருக்கியாப்பா. இந்தான்னு குடுப்பாங்களோன்னு ஏக்கத்தோட கேக்குறேன்.



Wednesday, December 30, 2009

செவிக்குணவில்லாத போது..

சமிபத்திய பெருமழையில் வழமை போலவே இட்டு நிரப்பிய தார் ரோடு  பிச்சிக்கிட்டு போக, கரண்டி சைசில இருந்து பெருங்குழி வரைக்கும் ரகம் ரகமான பள்ளங்கள் வீதியெங்கும். மண்ணு, சவுடுன்னு கொட்டி நிரப்பி, பெட்ஷீட் கனத்துக்கு ஒரு ரோடு போட்டு முடியற வரைக்கும் பிசியோ தெராபிஸ்டுங்களுக்கு கொள்ளை லாபம். (ஆமாம் இந்த ரோடு போடுற கான்ட்ராக்டருக்கு, பிசியோ தெராபி, டயர்கம்பனி காரங்களெல்லாம் கட்டிங் குடுக்கிறதா ஒரு குருவி சொல்லுச்சே, அது நிஜமா நிஜாம்?)

இந்த அழகுல டூ வீலர்ல போறவங்க அதும் டிஸ்க் ப்ரேக் வச்சிருக்கிற பைக் மாப்பிள்ளைங்க பண்ற அழிம்பு இருக்கே சொல்லி மாளாது. பத்து மீட்டர் வீதி சுத்தமா காலியா இருந்தா போதும், விட்டு ஒரு தூக்கு தூக்குவாங்க. ஸ்பூன் சைஸ்ல ஒரு குழி வந்துச்சோ, அடிப்பாரு ஒரு ப்ரேக். விளம்பரத்துல வரா மாதிரி சும்மா கச்சுன்னு நிப்பாட்டி அப்புடி 2 இன்ச் முன்னுக்கும் பின்னுக்கும் ஆடிக்காட்டிட்டு ஒரு சின்ன ட்விஸ்ட் குடுத்துட்டு கேப்ல பறந்துடுவாரு.

இவரு பின்னாடி வந்த டிவிஎஸ் 50 கேசு தரைல கெடக்கும்,இல்லாட்டி ஆட்டோ மேல கார் முட்டிக்கிட்டு நிக்கும். இந்த சனியன் போறாதுன்னு என்னமோ இன்டர்நேஷனல் கான்ட்ராக்ட் போய்டுங்கற மாதிரி காதில ஹெட்ஃபோன், ஹெல்மெட்குள்ள செல்ஃபோன்னு அந்த ராவடி வேற.

போன வாரம் ஒரு பொண்ணு ஸ்கூட்டில சேத்து தண்ணில ரேஸ் போச்சு. கடந்து போகையில பார்த்தா காதில வேறுகிரக பொண்ணு மாதிரி பெரிய வண்டு சைஸ்ல ஒரு ப்ளூடூத். அம்முணி ஒரு கட் அடிச்சி ஒரு பெரிய குழில விட்டு ஏத்தினதில ப்ளூடூத் தெரிச்சி விழுந்திடுச்சு. பின்னாடி வந்த பைக் ஏறி நொறுங்கியும் போச்சு.

அந்தம்மணி தீடீர்னு ப்ரேக் அடிச்சதில பின்னாடி வந்த ஆட்டோக்காரரும் மயிரிழையில் ப்ரேக் போட வேண்டியதா போச்சு. ஆனால் ஆட்டோவைத் தொடர்ந்த ஒரு மாருதி இடிச்சதுல ஆட்டோ குலுங்கி ஒரு அடி முன்ன போக, ஸ்டேன்ட் போட்டுக் கொண்டிருந்த ஸ்கூடி பிச்சிகிட்டு அப்போது தான் கடந்த சைக்கிள் காரரை முட்டித் தள்ளிடுச்சு.

பப்பரப்பேன்னு கெடக்கற அவன கவனிக்கல, ஆட்டோ போச்சேன்னு பின்னாடி பார்த்துட்டிருக்கற அட்டோக்காரர கவனிக்கல, ஹெட்லைட் நொறுங்கிப் போன கார் ட்ரைவர கவனக்கல அந்தம்மணி. பாய்ஞ்சி, என்னமோ சூப்பர்மேன் மாதிரி பைக்காரன் வண்டிய புடிச்சிகிட்டு, இடியட்! கண்ணு தெரியாதா உனக்குன்னு ப்ளூடூத்துக்கு கத்தினப்ப அப்பலாம் போல வந்தது.

பீ பீன்னு ஊதிக்கிட்டு வந்துட்டாரு கலெக்டரு. அட நம்ம ட்ராஃபிக் போலீசுங்க. முட்டி பேந்த சைக்கிள் காரன், நெளிஞ்சி போன சைக்கிள நொண்டிகிட்டு தள்ளிகிட்டு போய் ஓரம் நிக்க, சொட்டையான ஆட்டோக்காரரும், கார் காரரும் பட்டிமன்றம் வைக்க, மறிச்சி கட்டிகிட்டு தமிழ், இங்கிலீசுன்னு ஒருத்தர் பொறப்ப மத்தவருன்னு அசிங்கமா அலசி ஆராய்ஞ்சிட்டிருந்த இதுங்க கிட்ட வந்தாரு.

மொத பிட்டு, ஏய் மிஸ்டர் எதுனாலும் இறங்கி நின்னு பேசுய்யா! வண்டிய விட்டு இறங்க மாட்டீங்களோன்னு  சொல்லிட்டு அம்மணிய பார்த்து ஒரு லுக்கு. அப்புறம், சித்தப்பா மாதிரி என்னாச்சிம்மான்னு பாசமா ஒரு கேள்வி. அம்முணி சொல்லுது ரேஷா ஒட்டிட்டு வந்து ப்ளூடூத்த நொறுக்கிட்டானாம்.

இன்னோரு பைக்கில இருந்த ஆளு திடீர்னு இந்தம்மா ப்ரேக் போட்டாங்க அது தெறிச்சி விழ, அடுத்த நொடியில ப்ரேக் அடிச்சும் இப்படி ஆய்டுத்துன்னு சொன்னா, அந்தம்மா கண்ணுல கொலவெறியோட யூ ஷட்டப்புங்குது. எங்க வட போய்டுமோன்னு போலீசுகாரரு, யோவ்! நாந்தான் கேட்டுட்டிருக்கேன்ல நீ போய் அந்த ஓரம் நில்லு வரேன்னு மிரட்ட, கிடைச்ச கேப்ல அந்தாளு விசுக்குன்னு ஓட்டிட்டு போய்ட்டாரு.

சரி சரி, வண்டிய ஓரம் கட்டுங்கன்னு (ரெண்டு பக்கமும் தேத்ததான்)வழி பண்ணி குடுக்க நம்ம பொழப்ப பார்க்க கிளம்பிட்டம் அங்க இருந்து. எத்தன செய்தி வந்தாலும், இந்த வண்டியோட்டுறப்ப, ட்ராக் தாண்டி போறப்ப, வீதிய கடக்குறப்ப கூட பேசுறது,பாட்டு கேக்குறது தப்பாது. அதும் ஹெல்மட் போட்டா பின்னாடி, அக்கம் பக்கதுல வர வண்டியோட ஹார்ன் சத்தம் கேக்கறதே கஷ்டம் இதில அதுக்குள்ள விட்டு, ஹெட்ஃபோன் வேற மாட்டிக்கிட்டு வண்டியோட்டுறது.

சில பன்னாடைங்க ஹெட்ஃபோன் மாட்டாம, ஹெல்மட் சரியா கட்டாம, அதுக்குள்ள அலைபேசிய சொருகிக்கிட்டு பேசிக்கிட்டே சர்க்கஸ் காட்டுவானுங்க. போற போக்கு பார்த்தா இன்னும் பத்து வருசத்துல பல் மருத்துவமனை மாதிரி, காதுக்குன்னு தனியா மருத்துவமனை கட்டணும் போல அரசாங்கம். அதான் சாப்பாடு இருக்கோ இல்லையோ சைனீஸ் செல்ஃபோனாவது இருக்கே நம்மாளுங்க கிட்ட. நாசமா போங்கடே!

Friday, December 25, 2009

கணக்கும் வழக்கும்

ஒரு கணக்கு:

2001ம் ஆண்டு கணக்குப் படி மத்திய அரசில் பெண் ஊழியர்கள் 40 லட்சம் பேர்.

இந்த ஒன்பது ஆண்டுகளில் பணி மூப்பு பெற்றோர், 18 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை உடையவர்கள், திருமணமாகாதவர்கள்,ஆகியோரை விடுத்து, புதிதாக பணி நியமனம் செய்யப் பட்டவர்களையும் விடுத்து வெறும் 40000 (1 சதவீதம்) பேர்களை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளுவோம்.

ஒரு கடை நிலை ஊழியரின் அடிப்படைச் சம்பளம் ரூ 10000. இதர வகுப்பில் உள்ள பெண் ஊழியரின் அதிகபட்ச  அடிப்படைச் சம்பளம் மட்டும் ரூ 37,000. படியுடன் சேர்த்து இது இரு மடங்காகும் எனினும் கணக்குக்காக இது ரூ 20000 என வைத்துக் கொள்வோம்.

ஒரு பெண் ஊழியர் ஒரு வருடம் சம்பளத்துடன் கூடிய விடுப்பில் செல்வார்களேயானால் அரசுக்கு வருடம் ஒன்றுக்கு செலவு ரூ 2.4 லட்சம். 40000 பேருக்கு 960 கோடி ரூபாய்.  இது போக மறைமுகமாக வரியிழப்பு 3 சதவீதம் என வைத்துக் கொண்டாலும் 1000 கோடி ரூபாய். படியுடன் சேர்ந்து இது குறைந்த பட்சம் 1250 கோடியாவது வரும்.

எதற்கு இப்படிப் புலம்பல் என சலிப்பவர்களுக்கு இதோ

ஒரு வழக்கு:

மேற்படித் தொகை பதினெட்டு வயதுக்குட்பட்ட இரண்டு குழந்தைகள் உள்ள ஒரு பெண் ஊழியருக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு இல்லாத பட்சத்தில், (சிக் லீவ் கணக்கில் வராது), குழந்தைப் பேறுக்கான ஆறு மாத முழுச்சம்பளத்துடன் கூடிய விடுப்புக்கு மேலதிகமாக, தேவைப்படும் நேரமெல்லாம், குழந்தை வளர்ப்புக்கோ, அவர்கள் படிப்புக்கு உதவவவோ, அட ஒரு சினிமாவுக்கு கூட்டிப் போக என்றே வைத்துக் கொண்டாலும், அவர்கள் பணிக்காலத்தில் 730 நாட்கள் படியுடன் கூடிய முழுச்சம்பளத்துடன் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம்.

ஆணோ பெண்ணோ அந்த ஊழியர், பணியில் எதிர் கொள்ளும் விபத்தில் ஏற்படும் உடல் உறுப்பு இழப்புக்கோ அல்லது கோமாவிலோ கிடந்தாலும் 4 மாதங்களுக்கு மட்டுமே முழுச்சம்பளத்துடன் கூடிய விடுப்பு உண்டு.

விடுமுறையே எடுக்காமல், சம்பளத்துடன் கூடிய விடுமுறை வருடத்திற்கு 30 நாட்களை (Earned Leave) அதிகபட்சம் 300 நாட்கள் மட்டுமே சேமித்து பணி மூப்பின் போது சரண்டர் செய்து பணமாகப் பெறமுடியும்.

ஆனால் 2 குழந்தைகள் இருந்தால் போதும், முழுச்சம்பள விடுமுறையும் எடுத்துக் கொண்டால் போதும், 730 நாட்கள் சம்பளம் இனாம். இந்த விடுமுறை பணிக்காலமாக கணக்கிடப்பட்டு இன்கிரிமெண்ட், பென்ஷன் உட்பட எல்லா சலுகையும் உண்டு.

உலகில் வேறெந்த நாட்டிலாவது, குழந்தைகள் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நாடுகளில் கூட இந்தச் சலுகை இருக்கிறதா? ஒரு ஒப்பீட்டில் பார்த்தால், சொந்த விடுமுறையை பார்த்து பார்த்து பயன் படுத்தியவர்கள், இந்த சட்டம் வந்த பிறகு முதலில் அதைத் தீர்த்து, இந்த விடுமுறைக்கு விண்ணப்பிக்கிறார்கள்.

அதிலும், குழந்தைக்கு 16 வயதாகிவிட்டது. என் சலுகையை மறுக்க உங்களுக்கு என்ன அதிகாரம் என்று 2 வருடங்கள் விடுமுறை எடுக்கிறவர்களும் உண்டு. இல்லாவிடினும், மறுக்கும் பட்சத்தில் தொழிற்சங்கங்களின் தலையீடு உண்டாகும்.

குழந்தை நலனுக்கு என்று வைத்துக் கொண்டால், மனைவியை இழந்து மறுமணம் செய்யாத ஆணுக்கு இந்தச் சலுகை கிடையாதாம்!

வசதிக்கு வேலைக்கு வந்து, வேலைகளைத் தேக்கி வைத்து, அவசர வேலை இருக்கும் நேரம் அடாவடியாக விடுமுறை கோரி, மற்ற ஆண் பெண் ஊழியர் ஒத்துழைக்க மறுத்து அரசு இயந்திரத்தில் மேலதிக திறமையின்மையையும் இது உண்டாக்குகிறது.

தரமான கல்விச் சாலைகளில் படிக்க வாய்ப்பு, தரமான மருத்துவ மனைகளில் சிகிச்சை (இது ஏற்கனவே அங்கீகரிக்கப் பட்ட மருத்துவ மனைகளில் இருந்தாலும் கூட) என்ற சலுகையே போதுமே! இந்தியா போன்று ஒரு அடிப்படை கட்டமைப்புக்கே போதாக் குறையான ஒரு நாட்டில், பெரும்பாலான மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் அவதிப்படும் நாட்டில், விவசாயம் பொய்த்து தற்கொலைக்கு வழிகோலும் நாட்டில், இப்படி ஒரு சாராருக்கு மட்டும் சலுகை வழங்கும் நிலையிலா இருக்கிறது நாடு?

பெரும்பாலும் மத்திய அரசு ஊதிய விகிதத்தையும் சலுகைகளையும் பின்பற்றும் மானிலங்களும் இதே சலுகையை வழங்குகின்றன. அந்தச் செலவுக்கு எங்கே போவார்கள்? வரி விதிப்புதானே? அதிகாலை கிளம்பி பொழுது சாய வீடு திரும்பும் சாமான்யனின் குழந்தைக்கு மதிய உணவு மட்டுமே (அதுவும் விடுமுறை நாளில் இருக்காது)தரும் அரசு, தன் ஊழியரில் ஒரு சாராருக்கு மட்டும் தாராளமாக சம்பளமும் தந்து இப்படி கொடையும் வேறு தருகின்றதே!

ங்கொய்யால. நாம் இருவர் நமக்கு ஒருவர்னு அங்கங்க சொல்லிக்கிட்டு இருக்கிறத அரசு ஊழியருக்கு மட்டும் ரெண்டுன்னு சொல்லிடுங்கய்யா!

Tuesday, November 10, 2009

விதியை எள்ளும் விதி!

வணக்கம்பா! நல்லாருக்கியா. என்ன தெரியுதா என்றபடி வந்தார் ரிடையரான என் சீனியர். வாங்க‌ சார். உட்காருங்க‌ என்று அம‌ரச் செய்து ஏதாவ‌து உத‌வ‌ முடியுமா என்றேன். பெரிய‌ உத‌வி ப‌ண்ண‌ணும்பா. ரொம்ப‌ புண்ணிய‌மா போகும் என்றார். அதுக்கென்ன சார் பண்ணா போச்சு என்று வாய் விட்டு விட்டேன், வேதாளம் கேட்கும் கேள்வி வருமெனெத் தெரியாமல்.

கிருஷ்ணன்* தெரியுமில்லையாப்பா. அவர் இறந்து 6 மாசமாச்சிப்பா. அவங்க மனைவியும் 5 வருஷத்துக்கு முன்னாடி இறந்துட்டாங்க. 3 பசங்க 2 பெண் அவருக்கு. 3வது பையனுக்கு 47 வயசாதுப்பா. M.A.படிச்சிட்டு ஒரு கம்பெனில வேல செஞ்சிட்டிருந்தாம்பா. இவுங்க முதலியாரு. கூட வேலை செஞ்சிட்டிருந்த ஒரு செட்டியார் பொண்ண லவ் பண்ணிட்டாம்பா.எவ்ளோ சொல்லி பார்த்தாங்க. புடிவாதமா இருந்தான். அவுங்கம்மா சூசைட் பண்ணிக்கப் போய் காப்பாத்த பட்ட பாடு பெரும்பாடா போச்சி. ஒழிஞ்சி போடான்னு விட்டிருக்கலாம்.

இவங்களும் ஒத்துக்கல. மென்டலாய்ட்டான். அடிக்கறது, உடைக்கறதுன்னு பெரிய தலவலியாய்டிச்சி. அவங்களும் கோயில்,குளம், பரிகாரம்னு என்னல்லாமோ பண்ணிட்டாங்க. கலியாணமானா சரியாய்டும்னு ஒரு ஜோசியன் சொன்னான்னு ஜாதகம் பார்த்து, ஒரு ஏழை பெண்ணை கலியாணம் பண்ணாங்க. ஒரு 2 மாசம் நல்லா இருந்தாம்பா. அந்த பொண்ணும் உண்டாயிடுச்சி.

அப்புறம் பழையபடி முரடனாய்ட்டான். கீழ்பாக்கம் ஆசுபத்திரிலதான் இருந்தான் கிட்ட கிட்ட 12 வருஷம். நல்லாயிட்டான்னு டிஸ்சார்ஜ் பண்ணாங்க. வந்து 3 மாசம் நல்லா இருந்தான். இரண்டாவது குழந்தை உண்டாச்சி. ஒரு கடை வெச்சி குடுத்தாங்க. திடீர்னு முன்ன விட மோசமா மென்டலாய்ட்டான். அப்போல இருந்து கீழ்பாக்கத்துலதாம்பா இருக்கான். குணமாவாதுன்னுட்டாங்க. கை, கால் அவுத்து விட்டா காயம் பண்ணிக்கிறது, யாராவது கிட்ட இருந்தா அடிக்கிறதுன்னு ரொம்ப மோசமாயிடுச்சிப்பா.

அந்தப் பொண்ணுக்கு யாரும் இல்லை. 2 பேரன் பேத்திங்க, இந்தம்மா எல்லாம் இவரு கூடதான் இருந்தாங்க. அவரும் போய் சேர்ந்துட்டாரு. அண்ணன் தம்பிங்க வீட்ட வித்து காசு தரோம்னு கையெழுத்து வாங்கிகிட்டு விரட்டி விட்டானுங்க. ஆதரவில்லாம நிக்குது. மென்டல் டிஸார்டர் இருக்கிற பையன்னா பென்ஷன் கிடைக்குமாமே. பார்த்து ஹெல்ப் பண்ணுப்பான்னாரு.

நோண்டி நொங்கெடுத்து பார்த்துட்டேன். கலியாணமான பையனுக்கு மென்டல்னா பென்ஷன் குடுக்க வழியே இல்லை. கடவுள் எழுதுன விதியே சரியில்லையே. மனுஷன் எழுதினது சரியாவா இருந்துடும். பாருப்பா பாருப்பாங்கறாரு. என்ன பண்ணாலும் வழியே இல்லைங்க. நான் என்னங்க பண்ண? 

பைத்தியம் புடிக்கிற அளவுக்கு லவ் இருக்கிற பரதேசின்னா யாரோ ஒரு பொண்ண கட்டினப்ப புள்ள குடுக்க மட்டும் ல‌வ் போய்டுமா? மென்டலானாலும் பரவால்ல ஜாதிதான் முக்கியம்னு ஒரு ஏழைப் பெண் வாழ்க்கையும் நாசமாக்கிட்டாரே பாவி மனுஷன். அதோட சேர்ந்து 2 குழந்தைகளும் தெருவில நிக்குது. பெத்தவங்க, தம்பியால ஒரு குடும்பம் வீதில நிக்கறது கூட உறைக்காம சொத்துக்கு ஆட்டைய போட்ட நாய்ங்க நாசமா போகாதான்னு கோவம் வந்துச்சி.

எல்லாரும் உன்னதாம்பா கை காட்டினாங்க. அதான் உங்கிட்ட வந்தேன். நீ முடியாது வழியில்லைன்னா அது ஃபைனல்னு சொன்னாங்கப்பா. நம்ம பையனாச்சா அதான் நேரிலயே வரலாம்னு வந்தேன். அதுங்க விதி அப்புடின்னா நாம என்ன பண்ண என்று தளர்ந்து கிளம்பியபோது இயலாமையில் என் மீதே கோபம் வந்தது.

கடவுளுக்கு என் மேல் என்ன கோபமோ தெரியவில்லை. மனதிற்குள் வண்டாய் இந்த இயலாமை குடைய அமர்ந்திருக்க, சலூன் ஸ்ப்ரே வாசனையோடு ஹேர்டூவும், லிப்ஸ்டிக்கும் நுனிநாக்கு தங்கிலிஷூமாய் வந்தார் ஒரு அம்மணி.

யூர் மிஸ்டர் மண்ணாங்கட்டி*. ஐம் சுப்ரஜா. ஐம் 57 நவ். மை ஃபாதர் வாஸ் எ ரிடையர்ட் புண்ணாக்கு. மை மதர் பாஸ்ட் அவே 5 இயர்ஸ் பேக். ஐம் தி ஒன்லி டாடர். மை ஹஸ்பன்ட் வாஸ் எ ஜெனரல் மானேஜர் இன் (பெரிய கம்பெனிங்க). ஹி டூ பாஸ்ட் அவே 2 இயர்ஸ் பேக். தென் மை சன் ஹூ இஸ் ஒர்க்கிங் இன் ஸ்டேட்ஸ் டுக் மீ தேர், நீ ஏம்மா தனியா இங்க இருக்கன்னு.

லாஸ்ட் மந்த் ஃபாதர் தவறிட்டார். இனிமே இங்க என்ன இருக்கு? கொஞ்சம் ப்ராபர்ட்டி எல்லாம் செட்டில் பண்ண வேண்டி இருக்குன்னு ஐ ஸ்டேய்ட் பேக். ஃப்யூன்ரலுக்கு வந்திருந்த அப்பாவோட ஃப்ரெண்ட் சொன்னார். சின்ஸ் யூர் ய விடோ நவ், யூர் எலிஜிபிள் ஃபார் அப்பா'ஸ் பென்ஷன்மான்னுட்டு.ஹி டோல்ட் மி டு கான்டாக்ட் யுர் ஆஃபீஸ், வில் யூ ஹெல்ப் மி அவுட் மிஸ்டர் மண்ணாங்கட்டி*ன்னுச்சி.

என்ன பண்ண விதி சார் விதி. அட அலுவலக விதியத்தான் சார் சொன்னேன். நீங்க வேலை செஞ்சிட்டிருந்தீங்களா? பென்ஷன் ஏதாவது வாங்கறீங்களா என்றேன். நோ சார், ஐ நெவர் வர்க்ட் பிகாஸ் தேர் வாஸ் நோ நீட் டுன்னிச்சி. அந்தாளு பென்ஷன் பேப்பர்ல பார்த்தா இந்தம்மா பேரு இருக்கு, கலியாணம் கட்டின பொண்ணுன்னு.

எந்த நாய்க்கு ஹெல்ப் பண்ணவோ ரூல் போட்டிருக்கான் சார். கட்டி குடுத்த பொண்ணுன்னாலும் விதவையானா அவங்க கோடீசுவரியா இருந்தாலும், புள்ள பில்கேட்ஸா இருந்து கூடவே வெச்சி பார்த்தாலும், அப்பனோ, ஆயியோ பென்ஷன் வாங்கிட்டிருந்து டிக்கட் வாங்கிட்டா அம்மா வூட்டுக்கு திரும்பி வந்துட்டதால (விதவையானா அம்மா ஊட்டுக்கு வந்துடுவாங்கன்னு எந்த நாயி சொல்லிச்சோ) பென்ஷன் உண்டுன்னு. அப்பன் ஆத்தா போனப்புறம் அம்மா ஊடுன்னு ஒன்னு ஏதுங்க?

ஒரு செட் ஃபார்ம் குடுத்து, எல்லாம் நிரப்பி கொண்டு வந்து கொடுங்கம்மா. பென்ஷன் வரும்னேன். ஊஊஊஊ. தேங்க் யூ சோ மச். இஃப் யூ டோன் மைன்ட் ஹவ் மச் வில் ஐ கெட்? இட்ஸ் நாட் த மனி தட் மேட்டர்ஸ் (அப்புறம் எதுக்குடி கேட்ட) இட்ஸ் ஆல் அபவுட் சென்டிமென்டல் அட்டாச்மென்ட்(ங்கொய்யாலே. அப்பன் கட்டுன வீட்ட வித்து காசாக்கி பேங்க்ல போட்டுட்டு அட்டாச்மென்ட்டா). பைல்ஸ்ல பச்சை மிளகாய் அரைச்சி தடவினா மாதிரி இருந்திச்சி. குத்து மதிப்பா மாசம் சுமார் இருவந்தஞ்சாயிரம் வரும்னேன்.

இதுக்காகவே எமன் வந்து கூப்டாலும் சாவமாட்டன்டா நானுன்னு ஒரு சந்தோசம் மூஞ்சில தெரிய, ப்ச்.அப்பாவே போய்ட்டாரு, இது வந்து என் துக்கம் தீந்துடுமாங்கற குரல்ல‌ தட்ஸ் நாட் எ பேட் அமவுன்ட் (அட பன்னாடயே. மாசம் ஃபுல்லா உழைச்சாலும் பாதி பேத்துக்கு இந்த சம்பளம் வராதுடி) இன் ஃபேக்ட் இட்ஸ் கொய்ட் எ டீசன்ட் அமவுன்ட்டுன்னு போச்சி.

ரொம்பப் பாவமா, அடுத்த வேளை சோத்துக்கில்லாம நிர்கதியா நிக்கிற குடும்பத்துக்கு உதவ சட்டமில்லை. அமெரிக்கால கோடில புரண்டாலும், பாழாப்போற சமூக மூட நம்பிக்கையை ஆதாரமா வெச்சி தேவையே இல்லாதவங்களுக்கு மேல மேல காசு. ஆம்பிளையா பொறக்கறதும், அரசுத் துறையில வேலை செய்யிறதும் அம்புட்டு சுலபமில்லீங்கோவ். இந்த மாதிரி சில நாள்ள மனசாட்சி இருக்கிறவன்னா கொலக்குத்தம் பண்ணவன் மாதிரி தின்ன தூங்க முடியாதுங்கோவ்.

(ஹி ஹி. உண்மைச் சம்பவம்னா பேரு மறைச்சி போடணும்னு எழுதப் படாத சட்டம் இருக்குங்களே. மீற முடியுமா? அதான் என் பேரு மண்ணாங்கட்டி)

Monday, September 28, 2009

பள்ளித் தலமனைத்தும் கோவில் செய்குவோம்..



பள்ளித் தலமனைத்தும் கோவில் செய்குவோம்னு பாரதி பாடினப்ப ஒரு பக்கம் பயலுவ வசூல்னு இருப்பாங்க. மறுபக்கம் புள்ளைங்க தலைவிதி இவங்க கைலன்னு தெரிஞ்சிதான் பாடினாரு போல.

ப்ளஸ் டூ. கலியாணம் கட்டுனோம் சரி. புள்ளைய ஏண்டா பெத்தோம்னு பெத்தவங்களையும், ஏண்டா பொறந்தோம்னு புள்ளைங்களையும் ஒரு சேர டரியலாக்குற வாக்கியம் இது. அதுவும், தொகுப்பு வீடுகள்ள அக்கம் பக்கத்துல, அல்லது அலுவலகத்தில் அதே வகுப்புல படிக்கிற பசங்க இருந்துட்டா பெத்தவங்களுக்கு மானப் பிரச்சினையா மாறி உண்டு இல்லைன்னு ஆக்குற விஷயம் இது.

சி.பி.எஸ்.இ தான் பெஸ்ட்னு ஒண்ணு சொல்ல, மாநிலக் கல்விதான் நல்லதுன்னு ஒண்ணு சொல்ல மெட்ரிகுலேஷன்ல போட்டா நல்லதுன்னு ஒண்ணு நிக்க ஒரு மூலையில ஒண்ணு ஓ.எஸ். எல். சின்னு குரல் கொடுக்க அத்தனையும் மீறி அப்பன் ஆயி ஒரு முடிவெடுத்து புள்ளைய சேர்க்கிற கொடுமை உலகத்தில எங்கயாச்சும் உண்டுமாங்க?

ஐ.ஐ.டி இல்லன்னா அகில இந்திய தொழிற்கல்வி நுழைவுத் தேர்வுன்னு ஒரு குழு, அகில இந்திய மருத்துவக் கல்வி நுழைவுன்னு ஒரு குழு. எட்டாவதில ஆரம்பிக்கும் இந்த டார்ச்சர். லட்சத்துல கொட்டிக் கொடுத்து ட்யூஷன். (சொந்தமா படிச்சி ரேங்க் வாங்கின பசங்களுக்கு லட்சத்துல இவனுங்க காசு கொடுத்து என் கிட்ட படிச்சன்னு போட்டுக்குறேன், ஃபோடோ குடுன்னு பண்ற கேடு கெட்டத் தனம் தெரியுமாங்க?).

இப்புடி டார்ச்சர்ல புயல்ல அடி பட்ட கட்டுமரம் மாதிரி அலைக்கழிஞ்சி அரை லூசா இப்ப நான் என்னதான் பண்ணட்டும்னு ஆன புள்ளைங்கள, நீ ப்ளஸ் டூ பாஸ் பண்ணா போதும் மக்கான்னு தவிக்க வைக்கிற வியாதி இது. இப்புடி பைத்தியம் புடிச்சா மாதிரி சகலத்தையும் துறந்து படிக்கிற புள்ளைங்களையும், படிக்க வைக்கிற பெத்தவங்களையும் பொறுப்பான ஒரு துறை எவ்வளவு கவனமா கருத்தில் இருத்தி இருக்கணும்?

அப்புடியா இருக்கு? பரிட்சை முடிஞ்சதும் ரெயில் டிக்கட் மாதிரி ஒரு தத்கல் பரிட்சை. மறு கூட்டலுக்கு ஆயிரக் கணக்கில். மறு மதிப்பீட்டுக்கு இன்னும் சில ஆயிரம். இப்புடியெல்லாம் இருக்குன்னு தெரியாம தற்கொலை பண்ணிக்கிட்டு ஆயுசு பூரா எம்புள்ளைய படிக்க வெச்சி கொன்னுட்டனேன்னு தவிக்கிற பெத்தவங்க. பல பேரு ஜெயில் மாதிரி ஆறாவதில இருந்து எங்கயோ ஒரு குறிப்பிட்ட ஊருல மட்டும் சில பள்ளிகள்ள சேர்க்குறதுன்னு ஆகிப் போச்சு.

வெக்கக் கேட்டுக்கு உச்சமா இந்த வருடம் மறு கூட்டல்ல மாநிலத்துலயே முதலாவதா வந்திருக்கு ஒரு மாணவன். அதிலயும் அலக்கழிப்பு. மறு கூட்டல்ல வந்ததால முதல் ரேங்க் குடுக்க முடியாதுன்னு உளறிட்டு, ஆளாளுக்கு கிழிச்சதும் அவசரமா இல்ல இல்ல குடுக்கறோம்னு ஒரு சமாளிப்பு. போன வாரம், மறுகூட்டல்/மறு திருத்தல்ல சம்பந்தப் பட்ட ஆசிரியர்களுக்கு கவுன்ஸிலிங்காம். அதில் இயக்குனர் பேசிய கருத்துக்கள் அடப்பாவிங்களான்னு திகைக்க வச்சது நிஜம்.

மறு கூட்டல்ல ஒரு மார்க், இரண்டு மார்க் பரவாயில்லை. அறுபது, எண்பது மார்க் எல்லாம் சகஜமா வருது. அதுக்கு அந்தம்முனி சொன்ன ஆலோசனைகள் இருக்கே. இப்புடித்தானே இருந்திருக்கணும். இனிமேத்தான் பண்ண போறீங்களான்னு அறையணும் போல வருது.

1. ஒரு ஆசிரியர் திருத்தி கொடுத்த மதிப்பெண்ணை இன்னொருத்தர் கூட்டிப் போடணுமாம். அவங்களே பண்ணப்படாதாம். (அவங்களுக்கு கூட்டல் தெரியாதோ?)
2. காலையில் ஐந்து மாலையில் ஐந்து பேப்பர் மட்டுமே திருத்த வேண்டுமாம். (அப்போ இவ்வளவு நாளும் நிறைய திருத்தினா நிறைய காசுன்னு தானே இருந்திருக்கு?)
3. அந்தந்த பாடத்தை அந்தத் துறை ஆசிரியை தான் திருத்தணுமாம்.(இவ்வளவு நாள் கணக்கு பேப்பரை சரித்திர ஆசிரியர் திருத்தினாங்களா?)
4. ஒரு மார்க்குக்கு அந்த புள்ளைங்க எவ்வளவு கஷ்டப்பட்டு படிக்கிறாங்கங்கறதை மனசுல வச்சிக்கணுமாம்.(வாத்திமார் பசங்க படிக்கிறாங்கதானே?)

இதையெல்லாம் தாண்டி பட்டப் படிப்புக்கு அல்லாடுற அல்லாட்டம் தனிக் கதை. அய்யா புண்ணியவான்களே. சமச்சீர் கல்வி இன்னும் என்ன கல்வி எல்லாம் உண்டோ எல்லாத்துக்கும் ஒரே ஒரு குறிக்கோள் வெச்சிக்கிடுங்க. படிக்கிறது பட்டணத்து அதிகாரிங்க புள்ளை மட்டுமில்ல. கூழ்க்காசை மிச்சம் பண்ணி படிக்கணும்னு வெறியோட படிக்கிற குக்கிராமத்து அப்புராணி பசங்களும்தான். சாமானியக் கல்வியா இருக்கட்டும் அது. செய்வீங்களாய்யா?

Tuesday, September 8, 2009

கனவாய்ச் சில நினைவுகள்..

ஒன்றும் செய்ய இயலாமல்
ஓய்ச்சலாய் இருந்த ஓர் தினம்
கடந்த காலத்துக்கும் நிகழ் காலத்துக்குமான
ஓர் மவுனப் போராட்டம்.

ஏங்கத் தொடங்கியதென் மனது.
இழந்தவர்களைத் தேடி அல்லலுற்றது!
கிடைக்காதெனத் தெரிந்தும்
கிளர்ந்தெழுந்தடிக்கும் வேகம் தாங்கவில்லை.

சிறுவயதில் இழந்த என் அப்பனை
வேண்டியதென் உள்ளம்.
இப்போதிருந்தால் என்ன செய்திருப்பேன்?
செய்திருப்பேன் என்பதை விட‌

இந்த நொடி என்ன செய்யத் துடிக்கிறது என் மனம்?
வெளியே கொஞ்சம் நடக்க அழைக்கலாம்.
முடியாதென்பவரை நான் பிடித்துக் கொள்கிறேன்
வாருங்கள் என்று அழைக்கலாம்.

கொஞ்ச தூரம் எனக் கெஞ்சலாம்.
தவிர்க்கமாட்டாமல் வரும் என் தகப்பனை
பாதி வழியில், எனக்கு ஆசையாய் இருக்கிறதென்று
சிறுவயதில் கை பிடித்து நடந்த‌ மாதிரி நடக்கலாம்.

மகிழ்ந்து போகமாட்டானா என் தகப்பன்?
வம்படியாய் மிட்டாய் வேண்டுமெனலாம்.
கதை சொல்லிக் கூட்டிப் போகச் சொல்லலாம்.
கால் வலிக்கிறது தூக்கு எனச் சொல்லிச் சிரிக்கலாம்.

முடியாமல் ஆங்காங்கே நிற்கும் போது
பராக்குப் பார்க்காமல் வா எனலாம்.
ரயில் பாதையோரம் நின்று
ரயில் காட்டலாம்

சாலையோர ஜவுளிக் கடை நுழைந்து
சேலம் குண்டஞ்சு வேட்டி எடுத்து
வெள்ளைச் சட்டை வாங்கி
அங்கேயே போட வைக்கலாம்.

எனக்கொரு சட்டை என
அடிக்கிற நிறத்தில் எடுக்கலாம்.
முகம் சுளித்து அழகாய்
எடுத்துக் கொடுக்கும் சட்டையில் மகிழலாம்.

களைத்திருக்கும் தகப்பனின்
தோளில் கை போட்டணைத்து
ஆட்டோ பிடித்து
வீடு சேரலாம்.

கால் எடுத்து மடி வைத்து
இதமாய்ப் பிடிக்கலாம்.
கண்மூடிக் கிடக்கையில்
நெற்றியில் பட்டும் படாமல் முத்தமிடலாம்.

பள்ளி விட்டு வந்து அப்பாவென்றலறி
அடுத்த நொடி மடியில் விழும் மகனை
மாடு போல் மடியில் விழாதே என்றதில்
வென்றது இன்றைய யதார்த்தம்.

யூத்ஃபுல் விகடன் குட்ப்ளாக் பகுதியில்: http://youthful.vikatan.com/youth/index.asp

_________________________

Wednesday, August 12, 2009

காலம் செய்த கோலமடி..

இந்தியா:

"தமிழர்களைக் கொன்று குவிப்பது உள்நாட்டு விவகாரமா" ஐ.நா. சபையில் தமிழக அமைச்சர் பேச்சு.

"அழிக்காதே அழிக்காதே தமிழினத்தை அழிக்காதே!", "பறிக்காதே பறிக்காதே தமிழர் உரிமையைப் பறிக்காதே !", "கொடுக்காதே கொடுக்காதே இலங்கைக்கு ஆயுதம் கொடுக்காதே!" என்ற முழக்கங்களோடு மனு கொடுத்தனர்.

"இலங்கைத் தமிழருக்கு தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கையை இந்தியா ஆதரிக்கவில்லை. சிங்களர்களுக்குச் சமமான உரிமைகள் வழங்கப் பட வேண்டும் என்றுதான் கூறுகிறது. இலங்கையில் சிங்கள மக்களும் தமிழர்களும் ஒற்றுமையுடன் வாழவேண்டும் என்பதே எங்கள் விருப்பம்."

"இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப் பட்டார்கள். இதன் காரணமாக இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக தமிழ் நாட்டுக்கு வருகிறார்கள். அகதிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது."

"இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று இந்தியா நினைக்கவில்லை. இலங்கையில் வாழும் தமிழருக்கு நியாயமான உரிமைகளும் பாதுகாப்பும் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இப்பிரச்சினை ஐ.நா.சபையில் விவாதிக்கப் படுகிறது."

"இலங்கை அரசின் கொள்கை பற்றியோ, அதன் நடவடிக்கைகள் பற்றியோ, அங்குள்ள அரசியல் வாதிகள் பற்றியோ நாங்கள் பேசாமல் இருக்கும்போது இந்திய அரசைப் பற்றியும், மாநில அரசைப் பற்றியும், இங்குள்ள அரசியல் வாதிகள் பற்றியும் விமரிசிப்பதற்கு ஐ.நா. போன்ற உலக அரங்கை பயன் படுத்தும் அளவுக்கு இலங்கையின் தரம் தாழ்ந்து போனது மிகவும் வருந்தத் தக்கது."

"இந்தியாவில் இந்து முஸ்லீம் கலவரம் நடக்கவில்லையா என்று கேட்கிறார்கள். அப்படிப் பட்ட பிரச்சினைகளை பேசித் தீர்க்கிறோமே தவிர இப்படிப் பட்ட பிரச்சினைகளினால் இந்திய மக்கள் வெளிநாடுகளுக்குப் போனதாக வரலாறு கிடையாது"

"மேலும் இத்தகைய பிரச்சினைகள் ஏற்படும் போது போலீசாரும் ராணுவமும் நேர்மையாகவும், சட்டப் படியும் நடந்துக் கொள்கின்றனரே தவிர ராணுவமும், போலீசாரும் வன்முறையாளர்களுக்குத் துணை போகவில்லை. "

"அப்படி பாதிக்கப்பட்டு ஓடி வருகின்ற முதியவர்களையும், தாய்க்குலத்தினரையும் குழந்தைகளையும் மனிதாபிமான அடிப்படையில் ஏற்று அவர்களுக்குப் பரிவு காட்டி ஆதரவளிக்கிறது."

அமைச்சரின் இந்தப் பேச்சை

"அனைத்து நாட்டுப் பிரதிநிதிகளும் மிக உன்னிப்பாகவும், கவனமாகவும் கேட்டனர். பல்வேறு நாட்டுப் பிரதிநிதிகள் அமைச்சரைக் கைகுலுக்கிப் பாராட்டினர்."

இலங்கை:

"இலங்கைத் தமிழர் பிரச்சினை இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினை. அதை இந்த சர்வதேச (ஐ.நா.) அரங்கில் இந்தியா கிளப்புவது கண்டு வியப்படைகிறேன். இலங்கைத் தமிழ் தீவிர வாதிகளும் தமிழர் கட்சியினரும் பிரிவினையை ஆதரிக்கிறார்கள். அவர்களுக்குத் தமிழ் நாட்டில் உள்ளவர்களும் அனுதாபம் காட்டுகிறார்கள். இலங்கைத் தீவிர வாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கிறார்கள். இலங்கையில் நடந்துள்ள சம்பவங்களை மிகைப் படுத்துவது சரியல்ல‌"

என்ன உளறல்? எப்பொழுது நடந்தது இதுன்னு நினைக்காதிங்க. காலத்தின் கோலம். இந்தியா சார்பில் பேசியவர் மாநில அமைச்சர் திரு பண்ருட்டி ராமச்சந்திரன். இலங்கை சார்பில் உளறிய அமைச்சர் இன்னோரு இழவெடுத்த ஃபொன்சேகா. 1983 அக்டோபரில் இந்திரா தலைமையில் ஐ.நா. குழுவில் இடம்பெற்று அமெரிக்காவில் பேசிய பேச்சு. இலங்கையைப் பொறுத்த வரை பிரமிப்பாக இருக்கிறது. 25 வருடங்களுக்கு முன் சொன்ன அதே பொய்யை, அதே பேச்சுக்களை அணுவளவும் மாறாமல் சொல்லி எவ்வளவு பெரிய இனப் படுகொலையை செய்துவிட்டு மார்தட்டிக் கொள்கிறது?

இந்தியா? அமைச்சரின் பேச்சில் உள்ள நேர்மை. எதிர்கட்சி தன்கட்சி என்றில்லாத ஒருமை. எப்படி நெஞ்சு நிமிர்த்தி இந்தியாவின் நடவடிக்கையை முன் வைக்கிறார். ராணுவம் குறித்தும் போலீசார் குறித்தும் என்ன ஒரு நம்பிக்கை. எல்லாவற்றையும் எங்கே தொலைத்துவிட்டோம்.

அப்பொழுதும் அதே காங்கிரஸ்தான். அன்னை இந்திராவின் தலைமையில் எப்படி இருந்தோம்.

அவர் மகன் அனுப்பிய ராணுவத்தினரால் அசிங்கப் பட்டோம். நம்பிக்கைக்கு விழுந்த முதல் அடி.(ஜெயவர்த்தனே எப்படி எல்லாம் சிரித்திருப்பாரோ?)

இலங்கை அமைச்சர் பேசிய பேச்சு ஒரு ராணுவத் தளபதி பேசிய கேவலத்துக்கு முன்னால் ஒன்றுமே இல்லை. அதற்கே அவ்வளவு கடுமையாக சாடிய ஒரு சாதாரண அமைச்சர் எங்கே. கேவலம் ஓட்டுக்காக சுரணையின்றி சொக்கிப் போன... சொல்லக் கூட அசிங்கமாக இருக்கிறது.

மருமகள் வழிகாட்டலில் மொத்தமாக அடிமையாகிவிட்டோம். கோவணத்தைக் காணோம், நாராயணனுக்கு ஃபோன் போடு என ராஜபக்சே சொன்னால் நாக்கு தள்ள வாலாட்டிக் கொண்டு ஓடும் அளவுக்கு. 'ரா'வணா. ஆள் காட்டி, ஆள் அனுப்பி, ஆயுதம் கொடுத்து, கோடிக் கணக்கில் உதவி, ஐ.நா.வில் நாம் செய்ய வேண்டியதை யாரோ செய்ததையும் தடுத்து என்னவெல்லாம் நடந்துவிட்டது. அப்பொழுதும் சீனா நமக்கு நண்பன் இல்லை தானே? ஏன் இந்தக் கொலை வெறி. அன்னை இந்திராவை ஆதரித்த அதே பிராணாப்பும், சிதம்பரமும் இப்படி ஆள்காட்டத் துணைபோனதேன்? இந்திராவை அன்னை என்றழைத்த வாயால் இழவெடுத்த சோனியாவை அப்படிக் கூப்பிட நாக்கூசாதா? என்ன காரணமென்றாலும் இப்பொழுது கூட முடக்கி வைக்கப் பட்டிருக்கும் அப்பாவி ஜனங்களுக்கு ஆதரவில்லாத நிலைப்பாடு ஏன்? வளர்ப்பு நாயைத் தடவிக் கொடுப்பது போல் அவ்வப்பொழுது இந்தியா எங்கள் நண்பன் எனக் கொலைகாரன் சொல்வதில் இன்பமா? எந்த நாய்க்காவது எலும்புத் துண்டுமேல் பாசமா?

அமைச்சர் பெருமிதத்தோடு சொன்ன எல்லாம் பொய்யாய் போய்விட்டது. மிஞ்சி இருப்பது இந்தியன் அகதியாக ஓடியதில்லை என்பது தான். அதையும் நடத்தி விட்டோமென்றால் மார் தட்டிக் கொள்ளலாம். மேரா பாரத் மகான்!

(நன்றி: இலங்கைத் தமிழர் வரலாறு. தினத் தந்தி:12.8.2009)

முழு வயிற்றெரிச்சலை பார்க்க விரும்புபவர்களுக்கு :
***

Saturday, March 21, 2009

இப்படியும் யோசிப்பாய்ங்களோ?

கலைஞர்:

தமிழ செம்மொழின்னு சொல்ல வெச்சத இப்படி ரத்த ஆறு ஓட துணை போனதாலதானான்னு கேட்றுவாய்ங்களோ?

ஏப்ரல் 14குள்ள ஈழத்த ஒழிச்சி கட்டணும்னு சொக்கு சொன்னதா நீயூசெல்லாம் வருதே! இதனால தான் நான் தமிழ் வருடம் பொங்கல்ல இருந்துனு மாத்திட்டேன். உள் கைன்னு சொல்லிடுவாய்ங்களோ?


திருமா:

அந்த அணியா இந்த அணியான்னு முடிவெடுக்காம இழுபடுறதால விடுதலைப் பூனைன்னு சொல்லிடுவாய்ங்களோ?



ராமதாஸ்:

டக் டக்னு யார் கூட வேணும்னாலும் கூட்டணின்னு போறதால ப.ம.க. 'ஓ' குரூப்பான்னு கேட்றுவாய்ங்களோ?

நம்ம கூட்டணி தோத்தாலும் எனக்கு தெரியாது. நான் மந்திரியாதான் இருப்பேன். கூட்டணி மாத்துன்னு அன்புமணி கேட்றுவாய்ங்களோ?


ஜெ:

இந்த கிறுக்கன் சுவாமி ஒரு வேள 40 தொகுதிலயும் ஜெயிச்சா பிரதமர் பதவி வாங்கி குடுத்து மாட்ட வெச்சா பக்ஸேட பேசி தனி நாடு வாங்குன்னு கேப்பாய்ங்களோ?

அவங்களே அடைஞ்சிட்டா அழைப்பு குடுத்து அங்க வந்தா ஈழத் தமிழ்நாடுன்னு தான் சொல்லணும்னு சொல்வாய்ங்களோ?


விஜயகாந்த்:

இப்போதான் உங்க அணில இருக்கேனே கலியாண மண்டபம் மேட்டர் பாருங்கன்னா கலைஞர் காங்கிரஸ காங்கிரஸ் கலைஞரன்னு கை காட்டுவாய்ங்களோ?

நாம ஒரு தொகுதில நின்னா இந்த கிறுக்குப் புடிச்ச வடிவேலு சொன்னா மாதிரி டெபாசிட் இல்லாம பண்ணிடுவாய்ங்களோ?


சுவாமி:

ஒரே மேடைல என்னையும் சோவையும் ஏத்தி விடுவாளோ. அந்தாளு கண்ண பார்த்தாலே நேக்கு முட்டை கவனம் வந்து சேர் பின்னாடி ஒளிஞ்சிப்பேனே?


ஈழத்து சனங்க:

எங்களுக்கும் கடவுள் கண்ண தொறந்து எங்க நாடு எங்களுக்கு கிடைச்சா எங்க ரத்தம், எங்க உயிர், எங்க வீரம், எங்களுக்காக உயிரைக் குடுத்த தம்பிமார் தியாகம் எல்லாம் ஒண்ணுமில்ல. எங்களால தான்னு எடுபட்ட பயலுவள்ளாம் ஒண்ணாக் கூடி கூத்தடிப்பாய்ங்களோ?


இங்கத்து சனங்க:

உள்ளுக்குள்ள குமுறி குமுறி ஒண்ணும் பண்ண மாட்டாம சாவறது தெரியாம, இப்படி ஒரு பிழைப்பு தேவையாடான்னு கேட்றுவாய்ங்களோ?