ஆல் இந்தியா ரேடியோவில் 70-80 கால கட்டத்தில் காலை 7.00 - 7.15 ஒரு கர்னாடக இசை நிகழ்ச்சி ஒலிபரப்பாகும். அப்புறம் இரவில் ரஸிக ரஞ்சனி என்று நேயர் விருப்பமாக வாரம் ஒரு நாள் (கிழமை கவனமில்லை) கர்னாடக இசை ஒலிபரப்பாகும். இரண்டுமே ஒலித்தட்டுகளிலிருந்து ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிகள்.
ஒரே ஒரு நிகழ்ச்சி கூட தவறவிட்டதில்லை. சில நாட்களில் கீறல் விழுந்த இசைத்தட்டால் ஒலிபரப்பு தடைபட்டாலும் சுனில் கங்கூலியின் எலக்ட்ரானிக் கிடார் இசை மனதைக் கொள்ளை கொள்ளும். அருமையான மிகப் பழைய இசைக் கலைஞர்கள் தண்டபாணி தேசிகர், பி. ராஜா அய்யங்கார், அரியக்குடி, முசிறி சுப்ரமணியம் ஆகியோர் அறிமுகமானது அப்போதுதான்.
இசைவிழாவின் நேரடி ஒலிபரப்புகள், சென்னை ஒன்று, இரண்டு அலை வரிசைகளில் ஒலிபரப்பாகும். அப்போதெல்லாம் வானொலி என்ற புத்தகமும் வரும். நிகழ்ச்சி நிரல்கள், கலைஞர்களின் படங்கள் என்று. வாங்கி வைத்துக் கொண்டு நிகழ்ச்சிகளைத் தெரிந்து கொள்வதில் அலாதி ஆர்வம் இருந்தது. அந்தப் படங்களை வெட்டி வைத்து ஆல்பம் கூட தயார் செய்து வைத்திருந்தேன்.
ஆகாஷ்வாணி ரேடியோ சங்கீத் சம்மேளன் நிகழ்ச்சி மூலம் இந்துஸ்தானி இசையும் மனதை ஈர்த்த காலம் அது. எந்த ஔரங்கசீப் பொறுப்பேற்றதோ தெரியாது. எல்லாவற்றுக்கும் முற்றுப் புள்ளி வைத்தாகிவிட்டது. மெல்ல மெல்ல இசைத்தட்டுக்கள் அரிதாகி, ஒலி நாடாக்கள் அறிமுகமானது.
ஒலித் தட்டிலிருந்து ஒலி நாடாவுக்கு மாற்றித் தருவது ஒரு மிகப் பெரிய வியாபாரமாய் கால் ஊன்றத் துவங்கியது. வாக்மென் வாங்கிய காலத்தில் தி.நகருக்கு வாரா வாரம் படை எடுப்பது வழமையாகிவிட்டிருந்தது. ரங்கநாதன் தெருவில் கர்னாடக இசைத் தட்டுகள் அதிகமாக இருக்குமென்பதாலும், 12ரூ 15 ரூக்கெல்லாம் தெருவோரம் தேடினாலும் கிடைக்காத பாடல்களின் பதிவுகள் கிடைக்குமென்பதாலும் கூடுதலாக காய்கறிகள் வாங்கும் வேலையும் முடியுமென்பதாலும் அரை நாள் சந்தோஷமாக இதில் போய்விடும்.
என் நண்பனுக்கு பழைய தமிழ் சினிமாப் பாடல்கள் மேல் காதல். அது ஏனோ சென்னையில் புதுப் பாடல்களுக்குத்தான் மவுசு. பழைய பாடல்கள் ஒரு சில இடத்தில் மட்டுமே பதிவு செய்யப்படும். பழைய பாடல்களுக்கு சொர்க்க பூமி ஈரோடு மற்றும் சேலம். நண்பர் ஞாயிறு காலை கோவையில் கிளம்பி ஈரோடு போய் கடை பிடித்து பாடல்களை எழுதிக் கொடுத்துவிட்டு வந்து விடுவார். அடுத்த ஞாயிறு அடுத்த லிஸ்ட் கொடுத்து போன முறை கொடுத்ததைக் கொண்டு வருவார்.
இன்றும் அவரிடம் உள்ள பழைய பாடல்கள் பொக்கிஷம். சரி இந்த ராமாயணமெல்லாம் எதுக்குங்கறீங்களா. ஒரு தேடலுங்க. முதல்ல சொன்னேன் பாருங்க 7:00 - 7:15 அதில அடிக்கடி கேட்டது. என்னைக்காவது இந்த பாட்டை எனக்கு சொந்தமாக்கிக்கணும்னு ஒரு சபதம்.
அலையாத இடமில்லை. ஊரு ஊரா சொல்லிப் பார்த்துட்டேன். எனக்காக ப்ரியாவும் ரிகார்டிங் கம்பெனி, வேற தெரிஞ்சவங்க கிட்டல்லாம் மின்னஞ்சல் அனுப்பி கேட்டுச்சி. எங்கயும் சாதகமான பதில் இல்லை. சும்மா இல்லைங்க என்னுடைய 35 வருஷ தேடலுங்க இது.
இப்பதான் பதிவுலகம் பெரிய சக்தியா இருக்கே. கிடைக்கும்னு ஒரு நம்பிக்கை. எந்த தேசத்துல இருக்கிற சாமியாவது வரம் குடுக்காதான்னு ஒரு நம்பிக்கை. தகவல் இதோ:
பாடல்: தியாகராஜரின் ‘கலிகியுண்டே கதா’
ராகம்: கீரவாணி
கலைஞர்: திரு டி. என். கிருஷ்ணன்.
கருவி: வயலின்
இசைத்தட்டு: கொலம்பியா எல்.பி. ரிகார்ட்.
மக்கா, நெட்ல தேடிட்டு தோ புடி மோனேன்னு பட்டுன்னு லிங்க் குடுக்காதீங்க. அதே டி.என்.கிருஷ்ணன், மகள் விஜி கிருஷ்ணன் மகனுடன் வாசிச்சது இருக்கு. நான் தேடுறது சோலோ. கொஞ்சம் பெரிய மனசு வைங்க சாமிகளா! புண்ணியமா போகும்.
இப்பதான் பதிவுலகம் பெரிய சக்தியா இருக்கே. கிடைக்கும்னு ஒரு நம்பிக்கை. எந்த தேசத்துல இருக்கிற சாமியாவது வரம் குடுக்காதான்னு ஒரு நம்பிக்கை. தகவல் இதோ:
பாடல்: தியாகராஜரின் ‘கலிகியுண்டே கதா’
ராகம்: கீரவாணி
கலைஞர்: திரு டி. என். கிருஷ்ணன்.
கருவி: வயலின்
இசைத்தட்டு: கொலம்பியா எல்.பி. ரிகார்ட்.
மக்கா, நெட்ல தேடிட்டு தோ புடி மோனேன்னு பட்டுன்னு லிங்க் குடுக்காதீங்க. அதே டி.என்.கிருஷ்ணன், மகள் விஜி கிருஷ்ணன் மகனுடன் வாசிச்சது இருக்கு. நான் தேடுறது சோலோ. கொஞ்சம் பெரிய மனசு வைங்க சாமிகளா! புண்ணியமா போகும்.
57 comments:
//இப்படி ஒரு பைத்தியம் இருக்கியாப்பா. இந்தான்னு குடுப்பாங்களோன்னு ஏக்கத்தோட கேக்குறேன்//
இவ்ளோதூரம் கேட்கறீங்க...சரி முயற்சி பண்றேன்.
நிச்சயமாக முயற்சி செய்து பார்க்கிறேன் அண்ணா
கிடைக்க வாழ்த்துக்கள்
இது நம்ம ஏரியா இல்லைங்க
சோ... அப்பீட்டு..
யாராவது கண்டுபிடிச்சு கொடுத்தா... அவங்களுக்கு அண்ணாத்தே சார்பில் ஒரு விருது கொடுக்கப்படும்
உங்கள் தேடல் பிரமிக்க வைக்கிறது. நானும் எனக்குத் தெரிந்த இசை வல்லுநர்களிடம் கேட்டுப் பார்க்கிறேன்.
காலம் மாறிப் போச்சுனு சொல்லாம இருந்தால் சரி.
விரைவில் கிடைக்க வாழ்த்துகள்.
//சும்மா இல்லைங்க என்னுடைய 35 வருஷ தேடலுங்க இது. //
உண்மையிலேயே தேடுனீர்களா ??
:-)
http://trc108umablogspotcom.blogspot.com/
எதற்கும் இவரை அணுகிப்பாருங்கள் ஐயா.
அண்ணே உங்க ஆசை நிறைவேற வாழ்த்துகள்.
பல வருசம் கனவா .. பாலா சார்
விரைவில் கிடைக்கட்டும்
//70-80 கால கட்டத்தில் //
இம்புட்டு நேபகமா? நமக்குத்தான் நேத்து நடந்ததே நினைவில் இல்லை... உம் ....
http://allaboutgoogle.wordpress.com/2008/01/13/1950-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/
inka paarunka
http://allaboutgoogle.wordpress.com/2008/01/13/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA/
paarunka intha link varutha endu kandu pidichchaa meendum varuven
மீ த எஸ்கேப். அவ்வளவு இசை ஞானம் எனக்கு.
விடுங்க..இதுக்கு போய் பீல் பண்ணிட்டு..உங்க நல்ல மனசுக்கு(?) நீங்க ஆசைப்பட்டது உங்களுக்கு நிச்சயமா கிடைக்கும் :)))
முயற்சி செய்கிறேன்.
நம்ம ஏரியா இல்ல. இருந்தாலும் கேட்டுப் பாக்குறேன்.
அய்யா,
ஆத்தூரில் எனது நண்பர் விஜயராம் கண்ணன் என்பவர் பவளக்கொடி முதல் எல்லாம் வைத்திருக்கிறார். அவரிடம் கேட்டு பார்க்கிறேன். அவரிம் இதுவரை கேட்டு கிடைக்காத பாடல் இல்லை. (கர்நாடக சங்கீதம் முதல் யாவும்) முயற்சிக்கிறேன்.
பிரபாகர்.
@@நன்றி பாலாசி
@@நன்றி சுபாங்கன்
@@நன்றி பிரபு
@@நன்றி கதிர்.(செல்ஃபோன் உங்க ஏரியாவோ:))
@@நன்றிங்க வெ. இரா.
@@நன்றிங்க அக்பர்
@@ஆமாம் யூர்கன்
@@நிச்சயமாக. நன்றி மீண்டும் வெ.இரா.
@@நன்றிங்கண்ணே இராகவன் நைஜீரியா
@@நன்றி ஸ்டார்ஜன்
@@வாங்க சரவணக்குமார்.
@@மிக்க நன்றி றமேஸ். நான் தேடியது கிடைக்காவிட்டாலும் கொடுத்த சுட்டியில் புதையல். மிக்க நன்றி.
@@சார். துப்பறியும் கதையெல்லாம் எழுதுறீங்க. இத கண்டு பிடிச்சி கொடுங்க சார்.
வெற்றி said...
/விடுங்க..இதுக்கு போய் பீல் பண்ணிட்டு..உங்க நல்ல மனசுக்கு(?) நீங்க ஆசைப்பட்டது உங்களுக்கு நிச்சயமா கிடைக்கும் :)))/
உங்க பேர்ல இருக்கிறது எனக்கு வாய்க்கட்டும்:))
ஸ்ரீ said...
முயற்சி செய்கிறேன்.//
மிக்க நன்றி ஸ்ரீ
முகிலன் said...
நம்ம ஏரியா இல்ல. இருந்தாலும் கேட்டுப் பாக்குறேன்.//
கிர்ர்ர்ர்ர்ர். கேட்டு பார்க்கிறதெல்லாம் இல்லை. சிம்கார்ட்ல இருந்து ரேகை எடுத்து கொலையாளீய கண்டு பிடிக்க தெரியுது. இது முடியாதா. பாருங்க பாஸ்.
பிரபாகர் said...
அய்யா,
ஆத்தூரில் எனது நண்பர் விஜயராம் கண்ணன் என்பவர் பவளக்கொடி முதல் எல்லாம் வைத்திருக்கிறார். அவரிடம் கேட்டு பார்க்கிறேன். அவரிம் இதுவரை கேட்டு கிடைக்காத பாடல் இல்லை. (கர்நாடக சங்கீதம் முதல் யாவும்) முயற்சிக்கிறேன்.
பிரபாகர்.//
அது மட்டும் கிடைச்சிதோ. அண்ணன்னே கூப்புடுறேன் உங்கள பிரபா.
காற்றில் எந்தன் கீதம் கானத ஒன்றைத்தேடுதே!
தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி
பாடிப்பறந்த கிளி பாதை மறந்த கிளி
கண்ணே கலைமானே
உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன் தங்கமே
ராஜராஜசோழன் நான்
போவோமா ஊர்கோலம்
அண்ணே, எனக்குத் தெரிஞ்ச கீரவாணி இதெல்லாம்தான் :)
நான் கேள்விஞான பார்ட்டி. எனக்குத் தெரிந்த இசைத்துறை நண்பர்களிடம் சொல்லி வைக்கிறேன்.டோண்ட் ஒர்ரி.கண்டுபிடிச்சுருவோம்.
எனக்கு இசை பத்தில்லாம் எதுவும் தெரியாது...எனக்கு தெரிஞ்ச இசை தேவாவோட குத்துப் பாட்டு மட்டும் தான்...ஆனா, உங்களுக்காக தேடிப் பார்க்கிறேன்...
பாலா சார், ஓல்ட் இஸ் கோல்ட் என்று தங்க பொக்கிஷத்தை தேடுறீங்க. விரைவில் கிடைக்க வாழ்த்துக்கள்.
//இப்படி ஒரு பைத்தியம் இருக்கியாப்பா. இந்தான்னு குடுப்பாங்களோன்னு ஏக்கத்தோட கேக்குறேன்.//
வச்சிகிட்டா வஞ்சகம் பண்ணுறேன்
கிடைத்தால் கொடுங்க..பளைய நினைப்பு ..நாமுதுழனு் கேட்போம்.
நானும் தேடிப் பாக்குறேன். இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
கிடைக்க வாழ்த்துக்கள்
எம்.எம்.அப்துல்லா said...
காற்றில் எந்தன் கீதம் கானத ஒன்றைத்தேடுதே!
தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி
பாடிப்பறந்த கிளி பாதை மறந்த கிளி
கண்ணே கலைமானே
உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன் தங்கமே
ராஜராஜசோழன் நான்
போவோமா ஊர்கோலம்
அண்ணே, எனக்குத் தெரிஞ்ச கீரவாணி இதெல்லாம்தான் :)
நான் கேள்விஞான பார்ட்டி. எனக்குத் தெரிந்த இசைத்துறை நண்பர்களிடம் சொல்லி வைக்கிறேன்.டோண்ட் ஒர்ரி.கண்டுபிடிச்சுருவோம்.//
ரொம்ப நன்றி அப்துல்லா
அது சரி said...
எனக்கு இசை பத்தில்லாம் எதுவும் தெரியாது...எனக்கு தெரிஞ்ச இசை தேவாவோட குத்துப் பாட்டு மட்டும் தான்...ஆனா, உங்களுக்காக தேடிப் பார்க்கிறேன்.../
ரொம்ப நன்றி அது சரி;) எனக்கும் தேவா பாட்டு பிடிக்கும்
Chitra said...
பாலா சார், ஓல்ட் இஸ் கோல்ட் என்று தங்க பொக்கிஷத்தை தேடுறீங்க. விரைவில் கிடைக்க வாழ்த்துக்கள்.//
நன்றிங்க சித்ரா
கீரவாணி கிடைச்சுதா வானம்பாடி பொங்கல் வாழ்த்துக்கள்
நசரேயன் said...
/வச்சிகிட்டா வஞ்சகம் பண்ணுறேன்/
:)). அண்ணாச்சி அவ்வ்வ்வ்வ்வ்வ்
தாராபுரத்தான் said...
/கிடைத்தால் கொடுங்க..பளைய நினைப்பு ..நாமுதுழனு் கேட்போம்.//
கட்டாயம் பகிர்ந்துக்குவேனுங்க.
புலவன் புலிகேசி said...
/நானும் தேடிப் பாக்குறேன். இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்/
நன்றிங்க புலிகேசி
T.V.Radhakrishnan said...
கிடைக்க வாழ்த்துக்கள்//
நன்றி சார்.
thenammailakshmanan said...
//கீரவாணி கிடைச்சுதா வானம்பாடி பொங்கல் வாழ்த்துக்கள்//
நன்றிங்க தேனம்மை. உங்களுக்கும் என் பொங்கல் வாழ்த்துகள்.
கிடைச்சா, எனக்கும் ஒரு காபி.....
சொல்லிட்டிங்கள்ள, எப்படியும் நம்ம மக்கள் கொண்டு வந்து சேர்த்துருவாங்க சார்.
எனக்கு தெரிஞ்சு இல்லங்க..., முயற்சி பண்றேன்...
அண்ணே! கொஞ்ச நாள் சுற்றுப்பயணத்துல இருந்தேன். அதான் வரமுடியல.
அப்படி என்ன தான் இருக்கு அந்த பாகவதர் பாட்டுல??? எதுக்கும் மியூசிக் இன்டியா ஆன்லைனுக்கு ஒரு மெயில் அனுப்பி கேட்டுப்பாருங்களேன்!!!
சாரி சார் உங்கள் தேடலுக்கு எப்பவும் பயன் கிடைத்தே தீரும் .....
தைத்திருநாள் வாழ்த்துக்கள்..
அடேடே இவ்வளவு பெரிய ரசிகரா..? நல்லது சீக்கிரமே கிடைக்கட்டும்.
எனக்குக் கூட கிடைக்காத பாடல் ஒன்று உண்டு... V V சடகோபன் பாடிய எந்த வேடுகோ ஓ.. ராகவா என்கிற சரஸ்வதி மனோஹரிப் பாடல்.
பாடல் பதிவு பண்ண சேலம் ஈரோடு னு சொன்னீங்க...இந்த விஷயத்துல மதுரைக் காரங்க ரசனைக் காரங்க..வித்தியாச வித்யாசமா கலக்ட் பண்ணி வச்சிருப்பாங்க...
அருமை,
ஒன்று தெரியுமா, இது போன்ற "பைத்தியங்கள்" நிறைய உண்டுதான்.
கவலை வேண்டாம். கீழ்கண்ட இணைப்பில் தேடிப்பார்க்கவும்.
மிகப்பழைய திரைப்பட பாடல்கள் மற்றும் நம் நாட்டு மரபு வழி இசை என எல்லா இந்திய மொழிகளிலும்
கொட்டிக்கிடக்கிறது.நேரம் காணாவில்லை தேடிப்பார்க்க.
வெளியில் கிடைக்காத பல அறிய பொக்கிஷங்களை நான் இந்த இணைப்பில் சென்று வாரிக்கொண்டு வந்து
என் வட்டத்தில் உள்ளவர்களுக்கு தந்துள்ளேன். முயற்சி செய்யவும்.
music.cooltoad.com
'பழைய பாடல்களுக்கு சொர்க்க பூமி ஈரோடு மற்றும் சேலம்'. எங்க ஊரு பேர(ஈரோடு) சொல்லும் போது சந்தோஷமாதான் இருக்குது. இன்னும் சொல்லப்போனா பழைய சினிமா பாடல்கள் பதிவு செய்ய ஈரோட்ட விட ஈரோடு பக்கத்தில இருகிற பவானி தான் (ஆர்.எஸ்.பி. சவுண்ட் சிஸ்டம்) பெஸ்ட். ஆனா இப்போ அங்கயும் கால மாற்றத்தின் தாக்குதல் ஏற்பட்டுடிச்சுன்னு நினைக்கிறேன். நான் போயும் பல வருஷங்கள் ஆகிடுச்சு. ரெண்டாவது நீங்க கேட்கிற பழைய கர்நாடக சங்கீத இசைக் கோர்வை இங்க கிடைக்குமான்னு சந்தேகம் தான், இருந்தாலும் விசாரிச்சு பார்க்கிறேன்.
ஆரூரன் விசுவநாதன் said...
/கிடைச்சா, எனக்கும் ஒரு காபி...../
கண்டிப்பாக ஆரூரன்
S.A. நவாஸுதீன் said...
/சொல்லிட்டிங்கள்ள, எப்படியும் நம்ம மக்கள் கொண்டு வந்து சேர்த்துருவாங்க சார்.//
அந்த நம்பிக்கை இன்னும் வலுவாயிருக்கு நவாஸ். நன்றி.
பேநா மூடி said...
எனக்கு தெரிஞ்சு இல்லங்க..., முயற்சி பண்றேன்...//
நன்றி
இப்படிக்கு நிஜாம்.., said...
// அண்ணே! கொஞ்ச நாள் சுற்றுப்பயணத்துல இருந்தேன். அதான் வரமுடியல.//
ஆஹா! அதானா இடுகையும் காணோம்.
//அப்படி என்ன தான் இருக்கு அந்த பாகவதர் பாட்டுல??? எதுக்கும் மியூசிக் இன்டியா ஆன்லைனுக்கு ஒரு மெயில் அனுப்பி கேட்டுப்பாருங்களேன்!!!//
இது பாகவதர் பாட்டில்லை. அங்கல்லாம் முயற்சி பண்ணீட்டேன் நிஜாம்.
Balavasakan said...
சாரி சார் உங்கள் தேடலுக்கு எப்பவும் பயன் கிடைத்தே தீரும் .....
தைத்திருநாள் வாழ்த்துக்கள்//
நன்றி. உனக்கும் வாழ்த்துகள் வாசு
ஸ்ரீராம். said...
அடேடே இவ்வளவு பெரிய ரசிகரா..? நல்லது சீக்கிரமே கிடைக்கட்டும்.
எனக்குக் கூட கிடைக்காத பாடல் ஒன்று உண்டு... V V சடகோபன் பாடிய எந்த வேடுகோ ஓ.. ராகவா என்கிற சரஸ்வதி மனோஹரிப் பாடல்.
பாடல் பதிவு பண்ண சேலம் ஈரோடு னு சொன்னீங்க...இந்த விஷயத்துல மதுரைக் காரங்க ரசனைக் காரங்க..வித்தியாச வித்யாசமா கலக்ட் பண்ணி வச்சிருப்பாங்க...//
உங்க பாட்டு இருக்கு ஸ்ரீராம். :)) லிங்க் போடுறேன்.
கக்கு - மாணிக்கம் said...
அருமை,
ஒன்று தெரியுமா, இது போன்ற "பைத்தியங்கள்" நிறைய உண்டுதான்.
கவலை வேண்டாம். கீழ்கண்ட இணைப்பில் தேடிப்பார்க்கவும்.
மிகப்பழைய திரைப்பட பாடல்கள் மற்றும் நம் நாட்டு மரபு வழி இசை என எல்லா இந்திய மொழிகளிலும்
கொட்டிக்கிடக்கிறது.நேரம் காணாவில்லை தேடிப்பார்க்க.
வெளியில் கிடைக்காத பல அறிய பொக்கிஷங்களை நான் இந்த இணைப்பில் சென்று வாரிக்கொண்டு வந்து
என் வட்டத்தில் உள்ளவர்களுக்கு தந்துள்ளேன். முயற்சி செய்யவும்.
music.cooltoad.com//
முதல் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிங்க. அங்கையும் அடிக்கடி பார்க்கிறது தாங்க. இல்லை.
ஜீயெஸ்கே said...
'பழைய பாடல்களுக்கு சொர்க்க பூமி ஈரோடு மற்றும் சேலம்'. எங்க ஊரு பேர(ஈரோடு) சொல்லும் போது சந்தோஷமாதான் இருக்குது. இன்னும் சொல்லப்போனா பழைய சினிமா பாடல்கள் பதிவு செய்ய ஈரோட்ட விட ஈரோடு பக்கத்தில இருகிற பவானி தான் (ஆர்.எஸ்.பி. சவுண்ட் சிஸ்டம்) பெஸ்ட். ஆனா இப்போ அங்கயும் கால மாற்றத்தின் தாக்குதல் ஏற்பட்டுடிச்சுன்னு நினைக்கிறேன். நான் போயும் பல வருஷங்கள் ஆகிடுச்சு. ரெண்டாவது நீங்க கேட்கிற பழைய கர்நாடக சங்கீத இசைக் கோர்வை இங்க கிடைக்குமான்னு சந்தேகம் தான், இருந்தாலும் விசாரிச்சு பார்க்கிறேன்.//
நன்றி ஜீயெஸ்கே.
இன்னொரு பாடல் கூட கிடைக்காத லிஸ்ட்டில்...
B V ராமன், B V லஷ்மணன் பாடிய 'மன்னுபுகழ் கோசலை தன் மணி வயிறு வாய்த்தவனே...' பாடல். உங்களிடம் இருந்தாலும் தரவும்..
Post a Comment