Showing posts with label மஹா மொக்கை. Show all posts
Showing posts with label மஹா மொக்கை. Show all posts

Saturday, July 9, 2011

ஒரு எதிர் கவுஜயும் பொழிப்புரையும்.

கதிரின் 'உயிருக்குள் ஊட்டுவது’ கவிதையின் எதிர் கவுஜயும், பொழிப்புரையும்

எதிர் கவுஜ:
குடலுக்குள் ஊத்துவது

வெள்ளை க்ளாஸ் விளிம்பில்
அடங்காமல் பொங்கும் நுரையை
கழுத்தைச் சற்றே சாய்த்து நிறுத்தி
என் நாசி தேடும் பீர் வாசக்காற்றும்

என்னுள் வேர்விட்டு கிளை பரப்பி
சொட்டுச் சொட்டாய் நினைவு திருடி
வெண்ணுரையோடு என் சட்டையில்
அடர்த்தியாய் பூத்த சால்னாக் கரையும்

கண் சிமிட்டி சிமிட்டி
உதடுகளைச் சுழித்துப் பிசைந்து
காது வழியே கரைத்து ஊற்றும்
வசவுக் குளறல்களும்

என்னிடமிருந்து எனைப் பறித்து
விடை பெறும் தருணங்களில்
வலிக்காமல் அங்கங்கே உறைந்த
ரத்த காயங்களும் சிராய்ப்பும்

என்னுள் தளும்பும் சொற்கள் ஏராளம்
இருந்தும் எதுவும் முழுதாய் வரவில்லை
உள்ளுக்குள் போனது நீ என்பதாலும்
ஏத்திக் கொண்டது நான் என்பதாலும்.
---------------------------------------------------------------------------------

மூலக் கவிதையின் பொழிப்புரை.

(வெள்ளி தலைக் குளியலில்) - ஒன்னு ரெண்டு நரைக்கு டை அடிக்கப் போய் மொத்தமா வெளுத்து போச்சு. அதுக்கு நக்கல பாரு இந்த கொண்டை மண்டைக்கு.

(அடங்காமல் பறக்கும் முடியை கழுத்தோரம் காதோரம் கடத்திவிட்டு)
கொஞ்சம் வெயில்ல தலைய ஆத்த உடுறாய்ங்களா, பார்வை அப்புடி. வேற என்ன பண்ண?

(என் நாசிதேடும் உன் வாசக்காற்றும்)
கருமம் கருமம். இதுக்கு ஷாம்பூ வாசனை கூட தெரியல.

(என்னுள் வேர்விட்டு கிளைபரப்பி)
ம்கும். இவரு நட்டு வச்சி ஒரம் போட்டு தண்ணி ஊத்துனாரு

(சொட்டுச்சொட்டாய் உயிர்திருடி)
அட பக்கி. சரக்குன்னா உயிராம். இத நாங்க சொட்டு சொட்டா வேற திருடிட்டமாம்.

(வெண்வரிகளோடு)
ஜொல்லு ஊத்தறத சொல்ற ஸ்டைலப் பாரு

(உன் புடவையில் அடர்த்தியாய்ப் பூத்த செம்பருத்திப்பூக்களும்)
அட சாளேஸ்வரக் கண்ணா. கோவிலுக்கு போக செம்பருத்தி பறிச்சி முந்தானைல வச்சிருந்தா பொடவைல செம்பருத்தி பூக்குதாம்ல.

(கண் சிமிட்டிச் சிமிட்டி)
கண்ணு தொறக்க முடியாம மப்பு

(உதடுகளைச் சுழித்துப்பிசைந்து)
உள்ள போன சரக்கு அப்புடி

(காதுவழியே கரைத்து ஊற்றும் வார்த்தைக் கவிதைகளும்)
கண்றாவி கொழ கொழன்னு குழறி பேசுறதுக்கு பேரு கவிதையாம்.

(என்னிடமிருந்து என்னைப்பறித்து விடைபெறும் தருணங்களில்)
ரெண்டாளா இருந்தாராம். தெளிஞ்சிருச்சாம்

(வலிக்காமல் செல்லமாய்க் கிள்ளும்)
கன்னத்த கொத்தா புடிச்சி ரப்பர் வாயி மாதிரி இழுத்துட்டு போனத சொல்றாரு. வலிக்கலையாம். பெரிய வடிவேலு

(நகத்தில் பிறக்கும் பிறைவடிவமும்)
அடப்பாவி!! ஆணில உராசி கிழிஞ்சி போச்சுன்னு அரசு ஆஸ்பத்திரில தையல் போட்டது எனக்கில்ல தெரியும்.

(என்னுள் தளும்பும் சொற்கள் ஏராளம்)
ஆடாம ஸ்டெடியா நில்லுங்ணா. தளும்பாம இருக்கும்.

(இருந்தும் எதுவும் அலுக்கவில்லை)
ஊத்திக்கினு உருளாதவன் எங்கருக்கான்? (சண்டைல கிழியாத சட்டை மாதிரி)

(உயிருக்குள் ஊட்டுவது நீ என்பதாலும்)
திமிரப்பாரு. வெறும் வகுத்தோட கெடந்தா அல்சர் வருமேன்னு சோறு ஊட்டுனது தப்புடியோ.

(ஏந்திக்கொள்வது நான் என்பதாலும்)
இதுக்குதான் வெளியவே குந்த வச்சி தட்டுல போட்டு குடுக்கறது.

Thursday, May 20, 2010

பி.ப. பிரபா பேட்டி எடுக்கிறார்..

பிரபல பதிவர் பிரபாகர் பத்து நாள் ஆணி புடுங்கும் வேலையில்லாததால் மன்னார் பத்திரிகையில் ஃப்ரீலான்ஸ் நிருபராகிறார். அவரின் பேட்டியிலிருந்து சில பகுதிகள்: (அதெப்புடி உன்கிட்டன்னு கேக்காதீங்க. நித்தியானந்தா விசாரணை வீடியோவே லீக்காவுது. ஜுஜுபி ஸ்னேக் பிரபா எம்மாத்திரம்?)

ட்ரீங்ங்ங் ட்ரீங்ங்ங்

கதிர்
: அல்லோ

பிரவு: வணக்கம் கதிர்

கதிர்:(அவ்வ்வ்வ். ஃபோன்ல ஏன் இன்வி மோட் இல்ல?) வணக்கம் பிரபா. எங்க இருக்கீங்க? என்ன மேட்டர் இவ்வளவு காலீல ஃபோன்?

பிரவு
:(எட்டுமணிக்கு மேல போன் பண்ணா பிஸி ஆன் த அதர்ஃபோன்னு டயல்டோன் வரும்னு தெரியும்டி). ஷ்ஷ்ஷ். நான் நிருபர். நாந்தான் கேள்வி கேப்பேன் நீங்க பதில் மட்டும்தான் சொல்லணும். சரியா?

கதிர்: கேளுங்க

பிரவு: ஆமா ஊர் நாயத்தயெல்லாம் இழுத்து விட்டு பக்கம் பக்கமா இடுகை எழுதிட்டு மௌனமாக கடந்து போகிறேன்னு போட்டா எப்புடி?

கதிர்:(அடங்கொன்னியா! பயபுள்ள மொத பாலே பவுன்ஸரா போட்டுட்டானே) வேற என்ன பண்ண முடியும் சொல்லுங்க பிரபா. இந்த அக்குரும்பெல்லாம் பார்க்கிறப்ப மனதில் அடர் இருள் சூழ்கிறது.

பிரவு: அது அது! அப்பப்ப இந்த ட்ரேட் மார்க் அடர் இருள் சூழ்கிறது, கனத்த மனதுடன், கஸ்ஸ்ஸியும் இதெல்லாம் எங்க இருந்து புடிச்சீங்க. பெரியாருக்கு வெங்காயம் மாதிரி உங்களுக்கு இதா?

கதிர்:(பய புள்ள ஒரு மார்க்கமாத்தான் வந்திருக்கான்! கதிரு! வேற வழியில்லை! உன் டெக்கினிக்க யூஸ் பண்ணி எஸ்ஸாயிரு.) அல்லோ பிரபா. ஒரு நிமிஷம். செந்தில் லைன்ல வராபடி. கான்ஃபரன்ஸ் போட்டு விட்றேன், சரியா?

பிரவு: ஓக்கே கதிர். வணக்கம் செந்தில்

செந்தில்: வணக்கம் பிரபா. நல்லாருக்கீங்களா?

பிரவு: நன்றாயிருக்கிறேன் நண்பா. நான் இப்போது ஒரு நிருபராக உங்களுடன் பேசுகிறேன். குஷ்புவை கட்சியில் கலைஞர் சேர்த்துக் கொண்டது பற்றி உங்கள் கருத்தென்ன?

செந்தில்:(அடியே! என்கிட்டயேவா?நான் இந்த வில்லங்கம் புடிச்சதெல்லாம் எழுதமாட்டேன்னு தெரிஞ்சுமா கேக்குறீரு கேள்வி?) அது வந்து நண்பா! கலைஞருக்கு வயதாகிவிட்டது. குஷ்பூ இட்டிலியில் சோடா மாவு சேர்ப்பதாக அறிகிறேன். இந்த வயதான காலத்தில் அது உடல் நலத்துக்கு நல்லதல்ல..

பிரவு: (யப்பா! கழுவுற மீன்ல நழுவுற மீனுன்னு கேள்வி பட்டிருக்கேன். இவரு அதையும் மிஞ்சிட்டாரு போலயே.) அதில்லை நண்பா..

செந்தில்
: இருங்க பிரபா. பழமையண்ணன் கூப்புடுறாங்க. ஒரு நிமிஷம்...(பாலாண்ணே. அன்னைக்கு கதிரோட வண்டவாளத்த போட்டு குடுத்ததுக்கு நன்றிண்ணே..ஹி ஹி..)

பிரவு:
(கைமாத்துற டெக்கினிக்க கண்டு புடிச்சதே நம்மூரு ஆளுங்கன்னா பய புள்ளைங்க அதுல டாக்டர் பட்டமே வாங்குவாங்க போலயே..அல்லோ..வணக்கங்க பழமை..ம்ம்ம்ம். எவ்வளவு நாளாச்சி பேசி..

பழமை: சொல்லுங் பிரபா. நல்லாருக்கீங்களா? எதிர்பாராம உங்க கூட பேச முடிஞ்சது நெம்ப நல்ல விஷயம். மகிழ்ச்சி.

செந்தில்: (இஃகி இஃகி..மகிழ்ச்சியாம்ல. அண்ணன் நிருபர்னு தெரியாம வாய குடுத்து மாட்டிக்கிட்டாரு..செந்திலு..கம்முன்னு மூச்சு உடாம என்சாய்..)

பிரபா: எனக்கும் மிக்க மகிழ்ச்சிங்க பழமை. நான் ஃப்ரீலான்ஸ் நிருபரா செந்தில்கிட்ட கேட்டுட்டிருந்தேன். நீங்க வந்ததும் உங்க கிட்ட பேச முடிஞ்சது.

பழமை: அதுக்கென்ன பிரபா. கேளுங்க

கதிர்:(மாப்பு! அதெப்புடி இம்புட்டு தகிரியமா பதில் சொல்றாமாதிரியே போசு?)

பிரவு: எனக்கு ஒரு டவுட்டுங்க நண்பா! இப்பல்லாம் அப்புச்சிகூட பேசறதே இல்லையே! பணிச்சுமையினால் தூக்கமின்மையா அல்லது தூங்க விடாம பெருசு டார்ச்சர் பண்ணுதுன்னு முதியோர் இல்லத்துல சேர்த்துவுட்டீங்களா?

பழமை: சரிங்க பிரபா. நான் அட்லாண்டா விமான நிலையத்துல இருந்து பேசினேன். விமானத்தில் ஏற அழைப்பு வந்துவிட்டது. போய் இறங்கிட்டு கூப்பிடுறேன். ஆ ஆ.

பிரபா: சரிங்க நண்பா. அல்லோ அல்லோ. என்னாது அமெரிக்கா ஃபோன்ல கூட க்ராஸ்டாக் வருது? அல்லோ யாருங்க

பெண்குரல்: அல்லோ. நீங்க அல்லோன்னு  யாருங்கன்னு கேட்டா எப்புடி? கண்ட நம்பருக்கு அடிச்சிட்டு யாரு பேசறதுன்னு க்ரைண்டர் சுத்தற வேலை வேணாம். ஒழுங்கு மரியாதையா யாருன்னு சொல்லுங்க. இல்லன்னா திருப்பாச்சி பேசும்.

பிரவு: அடியாத்தீ. க்ரைண்டர். திருப்பாச்சி. சகோ! வளவளத்தா சாரி சித்ரா சகோதானே! ஆஹா! என்ன ஒரு அதிர்ஷ்டம். நாந்தாங்க ஸ்னேக் பிரபா! பழமைகிட்ட பேசிட்டிருந்தனா. க்ராஸ் டாக்குல நீங்க வந்தீங்க. நான் நிருபரா பேட்டி எடுத்திட்டிருக்கேன். உங்க கிட்டயும் ஒரு கேள்வி கேக்கலாமா?

சித்ரா
: ஹா ஹா ஹா. கேளுங்க கேளுங்க! கேட்டுக்கிட்டேயிருங்க. நாங்க வெட்டிப் பேச்சும் பேசுவோம்! வெட்டிப் போட்டும் பேசுவோம்ல. ஸ்டார்ட் மீஜிக்

பிரவு: இல்லைங்க சகோ! பின்னூட்டம் போடுறதில உங்களுக்கு சீனியர் நானு. கட் அண்ட் பேஸ்ட் பின்னூட்டத்தில பதிவுலகுக்கே முன்னோடி நம்ம இளவல் பாலாசி. நீங்க ஒரே போடா ராண்டமா செலெக்ட் பண்ணி பேஸ்ட் பண்ணி  ha ha haa. hilarious,funnyனே போட்டு பின்றிங்களே எப்புடி?

சித்ரா: அதுவா. கொஞ்சம் இருங்க. சாலமனுக்கு சாக்லேட் கலந்து கொடுத்துட்டு வரேன்.

பிரவு
: ஏங்க! கார்ட்ல பண்றேன். அப்படியே நம்ம தினேஷுக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணி விடுங்க ப்ளீஸ். இல்லைன்னா கான்ஃபரன்ஸ் போட்டாவது எஸ்ஸாயிக்கிங்க அவ்வ்வ்...

தினேஷ்
: அல்லோ. தினேஷ் ஹியர்! என்னங்க சித்ரா?

சித்ரா:(ம்கும்! பதில் சொல்ல நான் லூசா! )

பிரவு: அல்லோ அல்லோ. நாந்தான் சகா!

தினேஷ்: ஹை! சகா! இன்னைக்கு யாரு காலி?

பிரவு:ஹா ஹா ஹா (பிரவு! எப்புடிய்யா எப்புடி?) இல்ல சகா! நான் இப்போ ஃப்ரீலான்ஸ் ரிபோர்டரா உங்க கிட்ட பேசறேன். ஒரு பேட்டி. நம்ம கலைஞர் இருக்காரே..

தினேஷ்:(ஆஹா! நாம ஊருக்கு வரோம்னு தெரிஞ்சும் இப்புடி போட்டு குடுக்க பாக்கறாரே இந்தாளு) அது வந்து சகா, முகிலனுக்கு மூச்சா வருதாம். நான் ஊருக்கு வரும் போது சிங்கை வந்து காதுக்குள்ள சொல்றேன் சரியா..மீ த எஸ்கேப்பு..

பிரவு:(பிரவு! இந்த ஒத்த கேள்விய வெச்சே எத்தன பேர சாச்சுப்புட்ட. வுடாத ஸேம் ப்ளட்ட புடி..ட்ரிங் ட்ரிங்)

ஷங்கர்: ஹல்லோ!

பிரவு: நாந்தான் சேம் ப்ளட்.

ஷங்கர்: கண்மூடி கால் சம்மணமிட்டு நாவல் மரத்தடியில் அமர்ந்து புருவம் நோக்கி கண்குவித்து சிந்தை ஒருமித்து அஸ்தராய பட்..ipod, விண்கலம், வெங்கலம். வெண்ணெய்..

பிரவு: போச்சிடா! சாமி வந்திருச்சி. இப்போதைக்கு பேசாது. செல்லும் செல்லாததுக்கு செட்டியார கேளுன்னு பழமொழி இருக்கே. மணி ஒன்னாவுது. இன்னேரம் ஆந்தை மாதிரி ஆசாந்தான் சிக்குவாரு. போட்டு தள்ளிறலாமா? ஆசான் வணக்கம்.

வானம்பாடிகள்: வணக்கம் பிரபா.

பிரவு: ஒரு நிமிடம் அழைக்கலாமா?

வானம்பாடிகள்: ப்ரியாட்ட பேசிட்டிருக்கேன் பிரபா.

பிரவு: அட தங்கச்சி இன்வியா. பஸ்ஸுங்களாய்யா.

வானம்பாடிகள்: ஆமாம்.

பிரவு: (ஒரே கல்லுல ரெண்டு தல சை மாங்கா) தோ வந்துட்டேன். வணக்கம் ஆசான். வணக்கம் சகோ.

கலகலப்ரியா: வாங்கண்ணா!

பிரவு
: ஒரே ஆணி சகோ! இப்போ அண்ணன் ஃப்ரீலான்ஸ் ரிபோர்டர் சகோ!

கலகலா
: அப்படின்னா ஓசில வேல பாக்குறதாண்ணா?

பிரவு: தங்கச்சிக்கு எல்லாம் ஜோக்குதான். உங்க ரெண்டு பேருக்கும் ஒரே கேள்வி. பதில் சொல்லுங்க. இந்த கலைஞர் கட்சில குஷ்பு சேர்ந்தத பத்தி என்ன நினைக்கிறீங்க?

கலகலா: (புதியபறவை சரோஜாதேவி மாதிரி விவேக் பேசினா மாதிரி படிங்க மக்கா) அய்யோ அண்ணா! என்னைப் பார்த்தா இந்த கேள்வி கேட்டீர்கள் அண்ணா? ஏன் அண்ணா ஏன்? குஷ்புவே கலைஞர்தானேயண்ணா? அல்லது கலைஞரே குஷ்புவா? எனக்கு குஷ்புவைத் தெரியாதே அண்ணா? கூடையிலே என்ன பூ என்றாலே சொல்லத் தெரியாதே அண்ணா சொல்லத் தெரியாதே!

பிரவு: அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..த்த்த்த்தங்க்ச்சீ! தப்புதான் தங்கச்சி தப்புதான்.

வானம்பாடி: அடச்சை! நிறுத்துறிங்களா என்னா? என்ன சேட்டை இது?

பிரவு: ஆ! சேட்டை! என் உயிர் நண்பா! உன்னை எப்படி மறந்து போனேன். அய்யகோ! அய்யா ஒரே நிமிசங்கையா. அவசரமா ஒரு ஆணி அய்யா.

வானம்பாடி
: இப்போ யாரு மீ த எஸ்கேப்பு சொன்னது? ஏம்மா நீயா? வானம்பாடி நீயா? பிரவு நீயா?

சேட்டை: அல்லோ! சொல்லுங்க நண்பா! என்ன விஷயம்?

பிரவு: இல்ல சேட்டை! ஒரு கேள்விக்கு விடை வேணும். உடனே உங்க கவனம்தான் வந்திச்சி. கேள்வியும் நானே பதிலும் நானேக்கு உங்கள விட்டா வேறயாரு நண்பா?

இந்த கலைஞர் எப்படி நண்பா குஷ்புவ கட்சில சேர்த்தாரு?

சேட்டை: அது நண்பா! கலைஞர் கில்லாடி நண்பா. உலகத்துலயே முகம் மறந்து போனாலும் முதுக வெச்சே கண்டுபிடிக்க முடியர ஒரே ஆள் நம்ம குஷ்புதான். கட்சிக்கு வாக்கு சேர்க்க மேடையில பேசமுடியாம இருக்கலாம். ஆனா அந்த முதுகுல உங்கள் ஓட்டு உதய சூரியனுக்கேன்னு எட்டு மைல் தூரத்துல இருந்தும் பார்த்தா தெரியரா மாதிரி எழுத முடியும்.

தேர்தல் அன்னைக்கு சூரியன் ஜன்னல் வெச்சி ஜாக்கட் போட்டுகிட்டு கேக்காமலே ஓட்டு கேக்க முடியும். கலைஞரா கொக்கா! சரிதானே நண்பா?

பிரவு: இடுக்கண் வருங்கால் சை உடுக்கை இழந்தவன்..என்பது மிக்க சரி நண்பா! இந்த ஒரு கேள்வி கேட்டா அது அதுங்க என்னமோ வேதாளம் விக்கிரமாதித்தன கேட்ட கேள்வி மாதிரி கான்ஃபரன்ஸ் போட்டு எஸ்ஸாரதும்..காபி போட போறேன்னு எஸ்ஸாரதும்..மிக்க நன்றி நண்பா! இத வெச்சி இடுகை சை பேட்டி தேத்திடுவேன். வர்ட்டா.
~~~~~~~~~~~~~~~~~~~~

Friday, April 16, 2010

பதிவர் தத்துவம்ஸ்...

டிஸ்கி: (ரண்டு நாளா ஒரே அழுவாச்சி. வீக் எண்ட்ல எதுக்கு மூட கெடுக்கணும்னு இந்த மொக்கை. ஒவ்வொருத்தரு வலைப்பூவிலயும் என்னா தத்துவம்டா சாமீ!)

பழமைபேசி:/எப்பேர்ப்பட்ட வனத்துல போயி மேஞ்சாலும், கடைசியா இனத்துல போயித்தான் அடையணும்!/

என்னதான்  இரவிரவா வலைமேஞ்சாலும் நித்திரைக்கு போறப்ப ஜிமெயில்ல ஏதாச்சும் பின்னூட்டமிருக்கானு பார்த்து அவுத்துவுட்டுதான் தூங்கணும்.

மணிஜீ: /நானும் கொஞ்சம் பேசுகிறேன்..../

தாடிக்குள்ள வாயசையறது தெரியமாட்டங்குதாங்ணா.

பின்னோக்கி: /பின்னோக்கி பார்ப்பது தவறல்ல. அது முன்னோக்கி நடக்கும் போது தவறு களைய உதவும்/

பின்னாடி பார்த்துக்கிட்டே போய் ஒரு வாட்டி மேன்ஹோல்ல விழுந்தப்புறம் திரும்ப அந்த தப்பு நடக்குமா? எப்புடீஈஈஈ

ஸ்நேக் பிரபா: /பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட, வாழும் சில நாட்களில் இன்பத்தையும் துன்பத்தையும் கலந்து சந்தித்தாலும், துன்பத்தை மறந்து இன்பத்தை மட்டும் நினைந்து நல்ல இதயங்களை சேர்த்து, சேர்ந்து வாழ்வோமே!.... பிரபாகர்./

ங்கொய்யால. வரும்போதே க்ரூப் சேர்க்கறதுங்கற தீர்மானத்தோடதான் வந்தீரோ?

பலாபட்டறை ஷங்கர்: /பலா என்றால் இனிப்பு. பட்டறை என்றால் பட்டறைதான் - விளக்கம் = ஷங்கர் (நாந்தான்). /

விளக்கத்துக்கே விளக்கம் அடைப்புக்குள்ளயாம்யாம்யா

கதிர் ஈரோடு: /நகரத்து மண்ணில் பாய்ந்த கிராமத்து வேர்/

ஓஹோ. கட்டைன்னும் சொல்லலாம் மரம்னும் சொல்லலாம். நகரத்துல இருக்கிறப்ப காதல் கவுஜ கிராமத்து பக்கம் போனா மரம் வளர்க்கற இடுகை. என்னா வில்லத்தனம்டா ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸாமீ

பாலாசி: /சொல்லும் அளவிற்கு அறியப்படவில்லை./

தபார்ரா. உள்ளூரு ஓணான் இல்லாம அசலூரு ஆந்தையெல்லாம் அலறுதாம் பாலாசி வாரான் கட் அண்ட் பேஸ்ட் போடன்னு ரவுசப்பாரு.

நசரேயன்: /தமிழுக்காக தடி எடுப்பதை விட்டு விட்டு தமிழில் தட்டு/

ம்கும். துண்டு போடத் தெரியலைன்னாலும் இடுகை போடுறதுல என்னா உசாரு! தப்பெழுதுவியான்னு முட்டிய தட்டுவாங்கன்னு தடிய எடுக்க கூடாதாம்.

ஜெட்லி & கோ: /நாம் அன்றாடம் வாழ்வில் பார்த்து, படித்து, கேட்டு ரசித்தவற்றை இங்கே பகிர்வோமாக./

பாக்குறவரு ஜெட்லி, படிக்கிறவரு சாரு சங்கர், கேட்டு சொல்றவர் சித்துவா?

சேட்டைக்காரன்: /ஏன்? பெயர்,வயசு,ஊரு எல்லாம் சொன்னாத்தான் படிப்பீங்களாக்கும்?/

இப்புடி போட்டா மட்டும் சொல்லுன்னு கேட்றுவமாக்கும்.

துபாய் ராஜா: /இங்கு எல்லோருக்கும் இடம் உண்டு./

ஃபாலோயர் விட்ஜட்ட காணோமாம். இப்புடி போட்டா சரியா போச்சா?

செந்தில்வேலன்: /இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று../

ஊறுகா போடணும்னா கனி உதவாதே! ஒதைக்கிற மாட்ட ஊசி போட்டுதானே கறந்தாவணும்.

சூர்யா கண்ணன்: /இப்பொழுது "கம்ப்யூட்டர்" விற்றுக் கொண்டிருக்கிறேன், அவ்வப்பொழுது கீரையும் கூட..,/

கம்ப்யூட்டர் புரியாத மண்டையில கீரையாவது வளத்துக்கன்னா பாஸ்?

கார்த்திகைப் பாண்டியன்: /மதுரைக்காரன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை அண்ணே.../

இதத்தான் பொட்ட்டு வாஆஆங்கறதுன்னு பார்த்திபன் அண்ணா சொல்லிக் குடுத்துட்டாருல்ல. சிக்கமாட்டம்டியேய்.

நைஜீரியா ராகவன்: /நானும் ஒரு கார் வச்சுருக்கேன் சொல்றதில்லீங்களா.. அது மாதிரிதான் இதுவும்.. நானும் ஒரு வலைப்பதிவு வச்சுருக்கேன்னு சொல்றதுக்காக ஒன்னு (ஆ)ரம்பிச்சுட்டேன்../

கார்னாலும் சரி பதிவுன்னாலும் சரி வாரம் ஒரு வாட்டி ஸ்டார்ட் பண்ணி ஒரு ரவுண்ட் வரணும்னே. 

கலகலப்ரியா: /பாரதியின் பரம விசிறி, "ரௌத்ரம்" மட்டும் பழகிக் கொண்டிருக்கும் பயங்கரவாதி!/

ஹி ஹி! இதப்போய் நீ கரப்பான் பூச்சிகிட்ட சொல்லி மிரட்ட, அது பதிலுக்கு மீசைய ஆட்டி உன்னைய வெறுப்பேத்தி டுர்ர்ருன்னு பறந்து வந்து உன் மூக்குமேல உக்காந்துச்சின்னு வைய்யீ..ஹய்ய்ய்ய்யோஓஓஓஓஓஓ ஹைய்ய்யோ

வானம்பாடிகள்: /தினசரி வாழ்க்கையின் அவசரங்களுக்கு நடுவேயும் என்னை பாதித்த, பாதிக்கும் சில நிகழ்வுகள்/

உன் ‘அவசரத்துக்கு’ நடுவில இந்த மொக்க உன்ன எப்புடி பாதிச்சிது சொல்றா வானம்பாடி.

~~~~~~~~~~~~~~~~

Friday, March 26, 2010

கலாய்க்கப்போவது யாரு லாஸ்ட்

ஓஜாரே ஒஜா. ரே..ரே..ஓஜா.

பொன்னாத்தா; வெல்கம் பேக் டு கலாய்க்கப் போவது யாரு. நிகழ்ச்சிக்குள்ள போறதுக்கு முன்னாடி நம்ம செறப்பு விருந்தினர கொஞ்சம் கலாய்க்கலாம். என்ன சார்? நிகழ்ச்சிய பத்தி என்ன நினைக்கிறீங்க?

அதுசரி: wot da bloody hell. யாருங்க தயாரிப்பாளர்? இப்படி சூட்டுல பொறிச்ச மீன் மாதிரி உக்கார வச்சிருக்கீங்க. அட்லீஸ்ட் ஒரு கோல்ட் பீராவது தரணும்னு தெரியாது?

பொன்னாத்தா: கருப்பு சாம்பார் ஒரு க்ளாஸ் குடிக்கிறீங்களா ராசா?

அதுசரி: அதுக்கு நான் விஷமே குடிச்சிப்பேன்.

பொன்னாத்தா:அது சரி அதுசரி. வரும்போதே பார்த்தேன். அந்த ஜோல்னா பை. வந்தும் அத இறக்கி வைக்காம அப்புடியே வெச்சிருக்கீங்களே. அதுக்குள்ள என்ன இருக்கு?

அதுசரி:  :O)))

பொன்னாத்தா: யோவ்! கேட்டா பதில் சொல்லுமைய்யா. சின்னப்புள்ள மாதிரி பீப்பீ ஊதிக்கிட்டு.

அதுசரி: அது சொல்ல முடியாது. தாளம் எப்படி சொல்லுதோ அப்படி. நீங்க இந்த எழவ முடியுங்க மேடம். இப்பவே என் ஷூ கழல ஆரம்பிக்குது:))

பொன்னாத்தா: அடுத்ததாக கலாய்க்க போறவரு அமெரிக்கால ஆணிபுடுங்க போனாலும், மதுரையில மல்லாட்ட வறுத்தவரு, பாண்டியரு..தினேஷ்..

ஓஜாரே ஓஜா..ரே..ரே..ஓஜா..

பொன்னாத்தா: வாங்க தினேஷ். இன்னைக்கு என்ன கான்ஸெப்ட் பண்ணப்போறீங்க.

தினேஷ்: மிரள மிரள பார்த்தபடி வந்து வந்து..தங்கமணிகாமெடிங்க.

பொன்னாத்தா: என்னது? தங்கமணி காமெடியா?

தினேஷ்: ஏங்க ஏங்க கத்துறீங்க. ஆமாங்க.

பொன்னாத்தா: சரி அசத்துங்க தினேஷ்.

தினேஷ்: முந்தின எபிசோட்ல தங்கமணி ரெயின்செக்ல ஒரு போன் பார்த்தாங்கன்னு சொன்னென்லங்க. அப்புறம் அத பத்தி பேச்சே இல்ல. நானும் மறந்துட்டான்னு எடுத்த வெச்ச கேஷ ஷேர்மார்கட்ல போட்டுட்டு கமுக்கமா இருந்தன். ஒரு நாள் ஆஃபீஸ்ல வழக்கத்த விட அதிகமா ஆணிபுடுங்க வேண்டியிருந்திச்சி.

(வா.பா:ம்கும். பிரபா கூட தொடர் இடுகை பத்தி சாட் பண்ணிட்டு அலம்பல பாரு)

தினேஷ்: அவர குறுக்க பேசாம இருக்க சொல்லுங்க மேடம்.

பொன்னாத்தா: அல்லோ! அப்புறம் புடிச்சிட்டிருக்க ஒன்னுமிருக்காது.

வா.பா: நீங்க அளங்க ராசா.

தினேஷ்: வீடு போய் கராஜ்ல கார் பார்க் பண்ணும் போதே உருளைக்கிழங்கு பொரியல் வாசன தூக்குச்சு. ஒரே ஓட்டமா வீட்டுக்கு ஓடினா கிச்சன்ல தங்கமணி சாம்பார் வெங்காயம் உரிச்சிக்கிட்டிருந்தாங்க. கண்ணுல தண்ணி ஆறா ஊத்துது. எனக்கு புடிக்குமேன்னு எவ்வளவு கஷ்டம்னு உருகிட்டேன். அருமையான சாம்பார் வெங்காயம் சாம்பார்

அதுசரி: கருப்பா இருந்திச்சா? :O))))

பொன்னாத்தா: யோவ்!

தினேஷ்: உருளைக்கிழங்கு பொறியல், சிப்ஸ். வளைச்சி வளைச்சி கட்டிட்டு, பதிவு படிக்கலாம்னு பி.சி.ல உக்காந்தங்க. தங்கமணி வந்தாங்க. என்னங்க வேலை அதிகமா இன்னைக்கின்னாங்க. க்க்க்க்க்கொஞ்சம்..லைட்டான்னேன் உசாரா. இல்ல. கழுத்து புடிச்சா மாதிரி விரைப்பா வெச்சிருக்கீங்களேன்னாங்க.

சத்தியமா எனக்கு அப்புடி இல்லவே இல்ல. தங்கமணி சொன்னப்புறம் இல்லைன்னு சொல்ல முடியுங்களா? அட! ஆமாம்னேன். மெதுவா ஏங்க அந்த ரெயின்செக் கவனமிருக்கான்னாங்க.

சாப்புட்ட சாம்பார் சாதம் மெதுவா கலக்க ஆரம்பிச்சது. இருக்கு சொல்லும்மா. வாங்கிடலாமான்னேன்.

இல்லைங்க. அதுக்கு பதில் அந்த ரெயின்செக் உங்களுக்கு ட்ரேன்ஸ்ஃபர் பண்ணிடுரேன்னாங்க.

எனக்கு புரியாம, என்னம்மா சொல்றீங்கன்னேன்.

இல்லைங்க. ஃபோனுக்கு எதுக்கு காசு வேஸ்ட்.குடுகுடுப்பை வேற அது தண்டமுங்கறாரு. அதுக்கு பதில் அந்த வேல்யூக்கு நீங்க ரெய்ன்செக் ஆஃபர் பண்ணுங்கன்னாங்க.

நம்ம ஊருன்னா அது புடவையாகவோ, சினிமாவாகவோ, வெளிய டின்னராகவோ உருமாறுமே. இங்க அதுக்கு சான்ஸ் இல்லையேன்னு கலக்கம் அதிகமாச்சி.

அவங்களே சொன்னாங்க. இல்லங்க! எனக்கு ஏதாவது ஹெல்ப் வேணும்னா ரெயின்செக்னு சொல்லுவேனாம். நீங்க பண்ணுவீங்களாம். நீங்களே கணக்கு வச்சிக்கோங்க. அந்த வேல்யூ கழியற வரைக்கும் பண்ணா போதும்னாங்க.

அப்பாடா. ஷேர் ஊத்திக்கினா கூட பதில் சொல்ல வேணாம்னு சரின்னுட்டேன். நான் தூங்கப்போறேன். நீங்க முகிலன் கூட விளையாடிட்டு தூங்க வச்சிடுறீங்களான்னாங்க. இருங்கம்மா. ப்ளாக் ஒரு ரவுண்ட் அடிச்சிட்டு வரேன்னேன். ரெய்ன்செக்னு போய்ட்டாங்க.

இப்போ ஐ.பி.எல் மேச் பாக்குறப்போ ஒரு காஃபின்னா கூட ரெயின்செக்னு சொல்றாமாதிரியே பழகிப்போச்சுங்க. நானே போய் போட்டுக்குறேன்.

அதவிட கொடுமைங்க. அந்த வாண்டு முகிலனுக்கு தெரிஞ்சி போச்சு ட்ரிக். ஆஃபிசுக்கு ஃபோன் பண்ணி, டாட்...கக்கா வருது ரெயின்செக்னு ஃபோன வெச்சிட்டான். அடிச்சி புடிச்சி ஓடிவரதா போச்சி.

பொன்னாத்தா: அடப்பாவமே. கணக்கு எழுதலையா தினேஷ்

தினேஷ்: எழுதி நீட்டும்போதெல்லாம் குறுக்கால கோடு கிழிச்சி 0/100னு போட்டு குடுத்துடுறாங்க. 

பொன்னாத்தா: வா.பா. சார், கேபிள்ஜி நீங்க என்ன சொல்றீங்க. பெர்ஃபார்மன்ஸ் எப்புடி இருந்திச்சி?

வா.பா. கேபிள் (ஒரே குரலில்): ரெயின்செக்

பொன்னாத்தா: செறப்பு! நீங்க சொல்லுங்கன்னா ஜோல்னாப் பைக்குள்ள என்னத்தையா பார்க்குறீரு.

அதுசரி: சொல்றது என்ன இருக்கு. இந்த பாண்டியருங்க இப்புடித்தான். சோழன் குடுமி இப்புடி சும்மா ஆடுமா? எப்புடீஈஈஈ

ஓஜாரே ஓஜா..ரே..ரே ஓஜா..

வணக்கம் வந்தனம் அடுத்தா நாம நிகழ்ச்சியின் கடைசி பார்ட்டுக்கு வந்திருக்கோம். அடுத்ததா கலாய்க்க வரவர் யாருன்னு பார்க்கலாம். அட நம்ம கதிர் ஈரோடு. வாங்க கதிர். நீங்க என்ன பண்ணி அசத்த போறிங்க.

கதிர்:ம்கும். அசந்து போய் வந்திருக்கேன். அசத்தவேற செய்யணுமாக்கு. நானும் அதே தங்கமணி கான்ஸப்ட்தான்.

பொன்னாத்தா: அட! ரொம்ப தைரியமா சொல்றீங்க?

கதிர்: நாமதான் வீட்டுல டிஷ் கேபிள் எல்லாம் கட்பண்ணிட்டமுள்ள. ஹி ஹி..

பொன்னாத்தா: சரி சரி அசத்துங்க.

கதிர்: சாதாரணமா எல்லா ஊட்டுலயும் தங்கமணி கோவமா இருந்தா பேசமாட்டாங்க. ஆனா சட்டி சாமான்லாம் சொட்டயாவும். ரங்கமணிங்க உசாராய்டுவாங்க. நம்ம தங்கமணி சத்தமே போடமாட்டாங்க.

தலவலிக்குதும்மா காஃபி ப்ளீஸ்னா, பதிலே வராது. கொஞ்சம் மெதுவா காஃபி கேட்டனம்மான்னா கண்ணாலயே கதவு பக்கம் பாக்குமுங்க. மெதுவா எழுந்து போய் பார்த்தா, பால் தீந்து போச்சி. வாங்கிட்டு வந்தா காஃபின்னு எழுதி ஒட்டியிருக்கும். பல நேரங்கள்ள இந்த மவுனத்தால கண்ணு கலங்கிடும்.

பொன்னாத்தா: ஆஹா. இப்பதான் புரியுது கசியும் மௌனம்னா என்னான்னு. ரைட்டு:))

கதிர்: அட சும்மாருங்காத்தா. ஒரு நாள் ராத்திரி வேலையிருந்திச்சி. லேட்டாதான் தூங்கப் போனேன். எவ்வளவு லேட்டானாலும் காலையில 8 மணிக்கெல்லாம் ஆபீஸ்.

வா.பா: பின்ன! ஊட்டுல உக்காந்து காலைல எட்டுமணிக்கு தமிழ்மணம், தமிழிஷ்னு குத்திட்டு பின்னூட்டம் போடமுடியுமாக்கு

கதிர்: அட நீங்க வேறங்ணா. குளிக்கலாம்னு பாத்ரூம்ல போனனுங். விக்ஸ் மாத்திர சைசுக்கு சோப்பு இருந்திச்சி. முசுக்குன்னு ஏம்மா சோப்பு இல்லன்னு சொல்லத் தெரியாதான்னேன். ம்யூட் போட்றுச்சுங்க. விறுவிறுன்னு போய் சட்ட பாக்கட்டுல இருந்து ஒரு கடுதாசி, பேண்ட் பாக்கட்டுல மூனு, லேப்டாப் கவர்ல அஞ்சு, பர்ஸ்ல ரெண்டு, கதவு பின்னாடி, கார் ஸ்டீரிங்க்லன்னு ஒரு வண்டி குப்பைய சேர்த்து போட்டு மொகத்த ஒரு வெட்டு வெட்டி டிவி பொட்டிய பார்த்துச்சி.

மெதுவா ஒன்னொன்னா பார்த்தா, ஏங்க சோப்பு வாங்கணும்னு எழுதி வச்சிருக்கு. நம்ம கெரகம் அது கைக்கு சிக்கல. சரி டி.வி.பொட்டியாண்ட என்னான்னு பார்த்தா எனக்கு தலவலிக்குது. வெளிய சாப்டுக்குங்கன்னு எழுதியிருக்கு. உள்குத்து புரியாம தெம்பா போனா கடையெல்லாம் சாத்தியிருக்கு. அப்புறம்தான் கவனம் வந்திச்சி. டிவியில நாளைக்கு பந்த்னு செய்தி கேட்டது.

என்னா குசும்பு பாருங்க. சாப்பாட்டுக்காக கொங்குமன்னன் மானமிழப்பதான்னு வீம்பா உக்காந்து தண்ணிய குடிச்சிட்டு 6 மணிக்கு எப்புடியும் கடைய தொறந்துடுவாங்க. ஒரு கட்டு கட்டிக்கலாம்னு இருந்தேன். சரி கடைய தொறந்து சமைக்க வேணாமா. எட்டு மணிக்கா சாப்டுக்கலாம்னு, வேலையில முழுகிட்டேன். மணி பார்த்தா 11.

இனி இவ்வளவுதான்னு வீட்டுக்கு போய் பாப்பாக்கு வெச்சிருந்த பிஸ்கட்ட ஆட்டய போடலாம்னு பார்த்தா அது தூங்காம டிவி பாக்கலாமாங்குது. பசிமயக்கத்துல அப்புடியே தூங்கிப் போய், காலையில எழுந்து குளிச்சிட்டு (சோப்பு வாங்கி வச்சிட்டாங்க), சமயகட்டுல பார்க்குறேன்.

இட்டிலி சட்டில இருந்து இட்டிலிய எறக்குனாங்க. அந்த புகை நடுவில அவங்க, கையில இட்டிலி புகைய புகைய வேணும்னே வெறுப்பேத்த ஸ்லோ மோஷன்ல வந்தாலும் எனக்கு பாரதிராஜா படத்துல கனவு சீன் கவனம் வந்துச்சு. ஒரு ஈடு இட்டிலியும் பறக்க பறக்க தின்னுட்டு ஓடியாந்து எழுதுனது தான் அந்தக் கவிதை. சாயந்திரம் போய் இது உனக்குதான் டெடிகேட் பண்ணேன்னு சொல்லி ம்யூட் எடுத்து வுட்டம்ள..

கூட்டத்தில் இருந்து பாலாசி: ஏண்ணே! இப்புடி ஏதோ பண்ணி ராச்சோத்துக்கு சிங்கியடிச்சதாலதான் 11 மணிக்கு மேல கவிதை எழுதுனீங்களோ..

(அரங்கம் முழுதும் வெடிச்சிரிப்பு)

பொன்னாத்தா: (சிரிப்படக்க முடியாமால் ஏய் நீ சொல்லேன். ஏய் நீ சொல்லென்னு வா.பாக்கும் கேபிளுக்கும் கை நீட்டுது. அவங்களும் கண்ணீர் வழிய சிரித்தபடி முடியாதுன்னு கையாட்டுறாங்க). கிக்கீக்கீ.. செறப்பு.. கிக்கீ.. அம்மா..கீக்கீ..முடியலா..நீராச்சும்..

அதுசரி: (எழுந்து வந்து பைக்குள் கைவிட்டு ஒரு எவர்சில்வர் தட்டு எடுத்து பரிசளிக்கிறார்). இன்றைய நிகழ்ச்சியில் ஒரு சோகத்தையும் காமெடியாக்கிய கதிருக்கு அன்புப் பரிசு. ஒரு ஒருத்தரும் பெர்ஃபார்ம் பண்ணப்புறம் இந்த தட்டப் பார்த்தேன். வேதாளம் உதட்ட பிதுக்கிச்சி. கதிரோட பெர்ஃபார்மன்ஸ் முடிஞ்சதும் பார்த்தா எவர்சில்வர் தட்டுல ஆவி கசிஞ்சிருச்சி.  இன்றைய கலக்கப் போவது யாரு ஹீரோ கதிர் ஈரோடு..

ஓஜாரே ஓஜா...ரே...ரே ஓஜா...


Thursday, March 25, 2010

கலாய்க்கப்போவது யாரு -2



வந்துடுங்க!!
நாள் : 27/03/10

கிழமை ; சனிக்கிழமை

நேரம் : மாலை 6 மணி

இடம் : டிஸ்கவரி புக் பேலஸ் 
6. முனுசாமி சாலை, 
மேற்கு கே.கே.நகர். 
சென்னை: 

தொடர்புக்கு 
மணிஜி :9340089989
M.M.Abdulla -9381377888
cablesankar -9840332666
லக்கிலுக்: 9841354308 
நர்சிம் ; 9841888663 
பொன்.வாசுதேவன் : 9994541010

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஓஜாரே ஓஜா...ரே ரே. ஓஜா..

பொன்னாத்தா:
வணக்கம் அடுத்ததாக வந்து கலக்கப் போறவரு பிரபாகர்.

பிரபா: வணக்கம் தங்கச்சி..

பொன்னாத்தா: அண்ணா நீங்களா..

பிரபா: பாசமான என் அன்பு தங்கச்சி
              கேட்டுபுட்டாலே நீங்களான்னு அண்ணாச்சி..

வா.பா:
தோ. அதெல்லாம் இடுகையில. இது ப்ரோக்ராம். டி.ஆர். மாதிரி நடிச்சி காட்ரீங்களா என்னா? என்ன பண்ணப் போறீங்க அத சொல்லுங்க.

பிரபா: வணக்கங்கைய்யா. ஸ்டாண்டப் காமெடிதான்யா. வழக்கமா பாத்திங்கன்னா எல்லாரும் ஜோக் படிச்சிட்டு வந்து துண்டு துண்டா சொல்லுவாங்கைய்யா. இது அப்படி இல்லங்கைய்யா. ஒரே ஃப்ளோல அப்பிடியே வருங்கைய்யா. யோசிக்கவே இல்லங்கைய்யா. பேரு கூப்டதும் டக்னு இந்த ஐடியா வந்ததுங்கைய்யா. நிகழ்ச்சிக்குள்ள போலாங்களாய்யா?

பொன்னாத்தா:
இப்படி ஒரு அப்பாவியா இருக்கீங்களேண்ணா. ஆரம்பிங்க.

பிரபா: அப்ப நான் மாமா பொண்ண ஒரு தலையா லவ் பண்ணிட்டிருந்த நேரம். சங்க காலத்துல காளைய அடக்குறது, இளவட்டக்கல்லு தூக்குறது மாதிரி மாமா பொண்ணு ஒரு பாம்ப புடிச்சி கொண்டா. அப்பதான் லவ் பண்ணுவேன்னு சொல்லிட்டாப்ல. என்னடா இப்படி சொல்லிபுட்டான்னு கலவரமாயிடிச்சி. வேல்முருகன் சொன்னாப்ல, பாம்புன்னுதான  சொன்னா. அனகொண்டான்னு சொல்லலையே. ஆத்துக்கு போய் தண்ணி பாம்ப புடிச்சிடலாம்னு சொன்னாப்ல.

சரின்னு நான், வேல்முருகன்,ராஜு, எல்லாம் ஆத்துக்கு போனோம். அங்க ஒரு பொண்ணு லவ் ஃபெய்லூய்ர்ல தண்ணில முழுகிடிச்சி. நான் காப்பாத்துங்கன்னு கத்தி, அக்கம்பக்கதுல எல்லாருமா சேர்ந்து கரைல போட்டாங்க. நான் சினிமால பார்த்தத கவனம் வெச்சி, வயத்த அமுக்கி தண்ணிய வெளிய எடுங்கன்னேன்.

இதாண்டா சாக்குன்னு வயசு பசங்க அத்தன பேரும் பாஞ்சி அமுக்குனதுல அதுக்கு மூச்சு நின்னு போச்சு. வாயோட வாய் வெச்சி ஊதுனா மூச்சு வரும்னேன். நீ செய் பிரபான்னாங்க. இல்ல! மாமா பொண்ண லவ் பண்ணாதவங்கதான் பண்ணனும்னேன். நாந்தான் நாந்தான்னு ஒருத்தனுக்கு ஒருத்தன் அடிச்சிகிட்டதுல அந்த பொண்ணு செத்து போச்சு.

ஃப்ரெண்ட்ஸ்ங்கெல்லாம் ஓட்டிடாங்க. ஊர்க்காரங்கள்ளாம் சேர்ந்து என்னாலதான்னு என்ன மரத்துல கட்டி போட்டுடாப்ல , சாவு எடுக்கற வரைக்கும். அப்புறம் ஆத்துக்குள்ள அளைஞ்சி ஒரு பாம்ப புடிச்சிட்டு மாமா பொண்ணு எனக்குதான்னு தெம்பா போனேன். எனக்கு முன்னாடி சித்தப்பா பையன் ஒரு ரப்பர் பாம்ப காட்டி மடிச்சிட்டாப்ல. அதாவது பரவாயில்ல நான் கொண்டு வந்தது மண்புழுன்னு போட்டு குடுத்துட்டாப்ல. அந்த கதைய அடுத்த எபிசோட்ல சொல்றேன்.

கேபிள்ஜி: கொர்..கொர்ர்..கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..

பொன்னாத்தா: கேபிள்ஜி. அண்ணாவோட பெர்ஃபார்மன்ஸ் பத்தி சொல்லுங்க. அங்க என்ன பண்றீங்க கொரட்ட விட்டுகிட்டு?

கேபிள்ஜி: அவ்வ்வ். கொரட்ட இல்லம்மா. சிங்கப்பூர் போனப்ப ராத்திரி 3 மணிக்கு எழுப்பி இத இடுகையா போடட்டா அங்கிள்னு கேட்டாரும்மா... பயங்கர தமாஷ்

பொன்னாத்தா:
நீங்க சொல்லுங்க சார்.

வா.பா. நல்லா இருந்திச்சி ப்ரபா. எப்ப நடந்தது இது?

பிரபா: நான் மூணாவது படிக்கும் போதுய்யா. மாமா பொண்ணுக்கு வயசு ஒண்ர. 5 நிமிஷத்துக்கு அரங்கம் அதிர்கிறது.

பொன்னாத்தா:
யோவ் செறப்பு. ஒரு ஒரு வாட்டியும் கேக்கணுமா. உங்க ஒபினியன் சொல்லுங்க.

அதுசரி: நமப் பார்வதீ! குழந்தாய்! என் பாம்ப காணோம்! நீர்தான் பிடித்துக் கொண்டு போனீரோ? :o)))

ஓஜாரே ஓஜா..ரே.ரே..ஓஜா..


பொன்னாத்தா:
அடுத்ததாக கலாய்க்க வருபவர் பாலாசீ. வாங்க பாலாசீ. நிகழ்ச்சிக்குள்ள போறதுக்கு முன்னாடி என்ன பண்ணப் போறீங்க சொல்லுங்க.

பாலாசீ
: ஜட்ஜ் செலக்‌ஷன் சரியில்ல.

பொன்னாத்தா
: என்னது? யோவ். நிகழ்ச்சி என்ன பண்ணப் போறீங்க சொல்லுங்கன்னா இதென்னா வில்லங்கம்?

பாலாசீ:
ஆமாங்க! பின்ன என்ன. 8 வரி நடக்கற சாங்கியம் கூட 2 வரி சொந்த பிட்ட சேர்த்துவிட்டு கல்லா கட்டுறவன் நானு. இப்பல்லாம் யாரும் இடுகைய படிக்கறதே இல்ல. பாலாசீ பின்னூட்டம் இல்லீன்னா சப்ப இடுகைன்னு போய்டுறாங்க. என்ன போய் இவங்க ஜட்ஜ் பண்ணாங்கன்னா பரிசா குடுப்பாங்க. பொறாம..

பொன்னாத்தா:
சரி சரி அதெல்லாம் இருக்காது. நீங்க சொல்லுங்க. என்ன பண்ண போறீங்க?

பாலாசீ:
பின்னூட்ட காமெடின்னு ஒரு அய்ட்டம்

பொன்னாத்தா: சரி அசத்துங்க..

பாலாசீ: இப்புடித்தாங்க ஒரு நாள் வழக்கம் போல தமிழ்மணம் தொறந்து வெச்சிக்கிட்டு இடுகை வருமான்னு உக்காந்திருந்தேன். ரொம்ப நேரமா ஒண்ணும் காணோம். சரின்னு எதிர்ல நாயர் டீ கடையில டீ சொன்னேன். அவன் டீ கொண்டு வந்துட்டு எதுக்கோ  ‘நன்னாயி’  ன்னு சொன்னான்.

போரடிச்சதா. கூகிள் ட்ரான்ஸ்லிடரேஷன்ல மலையாளம் செலக்ட் பண்ணி, நன்னாயின்னு அடிச்சனா. அது மலையாளத்துல வந்திச்சி. சரின்னு அப்படியே ஒரு பொண்ணு பேர மலையாளத்துல டைப் பண்ணி ஸர்ச் பண்ணேன். ப்ரொஃபைல் வந்திச்சி. பார்க்க அழகா இருக்கவும் அதோட ப்ளாக்ல போய் ஒரு இடுகைய செலக்ட் பண்ணி, அழகா தெரிஞ்ச ஒரு வரிய கட் அண்ட் பேஸ்ட் போட்டு கீழ  ‘நன்னாயி’ பேஸ்ட் பண்ணேன். போட்டு 2 நிமிஷத்துல பின்னூட்டத்துக்கு பின்னூட்டம் வந்திச்சி.

பர பரன்னு ஆய்ட்டேன். நாயர் கடையில இன்னோரு டீ தெம்பா சொல்லிட்டு, நாயரே இத படிச்சி காண்பின்னேன். அவன் பயங்கரமா சிரிக்க ஆரம்பிச்சிட்டான். சொல்லிட்டு சிரிய்யான்னா, இல்ல விளக்கு மாத்தால அடிப்பேன் ஓடிப்போயிருன்னு போட்டிருக்குன்னு சிரிச்சான்.

நான் அப்பாவியா, என்னாங்க அனியாயம்? அந்த பொண்ணு எழுதுனததானே நான் பேஸ்ட் பண்ணி  ‘நன்னாயி’ போட்டேன். எதுக்கு திட்டுதுன்னேன்? அத படிச்சீட்டு தரையில பொரண்டு பொரண்டு சிரிச்சான். அப்புறம் சொல்றான், அந்த பொண்ணோட லவ்வர் அவள விட்டுட்டு இன்னோருத்திய லவ் பண்றத பத்தி இடுகை போட்டிருக்கு அந்தம்முனி. என் கெரகம்,   “என்ன இப்படி மோசம் பண்ணிட்டானே அவன் உருப்படுவானான்னு” எழுதி இருந்தத வெட்டி ஒட்டி அதுக்கு பின்னூட்டம் நன்னாயின்னு போட்டுட்டேன். ஆனா இதுக்கெல்லாம் அசந்துடுவானா இந்த பாலாசீ. நாம பார்க்காத வெளக்குமாத்தடியா? டெய்லி அங்க போய் ஒரு வரி வெட்டி ஒட்டி நன்னாயி போட்டுட்டிருக்கேன். எப்புடீஈஈஈ.  சனியம்புடிச்சவனுங்க மலையாளமணம், மலையாலிஷ் ஓட்டுபட்டி வைக்கல.

பொன்னாத்தா: அய்யோஓஓ. சாமி முடியல. நீ திருந்தவே மாட்டியா பாலாசீ..

(வா.பா., கேபிள், அதுசரி எல்லாரும் தரையில் உருண்டு சிரிக்கிறார்கள். அரங்கம் முழுசும் ஸ்டேண்டிங்க் ஒவேஷன்)

பொன்னாத்தா: யப்பா ராசா! போப்பா! அவங்க பதில் சொல்ற நிலைமையில இல்ல.

பாலாசீ: யக்கா! கவிதைதான் புரிய மாட்டீங்குது. பரிசாவது கிடைக்குமான்னு புரியரா மாதிரி சொல்லுக்கா..அவ்வ்வ்.

பொன்னாத்தா: வணக்கம் பதிவர்களே. ஒரு சின்ன இடைவேளைக்கு பின் மீண்டும் சந்திப்போம்..கலாய்க்கப் போவது

மொத்த கும்பலும்: யாஆஆஆஆரூ!!

ஓஜாரே ஓஜா..ரே ரே ஓஜா.. 

(தொடரும்)

Wednesday, March 24, 2010

கலாய்க்கப்போவது யாரு -1

ஓஜாரே ஓஜா ரே ரே ஓஜா!

பொன்னாத்தா: வணக்கம்! வந்தனம்! புண்ணாக்கு டிவியின் கலாய்க்க போவது யாரு நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் உங்க அனைவருக்கும் பொன்னாத்தா வணக்கம். இடுகை, பதிவு, ஓட்டு, பின்னூட்டம், மூக்குல குத்த சொல்லி மிரட்டல்,  இவ்வளவு டென்ஷன்லயும் பதிவுலகத்த புடிச்சி தொங்கோ தொங்குன்னு தொங்குற நாம சிரிக்கறதுக்காக தாங்க இந்த நிகழ்ச்சியே. நிகழ்ச்சிக்குள்ள போறதுக்கு முன்னாடி நம்ம ஜட்ஜஸ வரவேற்போம்.

ஓஜாரே ஓஜா ரே ரே ஓஜா!

பொன்னாத்தா
: இன்றைய நிகழ்ச்சிக்கான நம்ம ஜட்ஜஸ் வரப்போராங்க. முதலில் வானம்பாடிகள்.

வா.பா: வணக்கம்மா.

பொன்னாத்தா: சாஆஆர். இது நிகழ்ச்சி சார். என்னமோ கச்சேரி ரோட்டுல காலார வாக்கிங்க் போறா மாதிரி டப்பாகட்டு வேஷ்டியோட வந்திருக்கீங்க.

வா.பா.:
நீ கூடத்தான் தல வாராம அப்புடியே வந்துருக்க. நான் கேட்டனா?

பொன்னாத்தா:
அய்யோ. இது ஹேர் ஸ்டைல் சார். சரி விடுங்க. உக்கார்ரப்ப சரி. அதென்ன நடக்கறப்ப கூட பேரிச்சம்பழம் விக்கிறவன் மாதிரி காதுமேல கை.

வா.பா:
அது முடி பறக்காம.. (த்த்த்தோடா) நீ கூடத்தான் அப்பப்ப முடிய தள்ளி விடுற நாங்கேட்டனா!

பொன்னாத்தா:
கலாய்ச்சாச்சா! சரி போய் உக்காருங்க அடுத்தவர அறிமுகம் பண்ணனும்.

வா: பா
: இல்லம்மா அவரு வரட்டும்.

ஓஜாரே ஓஜா! ரே ரே ஓஜா.

பொன்னாத்தா:
நம்ம அடுத்த ஜட்ஜ் கேபிள்ஜி. வணக்கம் கேபிள்ஜி. இன்னைக்கு நிகழ்ச்சிக்கு போறதுக்கு முன்னாடி...

வா: பா.
இரும்மா இரும்மா. (ஓடிப்போய் ஒரு சேர் கொண்டு வந்து கேபிள்ஜியை அமுக்கி உட்கார வச்சாச்சு)

பொன்னாத்தா:
சார். இங்க ப்ரோக்ராம் நடத்தறது நானு. நீங்க என்ன சார் பண்றீங்க.

வா.பா:
நீ கேளும்மா.

பொன்னாத்தா:
(என்ன எழவோ) இன்னைக்கு நிகழ்ச்சிக்குள்ள போறதுக்கு முன்னாடி ஒரு ஜோக்கோட கலகலப்பா ஆரம்பிங்க கேபிள்ஜி.

வா.பா:
(பாய்ந்து கேபிள் வாயைப் பொத்தி) அடிப்பாவி! கெடுத்தியே! இந்தாளுட்ட ஜோக் கேட்டா எபிசோட் ரிலீஸ் பண்ணவே முடியாதே.  இதுக்குதான் உக்கார வெச்சது. இல்லாட்டி நம்ம உசரத்துக்கு எட்டாது.ஹி ஹி

பொன்னாத்தா:
சாரி சார். மறந்துட்டேன். ஜோக்கில்லாம சிங்கப்பூர் போனத பத்தி சொல்லுங்க ஜி.

கேபிள்:
டைகர் ஏர்வேஸ்ல போனேம்மா. எனக்குன்னே இப்படி நடக்குமா?

வா.பா: தலைவரே!

கேபிள்:
இருங்க தலைவரே! தெரியும். முதல் வாட்டியா போறேனா? சீட்டு வால் பக்கம் மாட்டிக்குமா? தூக்கி தூக்கி போடுமேன்னு கலவரமாவே இருந்துச்சு! புலித்தோல் மாதிரி யூனிஃபார்ம்ல புலித்தோல் மாதிரி இடுப்புல பெல்ட் கட்டி..சரி சரி.. ஏர் ஹோஸ்டஸ் அம்முனிட்ட சீட்டு எங்கன்னு கேட்டேன். நம்ம அதிர்ஷ்டம் சரியா ஏரோப்ளேன் மார்புல..

வா.பா: படுபாவி! ஏரோப்ளேன்ல கூட விடமாட்டீரா..

கேபிள்: இல்ல தலைவரே. விங் பக்கத்துலன்னு சொன்னேன்.

பொன்னாத்தா: போரும் சாமிகளா!  போய் உக்காருங்க. சிறப்பு விருந்தினர் வந்துட்டாரு.

ஓஜாரே ஓஜா! ரே ரே ஓஜா..

பொன்னாத்தா:
இன்றைய நிகழ்ச்சியின் நமது சிறப்பு விருந்தினர் யாருன்னு தெரிஞ்சிக்க ஆவலா இருப்பீங்க. கடவுளுக்கே கத்தி சொருவின வல்லவரு, மரங்கொத்திய மனுசனக் கொத்தவிட்ட நல்லவரு அதுசரி அவர்கள்! வெல்கம் டு த ஷோ!

ஓஜாரே ஓஜா ரே ரே ஓஜா!

அதுசரி:
வணக்கம் பொன்னாத்தா.

பொன்னாத்தா: வணக்கம் அதுசரி. நம்ம வ்யூவர்ஸ்கு என்ன சொல்ல விரும்புறீங்க?

அதுசரி: இஃப் யூ கேண்ட் கால் ஷிட் ஆஸ் ஷிட் ப்ளீஸ் கெட் அவுட்.

பொன்னாத்தா:
அட சாமி! போய் உக்காருங்க ராசா. ஆளுல்லாத கடையில யாருக்கு ஷோ காட்றது. போம்மா. போ.

ஹி ஹி. இன்றைய நிகழ்ச்சியில் முதலாவதாக நம்மள அசத்த போறவரு அண்ணாச்சி நசரேயன்.

ஓஜாரே ஓஜா! ரே ரே ஓஜா

நாலா பக்கமும் கும்பிட்ட படி நசரேயன் எண்டர்.

பொன்னாத்தா:
வாங்க நசரேயன். அர்மானி சூட்டும் ஹஷ் பப்பி ஷூவுமா அமக்களமா வந்திருக்கீங்க சரி! அதென்னா மூஞ்சில தோச மாவு?

நசரேயன்:
அது தோசமாவில்லங்கம்மா. சன் க்ரீம். ஷூட்டிங்ல லைட் அதிகமாகி நம்ம கலரு மாறி சன் டேன் ஆயிடும்னு தெரியும்ல! எப்புடீ.

பொன்னாத்தா: இதெல்லாம் உங்களுக்கே ஓவரா இல்ல. சரி போட்டும். இவ்ளோ ஹீரோ மாதிரி

நசரேயன்: மாதிரியெல்லாம் இல்லாஆஆஆஆஆஆஆ.

பொன்னாத்தா:
சரி சரி. அதென்ன தோள்ள துண்டு.

நசரேயன்: அத அவ்வளவு சாதாரணமா சொல்லிடாதிய ஆத்தா. போலீசுக்கு லட்டி, கண்டக்டருக்கு பிகிலு, நமக்கு துண்டு. தொழில் பாருங்க. சரி நிகழ்ச்சிக்குள்ள போலாமா.

பொன்னாத்தா: ம்கும். இப்போ தெருவிலயா நிக்கறீங்க. அதுக்கு முன்னாடி ஜட்ஜுக்கும், சிறப்பு விருந்தினருக்கும் ஒரு ஹலோ சொல்லிட்டு அசத்துங்க.

நசரேயன்: வண்...அட போம்மா நான் இந்த ஆட்டைக்கு வரல.

பொன்னாத்தா:
ஏன் என்னாச்சு?

நசரேயன்: பின்ன என்னாம்மா. சும்மாவே இடுகைய படிச்சமா, போனமான்னு இல்லாம அது தப்பு இது தப்புன்னு சொல்லுவாரு இந்த வானம்பாடி. இதுல ஜட்ஜு வேற. போறாததுக்கு சோழன் சிறப்பு விருந்தினர். எங்களுக்கு ஏற்கனவே வரப்பு தகராரு இருக்கு. இதுல எனக்கு எங்க பரிசு. நான் போறேன்.

பொன்னாத்தா:
அதெல்லாம் நடக்காது. நான் பார்த்துக்கறேன். நீங்க என்ன பண்ணப் போறீங்க அத சொல்லுங்க.

நசரேயன்:
ஸ்டேண்டப் காமெடிதான். நான் துண்டு போட போய் நொண்டியடிச்ச வரலாறு.

பொன்னாத்தா: நீங்க அசத்துங்க..

(வழக்கம் போல பிழை பிழையா துண்டு போட்டு தோல்வியைத் தழுவினத சொல்றாரு. அரங்கம் சும்மா அதுருதுல்ல)

பொன்னாத்தா
: ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா! முடியல. சரி. அந்த துண்டு எதுக்குன்னு சொல்லவே இல்லையே.

நசரேயன்
: தோ! அங்கிட்டு ஒரு வடக்கூர்க்காரி இருக்கால்லா! அவக்கு வீசத்தான்.

பொன்னாத்தா
: யோவ்! அது ப்ரோட்யூசர் சேட்டு பொண்டாட்டி. நல்லா கெளப்புரீருய்யா பீதிய.

நசரேயன்
: வட போச்சே! அவ்வ்வ்வ்வ்வ்

பொன்னாத்தா
: வானம்பாடி சார் நீங்க சொல்லுங்க.

வா.பா
: இவரு துண்டு போட்டு எப்படியோ ஒரு அம்முனிய மடக்கி யூ ஆர் மை லவ்னு லெட்டர் குடுக்கப் போய், வழக்கம் போல ஸ்பெல்லிங் மிஸ்டேக்ல யூ ஆர் மை பவ்னு எழுதி குடுக்க, அது நாய வுட்டு கடிக்க வுட்ட காமெடி அருமை. அண்ணாச்சி! அசத்திட்டீங்க.

பொன்னாத்தா
: ஆண்டவா! நீங்க சொல்லுங்க அதுசரி. நீங்க என்ன நினைக்கிறீங்க இதபத்தி.

அதுசரி: பக்கத்துல டாஸ்மாக் கட எங்க இருக்கு?

ஒரு ச்ச்ச்சின்ன இடைவேளைக்கு பிறகு நிகழ்ச்சிய பார்க்கலாம் நேயர்களே..

ஓஜாரே ஓஜா! ரே ரே ஓஜா!

அடுத்ததாக நம்மள கலாய்க்க வந்திருக்காரு குடுகுடுப்பை.

பொன்னாத்தா:
வாங்க குடுகுடுப்பை! எங்க ரொம்ப நாளா ஆளக்காணோம். இன்னைக்கு என்ன பண்ணி கலாய்க்க போறீங்க.

குடுகுடுப்பை:
எதிர்க்கவுஜ!

பொன்னாத்தா: இங்கயுமா? ஆண்டவா. சரி கலாய்ங்க.

குடுகுடுப்பை: (பேசாமல் நிற்கிறார்)

பொன்னாத்தா: சார். லைவா போய்ட்டிருக்கு சார். ஒன்னும் பேசாம இருந்தா எப்படி?

குடுகுடுப்பை:
என்னாம்மா காம்பியர் நீ. எதிர்கவுஜங்குறேன். கவுஜ சொல்லு.

பொன்னாத்தா
: தோடா! அதெல்லாம் முடியாது. நீங்களேதான் பண்ணனும்.

குடுகுடுப்பை:
சரி சரி!

நிமுத்தி வெச்ச பானை மேல்
கமுத்தி வெச்ச பானை வழி
 வடிந்த பாத்திரத்தில் 
மூடாமல் விட்டதால்
ஆவியாகிப் போன சாராயம்..
தண்ணீர் பாக்கட் கடித்துக் குடித்தபடி
காற்றில் சாராய மணமருந்தி
கடிச்சிக்க கருவாடும்
உறிஞ்சிக்க பீடியும் மறந்த நான்...

(இறங்கி ஓடிபோய் ஆடியன்சில் ஒரு அம்மணியைக் குட்டி விட்டு ஓடி வருகிறார்)

மிஸஸ் தேவ்: ஏன் சார் என்ன குட்டினீங்க?

குடுகுடுப்பை: சாரிம்மா. ஆஃபீஸ்ல ஆணி புடிங்கிட்டு நேர இங்க வந்து எதிர்கவுஜ ரெடி பண்ணி, நசரேயன யோவ்! அசலை இங்கே சுட்டவும்னு டைப் பண்ணுய்யா. ஷோவுக்கு ரெடியாய்க்கிறேன்னு சொன்னா குட்டவும்னு டைப்பண்ணிட்டாரு போல. நானும் அவசரத்துல குட்டிட்டேன்.

பொன்னாத்தா: கேபிள் ஜீ! குடுகுடுப்பையோட பெர்ஃபார்மன்ஸ் பத்தி என்ன நினைக்கிறீங்க

கேபிள்ஜீ:
ரெண்டு ஷாட் டக்கீலா.

பொன்னாத்தா: சேர்ந்தாய்ங்கய்யா எல்லாரும் ஒண்ணா! யோவ்! செறப்பு விருந்தினர். மண்ணு லாரில சரக்கடிச்சி சாய்ஞ்சா மாதிரி உக்காந்தா எப்புடி? நீர் என்ன சொல்றீரு.

அதுசரி: கள்ள சாராய ஊழல்ல சம்பாதிச்சதுக்கு கணக்கு எங்க? கட்டிங் எவ்வளவு..

ஓஜாரே ஓஜா! ரே ரே ஓஜா..

(தொடரும்)

(டிஸ்கி: ஹி ஹி.. நீஈஈஈஈளமா ஒரே இடுகை போடாம இப்புடி பிரிச்சி போட்டு கல்லா கட்டலாமின்னு..வர்ட்டா. )

பொன்னாத்தா: ம்கும்! இது நீளமில்ல பாரு.

வா.பா. தோ! என்னாம்மா பி.ப. நீய்யி. எங்கனா டிஸ்கிக்கு அப்புறம் ஒரு எழுத்து வரலாமா?

Wednesday, March 10, 2010

எளக்கியம் விக்கலாம் வாங்கப்பா...

ஹூம். அது ஆச்சிங்க ஒரு வருசத்துக்கு மேல. சோத்துக்கு லாட்டரி அடிச்சிகிட்டு என்னடா பண்ணலாம்னு உக்காந்திருந்தேன்.  யாரோ சொன்னாய்ங்க. யாவாரம் பண்ணுப்பா. பரபரன்னு பெரீஈஈஈஈய ஆளாயிரலாம்னு. அட! இதானே நமக்கு வேணும்னு, கைய கால புடிச்சி அய்யா, சாமி அது என்னா யாவாரம் சொல்லுங்கப்பான்னேன்.

முதல்ல சொல்ல மாட்டேன்னுட்டாய்ங்க. விடாம கெஞ்சினதுல ஓட்டு யாவாரம்பான்னாங்க. பொசுக்குன்னு ஆயிருச்சி. அட போய்யா. எலக்சன் எப்பவோ வருது. இதுல இந்த யாவாரத்த பண்ண நான் எங்க போகன்னேன். அட பன்னாட. பதிவுலகம் பதிவுலகம்னு ஒன்னு இருக்கு. அங்க இதான் யாவாரமே. கடைய தொறந்தியா, யாவாரத்த பெருக்கினியா, பி.ப. ஆனியான்னு போய்க்கேயிருக்கலாம்டான்னாய்ங்க.

கூகிளான் கடையில போயி ஓசில ஒரு இடத்தப் புடிச்சிட்டேன். சரக்கு போட வேணாமா? நொறுக்கு தீனி  போட்டேன். டேஸ்ட் பார்த்துட்டு போய்க்கிட்டிருந்தாங்க. ஒன்னு ரெண்டு பேரு நல்லாருக்குப்பா. கொஞ்சம் உப்பு போறாது. காரம் கூடன்னு சொல்லவும் திருத்திக்கிட்டேன். பசி அடங்கலைன்னாலும் குடிக்க தண்ணி கிடைச்சது. அப்புறம்தான் தெரிஞ்சது, கம்பராமாயணம் மாதிரி எழுதினாலும் கவட்டிக்குள்ள வெச்சிருந்தா யாவாரம் ஆவாது. கடைய போடணும். விளம்பரம் பண்ணனும். ஓட்டு வித்து ஓட்டு வாங்கணும்னு.

அட்றா சக்கன்னு மும்முரமா எறங்கிட்டேன். தமிழ்மணம் மால்ல ஒரு ப்ரேஞ்ச், தமிழிஷ் மால்ல ஒரு கடை தொறந்தேன். ஆரம்பிக்கறது ஆரம்பிக்கிறோம், எதுக்கு லோகல் யாவாரம். க்ளோபலா ஆரம்பிக்கலாம்னு முடிவு கட்டீட்டேன். அசத்தலா லண்டனு, ஸ்விஸ்ஸூ, அமெரிக்கான்னு டீலிங் போட்டேன். ஒரே மாசம். அமெரிக்காகாரருக்கு நான் போட்ட ஓட்டுக்கு ஒரு பென்ஸ் கார் வாங்கி குடுத்தாரு. நானு அவரு போட்ட ஓட்டுக்கு கடல முட்டாய் வாங்கி அனுப்புனேன்.

அப்புறம் லோகல் டீலர்ஷிப் தொறக்கலாம்னு அக்கம் பக்கம் விசாரிச்சி, மெதுவா வியாவாரம் விருத்தியாச்சி. திடீர்னு ஒரு நாள் தமிழிஷ் கடையில நீ நல்லா யாவாரம் பண்றப்பான்னு ஒரு மெயிலுட்டாங்க. தல கிறுகிறுத்துப் போச்சி.ஆஆஆஆஆங். சொல்ல மறந்துட்டனே. இதுக்குள்ள மதியம் ஒரு நேரம் ஃபுல் சாப்பாடு, ராத்திரி பரோட்டா கடையில 4 பரோட்டா அடிக்கிற வருமானம் வந்துச்சு.

என்னன்னாலும் பென்ஸ் கார்ல போய் பரோட்டா கடையில சாப்புடறது கேவலம்டான்னு யோசிச்சேன். சரி. கூட்டு களவாணி அட சை! கூட்டா பிசினஸ் பண்ணாதான் சரின்னு களத்துல எறங்குனேன். கோயமுத்தூரு, ஈரோடு, சேலம், துபாய், ஃப்ரான்ஸ், இலங்கைன்னு கடை கப கபன்னு பத்திகிச்சி.

சும்மா சொல்லக்கூடாதுங்க. இந்த ஓட்டு குத்தி ஓட்டு வாங்கற யாவாரம் இருக்கே. என்னா த்ரில்லுங்கறீங்க. வெட்டி ஒட்டி பின்னூட்டம், என்னன்னாலும் எழுதட்டும் நமக்கு தேவை ஓட்டுன்னு அருமை, அபாரம், கொன்னுட்டீங்கன்னு சொல்லிட்டு குத்திட்டு வந்தேன். சிங்கப்பூர், இந்தோனேசியா, அது இதுன்னு பேரு தெரியாத நாட்ல இருந்தெல்லாம் யாவாரம் பெருகிச்சி.

மூணு வேள ஃபுல்லா சாப்பாடு, போக வர பென்ஸ் காரு, துபாய், சவுதில 2 பெட்ரோல் கிணறு சொந்தத்துல வாங்கிட்டதால பெட்ரோல் செலவும் இல்லை. கல்லாக்கட்டி மாளலை. தமிழ்மணத்துல மக்கள்ளாம் சேர்ந்து மகுடம் சூட்டிட்டாங்களா. தல காலு புரியலைங்க எனக்கு. நடுவுல மைனஸ் ஓட்டு வேற போட்டு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப பிரபலமாக்கிட்டாங்க.

அப்புறம் என்னாங்க வேணும் எனக்கு. நடிக்க சான்ஸ் கிடைக்குமான்னு ஒருத்தருக்கு ஓடி ஓடி ஓட்டு குத்துறேன். இருக்கிற காசுக்கு சினிமா எடுக்க உதவுமான்னு ஒருத்தருக்கு ஓட்டு குத்துறேன். கொஞ்சம் காடு கழனி வாங்கலாம்னு மாவட்ட வாரியா குத்துறேன். நல்லா போய்க்கிருந்திச்சி.

நேத்துல இருந்து ஒரு புது ரூலு சொல்லிக்கிறாங்க சில இலக்கிய வாதிங்க. அதாவது மொக்க எழுத கூடாதாம். ஃபாலோ பண்றவங்க இடுகைய படிக்க கூடாதாம். தமிழ்மணத்துல 6 ஓட்டுக்கு மேல வாங்க கூடாதாம். நமக்கு ஓட்டு போட்டவங்களுக்கு நாம ஓட்டு போட கூடாதாம்.

ஒரு இடுகை எழுதினா, அவங்களுக்கு அனுப்பி, அது தரமானதா இல்லையான்னு சொன்னப்புறம் இடுகை போடணும். அங்க ஒளிஞ்சிருந்து ஒரு சைக்கியாட்ரிஸ்ட் இருப்பாரு. யார் இடுகையாச்சும் படிச்சா அவரு கிட்ட போணும். அவரு என்ன மனநிலைன்னு சோதிச்சி சர்டிஃபிகேட் குடுப்பாரு. அப்புறம்தான் பின்னூட்டம் போடணும்.

ங்கொய்யால அப்படியும் பரிந்துரைக்கு வந்து, பாப்புலர் பக்கம்னு ஆச்சோ இன்னோரு முகமூடி உக்காந்து யாரு ஓட்டு போட்டிருக்காங்கன்னு புட்டு புட்டு வைப்பாரு. அதெல்லாமும் மீறி நியாயமா, எளக்கிய சேவை பண்ணி கல்லா கட்டுங்க மக்கா. பதிவர் கூட்டம், பையனுக்கு பொறந்த நாளு, எங்கூரு திருவிழான்னு ஃபோட்டோல்லாம் போட்டு ஓட்டு கேட்டிங்களோ! கிழிச்சி தொங்க விட்டுடுவாய்ங்க.

ஓட்டு போடுங்கன்னு கேட்டா தூக்கு மேடைதான்.  நாலு முகமூடி ஒன்னா சேர்ந்து பதிவுலகம் ஃபுல்லா ஃப்ராடுன்னு சர்டிபிகேட் குடுத்துட்டாய்ங்கப்பா. புக்கர் ப்ரைஸ் போச்சே. புலிட்சர் ப்ரைஸ் போச்சே. எத்தனை பதிவருங்க கதை சினிமாவாகிருந்தா கிடைக்கிற ஆஸ்கார் போச்சே. கவுஜ எழுதுனவங்களுக்கு சாகித்திய அகாதமி விருது போச்சே. வயத்துல அடிச்சிட்டு அழாம என்ன பண்றது.

வசதியா வாழ்ந்து பழகியாச்சி. திரும்ப பசியோட எப்புடி இருக்கிறது. நம்ம வேலைய நாம பார்ப்பம். மொக்கைய எளக்கியம்னு படிச்சிட்டு குப்பைன்னு கத்துனா யாரு தப்பு?

அங்க ஒரு பன்னாட கேட்டுருந்திச்சி. இது ஒரு பதிவான்னு. மனசாட்சிய தொட்டு சொல்லணுமாம். ஆத்தா தீர்க்கதரிசி. எனக்குன்னே எழுதிச்சி போல.

/தமயந்தியிடம்...
தம்மனத்தை வாங்கும் தடந்தோளான்
நளனிடம்
நாற்குணமும் நாற்படையா
ஐம்புலனும் நல்லமைச்சா /


புத்தி கெட்டுப் போய் யாருகிட்ட என்ன சொல்றதுன்னு தெரியாம நளன் கிட்ட சொல்ல வேண்டியத தமயந்தி கிட்ட சொல்லி, தமயந்திக்கு சொல்ல வேண்டியத நளனுக்கு சொல்லி

/தரகர் வேலைக்கே ஆகிப்போச்சா... /

கூமுட்ட கேள்விக்கு விளக்கம் சொல்ல போயி

/வேலை மெனக்கெட்டு பாலைப் பிரிச்சு..
தண்ணியைக் குடிச்சே வீங்கி போச்சு... /


நல்ல இடுகையா நாலு படிச்சி பின்னூட்டம் போடாம விட்டு போட்டு, அந்த குப்பையில போய் விளக்கம் சொல்லி வாங்கி கட்டிக்கிட்டு

/அங்க பாரு...
குப்பையோட சேர்ந்து...
தன்னையும் எரிச்சு... /


அந்த குப்பைங்க கூட பேசி எனர்ஜியெல்லாம் வேஸ்டாக்கிகிட்டு

/சுண்டக் காய்ச்சுது பால.. /

இப்புடி ஒரு அருமையான மொக்கைய எழுதுது பாரு

/பன்னாட.../

கள்ளு கலயத்துல விழுந்த ஈ, எண்ணெயாட்டுறப்ப வர கசடு எல்லாம் வடிகட்ட பயன் படுத்துவாங்கள்ள தென்னமரத்துல வலை மாதிரி இருக்குமே பன்னாட அது..என்னியத்தான்.

//பன்னாட.../

வேலய விட்டுபோட்டு பூனைய சரைச்சதுக்கு திட்டு.

இத விட அருமையா ஒரு கவிதை எழுத முடியுமா?

போங்க போங்க. போய் மொக்கைய போட்டு ஓட்டு தேத்துற வழிய பாருங்க மக்கா. திருடன் திருடன்னு கத்திகிட்டே செயினறுத்துட்டு ஓடிட்டாய்ங்களப்பா:))

(டிஸ்கி: என்னாடா ஆச்சு இந்தாளுக்குன்னு பார்க்கறீங்களா. 2 நாளா பைத்தியங்க கூட்டத்துல சிக்கிட்டேன். இப்புடி ஆகிப்போச்சுங்க. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்)