Saturday, July 9, 2011

ஒரு எதிர் கவுஜயும் பொழிப்புரையும்.

கதிரின் 'உயிருக்குள் ஊட்டுவது’ கவிதையின் எதிர் கவுஜயும், பொழிப்புரையும்

எதிர் கவுஜ:
குடலுக்குள் ஊத்துவது

வெள்ளை க்ளாஸ் விளிம்பில்
அடங்காமல் பொங்கும் நுரையை
கழுத்தைச் சற்றே சாய்த்து நிறுத்தி
என் நாசி தேடும் பீர் வாசக்காற்றும்

என்னுள் வேர்விட்டு கிளை பரப்பி
சொட்டுச் சொட்டாய் நினைவு திருடி
வெண்ணுரையோடு என் சட்டையில்
அடர்த்தியாய் பூத்த சால்னாக் கரையும்

கண் சிமிட்டி சிமிட்டி
உதடுகளைச் சுழித்துப் பிசைந்து
காது வழியே கரைத்து ஊற்றும்
வசவுக் குளறல்களும்

என்னிடமிருந்து எனைப் பறித்து
விடை பெறும் தருணங்களில்
வலிக்காமல் அங்கங்கே உறைந்த
ரத்த காயங்களும் சிராய்ப்பும்

என்னுள் தளும்பும் சொற்கள் ஏராளம்
இருந்தும் எதுவும் முழுதாய் வரவில்லை
உள்ளுக்குள் போனது நீ என்பதாலும்
ஏத்திக் கொண்டது நான் என்பதாலும்.
---------------------------------------------------------------------------------

மூலக் கவிதையின் பொழிப்புரை.

(வெள்ளி தலைக் குளியலில்) - ஒன்னு ரெண்டு நரைக்கு டை அடிக்கப் போய் மொத்தமா வெளுத்து போச்சு. அதுக்கு நக்கல பாரு இந்த கொண்டை மண்டைக்கு.

(அடங்காமல் பறக்கும் முடியை கழுத்தோரம் காதோரம் கடத்திவிட்டு)
கொஞ்சம் வெயில்ல தலைய ஆத்த உடுறாய்ங்களா, பார்வை அப்புடி. வேற என்ன பண்ண?

(என் நாசிதேடும் உன் வாசக்காற்றும்)
கருமம் கருமம். இதுக்கு ஷாம்பூ வாசனை கூட தெரியல.

(என்னுள் வேர்விட்டு கிளைபரப்பி)
ம்கும். இவரு நட்டு வச்சி ஒரம் போட்டு தண்ணி ஊத்துனாரு

(சொட்டுச்சொட்டாய் உயிர்திருடி)
அட பக்கி. சரக்குன்னா உயிராம். இத நாங்க சொட்டு சொட்டா வேற திருடிட்டமாம்.

(வெண்வரிகளோடு)
ஜொல்லு ஊத்தறத சொல்ற ஸ்டைலப் பாரு

(உன் புடவையில் அடர்த்தியாய்ப் பூத்த செம்பருத்திப்பூக்களும்)
அட சாளேஸ்வரக் கண்ணா. கோவிலுக்கு போக செம்பருத்தி பறிச்சி முந்தானைல வச்சிருந்தா பொடவைல செம்பருத்தி பூக்குதாம்ல.

(கண் சிமிட்டிச் சிமிட்டி)
கண்ணு தொறக்க முடியாம மப்பு

(உதடுகளைச் சுழித்துப்பிசைந்து)
உள்ள போன சரக்கு அப்புடி

(காதுவழியே கரைத்து ஊற்றும் வார்த்தைக் கவிதைகளும்)
கண்றாவி கொழ கொழன்னு குழறி பேசுறதுக்கு பேரு கவிதையாம்.

(என்னிடமிருந்து என்னைப்பறித்து விடைபெறும் தருணங்களில்)
ரெண்டாளா இருந்தாராம். தெளிஞ்சிருச்சாம்

(வலிக்காமல் செல்லமாய்க் கிள்ளும்)
கன்னத்த கொத்தா புடிச்சி ரப்பர் வாயி மாதிரி இழுத்துட்டு போனத சொல்றாரு. வலிக்கலையாம். பெரிய வடிவேலு

(நகத்தில் பிறக்கும் பிறைவடிவமும்)
அடப்பாவி!! ஆணில உராசி கிழிஞ்சி போச்சுன்னு அரசு ஆஸ்பத்திரில தையல் போட்டது எனக்கில்ல தெரியும்.

(என்னுள் தளும்பும் சொற்கள் ஏராளம்)
ஆடாம ஸ்டெடியா நில்லுங்ணா. தளும்பாம இருக்கும்.

(இருந்தும் எதுவும் அலுக்கவில்லை)
ஊத்திக்கினு உருளாதவன் எங்கருக்கான்? (சண்டைல கிழியாத சட்டை மாதிரி)

(உயிருக்குள் ஊட்டுவது நீ என்பதாலும்)
திமிரப்பாரு. வெறும் வகுத்தோட கெடந்தா அல்சர் வருமேன்னு சோறு ஊட்டுனது தப்புடியோ.

(ஏந்திக்கொள்வது நான் என்பதாலும்)
இதுக்குதான் வெளியவே குந்த வச்சி தட்டுல போட்டு குடுக்கறது.

14 comments:

சத்ரியன் said...

//வெள்ளை க்ளாஸ் விளிம்பில்
அடங்காமல் பொங்கும் நுரையை
.............................
..............................
உள்ளுக்குள் போனது நீ என்பதாலும்
ஏத்திக் கொண்டது நான் என்பதாலும்.//

உலகத் தமிழ் மஹாஜனங்களே,

21-ஆம் நூற்றாண்டின் ஈடிணையில்லா இலக்கிய கவிதையாக தேர்ந்தெடுக்கப்படுகிறது.

சத்ரியன் said...

//(கண் சிமிட்டிச் சிமிட்டி)
கண்ணு தொறக்க முடியாம மப்பு//

ஹூம்! இந்த பய புள்ள “பால்” கூட குடிக்காது -ன்னு நம்பிக்கிட்டிருந்தனே!

சத்ரியன் said...

//(நகத்தில் பிறக்கும் பிறைவடிவமும்)
அடப்பாவி!! ஆணில உராசி கிழிஞ்சி போச்சுன்னு அரசு ஆஸ்பத்திரில தையல் போட்டது எனக்கில்ல தெரியும்.//

இது வேறயா?

சத்ரியன் said...

//(ஏந்திக்கொள்வது நான் என்பதாலும்)
இதுக்குதான் வெளியவே குந்த வச்சி தட்டுல போட்டு குடுக்கறது.//

அய்யா கதிரு,

இன்னும் குதிருக்குள்ள என்னய்யா பண்ணிக்கிட்டிருக்க,
வெளியில வாங்கப்பு...

பெசொவி said...

:)

Bala Sir Rocks!

(Smilie & Template comment poduvor sangam)

தியாவின் பேனா said...

என்ன அருமையான இலக்கிய நயம் கொண்ட கவிதை

ஓலை said...

Kathirukku ethiru athiruthu.

ரிஷபன் said...

(என்னிடமிருந்து என்னைப்பறித்து விடைபெறும் தருணங்களில்)
ரெண்டாளா இருந்தாராம். தெளிஞ்சிருச்சாம்
நயமான காமெடி

ஈரோடு கதிர் said...

யூத்தா ஒரு கவிதை எழுதினா பெருசுகளுக்கு புடிக்க மாட்டேங்குதே :)

ஈரோடு கதிர் said...

||அய்யா கதிரு,

இன்னும் குதிருக்குள்ள என்னய்யா பண்ணிக்கிட்டிருக்க,
வெளியில வாங்கப்பு...||

அடிங்....
சொசெசூ வெச்சுக்கனுமோ, அதுக்கு வேற ஆளப்பாருடியோவ்!!!!

ஸ்ரீராம். said...

புன்னகை.

சே.குமார் said...

இலக்கிய கவிதை!!!?

கே. பி. ஜனா... said...

//வெண்ணுரையோடு என் சட்டையில்
அடர்த்தியாய் பூத்த சால்னாக் கரையும்//
ரசித்த வரி...

ஓலை said...

இந்த பீர் கவிதையை தயாரிக்கிற கம்பெனி காரங்கப் பார்த்தா, அட நாம என்ன ஒரு சேவை பண்றோம்னு புல்லரிச்சுப் போயிடுவானுங்க.

எல்லாம் இந்த கதிர் கவிதையினால வந்த வினை.