என்ன வேண்டும்? எரிந்து விழுந்தார் கேமரான்.
உங்களிடம் வேலை செய்ய விரும்புகிறேன் என்றான் ரோர்க். குரல் என்னவோ ‘உங்களிடம் வேலை செய்ய விரும்புகிறேன்’ என ஒலித்தாலும், த்வனி ‘உங்களிடம் வேலை செய்யப்போகிறேன்’ என உணர்த்தியது.
அப்படியா? மிகப் பெரிய, சிறந்த கட்டிடக் கலைஞர்கள் உன்னை ஏற்கவில்லையா?
நான் யாரையும் தேடிப் போகவில்லை.
இதற்கு முன் எங்கு வேலை செய்தாய்?
இது தான் தொடக்கம்.
உங்களிடம் வேலை செய்ய விரும்புகிறேன் என்றான் ரோர்க். குரல் என்னவோ ‘உங்களிடம் வேலை செய்ய விரும்புகிறேன்’ என ஒலித்தாலும், த்வனி ‘உங்களிடம் வேலை செய்யப்போகிறேன்’ என உணர்த்தியது.
அப்படியா? மிகப் பெரிய, சிறந்த கட்டிடக் கலைஞர்கள் உன்னை ஏற்கவில்லையா?
நான் யாரையும் தேடிப் போகவில்லை.
இதற்கு முன் எங்கு வேலை செய்தாய்?
இது தான் தொடக்கம்.
என்ன படித்திருக்கிறாய்.
மூன்று வருடங்கள் ஸ்டாண்டனில் படித்தேன்.
ஓ! தங்களுக்கு படிப்பை முடிக்க சோம்பலாயிருந்ததோ?
இல்லை. நான் வெளியேற்றப்பட்டேன்.
க்ரேட்! கேமரோன் டெஸ்கை ஓங்கி அறைந்தபடி சிரித்தார். அருமை.! ஸ்டாண்டன் என்ற பேன் கூட்டுக்கு உதாவாக்கரையான நீ ஹென்றி கேமரோனுக்கு வேலை செய்யப் போகிறாயா? உருப்படாதவர்களுக்கான இடம் இதுவென முடிவு செய்தாயா? எதற்காக உதைத்து எறியப் பட்டாய்? குடி? பெண்? எது?
இவை! என்றபடி தன்னுடைய வரை படங்களை நீட்டினான்.
.....
இந்தக் கட்டிடத்தைப் பார். முட்டாளே! இப்படி ஒரு கற்பனையை வைத்துக் கொண்டு அதை எப்படி செயல்படுத்துவதெனத் தெரியவில்லை உனக்கு! மிக மிக அற்புதமான ஒன்றை கண்டெடுத்து அதை இப்படியா பாழடிப்பாய்? நீ கற்பதற்கு எவ்வளவு இருக்கிறது தெரியுமா?
தெரியும். அதற்காகத்தான் இங்கு நிற்கிறேன்.
இதைப் பார்! உன் வயதில் நான் இதைச் செய்திருக்கக் கூடாதாவெனத் தோன்றுகிறது. ஆனால் நீ ஏன் இப்படிக் கெடுத்து வைத்திருக்கிறாய்? நான் இதை வைத்துக் கொண்டு என்ன செய்வேன் தெரியுமா? பார்! உன் படிக்கட்டுகளை விட்டொழி! புகைப் போக்கியைத் தகர்த்தெறி! இதற்கான அடித்தளம் போடும்போது.....
வெகு நேரம் பேசினார் கேமரோன். எரிந்து விழுந்தார். ஒரு படமும் திருப்திப் படுத்தவில்லை. ஆயினும் ரோர்க் அந்தப் படங்களைக் குறித்தான பேச்சு அதிலுள்ளவை என்னமோ ஏற்கனவே கட்டுமானத்தில் இருப்பதைப் போல் பேசப்படுவதை உணர்ந்தான்.
அப்படிப் பார்க்காதே என்னை! வேறே எதையும் பார்க்க முடியாதா உன்னால்? ஏன் கட்டிடக் கலைஞனாக விழைந்தாய்?
அப்போது எனக்குத் தெரியவில்லை. ஒரு வேளை எனக்கு கடவுள் நம்பிக்கையில்லாததால் இருக்கலாம்.
அர்த்தமுடன் பேசு!
நான் இந்தப் பூமியைக் காதலிக்கிறேன். இதை மட்டுமே காதலிக்கிறேன். இதன் உருவம் எனக்குப் பிடிக்கவில்லை. அதை மாற்ற விழைகிறேன்.
யாருக்காக?
எனக்காக?
என்ன வயது உனக்கு?
இருபத்தியிரண்டு.
இதையெல்லாம் எப்போது கேட்டாய்?
அர்த்தமுடன் பேசு!
நான் இந்தப் பூமியைக் காதலிக்கிறேன். இதை மட்டுமே காதலிக்கிறேன். இதன் உருவம் எனக்குப் பிடிக்கவில்லை. அதை மாற்ற விழைகிறேன்.
யாருக்காக?
எனக்காக?
என்ன வயது உனக்கு?
இருபத்தியிரண்டு.
இதையெல்லாம் எப்போது கேட்டாய்?
கேட்கவில்லை!
இருபத்தியிரண்டு வயது இளைஞன் இப்படிப் பேசமாட்டான். நீ அசாதாரணமானவன்.
இருக்கலாம்.
இதை நான் பாராட்டாகச் சொல்லவில்லை!
நானும் அப்படி எடுத்துக் கொள்ளவில்லை.
...
எவ்வளவு பணமிருக்கிறது கையில்?
பதினேழு டாலர் முப்பது செண்ட்.
நாசமாய்ப் போக! நாசமாய்ப் போக நீ! நான் உன்னை இங்கு வரச் சொன்னேனா! எனக்கு ட்ராஃப்ட்ஸ்மேன் தேவையில்லை! இங்கு வரைய ஏதுமில்லை! எனக்கும் இங்கிருப்பவர்களுக்கும் அரசு உதவியின்றி பிழைப்பதே பெரும்பாடு. இப்படி ஓர் கனவுலகில் வாழ்பவனைப் பட்டினிபோட எனக்கென்ன தலைஎழுத்தா? இந்தப் பொறுப்பு எனக்கு வேண்டாம். இந்த எழவையெல்லாம் நான் மீண்டும் பார்ப்பேன் என நினைத்ததேயில்லை. இதெல்லாம் மூட்டைகட்டி வெகு நாளாகிவிட்டது. இருக்கிற மடையர்களை வைத்துக் கொண்டு ஏதொ பிழைப்பு ஓடுகிறது. இது போதும் எனக்கு.
இங்கு ஏன் வந்தாய்? அழிந்து போகவா? உன்னைப் பாழடித்துக் கொள்ள முடிவு செய்துவிட்டாய் இல்லையா? உனக்கே அது நன்றாகத் தெரியுமில்லையா? அதற்கு நான் உதவுகிறேன். எனக்கு உன்னைப் பார்க்கவே பிடிக்கவில்லை. எனக்கு உன்னைப் பிடிக்கவில்லை. எனக்கு உன் முகம் பிடிக்கவில்லை. கொஞ்சமும் வெட்கமற்ற தற்பெருமைக்காரன் நீ. வெட்கமற்ற பிடிவாதக்காரன் நீ! உன் மீது அபாரமான நம்பிக்கை உனக்கு.
இருபத்தி இரண்டு வருடங்களுக்கு முன்னால் என்றால் உன் முகத்தில் குத்தியிருப்பேன். நாளை காலை ஒன்பது மணிக்கு வேலைக்கு வருகிறாய்.
சரி என எழுந்தான் ரோர்க்.
வாரத்துக்கு 15 டாலர். அவ்வளவுதான் தருவேன்.
சரி!
நீ ஒரு வடிகட்டின முட்டாள்! நீ வேறு யாரிடமாவது போயிருக்க வேண்டும். போனாயோ கொன்றுவிடுவேன் உன்னை. உன் பெயரென்ன?
ஹோவர்ட் ரோர்க்.
லேட்டாக வந்தால் வேலையிருக்காது!
சரி!
தன் படங்களை எடுக்க கை நீட்டினான் ரோர்க். தொடாதே அதை என்று அலறினார் கேமரோன். நீ போகலாம் என்றார்.
...ரோர்க் எனக்கு அறிமுகமானது முப்பது வருடங்களுக்கு முன்னால். புத்தகத்தின் முதல் வரியில் அறிமுகமான நொடியில் வளர்ந்து வளர்ந்து விசுவரூபமாய் மனதில் நிறைந்து போனான். அன்றாட வாழ்வில் இது நான், இது என் வாழ்க்கை, இது எனக்கானது, இது என் விருப்பம், இதை எதற்காகவும் யாருக்காகவும் நான் ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும் என்ற செருக்கோடு நெஞ்சு நிமிர்த்தி முழுமையாய் வாழும் சிலரை பார்க்கும்போதும், அப்படியின்றி தன் அடையாளம் தொலைத்து வாழும் நம் போன்றோரை அவ்வப்போது நினைக்கையிலும் ஒரு ஓரம் கைகட்டி நின்று மனதுள் இவன் சிரிப்பான்.
பெரிமேசனும், ஜேம்ஸ் ஹாட்லி சேசும், அலிஸ்டர் மக்ளீனும் படித்துக் கொண்டிருந்த என்னை இவனுக்கு அறிமுகம் செய்தார் அலுவலகத்தில் லைப்ரரியன்.
த ஃபௌண்டன் ஹெட். அய்ன் ராண்டின் புதினம். 1943ல் வெளியானது. வெளியாகுமுன் 12 பதிப்பகத்தாரால் நிராகரிக்கப்பட்டது. ஆர்ச்சிபால்ட் ஓக்டன் என்ற எடிட்டர் தன் அலுவலகத்துக்கு தந்தியடித்தார். ‘இந்தப் புத்தகம் உங்களுக்கானதல்ல எனக் கருதுவீர்களேயானல் நானும் உங்களுக்கான எடிட்டர் அல்ல’வென.
வெளியான பின்னரோ 50 லட்சம் புத்தகங்களுக்கு மேல் விற்பனையானது. 1949ல் கேரி கூப்பர் நடிக்க திரைப்படமாக வெளியானது. பல மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டது. அறுபத்தேழு வருடங்களுக்குப் பின்னும் இன்னும் மீள் பதிப்பில் உள்ளது.
தன் வாழ்க்கை குறித்த தெளிந்த முடிவோடு, எத்தனை இடரிலும் சமுதாயச் சாக்கடையில் ஓர் புழுவாக மறுக்கும் ரோர்க், தன் தகுதி மீறி யாரோவாக ஆசைப்பட்டு, அது தன்னால் இயலாது என்பதை உணராத பீட்டர் கீட்டிங், தன் சுய முன்னேற்றத்துக்காக மற்றவரை அழிக்கவும் தயங்காத எல்ஸ்வொர்த் டூஹே என்ற கலை விமரிசகன், ஏழ்மையிலிருந்து பெரும் பணக்காரனாகி, பத்திரிகை அதிபரான வைனண்ட், கலாச்சார விலங்கையுடைத்து இயற்கையோடியைந்த நவீன கட்டிடக் கலையின் முன்னோடியாக கேமரோன் இவர்களைச் சுற்றிப் பிணைந்த கதை.
ரோர்க்கினுடையதைப் போன்ற அதி உன்னதமான படைப்புகள் அதைப் போற்றத் தெரியாத சமுதாயத்துக்கு அளிக்கப்படக்கூடாது என்பதில் தெளிவாயிருக்கும் டோமினிக், அத்தகையதோர் உன்னதமான புரிதல் கொண்ட சமுதாயம் கிட்டாதென்பதால், ரோர்க்கைப் போன்ற உன்னதங்களை ஒதுக்கி கீட்டிங் போன்றவர்களைப் பாராட்டும் யதார்த்த உலகுக்கு முற்று முழுதாகத் தன்னை அர்ப்பணிக்கிறாள்.
கீட்டிங்கிடம் வலியச் சென்று திருமணம் செய்ய சம்மதித்த நொடியிலிருந்து மனமுவந்து அவனுக்குத் தன்னை அர்ப்பணிக்கிறாள். ரோர்க்குக்கு எதிராக அவனுடைய வாடிக்கையளர்களையும் கீட்டிங்கின்பால் ஈர்க்கிறாள். புகழுக்கும் பணத்துக்கும் ஆசைப்பட்ட கணவனுக்காக அவன் விருப்பப்படி வைனாண்டுடன் உறவு கொள்ள சம்மதிக்கும் டோமினிக்கை, கீட்டிங்கின் வாயடைத்து, டைவர்ஸ் பெற வைத்து வைனாட் திருமணம் செய்துக் கொள்கிறான். காலப்போக்கில் சிறிது சிறிதாக ரோர்க்கைப் போல் தனக்கான மதிப்புணர்ந்த டோமினிக் சமுதாயப் போலி முகங்களை புறக்கணித்து ரோர்க்கின் மனைவியாகிறாள்.
கலாச்சாரம் என்ற கருப்புக் கண்ணாடியணிந்து படித்தாலும், அய்ன் ராண்டின் எழுத்தில் டோமினிக்கை ஒரு மாற்றுக் கூட கம்மியாக நினைக்கத் தோன்றாது. மாறாக தனக்கென உண்டான அனைத்தையும் விட்டுக் கொடுத்து, யாருக்கோவாக வாழத் தொடங்கிய ஒரு அப்பாவிப் பெண் மெது மெதுவாக தன்னை உணரும் மாற்றம் அவள் மீதான மதிப்பை வானளாவ உயர்த்தும்.
1968ல் இந்தப் புத்தக ஆசிரியர் திருமதி அய்ன் ரேண்ட் சொன்னது இது! இன்றளவும் இது நிலைத்திருப்பதிலிருந்தே எத்தகைய தொலை நோக்கு உடையவர் அவர் என்பது விளங்கும்.
‘ஒவ்வொரு தலை முறையிலும் மிகச் சிலரே மனிதனின் முறையான உயர்வை உணரவும் அதை அடையவும் செய்கிறார்கள் என்பதும் ஏனையவர்கள் அதற்கு துரோகம் செய்கிறார்கள் என்பதும் முக்கியமல்ல. அந்தச் சிறுபான்மையினரே இந்த உலகத்தை நடத்துகிறார்கள். வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம் தருகிறார்கள்.’அந்த ஒரு சிலரை மட்டுமே நான் சந்திக்க விழைகிறேன். இதரர்களைப் பற்றி எனக்கு எந்த அக்கரையும் இல்லை. எனக்கோ இந்தப் புத்தகத்துக்கோ அவர்கள் துரோகம் செய்யவில்லை. தன்னுடைய ஆன்மாவிற்கு துரோகம் செய்கிறார்கள்’
இந்தியப் பதிப்பு என்று சாணிப் பேப்பரானாலும் 150ரூக்கு லேண்ட்மார்க்கிலும், ஹிக்கின்பாதம்ஸிலும் கிடைக்கிறது. படிக்கத் தொடங்கினால் நாம் என்னவாக இருக்கிறோம்? ஏன் ரோர்க்காக இல்லை? என நம்மை நமக்கு உணர்த்தும் என்பது நிச்சயம்.
