என்ன வேண்டும்? எரிந்து விழுந்தார் கேமரான்.
உங்களிடம் வேலை செய்ய விரும்புகிறேன் என்றான் ரோர்க். குரல் என்னவோ ‘உங்களிடம் வேலை செய்ய விரும்புகிறேன்’ என ஒலித்தாலும், த்வனி ‘உங்களிடம் வேலை செய்யப்போகிறேன்’ என உணர்த்தியது.
அப்படியா? மிகப் பெரிய, சிறந்த கட்டிடக் கலைஞர்கள் உன்னை ஏற்கவில்லையா?
நான் யாரையும் தேடிப் போகவில்லை.
இதற்கு முன் எங்கு வேலை செய்தாய்?
இது தான் தொடக்கம்.
உங்களிடம் வேலை செய்ய விரும்புகிறேன் என்றான் ரோர்க். குரல் என்னவோ ‘உங்களிடம் வேலை செய்ய விரும்புகிறேன்’ என ஒலித்தாலும், த்வனி ‘உங்களிடம் வேலை செய்யப்போகிறேன்’ என உணர்த்தியது.
அப்படியா? மிகப் பெரிய, சிறந்த கட்டிடக் கலைஞர்கள் உன்னை ஏற்கவில்லையா?
நான் யாரையும் தேடிப் போகவில்லை.
இதற்கு முன் எங்கு வேலை செய்தாய்?
இது தான் தொடக்கம்.
என்ன படித்திருக்கிறாய்.
மூன்று வருடங்கள் ஸ்டாண்டனில் படித்தேன்.
ஓ! தங்களுக்கு படிப்பை முடிக்க சோம்பலாயிருந்ததோ?
இல்லை. நான் வெளியேற்றப்பட்டேன்.
க்ரேட்! கேமரோன் டெஸ்கை ஓங்கி அறைந்தபடி சிரித்தார். அருமை.! ஸ்டாண்டன் என்ற பேன் கூட்டுக்கு உதாவாக்கரையான நீ ஹென்றி கேமரோனுக்கு வேலை செய்யப் போகிறாயா? உருப்படாதவர்களுக்கான இடம் இதுவென முடிவு செய்தாயா? எதற்காக உதைத்து எறியப் பட்டாய்? குடி? பெண்? எது?
இவை! என்றபடி தன்னுடைய வரை படங்களை நீட்டினான்.
.....
இந்தக் கட்டிடத்தைப் பார். முட்டாளே! இப்படி ஒரு கற்பனையை வைத்துக் கொண்டு அதை எப்படி செயல்படுத்துவதெனத் தெரியவில்லை உனக்கு! மிக மிக அற்புதமான ஒன்றை கண்டெடுத்து அதை இப்படியா பாழடிப்பாய்? நீ கற்பதற்கு எவ்வளவு இருக்கிறது தெரியுமா?
தெரியும். அதற்காகத்தான் இங்கு நிற்கிறேன்.
இதைப் பார்! உன் வயதில் நான் இதைச் செய்திருக்கக் கூடாதாவெனத் தோன்றுகிறது. ஆனால் நீ ஏன் இப்படிக் கெடுத்து வைத்திருக்கிறாய்? நான் இதை வைத்துக் கொண்டு என்ன செய்வேன் தெரியுமா? பார்! உன் படிக்கட்டுகளை விட்டொழி! புகைப் போக்கியைத் தகர்த்தெறி! இதற்கான அடித்தளம் போடும்போது.....
வெகு நேரம் பேசினார் கேமரோன். எரிந்து விழுந்தார். ஒரு படமும் திருப்திப் படுத்தவில்லை. ஆயினும் ரோர்க் அந்தப் படங்களைக் குறித்தான பேச்சு அதிலுள்ளவை என்னமோ ஏற்கனவே கட்டுமானத்தில் இருப்பதைப் போல் பேசப்படுவதை உணர்ந்தான்.
அப்படிப் பார்க்காதே என்னை! வேறே எதையும் பார்க்க முடியாதா உன்னால்? ஏன் கட்டிடக் கலைஞனாக விழைந்தாய்?
அப்போது எனக்குத் தெரியவில்லை. ஒரு வேளை எனக்கு கடவுள் நம்பிக்கையில்லாததால் இருக்கலாம்.
அர்த்தமுடன் பேசு!
நான் இந்தப் பூமியைக் காதலிக்கிறேன். இதை மட்டுமே காதலிக்கிறேன். இதன் உருவம் எனக்குப் பிடிக்கவில்லை. அதை மாற்ற விழைகிறேன்.
யாருக்காக?
எனக்காக?
என்ன வயது உனக்கு?
இருபத்தியிரண்டு.
இதையெல்லாம் எப்போது கேட்டாய்?
அர்த்தமுடன் பேசு!
நான் இந்தப் பூமியைக் காதலிக்கிறேன். இதை மட்டுமே காதலிக்கிறேன். இதன் உருவம் எனக்குப் பிடிக்கவில்லை. அதை மாற்ற விழைகிறேன்.
யாருக்காக?
எனக்காக?
என்ன வயது உனக்கு?
இருபத்தியிரண்டு.
இதையெல்லாம் எப்போது கேட்டாய்?
கேட்கவில்லை!
இருபத்தியிரண்டு வயது இளைஞன் இப்படிப் பேசமாட்டான். நீ அசாதாரணமானவன்.
இருக்கலாம்.
இதை நான் பாராட்டாகச் சொல்லவில்லை!
நானும் அப்படி எடுத்துக் கொள்ளவில்லை.
...
எவ்வளவு பணமிருக்கிறது கையில்?
பதினேழு டாலர் முப்பது செண்ட்.
நாசமாய்ப் போக! நாசமாய்ப் போக நீ! நான் உன்னை இங்கு வரச் சொன்னேனா! எனக்கு ட்ராஃப்ட்ஸ்மேன் தேவையில்லை! இங்கு வரைய ஏதுமில்லை! எனக்கும் இங்கிருப்பவர்களுக்கும் அரசு உதவியின்றி பிழைப்பதே பெரும்பாடு. இப்படி ஓர் கனவுலகில் வாழ்பவனைப் பட்டினிபோட எனக்கென்ன தலைஎழுத்தா? இந்தப் பொறுப்பு எனக்கு வேண்டாம். இந்த எழவையெல்லாம் நான் மீண்டும் பார்ப்பேன் என நினைத்ததேயில்லை. இதெல்லாம் மூட்டைகட்டி வெகு நாளாகிவிட்டது. இருக்கிற மடையர்களை வைத்துக் கொண்டு ஏதொ பிழைப்பு ஓடுகிறது. இது போதும் எனக்கு.
இங்கு ஏன் வந்தாய்? அழிந்து போகவா? உன்னைப் பாழடித்துக் கொள்ள முடிவு செய்துவிட்டாய் இல்லையா? உனக்கே அது நன்றாகத் தெரியுமில்லையா? அதற்கு நான் உதவுகிறேன். எனக்கு உன்னைப் பார்க்கவே பிடிக்கவில்லை. எனக்கு உன்னைப் பிடிக்கவில்லை. எனக்கு உன் முகம் பிடிக்கவில்லை. கொஞ்சமும் வெட்கமற்ற தற்பெருமைக்காரன் நீ. வெட்கமற்ற பிடிவாதக்காரன் நீ! உன் மீது அபாரமான நம்பிக்கை உனக்கு.
இருபத்தி இரண்டு வருடங்களுக்கு முன்னால் என்றால் உன் முகத்தில் குத்தியிருப்பேன். நாளை காலை ஒன்பது மணிக்கு வேலைக்கு வருகிறாய்.
சரி என எழுந்தான் ரோர்க்.
வாரத்துக்கு 15 டாலர். அவ்வளவுதான் தருவேன்.
சரி!
நீ ஒரு வடிகட்டின முட்டாள்! நீ வேறு யாரிடமாவது போயிருக்க வேண்டும். போனாயோ கொன்றுவிடுவேன் உன்னை. உன் பெயரென்ன?
ஹோவர்ட் ரோர்க்.
லேட்டாக வந்தால் வேலையிருக்காது!
சரி!
தன் படங்களை எடுக்க கை நீட்டினான் ரோர்க். தொடாதே அதை என்று அலறினார் கேமரோன். நீ போகலாம் என்றார்.
...ரோர்க் எனக்கு அறிமுகமானது முப்பது வருடங்களுக்கு முன்னால். புத்தகத்தின் முதல் வரியில் அறிமுகமான நொடியில் வளர்ந்து வளர்ந்து விசுவரூபமாய் மனதில் நிறைந்து போனான். அன்றாட வாழ்வில் இது நான், இது என் வாழ்க்கை, இது எனக்கானது, இது என் விருப்பம், இதை எதற்காகவும் யாருக்காகவும் நான் ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும் என்ற செருக்கோடு நெஞ்சு நிமிர்த்தி முழுமையாய் வாழும் சிலரை பார்க்கும்போதும், அப்படியின்றி தன் அடையாளம் தொலைத்து வாழும் நம் போன்றோரை அவ்வப்போது நினைக்கையிலும் ஒரு ஓரம் கைகட்டி நின்று மனதுள் இவன் சிரிப்பான்.
பெரிமேசனும், ஜேம்ஸ் ஹாட்லி சேசும், அலிஸ்டர் மக்ளீனும் படித்துக் கொண்டிருந்த என்னை இவனுக்கு அறிமுகம் செய்தார் அலுவலகத்தில் லைப்ரரியன்.
த ஃபௌண்டன் ஹெட். அய்ன் ராண்டின் புதினம். 1943ல் வெளியானது. வெளியாகுமுன் 12 பதிப்பகத்தாரால் நிராகரிக்கப்பட்டது. ஆர்ச்சிபால்ட் ஓக்டன் என்ற எடிட்டர் தன் அலுவலகத்துக்கு தந்தியடித்தார். ‘இந்தப் புத்தகம் உங்களுக்கானதல்ல எனக் கருதுவீர்களேயானல் நானும் உங்களுக்கான எடிட்டர் அல்ல’வென.
வெளியான பின்னரோ 50 லட்சம் புத்தகங்களுக்கு மேல் விற்பனையானது. 1949ல் கேரி கூப்பர் நடிக்க திரைப்படமாக வெளியானது. பல மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டது. அறுபத்தேழு வருடங்களுக்குப் பின்னும் இன்னும் மீள் பதிப்பில் உள்ளது.
தன் வாழ்க்கை குறித்த தெளிந்த முடிவோடு, எத்தனை இடரிலும் சமுதாயச் சாக்கடையில் ஓர் புழுவாக மறுக்கும் ரோர்க், தன் தகுதி மீறி யாரோவாக ஆசைப்பட்டு, அது தன்னால் இயலாது என்பதை உணராத பீட்டர் கீட்டிங், தன் சுய முன்னேற்றத்துக்காக மற்றவரை அழிக்கவும் தயங்காத எல்ஸ்வொர்த் டூஹே என்ற கலை விமரிசகன், ஏழ்மையிலிருந்து பெரும் பணக்காரனாகி, பத்திரிகை அதிபரான வைனண்ட், கலாச்சார விலங்கையுடைத்து இயற்கையோடியைந்த நவீன கட்டிடக் கலையின் முன்னோடியாக கேமரோன் இவர்களைச் சுற்றிப் பிணைந்த கதை.
ரோர்க்கினுடையதைப் போன்ற அதி உன்னதமான படைப்புகள் அதைப் போற்றத் தெரியாத சமுதாயத்துக்கு அளிக்கப்படக்கூடாது என்பதில் தெளிவாயிருக்கும் டோமினிக், அத்தகையதோர் உன்னதமான புரிதல் கொண்ட சமுதாயம் கிட்டாதென்பதால், ரோர்க்கைப் போன்ற உன்னதங்களை ஒதுக்கி கீட்டிங் போன்றவர்களைப் பாராட்டும் யதார்த்த உலகுக்கு முற்று முழுதாகத் தன்னை அர்ப்பணிக்கிறாள்.
கீட்டிங்கிடம் வலியச் சென்று திருமணம் செய்ய சம்மதித்த நொடியிலிருந்து மனமுவந்து அவனுக்குத் தன்னை அர்ப்பணிக்கிறாள். ரோர்க்குக்கு எதிராக அவனுடைய வாடிக்கையளர்களையும் கீட்டிங்கின்பால் ஈர்க்கிறாள். புகழுக்கும் பணத்துக்கும் ஆசைப்பட்ட கணவனுக்காக அவன் விருப்பப்படி வைனாண்டுடன் உறவு கொள்ள சம்மதிக்கும் டோமினிக்கை, கீட்டிங்கின் வாயடைத்து, டைவர்ஸ் பெற வைத்து வைனாட் திருமணம் செய்துக் கொள்கிறான். காலப்போக்கில் சிறிது சிறிதாக ரோர்க்கைப் போல் தனக்கான மதிப்புணர்ந்த டோமினிக் சமுதாயப் போலி முகங்களை புறக்கணித்து ரோர்க்கின் மனைவியாகிறாள்.
கலாச்சாரம் என்ற கருப்புக் கண்ணாடியணிந்து படித்தாலும், அய்ன் ராண்டின் எழுத்தில் டோமினிக்கை ஒரு மாற்றுக் கூட கம்மியாக நினைக்கத் தோன்றாது. மாறாக தனக்கென உண்டான அனைத்தையும் விட்டுக் கொடுத்து, யாருக்கோவாக வாழத் தொடங்கிய ஒரு அப்பாவிப் பெண் மெது மெதுவாக தன்னை உணரும் மாற்றம் அவள் மீதான மதிப்பை வானளாவ உயர்த்தும்.
1968ல் இந்தப் புத்தக ஆசிரியர் திருமதி அய்ன் ரேண்ட் சொன்னது இது! இன்றளவும் இது நிலைத்திருப்பதிலிருந்தே எத்தகைய தொலை நோக்கு உடையவர் அவர் என்பது விளங்கும்.
‘ஒவ்வொரு தலை முறையிலும் மிகச் சிலரே மனிதனின் முறையான உயர்வை உணரவும் அதை அடையவும் செய்கிறார்கள் என்பதும் ஏனையவர்கள் அதற்கு துரோகம் செய்கிறார்கள் என்பதும் முக்கியமல்ல. அந்தச் சிறுபான்மையினரே இந்த உலகத்தை நடத்துகிறார்கள். வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம் தருகிறார்கள்.’
அந்த ஒரு சிலரை மட்டுமே நான் சந்திக்க விழைகிறேன். இதரர்களைப் பற்றி எனக்கு எந்த அக்கரையும் இல்லை. எனக்கோ இந்தப் புத்தகத்துக்கோ அவர்கள் துரோகம் செய்யவில்லை. தன்னுடைய ஆன்மாவிற்கு துரோகம் செய்கிறார்கள்’
இந்தியப் பதிப்பு என்று சாணிப் பேப்பரானாலும் 150ரூக்கு லேண்ட்மார்க்கிலும், ஹிக்கின்பாதம்ஸிலும் கிடைக்கிறது. படிக்கத் தொடங்கினால் நாம் என்னவாக இருக்கிறோம்? ஏன் ரோர்க்காக இல்லை? என நம்மை நமக்கு உணர்த்தும் என்பது நிச்சயம்.
84 comments:
படிச்சிட்டு நானும் ரோர்க்கா மாற முயற்சி பண்றேன்..
i luv roark and ayn rand..!!! hv to read yer post yet... seems to be an excellent attempt sir.. shall come back again..
நல்ல அறிமுகம்,படிக்கிறேன்
படிக்கிறேன்
இதற்குத் தானே ஆசைப்பட்டேன்..
மிக அருமையான அறிமுகம்...
நன்றி
தொடுவதற்கு பயப்பட்ட புத்தகங்களில் இவருடையதும் ஒன்று..! இனி கோதாவில் குதிக்கிறேன். அடிக்கடி இது போன்ற பகிர்தல்கள் தேவை சார்..:)
அறிமுகத்திற்கு நன்றி பாலா அண்ணே... நானும் படிக்க முயல்கிறேன்.
அருமையான விமர்சனம் சார்.
ஆங்கில புதினங்களுள் மிகச் சிறந்தது என்று இதைக் குறிப்பிடலாம். அருமையான விமர்சனம்.
தொடருங்கள் தலைவரே!
புதிய அறிமுகத்திற்கு நன்றி.
//பெரிமேசனும், ஜேம்ஸ் ஹாட்லி சேசும், அலிஸ்டர் மக்ளீனும் படித்துக் கொண்டிருந்த என்னை இவனுக்கு அறிமுகம் செய்தார் அலுவலகத்தில் லைப்ரரியன்.//
ஹி...ஹி...நம்ம கூட்டாளிக ஹெரால்ட் ராபின்சும்,ஷிட்னி ஷெல்டனும்.படிக்க இலகுவாகவும் கூட கதையினூடே பலான வில்லன்கள்:)
நானும் வாங்கிப்படிக்கணும்...னு சொன்னா நம்பவாப்போறீங்க...
அருமையான பகிர்வு பாலா சார்.மனதிற்குள் உயர்ந்து கொண்டே இருக்கிறீர்கள்..
ரோர்க்காக மாற விழைய வைத்த பதிவு ...
அயன் ராண்ட் படித்ததில்லை
ஆனால் உங்கள் பதிவு ஆசை ஏற்படுத்துகிறது பாலா சார்
பின்னுட்டம் போட்டுவிட்டு ஓடிவிட்டேன்.எப்ப பார்த்தாலும் அயன் ராண்ட் கையில வச்சிகிட்டு ஹாஸ்டலில் தபோ வரதன் என்ற யாழ்ப்பாண தமிழன் இருந்தான்.
நினைச்சாலும் இப்பவெல்லாம் அயன்ராண்ட் படிக்க இயலுமா எனத் தெரியவில்லை.
அண்ணே! பொதுவாகவே பெயர்ப்புத் தமிழைப் படிப்பது கொஞ்சம் சிரமம் தான். கம்னியூச புத்தகங்களைப் படிப்பது போல இருக்கும். ஆனால் உங்களின் அறிமுக சுவாரஸ்யம் நன்றாக இருக்கிறது. கம்ப்யூட்டரும், டிவியும் வந்த பிறகு நாவல் புத்தகங்கள் படிப்பவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு. நான் ராஜேஸ்குமார் நாவலைத் தவிர வேறு யாருடையதையும் படிக்க மாட்டேன்.அதுவும் பஸ்பயணத்தின் போது மட்டும் தான். இதற்காகவே டிவி இல்லாத பஸ்ஸாகப் பார்த்து ஏறிச்செல்வேன். ஆனாலும் யாராவது மிச்சமிருப்பார்கள்.
புத்தகம் பற்றிய உங்கள் அறிமுக உரையே படிக்கும் ஆவலை தூண்டுகிறது, விரைவில் படிக்க முயற்சிக்கிறேன்
பகிர்வுக்கு நன்றி
அறிமுகத்திற்கு நன்றி அய்யா..
nalla pagirvu.
படித்துவிடுகிறேன் :)
படிக்கிறேன்
plz remove word verification in ur onother kavithai blog
am not able to post comment
விமர்சனம் படிக்க தூண்டுகிறது !!
அறிமுகத்திற்கு நன்றி சார்
நானும் பெருமையா ஃபவுண்டன் ஹெட் வாங்கி வச்சிட்டு பத்து பக்கத்துக்கு மேல நகர முடியலை..
நீங்கல்லாம் தெய்வம் சார்...
நமக்கெல்லாம் ஃப்ரடெரிக் ஃபோர்சித்தும், ஹெரால்ட் ராபின்சனும்தான்..
அகல்விளக்கு said...
/படிச்சிட்டு நானும் ரோர்க்கா மாற முயற்சி பண்றேன்../
படிச்சா போதும் :))
/கலகலப்ரியா said...
i luv roark and ayn rand..!!! hv to read yer post yet... seems to be an excellent attempt sir.. shall come back again..//
waiting:-ss
ஜெரி ஈசானந்தா. said...
நல்ல அறிமுகம்,படிக்கிறேன்//
நன்றி ஜெர்ரி
T.V.ராதாகிருஷ்ணன் said...
படிக்கிறேன்//
சார். நீங்க படிச்சதில்லையா?
ஈரோடு கதிர் said...
இதற்குத் தானே ஆசைப்பட்டேன்..
மிக அருமையான அறிமுகம்...
நன்றி//
ம்கும். எழுதத் தூண்டினதுக்கு நான் நன்றி சொல்லமாட்டன். தூக்கம் போயிடும். இன்னொருவாட்டி படிக்கிறதுக்குள்ள.:))
【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
தொடுவதற்கு பயப்பட்ட புத்தகங்களில் இவருடையதும் ஒன்று..! இனி கோதாவில் குதிக்கிறேன். அடிக்கடி இது போன்ற பகிர்தல்கள் தேவை சார்..:)//
கண்டிப்பா படிக்கணும். முயற்சிக்கிறேன் சங்கர்.
ரோஸ்விக் said...
அறிமுகத்திற்கு நன்றி பாலா அண்ணே... நானும் படிக்க முயல்கிறேன்.//
பிரபா டவுன்லோட் பண்ணிட்டாராம். படிங்க.
அக்பர் said...
அருமையான விமர்சனம் சார்.//
நன்றி அக்பர்.
ச.செந்தில்வேலன் said...
ஆங்கில புதினங்களுள் மிகச் சிறந்தது என்று இதைக் குறிப்பிடலாம். அருமையான விமர்சனம்.//
ஆமாங்க செந்தில். நன்றி.
தண்டோரா ...... said...
தொடருங்கள் தலைவரே!//
நன்றி தலைவரே:)
சைவகொத்துப்பரோட்டா said...
புதிய அறிமுகத்திற்கு நன்றி.//
மகிழ்ச்சி என்னுடையது:)
ராஜ நடராஜன் said...
/ ஹி...ஹி...நம்ம கூட்டாளிக ஹெரால்ட் ராபின்சும்,ஷிட்னி ஷெல்டனும்.படிக்க இலகுவாகவும் கூட கதையினூடே பலான வில்லன்கள்:)//
சார். ஸ்டோன் ஃபார் டானி ஃபிஷர் படிச்சிருக்கீங்களா? ஷிட்னிட எல்லா புக்கும் படிச்சிருக்கேன்:)
க.பாலாசி said...
நானும் வாங்கிப்படிக்கணும்...னு சொன்னா நம்பவாப்போறீங்க...//
நான் தரேன். படிச்சிட்டு கதிர் கிட்ட ஒப்பிச்சிடு:))
பா.ராஜாராம் said...
அருமையான பகிர்வு பாலா சார்.மனதிற்குள் உயர்ந்து கொண்டே இருக்கிறீர்கள்..//
மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் பா.ரா.
thenammailakshmanan said...
ரோர்க்காக மாற விழைய வைத்த பதிவு ...
அயன் ராண்ட் படித்ததில்லை
ஆனால் உங்கள் பதிவு ஆசை ஏற்படுத்துகிறது பாலா சார்//
தவராம படிங்கம்மா:)
ராஜ நடராஜன் said...
பின்னுட்டம் போட்டுவிட்டு ஓடிவிட்டேன்.எப்ப பார்த்தாலும் அயன் ராண்ட் கையில வச்சிகிட்டு ஹாஸ்டலில் தபோ வரதன் என்ற யாழ்ப்பாண தமிழன் இருந்தான்.
நினைச்சாலும் இப்பவெல்லாம் அயன்ராண்ட் படிக்க இயலுமா எனத் தெரியவில்லை.//
படிக்கலாம் சார். என்ன கட்டிப் போடும் அவ்வளவுதான்.
இப்படிக்கு நிஜாம்.., said...
அண்ணே! பொதுவாகவே பெயர்ப்புத் தமிழைப் படிப்பது கொஞ்சம் சிரமம் தான். கம்னியூச புத்தகங்களைப் படிப்பது போல இருக்கும். ஆனால் உங்களின் அறிமுக சுவாரஸ்யம் நன்றாக இருக்கிறது. கம்ப்யூட்டரும், டிவியும் வந்த பிறகு நாவல் புத்தகங்கள் படிப்பவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு. நான் ராஜேஸ்குமார் நாவலைத் தவிர வேறு யாருடையதையும் படிக்க மாட்டேன்.அதுவும் பஸ்பயணத்தின் போது மட்டும் தான். இதற்காகவே டிவி இல்லாத பஸ்ஸாகப் பார்த்து ஏறிச்செல்வேன். ஆனாலும் யாராவது மிச்சமிருப்பார்கள்.//
நன்றி நிஜாம்.
ஆரூரன் விசுவநாதன் said...
புத்தகம் பற்றிய உங்கள் அறிமுக உரையே படிக்கும் ஆவலை தூண்டுகிறது, விரைவில் படிக்க முயற்சிக்கிறேன்
பகிர்வுக்கு நன்றி//
நன்றி ஆரூரன்.
திவ்யாஹரி said...
அறிமுகத்திற்கு நன்றி அய்யா..//
நன்றி திவ்யா.:))
வெற்றி-[க்]-கதிரவன் said...
nalla pagirvu.//
நன்றி
Subankan said...
படித்துவிடுகிறேன் :)//
நீங்களெல்லாம் அவசியம் படிக்கணும் சுபாங்கன்.
பிரியமுடன் பிரபு said...
படிக்கிறேன்//
நன்றி பிரபு:)). கிணற்றுத் தவளையில் கவிதை போடுறதேயில்லை.
யூர்கன் க்ருகியர் said...
விமர்சனம் படிக்க தூண்டுகிறது !!
அறிமுகத்திற்கு நன்றி சார்//
நன்றி யூர்கன்.
முகிலன் said...
நானும் பெருமையா ஃபவுண்டன் ஹெட் வாங்கி வச்சிட்டு பத்து பக்கத்துக்கு மேல நகர முடியலை..
நீங்கல்லாம் தெய்வம் சார்...
நமக்கெல்லாம் ஃப்ரடெரிக் ஃபோர்சித்தும், ஹெரால்ட் ராபின்சனும்தான்..//
Dogs of war, carpet baggers, stone for danny fisher padichchirukkeengala:)
அருமையான புத்தகத்தை பற்றி எழுதி இருக்கீங்க. நன்றி.
அண்ணே எதாவது தமிழ் புத்தகமுன்னா சொல்லுங்க
எனக்கு தேவையன புத்தகம்..வாங்கி படிக்கத் துவங்குகிறேன்..மிக்க நன்றி ஐயா
நம்மூரு பாலகுமாரன் இவரை அதிகமாக படித்திருப்பார் போலும்...அவர் சாயலிலேயே தமிழ்ல எழுதறார்னு நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்...கோபமான பெண் எழ்த்தாளி என்றும் கேள்விப் பட்டுள்ளேன்...படித்ததில்லை
செம இண்ட்ரஸ்டிங்.. அசத்துறீங்க
நல்ல விமர்சனம். வாங்க வேண்டிய புத்தகப் பட்டியலில் சேர்த்து விட்டேன். நன்றி.
சுவை
இப்படிக்கு இன்னோரு ரோர்க் :)
25th vote
மிக அருமையான அறிமுகம்...தொடருங்கள்.....
Chitra said...
/அருமையான புத்தகத்தை பற்றி எழுதி இருக்கீங்க. நன்றி.//
நன்றிங்க சித்ரா
நசரேயன் said...
/அண்ணே எதாவது தமிழ் புத்தகமுன்னா சொல்லுங்க//
இந்த ப்ரயோக விவேகம்னு ஒரு நூல். ஆறுமுக நாவலர் எழுதினது 1882 ல பதிப்பானது. அதுல என்ன சொல்றாருன்னா..இருங்க இருங்க அண்ணாச்சி எங்க ஓடுறீங்க. தமிழ் தான் இது:))
புலவன் புலிகேசி said...
எனக்கு தேவையன புத்தகம்..வாங்கி படிக்கத் துவங்குகிறேன்..மிக்க நன்றி ஐயா//
அவசியம் படிக்கணும் புலிகேசி:)
ஸ்ரீராம். said...
நம்மூரு பாலகுமாரன் இவரை அதிகமாக படித்திருப்பார் போலும்...அவர் சாயலிலேயே தமிழ்ல எழுதறார்னு நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்...கோபமான பெண் எழ்த்தாளி என்றும் கேள்விப் பட்டுள்ளேன்...படித்ததில்லை//
எப்படி அப்படிச் சொன்னாங்கனு தெரியலை. படிக்கணும் பாருங்க.
கவிதை காதலன் said...
செம இண்ட்ரஸ்டிங்.. அசத்துறீங்க//
நன்றிங்க. மின்னஞ்சலுக்கும்:)
விக்னேஷ்வரி said...
நல்ல விமர்சனம். வாங்க வேண்டிய புத்தகப் பட்டியலில் சேர்த்து விட்டேன். நன்றி.//
வாங்க விக்னேஷ்வரி. நன்றிங்க.
D.R.Ashok said...
சுவை
இப்படிக்கு இன்னோரு ரோர்க் :)
வாங்க அசோக்:). அப்படியா? ஒன் மோர் தென்.
தியாவின் பேனா said...
மிக அருமையான அறிமுகம்...தொடருங்கள்.....//
நன்றி தியா
பாலா சார்,
ஒரு தொடர் விளையாட்டிற்கு அழைத்திருக்கிறேன் சார்.நேரம் வாய்க்கிறபோது தளம் வாங்களேன்.
சார்... மன்னிச்சிடுங்க சார்... நேத்து ஒரு மண் லாரில மாட்டிக்கிட்டேன்.... காமென்ட் போட முடியலை...
brilliantly written sir... it's really really good...
dominique + howard..... there're no words to describe them... and of course.. the greatest *ayn rand*... raatchasi..!
பா.ராஜாராம் said...
பாலா சார்,
ஒரு தொடர் விளையாட்டிற்கு அழைத்திருக்கிறேன் சார்.நேரம் வாய்க்கிறபோது தளம் வாங்களேன்.//
போன இடுகை அதானே பா. ரா.:))
கலகலப்ரியா said...
சார்... மன்னிச்சிடுங்க சார்... நேத்து ஒரு மண் லாரில மாட்டிக்கிட்டேன்.... காமென்ட் போட முடியலை...//
:))
கலகலப்ரியா said...
brilliantly written sir... it's really really good...//
ஹ்ம்ம்ம். ரொம்ப சந்தோஷமா இருக்கு
கலகலப்ரியா said...
dominique + howard..... there're no words to describe them... and of course.. the greatest *ayn rand*... raatchasi..!//
பதிவுலக ராட்சசி எழுதமாட்டங்குறாளே:((
அருமையான பகிர்வு சார்.
உள்ளே உள்ள உங்கள் உண்மையான ஆளுமை இன்று வெளியே வந்துள்ளது.
நல்ல அறிமுகம்.... தன்னம்பிக்கை....
விடமுயற்சி.....
உறுதி.... இவைகளின் மீதே ஒரு காதல் பிரப்பது போல இருக்குங்க.
//இந்தியப் பதிப்பு என்று சாணிப் பேப்பரானாலும்//
அண்ணே! இந்தப் புத்தகம் அரசாங்க வெளியீடா?
மிக அருமையான அறிமுகம்!
அறியாத பல விசயங்கள் அறிந்துகொண்டேன் . அருமை
அட்டகாசமான விமர்சனம். ஒவ்வொரு மனிதருள்ளும் ஒரு சக்தி இருக்கிறது.
ஒவ்வொரு தலை முறையிலும் மிகச் சிலரே மனிதனின் முறையான உயர்வை உணரவும் அதை அடையவும் செய்கிறார்கள் என்பதும் ஏனையவர்கள் அதற்கு துரோகம் செய்கிறார்கள் என்பதும் முக்கியமல்ல. அந்தச் சிறுபான்மையினரே இந்த உலகத்தை நடத்துகிறார்கள். வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம் தருகிறார்கள்.’
இந்தப் பதிவு யூத்ஃபுல் விகடன் குட் ப்ளாக்ல வந்திருக்கு சாரே... வாழ்த்துகள்
இதன் தமிழாக்க நூல் எங்கு கிடைக்கும். பதிப்பகத்தின் பெயர். அல்லது கடையின் முகவரி கிடைக்குமா
நண்பரே...
எனக்குத் தெரிந்து தமிழாக்கம் வரவில்லை நண்பரே.
நீண்டநாள் கழித்து மீண்டும் படித்தேன்...
:-))
Post a Comment