Showing posts with label பொது. Show all posts
Showing posts with label பொது. Show all posts

Tuesday, September 7, 2010

மத்தாப் பூ..,

கருப்பன் கதை

கருப்பா கருப்பான்னு
கக்கத்துலயே சுமந்து
காடு கரடு மேயவிட்டு
காலோய விளையாடி
காணமுன்னு பதறித் தேடி
கட்டி கூட போடாம
கனவு மாதிரித்தான் வாழ்க்கை

கருப்பசாமி கோவிலில
கதம்ப மாலை போட்டு
கால் மாலை மேயக்குள்ள
கத்தி மினிமினுக்க
கருப்பனாய்ப் போனவன்
கறியாய் மாறிப் போனான்...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கிராமத்தை விட்டு நகரத்துக்கு வந்தவராம் அவர். பெற்றோரின் சொத்துக்கள் எல்லாம் விற்று பணமாக்கி வசதியான ஆளாய் இருந்தாராம். உறவுகள் எல்லாம் கிராமத்தில். கலியாணம் காது குத்துக்கு தன் தகுதிக்கேற்ப கால் சவரன் அரை சவரன் என்று பந்தாவாக மொய் எழுதுவாராம். 

காலம் பறக்க மகளுக்கு திருமணம் என்று கிராமத்துக்கு வந்தவர் இறுக்கமான முகத்துடன், பத்திரிகை வைத்துவிட்டு, உங்க வீட்டு விசேஷத்துக்கு நான் இத்தனை சவரன் போட்டிருக்கேன். இந்தாங்க லிஸ்டுன்னு அவங்கவங்களுக்கு அவர் எழுதின மொய் விவரங்களைக் கொடுத்து, தங்கம் விலை அதிகம்னு இருக்காதீங்க. நான் போட்டத திருப்பி போட்டு பொண்ணு கலியாணத்தை நடத்தி வைக்கணும்னு கராரா சொல்லிட்டு போயிட்டாராம்.

ஊர் கூடி பேசி, கலியாணத்தன்னைக்கு ஊர்ல இருந்து ஒரே ஆள் வந்து, ஊர் மொத்தத்துக்கும் அவர் போட்ட நகை கணக்கை கூட்டி, அதற்குச் சமமான எடையில் கொண்டு வந்த நகை பில்லோடு கொடுத்துவிட்டு, சாப்பிடாமல் கூட போய் விட்டாராம்.

நல்ல மனுஷன். நீங்கல்லாம் வருவீங்கன்னு சாப்பாடு செஞ்ச காசு வீணாப் போச்சு. மருவாதியா அதையும் கொடுத்துட்டு போன்னு சொல்லாம விட்டாரே!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

லண்டனில் ஒரு கர்ப்பிணிக்கு உடம்பு சுகமில்லை என்று, ஆம்புலன்ஸில் அழைத்து வர வழியிலியே குறைப் பிரசவமாம். 600 கிராம் எடையில் உள்ள குழந்தை, இங்குபேட்டர் வசதியில்லாமல் பிழைப்பது கடினம் என்பதாலும், மருத்துவ மனை செல்ல அரை மணி நேரத்துக்கும் மேல் என்பதாலும், தொப்புள் கொடியோடு, வண்டியில் இருந்த ப்ளாஸ்டிக் கவருக்குள் குழந்தையை வைத்து, இங்குபேட்டர் போல் பாதுகாத்து கொண்டு வந்திருக்கிறார் தாதி. அவரின் சமயோசிதத்தால் தாயும் குழந்தையும் சுகமாம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

எவ்வளவு பெருசா தேடி தேடி வீடு மாறினாலும், ரெண்டு நாளிலேயே முட்டி இடிபட்டு இன்னும் இன்னும்னு ஏங்கறதா இருக்கு. ங்கொய்யால மண்டைக்குள்ள இடமிருந்தா போரும்னு 330 சதுர அடியில என்னல்லாம் பண்ணி வச்சிருக்கு பயபுள்ள

Saturday, August 28, 2010

நறுக்னு நாலு வார்த்த V.5.2

இலங்கை அரசிற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் : மஹிந்த மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதியாவார்

ஏம்பா! உங்கூர்ல இந்த நிரந்தர ஜனாதிபதின்னெல்லாம் சொல்லமாட்டிங்களா? அப்புடியாச்சும் ஊத்திக்கட்டுமே.
~~~~~~~~~~~~~~~~~~~~~
கிருஷ்ணன் தூது பயனுள்ளதா? : செண்பகத்தார் திறனாய்வுப் பார்வை

இந்த தூது கௌரவர் பக்கம். உசாரு
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஹக்கீம் மஹிந்தவிற்கு ஆதரவு தெரிவித்திருப்பது எமக்கு செய்யப்பட்ட துரோகம்: ரணில் ஆவேசம்

அட சை! சும்மாக் கிட! உங்கூர்ல இதுக்கு பேரு அரசியல்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சகோதர படுகொலைகள் காரணமாக புலிகளை தேசிய இயக்கமாக கருத முடியாது : டியூ குணசேகர

குடிமக்களை கொன்று குவித்தவர்களை அரசாங்கமாக கருதலாமோ
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இலங்கை இனப்பிரச்சினைக்கு இந்தியா தீர்வை முன்வைக்கவேண்டும்: டி.எம். சுவாமிநாதன்

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா! ராஜீவும் இல்லை ஜெயவர்த்தனாவும் இல்லை. தீர்வுக்கு எங்க்ய்யா போறது. பத்திரமா வெச்சிருக்க வேணாமா? ஒரு காப்பி கேளு குடுப்பாய்ங்க.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பிரச்சினையை தீர்ப்பதை விட பிளவுகளை ஏற்படுத்துவதில் அரசாங்கம் தீவிரம்: சாடுகிறார் மனோ கணேசன்

அடக் கேனயே. நீங்க அடிச்சிகிட்டு செத்தா அவனுக்கு தீர்வுதானே. அது புரியாமத்தானே அடிச்சிட்டு சாவறீங்க. சாவடிக்கிறீங்க
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இலங்கையில் தமிழர் மறுகுடியமர்வில் கவனம் செலுத்த வேண்டும்: டி.கே.ரங்கராஜன்

யாரோ பழைய பேப்பர கொடுத்துட்டாங்க. பார்க்காம படிச்சிட்டாரு. 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இலங்கை ராணுவ தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளது: எஸ்.எம்.கிருஷ்ணா

இந்தாளு கும்பகர்ணனா? அவன் கூட ஆறுமாசத்துல விழிப்பான். இவரு ஒன்னரை வருஷம் கழிச்சி சொல்றாரு
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
முல்லைத்தீவில் ஆயுதங்கள் மீட்பு: இலங்கை ராணுவம்

அதெப்புடிடா ஆயுதம் மட்டும் கெடைக்குது. நீங்க கொன்னு போட்ட ஜனங்க எலும்பு கூட கிடைக்குதில்லை?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இலங்கை தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதே இந்திய அரசின் கொள்கை: நாராயணசாமி

போனதெல்லாம் பொறந்து வரணுமோ?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசு ஊழியர்கள் அல்ல: மத்திய அரசு

அப்ப எதுக்கு சம்பளம் குடுக்குறீய.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பாமகவை காப்பாற்ற இளைஞர்களுக்கு ராமதாஸ் கோரிக்கை

டாக்டரே கைவிட்ட கேசை இளைஞர்கள் என்னாத்த மாத்துறது?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
என்னை கண்டு கலைஞருக்கு பயம்: நான் பெரிய குத்தூசி: விஜயகாந்த் பேச்சு

பின்ன! குரங்க தோள்ள ஏத்தினா பேன் பார்த்தாலும் பார்க்கும். காதுல மோண்டாலும் மோளும்னு சொலவடையிருக்கே.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
விஜயகாந்த்தின் வாக்கு வங்கி குறைகிறது: திருமாவளவன்

ஓ! இப்ப பேங்க் பேலன்ஸக்கூட ஓட்டா கன்வர்ட் பண்ணித்தான் பார்க்கறீங்களாய்யா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
திருப்பதி: வி.ஐ.பி. டிக்கெட்டுகளை குறைக்க முடிவு

அடப்பாவிகளா! வி.ஐ.பின்னு வந்தா போட்டு தள்ளிடப் போறீங்களா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கற்பழிப்பு சம்பவம் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் செயல்: நீதிபதிகள் கருத்து

நடுக்காட்டில வச்சி நடந்துச்சு. சுத்திலும் 20 கி.மீக்கு ஜனங்களே கிடையாதுன்னு ஒரு வக்கீல் வாதாடினா விட்ற போறீங்க. 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கோபாலபுரம் வீட்டில் விதிமீறல் எனக் கூறி அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

கொடநாட்டுக்கு எதிர்வினையா? ப்ளாக்குகார பசங்கப்பா.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஆபரேஷன் சமோசா:2 தீவிரவாதிகள் கைது 

அடப்பாவிங்களா! டொமாடோ ஸாஸ் ஊத்தி சமோசா சாப்டா இப்புடி சொல்லீடுவாய்ங்களோ. சமோசா கேன்ஸேஏஏஏஏஏஏல்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Thursday, August 26, 2010

கேடில் விழுச் செல்வம்..

எப்போதாவது சினிமா நோட்டீஸ் தரும் மாட்டு வண்டியும், ராலே சைக்கிள் வைத்திருந்த ரெண்டு பணக்கார மாமாக்கள் வேலைக்குப் போகும் போதும் வரும் போதும் மட்டுமே வண்டியோடிய சாலையின் ஓரத்தில் இருந்த வீட்டிலிருந்து, வாசல் படி தாண்டி கால் வைத்தாலே பத்திரம் எனப் பதறும் அளவுக்கு, சைக்கிளும், காரும், லாரியும் பறக்கும் வீதியொன்றுக்கு புலம் பெயர்ந்தபோது வயது எட்டு.  பீதியிலேயே நடந்து, வீதி கடந்து, பள்ளிக்குச் சென்று வந்து பழகி,  பராக்குப் பார்த்தபடி நடக்க ஆரம்பிக்க ஒரு வருடம் பிடித்ததெனக்கு.

அப்படிக் கடக்கையில் கண்டதுதான், கந்தன் டூஷன் நிலையம். 8க்கு 8 அடி ரூமில் நெருக்கியடித்தபடி உட்கார்ந்து, அறஞ்செய விரும்பு,அணில், ஆடு, இலை,எட்டோன் எட்டு, எண்ணிரண்டு பய்னாறு,நல்லார் ஒருவர் உளரேல்.... என்று கலந்தாங்கட்டியாகப் படித்துக் கொண்டிருப்பவர்களை ஒரு கண்ணாலும், வெளியில் போட்ட சேரில் அமர்ந்து வீதியை ஒரு கண்ணாலும் பார்த்துக் கொண்டு, நொச்சித் தழைக் குச்சியை எதிரில் இருந்த ஒன்னரைக்கு ரெண்டு டேபிளில் தட்டிக் கொண்டிருந்தார் புரேட் (Private) சார்.

அடுத்த நாள் பள்ளியில் நண்பனிடம் டூஷன் நிலையம் பற்றி கேட்டபோது தெரிந்து கொண்டதுதான் புரேட் சார் என்பது. அப்படி என்றால் என்ன என்று கேட்ட போது புரேட் தெரியாதாடா என்று கேட்ட த்வனியில் இருந்த எள்ளல் கூட புரியாத வெள்ளந்தியாய் இருந்தேன். புரேட் பற்றிய அறிவு அவன் மூலம் புரிந்தபோது, பள்ளி நேரம் தாண்டி அங்கு தனிப்பட்ட முறையில் பாடம் சொல்லித் தருவது புரிந்தது. கூடவே தானும் புரேட் படிப்பதாகவும், தன்னுடைய புரேட் மிகப் பிரசித்தமென்றும் சொன்னதோடு, காம்பஸ் விசிட்டுக்கும் அழைப்பு விடுத்தான்.

பள்ளி முடிந்து அவன் மீண்டும் என் வீதி முனையில் விட வேண்டும் என்ற ஒப்பந்தத்துடன், 2 தெரு தள்ளி உள்ள அவன் புரேட் இஸ்கோலுக்கு போனபோது மணி வாத்தியார், வாசல் கூட்டி, நீர் தெளித்துக் கொண்டிருந்தார். நண்பன் வீட்டில் போய், பள்ளிப் பையை எறிந்து விட்டு, கை கால் கழுவி, துண்ணூறு வைத்துக் கொண்டு, தமிழ், கணக்கு புத்தகம், ட்யூஷன் நோட் புத்தகத்தோடு கிளம்பி புரேட்டுக்கு முன்னாடியே கழட்டிக் கொண்டு நேரா போய் சோத்தாங்கைக்கா திரும்பினா ரெண்டாத் தெருடா உன்னுது என்று ஓடிய போது திகைப்பாய் இருந்தது. 

ஆனாலும், கை கட்டிக் கொண்டு முன்னுக்கும் பின்னுக்கும் ஆடிய படி, பாஞ்சோண் பாஞ்சு வாய்ப்பாடு சொல்லிக் கொண்டிருந்த அக்காவைத் தொடர்ந்து அத்தனை பேரும் பாஞ்சோண் பாஞ்சு சொல்வது ஒடிப்போய் உட்கார்ந்து பாஞ்சோண் பாஞ்சு சொல்லத் தோன்றியது. வீட்டுக்கு வந்து மெதுவே அம்மாவிடம், அம்மா நானும் புரேட்டுக்கு போறேன் என்றதும் திகைப்பூண்டை மிதித்தாற்போல் திகைத்து, அப்பாவிடம் போட்டுக் கொடுத்து, புரேட் என்பது முட்டாள்களுக்கானது என்று மனதில் விதைக்கப்பட்டது. 

கணக்கில் எண்பது வாங்கிய ஒரு டெஸ்டுக்காக, இவன் உருப்படமாட்டான், மானம் கெட்டு புரேட்டுக்கு போகட்டும் என்ற போது வேணாம் வேணாம் என்று கதறியது நன்றாய் நினைவிருக்கிறது. காலங்கள் உருண்டோட, என்ன ஐடியா? பையன ஐ.ஐ.டி கோச்சிங்ல போட்டிருக்கியா? இல்லைன்னா ப்ரைவேட் கோச்சிங்கா? மேத்ஸ் க்ரூப்னா அண்ணாநகர் வசதி. 10வது ஹால்ஃப் இயர்லி ப்ராக்ரஸ் வந்ததுமே போய் காண்பிச்சி பேர் பதிஞ்சிடு. 

மார்க்‌ஷீட் வந்ததும், நேர கொண்டுபோய் காட்டி, புக் பண்ணி விட வேண்டும். இல்லையெனில் வெயிட்டிங்லிஸ்ட், பரிந்துரை என அல்லாட வேண்டியிருக்கும் என்ற ட்யூஷனில்,  அவமானமாகக் கருதப்பட்ட ஒன்று கவுரவச் சின்னமாய் மாறி விட்டிருந்தது தெரிந்தது. பிற்பாடு இலங்கையில் ட்யூஷன் என்பது பள்ளி வகுப்புக்கு மாணவரை முன்பே தயாராக்கும் களம் என்பது தெரிந்தபோது வியப்பாய் மாறியது. பின்னுமொரு நாள் மணிக்கு 400ரூ முதல் எண்ணூறு ரூபாய் வரை வாரம் ஒரு முறை இரண்டரை மணி நேரம், வசதிப்பட்ட நேரத்துக்கு வந்து வகுப்பெடுக்கும் வசதியும் இருப்பது தெரிந்த போது வருத்தமாய் இருந்தது. 

சமீப காலமாக மதிப்பெண் குறைவு என ஆசிரியர் திட்டியதால், ஐந்தாம் வகுப்புப் பெண் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்திக் கொண்டு இறப்பதும், பள்ளியிறுதி வகுப்பில் படிக்கும் பெண் பள்ளிக் கழிவறையில் பிள்ளை பெற்று விட்டு விட்டுப் போனதும் அதிர்ச்சியாய் இருக்கிறது. 

பாஞ்சோண் பாஞ்சு காலத்திலிருந்து பள்ளியிறுதி மாணவி பிரசவம் பார்த்துக் கொள்ளுமளவு மாறிவிட்ட இக்காலத்திலும் மாறாத ஒன்று இருக்கிறதென்றால் அது மதிப்பெண் ஒன்று மட்டுமே. வேறு எதுவும் பொருட்டல்ல. அட! ஏம்பா அந்த ஸ்கூல்ல போட்ட? கொஞ்சம் காசு கூடன்னாலும் இந்த ஸ்கூல்ல நல்ல பெர்செண்டேஜ். எக்ஸ்ட்ரா கோச்சிங் எல்லாம் உண்டு, என்று குற்ற உணர்ச்சியைத் தூண்டித்தான் நமக்குப் பழக்கம். 

இவ்வளவுதானா? இவ்வளவுதானா ஒரு மாணவனின் உலகம்? அவன் எதிர்காலம்! அவனுக்கென்று ஒரு குறிக்கோள், அவனுக்கியைந்த ஒரு வாழ்வு, அவனுக்குப் பிடித்த ஒரு படிப்பு இவையெல்லாம் ஒன்றுமேயில்லையா? மதிப்பெண் மட்டுமேதானா?

இந்த வார விடுமுறையில் இன்னுமொரு பாடம் படிக்க முடிந்தது. ஆசியர் பயிற்சி, முதியோர் கல்வி ஆகியவற்றில் தேர்ந்த ஓர் ஆசிரியரின் உரையின் தொகுப்புக் கையேட்டைப் படிக்க வாய்த்தது. 

அவ்ர் கேட்டிருந்த கேள்விகளைப் படியுங்கள். இதற்கு முன் நமக்காய் நம் பெற்றோரோ, நம் பிள்ளைகளுக்காய் நாமோ இதைக் கேட்டிருக்கிறோமா?

• உங்கள் குழந்தைகளின் திறமைகளைச் சரிவர அறிந்திருக்கிறீர்களா?
• பள்ளியறிக்கை மட்டுமே ஒரு மாணவருக்குண்டான ஆற்றல் மற்றும் அவர் சாதிக்கக் கூடியதைக் கூறுமா?
• பள்ளியில் வெற்றி பெறுவது சந்தோஷமான ஒரு வாழ்க்கைக்கான உத்தரவாதமாகுமா?
• உணர்வார்ந்த அறிவு என்பதன் அர்த்தமென்ன ? குழந்தைகளின் தினசரி வாழ்க்கையில் அதன் முக்கியத்துவம் என்ன?
• இசையறிவின் முக்கியத்துவமும் அதன் தாக்கமும் எத்தகையது?
• ஒரு மனிதன் என்ன திறமைகளைக் கொண்டுள்ளான் என்பதை விட அதை வைத்து அவனால் என்ன சாதிக்க முடியும் என்பதே முக்கியமானது.

ஒன்றுக்காவது நேர்மையாக நம்மால் பதில் சொல்ல முடியுமா? அம்மா மார்க் கொடுத்தார்கள் என்று நீட்டும் பேப்பரை வாங்கிப் பார்க்கு முன்னரே ராஜு எத்தனாவது ரேங்க், ரம்யா கணக்கில எவ்வளவு? இப்படித்தானே கேட்போம்? கேட்கப்பட்டோம்.பிள்ளை புத்திசாலிங்க அல்லது உருப்படாதுங்களுக்கு மேல் என்ன தெரியும் நமக்கு? 

புத்திசாலித்தனத்துக்கு பன்முகம் இருக்கிறதாம்.  மொழித்திறன், கணிதம்-தர்க்கம், பார்வை-பரிமாணம், இசை, சமூக அறிவு, தன்னை அறிதல், இயற்கை அறிவு, உடலசைவு என எண்முகமாம் அதற்கு. இவை யாவும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்திருக்கின்றனவாம். “மாணவர்கள் தங்கள் புத்தியின் அதி ஆற்றலைப் பயன்படுத்தும் பட்சத்தில் கற்றல் மிக உற்சாகமாக இருப்பதோடு, நோக்கங்கள் துரிதமாக நிறைவேறும்” என்கிறார்.

“ஒரு குழந்தையின் பலங்களை மேலும் பலப்படுத்துவதற்கும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் அது தன் பலவீனத்தைச் சரி செய்வதற்கான ஆர்வத்தைத் தூண்ட வேண்டும்” என்கிறார் அவர்.  

இப்படியெல்லாம் செப்பனிட்டும் பெற்றோருக்குச் சொல்லிக் கொடுத்தும் கொடுக்கும் கல்வியல்லவா எதிர்காலச் சந்ததியினருக்கு நாம் சேர்த்துக் கொடுக்கும் சொத்து. நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி வெங்கட்ராமன் தமிழர்தானே. இங்கிருந்தால் அவருக்கு நோபல் பரிசு கிடைத்திருக்குமோ தெரியாது. ஆனால் நிச்சயம் அவர் மகன் அவருக்குள் இருக்கும் திறமையான, அவருக்குப் பிடித்த செல்லோ இசைக்கலையைக் கொன்று புதைத்து ஒரு மருத்துவராகவோ, எஞ்சினியராகவோ, இரசாயனத்துறை விரிவாளராகவோ ஆகியிருக்கக் கூடும், . இங்கில்லாததால் தானோ அவரின் திறமையை மதித்து, அவரை செல்லோக் கலைஞராக வளரவிடும் மனப்பாங்கு அவர் பெற்றோர்களுக்கு இருக்கிறது?

இதை தட்டச்சும் நேரம், மனதில் ஒரு நனவோடை. சற்றேரக் குறைய ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் ஈழத்தில் ஷெல் சத்தங்களுக்கு நடுவே, மேச்சட்டையின்றி, விழும் குண்டுக்கும் எனக்கும் சம்மந்தமில்லை என்ற விரக்தியுடன்,  “உங்களுக்கு என்ன வேண்டும்?” என்ற நிருபரின் கேள்விக்கு அழுதபடி அந்தக் குழந்தை என்ன கேட்டிருக்கும் என ஊகிக்க முடியுமா உங்களால்? வீடு கேட்கவில்லை. உணவு கேட்கவில்லை. உடை கேட்கவில்லை.  “ஒன்பது ஊர் மாறி மாறி இங்க நிக்கிறம். எங்கயும் இருக்க விடுறாங்கள்ள. எல்லா இடத்திலும் செல்லடிக்கிறாங்கள். எனக்குப் படிக்கணும் அண்ணை என்று அழுதபோது உதடு விம்ம என் அழுகை அடங்க வெகு நேரமாகியது.

இந்த ஆர்வத்தை, இந்த உணர்வை, அதற்கென ஒரு வாழ்க்கை இருக்கிறது, அதற்கென ஒரு திறமை இருக்கிறது, அதற்கு இருப்பதில் போதிய வாய்ப்புமிருக்கிறது என்ற உணர்வின்றி மதிப்பெண்ணிலும், ஓர் வேலையிலும், திருமணத்திலும் அடைக்கத்தான் போகிறோமா? தலைமுறை தலைமுறையாக இதைத்தான் செய்துக் கொண்டிருக்கிறோம். செய்வோம்.

காரணம், இருக்கும் சூழ்நிலை இப்படித்தான் கொடுக்கப்படுகிறது நம் கல்வியாளர்களால். நம் அரசால். நாமாவது கேட்போமே.

(டிஸ்கி:சாத்தான் ஓதும் வேதம் என உணர்ந்தே வெட்கத்துடன் எழுதினேன். என் பிள்ளைகள் படிக்கும் காலத்தில் நான் இதை உணர்ந்திருந்தாலும் இப்படி யோசித்திருப்பேன் என உறுதியாய்ச் சொல்லவியலாது. இது முற்றிலும் புதிய சிந்தனை. புதிய சூழல். என்றோ ஒரு நாள் வந்தே தீர வேண்டிய மாற்றம். என்னால் முடிந்தது, இப்படியும் பிள்ளைகளுக்குக் கல்வியை ஆராதிக்கிறார்கள் என்ற ஒரு புரிதலுக்காகவே)

தகவல் மற்றும் விளக்கத்துக்கு நன்றி ப்ரியா
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Tuesday, August 24, 2010

நறுக்னு நாலு வார்த்த V.5.1

புலிகள்- தமிழக அரசியல்வாதிகள் தொடர்பு: குமரன் பத்மநாதன் விளக்கமளிக்க வேண்டும்: கருணாநிதி

ம்கும். அவரு அரிச்சந்திரரு. அப்புடியே உண்மை உண்மையா வாந்தி எடுக்குறாரு. லிஸ்டக் குடுத்தா அப்புடியே சொல்லப்போறாரு. 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இலங்கை போர் நிறுத்த ஒப்பந்தம் மாயம்?

அது கையெழுத்து போட்ட அன்னைக்கே காணோம்னு கரடியாக் கத்தினாலும் அதுதான் எல்லாத்துக்கும் தீர்வுன்னு கத்துனது ச்ச்சும்ம்வா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இலங்கை: இந்துக்கோயிலில் திருவிழா நடத்த தடை

ஏன்? சாமியையும் வலையத்துக்குள்ள வச்சிட்டானுவளா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இலங்கைச் செல்லும் தூதுக்குழுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் இடம் பெறவில்லை: கலைஞர்.

அதாஞ்சரி. தேர்தல் நேரத்துல யார நம்புறது. ஏன்? இதுக்கு ஒரு கடுதாசு போடலாமே?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
திருப்பதியில் மேலும் ஒரு சிறுத்தைப்புலி சிக்கியது

இதெல்லாம் புடிங்கடா! திருட்டுப் பூனைங்கதான் சிக்காது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
விமானி இல்லாமல் குண்டு வீசும் விமானம்

ரொம்ப வசதிடா! கோளாறாயி குண்டப் போட்டுடிச்சி. குருவி சுட அனுப்புனா குழந்தைங்கள போட்டு தள்ளிறுச்சின்னு சொல்லிக்கலாம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
என் வெற்றிக்கு பின்னால் எனது மனைவி இருக்கிறார்: மு.க.ஸ்டாலின்

தோல்வியான அரசியல்வாதி ஊட்டுங்கள்ள தகராருதான். பத்த வெச்சிட்டியே பரட்ட...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
விளை நிலங்களை கையகப்படுத்தக் கூடாது. ராமதாஸ்

யாருங்கைய்யா விளைக்கிறாங்க. அதான் வளைக்கிறாய்ங்களே.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தமிழர் இறையாண்மை மாநாடு: திருமா

இறைவன் இருக்குறானோ இல்லையோ. தமிழனுக்கு இறையாண்மை இல்லைன்னு தெரிஞ்சப்புறமும் மாநாடு வேறயா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
போதை பொருள் விவகாரம்: என் பெயரை பயன்படுத்தினால் வழக்கு தொடருவேன்: திரிஷா

அடப்பாவிகளா! சுருட்டு, பீடி, பனியன் விளம்பரம் மாதிரி இதுக்கும் பயன்படுத்துறாங்களா.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஊழலைப் பற்றி பேச விஜயகாந்த்துக்கு தகுதி இல்லை: கலைஞர்

அதான தல! ஒரு வாட்டி கூட ஆட்சில இல்லாம ஊழலப்பத்தி பேச இவரு யாரு?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கிரீன்பீல்டு விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதில் உள்நோக்கம்: கலைஞர் குற்றச்சாட்டு

ஆமாங்க தலைவரே! பச்சை அவங்க ராசி கலராச்சே. ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம்ல. யெல்லோஃபீல்டுன்னு மாத்திடுங்க தலைவா.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஈ.வி.கே.எஸ்.க்கு காங். மேலிடம் கண்டிப்பு

சொல்லவேண்டியதெல்லாம் சொன்னப்புறம் இது கண்டிப்பா? கண் துடைப்பு.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
செஸ் ஆனந்திடம் இந்திய குடியுரிமை இல்லை!

அப்ப சாம்பியன்னு நாம அலட்டிக்க முடியாதா? அவ்வ்வ்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

பார்க்காத பயிர் மட்டுமல்ல பிள்ளைகளும்..

ஞாயிறு தினத்தந்தியில் ஒரு செய்தி. சென்னையின் ஒரு பிரபல பள்ளிக்கூடத்தில் 100 சதம் தேர்ச்சி பெற முடியவில்லை என்பதற்காக, கற்பிக்கும் முறையிலும், மாணவர்களை ஆர்வம் கொள்ளச் செய்வதிலும் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தியும், அவர்கள் எதிர்பார்த்த அளவு மாற்றம் ஏற்படவில்லையாம். இதன் காரணம் என்ன எனக் கண்டறிய விரும்பிய நிர்வாகம் 40 கேள்விகள் அடங்கிய ஒரு சர்வே எடுத்ததாம். அதில் 10 கேள்விகள் அப்பா, அம்மா, வீடு, வீட்டுச் சூழல் குறித்ததாம். ஆசிரியர்கள் கூட படிக்க அனுமதி கிடையாது அதனால் உள்ளதை உள்ளபடியே எழுதவேண்டும். பதில் வீட்டுக்கும் தெரியப் படுத்தப்பட மாட்டாது என்ற உத்தரவாதத்தின் பேரில் கிட்டத்தட்ட நான்காயிரம் மாணவ மாணவிகள் அளித்த பதிலைத் தொகுத்த நிர்வாகம் ஆடிப்போய்விட்டதாம். 

மாணவர்கள் கூறியவற்றுள் முக்கியமானவை
  • தந்தை குடித்துவிட்டு வந்து தாயை அடிப்பது எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற கவலையை உண்டாக்குவதால் படிப்பில் நாட்டம் குறைவது
  • படிக்கும் நேரத்தில் தாய்மார்கள் அக்கம் பக்கத்து பெண்களை அழைத்து வந்து வீட்டில் அரட்டையடிப்பது (அதிக எண்ணிக்கை மாணவர்களின் குறை)
  • எவ்வளவு முக்கியமான பரிட்சை என்றாலும் சத்தமாக சீரியல் பார்ப்பது
  • தாயார் முதலில் தூங்கப் போய் தாமதமாக எழுவது.

இதை அடிப்படையாகக் கொண்டு நிர்வாகம் கூறியதாக செய்தி கூறுவது

“முன்பெல்லாம் தங்கள் பிள்ளைகள் நன்றாகப் படிக்க வேண்டும் என்பதற்காக தங்களது தனிப்பட்ட தேவைகளையும், ஆசைகளையும் பெற்றோர் குறிப்பிட்ட காலத்துக்கு ஒதுக்கி வைப்பார்கள், அல்லது தியாகம் செய்வார்கள்.” இப்போது அப்படியல்ல. தாங்கள் வாழும் காலம் வரை தாங்கள் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்பதையும் குழந்தைகளுக்காக விட்டுக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கருதுகிறார்கள். மொத்தத்தில் பெற்றோர்களிடம் சுயநலம் அதிகரித்துவிட்டதைத்தான் இந்த சர்வே காட்டுகிறதாம். 

இது முழுதும் பெற்றோரைக் குற்றம் சொல்லும் செயலேயன்றி வேறெதுவுமில்லை. இதே போல் பெற்றோரும் தனித்தனியாக கண்டிப்பாக இதே சர்வேக்கு பதில் சொல்லவேண்டும் என்று பதிலைப் பெற்று ஒப்பு நோக்கி ஒரு தேர்ந்த மனநல மருத்துவரின் உதவியுடன் காரணிகளைக் கண்டு பிடித்திருந்தால் பெருமளவு பயனுள்ளதாக இருந்திருக்கும்.

பிள்ளைகள் தங்கள் நாளின் பெரும்பகுதியை படிப்பு என்ற சூழலில் செலவிடும் இடம் பள்ளி. மேற்கூறிய காரணங்கள் இருப்பினும், கவனச்சிதறல் என்பது கண்டுகொள்ளக் கூடிய ஒன்று. அத்தகைய மாணவர்களை தனிப்பட்ட கவனம் செலுத்தி, அல்லது அவர்களோடு உரையாடி காரணம் அறிந்து பெற்றோர்கள் காரணமெனின் அவர்களுக்கு அறிவுறுத்துவதும் பள்ளியின் கடமை அல்லவா?

மற்ற மாணவர்களுடன் இருக்கையில் அவர்கள் உலகம் தனியல்லவா? கவலைகள் மறையாவிடினும் மறந்து, படிப்பில் கவனம் செலுத்தும் இடமாயிற்றே. அப்படியிருந்தும் தேர்ச்சி அடைய முடியாமல் என்ன தடை? அவர்களின் ஆர்வமின்மை குறித்து பள்ளி நிர்வாகம் ஏன் சொல்லவில்லை. எத்தனை பெரிய பள்ளியானாலும் மெடிக்கல் செக்கப் என்ற பெயரில் கட்டணம் வசூலித்தும் ஒரு பல் டாக்டர், அல்லது பொது மருத்துவரின் பரிந்துரை தருகிறதே தவிர, பிள்ளைகளின் மனநலனுக்கு ஒரு மன நல மருத்துவரை அழைத்திருக்கிறதா என்றால், எனக்குத் தெரிந்த வரை இல்லை.

அவர்களையும் முழுதாய்க் குற்றம் சொல்ல முடியாது. அப்படி ஒரு வேளை அம்முயற்சியில் ஈடுபட்டாலும், என் பிள்ளை பைத்தியமா? எப்படி மனநோய் மருத்துவரிடம் காட்டலாம் என்று சண்டைக்கு வரும் பெற்றோர்கள் அதிகம். 

“Kinder Garten" என்பதை அப்படியேவோ அல்லது “Children's Garden" என்று மொழிமாற்றம் செய்தோ போடாமல் “Kinder Garden" என்று போடும் கான்மெண்ட் இஸ்கூலில் சேர்ப்பது நம் கவுரவமல்லவா? அடுத்தவரை கைகாட்டி குற்றம் சொல்வதை விட, நாம் பிள்ளைகளிடம் பேசுவதும், தொலைக்காட்சியைப் பார்த்தே தீரவேண்டும் என்ற அவா இருக்குமானால் பிள்ளைகளிடம் அவர்களுக்கு தொந்தரவில்லையா என்று கேட்ட பிறகு பார்ப்பதும், தூங்கப் போகுமுன் ஏதாவது வேண்டுமா என்று கேட்டுவிட்டு தூங்கப் போவதும் வேறெதுவுமில்லாவிடினும் தங்கள் மீதான அன்பின் வெளிப்பாடு என்று பிள்ளைகளுக்கு புரிய வைக்கும். அதனால் ஒரு சிறு முன்னேற்றமிருப்பினும் நல்லதுதானே.
~~~~~

Monday, August 23, 2010

நல்லாக் கேக்குறான்யா டீட்ட்ட்ட்டேய்லு...

இந்த வாரம் நட்சத்திரப் பதிவராக வாய்ப்பளித்த தமிழ் மணத்துக்கு நன்றி!
 ~~~
ஏன்னு எனக்குள்ளயே கேட்டு பதில் கிடைக்காத கேள்விகள் இவை. பதில் சொல்லிட்டு சிரிங்கப்பு.

1.போற வழியில கோவில் தென்பட்டா, தாண்டி போக மனசில்லாம, செருப்ப அவிழ்த்துட்டு, கண்ணு மூடி வேண்ட்ற நேரத்துல ஆட்டய போட்றுவானுவன்னு சாமிய அதுக்கு கூட நம்பாம கட்டை விரல்ல செருப்பு முனைய அழுத்திக்கிட்டு, சாமி எனக்கு அதக்குடு, இதப்பண்ணு, உன்னயத்தான் நம்ம்ம்ம்ம்ம்ம்பி இருக்கேன்னு உருகி வேண்டுனா மட்டும் இவன நம்பறதுக்கு சாமி என்ன கேனையா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
2.கண்ணு தெரியமாட்டிங்குதுன்னு டாக்டர் கண்ணாடி எழுதி குடுத்தா, ஸ்டைலு போயிரும்னு கண்ணுக்குள்ள ஒட்டுற கண்ணாடி ஒட்டிக்கிறவைங்க 50ரூ கூலிங்க்ளாஸ் மட்டும் ராவுல கூட போட்டுகிட்டு ஸ்டைல் காட்டுறாங்களே எப்புடி?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
3.ரெண்டாயிரத்து ஐநூறு குடுத்து காது கேக்குற மிசினு வெச்சிக்கிட்டா அவமானம்னு காதுக்குள்ள தெரியாம வைக்கிற மிசினு இரவத்தி அஞ்சாயிரம்னாலும் வாங்குறவைங்க, காதுல பனை வண்டு (அதாங்க ப்ளூடூத்) அத்த சொருவிட்டு அலையிறாங்களே எப்புடி?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
4.ஒரு இடுகை முழுசும் சினிமா விமரிசனத்துல அது நொட்டை இது நொள்ளை, லாஜிக் இல்லைன்னு திட்டிட்டு, ஒரு பாட்டுல ஒரு வரிக்கு நாலு நாட்டுல எட்டு உடை மாற்றின்னு அபத்தமா வந்தாலும் அந்தப் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்ட விதம் அபாரம்னு எழுதுறாய்ங்களே, எப்புடி?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
5.டூ வீலர்ல போறவங்க ஹெல்மெட் போட்டா நல்லது. அதுவும் பின்னாடி உக்கார்ந்து போறவங்க போட்டே ஆகணும்னு கரடியா கத்தினாலும், போலீசுக்கு மாமூல் குடுக்கணுமேன்னு பயந்து பின்னாடி உட்கார்ந்து போற மனைவி அத சுமந்துகிட்டு, பேச்சு குடுத்துட்டே போறாய்ங்களே தவிர, போடுங்கன்னோ இல்ல போட்டுக்கிட்டோ போக மாட்டங்குறாய்ங்களே ஏன்?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
6.கிட்டத்தட்ட கால்வாசி சினிமா எடுக்குற காசுல விளம்பரப் படமெல்லாம் எடுக்குறாய்ங்களே. வியாவாரம் நல்லா போகுறதால இப்புடி செலவு பண்ணி எடுக்குறாய்ங்களா இல்ல இப்புடி எடுத்து விளம்பரம் பண்றதால வியாவரம் பிச்சிக்கிட்டு போகுதா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
7.காசு வெட்டாம இங்க லைசன்ஸ் வாங்க முடியாதுன்னு தெரிஞ்சும், தானும் அப்படித்தான் காசு வெட்டி லைசன்ஸ் வாங்கிட்டும் யாராவது மேல இடிச்சிட்டாலோ, இடிக்கிறா மாதிரி வந்தாலோ ‘உனக்கெல்லாம் எப்புடி லைசன்ஸ் குடுத்தாய்ங்கன்னு’ கூசாம திட்டுறாய்ங்களே! எப்புடி?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
8.ஏதோ நோவுன்னு டாக்டர்கிட்ட போனா அவரு ஸ்கேன், எம்.ஆர்.ஐன்னு பாதி சொத்துக்கு வேட்டு வெச்சிட்டு உனக்கு ஒன்னும் இல்லப்பான்னு மெடாசின் குடுத்தா இத்தோட போச்சேன்னு சந்தோசப்படாம, ரூ 50000 அனியாயமா போச்சுன்னு புலம்புறாய்ங்களே ஏன்?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
9.ரேஷன் கார்ட் வாங்க போனா வூட்டு அட்ரசுக்கு ப்ரூஃப் கேக்குறானுவ. பேங்குக்கு போனா ரேஷன் அட்டை ப்ரூஃப் கேக்குறானுவ. PAN கார்ட் வாங்கப் போனா இன்கம்டாக்ஸ் காரன் பேங்க் விவரம் கேக்குறான். பாஸ்போர்ட் வாங்கப் போனா PAN கார்ட் விவரம் கேக்குறான். அப்புறமெதுக்கு போலீஸ் வெரிஃபிகேஷன்னு ஊட்ட தேடி போலீச அனுப்பி மாசக்கணக்கா இழுத்தடிக்கிறானுவ?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
10.ஒரு சர்ஜரி பண்ணனும்னு டாக்டர் சொன்னா நம்பாம செகண்ட் ஒபினியன் தேர்ட் ஒபினியன் வாங்கறது சரி. மெஜாரிடி பார்த்து வேற வழியில்லைன்னு ஆனதுக்கப்புறம், முதல் டாக்டர்கிட்டயே சர்ஜரிக்கு போறாய்ங்களே. ஏங்க நீங்களும் வந்து  சரியா பண்றாரான்னு பார்த்துக்குங்கன்னு மத்த டாக்டருங்கள கேக்காம இப்ப மட்டும் அந்த டாக்டர நம்புறாய்ங்களே எப்புடி?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


Friday, August 20, 2010

நறுக்னு நாலு வார்த்த V.5.0

பிரபாகரனைப் பாதுகாக்க எடுத்த முயற்சிகளுக்கு நெடியவன் ஒத்துழைப்பு வழங்கவில்ல: குமரன் பத்மநாதன்

குடுத்த காசுக்கு மேல கூவுறாண்டாங்கொய்யாலே! இத அப்பவே கூவியிருக்கலாம்ல. தமிழனோட விஸ்வாசம் இருக்கே! அடடடா த்த்த்த்தூஊஊ 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கே.பி.யை கைது செய்வதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன: கெஹலிய


அந்தாளு சொல்றதெல்லாம் வச்சிப் பார்த்தா செட்டப்பு மாதிரித்தான்யா தெரியுது. 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பொன்சேகாவிற்கு எதிரான தீர்ப்பு தொடர்பில் சர்வதேச மனித உரிமை ஆணையகத்தில் முறைப்பாடு செய்யப்படும்: ஐ.தே.க


ங்கொய்யால இந்தாளு யூனிஃபார்ம்ல இருந்தப்ப இந்த ஆணையகம் சொன்னதுக்கு என்னா மதிப்பிருந்திச்சி. இப்ப மட்டும் மனித உரிமையோ?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சிரேஸ்ட இராணுவ அதிகாரிகள் நல்லிணக்க ஆணைக்குழுவில் சாட்சியமளிக்க உள்ளனர்

அது சரி. சொன்னத சொல்லிட்டு போறதுக்கு சலம்பலெதுக்கு.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வேறுபாடுகளிருந்தாலும் ஐ.நா.வுடன் இணைந்து பணியாற்றுவதற்கு தயார்: பஷில் ராஜபக்ஷ

நேற்று இல்லாத மாற்றம் என்னது? காசு என்னல்லாமோ பண்ணுது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
முதலாவது யுத்த நீதிமன்றின் தீர்ப்புக்களை ஏற்றுக்கொள்ள முடியாது! இலங்கையில் எனக்கு நீதி கிடைக்காது!: சரத் பொன்சேகா

உனக்கே கிடைக்காதுன்னா தமிழனுக்கு எங்க கிடைக்கும். எதுக்கும் ராஜீவ்-ஜெயவர்த்தன உடன்படிக்கையில இதுக்கு தீர்வு இருக்கும். நல்லா தேடு பாரு ராசா.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ராஜீவ் காந்தி படுகொலையை எப்படி மன்னிக்க முடியும்? கார்த்தி சிதம்பரம்
  
அதெப்டி மறக்கறது. இதச் சொல்லியேதானே கொள்ளுப்பேரன் வரைக்கும் ஓட்டு பதவி எல்லாம் வாங்கியாவணும். ராகுல் மன்னித்தாலும் நான் மன்னிக்கமாட்டேன்னு சொல்லியிருக்கணும் கண்ணு.
  ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இந்தியாவில் முதலீட்டை குறைக்க மாட்டோம்: அமெரிக்கா

முன்னாடியே கோர்ட்ல குத்துமதிப்பா ஃபைன் கட்டிடுங்கப்பா. சும்மா முப்பது வருஷம் கேஸ் இழுத்து  கோடிக்கணக்குல செலவு பண்ணி தம்பிடி ஃபைன் போடுவாய்ங்க. 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
விமானத்தை கடத்தினால் மரண தண்டனை

மந்திரிங்க சொந்தகாரங்க யாரும் அந்த விமானத்தில் இல்லாவிடில்...... 
 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
எம்பிக்கள் சம்பளம் அதிகரிப்பு: அமைச்சரவை ஒப்புதல்

கொள்ளு வேணாங்கிற குதிரை உண்டா? மந்திரிப் பதவி போனா என்ன பண்றது?
 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இந்தியா அளித்த நிதியை பாகிஸ்தான் ஏற்றது 

அய்ங்! அப்ப ஆயுதமா குடுத்தாதான் வாங்குவேன்னு அடம் புடிச்சானோ?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மருத்துவ படிப்புக்கு அகில இந்திய நுழைவுத் தேர்வு முடிவை கைவிட வேண்டும்: ராமதாஸ் 

நம்ம மருத்துவக் கல்லூரி வருதாங்ணா? டீல் ஓக்கேவா?
 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தமிழகத்தில் உணவுப் பூங்கா: மத்திய அரசு ஒப்புதல்

சூரியனில்லாமல் உணவு ஏது?  Food Giantனு பேரு வச்சிடலாம். ரைமிங்கா வரும்.
 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தமிழகத்தில் மது அருந்தாதவர்களே இல்லை என்ற நிலை உருவாகும்: அன்புமணி கவலை

அப்பத்தானே குடியரசுங்கற வார்த்தைக்கு மருவாதி. ஏன் எதிர்க்கிறாரு?
 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
திராவிட கொள்கைகளை பாதுகாக்க வேண்டும்: கலைஞர்


தலைவரே! திராவிடக் கொள்கைகள் யாதுன்னு ஒரு பரிட்சை வைங்களேன். வீரமணி கூட ஃபெயில்தான். ஆமா! காங்கிரஸ் திராவிட கட்சியா தல!
 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
(இது 150வது நறுக். )

Thursday, August 19, 2010

நறுக்னு நாலு வார்த்த V 4.9

அரசின் தகவல்களைப் பெற்றுக் கொள்ளும் உளவாளியாக கருணாவைப் பயன்படுத்த புலிகள் முயற்சித்தனர்

அடங்கப்பா! அகில மகா புளுகுடா சாமி. போயும் போயும் இவரு குடுக்குற தகவலை நம்புற அளவுக்கா இருந்தாங்க? கேக்கறவன்......போங்கடா...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
புலிகளுக்கு வாகனங்களை விற்பனை செய்த நபர்கள் கைது

ஒன்னுத்தையும் முழுசா செய்யமாட்டிங்களாடா? அப்புடியே காத்தடிச்சவன், மெக்கானிக்கு எல்லாரையும் புடிக்க வேண்டியதுதானே.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பிரபாகரன் ஆயுதம் ஏந்தக் காரணம் தெற்கின் அரசியல் பக்குவமின்மையே! மங்கள முனசிங்க சாட்சியம்

அது சரிடா சாமி!. உங்கூர்ல பக்குவம்னா போட்டு தள்றதுதானே.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சந்தேகமே போர் நிறுத்த உடன்படிக்கையின் தோல்விக்கு காரணம்: முன்னாள் பாதுகாப்பு செயலாளர்

பசிச்சவந்தான் பழங்கணக்கு பார்ப்பான்னு சொலவடை. போட்டுதள்ளிட்டு உக்காந்து பழசுக்கு காரணம் கண்டு பிடிக்கிறானுவ பரதேசிங்க.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கிளி.மாவட்ட மீளக்குடியமர்ந்த மக்களுக்கு ரூபா 5000 நிதி உதவி: சிறிதரன் பா.உ. வழங்கி வைத்தார்

இத வச்சு ரெண்டு நாளைக்கு கஞ்சி குடிக்க காணுமா? அடிச்ச கோடி அத்தனையில சிந்தின அளவு கூட இருக்காதேடா பாவிங்களே! இதனாச்சும் குடுத்தீங்களா? போட்டோ புடிச்சப்புறம் புடுங்கிட்டீங்களா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நான் குற்றம் செய்யவில்லை; எனக்கு சனி மாற்றம் ஏற்பட்டுள்ளது : மேவின் சில்வா

சனி மாற்றமா ஏமாற்றமா? ராஜபிச்சை மாதிரி ஒரு நடை திருநள்ளாறு வந்துட்டு போயிருக்கலாம்ல? ஹய்யோ ஹய்யோ.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு: முக்கிய முடிவு எடுக்கப்படும்: இலங்கை மீனவர்கள் குழு

முக்காமலே எடுத்தாலும் கெடாச போறதுக்கு எதுக்குடா சீனு? ஒரே முடிவுதான் தமிழனுக்கு.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பாக். ராணுவம் துப்பாக்கிச் சூடு: இந்தியா பதிலடி

சரியா குடுங்கப்பா. சிங்களத்தான்னு நினைச்சானுவளோ கண்டுக்காம விடுறதுக்கு.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கள்ள மார்க்கெட்டில் திருப்பதி தரிசன டிக்கெட்: நாயுடு

ங்கொய்யால டிக்கட்டே விக்காம விட்டு பாரு. அவனவன் பார்த்துட்டு போய்ட்டே இருப்பான். தடுத்து தடுத்து, மந்திரி, மசுராண்டிக்கெல்லாம் தரிசனம் காட்டுறேன்னு காக்க வச்சிட்டு பேசுறானுவ.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஈகை குணம் கொண்டவர்களை வரலாறு புகழும்: ஜெ

அப்புறம் ஏங்க கலர்டிவி, கேஸ் ஸ்டவ்வு, ஓட்டுக்கு காசெல்லாம் குடுத்தா திட்றீங்க.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
திமுக அரசை வீழ்த்துவோம்: மதிமுக தீர்மானம்

ஒரு அரச மரத்துல திமுகன்னு எழுதி கூட உங்களால வீழ்த்த முடியாது. மருத்துவர் ஐயா சண்டைக்கு வருவாரு. அது எங்க உரிமைன்னு.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மதுரையில் நவீன நிழற்குடை: மு.க.அழகிரி

கொடைக்குள்ள டிவி வச்சி டிவிடி காட்டுவீங்ளாண்ணா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மக்கள்தொகை கணக்கெடுப்பில் இல்லத்தரசிகளாக இருக்கும் பெண்கள் வேலை செய்யாதவர்கள்.

என்னேரமும் சீரியல் பாக்காதீங்கன்னா கேக்குதுங்களா? சென்ஸஸ் எடுக்க வரும்போதாவது நிறுத்தி இருக்கலாம்ல. இப்ப பாருங்க. 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Wednesday, August 18, 2010

நறுக்குன்னு நாலு வார்த்த V 4.8

மனிதாபிமான படை நடவடிக்கையின் போது 6000 படையினர் கொல்லப் பட்டனர். 30,000 படையினர் காயமடைந்தனர்: கோத்தபாய

அடங்கொன்னியா! ஒன்னுக்கு பத்துன்னு கணக்கு வெச்சாக் கூட நீ போட்டுத்தள்ளுனது ஒரே நாள்ள எத்தனை. அந்த கணக்கச் சொல்ல மாட்டானே.
-------------------------------------------------------------------------------------------------------
இலங்கை விவகாரம்: கருணாநிதியை சந்திக்கிறார் நிருபமா ராவ்.

சரி சரி! அங்க எல்லாருக்கும் மறுவாழ்வு வழங்கப்படும். மீனவர் பிரச்சனை குறித்து உறுதி மொழி வாங்கியாச்சு.  மேடம் யேப்பி. தலீவர் யேப்பி. ஊதுங்கப்பா பீப்பீ!
-------------------------------------------------------------------------------------------------------
ஜீஎஸ்பி வரிச்சலுகையை இழப்பதற்கு ரணில், மங்கள மற்றும் புலி ஆதரவாளர்களுமே காரணம்: டலஸ்

இவங்களால இவ்வளவு பண்ணமுடியுது. உங்க அத்தனை பேரு, உங்க அல்லக்கைங்களால இதத் தடுக்க முடியலைன்னா, இவங்க கிட்ட குடுத்துட்டு வாத்து மேய்க்க போலாமே வெண்ணைகளா!
-------------------------------------------------------------------------------------------------------
பிரபாகரன், மாத்தையாவை கொன்றதை விடவும் பொன்சேகாவுக்கு இழைக்கப்படும் அநீதி கொடுமை: ரணில்

யா யா! புண்சேகா மசிரு கொட்டிப் போறத விடவா தமிழன் உசுரு போறது பெருசு?
-------------------------------------------------------------------------------------------------------
நல்லிணக்க ஆணைக்குழு முன் பாதுகாப்பு செயலாளர் சாட்சியம்: செய்தி

என்ன கைய புடிச்சி இளுத்தியா மாதிரி எது கேட்டாலும், இஃப் யூ கொஸ்சன் ட குட் காஸ் யூ ஹாவ் ப்லட் இன் யுவ்ர் ஹாண்ட்ஸ்னு வெறிபுடிச்சா மாதிரி கத்தி  இருப்பான்.
-------------------------------------------------------------------------------------------------------
சரத் பொன்சேகாவை ஜெனரல் என அழைக்கக் கூடாது : இராணுவப் பேச்சாளர்

பின்ன? அவரு பெசலில்லையா?
-------------------------------------------------------------------------------------------------------
இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை: இலங்கை மீனவர் சொல்கிறார்

அய்ங்! அப்ப மீன் புடிக்கப் போய் கடல்ல கனவு கண்டுட்டு சொல்றாய்ங்களா? முதல்ல இவரு மீனவரா அரசியல் அல்லக்கையா செக் பண்ணுங்கப்பா செக் பண்ணுங்கப்பா.
-------------------------------------------------------------------------------------------------------
எம்.பிக்களுக்கு சம்பள உயர்வு.

நியாயாம்தானே! நாள பின்ன வருமானத்துக்கு அதிகமான சொத்துன்னு வந்தா கணக்கு காட்ட வேணாமா?
-------------------------------------------------------------------------------------------------------
111 விமானங்கள் வாங்க ஏர் இந்தியா முடிவு

அய்ய! ஏற்கனவே கோவிந்தா! ஒன்னு கூட குறைய வாங்குங்கப்பா. இந்த நம்பர் சரியில்லை.
 -------------------------------------------------------------------------------------------------------
திரைப்படத்தொழிலில் இறங்கும் முகேஷ் அம்பானி

ஏம்பா? வம்பா நீ?. எங்க ஒரு தமிழ் படம் எடு பார்க்கலாம்.
-------------------------------------------------------------------------------------------------------
புதிய விமான நிலையத்துக்கு குறுக்கே நிற்பது நியாயமா? கலைஞர்

தில்லிருந்தா விமானத்துக்கு குறுக்கே நிற்கட்டும். அதென்னா சின்னப்புள்ளத்தனமா விமான நிலையத்துக்கு குறுக்க நிக்கிறது.
-------------------------------------------------------------------------------------------------------
ஊதிய உயர்வு போதாது: டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழு

போதை கூடத்தான் போதலைன்னு கத்துறாங்க. நீங்க கலக்காமலா விடுறீங்க?
-------------------------------------------------------------------------------------------------------
டாஸ்மார்க் ஊழியர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

ஆமா! டாஸ்மார்க் ஊழியருக்கு ஆதரவா பேசினா ஏழைகளுக்கு எதிரில்லையோ?
-------------------------------------------------------------------------------------------------------
அன்புமணி வாய் திறந்தது உண்டா? கலைஞர்

அவரு டாக்டருங்கையா! மத்தவங்களை வாய் திறக்கச் சொல்லிதான் பழக்கம்.
-------------------------------------------------------------------------------------------------------
சமூக நீதியைப்பற்றி பேச யார் தகுதி படைத்தவர்கள்: ராமதாசுக்கு கலைஞர் கேள்வி

சன் அண்ட் சன்ஸ்தான். நீங்க ஏன்யா கேள்வி கேட்டுகிட்டு. ஒரு பய இல்லைன்னு சொல்லட்டும்.
-------------------------------------------------------------------------------------------------------
புதிய தமிழகம் கட்சியினர் கோஷ்டி மோதல்

இதுல கோஷ்டி சேர்க்குற அளவுக்கா இருக்காய்ங்க?
-------------------------------------------------------------------------------------------------------
கோவையில் மாபெரும் கூட்டத்தை கூட்ட வேண்டும்: காங்கிரசாருக்கு தங்கபாலு வேண்டுகோள்.

ஒரு 25000 பேரு வந்தா போறாது? அதுக்கு மேலல்லாம் எதிர்பார்த்தா நெம்ப ஓவருல்ல?
-------------------------------------------------------------------------------------------------------
அசின் படத்தை வாங்க சக்தி சிதம்பரம் முடிவு

பேரு குடுக்குற சக்திதான்.
-------------------------------------------------------------------------------------------------------
ஈழத்தமிழர்கள் நிலை: கண்கலங்கிய ரஜினி

ப்ச்! தலைவரே கலங்கிட்டாரு. இனிமே விடிஞ்சிடும்.
-------------------------------------------------------------------------------------------------------

Friday, August 13, 2010

இட ஒதுக்கீடு விழலுக்கிறைத்த நீரா?

பொறுப்பி:

1.இந்த இடுகையிலிருக்கும் தகவல்கள் மேம்போக்காக எழுதப்பட்டவை அல்ல. என் முப்பத்து ஐந்து வருட சர்வீஸில் முப்பது வருடங்கள் இட ஒதுக்கீடு சம்பந்தமான விதிமுறைகளுடன் கழிந்துள்ளதன் அடிப்படையில் எழுதியது.

2.ஒரு புறம் இதன் பயனை அடைவோர்களின் மேலான என் பெருங்கோபத்தைச் சரிவர புரியவைக்க இயலுமா என்ற பயமிருந்த போதிலும் வேறெந்த வழியிலும் இந்த உண்மை தெரியவரப் போவதில்லை என்பதே எழுதியாக வேண்டும் என்ற உந்துதலைத் தருகிறது.

3. எடுத்தோம் எழுதினோம் என்று எழுதியதில்லை இது. திரு காமராஜ் இடுகையில் அனேகமாக மூன்று மாதங்களுக்கு முன் இட்ட பின்னூட்டத்தின் தொடர்ச்சி இது.

4.தகவலில் சந்தேகமிருப்பின் தகவல் பெறும் சட்டத்தின் கீழ் எந்த அரசு அலுவலகத்திலும் இதில் சொல்லப்படும் தகவலை உறுதி செய்துக் கொள்ள இயலும்.
______

சாதிவாரிக் கணப்பெடுப்புக்கு கோரிக்கை வைத்திருக்கும் நேரமிது. அதன் பின்னான அரசியல் குறித்த விடயம் நமக்கு அக்கறையில்லை. இப்போதிருக்கும் சட்டத்தின் படி இட ஒதுக்கீடு என்பது முற்று முழுதாக அரசு அலுவலகங்களில் கடைப்பிடிக்கப்படும் ஒன்று. 

இதனைப் பெற எத்தனைப் போராட்டங்கள்? எத்தனை உயிர்த் தியாகங்கள்? அப்படிப் போராடிப் பெற்ற ஒரு சலுகை எதற்காகக் கொடுக்கப்பட்டதோ அந்தக் குறிக்கோளை அடைந்திருக்கிறதா? இல்லையெனில் காரணம் யார்?

இது குறித்தான அலசலுக்கு முன் இரண்டு நாட்களுக்கு முன்பான செய்தி இது. ஒரு முறை படித்துக் கொள்ளுங்கள்.

New Delhi, Aug 11 (IANS) A total of 54,637 posts for Scheduled Caste, Scheduled Tribe and Other Backward Classes are vacant in central government ministries and departments.

Minister of State in the Prime Minister's Office Prithviraj Chavan told parliament Wednesday that the number of vacancies in the three categories were 26,565, 25,649 and 21,143 respectively.

Of these, 12,045, 2,799 and 3,876 posts had been filled, Chavan said in the Lok Sabha in reply to a question from P.L. Punia.

The minister said a special recruitment drive was launched Nov 19, 2008 to fill up the backlog of reserved vacancies

படித்தவுடன் மனதில் எழும் கேள்வி, இத்தனை காலியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதற்குக் காரணமென்ன? அரசா என்பது.

ஸ்பெஷல் ரெக்ரூட்மெண்ட் ட்ரைவ் எனும் சொல் இது அரசின் தவறல்ல. வழக்கம்போல் நடைபெற்ற தேர்வுகளில் நிரப்பப்படாமல் சேர்ந்து போன இடங்கள் என்பதாலேயே, மீண்டும் இவர்களுக்கு மட்டுமே ஒரு சிறப்புத் தேர்வு நடத்த அரசு நடவடிக்கை எடுத்திருப்பதைச் சுட்டுகிறது.

அப்படியெனில், நாட்டில் வேலையின்மை என்பதே இல்லையா? அரசுத் துறையை புறந்தள்ளி தனியார்த் துறையில் சலுகைகளும் சம்பளமும் அதிகமாகவா இருக்கிறது? பின்னெப்படி இத்தனை காலியிடங்கள் சேர்ந்திருக்க முடியும் என்ற கேள்வி எழும்புகிறதா இல்லையா?

மாநில வாரியாகப் பார்த்தோமானால், கேரளாவில் ஒரு இடம் கூட இப்படி காலியிருக்காது. தமிழகத்தில் மிக அதிகமாயிருக்கும் என்பது என் கணிப்பு. இதற்கு முன்பே ஒரு இடுகையில் கூறியிருந்தபடி ரயில்வே ரெக்ரூட்மெண்ட் ட்ரைவ் நடத்தும் இத்தகைய ஸ்பெஷல் ட்ரைவ்களில் பங்கேற்போர் பெரும்பாலும் பீகார் மாநிலத்திலிருந்தும் இதர வட மானிலங்களிலிருந்து வந்தவர்களுமே. அப்படியும் பங்கேற்போர் சதவீதம் வெகு குறைவே.

இது பனிப்பாறையின் ஒரு விளிம்பே. ஆரம்பக்கட்ட வேலை வாய்ப்பில் நிரப்பப் படாத காலியிடங்களின் எண்ணிக்கை மட்டுமென்றே கொள்ளவேண்டி யிருக்கிறது.

இதையும் தாண்டி இச் சலுகையின் பின்னான முக்கியத்தை உணராமல் அரசு இயந்திரத்தை முடக்கிப் போடுபவர்கள் யார்? தன்னலம் என்று கூட சொல்லமாட்டேன் தன்சுகம் கருதி, தன்னையொத்தவன் வயிற்றில் மண்ணள்ளிப் போடுவது யார்? இட ஒதுக்கீட்டின் பயன் அனுபவிப்பவர்களே என்பது அதிர்ச்சியளிக்கக் கூடும்.

அரசுப் பணியானது வர்ணாஸ்ரமத்தைப் போன்றே நான்கு. க்ரூப் ‘A’, ‘B', 'c', மற்றும் ‘D' எனப்படும் கடை நிலை ஊழியர்கள். இதில் க்ரூப் 'A' என்பது ஐ.ஏ.எஸ் போன்ற நேரடி வேலை வாய்ப்பு. அதிலும் பின் தங்கல் இருக்கிறதென்றாலும் அது குறித்த விவாதமில்லை இது. B,C, மற்றும் D குறித்தான நிலைப்பாடு இது. 

க்ருப் ‘D' மற்றும் க்ருப் ‘c' பிரிவுகளில் பணி உயர்வுக்கு வாய்ப்பாக பல்வேறு நிலைகளில் பதவிகள் இருக்கும். ஒவ்வொரு பதவியிலும் மொத்த எண்ணிக்கையில் 15 சதம் தாழ்த்தப் பட்டவர்களுக்கும் 7.5 சதவீதம் மலைச் சாதியினருக்குமான ஒதுக்கீடாகும்.

பதவி உயர்வு பெரும்பாலும் மூப்பு மற்றும் தகுதி என்ற அடிப்படையிலும், பல பதவிகளுக்கு தேர்வு மற்றும் தகுதி அடிப்படையிலும் அமைந்துள்ளது. இந்தத் தேர்விலும் பொதுஜன பாதுகாப்பு தவிர இதரப் பதவிகளுக்கு குறைந்த மதிப்பெண்கள் போதுமானது. 

ஆனால் உண்மையில் நடப்பதென்ன? மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு கிடைக்கும் வரை இவர்களுக்குப் பிரச்சனையில்லை. தேர்வு என்ற கட்டம் வரும்போது பெரும்பாலோர் பங்கேற்க முன்வருவதில்லை. காரணம் பொறுப்பை ஏற்கத் தயக்கமும், எதற்கு தேவையற்ற ரிஸ்க் என்ற மனோபாவமும் என்பது அனுபவத்தில் கண்ட உண்மை.

சரி இதனால் என்ன பாதிப்பு? அது அவர்கள் உரிமையல்லவா என்று கேட்கலாம். நிச்சயமாக அவர்கள் உரிமைதான். ஆனால் அவர்கள் உரிமைக்கு பலிகடா ஆவது யார் தெரியுமா? அவர்களேதான். காரணம், அவர்கள் தேர்வுக்கு தயாரில்லை எனும் பட்சத்தில் அவர்களுக்கு மேலான பதவிகளுக்கான காலியிடம் அப்படியே இருக்கும். வேறு எந்த விதமாகவும் அதை நிரப்ப முடியாது.

அதே போல் இவர்களுக்கு கீழ் பதவியில் இருப்பவர்களின் பதவி உயர்வையும் இவர்கள் தடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இது ஒரு சங்கிலித் தொடர் பாதிப்பாகும். இதற்குக் காரணமென்ன? சலுகையளிக்கிறோம் என்ற பெயரில் அரசும் ஒரு வகையில் காரணம்.

ஒரு பதவியில் குறித்த காலம் பணியாற்றி அனுபவம் பெறு முன்னரே அதற்கும் உயரிய பதவியில் காலியிடமிருக்கிறது என்ற காரணத்துக்காக, மடமடவென பதவி உயர்வளித்து ஒரு நிர்வாகப் பொறுப்புக்கு உரித்தாna பதவியில் அவர்களை அமர்த்துகையில் அப்பணி குறித்தான அனுபவ அறிவோ, தகவலறிவுக்கோ வழியின்மை அவர்களை தன்னம்பிக்கை அற்றவர்களாக்குகிறது. 

இப்படித் தேங்கிப் போன பதவி உயர்வுகளுக்கான காலியிடங்களை நிரப்பவே முடியாது என்ற நிலையில், அடிப்படைப் பதவியிலும் சேர ஆட்களே இல்லாமல் பதவிகள் தேங்கியும் கிடக்கிறதென்றால் தவறு எங்கே?

பெரும்பாலான நிர்வாகப் பதவிகள், காலியிடங்களாகவே இருக்கும் பட்சத்தில் அரசு நிர்வாகம் எப்படி சீராக நடக்கும். அரசுக்கு இதனால் நஷ்டமா என்ன? துண்டு போட்டு வைத்திருக்கிறது, குந்த ஆட்கள் இல்லையெனச் சொல்லிவிட்டு சும்மாயிருக்கும். 

இஞ்சினியரிங் மற்றும் மருத்துவக் கல்லூரி, பட்டப்படிப்புகளிலும் இட ஒதுக்கீடு இருக்கிறது அல்லவா. அவற்றிலும் காலியிடங்கள் இருந்தாலும் அது மிகக் குறைவே. அப்படிப் படித்து தேறி வருபவர்கள் அரசுத் தேர்வு எழுத மறுப்பது ஏன்? இரயில்வே போன்ற தொழில் நுட்பம் சார்ந்த துறைகளில் ஏன் இஞ்சினியர்கள் பங்கெடுப்பதில்லை. 

எஞ்சினியரிங் படித்துவிட்டு பேங்க் கிளார்க் வேலைக்கு தேர்வாகி அட்டெஸ்டேஷன் என்று வருபவர்களிடம் ஏன் இப்படி என்றால் வரும் பதில் என்ன தெரியுமா? ஏதோ ஒரு வேலை வேணும்சார். இதுன்னா ரிஸ்க் இல்லையாம். ஒரு பட்டப் படிப்பு படித்து இந்த வேலைக்கு காத்திருப்பவன் வாயில் மண்ணள்ளிப் போடுவதில்லையா இது? 

இன்று DNB டாக்டர்கள் இல்லையெனில் பல அரசு மருத்துவ மனைகளில் நோயாளிகளைக் கவனிக்க டாக்டர்கள் இருக்க மாட்டார்கள். காண்ட்ராக்ட் மருத்துவர்களாக வரத்தயாராய் இருப்பவர்கள் ஏன் UPSC பரீட்சை எழுதி அரசு டாக்டராக வர மறுக்கிறார்கள்?

இப்போது சொல்லுங்கள். இட ஒதுக்கீடு விழலுக்கிறைத்த நீரா இல்லையா?
~~~~~

Monday, August 9, 2010

நிழலின் ஒளி

கடந்த ஆறு நாட்களாக வெளிவந்த இரண்டாம் நிழல் நெடுங்கதை நேற்றுடன் முடிவுற்றது. தொடர்ந்து ஊக்கமளித்த அனைவருக்கும் நன்றி. 

முதலில் இந்தக் கதையை எழுதியவர் யார் என்பதில் ஒரு ஆர்வத்துக்காக திரு கதிர், திரு பிரபாகர், திரு பலாபட்டரை ஷங்கர், திரு நசரேயன் ஆகியோரின் அனுமதியின்றியே அவர்கள் பெயரைச் சேர்த்ததற்கு கோபப்படாமல் இருந்தமைக்கு நன்றி. 

இது வரை யாரும் முழுதாக கண்டுபிடிக்கவில்லை. அதனால் பரிசு (அப்புடி ஒன்னு இருந்துச்சான்னு அடிக்க வராதீங்க! ஹி ஹி) கம்பெனிக்கே. 

அது சரி மற்றும் கலகலப்ரியாவின் முயற்சியில் உருவான முயற்சி இது. இனி எழுதியவர்கள்:

முகிலன், அது சரி -----------------------------முன்னுரை


வானம்பாடிகள்---------------------முதல் பாகம்

முகிலன்------------------------------இரண்டாம் பாகம்

அது சரி--------------------------------மூன்று, ஐந்து மற்றும் ஆறு

கலகலப்ரியா, அது சரி-----------நான்கு 

முதல் பாகம் என்பதால் எனக்கு எந்த அழுத்தமும் இன்றி என்னால் எழுத முடிந்தது. திரு முகிலன் அவர்கள் கொண்டு வந்த ஒரு திருப்பத்தைக் கதைக் கருவாக்கி பரபரப்பாக கொண்டு சென்றதில் அது சரியின் பங்களிப்பும், கலகலப்ரியாவின் பங்களிப்பும் மிகச் சிறப்பானது என்பதில் ஐயமில்லை. இதில் எனக்கும் ஒரு பங்களித்தமைக்கு நன்றி.

பின்னூட்டத்தில் ஆர்வமாக பங்கேற்ற எல்போர்ட், மற்றும் பிரபா பதிவர்களுக்கு ஒரு பாடம் சொல்லியிருக்கிறார்கள்.

முகிலன்: ஸ்ரீதரனின் டேபிளை கிரிக்கட் மைதானம் என வர்ணித்ததை வைத்து பிரபா இரண்டாம் பாகம் உங்களுடையது எனக் கண்டு பிடித்து விட்டார்.    

அது சரி: வார்த்தைகளுக்கு நடுவே புள்ளிகளை கணக்கு வைத்து சரியாகக் கண்டு பிடித்து விட்டார் எல்போர்ட்.

கலகலப்ரியா: புள்ளிகளையும் தமிழையும் சொன்னாலும் ப்ரியா எந்தத் தமிழும் எழுதுவார் என்பதால் புள்ளிகளை மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும். 

க்ளூவை எல்போர்ட் சொல்லிவிட்டதால், புள்ளிகளை நீக்கியபின் 5,6 பாகங்களை எழுதியவர் யார் என அவரால் சரியாக ஊகிக்க முடியவில்லை. 

இதுவரை படிக்காதவர்கள், ஒரே கோப்பாக பெற இங்கே சுட்டவும்.

ஊக்குவித்த அனைவருக்கும் மீண்டும் நன்றி.
~~~~~~~~~

Monday, July 19, 2010

நறுக்னு நாலு வார்த்த V4.7










அவர் ராஜீவ் காந்தி கூறியபடி இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டிருந்தால் இன்று இலங்கையில் இரு மாகாணங்களில் அவர் முடிசூடா மன்னனாக இருந்திருப்பார்...ப.சிதம்பரம்.

ஹி ஹி. அவரு என்னா அரசியல்வியாதியா? இதுக்கு ராஜீவ் என்னா? ஜெயவர்த்தன சொன்னத கேட்டிருந்தா போறாது?
_________________________________________________________________
இலங்கையில் எத்தனை பேருக்கு பேரிழப்பு. எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர். ப.சிதம்பரம்.

அட மொத்த கணக்க உடுங்க. கடைசி நாள் எத்தனபேரு? யாரெல்லாம் காரணம்னு சொல்லலாம்லங்க. வரலாறு முக்கியம் அமைச்சரே:)
_________________________________________________________________
இலங்கை தமிழர் நலனுக்காக இந்தியா 3600 கோடி நிதி உதவி அளித்துள்ளது. அங்குள்ள இடம்பெயர்ந்த தமிழர்களுக்கு 50 ஆயிரம் வீடுகள் கட்டித்தர 1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது... அவரேதான்.

அண்ணோவ். வெவரம் ப்ளீஸ். ராடார் வச்ச கணக்கெல்லாமும் சேர்த்தா?
_________________________________________________________________
 ஆக்கிரமிக்கப்படவுள்ள தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளுக்கு நஷ்ட ஈடாக வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கமைய செயற்படுமாறும் அவர்கள் வடக்கு கிழக்கு அரச அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்... அண்ணனேதான்.

ங்கொய்யால. குந்த குடிசையில்ல. அத புடுங்கிட்டு துட்டு தருவாராம். கோவணத்துல சொருகி வச்சாலும் ஆமிக்காரன் புடுங்கிட்டு உட்டுடுவானே. அகுடியா குடுக்குறாரு.
_________________________________________________________________
அவர்களது சொந்த வங்கிக் கணக்குக்களுக்கு நேரடியாகவே பணத்தினை அனுப்ப முற்பட்ட வேளை அவ்வாறு அனுப்ப முடியாது என்றும் பணம் தமது அரசின் ஊடாகவே கையளிக்கப்பட வேண்டும் என்றும் இலங்கை அரசு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. செய்தி.

அத்த்த்து! இவன் என்ன கேனையா. இவன் அடிச்சது போக மிச்சம் குடுப்பான். அத ஆமிக்காரனும், கோடாரிக்காம்பும் புடுங்கிட்டு உட்டுரும்.
_________________________________________________________________
இலங்கை தனது பொறுப்புக்களை சரியான முறையில் நிறைவேற்றி வருகின்றமையினால் இங்குள்ள நிலைமை தொடர்பில் ஆராய இந்தியா சிறப்புத் தூதுவர் ஒருவரை அனுப்பவேண்டிய அவசியம் தற்போது இல்லை ...டலஸ் அழகப்பெரும.

பருப்புகளை சரியான முறையில் நிறைவேற்றி வருகின்றமையால் யாரும் காசு தரவேணாம்னு சொல்லுவானுங்களா பரதேசிங்க?
_________________________________________________________________
ஆடைகளுக்காக நாட்டின் இறைமையை அடகு வைக்க முடியாது : அரசாங்கம்

இதெல்லாம் உங்களுக்கே ஓவராத் தெரியல. உங்களை எவனாவது அடமானம் கேட்டான். வாங்கிக்கங்கடான்னு எல்லாரும் கால நக்குற திமிரு பேசச் சொல்லுது.
_________________________________________________________________
ஜெ., வாயில் வந்ததையெல்லாம் பேச வேண்டாம் : கலைஞர் எச்சரிக்கை

ஏனுங்க? எழுதி வச்சி படிச்சா பரவால்லையா? இல்ல அதும் ஆளும்கட்சிதான் பேசலாமா?
_________________________________________________________________
மு.க.அழகிரியின் மொழி பிரச்சனைக்கு தீர்வு

இன்னாது? யாருக்கு மொழி பிரச்சன? நெனச்சா இட்டாலியன் சப்டைட்டிலோட டிவிடியே விடுவோம்டி.
_________________________________________________________________
புகாரை நிரூபிக்க ஜெ. தயாரா? கலைஞர் கேள்வி

அட ஏன் தலைவரே அவங்கள கேட்டுகிட்டு. பொய்ப்புகார்னு நாம நிரூபிச்சிட்டு போறது.
_________________________________________________________________
காங்., உறுப்பினர்கள் பேட்டி அளிக்கக் கூடாது: தங்கபாலு

வெள்ளைக்காரன் சுதந்திரம் கொடுத்தாலும் இவரு கொடுக்கமாட்டாரு போலயே! இந்தாளு பேசாம இருந்தாலே பாதி பிரச்சனை இருக்காது.
_________________________________________________________________
அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்க தயார்: மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி 

பதில் இருக்கும். அதில் நிஜமிருக்குமா?
_________________________________________________________________
மீண்டும் காங்கிரஸ் தலைவர் ஆகிறார் சோனியா

சே போங்கப்பா ஜோக்கடிச்சிகிட்டு. அவுங்க இத்தாலிக்கே திரும்பி போனாலும் அவுங்கதான் காங்கிரசு. காங்கிரசுதான் அவுங்க. 
_________________________________________________________________
திருப்பதி நகைகள் மாயமாகவில்லை!

இத சொல்ல ஏம்பா இவ்வளவு நாள்? உட்டா சாமி சேட்டுகிட்ட அடமானம் வெச்சிட்டு சீட்டாடி தோத்துட்டாரு மீட்டுகிட்டு வந்தோம்னு சொல்லுவானுங்க.
_________________________________________________________________
எந்த மந்திரி ஓட்டலில் பேருந்தை நிறுத்துவது: அரசு டிரைவர்கள் கேள்வி?

அட இது ஒரு பிரச்சனையா? போகும்போது ஒருத்தரு ஓட்டல் , வரும்போது ஒருத்தரு ஓட்டல். உங்களுக்கு ஓசில கெடைக்குதா அதப்பாருங்கப்பு. 
****************************

Wednesday, July 7, 2010

ப்ரோட்டகால் - ஒரு விளக்கம்.

அரசு கடிதப் போக்கு வரத்தில் பெயர் குறிப்பிடாத காரணம் குறித்து பாஸ்டன் ஸ்ரீராமின் பின்னூட்டம் இது:


போன பதிவின் follow up

//வானம்பாடிகள் said... sriram said... பாலாண்ணா.. பதிவுலக ப்ரோட்டோகால் பத்தியும் சொல்லுங்களேன்.. அப்புறம் - அரசு அலுவலகங்களின் கடிதப் போக்குவரத்துக்களில் பேர் போடாம பதவி மட்டும் போடும் காரணம் பத்தி சொல்றேன்னு சொன்னீங்களே - எப்ப சொல்வீங்க? என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்//
சொல்றேனே:)//

பாலாண்ணா..
மொதோ மேட்டர் (பதிவுலக ப்ரோட்டோகால்) எப்போ சொல்வ்றீங்க, ரெண்டாவது மேட்டர் (அரசாங்க கடிதப் போக்குவரத்து) எப்போ சொல்றீங்கன்னு என் கையில் அடித்து (கிள்ளி) சத்தியம் பண்ணி சொல்லுங்க, அப்போதான் நம்புவேன்.

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்//


ஹி ஹி. பதிவுலகில ப்ரோட்டகால்னு ஒன்னு கிடையாதுன்னுதான் நினைக்கிறேன். அதுமில்லாம நான் பதிவுலக கத்துகுட்டி. அதனால சும்மா இருப்பதே சுகம் அப்படிங்கற ப்ரோட்டகால்தான் சரி.


~~~~~~~~~~~~~~~

அரசு அலுவலக கடிதங்கள் பொதுவா ரெண்டு வகை. ஒன்னு அலுவலகங்களுக்கு இடையிலானது.  மற்றது அலுவலகத்துக்கும் ஒரு தனிப்பட்ட ப்ரஜைக்கானது. முதலாவது அஃபிஷியல் கரஸ்பாண்டன்ஸ். இதுலயும் அஃபிஷியல், பெர்ஸனல்னு ரெண்டு வகை உண்டு.
முதலாவது ஒரு செக்‌ஷன், அல்லது அலுவலகத்துக்கு இடையிலானது. அடுத்தது ஒரு அதிகாரிக்கும் மற்ற அதிகாரிக்குமோ அல்லது ஒரு அதிகாரிக்கும் அவரின் ஊழியருக்குமோ இடையிலானது.

அலுவலகத்துக்கும் அலுவலகத்துக்கும் இடையிலான கடிதப் போக்குவரத்து என்பதால், அட்ரஸ், சல்யூட்டேஷன் எல்லாம் இருக்காது. உதாரணத்துக்கு ஒரு செக்‌ஷன் மேனேஜர் இன்னோரு செக்‌ஷன் மேனேஜருக்கு எழுதும் கடிதத்தில், பதவி மட்டுமே குறிப்பிடப்படும். ஒரு அலுவலகம் இன்னோரு அலுவலகத்துக்கு எழுதும் கடிதத்தில் அலுவலக தலைமை அதிகாரியின் பதவி மட்டுமே குறிப்பிடப்படும். கையெழுத்துப் போடுபவர் for என்று போட்டு கையெழுத்துப் போடுவார். 

ஒரு அலுவலக அதிகாரிக்கும் மற்ற அலுவலக அதிகாரிக்கும் இடையேயான பெர்ஸனல் கரஸ்பாண்டன்ஸ் டெமி அஃபிஷியல் எனப்படும். இது பெரும்பாலும் முக்கியமான விடயத்தில் பொறுப்பாளியாக்க பயன்படுத்தப்படும். இதில் அதிகாரியின் பெயர் இருக்கும். கடிதம் பெயரிட்டு தொடங்கும். முடியும் போது க்ரீட்டிங்ஸ், யுவர்ஸ் சின்சியர்லி எல்லாம் இருக்கும். இதில் ப்ரோட்டோகால் கீழ்க்கண்டவை:

1. எழுதப்படும் கடிதம் எழுதுபவரை விட பதவியில் உயர்ந்தவருக்கோ, அல்லது அதே பதவியில் சீனியருக்கோ என்னும் பட்சத்தில் Dear Sri  என ஆரம்பிக்கும். க்ரீடிங்க்ஸில் ஃபேர் காபியில் கையெழுத்திடுபவர் தன் கையெழுத்தில் with regards என்று எழுதுவார்.
2. ஒரே க்ரேடில் இருப்பவரோ அல்லது ஜூனியரோ எனில் My dear என ஆரம்பிக்கும். க்ரீடிங்கில் ' with best wishes' என எழுத வேண்டும்.
3. பெறுனர் பெண்களாயின் ‘Dear Ms/Mrs' என்றே அட்ரஸ் செய்ய வேண்டும். 

இதில் அடுத்ததாக பெர்ஸனல் கரஸ்பாண்டன்ஸ் என்பது ஒரு ஊழியரைக் கண்டிக்கவோ, தண்டனை தரவோ அல்லது பாராட்டவோ எழுதப்படுவது. இதுவும் பதவிக்கும், ஒரு ஊழியருக்கும் என்பதால் ஊழியரின் அலுவலக முகவரியும், ஆணையிடுபவரின் பதவியும் மட்டுமே இருக்கும். 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அரசு அலுவலக கடிதத்துக்கும் தனிப்பட்ட பொது ஜனத்துக்குமான கடிதப் போக்குவரத்து என்பது பொதுவாக ஒரு தகவலாகவோ, அல்லது விளக்கமாகவோ மட்டுமே இருக்கும். எனவே தனிப்பட்டவருக்கு ஒரு பதவி எழுதும் கடிதம் என்பதால் இதிலும் அட்ரஸ், கையொப்பமிடுபவர் பெயர் இருக்காது. 

ஆனால், ஒரு தனிநபரின் சாதனைக்காகவோ, அல்லது அன்னாரின் குடும்பத்தில் இருந்த அரசு ஊழியரின் தியாகத்தைப் பாராட்டியோ (உ.ம். கலவரத்தில் இறந்த போலீஸ் ஊழியர், போரில் இறந்த ராணுவ வீரர், தன் சாதனைகளுக்காகப் பாராட்டப் படும் தனிப்பட்ட ஒருவர்) எழுதப்படும் கடிதங்களில் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரி, தனிப்பட்ட முறையில் விளித்து, வாழ்த்து அல்லது நன்றி பாராட்டி, தன் பதவியின் பெயரோடு தன் பெயரில் கையெழுத்திடுவார். 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தகவலறியும் சட்டம் வந்த பிறகு, தவறான தகவல் அளித்தமைக்கு, அல்லது தகவல் அளிக்க சட்டத்திற்கு விரோதமாக மறுத்தமைக்கு பொறுப்பு என்பதால், எல்லாத் தனிநபருக்கான அரசு கடிதத்திலும் பெயரும், பதவியும் போட்டாக வேண்டும் என்ற ரூல் வந்துவிட்டது. ஆனாலும் பெயர் குறித்து விளிக்கவேண்டிய அவசியமில்லை. 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
காமெடி பீஸ்:
1. டெமி அஃபிஷியல் லெட்டர்களில் பெண் அதிகாரிக்கு எழுத வேண்டுமெனில் சீனியரா ஜூனியரா கண்டுபிடி என்று உயிரெடுப்பார்கள். திருமணமாகிவிட்டதா இல்லையா என்று கேட்கச் சொல்லுவார்கள். கிருத்திருமம் பிடித்த ஸ்டெனோ டைவர்ஸ் ஆயிருக்கான்னு கேக்க முடியுமா சார் என்று டரியலாக்குவான். 
2. உதாரணமாக ஒரு அதிகாரியின் பெயர் உமா ராஜகோபால் என்றிருந்தால் ஜூனியர்தான் ஆனா தெரியாது அவங்கள, அதனால டியர் மிஸஸ் உமான்னு போடுங்க என்பார். ஸ்டெனோ மிஸஸ் போட்டா ராஜகோபால்தான் போடணும்னு க்ளாஸ் எடுப்பான். 
3. பிடிக்காத சீனியருக்கு எழுதும் கடிதத்தில் ‘நாசமா போக’ இவனுக்கு 'with regards' வேறன்னு திட்டிக் கொண்டே கையெழுத்து போடுவது ப்ரீச் ஆஃப் ப்ரோடாகாலில் வராது. 
4. கிறித்துவ மத ஆஃபிஸருக்கு Sri/smt  போடக்கூடாதுன்னு Mr./Ms/Mrs போட்டு டைப் செய்து வரும் ட்ராஃப்டில் சுழித்து Sri/smt போடும் அதிகாரிகள் உண்டு.
5. முஸ்லிம் மதத்தினருக்கு Sri/Mr/Smt/Mrs/Ms போடுவதை பெரும்பாலும் விரும்புவதில்லை என்றால் கேட்காமல் போட்டாக வேண்டும் என பிடிவாதம் பிடித்து ஃபோனில் வாங்கிக் கட்டிக்கொள்ளும் அதிகாரிகள் உண்டு. ஹி ஹி.