Wednesday, August 18, 2010

நறுக்குன்னு நாலு வார்த்த V 4.8

மனிதாபிமான படை நடவடிக்கையின் போது 6000 படையினர் கொல்லப் பட்டனர். 30,000 படையினர் காயமடைந்தனர்: கோத்தபாய

அடங்கொன்னியா! ஒன்னுக்கு பத்துன்னு கணக்கு வெச்சாக் கூட நீ போட்டுத்தள்ளுனது ஒரே நாள்ள எத்தனை. அந்த கணக்கச் சொல்ல மாட்டானே.
-------------------------------------------------------------------------------------------------------
இலங்கை விவகாரம்: கருணாநிதியை சந்திக்கிறார் நிருபமா ராவ்.

சரி சரி! அங்க எல்லாருக்கும் மறுவாழ்வு வழங்கப்படும். மீனவர் பிரச்சனை குறித்து உறுதி மொழி வாங்கியாச்சு.  மேடம் யேப்பி. தலீவர் யேப்பி. ஊதுங்கப்பா பீப்பீ!
-------------------------------------------------------------------------------------------------------
ஜீஎஸ்பி வரிச்சலுகையை இழப்பதற்கு ரணில், மங்கள மற்றும் புலி ஆதரவாளர்களுமே காரணம்: டலஸ்

இவங்களால இவ்வளவு பண்ணமுடியுது. உங்க அத்தனை பேரு, உங்க அல்லக்கைங்களால இதத் தடுக்க முடியலைன்னா, இவங்க கிட்ட குடுத்துட்டு வாத்து மேய்க்க போலாமே வெண்ணைகளா!
-------------------------------------------------------------------------------------------------------
பிரபாகரன், மாத்தையாவை கொன்றதை விடவும் பொன்சேகாவுக்கு இழைக்கப்படும் அநீதி கொடுமை: ரணில்

யா யா! புண்சேகா மசிரு கொட்டிப் போறத விடவா தமிழன் உசுரு போறது பெருசு?
-------------------------------------------------------------------------------------------------------
நல்லிணக்க ஆணைக்குழு முன் பாதுகாப்பு செயலாளர் சாட்சியம்: செய்தி

என்ன கைய புடிச்சி இளுத்தியா மாதிரி எது கேட்டாலும், இஃப் யூ கொஸ்சன் ட குட் காஸ் யூ ஹாவ் ப்லட் இன் யுவ்ர் ஹாண்ட்ஸ்னு வெறிபுடிச்சா மாதிரி கத்தி  இருப்பான்.
-------------------------------------------------------------------------------------------------------
சரத் பொன்சேகாவை ஜெனரல் என அழைக்கக் கூடாது : இராணுவப் பேச்சாளர்

பின்ன? அவரு பெசலில்லையா?
-------------------------------------------------------------------------------------------------------
இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை: இலங்கை மீனவர் சொல்கிறார்

அய்ங்! அப்ப மீன் புடிக்கப் போய் கடல்ல கனவு கண்டுட்டு சொல்றாய்ங்களா? முதல்ல இவரு மீனவரா அரசியல் அல்லக்கையா செக் பண்ணுங்கப்பா செக் பண்ணுங்கப்பா.
-------------------------------------------------------------------------------------------------------
எம்.பிக்களுக்கு சம்பள உயர்வு.

நியாயாம்தானே! நாள பின்ன வருமானத்துக்கு அதிகமான சொத்துன்னு வந்தா கணக்கு காட்ட வேணாமா?
-------------------------------------------------------------------------------------------------------
111 விமானங்கள் வாங்க ஏர் இந்தியா முடிவு

அய்ய! ஏற்கனவே கோவிந்தா! ஒன்னு கூட குறைய வாங்குங்கப்பா. இந்த நம்பர் சரியில்லை.
 -------------------------------------------------------------------------------------------------------
திரைப்படத்தொழிலில் இறங்கும் முகேஷ் அம்பானி

ஏம்பா? வம்பா நீ?. எங்க ஒரு தமிழ் படம் எடு பார்க்கலாம்.
-------------------------------------------------------------------------------------------------------
புதிய விமான நிலையத்துக்கு குறுக்கே நிற்பது நியாயமா? கலைஞர்

தில்லிருந்தா விமானத்துக்கு குறுக்கே நிற்கட்டும். அதென்னா சின்னப்புள்ளத்தனமா விமான நிலையத்துக்கு குறுக்க நிக்கிறது.
-------------------------------------------------------------------------------------------------------
ஊதிய உயர்வு போதாது: டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழு

போதை கூடத்தான் போதலைன்னு கத்துறாங்க. நீங்க கலக்காமலா விடுறீங்க?
-------------------------------------------------------------------------------------------------------
டாஸ்மார்க் ஊழியர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

ஆமா! டாஸ்மார்க் ஊழியருக்கு ஆதரவா பேசினா ஏழைகளுக்கு எதிரில்லையோ?
-------------------------------------------------------------------------------------------------------
அன்புமணி வாய் திறந்தது உண்டா? கலைஞர்

அவரு டாக்டருங்கையா! மத்தவங்களை வாய் திறக்கச் சொல்லிதான் பழக்கம்.
-------------------------------------------------------------------------------------------------------
சமூக நீதியைப்பற்றி பேச யார் தகுதி படைத்தவர்கள்: ராமதாசுக்கு கலைஞர் கேள்வி

சன் அண்ட் சன்ஸ்தான். நீங்க ஏன்யா கேள்வி கேட்டுகிட்டு. ஒரு பய இல்லைன்னு சொல்லட்டும்.
-------------------------------------------------------------------------------------------------------
புதிய தமிழகம் கட்சியினர் கோஷ்டி மோதல்

இதுல கோஷ்டி சேர்க்குற அளவுக்கா இருக்காய்ங்க?
-------------------------------------------------------------------------------------------------------
கோவையில் மாபெரும் கூட்டத்தை கூட்ட வேண்டும்: காங்கிரசாருக்கு தங்கபாலு வேண்டுகோள்.

ஒரு 25000 பேரு வந்தா போறாது? அதுக்கு மேலல்லாம் எதிர்பார்த்தா நெம்ப ஓவருல்ல?
-------------------------------------------------------------------------------------------------------
அசின் படத்தை வாங்க சக்தி சிதம்பரம் முடிவு

பேரு குடுக்குற சக்திதான்.
-------------------------------------------------------------------------------------------------------
ஈழத்தமிழர்கள் நிலை: கண்கலங்கிய ரஜினி

ப்ச்! தலைவரே கலங்கிட்டாரு. இனிமே விடிஞ்சிடும்.
-------------------------------------------------------------------------------------------------------

57 comments:

க.பாலாசி said...

//ப்ச்! தலைவரே கலங்கிட்டாரு. இனிமே விடிஞ்சிடும்.//

ப்ச்! தலைவரே கலங்கிட்டாரு. இனிமே வௌங்கிடும்...

க.பாலாசி said...

//மனிதாபிமான படை நடவடிக்கையின் போது 6000 படையினர் கொல்லப் பட்டனர். 30,000 படையினர் காயமடைந்தனர்://

ஆமா எத இந்தப்‘பய’ மனிதாபினமானம்னு சொல்றான்...

க.பாலாசி said...

// மேடம் யேப்பி. தலீவர் யேப்பி. ஊதுங்கப்பா பீப்பீ!//

ஊ..ஊ............. அடுத்ததா எந்த பீச்ல உண்ணாவிரதம்?

க.பாலாசி said...

//இவங்க கிட்ட குடுத்துட்டு வாத்து மேய்க்க போலாமே வெண்ணைகளா!//

ஏனுங்க? அங்க பண்ணி கெடையாதா?

ஈரோடு கதிர் said...

||போதை கூடத்தான் போதலைன்னு கத்துறாங்க||

அடிக்காத சரக்குக்கு... ஆட்டத்தப் பாரு

இருங்க.. உங்க தலையில விமான நிலையம் கட்டச் சொல்றேன்

க.பாலாசி said...

//மாத்தையாவை கொன்றதை விடவும் பொன்சேகாவுக்கு இழைக்கப்படும் அநீதி கொடுமை: ரணில்//

ஆகா என்னமா வாயில தேன் வடியிற மாதிரி பேசுறான்... ங்ங்ங்கொய்யால படுக்கப்போட்டு வாயிலேயே மிதிக்கணும்..

க.பாலாசி said...

//இவரு மீனவரா அரசியல் அல்லக்கையா செக் பண்ணுங்கப்பா செக் பண்ணுங்கப்பா//

எல்லாப்பயலுவலும் அல்லக்கையாத்தான் இருப்பானுங்க...

dheva said...

பாலண்ணே....@

சிங்கம் களம் இறங்கிடுச்சே.....எல்லாமே நறுக்.. நறுக்....சதக்..சதக்....!

//புதிய விமான நிலையத்துக்கு குறுக்கே நிற்பது நியாயமா? கலைஞர்

தில்லிருந்தா விமானத்துக்கு குறுக்கே நிற்கட்டும். அதென்னா சின்னப்புள்ளத்தனமா விமான நிலையத்துக்கு குறுக்க நிக்கிறது.
-------------------------------------------------------------------------------------------------------//

அதான சின்ன புள்ளத்தனமாவுள்ள இருக்கு...!

க.பாலாசி said...

//அதென்னா சின்னப்புள்ளத்தனமா விமான நிலையத்துக்கு குறுக்க நிக்கிறது.//

அதானே...

சௌந்தர் said...

அன்புமணி பற்றி சொன்னது சூப்பர்.

ரஜினி சும்மா கண்ணில் தூசி விழுந்து விட்டது அதை எடுத்தார் நீங்க எல்லோரும்.....போங்க

செ.சரவணக்குமார் said...

நச்சுன்னு இருக்கு தலைவரே..

ஆரூரன் விசுவநாதன் said...

இத....இதத்தான் எதிர்பார்த்தேன்

நச்.........

தேவன் மாயம் said...

ஈழத்தமிழர்கள் நிலை: கண்கலங்கிய ரஜினி

ப்ச்! தலைவரே கலங்கிட்டாரு. இனிமே விடிஞ்சிடும்.
//

அட! உண்மையாவா?

VELU.G said...

நறுக்குன்னு ரொம்ப நல்லாயிருந்துச்சுங்க

T.V.ராதாகிருஷ்ணன் said...

நச்.

பிரபாகர் said...

//111 விமானங்கள் வாங்க ஏர் இந்தியா முடிவு

அய்ய! ஏற்கனவே கோவிந்தா! ஒன்னு கூட குறைய வாங்குங்கப்பா. இந்த நம்பர் சரியில்லை.//

அக்மார்க் காமெடி அய்யா!

//அன்புமணி வாய் திறந்தது உண்டா? கலைஞர்
அவரு டாக்டருங்கையா! மத்தவங்களை வாய் திறக்கச் சொல்லிதான் பழக்கம்//

நத்திங் ஈஸ் பெட்டர் தன் நான்ஸன்ஸ்...

யூர்கன் க்ருகியர் said...

//ஈழத்தமிழர்கள் நிலை: கண்கலங்கிய ரஜினி//

எந்திரன் படம் ஓடும் பயப்படாதீங்க rajini sir.

நட்புடன் ஜமால் said...

ஈழத்தமிழர்கள் நிலை: கண்கலங்கிய ரஜினி

ப்ச்! தலைவரே கலங்கிட்டாரு. இனிமே விடிஞ்சிடும்.]]

( என்னாது கரிகால் வளவன் இறந்துட்டாரா )

ஆமாமாம் சீக்கிரமே கலங்கிட்டாரு விடிஞ்சிரும் ...

நசரேயன் said...

//எங்க ஒரு தமிழ் படம் எடு
பார்க்கலாம்//

நல்ல கதை என்கிட்டே இருக்கு

யூர்கன் க்ருகியர் said...

பட்டைய கெளப்பிட்டீங்க சார்

முகிலன் said...

Sir template mathunga vatta vattama theriyuthu

முகிலன் said...

Template mathum varai vote poda matten

முகிலன் said...

Venumna parunga ellaarum antha kadesi naruk- kaip pidichi thonguraangala illaiyannu

நாஞ்சில் பிரதாப் said...

சரவெடி....

ரஜினி.... பாவம் படம் ஓடுமோ ஓடாதோ....கண்கலங்குறாரு....அந்த நேரத்துல ஈழத்தமிழர் படத்தை ஓடவிட்டா அவருக்கு டைமிங் கரீட்டு இருந்துருச்கு...

ஜோதிஜி said...

மேடம் யேப்பி. தலீவர் யேப்பி. ஊதுங்கப்பா பீப்பீ!

வயிறு பஞ்சர்.ப்ச்! தலைவரே கலங்கிட்டாரு. இனிமே விடிஞ்சிடும்

அல்லது வௌங்கீடும்

கலகலப்ரியா said...

||மனிதாபிமான படை நடவடிக்கையின் போது||

இந்த எழவ இன்னுமா சொல்லிக்கிட்டு அலைறானுவ...

கலகலப்ரியா said...

||ஈழத்தமிழர்கள் நிலை: கண்கலங்கிய ரஜினி||

அவரின் கண்ணீரைத் தமிழர்கள் துடைப்பார்கள்...

ம்ம்... நிறைய காமெண்ட் போடலாமின்னுதான் பார்த்தேன்... ஊஹூம்... நரம்பெல்லாம் தெறிக்குது... விடு ஜூட்...

அஹமது இர்ஷாத் said...

அன்புமணி வாய் திறந்தது உண்டா? கலைஞர்///

அன்பும‌ணி மேல‌ என‌க்கு எப்ப‌வும் அன்பு உண்டு சொன்ன‌து யாருங்கோ....

கலகலப்ரியா said...

|| முகிலன் said...
Template mathum varai vote poda matten||

ம்க்கும்... இல்லீன்னா மட்டும்...

கலகலப்ரியா said...

||முகிலன் said...
Venumna parunga ellaarum antha kadesi naruk- kaip pidichi thonguraangala illaiyannu||

ஆகா... நான் தொங்கிட்டேன்... ஆகா... ஆகா.. அப்போ ஓட்டுப் போடாததுக்கு இதும் ஒரு காரணமா...

(ஐய்யயோ... நம்புங்க... நான் ரஜினி ரசிகை... ரசிகை... ரசிகை... )

அஹமது இர்ஷாத் said...

இத‌ ப‌த்தியெல்லாம் நாங்க‌ க‌வ‌லைப்ப‌ட‌மாட்டோம். அடுத்து இல‌ங்கைக்கு போற‌து யாருப்பா க‌ருணாஸா.. ரைட்டு.. ப‌ப்ளிசிட்டி வேணுமா கெள‌ம்பு இல‌ங்கைக்கு..

கும்மாச்சி said...

சரிதான் கமெண்டு ஒவ்வொன்னும் சூப்பருங்க.

நாடோடி said...

கேள்விக‌ள் ஒவ்வொன்னும் ந‌ச்சினு இருக்கு..

ஜெரி ஈசானந்தன். said...

கலக்கல் அண்ணா..

ராஜ நடராஜன் said...

//அன்புமணி வாய் திறந்தது உண்டா? கலைஞர்

அவரு டாக்டருங்கையா! மத்தவங்களை வாய் திறக்கச் சொல்லிதான் பழக்கம். //

இதுக்கு ஓட்டுப் போட்டுக்கிறேன்:)

நீங்க ஒரு பக்கம் நறுக்கிறீங்க.இன்னொருத்தர் சுழட்டுகிறார்.இன்னும் சிலர் விண்ணப்பம் கூட வச்சுப் பார்க்கிறாங்க.ஆனால் ஆடுகளம் மட்டும் மாறவே மாட்டேங்குது!மாறுவதற்கான அறிகுறியும் கூட தென்படவில்லை.

(நீண்ட இடைவெளிக்கு பின் இடும் ஒரே ஒரு பின்னூட்டம்)

சிநேகிதன் அக்பர் said...

ஒவ்வொன்னுக்கும் நெத்தியடியான கமெண்ட்ஸ்...

மதுரை சரவணன் said...

//அன்புமணி வாய் திறந்தது உண்டா? கலைஞர்

அவரு டாக்டருங்கையா! மத்தவங்களை வாய் திறக்கச் சொல்லிதான் பழக்கம்.//

அருமையான கமண்டு.. . அத்தினையும் அருமை. வாழ்த்துக்கள்.

Chitra said...

புதிய தமிழகம் கட்சியினர் கோஷ்டி மோதல்

இதுல கோஷ்டி சேர்க்குற அளவுக்கா இருக்காய்ங்க?

...... ஹா,ஹா,ஹா,........ சரியான கேள்வி!

கே.ஆர்.பி.செந்தில் said...

செய்திகளை கமெண்டுகளின் சூடு பொங்கல் வைக்கிறது

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

நல்லாயிருக்குங்க .

அது சரி said...

//
மேடம் யேப்பி. தலீவர் யேப்பி. ஊதுங்கப்பா பீப்பீ
//

:)))

அதெல்லாம் சரி தான்...பட், பீ ஐ மீன் பீப்பீபீ ஊதத் தான் மந்தி(ரி)ங்க இருக்காங்களே? அவங்க குத்தாட்டம் ஏற்பாடு பண்றதுல பிஸியா இருந்தா கலகக் காளைகள் இருக்காங்களே?

அது சரி said...

//
கோவையில் மாபெரும் கூட்டத்தை கூட்ட வேண்டும்: காங்கிரசாருக்கு தங்கபாலு வேண்டுகோள்.

ஒரு 25000 பேரு வந்தா போறாது? அதுக்கு மேலல்லாம் எதிர்பார்த்தா நெம்ப ஓவருல்ல?
//

இருவத்தாஞ்சாயிரம் பேரா? கட்சில இருக்க எல்லாத் தலைவரும் ஒண்ணா சேந்தா கூட அவ்ளோ பேரு தேறாதே? சரி விடுங்க, பக்கத்துல ஆந்திரா, கேரளாவுல இருந்து ஒரு நாளைக்கு மட்டும் இம்போர்ட் பண்ணிக்கலாம்...

தாராபுரத்தான் said...

கடந்த பத்து நாளா வானம்பாடிகள்..பதிவை எனது கணிப்பொறியில் படிக்க முடியவில்லை..புள்ளி புள்ளியா தெரியுது..தொழில் நுட்புனர்கள் எதவி தேவைங்கோ..

பழமைபேசி said...

@@தாராபுரத்தான்

செய்வினையா இருக்கப் போகுது பாருங்க சித்த.... இல்ல, பாலாண்ணனுக்கு ச்சும்மா ஒரு சப்பைக் கட்டா?? இஃகிஃகி

வழிப்போக்கன் - யோகேஷ் said...

சூப்பர். ......

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

//தில்லிருந்தா விமானத்துக்கு குறுக்கே நிற்கட்டும்//

வேணாம் சார், பொறப்படும்போது அட்லீஸ்ட் பின்னாடியாவது நிக்கச்சொல்லுங்க பார்ப்பம்..!

--

@ தாராபுரத்தான்: ஐய்யா நீங்களுமா தலைவர் ரசிகரு?? :))

rajasundararajan said...

தாராபுரத்தான் said...
கடந்த பத்து நாளா வானம்பாடிகள்..பதிவை எனது கணிப்பொறியில் படிக்க முடியவில்லை..புள்ளி புள்ளியா தெரியுது..தொழில் நுட்பினர்கள் உதவி தேவைங்கோ..

ஏற்கெனவே குற்றத்தாக்கல் செய்துவிட்டேன். தலைவர் கவனிக்கிறாற்போல இல்லை. புள்ளி புள்ளியாத் தெரிகிற பக்கத்தைக் copy செய்து MS Word-இல் paste செய்து நம்மிடம் இருக்கும் font-க்கு மாற்றிக்கொள்ள வேண்டியதுதான். நான் அப்படித்தான் வாசித்தேன்.

இனி, இப் பதிவு குறித்து:

எல்லா நறுக்கும் நறுக்கல்ல, நக்கதுபோல்,
பொல்லார்க் கடியும் கொடுக்கு.

வானம்பாடிகள் said...

@@முகிலன்
@@தாராபுரத்தான்
@@ராஜசுந்தரராஜன்

சார்,
மன்னிக்கணும். இப்பொழுது சரியாகத் தெரியும் என நினைக்கிறேன். க்ரோமிலிருந்து எழுதும் பதிவுகளில் ஆப்பிள் ஸ்டைல் க்ளாஸ் என்று வருவதால் இருக்கலாம். தயவு செய்து இப்போதும் பிரச்சினை இருந்தால் சொல்லுங்கள்.

விந்தைமனிதன் said...

//செய்திகளை கமெண்டுகளின் சூடு பொங்கல் வைக்கிறது//

ஆமாமா, புதுசா வைக்குற பொங்கலோட சூடு மாதிரி கமெண்ட்டுகளும் பின்னே செய்திகளும்!

எப்பூடி!!! பொரட்டி பொரட்டி அடிப்போம்ல!

rajasundararajan said...

அய்யா,

உங்கள் இடுகை இப்போதும் 'தெரியாஅது, ஆனா தெரியும்' நிலைமைதான். முகப்புப் பக்கத் திறப்பில் தெரியாது. ஆனால் post a comment-ஐச் சொடுக்கி, Show Original Post-ஐச் சொடுக்கினால் தெரியும்.

அது ஒன்றும் பிரச்சனை இல்லையே? பதிவருக்கு இதனால் ஏதாவது மான அவமானப் பிரச்சனை உண்டா?

வானம்பாடிகள் said...

rajasundararajan said...

அய்யா,

உங்கள் இடுகை இப்போதும் 'தெரியாஅது, ஆனா தெரியும்' நிலைமைதான். முகப்புப் பக்கத் திறப்பில் தெரியாது. ஆனால் post a comment-ஐச் சொடுக்கி, Show Original Post-ஐச் சொடுக்கினால் தெரியும்.

அது ஒன்றும் பிரச்சனை இல்லையே? பதிவருக்கு இதனால் ஏதாவது மான அவமானப் பிரச்சனை உண்டா?//

இல்லீங்க சாமி:)). படிக்கறவங்களுக்கு கஷ்டமில்லாம இருக்கணும். சிம்பிளா ஒரு டெம்ப்ளேட் தேடுறேன். ஒரு நாள் டைம் குடுங்க மாத்திடுறேன்.:)

சி. கருணாகரசு said...

மனிதாபிமான படை நடவடிக்கையின் போது 6000 படையினர் கொல்லப் பட்டனர். 30,000 படையினர் காயமடைந்தனர்: கோத்தபாய//

கொல்லப்பட்டதுக்கு.... பேரு மனிதாபிமானம்? அதுவும்.... 6000!

சி. கருணாகரசு said...

ப்ச்! தலைவரே கலங்கிட்டாரு. இனிமே விடிஞ்சிடும்.//

கிளிசரின் இல்லாமலேவா?!

சி. கருணாகரசு said...

மாத்தையாவை கொன்றதை விடவும் பொன்சேகாவுக்கு இழைக்கப்படும் அநீதி கொடுமை: ரணில்//

இப்ப என்ன சொல்ல வர.... இன்னும் ஏன் பொன்சேகாவ போடைலைன்னா?

சி. கருணாகரசு said...

புதிய விமான நிலையத்துக்கு குறுக்கே நிற்பது நியாயமா? கலைஞர்//

விமான நிலையத்துல குறுக்க நிக்குறதுல எனா தப்பு?
விமான ஓடு பாதையில நின்னாதான் தப்பு!

உசிலை மணி said...

// மசிரு கொட்டிப் போறத விடவா
தமிழன் உசுரு போறது பெருசு?//

வலியினால் கேள்வி கேட்கிறீர்கள், பிடிச்சிருக்குன்னே .......

வானம்பாடிகள் said...

அனைவருக்கும் நன்றி.:)