Monday, August 23, 2010

நல்லாக் கேக்குறான்யா டீட்ட்ட்ட்டேய்லு...

இந்த வாரம் நட்சத்திரப் பதிவராக வாய்ப்பளித்த தமிழ் மணத்துக்கு நன்றி!
 ~~~
ஏன்னு எனக்குள்ளயே கேட்டு பதில் கிடைக்காத கேள்விகள் இவை. பதில் சொல்லிட்டு சிரிங்கப்பு.

1.போற வழியில கோவில் தென்பட்டா, தாண்டி போக மனசில்லாம, செருப்ப அவிழ்த்துட்டு, கண்ணு மூடி வேண்ட்ற நேரத்துல ஆட்டய போட்றுவானுவன்னு சாமிய அதுக்கு கூட நம்பாம கட்டை விரல்ல செருப்பு முனைய அழுத்திக்கிட்டு, சாமி எனக்கு அதக்குடு, இதப்பண்ணு, உன்னயத்தான் நம்ம்ம்ம்ம்ம்ம்பி இருக்கேன்னு உருகி வேண்டுனா மட்டும் இவன நம்பறதுக்கு சாமி என்ன கேனையா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
2.கண்ணு தெரியமாட்டிங்குதுன்னு டாக்டர் கண்ணாடி எழுதி குடுத்தா, ஸ்டைலு போயிரும்னு கண்ணுக்குள்ள ஒட்டுற கண்ணாடி ஒட்டிக்கிறவைங்க 50ரூ கூலிங்க்ளாஸ் மட்டும் ராவுல கூட போட்டுகிட்டு ஸ்டைல் காட்டுறாங்களே எப்புடி?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
3.ரெண்டாயிரத்து ஐநூறு குடுத்து காது கேக்குற மிசினு வெச்சிக்கிட்டா அவமானம்னு காதுக்குள்ள தெரியாம வைக்கிற மிசினு இரவத்தி அஞ்சாயிரம்னாலும் வாங்குறவைங்க, காதுல பனை வண்டு (அதாங்க ப்ளூடூத்) அத்த சொருவிட்டு அலையிறாங்களே எப்புடி?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
4.ஒரு இடுகை முழுசும் சினிமா விமரிசனத்துல அது நொட்டை இது நொள்ளை, லாஜிக் இல்லைன்னு திட்டிட்டு, ஒரு பாட்டுல ஒரு வரிக்கு நாலு நாட்டுல எட்டு உடை மாற்றின்னு அபத்தமா வந்தாலும் அந்தப் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்ட விதம் அபாரம்னு எழுதுறாய்ங்களே, எப்புடி?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
5.டூ வீலர்ல போறவங்க ஹெல்மெட் போட்டா நல்லது. அதுவும் பின்னாடி உக்கார்ந்து போறவங்க போட்டே ஆகணும்னு கரடியா கத்தினாலும், போலீசுக்கு மாமூல் குடுக்கணுமேன்னு பயந்து பின்னாடி உட்கார்ந்து போற மனைவி அத சுமந்துகிட்டு, பேச்சு குடுத்துட்டே போறாய்ங்களே தவிர, போடுங்கன்னோ இல்ல போட்டுக்கிட்டோ போக மாட்டங்குறாய்ங்களே ஏன்?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
6.கிட்டத்தட்ட கால்வாசி சினிமா எடுக்குற காசுல விளம்பரப் படமெல்லாம் எடுக்குறாய்ங்களே. வியாவாரம் நல்லா போகுறதால இப்புடி செலவு பண்ணி எடுக்குறாய்ங்களா இல்ல இப்புடி எடுத்து விளம்பரம் பண்றதால வியாவரம் பிச்சிக்கிட்டு போகுதா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
7.காசு வெட்டாம இங்க லைசன்ஸ் வாங்க முடியாதுன்னு தெரிஞ்சும், தானும் அப்படித்தான் காசு வெட்டி லைசன்ஸ் வாங்கிட்டும் யாராவது மேல இடிச்சிட்டாலோ, இடிக்கிறா மாதிரி வந்தாலோ ‘உனக்கெல்லாம் எப்புடி லைசன்ஸ் குடுத்தாய்ங்கன்னு’ கூசாம திட்டுறாய்ங்களே! எப்புடி?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
8.ஏதோ நோவுன்னு டாக்டர்கிட்ட போனா அவரு ஸ்கேன், எம்.ஆர்.ஐன்னு பாதி சொத்துக்கு வேட்டு வெச்சிட்டு உனக்கு ஒன்னும் இல்லப்பான்னு மெடாசின் குடுத்தா இத்தோட போச்சேன்னு சந்தோசப்படாம, ரூ 50000 அனியாயமா போச்சுன்னு புலம்புறாய்ங்களே ஏன்?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
9.ரேஷன் கார்ட் வாங்க போனா வூட்டு அட்ரசுக்கு ப்ரூஃப் கேக்குறானுவ. பேங்குக்கு போனா ரேஷன் அட்டை ப்ரூஃப் கேக்குறானுவ. PAN கார்ட் வாங்கப் போனா இன்கம்டாக்ஸ் காரன் பேங்க் விவரம் கேக்குறான். பாஸ்போர்ட் வாங்கப் போனா PAN கார்ட் விவரம் கேக்குறான். அப்புறமெதுக்கு போலீஸ் வெரிஃபிகேஷன்னு ஊட்ட தேடி போலீச அனுப்பி மாசக்கணக்கா இழுத்தடிக்கிறானுவ?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
10.ஒரு சர்ஜரி பண்ணனும்னு டாக்டர் சொன்னா நம்பாம செகண்ட் ஒபினியன் தேர்ட் ஒபினியன் வாங்கறது சரி. மெஜாரிடி பார்த்து வேற வழியில்லைன்னு ஆனதுக்கப்புறம், முதல் டாக்டர்கிட்டயே சர்ஜரிக்கு போறாய்ங்களே. ஏங்க நீங்களும் வந்து  சரியா பண்றாரான்னு பார்த்துக்குங்கன்னு மத்த டாக்டருங்கள கேக்காம இப்ப மட்டும் அந்த டாக்டர நம்புறாய்ங்களே எப்புடி?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


108 comments:

நர்சிம் said...

நட்சத்திர வாழ்த்துகள்.

காமராஜ் said...

ஆஹ்ஹா.. அண்ணா வணக்கம். நட்சத்திர வாழ்த்துக்கள்.

Prathap Kumar S. said...

நட்சத்திர வாழ்த்துக்கள் சார்.

நீங்க சொன்ன அனைத்துமே நம் நாட்டு பிரஜைகளின் ரத்தத்தில் ஊறிய விசயங்கள்...
இதுக்கெல்லாம் காரணம் கேட்டா எப்படி சார் ஜொல்றது...?? :))

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

நட்சத்திர வாழ்த்துகள் பாலாண்ணே!!

கலக்கலை எதிர்பார்க்கிறோம்.

ஈரோடு கதிர் said...

என் இனிய தமிழ்மண விண்மீனுக்கு வாழ்த்துகள்

Jackiesekar said...

நட்சத்திர வாழ்த்துக்கள்... தலைவரே..

Unknown said...

நட்சத்திர வாழ்த்துக்கள் ஐயா ...

அப்புறம் எல்லாத்துக்கும் மொத்தமா ஒரு பதில் ...

நீங்க இப்படி கேள்வி கேக்குறீங்க பாருங்க அதுகாவதான் ...

பழமைபேசி said...

தமிழ்மண வானின் நிரந்தர விண்மீனுக்கு வணக்கம்!!!

நாடோடி said...

ந‌ட்ச‌த்திர‌ வாழ்த்துக்க‌ள் பாலா சார்.

Anonymous said...

நாங்களும் வாழ்த்துகிறோம்

Bavan said...

நட்சத்திரத்துக்கு வாழ்த்துக்கள் சார்.;)

settaikkaran said...

ஐயாவுக்கு வாழ்த்துகள்! அடிச்சுத் தூள் பண்ணுங்க! :-)

Anonymous said...

வாழ்த்துக்கள் சார்!

Anonymous said...

நட்சத்திர வாழ்த்துகள்

க.பாலாசி said...

முதல்ல வாழ்த்திக்கிறேன்... பிறகு படிச்சிக்கிறேன் இடுகையை... சந்தோஷமா இருக்கு...

Ravichandran Somu said...

நட்சத்திர வாழ்த்துகள் பாலா சார்!

VISA said...

நட்சத்திர வாழ்த்துகள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நட்சத்திர வாழ்த்துக்கள்.

Unknown said...

நட்சத்திர வாழ்த்துக்கள். சும்மாவே கலக்குவீங்க, இப்ப சொல்லவா வேணும்!!!!!!

priyamudanprabu said...

நட்சத்திர வாழ்த்துகள். நட்சத்திர வாழ்த்துகள். நட்சத்திர வாழ்த்துகள். நட்சத்திர வாழ்த்துகள்.

VELU.G said...

நட்சத்திர வாழ்த்துக்கள்

மிகவும் ரசித்தேன்

priyamudanprabu said...

எல்லாமே பதில் வரா கேள்விகள் (அல்லது பதில் தெரிந்த கேள்விகள் )

எல் கே said...

bala sir, thanks for the link, but just now i heard that the news was hoax. Please kindly remove the link. sorry for the inconvenience

ஜெயந்த் கிருஷ்ணா said...

நட்சத்திர வாழ்த்துக்கள் ஐயா ...

Unknown said...

வாழ்த்துக்கள் பாலா சார்.

நீங்கள் கலாயிபதற்கும் கலக்குவதற்கும் தமிழ்மணம் ஆசிரியர் பொறுப்பு தகுந்த இடம்.

கலக்குங்கள் சார்.

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள் தமிழ்மணத்திற்கும்

Chitra said...

தமிழ்மண நட்சத்திரம் ஆகியதற்கு வாழ்த்துக்கள்!

பத்மா said...

வாழ்த்துக்கள் .இத விட யாரும் சிறப்பா அலங்கரிக்க முடியாது
.

கிட்டத்தட்ட கால்வாசி சினிமா எடுக்குற காசுல விளம்பரப் படமெல்லாம் எடுக்குறாய்ங்களே. வியாவாரம் நல்லா போகுறதால இப்புடி செலவு பண்ணி எடுக்குறாய்ங்களா இல்ல இப்புடி எடுத்து விளம்பரம் பண்றதால வியாவரம் பிச்சிக்கிட்டு போகுதா?

இதை நம்ப தண்டோரா மணிக்கு forward பண்ணி விட்டுடேங்க ....

பத்மா said...

வலைச்சரத்தில கதிர் ,தமிழ் மணத்தில பாமரன் ..இப்படி எல்லாரும் தூள் கிளப்புறீங்களே

Kumky said...

நடசத்திர வாரத்திற்கு வாழ்த்துக்கள்...

T.V.ராதாகிருஷ்ணன் said...

நட்சத்திர வாழ்த்துகள் Bala

ஜெட்லி... said...

நட்சத்திர வாழ்த்துக்கள் ஐயா ...

Jey said...

//கட்டை விரல்ல செருப்பு முனைய அழுத்திக்கிட்டு, சாமி எனக்கு அதக்குடு, இதப்பண்ணு, உன்னயத்தான் நம்ம்ம்ம்ம்ம்ம்பி இருக்கேன்னு உருகி வேண்டுனா மட்டும் இவன நம்பறதுக்கு சாமி என்ன கேனையா//

நறுக்....

Jey said...

நட்சத்திர பதிவரானதற்கு வாழ்த்துக்கள்.

Jey said...

//பின்னாடி உட்கார்ந்து போற மனைவி அத சுமந்துகிட்டு, பேச்சு குடுத்துட்டே போறாய்ங்களே தவிர, போடுங்கன்னோ இல்ல போட்டுக்கிட்டோ போக மாட்டங்குறாய்ங்களே ஏன்?///

தங்ஸ் முடிவெடுக்க வெண்ண்டியது...நாம அதுல தலையிட்டு....அடப் போங்கண்ணே...

Jey said...

//அப்புறமெதுக்கு போலீஸ் வெரிஃபிகேஷன்னு ஊட்ட தேடி போலீச அனுப்பி மாசக்கணக்கா இழுத்தடிக்கிறானுவ?//

பாவம் போலீஸ்க்கும் வருமானம் வேனாமாண்ணே..., அவங்களும் பொழைக்கனுமில்ல...

கலகலப்ரியா said...

வானுயர வளர்ந்து (ம்க்கும்..) வான்மீனான வானம்பாடிக்கு வானளந்த வாழ்த்துகள்...

(வாழ்த்துகள்ன்னு சொல்லிட்டுப் போகலாமின்னு பார்த்தா.. எல்லாரும் புலவர் ரேஞ்சுக்கு வாழ்த்து சொல்லி என்னோட கவுஜாஜினியை சீண்டறாங்க... )

அங்க பாருங்க.. கும்க்கி உங்களுக்கு வாழ்த்து சொல்லாம வாரத்துக்கு வாழ்த்து சொல்றாங்க...
(அப்பாடா... போட்டுக் கொடுக்கலைன்னா நாள் விடியவே மாட்டேங்குது..)

மாதவராஜ் said...

நட்சத்திர வாழ்த்துக்கள் சார்.

Hai said...

நட்சத்திர வாழ்த்துகள்

ப்ரியமுடன் வசந்த் said...

நட்சத்திர வாழ்த்துகள் நைனா!

நிஜாம் கான் said...

தனியா கும்மியடிச்சது போயி இப்ப தமிழ்மணத்தோட சேர்ந்தா! வாழ்த்துக்கள்...

நிஜாம் கான் said...

இந்த கேள்விக்கு என்னால மட்டுமில்ல.. தமிழ்நாட்டுல இருக்கிற யாராலயும் பதில் சொல்ல முடியாது. அண்ணன் போட்டுக்கற கண்ணாடி எந்த வகையின்னு யாரோ தூரமா கத்திட்டு ஓடுறாங்க!!!!!!!

நிஜாம் கான் said...

//ஏதோ நோவுன்னு டாக்டர்கிட்ட போனா அவரு ஸ்கேன், எம்.ஆர்.ஐன்னு பாதி சொத்துக்கு வேட்டு வெச்சிட்டு உனக்கு ஒன்னும் இல்லப்பான்னு மெடாசின் குடுத்தா இத்தோட போச்சேன்னு சந்தோசப்படாம, ரூ 50000 அனியாயமா போச்சுன்னு புலம்புறாய்ங்களே ஏன்?//

அதானே! ஏன்?????

நிஜாம் கான் said...

//காசு வெட்டாம இங்க லைசன்ஸ் வாங்க முடியாதுன்னு தெரிஞ்சும், தானும் அப்படித்தான் காசு வெட்டி லைசன்ஸ் வாங்கிட்டும் யாராவது மேல இடிச்சிட்டாலோ, இடிக்கிறா மாதிரி வந்தாலோ ‘உனக்கெல்லாம் எப்புடி லைசன்ஸ் குடுத்தாய்ங்கன்னு’ கூசாம திட்டுறாய்ங்களே! எப்புடி?//

முடியல...சிரிப்பத்தான்

நிஜாம் கான் said...

//ஒரு இடுகை முழுசும் சினிமா விமரிசனத்துல அது நொட்டை இது நொள்ளை, லாஜிக் இல்லைன்னு திட்டிட்டு, ஒரு பாட்டுல ஒரு வரிக்கு நாலு நாட்டுல எட்டு உடை மாற்றின்னு அபத்தமா வந்தாலும் அந்தப் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்ட விதம் அபாரம்னு எழுதுறாய்ங்களே, எப்புடி?//

எல்லாம் அப்டித்தான். அவனவன் எடுத்தா தெரியும். தமிழ்மணத்துல ஜொலிக்கிறீங்கண்ணே! கிளாரு அடிக்கிதான்னு கேக்காதீங்க‌

மணிஜி said...

வாழ்த்துக்கள் பாலாண்ணா..பத்மா ஏன் இப்படி?

Menaga Sathia said...

congrats sir!!

Unknown said...

நட்சத்திர வாழ்த்துகள் சார்.

//நோவுன்னு டாக்டர்கிட்ட போனா அவரு ஸ்கேன், எம்.ஆர்.ஐன்னு பாதி சொத்துக்கு வேட்டு வெச்சிட்டு உனக்கு ஒன்னும் இல்லப்பான்னு மெடாசின் குடுத்தா இத்தோட போச்சேன்னு சந்தோசப்படாம, ரூ 50000 அனியாயமா போச்சுன்னு புலம்புறாய்ங்களே ஏன்? //

இதுல திரும்ப திரும்ப வேற கேப்பாய்ங்க நிஜமாவே ஒன்னும் இல்லையா டாக்டர்? இவ்வளவு டெஸ்ட் எடுத்திங்க அப்பிடியும் ஒன்னும் இல்லையான்னு. ஹி ஹி ஹி

ஜாபர் ஈரோடு said...

இனிய தமிழ்மண செம்மீனுக்கு வாழ்த்துகள் ....

பிரபாகர் said...

வாழ்த்துக்கள் அய்யா! நிறைய சந்தோஷம்...

எதார்த்தமான கேள்விகள்...

பிரபாகர்...

தருமி said...

ஏங்க இப்படி கேள்வி மேல கேள்வியா கேக்குறீங்க ...!

நட்சத்திர வாழ்த்துகள்

அன்பரசன் said...

வாழ்த்துக்கள் சார்

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

வாழ்த்துக்கள் வாத்தியாரே !!!!

நசரேயன் said...

நட்சத்திர வாழ்த்துக்கள்

பா.ராஜாராம் said...

:-)

பாலாண்ணா, வாழ்த்துகள்!

sriram said...

வாழ்த்துக்கள் பாலாண்ணா..
நட்சத்திர வாரத்தில் ரெண்டு மூணு கேரக்டர் பதிவு எழுதுங்கண்ணா..

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

ஞாஞளஙலாழன் said...

வாழ்த்துகள் sir!

அருமை.

கிரி said...

நட்சத்திர வாழ்த்துகள் சார் :-)

தெய்வசுகந்தி said...

நட்சத்திர வாழ்த்துக்கள்!!

Athiban said...

நல்ல கேள்விகள்தான், ஆனால் பதில்தான் சொல்லமுடியவில்லை.

செ.சரவணக்குமார் said...

ஆஹா.. வாழ்த்துகள் தலைவா. அசத்துங்க.

ரிஷபன் said...

வாழ்த்துகள் ஸார்!

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

வாழ்த்துக்கள் ஐயா

Unknown said...

Congratulation sir.
Star ! You are 5 star sir. Have a great week.
Expecting a series of great posts in this week like kamaraj.

எறும்பு said...

நட்சத்திர வாழ்த்துகள்...
:)

அரசூரான் said...

வானம்பாடி கேட்பார் கேள்வி கோடி,
தினம்தேடி படிப்போர் பதில் தேடி
கேரக்டர் பதிவெல்லம் உயிர் நாடி

தமிழ்மண நட்சத்திர வாழ்த்துக்கள்.

Jerry Eshananda said...

நட்சத்திர வாழ்த்துகள்.

ஜோதிஜி said...

பலதரப்பட்ட வாழ்த்துகள்.

மகிழ்ச்சியாய் உள்ளது.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

வாழ்த்துக்களண்ணே..எம்புட்டு அளகா எளுதறீங்க..ஆத்தாடியோ...உங்க கையை இப்டீ கொடுங்ணா. நச்னு ஒரு முத்தம் கொடுத்து நம்ம கையை ஒரு தபா தேச்சுக்கறேன்..அப்பவாவது இப்டீல்லாம் எளூத வருதாண்ணு...


அன்புடன்,

ஆர்.ஆர்.ஆர்

க ரா said...

நட்சத்திர வாழ்த்துகள் :)

vasu balaji said...

@@நன்றி நர்சிம்
@@நன்றிங்க காமராஜ்
@@நன்றிங்க பிரதாப்
@@நன்றிங்க செந்தில்
@@நன்றி கதிர்:)
@@நன்றிங்க ஜாக்கி
@@நன்றிங்க செந்தில்
@@நன்றிங்க பழமை
@@நன்றிங்க நாடோடி
@@நன்றி சிவசங்கர்
@@நன்றி பவன்
@@நன்றி சேட்டை

vasu balaji said...

@@நன்றிங்க பாலாஜி
@@நன்றிங்க சின்ன அம்மணி
@@நன்றி பாலாசி
@@நன்றி ரவிச்சந்திரன்
@@நன்றி விசா
@@நன்றிங்க முத்துலட்சுமி
@@நன்றிங்க நந்தா
@@நன்றிங்க பிரபு
@@நன்றிங்க வேலு
@@நன்றிங்க LK
@@நன்றிங்க வெறும்பய
@@நன்றிங்க அபு பஸர்
@@நன்றிங்க ஜமால்
@@நன்றிங்க சித்ரா
@@நன்றிங்க பத்மா

vasu balaji said...

@@நன்றிங்க கும்கி
@@நன்றி டி.வி.ஆர் சார்
@@நன்றி ஜெட்லி
@@நன்றி ஜெய்
@@நன்றிங்க மாதவராஜ்
@@நன்றிங்க அரைக்கிறுக்கன்
@@நன்றி வசந்த்
@@நன்றிங்க மணிஜி
@@நன்றிங்க மேனகா
@@நன்றி நிஜாம்
@@நன்றி முகிலன்
@@நன்றி ஜாபர்
@@நன்றி ரமேஷ்
@@நன்றி பிரபா

vasu balaji said...

@@வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க தருமி
@@நன்றி அன்பரசன்
@@நன்றி ஷங்கர்
@@நன்றி பா.ரா
@@நன்றி ஸ்ரீராம். நிச்சயமா
@@நன்றி தளபதி
@@நன்றிங்க ஞாஞளஙலாழன்
@@நன்றிங்க தெய்வசுகந்தி
@@நன்றி கிரி
@@நன்றி தமிழ்மகன்
@@நன்றி சரவணா
@@நன்றி ரிஷபன்

vasu balaji said...

@@நன்றி நண்டு
@@நன்றி சேது
@@நன்றி ராஜகோபால்
@@நன்றிங்க அரசூரான்
@@நன்றி ஜெரி
@@நன்றி ஜோதிஜி
@@நன்றி ராமமூர்த்தி சார்
@@நன்றிங்க இராமசாமி கண்ணன்.

a said...

நட்சத்திர வாழ்த்துக்கள் சார்..........

Subankan said...

நட்சத்திர வாழ்த்துக்கள் சார் :)

vasu balaji said...

கலகலப்ரியா said...

//வானுயர வளர்ந்து (ம்க்கும்..) வான்மீனான வானம்பாடிக்கு வானளந்த வாழ்த்துகள்...//

(வாழ்த்துகள்ன்னு சொல்லிட்டுப் போகலாமின்னு பார்த்தா.. எல்லாரும் புலவர் ரேஞ்சுக்கு வாழ்த்து சொல்லி என்னோட கவுஜாஜினியை சீண்டறாங்க... )//

ஆஹா! கவுஜையில வாழ்த்தா. நன்றிம்மா கவுஜஜாயினி.

//அங்க பாருங்க.. கும்க்கி உங்களுக்கு வாழ்த்து சொல்லாம வாரத்துக்கு வாழ்த்து சொல்றாங்க...
(அப்பாடா... போட்டுக் கொடுக்கலைன்னா நாள் விடியவே மாட்டேங்குது..)//

இது கையெழுத்தா கலகலான்னு:))

நன்றிம்மா.

vasu balaji said...

@@ நன்றிங்க யோகேஷ்
@@நன்றி சுபாங்கன்

குடுகுடுப்பை said...

maanavarani thalaivarukku vaalthukal.

sorry no tamil font.

vasu balaji said...

நன்றி தலைவரே:)

அது சரி(18185106603874041862) said...

//
1.போற வழியில கோவில் தென்பட்டா, தாண்டி போக மனசில்லாம, செருப்ப அவிழ்த்துட்டு, கண்ணு மூடி வேண்ட்ற நேரத்துல ஆட்டய போட்றுவானுவன்னு சாமிய அதுக்கு கூட நம்பாம கட்டை விரல்ல செருப்பு முனைய அழுத்திக்கிட்டு, சாமி எனக்கு அதக்குடு, இதப்பண்ணு, உன்னயத்தான் நம்ம்ம்ம்ம்ம்ம்பி இருக்கேன்னு உருகி வேண்டுனா மட்டும் இவன நம்பறதுக்கு சாமி என்ன கேனையா?
//

ஆஹா..சரியான கேள்வி....நான் கேட்டு சொல்றேன். :)))

சிநேகிதன் அக்பர் said...

வாழ்த்துகள் அண்ணா

கலக்குங்க.

- யெஸ்.பாலபாரதி said...

சூப்பர். நீங்க தான் ஸ்டாரா.. நட்சத்திர வாழ்த்துகள் :))

அன்புடன் அருணா said...

பூங்கொத்துடன் நட்சத்திர வாழ்த்துக்கள்.

பவள சங்கரி said...

வாழ்த்துக்கள் சார். தகுதிவாய்ந்த நட்சத்திர அந்தஸ்து. இன்றைய இடுகைகள் சிந்திக்கத் தூண்டுபவை. நானும் யோசித்திருக்கிறேன் பல முறை.நன்றி சார்.

பவள சங்கரி said...

வாழ்த்துக்கள் சார். தகுதிவாய்ந்த நட்சத்திர அந்தஸ்து. இன்றைய இடுகைகள் சிந்திக்கத் தூண்டுபவை. நானும் யோசித்திருக்கிறேன் பல முறை.நன்றி சார்.

சீனிவாசன் said...

நட்சத்திர வாழ்த்துகள்..தொடர்ந்து கலக்குங்கள்

'பரிவை' சே.குமார் said...

நட்சத்திர வாழ்த்துக்கள் ஐயா..!

வல்லிசிம்ஹன் said...

பாலா என்று பெயர் போட்டு, பாமரன்பக்கங்கள்னு வலைப்பூ வைத்துக் கொண்டு,,வானம்பாடிகள்னு கையெழுத்துப் போடுபவருக்கு என் மனமார்ந்த நட்சத்திர வார வாழ்த்துகள். உங்கள் படம் பார்த்தபிறகே ஓ,இவரல்லவோனு மகிழ்ச்சி வந்தது.வித்தியாசமான வாரம். மீண்டும் வாழ்த்துகள் மா.

ராமலக்ஷ்மி said...

நட்சத்திர வாழ்த்துக்கள்!

vasu balaji said...

அது சரி said...


//ஆஹா..சரியான கேள்வி....நான் கேட்டு சொல்றேன். :)))//

நீரே கடவுள்னு தானே கேட்டது. நீங்க யாரைக் கேட்டு சொல்லப் போறீங்க :o))

vasu balaji said...

@@நன்றிங்க அக்பர்
@@நன்றிங்க பாலபாரதி
@@நன்றி டீச்சர்
@@நன்றிங்க நித்திலம்
@@நன்றி சீனிவாசன்
@@நன்றி குமார்.

vasu balaji said...

வல்லிசிம்ஹன் said...
பாலா என்று பெயர் போட்டு, பாமரன்பக்கங்கள்னு வலைப்பூ வைத்துக் கொண்டு,,வானம்பாடிகள்னு கையெழுத்துப் போடுபவருக்கு என் மனமார்ந்த நட்சத்திர வார வாழ்த்துகள். உங்கள் படம் பார்த்தபிறகே ஓ,இவரல்லவோனு மகிழ்ச்சி வந்தது.வித்தியாசமான வாரம். மீண்டும் வாழ்த்துகள் மா.//

:)). நன்றி சார்.

vasu balaji said...

@@நன்றிங்க ராமலக்ஷ்மி.

பெசொவி said...

கஷ்டப்பட்டு யோசிச்சு(???!!!) சூப்பர் பதிவுன்னு நாம நினைக்கிற ஒரு பதிவுக்கு வெறும் ஒரு ஸ்மைலி மட்டும் போட்டுட்டு சும்மா போற போக்கில போடற ஒரு சாதாரண பதிவுக்கு வரிஞ்சு வரிஞ்சு கமெண்ட் போடறாங்களே, அது ஏன்?
அது போலத்தான் நீங்க கேட்ட கேள்விகளுக்கும் பதில் தெரியலைங்கன்னா......!

பெசொவி said...

me 98

பெசொவி said...

me 99

பெசொவி said...

ஹை.....லேட்டா வந்ததுலயும் ஒரு நன்மை இருக்கு, நான்தான் நூறு!

vasu balaji said...

நன்றி பெ.சொ.வி. மீ த 100:)

அப்பாதுரை said...

கேக்க மட்டும் தான் தெரியுமா?

வாழ்த்துக்கள்!

vasu balaji said...

@@நன்றி அப்பாதுரை

கோவி.கண்ணன் said...

நட்சத்திர வாழ்த்துகள் ஐயா

cheena (சீனா) said...

அன்பின் பாலா

நடசத்திர நல்வாழ்த்துகள் பாலா

நல்லாக் கேட்டானுங்க - உண்மையிலேயே நகைச்சுவையின் உச்சம் - வி.வி.சி

நல்வாழ்த்துகள் பாலா
நட்புடன் சீனா

Unknown said...

நட்சத்திர வாழ்த்துகள்..

Mahi_Granny said...

ஒரு வாரமா பதிவுலகு பக்கமே வராததால் தாமதமாக வந்து வாழ்த்துகிறேன். வழக்கம் போல் கலக்குவீங்க தெரியும்

குமரன் (Kumaran) said...

உங்களை அறிமுகப்படுத்திய தமிழ்மண விண்மீன் வாரத்திற்கு நன்றி. உங்களுக்கு விண்மீன் வார வாழ்த்துகள் சொல்லலாம்ன்னு பார்த்தா அது உங்களுக்கு தேவையிருக்காது போலிருக்கே. அம்புட்டு பிரபலமா இருக்கீங்க. நான் தான் ரொம்ம்ம்ம்ம்ம்ப லேட்ட்டு. :-)

vasu balaji said...

@@நன்றிங்க கோவி:))
@@நன்றிங்க சீனா
@@நன்றிங்க மஹி கிரானி
@@நன்றிங்க குமரன்