Thursday, August 19, 2010

நறுக்னு நாலு வார்த்த V 4.9

அரசின் தகவல்களைப் பெற்றுக் கொள்ளும் உளவாளியாக கருணாவைப் பயன்படுத்த புலிகள் முயற்சித்தனர்

அடங்கப்பா! அகில மகா புளுகுடா சாமி. போயும் போயும் இவரு குடுக்குற தகவலை நம்புற அளவுக்கா இருந்தாங்க? கேக்கறவன்......போங்கடா...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
புலிகளுக்கு வாகனங்களை விற்பனை செய்த நபர்கள் கைது

ஒன்னுத்தையும் முழுசா செய்யமாட்டிங்களாடா? அப்புடியே காத்தடிச்சவன், மெக்கானிக்கு எல்லாரையும் புடிக்க வேண்டியதுதானே.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பிரபாகரன் ஆயுதம் ஏந்தக் காரணம் தெற்கின் அரசியல் பக்குவமின்மையே! மங்கள முனசிங்க சாட்சியம்

அது சரிடா சாமி!. உங்கூர்ல பக்குவம்னா போட்டு தள்றதுதானே.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சந்தேகமே போர் நிறுத்த உடன்படிக்கையின் தோல்விக்கு காரணம்: முன்னாள் பாதுகாப்பு செயலாளர்

பசிச்சவந்தான் பழங்கணக்கு பார்ப்பான்னு சொலவடை. போட்டுதள்ளிட்டு உக்காந்து பழசுக்கு காரணம் கண்டு பிடிக்கிறானுவ பரதேசிங்க.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கிளி.மாவட்ட மீளக்குடியமர்ந்த மக்களுக்கு ரூபா 5000 நிதி உதவி: சிறிதரன் பா.உ. வழங்கி வைத்தார்

இத வச்சு ரெண்டு நாளைக்கு கஞ்சி குடிக்க காணுமா? அடிச்ச கோடி அத்தனையில சிந்தின அளவு கூட இருக்காதேடா பாவிங்களே! இதனாச்சும் குடுத்தீங்களா? போட்டோ புடிச்சப்புறம் புடுங்கிட்டீங்களா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நான் குற்றம் செய்யவில்லை; எனக்கு சனி மாற்றம் ஏற்பட்டுள்ளது : மேவின் சில்வா

சனி மாற்றமா ஏமாற்றமா? ராஜபிச்சை மாதிரி ஒரு நடை திருநள்ளாறு வந்துட்டு போயிருக்கலாம்ல? ஹய்யோ ஹய்யோ.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு: முக்கிய முடிவு எடுக்கப்படும்: இலங்கை மீனவர்கள் குழு

முக்காமலே எடுத்தாலும் கெடாச போறதுக்கு எதுக்குடா சீனு? ஒரே முடிவுதான் தமிழனுக்கு.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பாக். ராணுவம் துப்பாக்கிச் சூடு: இந்தியா பதிலடி

சரியா குடுங்கப்பா. சிங்களத்தான்னு நினைச்சானுவளோ கண்டுக்காம விடுறதுக்கு.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கள்ள மார்க்கெட்டில் திருப்பதி தரிசன டிக்கெட்: நாயுடு

ங்கொய்யால டிக்கட்டே விக்காம விட்டு பாரு. அவனவன் பார்த்துட்டு போய்ட்டே இருப்பான். தடுத்து தடுத்து, மந்திரி, மசுராண்டிக்கெல்லாம் தரிசனம் காட்டுறேன்னு காக்க வச்சிட்டு பேசுறானுவ.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஈகை குணம் கொண்டவர்களை வரலாறு புகழும்: ஜெ

அப்புறம் ஏங்க கலர்டிவி, கேஸ் ஸ்டவ்வு, ஓட்டுக்கு காசெல்லாம் குடுத்தா திட்றீங்க.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
திமுக அரசை வீழ்த்துவோம்: மதிமுக தீர்மானம்

ஒரு அரச மரத்துல திமுகன்னு எழுதி கூட உங்களால வீழ்த்த முடியாது. மருத்துவர் ஐயா சண்டைக்கு வருவாரு. அது எங்க உரிமைன்னு.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மதுரையில் நவீன நிழற்குடை: மு.க.அழகிரி

கொடைக்குள்ள டிவி வச்சி டிவிடி காட்டுவீங்ளாண்ணா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மக்கள்தொகை கணக்கெடுப்பில் இல்லத்தரசிகளாக இருக்கும் பெண்கள் வேலை செய்யாதவர்கள்.

என்னேரமும் சீரியல் பாக்காதீங்கன்னா கேக்குதுங்களா? சென்ஸஸ் எடுக்க வரும்போதாவது நிறுத்தி இருக்கலாம்ல. இப்ப பாருங்க. 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

55 comments:

க.பாலாசி said...

//அரசின் தகவல்களைப் பெற்றுக் கொள்ளும் உளவாளியாக கருணாவைப் பயன்படுத்த புலிகள் முயற்சித்தனர்//

அடங்கொன்னியா... என்னமா குடுக்கிறாய்ங்கய்யா டீட்டெய்லு...

க.பாலாசி said...

//ஒன்னுத்தையும் முழுசா செய்யமாட்டிங்களாடா? அப்புடியே காத்தடிச்சவன், மெக்கானிக்கு எல்லாரையும் புடிக்க வேண்டியதுதானே.//

க்க்கும்... இன்னுமா உயிரோட விட்டுவச்சிருப்பானுங்க...

க.பாலாசி said...

//மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு: முக்கிய முடிவு எடுக்கப்படும்: இலங்கை மீனவர்கள் குழு//

டேய்..டேய்...அடங்குங்கடா...எல்லாரும் சொல்லிட்டானுங்க...இப்ப இவனுக வேற..

தமிழ் அமுதன் said...

///தடுத்து தடுத்து, மந்திரி, மசுராண்டிக்கெல்லாம் தரிசனம் காட்டுறேன்னு காக்க வச்சிட்டு பேசுறானுவ.///

;;;))))

///ஈகை குணம் கொண்டவர்களை வரலாறு புகழும்: ஜெ

அப்புறம் ஏங்க கலர்டிவி, கேஸ் ஸ்டவ்வு, ஓட்டுக்கு காசெல்லாம் குடுத்தா திட்றீங்க.///

;))

க.பாலாசி said...

//மந்திரி, மசுராண்டிக்கெல்லாம் தரிசனம் காட்டுறேன்னு காக்க வச்சிட்டு பேசுறானுவ.//

அந்தக்கொடுமய ஏன் கேக்குறீங்க...அனுபவிக்கறப்பதான் தெரியுது...

க.பாலாசி said...

//அப்புறம் ஏங்க கலர்டிவி, கேஸ் ஸ்டவ்வு, ஓட்டுக்கு காசெல்லாம் குடுத்தா திட்றீங்க. //

அட விடுங்க... எதுனாச்சும் சொல்லணும்ல...

T.V.ராதாகிருஷ்ணன் said...

கலக்கல்

ஜெயந்த் கிருஷ்ணா said...

என்னேரமும் சீரியல் பாக்காதீங்கன்னா கேக்குதுங்களா? சென்ஸஸ் எடுக்க வரும்போதாவது நிறுத்தி இருக்கலாம்ல. இப்ப பாருங்க.

//

ஒருவேளை இவர்களையும் சேர்த்தால் இந்தியா மக்கள் தொகையில் முதலிடத்தில் வரவும் வாய்ப்புண்டு...

ஜெயந்த் கிருஷ்ணா said...

கொடைக்குள்ள டிவி வச்சி டிவிடி காட்டுவீங்ளாண்ணா?

//

இல்லீங்கையா... புதுசா ப்ளூ ரே வந்திருக்காமே... அது தான் நவீனமாம்...

க.பாலாசி said...

//திமுக அரசை வீழ்த்துவோம்: மதிமுக தீர்மானம்//

அஃகா...அடடா... டி.ஆர முந்திடுவீங்க போலருக்கே...

அன்புடன் நான் said...

அரசின் தகவல்களைப் பெற்றுக் கொள்ளும் உளவாளியாக கருணாவைப் பயன்படுத்த புலிகள் முயற்சித்தனர்//

மெல்ல இந்த ஆளையும் போட்டுடுவானுங்களே!

அன்புடன் நான் said...

புலிகளுக்கு வாகனங்களை விற்பனை செய்த நபர்கள் கைது//

இராணுவமே விட்டுட்டு ஓடுன வாகனத்த எந்த கணக்குல சேப்பானுவோ?
யார கைது செய்வானுவோ?

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஒரு அரச மரத்துல திமுகன்னு எழுதி கூட உங்களால வீழ்த்த முடியாது. மருத்துவர் ஐயா சண்டைக்கு வருவாரு. அது எங்க உரிமைன்னு

//

அமா ஆமா.. இதுக்கெல்லாம் உடனே ஆஜராயிடுவாங்க... ஆனா நம்ம தேசியகொடியோட கொடி மரம் சாஞ்சா ஒரு மருத்துவரையும் காணாது... வைத்தியரையும் காணாது..

ஜெயந்த் கிருஷ்ணா said...

ராணுவம் துப்பாக்கிச் சூடு: இந்தியா பதிலடி

//

இதுக்கு பேப்பர்ல லெட்டர் எழுதி தானே பதிலடி கொடுத்திருப்பாங்க...

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஒன்னுத்தையும் முழுசா செய்யமாட்டிங்களாடா? அப்புடியே காத்தடிச்சவன், மெக்கானிக்கு எல்லாரையும் புடிக்க வேண்டியதுதானே.~

//

ஐயா வண்டி தயாரிச்ச கம்பெனிகாரன விட்டுட்டீங்களே...

ஜெயந்த் கிருஷ்ணா said...

நறுக்குன்னு நாலு வார்த்த சொன்னாலும் நாக்க புடுங்குற மாதிரி கலக்கலா இருக்கு...

அன்புடன் நான் said...

நான் குற்றம் செய்யவில்லை; எனக்கு சனி மாற்றம் ஏற்பட்டுள்ளது : மேவின் சில்வா//

உனக்கு சனி மட்டும் தான் ஏற்பட்டுள்ளது.

அன்புடன் நான் said...

திமுக அரசை வீழ்த்துவோம்: மதிமுக தீர்மானம்//

இந்த தில் தான் வைக்கோவோட கம்பீரம்

அன்புடன் நான் said...

சரி இன்னும “வெறும்பய” எழுதட்டும்.... எனக்கு வேலையிருக்கு!

அன்புடன் நான் said...

வணக்கமைய்யா...... (சொல்ல மறந்துட்டேன்)

சௌந்தர் said...

கொடைக்குள்ள டிவி வச்சி டிவிடி காட்டுவீங்ளாண்ணா///

++++ AC போட்டு தருவோம்

சௌந்தர் said...

திமுக அரசை வீழ்த்துவோம்: மதிமுக தீர்மானம்////

வைகோ சார் காமெடி பண்ணாதிங்க

க ரா said...

சூப்பர் சாரே :)

பிரபாகர் said...

//புலிகளுக்கு வாகனங்களை விற்பனை செய்த நபர்கள் கைது
//
புளி விற்பனை செய்றவனைக்கூட புடிப்பானுவ பரதேசிப்பயலுவ!

//
பாக். ராணுவம் துப்பாக்கிச் சூடு: இந்தியா பதிலடி

சரியா குடுங்கப்பா. சிங்களத்தான்னு நினைச்சானுவளோ கண்டுக்காம விடுறதுக்கு.
//

அதானே!

//ஈகை குணம் கொண்டவர்களை வரலாறு புகழும்: ஜெ

அப்புறம் ஏங்க கலர்டிவி, கேஸ் ஸ்டவ்வு, ஓட்டுக்கு காசெல்லாம் குடுத்தா திட்றீங்க.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~//
ஊராமூட்டு நெய்யே, என் பொண்டாட்டி கையே...

//மதுரையில் நவீன நிழற்குடை: மு.க.அழகிரி

கொடைக்குள்ள டிவி வச்சி டிவிடி காட்டுவீங்ளாண்ணா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
//
அதுல பார்லிமெண்ட்ல பேசினத காட்டுவாங்களா?

பிரபாகர்...

செ.சரவணக்குமார் said...

//பாக். ராணுவம் துப்பாக்கிச் சூடு: இந்தியா பதிலடி

சரியா குடுங்கப்பா. சிங்களத்தான்னு நினைச்சானுவளோ கண்டுக்காம விடுறதுக்கு.//

இதான் தலைவரே டாப்பு.

நசரேயன் said...

//சென்ஸஸ் எடுக்க வரும்போதாவது
நிறுத்தி இருக்கலாம்ல//

சரிதான்

Jey said...

காலையில வந்து ஓட்டு மட்டும் போட்டு ப்யிட்டேன். ஆனி..., இஅப்ப வந்து படிச்சேன்.... எதை இங்க காபி பெஸ்ட் பன்னி கமெண்ட் போடுரதுன்னு தெரியல..அத்தனையும் ஜோர்.... அதனால, வாரம் ரெண்டு தடவையாவது இந்த நறுக்’ச நொறுக்’சா குடுத்துருங்க..., இல்லைனா உங்களுக்கு கண்டன் தெரிசிச்சி ஒரு பதிவு போட்டு தேத்திருவேன்...சொல்லிப்புட்டேன் ஆமா..

dheva said...

//மக்கள்தொகை கணக்கெடுப்பில் இல்லத்தரசிகளாக இருக்கும் பெண்கள் வேலை செய்யாதவர்கள்.


என்னேரமும் சீரியல் பாக்காதீங்கன்னா கேக்குதுங்களா? சென்ஸஸ் எடுக்க வரும்போதாவது நிறுத்தி இருக்கலாம்ல. இப்ப பாருங்க. //


ஹா...ஹா..ஹா...எங்க வீட்டுத் தங்கமணி பாத்துட்டு ஷாக் ஆகிட்டாப்புல.. இத படிச்சு முடிச்சுட்டு டக்குன்னு மறுபடியும் டக்குனு சீரியல்ல மூழ்கிட்டாப்புல....அவ்வ்வ்வ்வ் !

Unknown said...

எல்லோரும் விதவிதமா கமெண்டு போட்டதால்...

சும்மா வந்திட்டு....போறேன்...

ஜில்தண்ணி said...

/// சனி மாற்றமா ஏமாற்றமா? ராஜபிச்சை மாதிரி ஒரு நடை திருநள்ளாறு வந்துட்டு போயிருக்கலாம்ல? ஹய்யோ ஹய்யோ. ///

ராஜபிச்சைன்னு ரொம்ப சரியா சொன்னீங்க தல :)

/// திமுக அரசை வீழ்த்துவோம்: மதிமுக தீர்மானம் ///

உசுரோட ஊர்ல இருக்கோம்னு காட்டுறதுக்கு என்ன காமெடி பன்னுது பாரு :)

ஜில்தண்ணி said...

// கொடைக்குள்ள டிவி வச்சி டிவிடி காட்டுவீங்ளாண்ணா? ///

டிவிடில ஓட்டுரத்துக்குத்தான் இவரு மவன் தயாரிக்கிற படம் இருக்குள்ள :) இங்கையாவது ஓட்டுவோம்ல

rajasundararajan said...

இப்பொ தெரியுதுங்க, நன்றி.

"நறுக்னு..." தொடர்ந்து வரட்டும். நடப்பு அரசியல் செய்திகளுக்கு உப்பிட்டுத் தருவதாக உள்ளது.

கலகலப்ரியா said...

||ஈகை குணம் கொண்டவர்களை வரலாறு புகழும்: ஜெ

அப்புறம் ஏங்க கலர்டிவி, கேஸ் ஸ்டவ்வு, ஓட்டுக்கு காசெல்லாம் குடுத்தா திட்றீங்க.||

சார்...அதும் புகழ்ச்சிதான் சார்... நேரடி வஞ்சப் புகழ்ச்சி...

கலகலப்ரியா said...

||அரசின் தகவல்களைப் பெற்றுக் கொள்ளும் உளவாளியாக கருணாவைப் பயன்படுத்த புலிகள் முயற்சித்தனர்||

புலியில் எலியாக இருந்த கருணாவை அரசு தகவல் பெற்றுக் கொள்ளும் சுண்டெலியாகப் பயன்படுத்தினர்..!

புலிகள் பயன்படுத்திய சுண்டெலியைச் சுட்டுச் சாப்பிடுவதுதான் வழக்கம்..!

கலகலப்ரியா said...

||புலிகளுக்கு வாகனங்களை விற்பனை செய்த நபர்கள் கைது||

இண்டஸ்ட்ரியாலிஸ்ட்ஸ்?

கலகலப்ரியா said...

||நான் குற்றம் செய்யவில்லை; எனக்கு சனி மாற்றம் ஏற்பட்டுள்ளது : மேவின் சில்வா||

அவர்ல மாற்றம் ஏற்பட்டிருக்குன்னு சொல்றார் சார்...

கலகலப்ரியா said...

||திமுக அரசை வீழ்த்துவோம்: மதிமுக தீர்மானம்||

மதிமுக-வில திமுக-வ வீழ்த்தினா... ம.... தானே மிஞ்சும்... :o)

சிநேகிதன் அக்பர் said...

அப்படி போட்டு தாக்குங்க. நறுக்குன்னுதான் இருக்கு.

Unknown said...

//மக்கள்தொகை கணக்கெடுப்பில் இல்லத்தரசிகளாக இருக்கும் பெண்கள் வேலை செய்யாதவர்கள்.

என்னேரமும் சீரியல் பாக்காதீங்கன்னா கேக்குதுங்களா? சென்ஸஸ் எடுக்க வரும்போதாவது நிறுத்தி இருக்கலாம்ல. இப்ப பாருங்க.//

இதைப் படிச்சிட்டு சத்தமா சிரிச்சிட்டேன். வெள்ளக்காரன் வெறிச்சிட்டான்.

Anonymous said...

உள்ளேன் ஐயா!

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

/அரசின் தகவல்களைப் பெற்றுக் கொள்ளும் உளவாளியாக கருணாவைப் பயன்படுத்த புலிகள் முயற்சித்தனர்//

பொன் சேகாவிற்கு அடுத்து
கருணா பலிகடா வா ...

சபாஷ் ...
ராஜா ...
நல்லாயிருக்கு உங்க தந்திரம் .

இந்த விசயத்தில் உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் .

துரோகிக்கு துரோகிக்கு
துரோகிக்கு துரோகிக்கு
துரோகி .

தொடருங்கள் ...
வாழ்த்துக்கள் .





தொடருங்கள் ...
வாழ்த்துக்கள் .
(இது வானம்பாடி ஐயாவிற்கு ).

ஈரோடு கதிர் said...

இன்னிக்கு V 4.10 போட்டு ஹாட் ட்ரிக் அடிச்சுடலாம்

ஈரோடு கதிர் said...

||மருத்துவர் ஐயா சண்டைக்கு வருவாரு. அது எங்க உரிமைன்னு.||

இஃகிஃகி..

செம லொல்லு

Jerry Eshananda said...

நறுக்கு தெறிக்குது..

Anonymous said...

காற்ற்ஹடிச்சவனும் இங்க புடிச்சங்க பாஸ்

அது செய்தியா வரல்ல்

நாடோடி said...

ம‌ருத்துவ‌ர் அய்யா க‌மெண்ட் தான் டாப்பு. :)

யூர்கன் க்ருகியர் said...

comments super sir

Dr. Srjith. said...

அருமை நண்பரே

'பரிவை' சே.குமார் said...

பாக். ராணுவம் துப்பாக்கிச் சூடு: இந்தியா பதிலடி
சரியா குடுங்கப்பா. சிங்களத்தான்னு நினைச்சானுவளோ கண்டுக்காம விடுறதுக்கு.
வானம்பாடிகள் சார் வசவுகள் அனைத்தும் அருமை.

ஜோதிஜி said...

ராஜபிச்சை

எதார்த்தமாக எழுதி உள்ளீர்கள்.

ஆனால் உண்மையிலேயே இந்த பெயர் காரணம் என்று எனக்கு பலவற்றையும் ஞாபகப்படுத்துகிறது.

vasu balaji said...

@@நன்றி பாலாசி
@@நன்றிங்க தமிழமுதன்
@@நன்றி டி.வி.ஆர்.சார்
@@நன்றிங்க வெறும்பய
@@வணக்கம் நன்றிங்க கருணாகரசு
@@நன்றிங்க சௌந்தர்
@@நன்றிங்க இராமசாமி கண்ணன்
@@நன்றி பிரபா
@@நன்றி சரவணா
@@நன்றி நசரேயன்
@@நன்றி Jey
@@நன்றி தேவா
@@நன்றி செந்தில்
@@நன்றி யோகேஷ்

vasu balaji said...

கலகலப்ரியா said...
||புலியில் எலியாக இருந்த கருணாவை அரசு தகவல் பெற்றுக் கொள்ளும் சுண்டெலியாகப் பயன்படுத்தினர்..!

புலிகள் பயன்படுத்திய சுண்டெலியைச் சுட்டுச் சாப்பிடுவதுதான் வழக்கம்..!//

//மதிமுக-வில திமுக-வ வீழ்த்தினா... ம.... தானே மிஞ்சும்... :o)
//

சிரிச்சி முடியல:))). நன்றிம்மா

vasu balaji said...

@@நன்றி அக்பர்
@@நன்றி முகிலன்
@@நன்றிங்க ஜோதிஜி
@@நன்றிங்க பாலாஜி சரவணன்
@@நன்றிங்க நண்டு
@@நன்றி கதிர்
@@நன்றி நாடோடி
@@நன்றி ஜெரி
@@நன்றி சிவசங்கர்
@@நன்றி யூர்கன்
@@நன்றிங்க டாக்டர்
@@நன்றிங்க குமார்

பவள சங்கரி said...

இல்லத்தரசிங்கதான் சம்பளமில்லாத முழு நேர வேலைக்காரங்கன்னு குட்டு வச்சு சொன்னாலும் புரியாதாட்டிருக்கு.......

பா.ராஜாராம் said...

வணக்கம் பாலாண்ணா.