பாகம் : 5
கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக் கொண்டு கதவு நிலையில் சாய்ந்து நின்று கொண்டிருந்த ஐ.ஜி சங்கரப் பெருமாள் பிரஸன்னா பார்த்ததும் சிரிக்க முயற்சித்தார். நீண்ட நாளான சிகரெட்டால் கறுப்பான பற்கள் லேசாக தெரிந்து இன்னமும் விடியாத அறையின் மெல்லிய இருட்டில் அவரை மேலும் கறுப்பாக காண்பித்தது. இவர் எப்பொழுது வந்தார்? பிரஸன்னா நினைக்கும் போதே ஊருக்கு போனா அங்குலாஸ் பொகையில போடுவார் அவரு பேரே அங்குலாஸ் ஐ.ஜி..வழுவழுப்பான ப்ளாஸ்டிக் பாக்கெட்டில் மஞ்சள் பச்சை நிற லோகோ ஒட்டி உள்ளே அழுக்கான கரும் பழுப்பு நிறத்தில் கசங்கும் புகையிலை. தேவையில்லாமல் அங்குவிலாஸ் புகையிலை பொட்டலம் நினைவுக்கு வந்து போனது. மேலுக்கு ஒரு கசங்கிய சட்டையை போட்டு அழுக்கான லுங்கியை முழங்காலுக்கு மேலே மடித்துக் கட்டியிருக்க அவரது செருப்பில்லாத கால்கள் நடுவில் வளைந்த உலக்கை போல தரையில் வலுவாக ஊன்றியிருந்தன.
"என்னடே பிரசன்னா...ஒனக்க ஃப்யான்ஸி என்ன சொல்லுதா கேட்டுக் கொண்டே உள்ளே வந்தவர் பிரசன்னாவின் தோளில் கைவைத்து மெலிதாய் விலக்கி விட்டு ஸ்ருஷ்டியிடம் கை நீட்டி உக்காரும்மா" என்றார். விலக்கி நகர்ந்தவரின் வலது பின்னிடுப்பில் துப்பாக்கி துருத்திக் கொண்டிருந்தது.
ஸ்ருஷ்டி அவரை வெறித்துப் பார்த்து விட்டு பிரசன்னாவை பார்த்தாள். பிரசன்னாவின் கண்கள் மன்னிப்பு கேட்பது போல கீழே குனிந்து கொண்டான். ஸ்ருஷ்டி அவனையும் சங்கரப் பெருமாளையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டே கட்டிலில் உட்கார்ந்து கொண்டாள்.
இவளுக்க நடவடிக்க பத்தி இவனுக்கு தெரியும்னு பேச விட்டா இவனுக்கு எதுவும் தெரியாது போலருக்கு...செக்குன்னு நினைச்சா பய சிவலிங்கமா இருக்கானே...சங்கரப் பெருமாள் கட்டிலில் உட்கார்ந்திருந்த ஸ்ருஷ்டியை பார்த்துக் கொண்டே பேசினார்.
“என்னம்மா அப்படி பாக்க? இவன் யாரு, இப்படி பேசுதான்னு பாக்கியா? நம்ம மக்க மனுசங்க கிட்ட நம்ம வழக்குல பேசாட்டி என்ன எளவுக்கு நாம பேசுதோம்? வாயில கொஞ்சம் மண்ணள்ளி வச்சிக்கிட்டு பேயாது இருக்கலாமில்லா? நான் பிரசன்னாவுக்கு மேல் ஆபிஸரு, ஐ.ஜி. சங்கரப் பெருமாள்னு சொல்வானுவ. பேப்பர்ல கூட ஃபோட்டாவோட நியூஸ் பாத்திருப்பியே. வேலைக்கு சேர்ந்தன்னிக்கு எடுத்த ஃபோட்டோ. நீ எங்க படிச்சிருப்ப. ஒன்ன பாத்தா இங்கிலீசு பேப்பர் படிக்கிறவா மாதிரில்லா இருக்கு. எந்திரிக்காண்டாம், ஒக்காரு ஒக்காரு.”
எழ ஆரம்பித்த ஸ்ருஷ்டியை ஒற்றை விரலால் உட்கார சைகை காட்டி விட்டு சங்கரப் பெருமாள் வலது காலை மடித்து சுவரில் நன்றாக சாய்ந்து கொண்டு தொடர்ந்தார்...
“ஒன்ன பாத்தா எம்மவ மாதிரி இருக்கு. ஆனா, டூட்டின்னு ஒண்ணு இருக்கில்லா? இப்ப சொல்லுதேன். ஒனக்க மேல எந்த டவுட்டும் இல்ல. ஒண்ணு ஒன்ன மாட்ட வச்சிருக்கானுவ. இல்ல அவனுவ யாருன்னு தெரியாம நீ மாட்டிக்கிட்ட.”
பேசிக் கொண்டே சங்கரப் பெருமாள் கையிலிருந்த கவரை பிரித்தார்.
“இன்னா இந்த போட்டா. இதுல டின்னர் டேபிள்ல ஒக்காந்து இருக்கவ நீ தான நீ? பெரிய எடத்து புள்ளைல்லா? ரொம்ப ஹோட்டல்ல சாப்ட்ருப்ப. மறந்து போயிருக்கும். நல்லா பாத்துச் சொல்லு. இது ஸஃபாரு ரெஸ்டாரண்ட். துபாய் ஏர்போர்ட் உள்ள இருக்கது. நீ போன மாசம் லண்டன் போற வழியில துபாய்ல மூணு மணி நேரம் ஸ்டே பண்ணினல்லா? அங்க எடுத்தது. நான் எங்க துபாய் வந்தேன்னு பாக்குதியா? நான் எங்க அங்கன வந்தேன். தின்னவேலிக்காரகாரனு
ஸ்ருஷ்டி பதில் சொல்லாமல் உட்கார்ந்திருக்க சங்கரப் பெருமாள் அவள் கையில் சில ஃபோட்டோக்களை திணித்தார். பிரசன்னா எதுவுமே சொல்லத் தோன்றாமல் பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கு தெரிந்த வரை துபாயில் போலீஸ் ஏஜென்ட் யாரும் இல்லை. சங்கரப் பெருமாளின் இந்த முகம் அவனுக்கு புதிது. புகையிலை கறை படிந்த பற்கள், கொச்சையான பேச்சு, கசங்கிய உடை, அங்குலாஸ் ஐஜியை அவன் குறைவாக எடை போட்டு விட்டான். இந்த மனிதனின் கரங்கள் எவ்வளவு நீளம்?
சங்கரப் பெருமாள் அவனை கவனிக்காது அடுத்து ஒரு பேப்பரை எடுத்து நீட்டினார். “இந்தா இது ஒனக்க பேங்க் அக்கவுண்ட் ஸ்டெட்மென்ட்.அக்கவுண்ட் பேரு தான் வேற பேரு. லட்சுமி செல்வநாயகம். ஸ்ரீதரன்னு சமஸ்கிருதத்தை செல்வநாயகம்னு மாத்திட்டா தெரியாதா?
போன மாசம் மூணாம் தேதி முப்பத்தேழு லட்சத்து பண்ணெண்டாயிரது ஐநூத்தி பத்து எங்கருந்து வந்திருக்கு தெரியும்லா? சேஸ் மன்ஹாட்டன், நியூயார்க். அப்புறம் ஏழாம் தேதி அறுவத்தேழு லட்சத்து இருவத்திரண்டாயிரம் சொச்சம். அது ஹபீப் பேங்க் செஷல்ஸ். இன்னும் படிக்கவா? பெரிய லிஸ்டே இருக்கு குட்டி. மொத்தமா போன வாரம் வரைக்கும் ஒனக்கு வந்த பணம் ஏழு கோடி சொச்சம்.”
சங்கரப் பெருமாள் பேப்பரை ஸ்ருஷ்டி உட்கார்ந்திருந்த கட்டிலில் எறிந்தார்.அது ஸ்ருஷ்டியின் அருகில் மெல்லிய த்த்த்தட்டென்ற ஒலியுடன் விழுந்தது.
ஸ்ருஷ்டி வியர்க்கும் கரங்களால் கட்டிலின் நுனியை பிடித்துக் கொண்டு அவரையே பார்த்தாள். கட்டிலில் கசங்கியிருந்த போர்வை விலகி குளிர்ந்த இரும்பு அவள் கையில் சில்லென்றது.
சங்கரப் பெருமாள் மேல் சட்டையில் தேடி எடுத்து சிகரெட்டை பற்ற வைத்துக் கொண்டார்.
“இப்பச் சொல்லு, போலீஸ்காரனா நினைக்காண்டாம். ஒனக்க அப்பனா நெனச்சிக்க. இவனுவ கூட நீ பேசினதெல்லாம் என்கிட்ட இருக்கு. ஆனா கூட்டத்துல நீ இருப்பன்னு நான் நம்பலை. ஒன்ன ஏதோ ஒரு வெசயத்துல மெரட்டி வச்சிருக்கானுவ. அது கூட எனக்கு வேணாம். இவனுவளுக்கு இங்க லோக்கல் கமாண்டர் ஒருத்தர் இருக்கணும். அவன் யாரு? இந்த கும்பல்ல இங்கத்தியனுவ யாரெல்லாம் இருக்கா? ஒங்க அப்பனுக்கு இதுல என்ன கனெக்சனு? இத மட்டும் சொல்லு. ஒனக்க பேரும் ஒனக்க அப்பன் பேரும் வெளிய வராம நான் பாத்துக்கிடுதேன்.”
சொல்லிவிட்டு சங்கரப் பெருமாள் சிகரெட்டை ஆழமாக இழுத்து அழுக்கு நீலத்தில் புகைவிட்டு அவளையே பார்த்தார்.
“ஸ்ருஷ்டி கீழே குனிந்து முகத்தை பொத்திக் கொண்டாள். ஸாரி! ஸாரி ஸார்! நான்..நான்...எங்க அப்பாவுக்கு இதுல எந்த லின்க்கும் இல்லை. என்னால மாட்டிக்கிட்டார். ப்ளீஸ்! அவரை விட்டுடுங்க.” ஸ்ருஷ்டியின் குரல் முகம் மறைத்த விரல்களினிடையே திணறி கசிந்தது.
நுனியில் உட்கார்ந்திருந்தவள் தலை நிமிர்த்தாது பின்னோக்கி நகர்ந்து ஓரமாய் இருந்த சுவரில் சாய்ந்து கொள்ள யாரும் எதுவும் பேசாது இருளில் முகம் மூடும் கறுப்பு போர்வை போல நிசப்தம் சூழ்ந்தது.
=======================
நின்று கொண்டிருந்த பிரஸன்னாவுக்கு கால் வலித்தது. சில நேரங்களில் நிழலும் விலக வேண்டியதுதான். மெளனத்தை கலைத்து “ஸார்! நான் இருக்கேன்னு சொல்ல கஷ்டப்படறா போலிருக்கு. நீங்க விசாரணை பண்ணுங்க. நான் இவ அப்பா என்ன பண்றாருன்னு பார்த்துட்டு வர்றேன். எஸ்.ஐ. ஜெயராமனை எழுப்பி எதாவது வாங்கிட்டு வரச் சொல்லவா சார் என்றான்.“சங்கரப் பெருமாள் அவனை பக்கம் திரும்பாது தலை குனிந்திருந்த ஸ்ருஷ்டியை பார்த்துக் கொண்டே ம்ம். சரிடே” என்றார்
=========================
பிரஸன்னா திரும்பி வந்த போது பாண்டிச்சேரியின் கடற்காற்று அறையின் ஜன்னல்களை தட்டிக் கொண்டிருக்க கவர்ச்சி நடிகையின் சேலை போல மெலிதாய் விடிய ஆரம்பித்திருந்தது. ஸ்ருஷ்டி அதே நிலையில் தலை குனிந்து உட்கார்ந்திருக்க சங்கரப் பெருமாள் தரையில் உட்கார்ந்து கையிலிருந்த பேப்பர்களை சரி பார்த்துக் கொண்டிருந்தார்.பிரசன்னா கையில் இருந்த ஃப்ளாஸ்க்கில் இருந்து காஃபியை ப்ளாஸ்டிக் கப்பில் ஊற்றி சங்கரப் பெருமாளிடம் நீட்டிக் கொண்டே கேட்டான். “என்ன சார் சொல்றா? இவளுக்கு சம்மந்தம் இருக்குன்னு ஒத்துக்கிட்டாளா? இன்னும் யாரெல்லாம் இருக்காங்க? ”
சங்கரப் பெருமாள் தரையில் உட்கார்ந்தவாறே கையை உயர்த்தி கழுத்தை நொடித்து ரிலாக்ஸ் செய்துவிட்டு அவன் நீட்டிய காஃபியை வாங்கிக் கொண்டார். “அவளுக்கும் கொடு பிரசன்னா. ஆமா.! அவளுக்கு தெரிஞ்ச வரையிலும் சொல்லிருக்கா. இவ தான் அவங்க தலைவனோட நிழல். அல் கயால்! ஆனா இவளுக்கு எதுவும் தெரியலை. அங்க இருந்து வர்ற கமாண்டை ரிசீவ் பண்ணி அடுத்து ரிலே பண்றது. நிழல் மாதிரி அங்க என்ன சொல்றாங்களோ அதை அப்படியே இங்க ரிலே பண்றது தான் இவ பொறுப்பு. இவளை யூஸ் பண்ணிருக்காங்க. இவ அப்பனுக்கு இதுல தொடர்பு எதுவும் இருக்கா மாதிரி தெரியலை. ஆனா இவ மேல அவருக்கும் என்னவோ சந்தேகம் போலருக்கு. அதான் நான் நிழல்னு சொன்னதும் அப்படி வேர்த்து போயிருக்காரு.”
பிரசன்னா ஃப்ளாஸ்க்கை கீழே வைத்து விட்டு “இப்போ என்ன சார் செய்யலாம்? ” என்றான்.
கீழே உட்கார்ந்திருந்த சங்கரப் பெருமாள் அவனை நிமிர்ந்து பார்த்தார். யோசிக்கணும் “பிரசன்னா! இது வரைக்கும் இந்தக் கேசை நானும் ஜெயராமனும் மட்டும் தான் டீல் பண்ணிக்கிட்டு இருக்கோம். அந்த திண்டுக்கல் இன்ஸ்பெக்டருக்கு கூட முழுசா எதுவும் தெரியாது. இவளோ நீயோ இதில சம்மந்தப்பட்டது டிஜிபிக்குக் கூட இன்னும் சொல்லலை. நேத்து அவனுகளை அள்ளிப்போட்டது வரைக்கும் தான் டிஜிபிக்குத் தெரியும். ஃபுல்லா தெரிஞ்சிக்கிட்டு ரிப்போர்ட் பண்ணலாம்னு இருந்தேன். இப்போ அவனுவளை அரெஸ்ட் பண்ணியாச்சி. கோர்ட்ல ப்ரட்யூஸ் பண்ணனும். இவளை அப்ரூவர் ஆக்கிடலமான்னு யோசிக்கிறேன். ஜட்ஜுக்கிட்ட பேசி தண்டனை கம்மியா வாங்கிடலாம். நீ என்ன சொல்ற? ”
அவனுக்கு இது போன்ற பயங்கரவாதிகள் விஷயத்தில் சங்கரப் பெருமாளைப் பற்றி நன்றாகவே தெரியும். என்கவுண்டர் செய்யவும் தயங்காத ஆள். ஆனாலும் கடைசியாக ஒரு முறை பிரசன்னா தலை குனிந்திருந்த ஸ்ருஷ்டியை பார்த்துக் கொண்டே சொன்னான். அவனது குரல் கெஞ்சியது. “ஸார்! ஸ்ருஷ்டி அந்த மாதிரி பொண்ணு இல்லன்னு இப்ப உங்களுக்கும் தெரிஞ்சிருக்கும். தெரியாம மாட்டிக்கிட்டா போல. வேணாம் ஸார்! ப்ளீஸ்! எனக்காக விட்ருங்க.”
கீழே உட்கார்ந்திருந்த சங்கரப் பெருமாள் நிமிர்ந்து பார்த்து சிரித்தார்.உதடுகள் விரிந்து கறுப்பான பற்கள் மீண்டும் தெரிந்து மறைந்தது. “அதாக்கும்டே ! அதாக்கும் புருசன்காரன் பேச வேண்டிய பேச்சு. அப்படிச் செய்யலாந்தான் ஆனா கேசு நிக்காதுடே. மீன்பிடிக்க வந்தோம் கடல்ல வழி மாறிட்டு. போட்டுல இருந்த குண்டு, துப்பாக்கில்லாம் போலீசு வச்சதுன்னு அவனுவ வக்கீல் சொல்லுவான். பெனிஃபிட் ஆஃப் டவுட்டுன்னு ரெண்டு மாசம் தண்டனை கொடுத்து வெளிய அனுப்பிருவானுவ. அந்த தாயளி திருப்பி வந்து குண்டு வைப்பான். வேற வழியில்லடே! ஒனக்க ஃப்யான்சிய கோர்ட்ல நிறுத்தத்தான் வேணும். வெளிய நியூஸ் வராதமாதிரி பாத்துப்போம்”
“அப்போ எனக்கும் வேற வழியில்ல சார்.” சொன்ன பிரசன்னாவின் கைகளில் துப்பாக்கி நீண்டிருந்தது.
தொடரும்
==================
இன்றைய பகுதியை எழுதியவர்?:1. அது சரி 2. முகிலன் 3. கதிர் 4. வானம்பாடிகள் 5.கலகலப்ரியா 6.பிரபாகர் 7. நசரேயன். 8.பலா பட்டரை ஷங்கர்
30 comments:
இதாச்சும் நான் எழுதுனேன்னு சொல்லுங்கப்பு:(
வடை எனக்குத்தான்னு ஆசையா வந்தா... ஆசானே...
இருங்க, படிச்சிட்டு வர்றேன்...
பிரபாகர்...
yaru eluthina enna sir, nalla crime story
தலைவா! அருமையா போய்ட்டிருக்கு..
இத நான் தான் எழுதினேன்னு சொல்லிக்கலாமான்னு இருக்கு... அவ்வளவு அழகா இருக்கு!
ஆசான், திருப்பம், திருப்பம்....மேலும் திருப்பம்... அசத்தல்....
பிரபாகர்...
//
“அப்போ எனக்கும் வேற வழியில்ல சார்.” சொன்ன பிரசன்னாவின் கைகளில் துப்பாக்கி நீண்டிருந்தது.
//
எப்படிய்யா, இப்படியெல்லாம் அசத்துறீரு?
பிரபாகர்...
super suspense story...
எழுதின கைக்கு ஒரு வாட்ச் வாங்கிபோடனும்...
பிரபாகர்...
அண்ணே, நான் ஈரோடில்....
பழமைபேசி said...
//அண்ணே, நான் ஈரோடில்....//
ஆஹா! நிகழ்ச்சி அருமையாப் போச்சுன்னு மாப்பு சொன்னாரு.
கதை ரெம்ப சுவரஸ்யமா போகுது ....
//வானம்பாடிகள் said...
இதாச்சும் நான் எழுதுனேன்னு சொல்லுங்கப்பு:( //
நான் முன்னாடியே சொல்லிட்டேன்...
சூர்யா கண்ணன் சொன்னதையே நானும் சொல்லிக்கிறேன் சார்...
Sir,
I don't know many of you in this group.
My guess is (really vague)
Part 4 is from a Vaishnavite Brahmin in your cirle.
Part 5 is from the person with red cap who conducted the Blog course for the studens of Erode (not Kathir).
Really sorry for not knowing their name or mentioning it as brahmin. Not intended to.
Any guessing game for 'Who gave his Thupariyum Saambu idea?'
//
வானம்பாடிகள் said...
இதாச்சும் நான் எழுதுனேன்னு சொல்லுங்கப்பு:(
//
ஆரம்பத்திலருந்தே நான் அதை தான சொல்லிட்டுருக்கேன்?
|| பிரபாகர் said...
எழுதின கைக்கு ஒரு வாட்ச் வாங்கிபோடனும்...
பிரபாகர்...||
ஆகா... அந்தக் கை வாட்ச் கட்டறதில்லைன்னு கேள்வி...
||அது சரி said...
சூர்யா கண்ணன் சொன்னதையே நானும் சொல்லிக்கிறேன் சார்...||
இன்னொருக்கா ரிப்பீட்டு...
//கலகலப்ரியா said...
|| பிரபாகர் said...
எழுதின கைக்கு ஒரு வாட்ச் வாங்கிபோடனும்...
பிரபாகர்...||
ஆகா... அந்தக் கை வாட்ச் கட்டறதில்லைன்னு கேள்வி...
//
சகோ, கண்டுக்காதீங்க! இதெல்லாம் புல் மீல்ஸ் சாப்பிட்டவங்கள சாப்பிட்டுட்டு போக சொல்றமாதிரி...
//கலகலப்ரியா said...
|| பிரபாகர் said...
எழுதின கைக்கு ஒரு வாட்ச் வாங்கிபோடனும்...
பிரபாகர்...||
ஆகா... அந்தக் கை வாட்ச் கட்டறதில்லைன்னு கேள்வி...
//
இந்த உண்மை தெளிவா தெரிஞ்சிருந்தா, தங்கத்துலயே வாட்ச்சுன்னு கூட சொல்லியிருக்கலாம் போலிருக்கே...
ஆனாலும், இன்றைய இடுகை ரொம்ப சுவராஸ்யம், ஏகத் திருப்பங்கள்...
பிரபாகர்...
சுவாரஸ்யம் சார்
Kadaisiyaa naan eluthina partai publish pannathukku nandri
பிரபா, கலகலப்ரியா சொல்றதை நம்பாதீங்க. யாராவது வாங்கிக்குடுத்துக் கட்டணும்னுதான் இந்தக் கை காத்துக்கிட்டு இருக்கு.
மிகவும் விறு விருப்பாக நகர்கிறது நிழல் நல்ல இருக்கு அய்யா . ஒரு சில இடங்களில் தவறான வார்த்தைகளைக்கூட இப்படியும் ரசிக்கும் வகையில் எழுதலாம் என்று அறிந்துகொண்டேன் இன்று . பகிர்வுக்கு நன்றி . இந்த நிழலுடன் இனி தொடர்ந்து வருவேன் .
அசத்தல்....
அங்கு விலாஸ் பொகயிலை அளவுக்கு விவரமா எழுதிருக்கீங்க...
கதையின் வேகத்தில் மயங்கி இப்போது யாரென சொல்ல முடியல...
இது நசரேயன்.. கறுப்பு கறுப்புன்னு ஒரு ஏழெட்டு வார்த்தையாவது இருக்கு :))
@@நன்றி LK
@@நன்றி சூர்யா
@@நன்றி பிரபா
@@நன்றிங்க மேகனாசத்யா
@@நன்றிங்க நாடோடி
@@நன்றி பாலாசி
@@நன்றி அது சரி:p
@@thanks sethu. its athu sari:))
கலகலப்ரியா said...
//ஆகா... அந்தக் கை வாட்ச் கட்டறதில்லைன்னு கேள்வி...//
யோவ். போட்டு கொடுக்காத:))
//இன்னொருக்கா ரிப்பீட்டு...//
உன் அழிச்சாட்டியம் தாங்கல:))
@@நன்றிங்க நேசமித்திரன்
@@நன்றி முகிலன்
@@நன்றி பனித்துளி சங்கர்
@@நன்றிங்க டி.வி.ஆர் சார்
@@நன்றிங்க செந்தில்
@@ஹெ ஹெ. கோட்டை விட்டீங்க எல்போர்ட்:))
Post a Comment