சுப்பு: என்ன செஞ்சான்?
குப்பு: நேத்து ஒரு கலியாணத்துல அவன் ஃபேமலியோட வந்து, இவதான் என் ப்ளாக், இதுங்க ரெண்டும் என் பின்னூட்டங்கள்னு அறிமுகம் பண்றான்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சுப்பு: ஏன்யா குப்பு, சாதாரண மனுசனுக்கும் ப்ளாக்கருக்கும் என்ன வித்தியாசம்?
குப்பு: மத்தவனுக்கு வாழ்க்கைல நடக்கறதெல்லாம் அனுபவம். ப்ளாக்கருக்கு அது எல்லாம் ஒரு இடுகைக்கு மேட்டரு.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சுப்பு: என்னடா குப்பு தலைல கை வச்சிட்டு உக்காந்திருக்க?
குப்பு: சென்னை மாநகர் நடுவில், இயற்கைச் சூழலில், புகழ் பெற்ற கல்லூரி அருகாமையில் மனை ஒரு கிரவுண்டு 25லட்சம்னு ராமசாமி சொன்னானேன்னு அட்வான்ஸ் பணத்தைக் கட்டிட்டேன். இடத்தைக் கூட பார்க்கலை. அது எங்கயோ திண்டிவனம் கிட்ட இருக்கு. ராமசாமியை ஏண்டா புளுகினன்னு கேட்டா, அத புளுகுன்னு சொல்லாத, அது சொற்சித்திரம்னு சொல்றான்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சுப்பு: ஏண்டா ராமசாமி பத்திரிகைல வேலை கிடைச்சதுன்னு போனானே. இப்போ வேலைய விட்டு தூக்கிடாங்கன்னு கேள்விப்பட்டேன் என்னாச்சு?
குப்பு: பின்ன? முதலமைச்சர பேட்டி எடுத்து பத்திரிகைல போட்டு புனைவுன்னு போட்டுட்டான் பழக்க தோஷத்துல. தூக்கிட்டாங்க.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
குப்பு: இந்த ராமசாமி தொல்லை தாங்கலைடா சுப்பு.
சுப்பு: என்னாச்சு?
குப்பு: எலக்ஷன் கமிஷனருக்கு லெட்டர் போட்டு, நீங்க நிறுத்தற வேட்பாளர் யாரும் எனக்கு ஓட்டு போடுறதில்லை. அதனால நானும் போடமாட்டேன்னு சொல்லிட்டானாம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சுப்பு: ராமசாமி குழந்தைக்கு பேரு மாத்தப் போறேன்னானே! நியூமராலஜியா?
குப்பு: அதெல்லாமில்லை. ஒரு பொண்ணுக்கு தமிழிஷ்னு பேரு வச்சிருந்தானாம். அது இப்போ இல்லைன்னு இண்ட்லின்னு மாத்தணும்னு ஒத்தக்கால்ல நிக்கிறான்.
சுப்பு: இராமசாமி ரூமை எல்லாரும் கேரோ பண்ணிட்டிருக்காங்களே! என்னாச்சு?
குப்பு: நெகடிவ் வோட் போட்டான்னு அவன் ஸ்டெனோவ ஸஸ்பெண்ட் பண்ணிட்டானாம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சுப்பு: யோவ் குப்பு! வர வர ராமசாமி அட்டகாசம் தாங்க முடியலைய்யா.
குப்பு: இன்னைக்கென்ன கூத்தடிச்சான்?
சுப்பு: ஆஃபீஸ் கரஸ்பாண்டன்ஸ்ல ரிமார்க்ஸ் ப்ளீஸ்னு போடுறதுக்கு, பின்னூட்டம் பெறன்னு போட்டு அனுப்பறான்யா.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
குப்பு: ராமசாமி! நீங்க பண்றது கொஞ்சமும் சரியில்லை.
ராமசாமி: என்னாச்சுய்யா?
குப்பு: ஒரு நோட் எழுதி ஆர்டர் கேட்டா அக்ரீட்னோ நாட் அக்ரீட்னோ போடணும். என் நோட்ல இருந்து அங்கங்க நான் எழுதினத மார்க் பண்ணி கீழ எழுதி, “கலக்கிட்ட”, “சான்சே இல்லை”, “எப்பூடி இப்படியெல்லாம்”ன்னு எல்லாம் போட்டா நல்லாவா இருக்கு?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சுப்பு: ராமசாமிக்கு செம டோஸாமே காலைல. என்னாச்சு?
குப்பு: நம்ம கம்பெனி டெண்டர் ரிஜக்ட் ஆன லெட்டரைக் கொண்டு போய் முதலாளிகிட்ட “வடை போச்சே”ன்னு சொல்லி நீட்டினானாம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சுப்பு: யோவ் குப்பு. என்னய்யா ராமசாமிக்கு ஆக்ஸிடண்டா? எங்க பார்த்தாலும் கட்டு?
குப்பு: இல்லைய்யா! கிருஷ்ணனோட ரெண்டாவது குழந்தைக்கு பெயர் சூட்டு விழாக்கு போனப்ப, பெரிய மனுஷனாச்சேன்னு பேரு வைக்கச் சொன்னா ‘மீள் பதிவு’ன்னு வெச்சானாம். டின்னு கட்டிட்டாங்க.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
குப்பு: சார்! இந்த ராமசாமிய கொஞ்சம் வார்ன் பண்ணுங்க சார்.
அதிகாரி: என்னய்யா பண்ணான்?
குப்பு: அவன் வேலையை அறைகுறையா பண்ணிட்டு, இதைத் தொடர குப்புவை அழைக்கிறேன்னு ஸ்லிப் எழுதி என் டேபிள்ள போட்டுட்டு போறான் சார்.
சுப்பு: குப்பு! நேத்து சென்ஸஸ் எடுக்க வந்தவங்கள டரியலாக்கிட்டான்யா ராமசாமி!
குப்பு: என்ன தகராறு அவங்க கூட.
சுப்பு: குடும்ப உறுப்பினர் பெயர் சொல்லுன்னா, தன்னோட எண்பத்து மூணு ஃபாலோயர் பேரையும் சேர்த்தாவணும்னு சண்டை போடுறான்யா.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மிஸஸ் ராமசாமி: இங்க பாருங்க. நீங்களும் உங்க ப்ளாகும் பாழாப்போங்க. அதுக்காக கவிதாங்கற என் பேரை கவுஜா கவுஜான்னு கூப்பிட்டா நடக்கறது வேற.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சுப்பு: யோவ் சுப்பு. ராமசாமி கிரகப்பரவேச பத்திரிகை பார்த்தியா?
குப்பு: பார்த்தேன்! படுபாவி, புது வீட்டுக்கு ‘திரட்டி’ன்னு பேரு வச்சிருக்கானேய்யா, லூசு!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மன நல மருத்துவர்: ஸோ மிஸ்டர் ராமசாமி! ப்ளாக் ஒரு ஹாபின்னு புரிஞ்சிண்டீங்கன்னா ஒரு பிரச்சனையும் வராது. வேற ஏதாவது உங்களுக்கு கேக்கணுமா?
ராமசாமி: டாக்டர்! இன்னைக்கு இடுகைக்கு சரக்கே இல்லை டாக்டர். “மருத்துவ உலகில் நான் எப்படிப்பட்டவன்”னு ஒரு பத்து கேள்வி தரேன். பதில் சொன்னா இடுகை தேத்திடுவேன், ப்ளீஸ்.
மன நல மருத்துவர்: அய்யய்ய்யோ! டொய்ங்....
*********************************************
133 comments:
ஆஹா, வடை எனக்கா?
பிரபாகர்
படிச்சிட்டு 'பிளடி பிளாகர' கவனிச்சிக்கிறேன்...
பிரபாகர்...
படிச்சிட்டு 'பிளடி பிளாகர' கவனிச்சிக்கிறேன்...
பிரபாகர்...
கலக்கல், வேறென்ன சொல்ல?
//முதலமைச்சர பேட்டி எடுத்து பத்திரிகைல போட்டு புனைவுன்னு போட்டுட்டான் பழக்க தோஷத்துல. தூக்கிட்டாங்க.//
//பெரிய மனுஷனாச்சேன்னு பேரு வைக்கச் சொன்னா ‘மீள் பதிவு’ன்னு வெச்சானாம். டின்னு கட்டிட்டாங்க.//
//ஒரு நோட் எழுதி ஆர்டர் கேட்டா அக்ரீட்னோ நாட் அக்ரீட்னோ போடணும். என் நோட்ல இருந்து அங்கங்க நான் எழுதினத மார்க் பண்ணி கீழ எழுதி, “கலக்கிட்ட”, “சான்சே இல்லை”, “எப்பூடி இப்படியெல்லாம்”ன்னு எல்லாம் போட்டா நல்லாவா இருக்கு? //
உங்க ரவுசுக்கு அளவேயில்லை....
ம்ம்ம்...நடத்துங்க...நடத்துங்க...
அய்யோ என்ன காப்பாத்த யாருமே இல்லையா? இந்த சுப்பு குப்பு, ஆசான் தொல்லை தாங்க முடியல!
புதுமையான முயற்சி ஆசான்! பாதிக்கு மேல ரொம்ப நல்லாருக்கு.
பிரபாகர்...
சேம் சைடு கோல்.
ஆனா, எல்லாம் படிக்க நல்லாயிருந்துச்சு. கல்யாணம், சென்சஸ் மேட்டர் டாப்.
எப்படித்தான் யோசிக்கிறீங்களோ..
ங்கொய்யா
இதுக்கும் முதல் பின்னூட்டம் படிக்காமையேவா!!!
கலக்கல் காமெடி சார்... திஸ் டைம் நானே சிரிச்சேன்னா பார்த்துக்கிடுங்க....
இத ஒவ்வொன்னா காப்பி அடிச்சு ஏதாவது பத்திரிகைக்கு அனுப்பிச்சு... ஒரு ஜோக்... நாப்பது ரூவான்னு சம்பாதிக்க போறாய்ங்க... பார்த்துக்கிடுங்க...
|| ராமசாமியை ஏண்டா புளுகினன்னு கேட்டா, அத புளுகுன்னு சொல்லாத, அது சொற்சித்திரம்னு சொல்றான்||
ஏன் சார்... ய்ய்ய்ய்யேஏஏஏஏன்..? நாம எல்லாம் சும்மாவே ஆடுவோம்... இதில இது வேறயா.. எதுக்கும் வெளில போறப்போ ஹெல்மெட் போட்டுக்கிட்டு போங்க சார்...
வடிவேலு படத்திலைங்கிறதால தாங்கிக்கிடுறாய்ங்க... உங்க பாடி தாங்குமா சார்... அவ்வ்வ்வ்வ்...
அந்த தமிளிஷ்.. இண்டலி... ஜூப்பருங்கண்ணா
//இத ஒவ்வொன்னா காப்பி அடிச்சு ஏதாவது பத்திரிகைக்கு அனுப்பிச்சு... ஒரு ஜோக்... நாப்பது ரூவான்னு சம்பாதிக்க போறாய்ங்க... பார்த்துக்கிடுங்க...//
ithuvum nadakkum
அப்புறம் அந்த பர்ஸ்ட்டு பர்ஸ்ட்டா இருக்கிற ப்ளாக் அண்ட் வைட் படம் என்னைக் கேக்காம எப்டி சார் போடலாம்... நைண்டீன் நைண்டி டூ-ல நம்ம குப்புசாமி ஸ்டூடியோவில நாலு ரூவா கொடுத்து எடுத்த போட்டோ சார் அது.... நாப்பதாயிரம் டாலர் கொடுக்கறோம் மியூசியத்ல வைக்க கொடுன்னு கேட்டே கொடுக்கலை நானு... அவ்வ்வ்...
சொற்சித்திரம் - புனைவு...
ரொம்பத்தான் தில்லு சாமி
kalakal vaathyare
||புதுமையான முயற்சி ஆசான்! பாதிக்கு மேல ரொம்ப நல்லாருக்கு.
||
யோவ்... சிஷ்சு....
அதென்ன பாதிக்கு மேல.....
||ஈரோடு கதிர் said...
||புதுமையான முயற்சி ஆசான்! பாதிக்கு மேல ரொம்ப நல்லாருக்கு.
||
யோவ்... சிஷ்சு....
அதென்ன பாதிக்கு மேல.....||
பாதிக்கு மேல படிக்கலை அல்லது புரியலை அப்டின்னு அர்த்தம் கதிரு... என்னோட அண்ணாவ எனக்குத் தெரியாதா...
சூப்பர்..புகைப்படம் உட்பட
அருமை. ரசித்தேன்.
எல்லாஞ்செரி
குப்பு... சுப்புன்னு அந்த (!!) பதிவரத்தானே சொன்னீங்க..
டிஸ்கி: பரட்டை பத்த வச்சாச்சு
||பாதிக்கு மேல படிக்கலை அல்லது புரியலை அப்டின்னு அர்த்தம்||
அடப்பாவி மக்கா...
இதையும்மா படிக்காம பின்னூட்டறது
உங்க அண்ணா... டூ ஓல்டு... சாரி டூ பேட்
//ஈரோடு கதிர் said...
ங்கொய்யா
இதுக்கும் முதல் பின்னூட்டம் படிக்காமையேவா!!!
//
அப்புறமா படிச்சிட்டு கீழ போட்டிருக்கோம்ல!
பிரபாகர்...
||பாதிக்கு மேல படிக்கலை அல்லது புரியலை அப்டின்னு அர்த்தம் ||
அட.. படிக்காம இருந்தாக்கூட மன்னிச்சுவுட்றலாம்...
ங்கொய்யா புரியலன்னு மட்டும் பிரவு சொல்லட்டும்... அப்புறம் கொலதாண்டி பிர்ர்ர்ர்ர்ர்ரவு
||ஈரோடு கதிர் said...
||பாதிக்கு மேல படிக்கலை அல்லது புரியலை அப்டின்னு அர்த்தம்||
அடப்பாவி மக்கா...
இதையும்மா படிக்காம பின்னூட்டறது
உங்க அண்ணா... டூ ஓல்டு... சாரி டூ பேட்||
விடுங்க விடுங்க... என்னோட அண்ணாவ இப்டி சொல்லி சொல்லி நீங்க யூத் அண்ட் குட் ஆக ட்ரை பண்றது எங்களுக்குத் தெரியும்...
//
ஈரோடு கதிர் சைட்...
||புதுமையான முயற்சி ஆசான்! பாதிக்கு மேல ரொம்ப நல்லாருக்கு.
||
யோவ்... சிஷ்சு....
அதென்ன பாதிக்கு மேல.....
//
சிலது உண்மையில ரொம்ப பிரமாதமா இல்லைங்க! எங்க வலையுலக வடிவேல உசுப்பேத்திவிட வேண்டாம்னு உண்மைய சொன்னது தப்பா?
பிரபாகர்...
|| ஈரோடு கதிர் said...
||பாதிக்கு மேல படிக்கலை அல்லது புரியலை அப்டின்னு அர்த்தம் ||
அட.. படிக்காம இருந்தாக்கூட மன்னிச்சுவுட்றலாம்...
ங்கொய்யா புரியலன்னு மட்டும் பிரவு சொல்லட்டும்... அப்புறம் கொலதாண்டி பிர்ர்ர்ர்ர்ர்ரவு||
இந்தக் கடுப்புக்குப் பின்னால நிறைய மேட்டர் இருக்குன்னு மட்டும் புரியுது... பிறவு சொல்லுங்க பிர்ர்ர்றவு...
||சிலது உண்மையில ரொம்ப பிரமாதமா இல்லைங்க! எங்க வலையுலக வடிவேல உசுப்பேத்திவிட வேண்டாம்னு உண்மைய சொன்னது தப்பா?
பிரபாகர்... ||
அத ரொம்பப் ப்ரமாதப்படுத்தி நீங்க ஒரு எதிர் இடுகை போடப் போறீங்க ... அப்டித்தானே...
செரி செரி... எனக்கு ஒடு பாடு ஜோலி உண்டு... வரட்டே....
ரசிச்சு சிரிச்சேன் சார்..
ரொம்ப நல்லா இருக்கு...
//சொற்சித்திரம்
“வடை போச்சே”
‘மீள் பதிவு’
கவுஜா//
செம கிளாஸ் :)
||அப்புறமா படிச்சிட்டு கீழ போட்டிருக்கோம்ல!||
அதிலயும் தில்லாங்கடி வேல... அதென்ன பாதிக்கும் மேல
எல்லாமே செம கலக்கல்.
||Blogger பிரபாகர் said...
//
ஈரோடு கதிர் சைட்... ||
அண்ணே இதென்னங்கண்ணே ’சைட்’னு சொல்றீங்க
ரொம்பவும் இரசிச்சி சிரிச்சிச்சேன்
ஒரு சில அரசியல் அட்டகாசமும் இருக்கு போல
கலக்கல்
arumai sir.
விகட கவியே வாழ்க வாழ்க
“சான்சே இல்லை”,
haa... haaa...
ஹாஹாஹாஹா....
கடைசிவரைக்கும் யார் அந்த ராமசாமின்னு சொல்லவேயில்லையே அண்ணா.......
உங்கள் இடுகையும் அதற்கு வந்த பின்னூட்டங்களும் அருமை
(இப்ப இதையும் டெம்ப்ளேட்ல சேத்துட்டாங்களாமே)?
வலிந்து திணித்து எழுதப்பட்டாலும் இயல்பாக வந்துவிழும் நகைச்சுவை தங்களின் தனித்துவத்தை வெளிப்படுத்துகிறது. பாராட்டுக்கள்.
//சுப்பு: ஏன்யா குப்பு, சாதாரண மனுசனுக்கும் ப்ளாக்கருக்கும் என்ன வித்தியாசம்?
குப்பு: மத்தவனுக்கு வாழ்க்கைல நடக்கறதெல்லாம் அனுபவம். ப்ளாக்கருக்கு அது எல்லாம் ஒரு இடுகைக்கு மேட்டரு.///
இது மட்டுமில்லை எல்லாமே வில எலும்ப வெளில வர வைக்க வேலை பாக்குது
ஹா..ஹா..ஹ.. சிரிச்சு மாளல அண்ணா...!
சென்சஸ் ஜோக் செம ஜோக்...
நல்லா பண்றீங்கய்யா நக்கலு! உம்ம ப்ளாக்க வைரஸ் திங்க!
புதுமையான முயற்சி...
கலக்கல், வேறென்ன சொல்ல?
ஹா ஹா ஹா.. கலக்கல் :)
சக்க லொள்ளுங்க.. கலக்கல் காமெடி எல்லாமே..
அதிலயும் சென்சஸ், சொற்சித்திரம், இன்ட்லி, மீள்பதிவு எல்லாமே அட்டகாசம்..
கலக்கல்ஸ்
ஆனா யாரையோ தாக்கற மாதிரி இருக்கே!!!!
அப்படியா!!!
ரசிக்கும் படியா இருந்தது சார்...
அண்ணா ...அண்ணா இதுக்கு என்ன பின்னூட்டமிட. இந்த வெடிக்குள் தான் எல்லா பின்னூட்டமும் கிடக்கிறதே.சரி சரி சிரித்துவிட்டுப்போவோம்.நலாருக்குங்கண்ணா.
//குப்பு: நம்ம கம்பெனி டெண்டர் ரிஜக்ட் ஆன லெட்டரைக் கொண்டு போய் முதலாளிகிட்ட “வடை போச்சே”ன்னு சொல்லி நீட்டினானாம்.//
கலக்கல் தலைவா!
sakthi said...
//கலக்கல்ஸ்
ஆனா யாரையோ தாக்கற மாதிரி இருக்கே!!!!
அப்படியா!!!//
நமக்கு யார் கூடயும் வாய்க்கா வரப்பு தகராரு இல்லிங்க! இங்க அல்லாமே டமாசுதான்.
:-))
என்னா இளமை பாலாண்ணா!
சார் ... செமையா இருக்கு ...
ம்..ம்ம்.. பூந்து விளையாடுங்க..
செம கலக்கல் சார்....
nalla thamaas!
அண்ணன் வாழ்க
பாலாண்ணா,,
எதைக் குறிப்பிட்டுச் சொல்ல? எதை விட?
எல்லாமே கலக்கல்..
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
சார் ! கொன்னுடிங்க! கலக்கல் காமெடி சார்.
தேங்க்ஸ்.
//குப்பு: நேத்து ஒரு கலியாணத்துல அவன் ஃபேமலியோட வந்து, இவதான் என் ப்ளாக், இதுங்க ரெண்டும் என் பின்னூட்டங்கள்னு அறிமுகம் பண்றான்.//
அடப்பாவி இப்டில்லாமா பண்றான்...
//குப்பு: மத்தவனுக்கு வாழ்க்கைல நடக்கறதெல்லாம் அனுபவம். ப்ளாக்கருக்கு அது எல்லாம் ஒரு இடுகைக்கு மேட்டரு.//
அதென்னமோ சரிதானுங்க...எதப்பாத்தாலும் இடுகைப்போடவே தோணுதுங்க..
//அத புளுகுன்னு சொல்லாத, அது சொற்சித்திரம்னு சொல்றான்.//
:-)) ; :-((
//முதலமைச்சர பேட்டி எடுத்து பத்திரிகைல போட்டு புனைவுன்னு போட்டுட்டான் பழக்க தோஷத்துல. தூக்கிட்டாங்க.//
ங்ங்ங்ங்கொய்யால... பின்னஎன்ன அவார்ட்டா கொடுப்பாங்க...அவ்வ்வ்வ்...
//குப்பு: எலக்ஷன் கமிஷனருக்கு லெட்டர் போட்டு, நீங்க நிறுத்தற வேட்பாளர் யாரும் எனக்கு ஓட்டு போடுறதில்லை. அதனால நானும் போடமாட்டேன்னு சொல்லிட்டானாம்//
அப்டியே பயபுள்ள நம்மளாட்டமாதிரியே பண்றானே...
//அது இப்போ இல்லைன்னு இண்ட்லின்னு மாத்தணும்னு ஒத்தக்கால்ல நிக்கிறான்//
இது செம நக்கலு... இருங்க இருங்க அந்த இ(ண்)ட்லிகிட்ட சொல்றேன்...
// “கலக்கிட்ட”, “சான்சே இல்லை”, “எப்பூடி இப்படியெல்லாம்”ன்னு எல்லாம் போட்டா நல்லாவா இருக்கு? //
ஹா...ஹா...பழக்கத்தோசமாயிருக்கும் விடுங்க....
//‘மீள் பதிவு’ன்னு வெச்சானாம். டின்னு கட்டிட்டாங்க//
எப்பா சாமீ.... அடிச்சிக்க முடியாதுபோங்க...
//பார்த்தேன்! படுபாவி, புது வீட்டுக்கு ‘திரட்டி’ன்னு பேரு வச்சிருக்கானேய்யா, லூசு//
லூசாவது ஒண்ணாவது... என்னா கிரியேட்டிவிட்டி மைண்ட்... அத பாராட்டாம....
//எலக்ஷன் கமிஷனருக்கு லெட்டர் போட்டு, நீங்க நிறுத்தற வேட்பாளர் யாரும் எனக்கு ஓட்டு போடுறதில்லை. அதனால நானும் போடமாட்டேன்னு சொல்லிட்டானாம்.//
இதுதான் டாப்பு.
பாலாண்ணே கலக்குறீங்க.
ஐயோ தாங்கலைடா சாமி, சிரிச்சு சிரிச்சு ............கண்ணை கட்டுதுங்கய்யா போதும்......
1000 வாலாவை பொருத்திவிட்டா மாதிரி இருக்குண்ணே..
உண்மையக் கூட டமாசா எப்படி சார் சொல்ல முடியிது? !
//ஏன்யா குப்பு, சாதாரண மனுசனுக்கும் ப்ளாக்கருக்கும் என்ன வித்தியாசம்?
குப்பு: மத்தவனுக்கு வாழ்க்கைல நடக்கறதெல்லாம் அனுபவம். ப்ளாக்கருக்கு அது எல்லாம் ஒரு இடுகைக்கு மேட்டரு.//
ஹி..ஹி :)
அய்யா சாமி.. முடியல..
கொலக்குத்து..
ரசிச்சி சிரிக்க வச்சிட்டீங்க. நன்றிங்கய்யா..
||【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
உண்மையக் கூட டமாசா எப்படி சார் சொல்ல முடியிது? !||
அட இதென்ன பெரிய வேலை.. உண்மையில் நடக்கற தமாஷுதானே.. :o)
//
நம்ம கம்பெனி டெண்டர் ரிஜக்ட் ஆன லெட்டரைக் கொண்டு போய் முதலாளிகிட்ட “வடை போச்சே”ன்னு சொல்லி நீட்டினானாம்.
//
ha ha ha..... romba nerama sirichi kittu irukken...
தலைவரே எல்லாமே செம காமெடி ...
பிரமாதம். முதலில் சாதரணமாக தொடங்கி நகைச்சுவையின் உச்சகட்டத்தில் நிறுத்திய ராமசாமிக்கு நல்வாழ்த்துகள். உடனிருந்த குப்புவுக்கும், சுப்புவுக்கும். முதல் வரியிலேயே குப்பு என குப்பு தன் பெயரை சொல்வது கலக்கல். :)
கலக்கல்
ஹாஹா..கலக்கல் பாலா சார்...
//எலக்ஷன் கமிஷனருக்கு லெட்டர் போட்டு, நீங்க நிறுத்தற வேட்பாளர் யாரும் எனக்கு ஓட்டு போடுறதில்லை. அதனால நானும் போடமாட்டேன்னு சொல்லிட்டானாம்//
இது டாப்பு!!!!
அப்ப இந்தப் பதிவை அனுபவமாப் பாக்கணுமா:)
ரசிச்சு ருசிச்சுச் சிரிச்சேன். எப்படி இப்படிக் கற்பனை பறக்குது உங்களுக்கு:)
பாலா சார்,
கலக்கல்ஸ்..... அத்தனையும் சூப்பர்!
அன்புடன்,
-ரவிச்சந்திரன்
அண்ணா... முடியலை!!
பட்டாசு..:-))) கலக்கல் பாலா சார்.. வயசு கூடக் கூட குசும்பு கூடுமோ?
ஐயா, அருமையான பதிவு.
பிளாக்கர் ஐ சுற்றி இத்தனை எழுத முடிகிறது.அதுவும் அழகாய் .
வானம்பாடிகள் said...
sakthi said...
//கலக்கல்ஸ்
ஆனா யாரையோ தாக்கற மாதிரி இருக்கே!!!!
அப்படியா!!!//
நமக்கு யார் கூடயும் வாய்க்கா வரப்பு தகராரு இல்லிங்க! இங்க அல்லாமே டமாசுதான்.
தமாசு தான் ஒத்துகிறேன் பாஸ்
i am 85th person to comment and was away from blog only from 1 a.m. to 9 a.m. அதற்குள் இத்தனை நடந்திருக்கு.
எல்லாமே அருமை.
அனுபவிச்சு எழுதி இருக்கீங்க
அற்புதம்!நல்லா இருக்கு! கலக்கல்! சான்ஸே இல்லை.. ;-))
haa..haa..haa.. அட்டகாசம்.. செம.. தலைவரே..
கேபிள் சங்கர்
// Jey said...
1000 வாலாவை பொருத்திவிட்டா மாதிரி இருக்குண்ணே.//
மிகச் *சிறந்த* பின்னூட்டம்.
இதுவானா நீங்க எழுதினது சொல்லுவிங்களா! அல்லது இதன் கிரெடிட்-ம் அது-சரிக்கு தானா!
சின்ன வயசிலே நிறைய பேரே இப்படி தான் சீண்டுவிங்களோ!
மத்தவங்களை சிரிக்க வைக்கிறது சிரமம். நல்லா செய்யறீங்க.
Very nice :)))
Bloggers phobia :)
அத்தனையும் படு கலக்கல்...
எல்லாம் படிக்க நல்லாயிருந்துச்சு.....
கலக்கல்.
எல்லாமே டாப். வாழ்க்கை அனுபவங்கள், இடுகைக்கான மேட்டர்... கடைசி டாப்போ டாப்..!
கொஞ்சம் இல்ல ரொம்பவே நேரமாயிடுத்து. இருந்தாலும் பின்னூட்டம் போட்டே ஆக வேண்டிய பதிவு இது.
ஹா ! ஹா! ஹா!
ரெண்டாவது 100% உண்மை.
அது சரி போட்டோ வில இருக்கிறவங்க பதிவு எழுதுறாங்களா?
ஹையோ ! முடியல சார்,
:))))))
இந்த நாள் இனியநாள்.. பின்ன இப்படி சிரிச்சுட்டே ஆரம்பிச்சா இனிய நாள்தானே :)) நல்லாருக்கு
//ஸ்வாமி ஓம்கார் said...
அனுபவிச்சு எழுதி இருக்கீங்க//
ஹா..ஹா...இதுதான் செம உள்குத்து....
ஆமா, உங்க பேரு ராமசாமியா..??!!
:-)))
எனது பின்னூட்டம் 100 க்கு மேல் போனதால், பிரபாகர் அவர்களையும், ஈரோடு கதிர் அவர்களையும், கலகலபிரியா அவர்களையும் வன்மையாக கண்டிக்கிறேன்..
அய்யய்யோ சிரிப்பான் போட மறந்துட்டேனே.. :-)))
கலக்கல்!!
எதைச் சொல்ல எதை விட!
கலக்கல்!!
எதைச் சொல்ல எதை விட!
:))))
ஹ ஹ ஹ ஹ ஹா
மிகவும் அருமை
//நேத்து ஒரு கலியாணத்துல அவன் ஃபேமலியோட வந்து, இவதான் என் ப்ளாக், இதுங்க ரெண்டும் என் பின்னூட்டங்கள்னு அறிமுகம் பண்றான்.//
அர்த்தமே நாராசகமா மாறுதே!
பதிவு தான் நம்மளுது, பின்னூட்டம் மத்தவங்க போடுறது! அப்போ அது தான் குப்பு ஃபேமிலியா!?
:)
// மத்தவனுக்கு வாழ்க்கைல நடக்கறதெல்லாம் அனுபவம். ப்ளாக்கருக்கு அது எல்லாம் ஒரு இடுகைக்கு மேட்டரு.//
எதுக்கு பிரபாகரை இந்த தாக்கு தாக்குறிங்க!?
// அத புளுகுன்னு சொல்லாத, அது சொற்சித்திரம்னு சொல்றான்//
நானா இருந்த ஆருவாளை எடுத்து ஒரு போடு போட்டு எப்படி என் செயல்சித்திரம்னு சொல்லியிருப்பேன்!
//முதலமைச்சர பேட்டி எடுத்து பத்திரிகைல போட்டு புனைவுன்னு போட்டுட்டான் பழக்க தோஷத்துல. தூக்கிட்டாங்க//
புனைவுக்கு பதிலா கனவுன்னு போட்டிருந்தா புரமோஷன் கிடைச்சிருக்குமா?
//நீங்க நிறுத்தற வேட்பாளர் யாரும் எனக்கு ஓட்டு போடுறதில்லை. அதனால நானும் போடமாட்டேன்னு சொல்லிட்டானாம்//
நியாயம் தானே!
//குடும்ப உறுப்பினர் பெயர் சொல்லுன்னா, தன்னோட எண்பத்து மூணு ஃபாலோயர் பேரையும் சேர்த்தாவணும்னு சண்டை போடுறான்யா//
அப்ப என் ஃபேமிலியில 790 பேரா!
குசும்பு புடிச்ச ஆளுண்ணே நீங்க... :-))))
நிறைய நகைச்சுவையா இருக்கு....
ஆனா, பாவம் அந்த ராமசாமி...
நல்ல வேளை இந்த வியாதிகள் எதுவும் இன்னும் என்னை அண்டலை... :-)
வால்பையன் said...
//நேத்து ஒரு கலியாணத்துல அவன் ஃபேமலியோட வந்து, இவதான் என் ப்ளாக், இதுங்க ரெண்டும் என் பின்னூட்டங்கள்னு அறிமுகம் பண்றான்.//
அர்த்தமே நாராசகமா மாறுதே!
பதிவு தான் நம்மளுது, பின்னூட்டம் மத்தவங்க போடுறது! அப்போ அது தான் குப்பு ஃபேமிலியா!?
:)//
hi hi. இந்த டவுட்டு வரக்கூடாதுன்னுதான் என் பின்னூட்டம்னு சொல்ல உட்டேன்ல. ஒரு பின்னூட்டம் டெஸ்டிங், இன்னோரு பின்னூட்டம் மின்னஞ்சலில் பெறன்னு வச்சிக்கலாம்ல:))
@@நன்றி பிரபா
@@நன்றி பெ.சொ.வி
@@நன்றி ஆரூரன்
@@நன்றி பின்னோக்கி
கலகலப்ரியா said...
//கலக்கல் காமெடி சார்... திஸ் டைம் நானே சிரிச்சேன்னா பார்த்துக்கிடுங்க....//
நன்றிம்மா.
//இத ஒவ்வொன்னா காப்பி அடிச்சு ஏதாவது பத்திரிகைக்கு அனுப்பிச்சு... ஒரு ஜோக்... நாப்பது ரூவான்னு சம்பாதிக்க போறாய்ங்க... பார்த்துக்கிடுங்க...//
அய்யோ அது வேற இருக்கோ:((.அவ்வ்வ்
கலகலப்ரியா said...
|| ராமசாமியை ஏண்டா புளுகினன்னு கேட்டா, அத புளுகுன்னு சொல்லாத, அது சொற்சித்திரம்னு சொல்றான்||
ஏன் சார்... ய்ய்ய்ய்யேஏஏஏஏன்..? நாம எல்லாம் சும்மாவே ஆடுவோம்... இதில இது வேறயா.. எதுக்கும் வெளில போறப்போ ஹெல்மெட் போட்டுக்கிட்டு போங்க சார்...
வடிவேலு படத்திலைங்கிறதால தாங்கிக்கிடுறாய்ங்க... உங்க பாடி தாங்குமா சார்... அவ்வ்வ்வ்வ்...//
நம்மகிட்டயேவா? என்ன நடக்கும் தெரியுமில்லன்னு ஜபுருட்டுட்டு, இதான் நடக்கும்னு ஒரே ஓட்டமா ஓடியாந்துருவேன்ல.
கலகலப்ரியா said...
அப்புறம் அந்த பர்ஸ்ட்டு பர்ஸ்ட்டா இருக்கிற ப்ளாக் அண்ட் வைட் படம் என்னைக் கேக்காம எப்டி சார் போடலாம்... நைண்டீன் நைண்டி டூ-ல நம்ம குப்புசாமி ஸ்டூடியோவில நாலு ரூவா கொடுத்து எடுத்த போட்டோ சார் அது.... நாப்பதாயிரம் டாலர் கொடுக்கறோம் மியூசியத்ல வைக்க கொடுன்னு கேட்டே கொடுக்கலை நானு... அவ்வ்வ்...//
அதெல்லாம் அப்புடித்தான்:). ஓணும்னா ஒரு டாங்ஸ் சொல்லிக்கிறேன்.
LK said...
//இத ஒவ்வொன்னா காப்பி அடிச்சு ஏதாவது பத்திரிகைக்கு அனுப்பிச்சு... ஒரு ஜோக்... நாப்பது ரூவான்னு சம்பாதிக்க போறாய்ங்க... பார்த்துக்கிடுங்க...//
ithuvum nadakkum//
நடந்துருச்சி:(( அவ்வ்
@@நன்றி டி.வி.ஆர்.சார்
@@நன்றிங்க சின்ன அம்மணி
@@நன்றிங்க பாலாஜி சரவணா
@@நன்றிங்க வரதராஜுலு
@@நன்றி பட்டா
@@நன்றிங்க ஜமால்
@@நன்றிங்க வழிப்போக்கன்
@@நன்றிங்க பனம்
@@நன்றிங்க செந்தில்
@@நன்றி ராஜா
@@நன்றி முகிலன்
@@நன்றிங்க அமுதவன்
@@நன்றி தேவா
@@நன்றி ஜாக்கி
@@நன்றிங்க சே.குமார்
@@நன்றிங்க இராமசாமி கண்ணன்
@@நன்றிங்க செந்தில்
@@நன்றி நாடோடி
@@நன்றி சூர்யா
@@நன்றி பா.ரா.
@@நன்றிங்க நியோ
@@நன்றி ரிஷபன்
@@நன்றிங்க மேனகா
@@நன்றி யூர்கன்
@@நன்றி நசரேயன்
@@நன்றி ஸ்ரீராம்
@@நன்றிங்க சேது
@@நன்றி பாலாசி
@@நன்றி அக்பர்
@@நன்றிங்க நித்திலம்
@@நன்றிங்க காமராஜ்
@@நன்றி jey
@@நன்றி ஷங்கர்
@@நன்றி சரவணா
@@நன்றிங்க வழிப்போக்கந்யோகேஷ்
@@நன்றிங்க நந்தா
@@நன்றிங்க வெ.இரா
@@நன்றி டாக்டர்
@@நன்றி அனு
@@நன்றிங்க வல்லி சிம்ஹன்
@@நன்றிங்க இரவிச்சந்திரன்
@@நன்றிங்க பழமை
@@நன்றிங்க மஹி_கிரான்னி
@@நன்றி கார்த்தி
@@நன்றி நீச்சல்காரன்
@@நன்றிங்க ஸ்வாமி ஓம்கார்
@@நன்றி தமிழ்பிரியன்
@@நன்றி கேபிள்ஜி
@@நன்றி உசிலைமணி
@@நன்றி அது சரி
@@நன்றி முத்துராமலிங்கம்
@@நன்றி வெறும்பய
@@நன்றி கலாநேசன்
@@நன்றிங்க நாய்குட்டிமனசு
@@நன்றிங்க வித்யா
@@நன்றிங்க மயில்
@@நன்றி திரு
@@நன்றிங்க தீபா
@@நன்றி வால்
@@நன்றிங்க ரோஸ்விக்
repeattoi..
ரசித்தேன் :))
என் நோட்ல இருந்து அங்கங்க நான் எழுதினத மார்க் பண்ணி கீழ எழுதி, “கலக்கிட்ட”, “சான்சே இல்லை”, “எப்பூடி இப்படியெல்லாம்”ன்னு எல்லாம் போட்டா நல்லாவா இருக்கு?>>>
ஸேம் சைடு கோல் போட்டாலும் அதுவும் காமெடியாத்தான் இருக்கு
ஹாஹாஹா... ரொம்ப நேரம் சிரிச்சிட்டிருக்கேன். எல்லாமே தூள்!
நல்ல கற்பனை
நான் எழுதினத மார்க் பண்ணி கீழ எழுதி, “கலக்கிட்ட”, “சான்சே இல்லை”, “எப்பூடி இப்படியெல்லாம்”ன்னு
எல்லாமே கலக்கல், எதையும் ஒரு குறை சொல்ல முடியாது.
ரொம்ப நேரம் சிரிச்சு எல்லா பின்னூட்டத்தையும் படிச்சிட்டு இந்த பின்னூட்டம் போடுறேன்.
நீவிர் வாழ்க...நின் சேவை வாழ்க...
Post a Comment