பாகம்- 2
ஸ்ருஷ்டி இண்டஸ்ட்ரீஸ் என்ற பெரிய அலங்கார வளைவுக்குப் பின்னால் அந்தத் தொழிற்சாலை அரவமில்லாமல் இயங்கிக் கொண்டிருந்தது. தொழிற்சாலையின் இடதுபக்கமிருந்த குளிர் சாதனம் பொறுத்தப்பட்ட அந்தக் கண்ணாடிக் கட்டிடத்தின் முன் அலங்காரமாக மெர்சிடிஸ் பென்ஸ் 'இ' கிளாஸ் கறுப்பு கலரில் நின்றுக் கொண்டிர்ந்தது. வெள்ளைச் சீருடையணிந்த டிரைவர் காக்கியுடைக் காவலாளியுடன் தீவிரமாக மதராஸப்பட்டிணத்தின் நாயகியைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தான்.
உள்ளே போடப்பட்டிருந்த மேஜையின் மீது கிரிக்கெட்டே விளையாடலாம். அவ்வளவு பெரிய மேஜையின் ஒரு மூலையில் வைக்கப்பட்டிருந்த கம்ப்யூட்டரில் எதையோ சீரியசாகப் பார்த்துக் கொண்டிருந்தார் ஸ்ரீதரன். இண்டர்காமை எடுத்து இரண்டு எண்களை அழுத்தி காதில் வைத்து, “மாலா! ப்ரொடெக்ஷன் மானேஜரை உடனே என்னைப் பாக்கச் சொல்லு” என்றார்.
”...”
“ஃபேக்டரியில இருந்தா பேஜ் பண்ணு. ஹி ஷுட் பி ஹியர் எனி மொமண்ட்” என்று குரைத்துவிட்டு போனை வைத்தார்.
அவர் போனை வைப்பதற்காகவே காத்திருந்ததைப் போல அவர் செல்ஃபோன் அலறியது. எடுத்துப் பார்த்தார். புது நம்பர். யாராக இருக்கும் என்று யோசித்துவிட்டுச் சிவப்புப் பொத்தானை அழுத்தி கட் செய்தார். மீண்டும் அலறியது. அதே நம்பர். இந்த முறை பச்சைப் பொத்தானை அழுத்தி மெஜெஸ்டிக்காக “ஸ்ரீதரன் ஹியர்” என்றார்.
எதிர்முனை சொன்ன செய்தியைக் கேட்டதும் ஏசி அறையிலும் குப்பென்று வியர்த்தது.
“ஹூ ஆர் யு? வாட் டு யு வாண்ட்?”
“...”
“ஹே! !ஹே ஹே!” என்று அவர் கத்தக் கத்த கட் ஆனது. பாக்கெட்டில் இருந்த கர்ச்சீப்பை எடுத்து வழுக்கைத் தலையை அழுந்தத் துடைத்துக் கொண்டார். செல்ஃபோனில் இருந்த மகளின் நம்பரை டயல் செய்தார். “தி சப்ஸ்க்ரைபர் யு ஆர் ட்ரையிங் டு ரீச் இஸ் கரண்ட்லி ஸ்விட்ச்ட் ஆஃப்” என்ற குரலைக் கேட்டதும் அவர் முகம் கருத்தது.
சில நிமிடங்கள் கம்ப்யூட்டர் திரையையே வெறித்தார். திடீரென்று நினைவுக்கு வந்தவராய் செல்ஃபோனில் இன்னொரு எண்ணைப் பொதிந்தார்.
*************************
பிரசன்னா மல்டிப்ளெக்ஸின் வாசலில் இறங்கிக் கொண்டு “நீங்க போயிட்டு வாங்க ராஜன். நாளைக்குக் காலைல ஆறு மணிக்கு ஐ.ஜியைப் பாக்க பீச்சுக்குப் போகணும். 5:30க்கு வீட்டுக்கு வந்துடுங்க” என்று டிரைவரை வழியனுப்பிவிட்டு உள்ளே நுழைந்தான்.
வழக்கமாக அவள் நிற்கும் காப்பூச்சினோ கடை வாசலில் அவளைக் காணவில்லை. மறுபடியும் அவள் எண்ணைத் தொடர்பு கொண்டான். மீண்டும் ஸ்விட்ச்ட் ஆஃப் செய்தி. வெறுப்புடன் ஷூக்காலை தரையில் உதைத்துக் கொண்டான்.
“குட் ஈவினிங் சார். அம்மா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் போனாங்க. நீங்க இப்ப வந்திருக்கீங்க?” வாலட் மாணிக்கம் நின்றிருந்தார்.
“என்ன மாணிக்கம் சொல்றீங்க? ஸ்ருஷ்டி போயிட்டாளா? எப்போ?”
“நான் அப்போ இல்லை சார். முத்து தான் திருப்பி எடுத்துக் கொண்டுவந்தான். ஏய் முத்து?” என்று தூரத்தில் நின்ற கட்டைத் தடியனைக் கை தட்டி அழைத்தார்.
ஓடி வந்த முத்து, “என்னண்ணே?” என்றான்
“அந்த ஸ்கோடால வந்த அம்மா எத்தனை மணிக்குப் போனாங்க?”
“ஒரு அரை மணி நேரம் இருக்குமுங்கய்யா” பவ்யமாய்.
“ஷிட்” தன்னையே நொந்து கொண்டான் பிரஸன்னா. அப்போது அவன் செல்ஃபோன் ஒலித்தது.
“ஹல்லோ அங்கிள். எப்படியிருக்கீங்க?”
“...”
“வாட். நானும் அவளும் மல்டிப்ளெக்ஸ்ல சினிமா போறதா இருந்தது. நான் வரக் கொஞ்சம் லேட் ஆயிடுத்து. அவ கோவிச்சிட்டுக் கிளம்பிப் போயிட்டான்னு நினைச்சேன்”
“...”
“ஓக்கே அங்கிள். நீங்க அங்கருந்து கிளம்பி என் ஆஃபீஸ் வாங்க. அங்கதான் ட்ரேஸ் பண்ணக்கூட வசதியிருக்கு”
“...”
“உங்கள அங்க மீட் பண்றேன் அங்கிள்”
போனை கட் செய்தவன் உடனே இன்னொரு நம்பரை டயல் செய்தான். எதிர்முனை எடுத்ததும், “ராஜன். சாரி ராஜன். திரும்ப மல்டிப்ளெக்ஸ்கே வந்திருங்க. நான் ஆஃபிஸ் போகணும் மறுபடி”
“...”
“இல்லை. என் கிட்ட காரைக் குடுத்துட்டு நீங்க வீட்டுக்குப் போயிருங்க”
“...”
ராஜனுக்காகக் காத்திருந்த நேரத்தில் இரண்டு சிகரெட்டுகளைக் கொலை செய்தான்.
கார் மல்டிப்ளெக்ஸின் உள்ளே நுழைவதைப் பார்த்ததும் சிகரெட்டைக் கீழே போட்டுக் காலால் மிதித்தான். ராஜன் காரைஅவனுக்கருகில் நிறுத்திவிட்டு இறங்கி கதவைத் திறந்து பிடித்தார். டிரைவர் சீட்டில் தாவி ஏறியவன் அதே வேகத்தில் காரை வெளியே கிளப்பினான்.
மூன்றாவது திருப்பத்தில் சிக்னலில் நிற்கும் போது கண்ணாடியை யாரோ விரலை மடக்கித் தட்டினார்கள். திரும்பினான். ‘ஜெயராமன்’.
கண்ணாடியை இறக்கி, “என்ன ஜெயராமன். இந்தப் பக்கம்?”
“சார் நீங்க ஆஃபீஸ் போறீங்கன்னா, நானும் ஏறிக்கட்டுமா சார். ரொம்ப நேரமா நிக்கிறேன் ஆட்டோ எதுவும் கிடைக்கலை”
“ஏறிக்கோங்க ஜெயராமன். நோ ப்ராப்ளம்”
ஜெயராமன் ஏறுவதற்கும் சிக்னல் விழுவதற்கும் சரியாக இருந்தது. முதல் கியரை மாற்றி காரை விருட்டென்று எடுத்தான் பிரசன்னா.
******************************
நீலாங்கரைக்கு அந்தப்பக்கம் கடலில் சற்று உள்ளே தள்ளி அந்த மீன்பிடிப் படகு நின்றிருந்தது. படகின் கம்பத்தில் இந்திய தேசியக் கொடி லேசாகக் கிழிந்து பறந்து கொண்டிருந்தது. படகு அலையில் வேகத்தில் மேலும் கீழும் ஆடிக் கொண்டிருந்தது.
உள்ளே அவர்கள் ஆறு பேரும் சுற்றி உட்கார்ந்திருந்தார்கள். மீன்களைக் கொட்டும் பெரிய பெரிய பெட்டிகள் அவர்களுக்கு முன்னால் திறந்து இருந்தன. மீன்களுக்குப் பதில் 8 கலாஷ்னிக்காவ்கள் அந்தப் பெட்டிகளை நிரப்பி இருந்தன. இன்னொரு பெட்டியில் அம்மோ க்ளிப் க்ளிப்பாகக் குவிக்கப்பட்டிருந்தன.
“அண்ணே போட்டை ஒரு இடத்துலயே நிறுத்தி வச்சிருந்தா கோஸ்ட் கார்ட்க்கு டவுட் வந்திரும். கொஞ்சம் மத்த படகு இருக்கிற எடத்துக்கு போகலாம்ணே” என்றான் அந்த கந்தல் சட்டை அணிந்த மாலுமி. சரி சரி என்பது போல கையை மட்டும் அசைத்தான்
அவர்களின் சற்றே உயரமாக இருந்தவன் கரகரத்த குரலில் பாடுவதைப் போன்ற இனிமையான அரபியில் பேச ஆரம்பித்தான்.
“நாம் அனைவரும் இங்கே எதற்காக வந்திருக்கிறோம் என்பது நினைவில் இருக்கிறதா?”
மற்ற அனைவரும் மத்தியமாகத் தலை அசைத்தனர்.
“நாம் வந்திருப்பது ஒரு புனிதப் போருக்கு. நாம் செய்யும் இந்த செயல்கள் அல்லாவுக்கு பணிவிடை செய்வதற்குச் சமம். நம்மில் எத்தனை பேர் ஊருக்குத் திரும்பிப் போக முடியும் என்பது தெரியாது. ஆனால் நாம் செய்ய வந்த கடமையை முடிக்காமல் ஊருக்குப் போகக் கூடாது. புரிகிறதா?”
“புரிகிறது”
“அல்-ஜிஹாத் ஃபி சபில் அல்லாஹ்”
“அல்-ஜிஹாத் ஃபி சபில் அல்லாஹ்”
“நமக்கு உள்ளே இருந்து தகவல் வரவும் நாம் புறப்படத் தயாராக வேண்டும். எப்போது வேண்டுமானாலும் தகவல் வரலாம்”. வெளியே சூரியன் தன் ட்யூட்டியை முடித்துக் கொண்டு கிளம்பத்தயாரானான்.
*********************************
இன்றைய பகுதியை எழுதியவர்?:1. அது சரி 2. முகிலன் 3. கதிர் 4. வானம்பாடிகள் 5.கலகலப்ரியா 6.பிரபாகர் 7. நசரேயன். 8.பலா பட்டரை ஷங்கர்
55 comments:
டெஸ்டிங்
ஸ்கோடால தியேட்டருக்கு வந்த எப்பிடி பென்ஸ்ல திரும்பிப் போனா?? ஹிஹிஹி..
கதை நல்லா போகுது. தீவிரவாதிகளை உள்ள நுழைச்சிட்டீங்களா? விறுவிறுப்பு ஏறுது.
என்னோட கெஸ் -
ஃபர்ஸ்ட் சாய்ஸ் - ஷங்கர்
செகண்ட் சாய்ஸ் - அது சரி
ரெண்டாவதையும் போட்டாச்சா?
முதலுக்கே நாக்கு தள்ளிப் போச்சு. வேலைக்கு கிளம்பனும். இரவு வந்து வாசித்து, கமண்ட்டை எல்லாம் முகர்ந்து அப்புறம் காசை சுன்டறேன்.
இந்த விளையாட்டு நல்லாருக்கே பாலாண்ணா :-)
முகிலன் said...
ஸ்கோடால தியேட்டருக்கு வந்த எப்பிடி பென்ஸ்ல திரும்பிப் போனா?? ஹிஹிஹி..
கதை நல்லா போகுது. தீவிரவாதிகளை உள்ள நுழைச்சிட்டீங்களா? விறுவிறுப்பு ஏறுது.//
ஃப்ரண்ட் ஸ்கோடா பேக் பென்ஸ்:))
அதுசரி...(அதுதான் சரி)... கதை ரொம்ப ஸ்பீடா டாப் கியர்ல போகுது, சுவராஸ்யம் அதிகமாகுது... கலக்குங்க ஆசான்... இந்த மாதிரி எழுத இந்த அப்பாவி சிஷ்யனுக்கும் கொஞ்சம் சொல்லிக்கொடுங்க!
பிரபாகர்...
கதை செமையாப் போகுது
ஆமா... அந்த லிஸ்ட்ல என்னோட பேரு எதுக்கு
||பிரபாகர் said...
இந்த மாதிரி எழுத இந்த அப்பாவி சிஷ்யனுக்கும் கொஞ்சம் சொல்லிக்கொடுங்க!||
க்கும்... சொல்லி வேற குடுக்கனுமா
ஈரோடு கதிர் said...
கதை செமையாப் போகுது
ஆமா... அந்த லிஸ்ட்ல என்னோட பேரு எதுக்கு//
என்னோட பேரும் எதுக்குன்னு தெரியல. அனியாயம் பண்றாய்ங்க:))
very interesting....
//ஆமா... அந்த லிஸ்ட்ல என்னோட பேரு எதுக்கு//
என்னோட பேரும் எதுக்குன்னு தெரியல. அனியாயம் பண்றாய்ங்க:))//
சீக்கிரம் மத்தவர்களும் இப்படி சொல்லிட்டா யாருன்னு கண்டு பிடிச்சிரலாம்
@பிரபாகர்...
இந்த மாதிரி எழுத இந்த அப்பாவி சிஷ்யனுக்கும் கொஞ்சம் சொல்லிக்கொடுங்க!
//
சொல்லி வருவதில்லை மன்மதக் கலை..
ஹி..ஹி..
நல்லா டிரை பன்ணுங்க..அதுவா வரும் ஸ்நேக் சார்..ஹி..ஹி
Inthak kathaiyai naan thodaralaama? En bloglaye podattumaa illai ungalukku anuppi vaikkattumaa?
முகிலன் said...
//Inthak kathaiyai naan thodaralaama? En bloglaye podattumaa illai ungalukku anuppi vaikkattumaa?//
இந்தக் கதை முழுசா எழுதியாச்சு முகிலன். வேணும்னா முடிஞ்சப்புறம் தொடரலாம்:))
சூப்பர் கதை சார்!
//இந்தக் கதை முழுசா எழுதியாச்சு முகிலன். வேணும்னா முடிஞ்சப்புறம் தொடரலாம்:))//
முடிச்சப்புறம் எப்படி சார் தொடர்றது
முகிலன் said...
//இந்தக் கதை முழுசா எழுதியாச்சு முகிலன். வேணும்னா முடிஞ்சப்புறம் தொடரலாம்:))//
முடிச்சப்புறம் எப்படி சார் தொடர்றது //
இங்கிலீசு படம் பார்ட் ஒன்னு ரெண்டுன்னு எடுப்பாய்ங்கல்ல. அப்புடிதான்.
யார் எழுதினாங்கன்னு யோசிச்சு .. டென்ஷன் தான்.. எப்படியும் போட்டுருவீங்கல்ல கடைசில..
நான் அடிச்சு சொல்றேன்... (யாருக்குன்னு கேனத்தனமா எல்லாம் கேக்கப்டாது..) -சத்யமா- இது முகிலன் எழுதினதுதான்....
முதல் பாகத்தை விட 2 வது கொஞ்சம் சுருதி கம்மிதான் பாலா சார்
சுருதியேத்துங்க இணையத்தின் இணையர்களே
நல்லா போகுது சார்..
அதுதான் எனக்குத் தெரியுமே !! :))
எழுதியது நிச்சயமா இந்த ஏழு பேர்ல ஒருத்தர்தானே.... இல்லை அதுவும் இல்லையா..
கதை ரொம்ப நல்லாப் போகுது...
இரண்டாவது அத்தியாயம் ஷங்கர் கைவண்ணம் போல் தெரிகிறது.
விறுவிறுப்பான தொடர்!!!!!
அநேகமா பலாபட்டறை தான்னு நினைக்கிறேன்.
I see your point !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .
/கலகலப்ரியா said...
நான் அடிச்சு சொல்றேன்... (யாருக்குன்னு கேனத்தனமா எல்லாம் கேக்கப்டாது..) -சத்யமா- இது முகிலன் எழுதினதுதான்....//
//உள்ளே போடப்பட்டிருந்த மேஜையின் மீது கிரிக்கெட்டே விளையாடலாம். அவ்வளவு பெரிய மேஜையின் ஒரு மூலையில் வைக்கப்பட்டிருந்த கம்ப்யூட்டரில் எதையோ சீரியசாகப் பார்த்துக் கொண்டிருந்தார் ஸ்ரீதரன்//
’அதுசரி’ ப்ரியாஜி இப்படி வெளுத்ததெல்லாம் ‘பாலா’ நினைக்கலாமா, ’பிரவு’ எப்படி ‘முகிலு’க்குள் மறைந்திருக்கும் நிழலைக் கண்டுபிடிப்பது, வெளிச்சம் கிடைத்து ’கதிர்’ வளரவேண்டாமா? எதுக்கும் இன்னொருக்கா ’துண்டு’ போடுங்க!
அவ்வ்வ்வ்வ்வ் ....:)
கதை சஸ்பென்சை விட , யார் எழுதியது என்ற சஸ்பென்ஸ் பெருசா இருக்கும் போல..ஹி.ஹி.
//ஈரோடு கதிர் said...
கதை செமையாப் போகுது
ஆமா... அந்த லிஸ்ட்ல என்னோட பேரு எதுக்கு //
அதுதான, இவரு கதையா இருந்தா, இந்நேரம் பாலாண்ணா எதிர் கதை எழுதியிருப்பாருல்ல?
||【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
/கலகலப்ரியா said...
நான் அடிச்சு சொல்றேன்... (யாருக்குன்னு கேனத்தனமா எல்லாம் கேக்கப்டாது..) -சத்யமா- இது முகிலன் எழுதினதுதான்....//
//உள்ளே போடப்பட்டிருந்த மேஜையின் மீது கிரிக்கெட்டே விளையாடலாம். அவ்வளவு பெரிய மேஜையின் ஒரு மூலையில் வைக்கப்பட்டிருந்த கம்ப்யூட்டரில் எதையோ சீரியசாகப் பார்த்துக் கொண்டிருந்தார் ஸ்ரீதரன்//
’அதுசரி’ ப்ரியாஜி இப்படி வெளுத்ததெல்லாம் ‘பாலா’ நினைக்கலாமா, ’பிரவு’ எப்படி ‘முகிலு’க்குள் மறைந்திருக்கும் நிழலைக் கண்டுபிடிப்பது, வெளிச்சம் கிடைத்து ’கதிர்’ வளரவேண்டாமா? எதுக்கும் இன்னொருக்கா ’துண்டு’ போடுங்க!
அவ்வ்வ்வ்வ்வ் ....:) ||
அட அட... உங்க அறிவை மெச்... இருங்க இருங்க.. உங்க பேரைக் காணோமே..
’ப்ரியா’ஜி... வெளுத்தெதெல்லாம் ‘பாலா’.. கறுத்ததெல்லாம் ‘முகிலா’... ’கதிர’வனைத் ‘துண்டு’ மறைக்குமா..இல்லைப் ‘பிரபூ’ இல்லை... ஆகா.. ‘அது சரி’.. இது சரி.. பலே.. ‘பலா’... அவ்வவ்வவ்வ்வ்...
//
நாடோடி said...
கதை சஸ்பென்சை விட , யார் எழுதியது என்ற சஸ்பென்ஸ் பெருசா இருக்கும் போல..ஹி.ஹி.
//
இதையே நானுஞ் சொல்லிக்கிறேன்...ஏஞ்சார், எந்த மண்டபம், எத்தனை பேரு இருக்காங்க...ஒரு க்ளூ கொடுங்க பாஸ்...
முகிலன் said...
/ஃபர்ஸ்ட் சாய்ஸ் - ஷங்கர்
செகண்ட் சாய்ஸ் - அது சரி/
மூணாவது சாய்ஸா கூட நம்ம பேரு கவனம் வராதில்லை?:(
பா.ராஜாராம் said...
ரெண்டாவதையும் போட்டாச்சா?
முதலுக்கே நாக்கு தள்ளிப் போச்சு. வேலைக்கு கிளம்பனும். இரவு வந்து வாசித்து, கமண்ட்டை எல்லாம் முகர்ந்து அப்புறம் காசை சுன்டறேன்.
இந்த விளையாட்டு நல்லாருக்கே பாலாண்ணா :-)//
நன்றி பா.ரா. நாளைக்கு லீவ் தானே. சேர்த்துப் படிக்கலாம்.:)
பிரபாகர் said...
அதுசரி...(அதுதான் சரி)... கதை ரொம்ப ஸ்பீடா டாப் கியர்ல போகுது, சுவராஸ்யம் அதிகமாகுது... கலக்குங்க ஆசான்... இந்த மாதிரி எழுத இந்த அப்பாவி சிஷ்யனுக்கும் கொஞ்சம் சொல்லிக்கொடுங்க!
பிரபாகர்...//
அப்பாவியா? அடப்பாவியா? திக்குறவன திருப்புகழ் பாடுன்னு மிரட்டினா என்னபண்ண?
ஈரோடு கதிர் said...
கதை செமையாப் போகுது
ஆமா... அந்த லிஸ்ட்ல என்னோட பேரு எதுக்கு//
என்னுங் பண்றது மாப்பு. என் பேரு இருக்கே.
Mrs.Menagasathia said...
very interesting....
நன்றிங்க
கே.ஆர்.பி.செந்தில் said...
//ஆமா... அந்த லிஸ்ட்ல என்னோட பேரு எதுக்கு//
என்னோட பேரும் எதுக்குன்னு தெரியல. அனியாயம் பண்றாய்ங்க:))//
சீக்கிரம் மத்தவர்களும் இப்படி சொல்லிட்டா யாருன்னு கண்டு பிடிச்சிரலாம்//
அதானே:)
பட்டாபட்டி.. said...
@பிரபாகர்...
இந்த மாதிரி எழுத இந்த அப்பாவி சிஷ்யனுக்கும் கொஞ்சம் சொல்லிக்கொடுங்க!
//
சொல்லி வருவதில்லை மன்மதக் கலை..
ஹி..ஹி..
நல்லா டிரை பன்ணுங்க..அதுவா வரும் ஸ்நேக் சார்..ஹி..ஹி//
அது அது!
நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...
சூப்பர் கதை சார்!
நன்றிங்க
ரிஷபன் said...
யார் எழுதினாங்கன்னு யோசிச்சு .. டென்ஷன் தான்.. எப்படியும் போட்டுருவீங்கல்ல கடைசில..//
பின்ன:)
கலகலப்ரியா said...
//நான் அடிச்சு சொல்றேன்... (யாருக்குன்னு கேனத்தனமா எல்லாம் கேக்கப்டாது..) -சத்யமா- இது முகிலன் எழுதினதுதான்....//
நம்பீட்டம்
நேசமித்ரன் said...
முதல் பாகத்தை விட 2 வது கொஞ்சம் சுருதி கம்மிதான் பாலா சார்
சுருதியேத்துங்க இணையத்தின் இணையர்களே//
நன்றி நேசமித்திரன்:)
இராமசாமி கண்ணண் said...
நல்லா போகுது சார்..
நன்றிங்க இராமசாமி கண்ணன்
T.V.ராதாகிருஷ்ணன் said...
அதுதான் எனக்குத் தெரியுமே !! :))//
சொல்லமாடீங்கிறீங்களே சார்:))
ஸ்ரீராம். said...
எழுதியது நிச்சயமா இந்த ஏழு பேர்ல ஒருத்தர்தானே.... இல்லை அதுவும் இல்லையா..//
எட்டு பேர்ல ஒருத்தர் ஸ்ரீராம்:)
சே.குமார் said...
கதை ரொம்ப நல்லாப் போகுது...
இரண்டாவது அத்தியாயம் ஷங்கர் கைவண்ணம் போல் தெரிகிறது.//
நன்றிங்க.
Chitra said...
விறுவிறுப்பான தொடர்!!!!!
நன்றிங்க சித்ரா
புலவன் புலிகேசி said...
அநேகமா பலாபட்டறை தான்னு நினைக்கிறேன்.
பார்க்கலாம் புலிகேசி. சொல்லாம எங்க போறாங்க.
【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
/கலகலப்ரியா said...
நான் அடிச்சு சொல்றேன்... (யாருக்குன்னு கேனத்தனமா எல்லாம் கேக்கப்டாது..) -சத்யமா- இது முகிலன் எழுதினதுதான்....//
//உள்ளே போடப்பட்டிருந்த மேஜையின் மீது கிரிக்கெட்டே விளையாடலாம். அவ்வளவு பெரிய மேஜையின் ஒரு மூலையில் வைக்கப்பட்டிருந்த கம்ப்யூட்டரில் எதையோ சீரியசாகப் பார்த்துக் கொண்டிருந்தார் ஸ்ரீதரன்//
’அதுசரி’ ப்ரியாஜி இப்படி வெளுத்ததெல்லாம் ‘பாலா’ நினைக்கலாமா, ’பிரவு’ எப்படி ‘முகிலு’க்குள் மறைந்திருக்கும் நிழலைக் கண்டுபிடிப்பது, வெளிச்சம் கிடைத்து ’கதிர்’ வளரவேண்டாமா? எதுக்கும் இன்னொருக்கா ’துண்டு’ போடுங்க!
அவ்வ்வ்வ்வ்வ் ....:)//
சூப்பர் பதில் ப்ரியா கொடுத்திருக்கா:))
நாடோடி said...
கதை சஸ்பென்சை விட , யார் எழுதியது என்ற சஸ்பென்ஸ் பெருசா இருக்கும் போல..ஹி.ஹி.
ஆமாங்க:) சொல்ல மாட்டிங்குதுங்க பயபுள்ளைங்க.
பெயர் சொல்ல விருப்பமில்லை said...
//ஈரோடு கதிர் said...
கதை செமையாப் போகுது
ஆமா... அந்த லிஸ்ட்ல என்னோட பேரு எதுக்கு //
அதுதான, இவரு கதையா இருந்தா, இந்நேரம் பாலாண்ணா எதிர் கதை எழுதியிருப்பாருல்ல?//
இப்புடி வேற லாஜிக் இருக்கா?
கலகலப்ரியா said...
||【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
/கலகலப்ரியா said...
நான் அடிச்சு சொல்றேன்... (யாருக்குன்னு கேனத்தனமா எல்லாம் கேக்கப்டாது..) -சத்யமா- இது முகிலன் எழுதினதுதான்....//
//உள்ளே போடப்பட்டிருந்த மேஜையின் மீது கிரிக்கெட்டே விளையாடலாம். அவ்வளவு பெரிய மேஜையின் ஒரு மூலையில் வைக்கப்பட்டிருந்த கம்ப்யூட்டரில் எதையோ சீரியசாகப் பார்த்துக் கொண்டிருந்தார் ஸ்ரீதரன்//
’அதுசரி’ ப்ரியாஜி இப்படி வெளுத்ததெல்லாம் ‘பாலா’ நினைக்கலாமா, ’பிரவு’ எப்படி ‘முகிலு’க்குள் மறைந்திருக்கும் நிழலைக் கண்டுபிடிப்பது, வெளிச்சம் கிடைத்து ’கதிர்’ வளரவேண்டாமா? எதுக்கும் இன்னொருக்கா ’துண்டு’ போடுங்க!
அவ்வ்வ்வ்வ்வ் ....:) ||
அட அட... உங்க அறிவை மெச்... இருங்க இருங்க.. உங்க பேரைக் காணோமே..
’ப்ரியா’ஜி... வெளுத்தெதெல்லாம் ‘பாலா’.. கறுத்ததெல்லாம் ‘முகிலா’... ’கதிர’வனைத் ‘துண்டு’ மறைக்குமா..இல்லைப் ‘பிரபூ’ இல்லை... ஆகா.. ‘அது சரி’.. இது சரி.. பலே.. ‘பலா’... அவ்வவ்வவ்வ்வ்...//
ஆ. பின்னூட்டத்தில் ஒரு கவுஜ.
அது சரி said...
//
நாடோடி said...
கதை சஸ்பென்சை விட , யார் எழுதியது என்ற சஸ்பென்ஸ் பெருசா இருக்கும் போல..ஹி.ஹி.
//
இதையே நானுஞ் சொல்லிக்கிறேன்...ஏஞ்சார், எந்த மண்டபம், எத்தனை பேரு இருக்காங்க...ஒரு க்ளூ கொடுங்க பாஸ்...//
மண்டபம் வேற எதுக்கு. ஆட்டோ அனுப்பவா
இத எழுதினது முகிலன்.. வர்ணனைல நிறைய passive voice இருக்கு :)
Post a Comment