தண்ணீர் அருந்தப் போனேன்.
கண்ணாடிக் குவளை கழுவித் துடைத்து
சுத்தமாயிருக்கிறதா என்று பார்த்த போது
கண்ணில் பட்டது
கந்தன் திருவுருவம் காலண்டரில்.
அழகன் அழகாய்த் தெரிந்தான்.
சுத்தமான நீர் நிரப்பிக்
குடிக்கப் போகையில்
குவளை வழியே
மீண்டும் பார்த்தேன்.
அழகன் ஏனோ அரக்கனாய்த் தெரிந்தான்!
அரண்டு போனேன்.
என்ன நடந்தது?
அதே அழகன், அதே நான்,
அதே குவளை, அதே நீர், அதே பார்வை!
மாறுதல் எங்கே?
சுத்தமானதை சுத்தமானதில் நிரப்பினது தவிர
நான் செய்தது என்ன?
பிறகெப்படி அழகன் அரக்கனானான்?
எங்கே தவறு?
யாராவது சொல்லுங்களேன்!
****************************************