Monday, October 5, 2009

யாராவது சொல்லுங்களேன்.

தாகமெடுத்தது.
தண்ணீர் அருந்தப் போனேன்.
கண்ணாடிக் குவளை கழுவித் துடைத்து
சுத்தமாயிருக்கிறதா என்று பார்த்த போது
கண்ணில் பட்டது
கந்தன் திருவுருவம் காலண்டரில்.
அழகன் அழகாய்த் தெரிந்தான்.
சுத்தமான நீர் நிரப்பிக்
குடிக்கப் போகையில்
குவளை வழியே
மீண்டும் பார்த்தேன்.
அழகன் ஏனோ அரக்கனாய்த் தெரிந்தான்!
அரண்டு போனேன்.
என்ன நடந்தது?
அதே அழகன், அதே நான்,
அதே குவளை, அதே நீர், அதே பார்வை!
மாறுதல் எங்கே?
சுத்தமானதை சுத்தமானதில் நிரப்பினது தவிர
நான் செய்தது என்ன?
பிறகெப்படி அழகன் அரக்கனானான்?
எங்கே தவறு?
யாராவது சொல்லுங்களேன்!
****************************************

38 comments:

ஆ.ஞானசேகரன் said...

சுத்தமான் நீர் ததும்பியதால் வந்த வினை என்று நினைக்கின்றேன்.

vasu balaji said...

ஆ.ஞானசேகரன்
/சுத்தமான் நீர் ததும்பியதால் வந்த வினை என்று நினைக்கின்றேன்./

வாங்க ஞானசேகரன்.

ப்ரியமுடன் வசந்த் said...

ஹி ஹி ஹி பாலா சார் ஏதாவது பேயப்பார்த்து அரண்டுட்டீங்களா?

மந்திரிச்ச்சு விடணுமா?

:)))))

vasu balaji said...

பிரியமுடன்...வசந்த்

/ஹி ஹி ஹி பாலா சார் ஏதாவது பேயப்பார்த்து அரண்டுட்டீங்களா?

மந்திரிச்ச்சு விடணுமா?

:)))))/

அவ்வ்வ்வ். காமெடி பண்றாரு வசந்த்:((. நிஜமாத்தான் புரியல.

ப்ரியமுடன் வசந்த் said...

கலிலியோ வந்தா பதில் சொல்லுவாரா?

ப்ரியமுடன் வசந்த் said...

கலிலியோக்கு எப்பிடி முருகன் படம் தெரியும் ஏசு படம்தான் தெரியும்

ப்ரியமுடன் வசந்த் said...

மாயக்கண்ணாடி

ப்ரியமுடன் வசந்த் said...

ஏன் சார் நாந்தான் கத்தார்ல 11-30 ஆகியும் தூங்காம இருக்கேன் நீங்க 2 மணிக்கும் தூங்காம இடுகைய போடுறீகளே எப்பிடி முடியுது?

ப்ரியமுடன் வசந்த் said...

குவி ஆடி

குழி ஆடி படிச்சுமா இப்பிடி கேக்குறீங்க?

ப்ரியமுடன் வசந்த் said...

கண்ணாடி வேற போட்ருக்கீக?

பழமைபேசி said...

தண்ணி போட்டதுதான் காரணம்!

பழமைபேசி said...

//ஏன் சார் நாந்தான் கத்தார்ல 11-30 ஆகியும் தூங்காம இருக்கேன் நீங்க 2 மணிக்கும் தூங்காம இடுகைய போடுறீகளே எப்பிடி முடியுது?//

உங்களை மாதிரி அன்பர்கள் எங்கும் வியாபித்திருக்கிறார்கள்ங்ற நம்பிக்கைதான் இடுகைய இட வைக்குது!!

இராகவன் நைஜிரியா said...

எனக்கும் ஏன் என்ற காரணம் புரியாததால், தமிழ் மணம், தமிழிஷ் இரண்டிலும் ஓட்டு மட்டும் போட்டுட்டேன்.

எந்த தூக்க கலக்த்திலேயும் இந்த ஓட்டுப் பட்டை மட்டும் சரியாகத் தெரியுதுங்க...

இராகவன் நைஜிரியா said...

// பழமைபேசி
October 5, 2009 2:29 AM
தண்ணி போட்டதுதான் காரணம்! //

ஐயா தமிழ் பேசி சரியாகச் சொல்லிட்டார் பார்த்தீங்களா. :-)

இராகவன் நைஜிரியா said...

// பிரியமுடன்...வசந்த்
October 5, 2009 2:12 AM
கலிலியோ வந்தா பதில் சொல்லுவாரா? //

ஐயா யருங்க கலிலியோ? அவர் வந்தா மட்டும் எப்படிச் சொல்லுவாரு? அவருக்கு மட்டும் எல்லாம் தெரியுமுங்களா?

இராகவன் நைஜிரியா said...

// பழமைபேசி
October 5, 2009 2:34 AM
//ஏன் சார் நாந்தான் கத்தார்ல 11-30 ஆகியும் தூங்காம இருக்கேன் நீங்க 2 மணிக்கும் தூங்காம இடுகைய போடுறீகளே எப்பிடி முடியுது?//

உங்களை மாதிரி அன்பர்கள் எங்கும் வியாபித்திருக்கிறார்கள்ங்ற நம்பிக்கைதான் இடுகைய இட வைக்குது!! //

ஐ... எப்படிங்க ஐயா இப்படியெல்லாம்..

பிரபாகர் said...

//குவளை வழியே
மீண்டும் பார்த்தேன்.
அழகன் ஏனோ அரக்கனாய்த் தெரிந்தான்!//

அய்யா, இதிலிருந்து கிடைக்கும் நீதி 'நன்றாயிருக்கும் எதனையும் ஊடகங்களின் வழியே பார்க்கக்கூடாது, பாத்தால் அரக்காகரமாய்(எத்தனை நாளைக்குத்தான் பூதாகரமாய் என்று சொல்லுவது?) தான் தெரியும்.

உதாரணம் எந்த ஒரு செய்தியும் ஊடகங்களின் வழி வெளிவருதல்...

பிரபாகர்.

பழமைபேசி said...

//அய்யா, இதிலிருந்து கிடைக்கும் நீதி 'நன்றாயிருக்கும் எதனையும் ஊடகங்களின் வழியே பார்க்கக்கூடாது, பாத்தால் அரக்காகரமாய்(எத்தனை நாளைக்குத்தான் பூதாகரமாய் என்று சொல்லுவது?) தான் தெரியும்.
//

பின்னீட்டீங்க பிரபாகர்!

vasu balaji said...

பிரியமுடன்...வசந்த்
/கலிலியோ வந்தா பதில் சொல்லுவாரா?/
/கலிலியோக்கு எப்பிடி முருகன் படம் தெரியும் ஏசு படம்தான் தெரியும்/
/மாயக்கண்ணாடி/
/குவி ஆடி

குழி ஆடி படிச்சுமா இப்பிடி கேக்குறீங்க?/

யாராச்சும் சொல்லுங்கன்னு கேட்டா, கே.பி. சுந்தராம்பாள் ஆவி பூந்தா மாதிரி கேள்வியப் பாரு.

கலிலியோ பார்த்தாலும் அழகன் அழகா தெரிஞ்சி அப்புறம் அரக்கனாத்தான் தெரிவான்.
ம்கும். இது தெரியாமத்தான் கேக்குறாங்களோ.

vasu balaji said...

பிரியமுடன்...வசந்த்
/கண்ணாடி வேற போட்ருக்கீக?/

அது தூரப் பார்வைக்கு. இது கிட்டப் பார்வை.

vasu balaji said...

பழமைபேசி
/தண்ணி போட்டதுதான் காரணம்!/

குவளைதான போட்டுச்சி. எனக்கேன் அப்புடி தெரியுதுன்னா லொள்ளப்பாரு.

vasu balaji said...

இராகவன் நைஜிரியா
/எனக்கும் ஏன் என்ற காரணம் புரியாததால், தமிழ் மணம், தமிழிஷ் இரண்டிலும் ஓட்டு மட்டும் போட்டுட்டேன்.

எந்த தூக்க கலக்த்திலேயும் இந்த ஓட்டுப் பட்டை மட்டும் சரியாகத் தெரியுதுங்க.../

சும்மாவா பின்னூட்ட மன்னன்னு பட்டம் கொடுத்தது. வலைப்பதிவருக்கு வாழ்வு கொடுக்கும் வள்ளலே வருக!!

vasu balaji said...

பழமைபேசி
// பிரியமுடன்...வசந்த்
ஏன் சார் நாந்தான் கத்தார்ல 11-30 ஆகியும் தூங்காம இருக்கேன் நீங்க 2 மணிக்கும் தூங்காம இடுகைய போடுறீகளே எப்பிடி முடியுது?//

உங்களை மாதிரி அன்பர்கள் எங்கும் வியாபித்திருக்கிறார்கள்ங்ற நம்பிக்கைதான் இடுகைய இட வைக்குது!!//

அதாஞ்செரி.

ஈரோடு கதிர் said...

என்கூட போன்ல பேசினீங்கள்ள... ஒரு ரெண்டு மூனு நாளைக்கு எல்லாமே இப்படித்தான் இருக்கும் அப்புறம் சரியா போயிடும்...

நல்லா தூங்கி எந்திரிங்க....

நாங்க சின்ன பசவ ராத்ரியில பேய் கணக்கா கண்ணு முழிக்கிறம்றான..
நீங்களுமா.... போங்கண்ணா போய் தூங்குங்க

vasu balaji said...

இராகவன் நைஜிரியா
/ஐயா தமிழ் பேசி சரியாகச் சொல்லிட்டார் பார்த்தீங்களா. :-)/

யாருன்னு சொல்லலைங்களே.:-)

vasu balaji said...

பிரபாகர்
/அய்யா, இதிலிருந்து கிடைக்கும் நீதி 'நன்றாயிருக்கும் எதனையும் ஊடகங்களின் வழியே பார்க்கக்கூடாது, பாத்தால் அரக்காகரமாய்(எத்தனை நாளைக்குத்தான் பூதாகரமாய் என்று சொல்லுவது?) தான் தெரியும்.

உதாரணம் எந்த ஒரு செய்தியும் ஊடகங்களின் வழி வெளிவருதல்...

பிரபாகர்.


நீங்களாவது சீரியசா எடுத்துட்டு ஒரு பதிலைச் சொன்னீங்களே. நன்றி பிரபாகர். கிட்ட கிட்ட அதுதான்.

vasu balaji said...

கதிர் - ஈரோடு
/என்கூட போன்ல பேசினீங்கள்ள... ஒரு ரெண்டு மூனு நாளைக்கு எல்லாமே இப்படித்தான் இருக்கும் அப்புறம் சரியா போயிடும்...

தோடா. இதுக்கெல்லாம் அரண்ட்ருவமாக்கு.

/நல்லா தூங்கி எந்திரிங்க....

நாங்க சின்ன பசவ ராத்ரியில பேய் கணக்கா கண்ணு முழிக்கிறம்றான..
நீங்களுமா.... போங்கண்ணா போய் தூங்குங்க/

நான் சின்னப்பய இல்லன்னு யாரு சொன்னது? அவ்வ்வ்வ்.

vasu balaji said...

பழமைபேசி
/பின்னீட்டீங்க பிரபாகர்!/

கிட்ட கிட்ட நான் சொல்ல வந்ததும் ஒரு மனுசனுக்கு புரியுதேன்னு சந்தோசமா இருக்கு. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

க.பாலாசி said...

//சுத்தமான நீர் நிரப்பிக்
குடிக்கப் போகையில்
குவளை வழியே
மீண்டும் பார்த்தேன்.//

உங்கள யாரு மறுபடியும் பார்க்க சொன்னது. தண்ணிகலக்காம குடிச்சா இப்படிதான், கொஞ்ச நேரத்துக்கு எல்லாமே அலங்கோலமாத்தான் தெரியும்.

vasu balaji said...

க.பாலாஜி

/உங்கள யாரு மறுபடியும் பார்க்க சொன்னது. தண்ணிகலக்காம குடிச்சா இப்படிதான், கொஞ்ச நேரத்துக்கு எல்லாமே அலங்கோலமாத்தான் தெரியும்./

வாங்க பாலாஜி. அய்யா சாமி நான் குடிக்கவே இல்லையே!

கலையரசன் said...

எங்க தவறு? உங்க கையில கீ-போர்ட் குடுத்ததுதான் தவறு!!
:-)
நல்லாயிருக்குண்ணே!!

பழமைபேசி said...

//வானம்பாடிகள் Says:
October 5, 2009 10:30 AM
பழமைபேசி
/தண்ணி போட்டதுதான் காரணம்!/

குவளைதான போட்டுச்சி. எனக்கேன் அப்புடி தெரியுதுன்னா லொள்ளப்பாரு.
//

எனக்கும் சிறு சந்தேகம் இருந்துச்சி...இப்ப அது உறுதி ஆயிடுச்சி! குவளை தண்ணி போடுமா? So, it is confirmed!

vasu balaji said...

பழமைபேசி
/எனக்கும் சிறு சந்தேகம் இருந்துச்சி...இப்ப அது உறுதி ஆயிடுச்சி! குவளை தண்ணி போடுமா? So, it is confirmed!/

அய்யோ. இதெந்தூரு நியாயம்.அவ்வ்வ்வ்

vasu balaji said...

கலையரசன்
/எங்க தவறு? உங்க கையில கீ-போர்ட் குடுத்ததுதான் தவறு!!
:-)
நல்லாயிருக்குண்ணே!!/

இதான் சரி

துபாய் ராஜா said...

இது ஒரு மாதிரி கோணப்பார்வைங்க...... :))

(நல்லா படிங்க...கோணப்பார்வை..)

vasu balaji said...

துபாய் ராஜா
/இது ஒரு மாதிரி கோணப்பார்வைங்க...... :))

(நல்லா படிங்க...கோணப்பார்வை..)/

:)). அழுத்தி சொன்னாலே புரியுது:))

ரோஸ்விக் said...

வழக்கமா நறுக்குன்னு நாலு வார்த்த....இப்ப ஒரே வார்த்தையா?

தண்ணி குடிக்கும் பொது மறைஞ்சு நின்னு குடிங்க சார். பாருங்க முருகன் பாத்துட்டு அரக்கனா ஆயிட்டாரு. - தமாசு

இதுக்குப் பேரு தான் அறிவியல் பார்வை. ஆன்மீகப் பார்வையில கடவுள்-னு நம்ம சொல்லறதை, அறிவியல் வேற மாதிரி பார்க்குது. இதுக்காக அறிவியல் தப்புன்னு நம்ம சொல்லிட முடியாது....

vasu balaji said...

ரோஸ்விக்
/இதுக்குப் பேரு தான் அறிவியல் பார்வை. ஆன்மீகப் பார்வையில கடவுள்-னு நம்ம சொல்லறதை, அறிவியல் வேற மாதிரி பார்க்குது. இதுக்காக அறிவியல் தப்புன்னு நம்ம சொல்லிட முடியாது..../

:)). முதல் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி ரோஸ்விக். இது அறிவியலும் இல்லை. ஆன்மீகமும் இல்லை. பிரபாகர் சொன்னாற்போல்
உண்மை(கடவுளின் உருவகம்)க்கும் எனக்கும் இடையில் எந்த ஊடகம் இருப்பினும் அது எவ்வளவு சுத்தமானதானாலும் Distortion இருக்கக் கூடும் என்பது என் எண்ணம்.