மனக் குளம்
நிறைந்த மனக் குளத்தில்
என் முகம் பார்க்க
உன் முகம் கண்ட நாள் எத்தனை?
கரையோர ஆலமரக் கனி விழ
சிற்றலையாய்த் தோன்றிய கலங்கலுக்கு
காரணம் நானெப்படியாவேன்?
விழுந்த ஆலங்கனி விஷ வித்தாய்!
குளம் குழம்பி குட்டையாக
முகம் பார்க்க முயலும்
முட்டாள் நான்
முழுதாய்த் தொலைந்து போனேன்.
உன் முகம் காண முயன்று
முற்றாய்த் தோற்று
என் உயிர் தேடும்
பிரயத்தினத்தில் மூச்சடைக்கிறது!
ஏன் என் உயிர் என்னை
வெறுப்பதாய்ச் சொல்கிறது?
என் ஏக்கம் மறுத்தேன்
எள்ளி நகைக்கிறது?
நானறிவேன்! என் உயிருக்கு
வெறுக்கத் தெரியாது.
உயிர்ப்பிக்கும் தேவதைக்கு
உயிர்வாங்கத் தெரியாது
உயிர் அளிப்பது இறைவனெனில்
நீயும் அதுவன்றோ?
ஏங்கி அழாமல் நீங்கள்
எப்பொழுது வந்தீர்கள்?
வரமளிப்பது இறைவனெனில்
நீயும் அது தான்
ஆரத் தழுவி
தன்னுள்ளடக்கையில்!
__/\__
76 comments:
ரொம்ப குழப்புறீங்க குட்டைய... ! நல்லா இருக்கு சார்..!
கலகலப்ரியா said...
/ரொம்ப குழப்புறீங்க குட்டைய... ! நல்லா இருக்கு சார்..!/
இது நல்லாருக்கே. குட்டைய குழப்பிட்டு புலம்ப வேற செய்றாங்களா? அது குருவி உக்கார ஆலம் பழம் விழுந்து குட்டையாச்சி போல.
//உயிர் அளிப்பது இறைவனெனில்
நீயும் அதுவன்றோ?//
நல்லா இருக்குதுங்க.....
அண்ணே... பலவித்தை வித்தகர் அண்ணே நீங்க.. அஷ்டாவதினி சொன்னா இன்னும் பொருத்தமா இருக்கும்.
குட்டைய ரொம்ப நல்லவே குழப்பி இருக்கீங்க..
புலவன் புலிகேசி said...
/நல்லா இருக்குதுங்க...../
நன்றிங்க.
//நிறைந்த மனக் குளத்தில்
என் முகம் பார்க்க
உன் முகம் கண்ட நாள் எத்தனை? //
எப்போதும் அதுதானே காட்சி அளிக்கின்றது... அப்புறம் எப்படி கணக்கு வச்சுக்க முடியும்?
இராகவன் நைஜிரியா said...
/அண்ணே... பலவித்தை வித்தகர் அண்ணே நீங்க.. அஷ்டாவதினி சொன்னா இன்னும் பொருத்தமா இருக்கும்./
ஆஹா. கேக்க நல்லா இருக்குண்ணே. ஆனா இது ரொம்ப ஓவருண்ணே.
/குட்டைய ரொம்ப நல்லவே குழப்பி இருக்கீங்க../
அந்த வாலு கலகலா சொன்னா நீங்களும் சொல்றீங்களேண்ணே. அவ்வ்வ்.
// கரையோர ஆலமரக் கனி விழ
சிற்றலையாய்த் தோன்றிய கலங்கலுக்கு
காரணம் நானெப்படியாவேன்?
விழுந்த ஆலங்கனி விஷ விருத்தாய்! //
அது சரி ஆலங்கனியே விஷமாயிடுச்சா..
//நானறிவேன்! என் உயிருக்கு
வெறுக்கத் தெரியாது.
உயிர்ப்பிக்கும் தேவதைக்கு
உயிர்வாங்கத் தெரியாது
//
வார்த்தைகளை மிக எளிதாய் கையாண்டு கலக்குகிறீர்கள் அய்யா...
வழக்கம்போல் மிக அருமை.
பிரபாகர்.
// குளம் குழம்பி குட்டையாக
முகம் பார்க்க முயலும்
முட்டாள் நான்
முழுதாய்த் தொலைந்து போனேன். //
குட்டையிலே தொலைஞ்சுப் போயிட்டீங்களா...அவ்...அவ்...
இராகவன் நைஜிரியா said
/எப்போதும் அதுதானே காட்சி அளிக்கின்றது... அப்புறம் எப்படி கணக்கு வச்சுக்க முடியும்?/
கணக்கு அதிகாரின்னா இப்படியா?=))
// உன் முகம் காண முயன்று
முற்றாய்த் தோற்று
என் உயிர் தேடும்
பிரயத்தினத்தில் மூச்சடைக்கிறது! //
கொஞ்சம் ஆக்சிஜன் கொடுத்துப் பாருங்களேன்... :-)
இராகவன் நைஜிரியா said.
/அது சரி ஆலங்கனியே விஷமாயிடுச்சா../
இது லொல்லு.
// ஏன் என் உயிர் என்னை
வெறுப்பதாய்ச் சொல்கிறது? //
பார்த்து அது போய் நெகட்டிவ் ஓட்டு போட்டுடப் போகுது...
பிரபாகர் said...
/வார்த்தைகளை மிக எளிதாய் கையாண்டு கலக்குகிறீர்கள் அய்யா...
வழக்கம்போல் மிக அருமை./
நன்றி பிரபாகர்.
// என் ஏக்கம் மறுத்தேன்
எள்ளி நகைக்கிறது? //
அது மட்டுமா..?
இராகவன் நைஜிரியா said...
/குட்டையிலே தொலைஞ்சுப் போயிட்டீங்களா...அவ்...அவ்.../
ஆஹா. அண்ணே முகம் காணோம்னு சொன்னதுண்ணே.
// நானறிவேன்! என் உயிருக்கு
வெறுக்கத் தெரியாது. //
அப்படியே வெறுத்தாலும் உங்களுக்குத் தெரியாது... ஏன் என்றால், நீங்க அன்பை மட்டும் பார்த்து இருக்கீங்க
ராகவன்ஜி.... நல்லா ஃ பார்ம்ல இருக்கீங்க போலிருக்கு.... ம்... கலக்குங்க...
இராகவன் நைஜிரியா said...
/கொஞ்சம் ஆக்சிஜன் கொடுத்துப் பாருங்களேன்... :-)/
அதெல்லாம் கையோட குளத்துக்கு கொண்டு போறாங்களா?
// பிரபாகர் said...
ராகவன்ஜி.... நல்லா ஃ பார்ம்ல இருக்கீங்க போலிருக்கு.... ம்... கலக்குங்க... //
எல்லாம் உங்களை மாதிரி, வானம்பாடிகள் மாதிரி இருக்கின்ற அண்ணன்கள் கொடுக்கின்ற ஊக்கம் அண்ணே..
கும்மியை சந்தோஷமா ஏத்துக்கிறீங்க பாருங்க அந்த ஊக்கம்தாங்க
இராகவன் நைஜிரியா said...
/பார்த்து அது போய் நெகட்டிவ் ஓட்டு போட்டுடப் போகுது.../
ஹெ ஹெ. இது வேற
// ஏங்கி அழாமல் நீங்கள்
எப்பொழுது வந்தீர்கள்? //
ஈழ நிகழ்வுகளைப் பார்த்தபின் கண்களில் கண்ணீர் கூட வற்றிவிட்டதுங்க...
இராகவன் நைஜிரியா said
/அது மட்டுமா..?/
இப்போல்ல தெரியுது. நீங்களும்னு.
// வரமளிப்பது இறைவனெனில்
நீயும் அது தான்
ஆரத் தழுவி
தன்னுள்ளடக்கையில்! //
தழுவுதல் - எனக்கு வசூல் ராஜா கட்டிபுடி வைத்தியம் ஞாபகத்துக்கு வந்துடுச்சுங்க..
ஐ மீ த 25
இராகவன் நைஜிரியா said...
/அப்படியே வெறுத்தாலும் உங்களுக்குத் தெரியாது... ஏன் என்றால், நீங்க அன்பை மட்டும் பார்த்து இருக்கீங்க/
அது அது.
அண்ணே ஒரு நல்ல கவிதையில கும்மி அடிச்சுட்டேன்...
நீங்க என் அண்ணன் தப்பா நினைச்சுக்க மாட்டீங்க அப்படின்னுதான்.
பிரபாகர் said...
/ராகவன்ஜி.... நல்லா ஃ பார்ம்ல இருக்கீங்க போலிருக்கு.... ம்... கலக்குங்க.../
அண்ணன் என்னைக்கு ஃபார்ம்ல இல்லாம இருந்திருக்காரு.
அடுத்த தடவை இந்தியா வரும் போது உங்களை நிச்சயம் பார்க்க வருவேன்.
டேய் ஒரு நல்ல கவிதையில கும்மி அடிச்சிட்டாயடா அப்படின்னு அடிச்சிட மாட்டீங்களே?
ராகவன், உங்க கும்மியே ஒரு கவிதை.
இராகவன் நைஜிரியா said
/எல்லாம் உங்களை மாதிரி, வானம்பாடிகள் மாதிரி இருக்கின்ற அண்ணன்கள் கொடுக்கின்ற ஊக்கம் அண்ணே..
கும்மியை சந்தோஷமா ஏத்துக்கிறீங்க பாருங்க அந்த ஊக்கம்தாங்க/
ஆஹா. ஊக்கத்துக்கே ஊக்கமா.
இராகவன் நைஜிரியா said...
/ஈழ நிகழ்வுகளைப் பார்த்தபின் கண்களில் கண்ணீர் கூட வற்றிவிட்டதுங்க.../
ஆமாங்க. நேத்து கலகலா படிச்சிட்டு ரொம்ப நேரம் அழுவாச்சி.
இராகவன் நைஜிரியா said.
/தழுவுதல் - எனக்கு வசூல் ராஜா கட்டிபுடி வைத்தியம் ஞாபகத்துக்கு வந்துடுச்சுங்க../
ஆஹா.
// வானம்பாடிகள் said...
இராகவன் நைஜிரியா said...
/ஈழ நிகழ்வுகளைப் பார்த்தபின் கண்களில் கண்ணீர் கூட வற்றிவிட்டதுங்க.../
ஆமாங்க. நேத்து கலகலா படிச்சிட்டு ரொம்ப நேரம் அழுவாச்சி.//
ஆமாங்க - உண்மையைச் சொல்லணும் என்றால், பின்னூட்டம் போட முடியாத அளவுக்கு மனசு கனத்துப் போச்சுங்க.
இராகவன் நைஜிரியா said...
/அண்ணே ஒரு நல்ல கவிதையில கும்மி அடிச்சுட்டேன்...
நீங்க என் அண்ணன் தப்பா நினைச்சுக்க மாட்டீங்க அப்படின்னுதான்./
சே சே. கும்மி ஒரு சர்டிஃபிகேட் மாதிரிண்ணே.
//ஆமாங்க. நேத்து கலகலா படிச்சிட்டு ரொம்ப நேரம் அழுவாச்சி.
//
நான் இப்போ ப்ரியா எழுதிகிட்டிருக்கிற தொடர் இருக்கையை படிக்கிறப்ப எல்லாம் அழுதுட்டுத்தான் இருக்கேன். மனம் கனத்து போகுமளவுக்கு எழுதறாங்க...
// வானம்பாடிகள் said...
இராகவன் நைஜிரியா said
/எல்லாம் உங்களை மாதிரி, வானம்பாடிகள் மாதிரி இருக்கின்ற அண்ணன்கள் கொடுக்கின்ற ஊக்கம் அண்ணே..
கும்மியை சந்தோஷமா ஏத்துக்கிறீங்க பாருங்க அந்த ஊக்கம்தாங்க/
ஆஹா. ஊக்கத்துக்கே ஊக்கமா. //
சைட் டிஷ் மாதிரி நானு... ஸ்பெஷல் சரக்கு நீங்க ...
சைட் டிஷ் இல்லாம சரக்கு பலருக்கு ஓகே... சரக்கு இல்லாம சைட் டிஷ் உபயோகப் படாதே..
இது எப்படி இருக்கு?
இராகவன் நைஜிரியா said...
/அடுத்த தடவை இந்தியா வரும் போது உங்களை நிச்சயம் பார்க்க வருவேன்./
எதிர் பார்த்திருப்பேண்ணே.
/டேய் ஒரு நல்ல கவிதையில கும்மி அடிச்சிட்டாயடா அப்படின்னு அடிச்சிட மாட்டீங்களே?//
ம்ம். பார்க்காம போய்ட்டு இடுகைல சந்திக்க நினைத்தும் நேரமின்மையால் முடியாமல் போய்விட்டதுன்னு போட்டா திட்டி இடுகை போடுவேன்.=))
அய்யா நாம ரெண்டு பேருமே ஒரே மாதிரி ஒரே சமயத்துல மனம் கனக்குதுன்னு சொல்றோம் பாருங்க...
இராகவன் நைஜிரியா said
/ஆமாங்க - உண்மையைச் சொல்லணும் என்றால், பின்னூட்டம் போட முடியாத அளவுக்கு மனசு கனத்துப் போச்சுங்க./
ம்ம்
இராகவன் நைஜிரியா said..
/சைட் டிஷ் மாதிரி நானு... ஸ்பெஷல் சரக்கு நீங்க ...
சைட் டிஷ் இல்லாம சரக்கு பலருக்கு ஓகே... சரக்கு இல்லாம சைட் டிஷ் உபயோகப் படாதே..
இது எப்படி இருக்கு?/
சரக்கு அடிக்கிறவனுக்கு மட்டும்தாண்ணே. சைட் டிஷ் சாப்பாட்டுக்கு. நம்ம கிட்டயேவா
பிரபாகர் said...
/நான் இப்போ ப்ரியா எழுதிகிட்டிருக்கிற தொடர் இருக்கையை படிக்கிறப்ப எல்லாம் அழுதுட்டுத்தான் இருக்கேன். மனம் கனத்து போகுமளவுக்கு எழுதறாங்க.../
ஆமாங்க. அது எப்புடி எழுதுவாளோ. சோகம்னா சோகம், குஷின்ன குஷின்னு எழுதலாம். இவள் மாதிரி இந்த சோகம் கூட சுகர் தடவி சொல்றது நம்மால முடியாது.
ஏதோ சரக்குங்கறீங்க, சைட் டிஷு ங்கறீங்க... நமக்கு சம்மந்தமில்லாதத விஷயமா இருக்கு...
பிரபாகர் said...
/ஏதோ சரக்குங்கறீங்க, சைட் டிஷு ங்கறீங்க... நமக்கு சம்மந்தமில்லாதத விஷயமா இருக்கு...//
இது உங்களுக்கே ஓவரா தெரியல ப்ரபாகர். =)). ராகவன் சாரும் நம்மள மாதிரி கேஸ்தான்னு நினைக்கிறேன். புக்குல படிச்சது பேப்பர்ல படிச்சத வெச்சி அள்ளி விடுறதுதான்.
//
வானம்பாடிகள் said...
பிரபாகர் said...
/ஏதோ சரக்குங்கறீங்க, சைட் டிஷு ங்கறீங்க... நமக்கு சம்மந்தமில்லாதத விஷயமா இருக்கு...//
இது உங்களுக்கே ஓவரா தெரியல ப்ரபாகர். =)). ராகவன் சாரும் நம்மள மாதிரி கேஸ்தான்னு நினைக்கிறேன். புக்குல படிச்சது பேப்பர்ல படிச்சத வெச்சி அள்ளி விடுறதுதான்.
//
அந்த அளவுக்கு நல்லாவே தெரியும்யா, மாடியில இருந்து குதிச்சா காலு உடையும்ங்றத படிச்சு மட்டும் தெரிஞ்சிக்கிறமாதிரி...
\\ பிரபாகர் said...
அந்த அளவுக்கு நல்லாவே தெரியும்யா, மாடியில இருந்து குதிச்சா காலு உடையும்ங்றத படிச்சு மட்டும் தெரிஞ்சிக்கிறமாதிரி...\\
நெருப்பில கை வச்சா சுடும் அப்படின்னு தெரியுங்க.
பிரபாகர் said...
/அந்த அளவுக்கு நல்லாவே தெரியும்யா, மாடியில இருந்து குதிச்சா காலு உடையும்ங்றத படிச்சு மட்டும் தெரிஞ்சிக்கிறமாதிரி.../
அது அது.
இராகவன் நைஜிரியா sai
/நெருப்பில கை வச்சா சுடும் அப்படின்னு தெரியுங்க./
=))
விட்டு குடுத்தாலும் ரெண்டு பேரும் போட மாட்டய்ங்கிறாங்க. மீ த 50
// வானம்பாடிகள் said...
விட்டு குடுத்தாலும் ரெண்டு பேரும் போட மாட்டய்ங்கிறாங்க. மீ த 50 //
நாங்க உங்களுக்கு விட்டுக் கொடுத்துட்டோமில்ல..
அய்யா, கொஞ்சம் அசந்துட்டேன்.. ஐம்பதுக்குத்தான் காத்திருந்தேன். பையன் ஒரு வேலையா கூப்பிட... ஆஹா, மிஸ் பண்ணிட்டேன்.
// பிரபாகர் said...
அய்யா, கொஞ்சம் அசந்துட்டேன்.. ஐம்பதுக்குத்தான் காத்திருந்தேன். பையன் ஒரு வேலையா கூப்பிட... ஆஹா, மிஸ் பண்ணிட்டேன். //
அண்ணே... என்ன அண்ணே இப்படி பண்ணிட்டீங்க... நான் எப்படி சமாளிச்சேன் பாருங்க.. அது மாதிரி சமாளிக்க வேண்டாமா..?
// பிரபாகர் said...
அய்யா, கொஞ்சம் அசந்துட்டேன்.. ஐம்பதுக்குத்தான் காத்திருந்தேன். பையன் ஒரு வேலையா கூப்பிட... ஆஹா, மிஸ் பண்ணிட்டேன். //
இதுக்கு ஏங்க காத்திருக்கணும்... தானே ஐம்பது வரப்போகுது.. நான் வயசைச் சொன்னேங்க...
இராகவன் நைஜிரியா said.
/நாங்க உங்களுக்கு விட்டுக் கொடுத்துட்டோமில்ல../
ஆஹா. இது நல்லா இருக்கே. =))
பிரபாகர் said...
/அய்யா, கொஞ்சம் அசந்துட்டேன்.. ஐம்பதுக்குத்தான் காத்திருந்தேன். பையன் ஒரு வேலையா கூப்பிட... ஆஹா, மிஸ் பண்ணிட்டேன்./
=))
இராகவன் நைஜிரியா said...
/அண்ணே... என்ன அண்ணே இப்படி பண்ணிட்டீங்க... நான் எப்படி சமாளிச்சேன் பாருங்க.. அது மாதிரி சமாளிக்க வேண்டாமா..?/
/இதுக்கு ஏங்க காத்திருக்கணும்... தானே ஐம்பது வரப்போகுது.. நான் வயசைச் சொன்னேங்க.../
சொன்னா மாதிரி செம ஃபார்ம் போல.
//என் உயிர் தேடும்
பிரயத்தினத்தில் மூச்சடைக்கிறது//
ஆஹா... என்ன மாதிரியா வரிங்க இது....
இந்த வரியிலேயே சுழன்று கொண்டிருக்கிறேன்...
இளமைவிகடனுக்கு பொருத்தமான, தகுதியான கவிதையே
அருமைங்க
கதிர் - ஈரோடு said...
/ஆஹா... என்ன மாதிரியா வரிங்க இது....
இந்த வரியிலேயே சுழன்று கொண்டிருக்கிறேன்...
இளமைவிகடனுக்கு பொருத்தமான, தகுதியான கவிதையே
அருமைங்க/
நன்றி கதிர்:)
கவிதை நல்லாயிருக்கு பாஸ்..
//முட்டாள் நான்//
ithu naan neenga illa...
kuttaiya kilappuniinga sari enna kidaissathu?
தீப்பெட்டி said...
/கவிதை நல்லாயிருக்கு பாஸ்../
நன்றி.
பிரியமுடன்...வசந்த் said...
/ithu naan neenga illa../
ஏன் ராசா? என்னாச்சு?
பிரியமுடன்...வசந்த் said...
/kuttaiya kilappuniinga sari enna kidaissathu?/
ஹூம். அது பட்டைய கிளப்பறது. குட்டைய குழப்புறது. இதுல வேற என்ன கிடைச்சதுன்னா என்ன சொல்ல?
//உன் முகம் காண முயன்று
முற்றாய்த் தோற்று
என் உயிர் தேடும்
பிரயத்தினத்தில் மூச்சடைக்கிறது!
//
சார் கலக்குறீங்க...
ஈ ரா said...
/சார் கலக்குறீங்க.../
ம்கும். அது கலங்கினதால கலங்கிப் போய்தான அவரு புலம்புனது. இன்னும் என்ன கலக்குறது=))
என்னாது இது? ஒரே பீலிங்ஸ்ஸா இருக்கு?
//உன் முகம் காண முயன்று
முற்றாய்த் தோற்று
என் உயிர் தேடும்
பிரயத்தினத்தில் மூச்சடைக்கிறது!//
ஆகா இப்பவே கண்ண கட்டுதே....
//உயிர் அளிப்பது இறைவனெனில்
நீயும் அதுவன்றோ?
ஏங்கி அழாமல் நீங்கள்
எப்பொழுது வந்தீர்கள்?
வரமளிப்பது இறைவனெனில்
நீயும் அது தான்
ஆரத் தழுவி
தன்னுள்ளடக்கையில்!//
நன்னாயிருக்கு போங்கோ....வார்த்தைகள இப்டிபோட்டு பின்னியிருக்கீங்களே....சூப்பர் நைனா...(என்னை மாதிரி மரமண்டைகளுக்குத்தான் புரியாதுன்னு நெனைக்கிறேன்.)
க.பாலாசி said...
/நன்னாயிருக்கு போங்கோ....வார்த்தைகள இப்டிபோட்டு பின்னியிருக்கீங்களே....சூப்பர் நைனா...(என்னை மாதிரி மரமண்டைகளுக்குத்தான் புரியாதுன்னு நெனைக்கிறேன்.)/
என்னா புரியல இதில..அவ்வ்வ்
தமிழ் நாடன் said...
/என்னாது இது? ஒரே பீலிங்ஸ்ஸா இருக்கு?/
ஹெ ஹெ .ச்ச்ச்ச்சும்மா.
சூப்பர் !
:)
இது நம்ம ஆளு said...
/சூப்பர் !
:)/
நன்றிங்க
மீன் பிடிக்கலாமா மனக்குளத்திலே?
நசரேயன் said...
/மீன் பிடிக்கலாமா மனக்குளத்திலே?/
ஓஓஒஹோ. இதத்தான் குழம்பின குட்டையில மீன் புடிக்கிறதுங்கறதா:))
எண்ணக்குளத்தில் ஏற்படும்
எண்ணற்ற குழப்பங்களை
அழகாக வெளிப்படுத்தியுள்ளீர்கள்.
வாழ்த்துக்கள் சார்...
Post a Comment