Tuesday, October 13, 2009

தீப ஒளி!

அதர்மம் தலை தூக்கும்
ஒவ்வோர் யுகத்திலும்
அதர்மமழிக்க தோன்றுவேன்
என்றவனே! என் கண்ணனே!

எங்களுக்கு வீடிருந்த போது
நீயில்லாத வீடில்லை தெரியுமா?
இப்போதோ எங்களுக்கு
வீடேயில்லை.

உன்னைக் கொண்டாடியதால் தானோ
எங்கள் வாழ்வு தினமும் தீபாவளியானது?
வேட்டுச் சத்தமும் வான வேடிக்கையும்
வழமையாகிப் போனது?

ராவணனை அழித்த உன் அண்ணன்
ஏனோ ராவணன்களோடு கூட்டமைத்தான்
அதர்மமழிப்பேன் என்றாயே
அழிந்ததென்னமோ நாங்கள்தானே!

அண்ணனுக்குப் பின் தானே நீ சொன்னாய்
அதர்மமழிப்பேன் யுகம் யுகமாகவென்று!
மீண்டும் கம்சவதம் செய்ய வருவாயா?
இல்லை நீயும் சக்கராயுதம் தருவாயா?

நீ அவதரித்தால்
அதர்மமழித்தால்
எங்களுக்கு வேண்டியது தீபாவளியல்ல
தீபமேற்ற எங்கள் வீடு! எங்கள் மண்ணில்!


__________/\__________

41 comments:

ஈரோடு கதிர் said...

கசக்கும் உண்மை

தமிழ் அமுதன் said...

//ராவணனை அழித்த உன் அண்ணன்
ஏனோ ராவணன்களோடு கூட்டமைத்தான்//வலி ;;((

பிரபாகர் said...

//எங்களுக்கு வீடிருந்த போது
நீயில்லாத வீடில்லை தெரியுமா?//

//எங்களுக்கு வேண்டியது தீபாவளியல்ல
தீபமேற்ற எங்கள் வீடு! எங்கள் மண்ணில்!//

அய்யா, படித்து முடித்து கண்களில் நீர்... இதைத்தவிர வேறேதும் செய்ய இயலாததை எண்ணி மனம் புழுங்குகிறது...

சொல்ல வார்த்தைகளில்லை....

பிரபாகர்.

கலகலப்ரியா said...

:).. கண்ணனின் வெளிநாட்டுக் கொள்கை என்னவோ..? உங்க புலம்பல் நல்லா இருக்கு சார்..

vasu balaji said...

கதிர் - ஈரோடு said...

/கசக்கும் உண்மை/

ம்ம்

vasu balaji said...

ஜீவன் said...
/வலி ;;((

ஆமாங்க.

vasu balaji said...

பிரபாகர் said...
/அய்யா, படித்து முடித்து கண்களில் நீர்... இதைத்தவிர வேறேதும் செய்ய இயலாததை எண்ணி மனம் புழுங்குகிறது...

சொல்ல வார்த்தைகளில்லை..../

என் உணர்வுகளைப் பகிர்ந்தமைக்கு நன்றி

vasu balaji said...

கலகலப்ரியா said...

/ :).. கண்ணனின் வெளிநாட்டுக் கொள்கை என்னவோ..? உங்க புலம்பல் நல்லா இருக்கு சார்../

அப்படித்தாங்க தோணுது. அப்புடி பார்த்தாலும் இவிய்ங்க பண்ண அதர்மத்தை அழிக்க வேணாமா?

க.பாலாசி said...

//ராவணனை அழித்த உன் அண்ணன்
ஏனோ ராவணன்களோடு கூட்டமைத்தான்
அதர்மமழிப்பேன் என்றாயே
அழிந்ததென்னமோ நாங்கள்தானே!//

கண்கண்ட உண்மை....


//நீ அவதரித்தால்
அதர்மமழித்தால்
எங்களுக்கு வேண்டியது தீபாவளியல்ல
தீபமேற்ற எங்கள் வீடு! எங்கள் மண்ணில்!//

மொத்த இடுகையின் நோக்கமும் கடைசி மூன்று வரிகளில் நறுக்கென்று முடிகிறது...

நல்ல இடுகை....

(பின்னூட்ட முறை மாற்றியமைக்கப்பட்டதற்கு நன்றி...எதிர்பார்த்தேன்)

vasu balaji said...

கலகலப்ரியா said...

/உங்க புலம்பல் நல்லா இருக்கு சார்../

ஆமாம். அந்தாளும் அப்படித்தான் நினைச்சு ரசிச்சிடுவாரோ. ஏதாவது செய்யமாட்டாரா? அவ்வ்வ்வ்

தமிழ் நாடன் said...

கண்ணனுக்கு கண்ணுபோய் ரொம்ப நாளாயிட்டது சாமி!

இப்போது காதும் போயுட்டதாம் !
இப்ப நாம பொலம்பரதும் கேக்காது அவருக்கு.

தீபமாம் ஒளியாம். அதெல்லாம் கொண்டாடி ரொம்ப நாளாயிட்டுது சாமி!

venkat said...

//நீ அவதரித்தால்
அதர்மமழித்தால்
எங்களுக்கு வேண்டியது தீபாவளியல்ல
தீபமேற்ற எங்கள் வீடு! எங்கள் மண்ணில்\\
nachichinu erukiu

பாசக்கார பயபுள்ள... said...

திரையுலக திரௌபதிகளின் மானம் காக்குறதுக்கே நாட்டையாளும் கலியுக கண்ணனுக்கு நேரம் பத்தலை.. இதுல இவனுகலுக்கு வீடு வேற வேணுமா.. (இன்னுமா இந்த கூட்டம் நம்மள நம்புது????)

துபாய் ராஜா said...

திரும்பி திரும்பி
அழைத்தும்
தீர்வு தராத
கண்ணன்
தீபாவளி
கொண்டாட்ட
நேரத்திலா
திரும்பி
பார்க்கப்போகிறான் ??

வெறுங்காலத்திலே
வேண்டுதல்கள்
கேட்காத கடவுள்
வெடிச்சத்தத்தில்
வினை தீர்த்திடுவாரா என்ன ??

vasu balaji said...

தமிழ் நாடன் said...

/தீபமாம் ஒளியாம். அதெல்லாம் கொண்டாடி ரொம்ப நாளாயிட்டுது சாமி!/

விடிவதற்கு ஏக்கம். அவ்வளவுதான்

vasu balaji said...

venkat said...
/nachichinu erukiu/

Thanks

vasu balaji said...

பாசக்கார பயபுள்ள... said...

/திரையுலக திரௌபதிகளின் மானம் காக்குறதுக்கே நாட்டையாளும் கலியுக கண்ணனுக்கு நேரம் பத்தலை.. இதுல இவனுகலுக்கு வீடு வேற வேணுமா.. (இன்னுமா இந்த கூட்டம் நம்மள நம்புது????)/

அட இவனுங்கள யாருங்க நம்புறா. தீபாவளிய நம்புறமே கண்ணனையும் நம்பலாம்னு நப்பாசை.

vasu balaji said...

துபாய் ராஜா said...

/ தீபாவளி
கொண்டாட்ட
நேரத்திலா
திரும்பி
பார்க்கப்போகிறான் ??

வெறுங்காலத்திலே
வேண்டுதல்கள்
கேட்காத கடவுள்
வெடிச்சத்தத்தில்
வினை தீர்த்திடுவாரா என்ன ??/

அற்புதங்கள் நிழலாம் தானே.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கசக்கும் உண்மை//

Repeat

இராகவன் நைஜிரியா said...

கவிதையைப் படித்தபின் கண்களில் கண்ணீர்.

பழமைபேசி said...

ப்ச்

vasu balaji said...

T.V.Radhakrishnan said...

//கசக்கும் உண்மை//

Repeat/

நன்றிங்க அய்யா.

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/கவிதையைப் படித்தபின் கண்களில் கண்ணீர்./

ம்ம்

vasu balaji said...

பழமைபேசி said...

/ ப்ச்/

:(

ஆரூரன் விசுவநாதன் said...

வலிமையான வரிகள்....

vasu balaji said...

ஆரூரன் விசுவநாதன் said...

வலிமையான வரிகள்....

நன்றிங்க.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

பாலாண்ணே, என்ன சொல்வதென்றே தெரியவில்லை :(
//நீ அவதரித்தால்
அதர்மமழித்தால்
எங்களுக்கு வேண்டியது தீபாவளியல்ல
தீபமேற்ற எங்கள் வீடு! எங்கள் மண்ணில்!

//

இந்த வரிகள் கண்ணிர் வரவழைப்பவை. நல்ல இடுகை.

vasu balaji said...

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

பாலாண்ணே, என்ன சொல்வதென்றே தெரியவில்லை :(
/இந்த வரிகள் கண்ணிர் வரவழைப்பவை. நல்ல இடுகை./

நன்றி செந்தில். :(

Unknown said...

இதயம் கனக்கிறது....!! வரிகளில் ... குளத்தில் இறந்த மீன்களைப்போல் கண்ணீரில் மிதக்கிறது கண்கள்...!!

vasu balaji said...

லவ்டேல் மேடி
/இதயம் கனக்கிறது....!! வரிகளில் ... குளத்தில் இறந்த மீன்களைப்போல் கண்ணீரில் மிதக்கிறது கண்கள்...!!/

உங்கள் பின்னூட்டத்தில் என் உணர்வினைப் பகிர்ந்தமைக்கு நன்றி.

ப்ரியமுடன் வசந்த் said...

டமார் சத்தம் இல்லாத தீபாவளி...

vasu balaji said...

பிரியமுடன்...வசந்த் said...

/டமார் சத்தம் இல்லாத தீபாவளி.../

ம்ம்.

அன்புடன் நான் said...

நீ அவதரித்தால்
அதர்மமழித்தால்
எங்களுக்கு வேண்டியது தீபாவளியல்ல
தீபமேற்ற எங்கள் வீடு! எங்கள் மண்ணில்!//


வலியை உண‌ர்த்தும் வ‌ரிக‌ள். ந‌ல்லாயிருக்குங்க‌

vasu balaji said...

நசரேயன் said...

தீபாவளி வாழ்த்துக்கள்

நன்றிங்க.

vasu balaji said...

சி. கருணாகரசு said...
/வலியை உண‌ர்த்தும் வ‌ரிக‌ள். ந‌ல்லாயிருக்குங்க‌/

நன்றிங்க கருணாகரசு முதல் வரவுக்கும் ஊக்கத்துக்கும்.

விஜய் said...

நெகிழ்ந்தேன்

வாழ்த்துக்கள்

விஜய்

vasu balaji said...

கவிதை(கள்) said...

/நெகிழ்ந்தேன்

வாழ்த்துக்கள்

விஜய்/

நன்றிங்க விஜய். வாழ்த்துக்கும் பின்னூட்டத்துக்கும்

Suresh Kumar said...

என்று தான் விடியல் வருமோ

vasu balaji said...

Suresh Kumar said...

என்று தான் விடியல் வருமோ

ஆமாங்க.

Radhakrishnan said...

ஏக்கங்கள் சுமந்து வலிகள் தாங்கி வந்திருக்கும் கவிதை

vasu balaji said...

Rads said...

/ஏக்கங்கள் சுமந்து வலிகள் தாங்கி வந்திருக்கும் கவிதை/

நன்றிங்க அய்யா.