ஒரு வயதுக் குழந்தையைச் சுமந்து
ஒன்பது வயதுக் குழந்தை வீதியில்..
ஒரு ரூபாயில் ஒளிமயமான எதிர்காலம்!
அம்மன் திருவிழா
அர்த்தராத்திரி நடனம்
ஆடைத் தள்ளுபடி!
பசியில் மயங்கிக் கிடந்தவளை
பசியோடு புழங்கிப் போனதொரு மிருகம்
வயிறு நிறைந்தது!
எத்தனை கோடி செலவானாலும்
எதிர்வரும் தேர்தலில் எங்களாட்சி
மக்களுக்காக.
கருவறையில் காமுகனாம்
கடவுளைக் காப்பாற்ற
காவல்துறையை நம்பலாமா?
___________________________
29 comments:
கவிதை நெகிழ வைக்கிறது தலைவா!
நறுக்கு கவி, புரட்சிக் கவியாகவும்!
பழமைபேசி
/நறுக்கு கவி, புரட்சிக் கவியாகவும்!/
இந்தப் பாராட்டு பயமுறுத்துது. காப்பாத்திக்கணும். நன்றி பழமை.
//கருவறையில் காமுகனாம்
கடவுளைக் காப்பாற்ற
காவல்துறையை நம்பலாமா? //
எங்குமே பாமர மக்களுக்கு பின்னிடம் தான்...
நல்ல கவிதை...
நம்பலாமா?
நம்பலாமா?
நம்பலாமா?
மூன்றாவது கவிதையின் சிலேடை அற்புதம்.
கனககோபி
/நல்ல கவிதை.../
நன்றிங்க.
அப்பாவி முரு
/நம்பலாமா?
நம்பலாமா?
நம்பலாமா?/
நம்பலாமா?
யோசனை!
நம்பலாமா?
சந்தேகம்!
நம்பலாமா?
ஏளனம்!
அட கவிதை! நன்றி முரு:))
நாடோடி இலக்கியன்
/மூன்றாவது கவிதையின் சிலேடை அற்புதம்./
நன்றிங்க:)
//கருவறையில் காமுகனாம்
கடவுளைக் காப்பாற்ற
காவல்துறையை நம்பலாமா? //
சரியான கேள்வி.... நம்ப முடியாதுதான்... வேற வழி...??
இராகவன் நைஜிரியா
/சரியான கேள்வி.... நம்ப முடியாதுதான்... வேற வழி...??/
சார்.அவ்வ்வ்வ்
கவிதையும் பாடுவீங்களா?அப்ப இனிமேல் இங்கேயும் டேராப் போட்டுட வேண்டியதுதான்.
எளிமையான, அருமையான கவிதைகள் .
//பசியில் மயங்கிக் கிடந்தவளை
பசியோடு புழங்கிப் போனதொரு மிருகம்
வயிறு நிறைந்தது!//
ஆழம் பொதிந்த வரிகள்...அர்த்தங்களுடன்.
//எத்தனை கோடி செலவானாலும்
எதிர்வரும் தேர்தலில் எங்களாட்சி
மக்களுக்காக.//
மக்களை மடையனாக்குவதற்காக...
நல்ல கவிதை....
ராஜ நடராஜன்
/கவிதையும் பாடுவீங்களா?அப்ப இனிமேல் இங்கேயும் டேராப் போட்டுட வேண்டியதுதான்./
அவ்வ்வ். சார். அட்டவணைலயே பத்து இருக்கு சார். நன்றி.
ஸ்ரீ
/எளிமையான, அருமையான கவிதைகள் ./
நன்றி ஸ்ரீ!
க.பாலாஜி
/ஆழம் பொதிந்த வரிகள்...அர்த்தங்களுடன்.
நல்ல கவிதை..../
நன்றி பாலாஜி.
Super கவிதை! அருமையான,எளிமையான வரிகள்!!!!
நெல்லை எஸ்.ஏ.சரவணக்குமார்
/Super கவிதை! அருமையான,எளிமையான வரிகள்!!!!/
நன்றிங்க சரவணக்குமார்.
வலை தளம் மிக அருமை.அதற்கு நேர்த்தியாய் கவிதையும்.
ஜெரி ஈசானந்தா.
/வலை தளம் மிக அருமை.அதற்கு நேர்த்தியாய் கவிதையும்./
நன்றிங்க. எங்க ரொம்ப நாளா பார்க்க முடியல.
அருமையான கவிதைங்க பாலாண்ணே.
ச.செந்தில்வேலன்(09021262991581433028)
/அருமையான கவிதைங்க பாலாண்ணே./
நன்றிங்க செந்தில்.
//பசியில் மயங்கிக் கிடந்தவளை
பசியோடு புழங்கிப் போனதொரு மிருகம்
வயிறு நிறைந்தது!//
இது! இது!! இது கவிதை
எல்லாமே அருமை
காமுகன் மேட்டர் நானும் படித்தேன்
விகடன் விலாவரியாக வெளியிட்டுள்ளது
என்னதான் நடந்தது அதன்பின்னர்
கவிதை வரிகள் “நச்” அண்ணா!
//ஒரு வயதுக் குழந்தையைச் சுமந்து
ஒன்பது வயதுக் குழந்தை வீதியில்..
ஒரு ரூபாயில் ஒளிமயமான எதிர்காலம்!//
ராஜாவா? மட்டியா?
:(((
கதிர் - ஈரோடு Says:
/இது! இது!! இது கவிதை
எல்லாமே அருமை/
நன்றி கதிர்
/என்னதான் நடந்தது அதன்பின்னர்/
இன்னும் தேடுறாங்க போல.
தமிழ் நாடன்
/கவிதை வரிகள் “நச்” அண்ணா!/
நன்றிங்க தமிழ் நாடன்.
பிரியமுடன்...வசந்த்
/ராஜாவா? மட்டியா?
:(((/
:((
Post a Comment