Thursday, October 8, 2009

பதிவர் கூடலில் வடிவேலு!-2

(மாப்பூ என்ற வடிவேலுவின் அலறலில் மண்டபத்தின் மறுகோடியில் அமர்ந்திருந்த பழமைபேசி சுற்றுமுற்றும் பார்க்கிறார். எங்கே என்றலறியவாறு கதிரும், ஆரூரனும் வெளியே பாயப்போய் என்னிடம் மாட்டிக் கொள்கிறார்கள்)

நான்: வணக்கம் கதிர், ஆரூரன். எங்க போறீங்க‌

கதிர்: வணக்கம் அண்ணே. இஃகி. பேப்பர் வாங்க போறம்ணா. பேசுறத குறிப்பெடுக்க.

(அதற்குள் யாரையும் காணாமல் பழமை எழுந்து நின்று பார்க்கிறார்)

வடிவேலு: அட நம்ம சத்தியராசு. அண்ணே சத்தியராசண்ணே!

கதிர்: அண்ணா அவரு சத்தியராசு இல்லை. விடுங்க‌ண்ணா.

வ‌டிவேலு: ஏப்பா. என‌க்கு தெரியாது? ஆமா நீங்க‌ ஏண்ணே அல‌ர்றீங்க‌.

நான்:இதோ! பார்த்திபன்!

வ‌டிவேலு:ஏய். எங்க‌ எங்க‌. இங்க‌ எங்க‌ வ‌ந்தாரு அவ‌ரு. காட்டிக்குடுத்துராதீய்ங்க‌ப்பா.

நான்: இப்போ நீங்க‌ ஏன் அல‌றுனீங்க‌. உங்க‌ளுக்கு பார்த்திப‌ன் மாதிரி எங்க‌ளுக்கு அவ‌ரு. அவரு  தமிழ் வாத்தியாரு.

வ‌டிவேலு: ஆய்ங். அப்புடியா? என‌க்கு அது தெரியாம‌ போச்சே! கூப்புட்டுட‌ன‌ப்பா. இந்தா வ‌ர்ராரு பாரு.

(அத‌ற்குள் க‌திரும் ஆரூர‌னும் எஸ்கேப்)

ப‌ழ‌மை: வ‌ண‌க்க‌ம் பாலாண்ணே. அட‌ வ‌டிவேல‌ண்ணே! வ‌ண‌க்க‌ம‌ண்ணே.

வ‌டிவேலு: (லுக்கு:இப்புடி பாச‌க்கார‌ புள்ளைய‌ பார்த்தா அவன மாதிரின்னு சொன்னீங்க‌)

நான்:(பதில் லுக்கு: நீ இருடி! ப‌தில்  வ‌ண‌க்க‌ம் கோட இன்னும் சொல்ல‌லைல்ல‌. அப்புற‌ம் தெரியும் கைப்புள்ளைக்கு க‌ட்ட‌ம் ச‌ரியில்லை இல்ல‌. க‌ட்ட‌மே இல்லைன்னு)

வ‌டிவேலு: வாங்க‌ த‌ம்பி. ஓங்குதாங்கா இருந்தீங்க‌ளா. ந‌ம்ம‌ ச‌த்திய‌ராசுன்னு நினைச்சிட்டேன். த‌ம்பி எந்த‌ ஊரு? என்னா பேரு?

நான்:(இஃகி. முத‌ல் பால்ல‌யே க்ளீன் போல்ட். இந்தா வ‌ருதுடி! வாங்கிக்க‌)

ப‌ழ‌மை: ச‌த்திய‌ராசு அண்ண‌ன் ஊரு ப‌க்க‌ம்தாண்ண‌. பேரு ப‌ழ‌மைபேசி. எல்லாரும் ப‌ழ‌மைம்பாங்க‌.

வ‌டிவேலு: ப‌ள‌மையா! புதுஸ்ஸா இருக்கே!

ப‌ழ‌மை: ள‌ இல்ல‌ண்ணே ழ‌.. ப‌ ழ‌ மை .

வ‌டிவேலு: நானும் அத‌தான‌ப்பா சொல்லிக்கிருக்கேன்.

நான்:(ஆர‌ம்ப‌மே ச‌ரியில்லையே! தேவுடா!) அண்ணே. இவ‌ரு அமெரிக்கால‌ இருக்காருண்ணே. சார்ல‌ட்டுல‌ இருந்து வ‌ந்திருக்காருண்ணே.

வ‌டிவேலு: சார‌ட்டா. ஆமாப்பா. அருமையான‌ வ‌ண்டி. புலிகேசில‌ ந‌டிக்கிற‌ப்ப கொள்ள‌வாட்டி அதுல‌ போயிருக்கேன். என்னா? க‌ளுத‌ ஏ.சி. வைக்க‌ முடியாது.

நான்:அய்யோ அண்ணே. அது இல்லைண்ணே. இது சார்ல‌ட்டுன்னு ஒரு ஊருண்ணே.

(அத‌ற்குள் எஸ்கேப் ஆக‌ பார்த்த‌ க‌திரையும், ஆரூர‌னையும் இராக‌வ‌ன் ஆளுக்கொரு காகித‌ம் கையில் கொடுத்து த‌ள்ளிக் கொண்டு வ‌ருகிறார்.)

க‌திர்:இஃகி. வேலையா வ‌ந்த‌னுங் மாப்பு. வேலை முடிஞ்சிரிச்சிங். ராத்திரி ஏற்காட்ல‌ ரிட்ட‌னுங். ச‌ரி டைம் இருக்கேன்னு வ‌ந்த‌னுங்.

ப‌ழ‌மை:அப்புடியா(அதெல்லாம் ஊட்ல‌ வெச்சி பேசிக்க‌லாம் மாப்பு.)

வ‌டிவேலு:நீங்க‌ சொல்லுங்க‌ த‌ம்பி. அம்புட்டு தூர‌த்தில‌ இருந்தா கூட‌லுக்கு வ‌ந்துருக்கீங்க‌. அங்க‌ என்ன‌ ப‌ண்றீங்க‌?

ப‌ழ‌மை:நான் க‌ணினித்துறையில் இருக்கிறேங்க‌. த‌மிழார்வ‌ம் அதிக‌ம். கூடிய‌ வ‌ரைக்கும் ந‌ல்ல‌ த‌மிழில் எல்லாரும் பேச‌ணும் எழுத‌ணும்னு நினைக்கிறேன்.

வ‌டிவேலு: அட‌ அட‌. புல்ல‌ரிக்குது த‌ம்பி. அமெரிக்கால‌ போயும் த‌மிளுக்கு இவ்வ‌ள‌வு அக்க‌ரை எடுக்க‌ ஆளிருக்கேன்னு

ப‌ழ‌மை: த‌மிளு இல்லைங்க‌ த‌மிழ்

(க‌திர் ஒரு ஓர‌மாக‌ வாய் பார்ப்ப‌தும் தீடீரென்று காகித‌த்தில் ஏதோ எழுதுவ‌துமாக‌ இருக்கிறார்)

வ‌டிவேலு: நானும் அத‌த்தான‌ சொன்னேன். அப்ப‌வும் அப்ப‌டித்தான் ஏதோ சொன்னிங்க‌ த‌ம்பி.

ப‌ழ‌மை: அண்ணே 'ள‌' வேற‌ 'ழ‌' வேற‌ண்ணே.

வ‌டிவேலு: ஆஹா! கெள‌ம்பிட்டாய்ங்க‌ய்யா கெள‌ம்பிட்டாய்ங்க‌ய்யா. த‌ம்பீ. நானும் அத‌த்தான‌ சொல்லிக்கிருக்கேன். பாருங்க‌: வாள‌ப்ப‌ள‌ம், கிளிச்சிட்டான், ப‌ள‌ங்க‌ஞ்சி

ப‌ழ‌மை: எத்த‌னை த‌ட‌வை சொல்றேன் ழ‌ வேற‌ ள‌ வேற‌. ப‌ரிமேல‌ழ‌க‌ர் என்ன‌ சொல்றாருன்னா..

வ‌டிவேலு: அய்யோ அந்தாளும் வ‌ந்துட்டானா?

ப‌ழ‌மை: யார்ணே

வ‌டிவேலு: நீங்க‌தான‌ சொன்னீங்க‌ த‌ம்பி. ஆண்டாள‌ழ‌க‌ர்னு. அதான் விச‌ய‌காந்து.

ப‌ழ‌மை: அட‌ நீங்க‌ வேற‌ங். இவ‌ரு ப‌ரிமேல‌ழ‌க‌ர்

வ‌டிவேலு: அவ‌ரா? ந‌ல்லா தெரியுமே த‌ம்பி. வைகையாத்துல‌ சும்மா ஜ‌க‌ ஜ‌க‌ன்னு வ‌ந்து இற‌ங்குவாரு பாருங்க குருதையில‌

ப‌ழ‌மை: அது குருதையில்லைங்க‌ குதிரை. ப‌ரின்னா குதிரைன்னு ஒரு அர்த்த‌ம் உண்டு.அது மேல‌ உக்காந்து வ‌ர்றவ‌ருக்கு பேரு ப‌ரிமேல‌ழ‌க‌ர். ப‌ரிக்கு செல‌வு, வேக‌ம், உய‌ர்ச்சி, குதிரை, க‌ருப்பு, பெருமை, மாய‌ம், ப‌ருத்திச்செடி,பாதுகாக்கை, சுமை, துலை,ஊற்றுண‌ர்வு, அன்பு, வ‌ருத்த‌ம்னு இவ்வ‌ள‌வு அர்த்த‌மிருக்குங்க‌.

வ‌டிவேலு: (முறைத்த‌ ப‌டி க‌திரைப்பார்க்க‌ க‌திர் ப‌ம்முகிறார்). இப்பதான் புரியுது ஏன் அந்த‌ த‌ம்பி டெர்ர‌ராச்சுன்னு. ச‌ரி இப்ப‌ என்ன‌ ப‌ண்ண‌ணும்கிறீங்க‌

ப‌ழ‌மை: 'ழ‌' வ‌ 'ழ‌' னு சொல்ல‌ப் ப‌ழ‌குங்க‌ண்ணே. நெம்ப‌ சுலுவு

வ‌டிவேலு: சோடி போட்டுக்கிருவ‌மா சோடி! நீங்க‌ சொன்னா மாதிரி ழ‌ ஒரு சிடில‌ போடுங்க‌. நாஞ்சொன்னா மாதிரி ஒரு சிடில‌ போட்டு தெப்ப‌ குள‌த்துல‌...

ப‌ழ‌மை: ச‌ங்க‌க் குள‌ம்ணே.

வ‌டிவேலு:  அட ஒரு வார்த்த‌ பேச‌ விட‌மாட்ட‌ங்குறார‌ய்யா. இது ச‌ரி வ‌ராது. த‌ம்பி ( அய். என்னிய‌ போய் த‌ம்பின்னுட்டாரு)

நான்: என்ன‌ண்ணே!

வ‌டிவேலு: மேப்பு இருந்தா எடு!

நான்:இந்தா க‌ம்ப்யூட்ட‌ர்ல‌ இருக்குண்ணே

வ‌டிவேலு: ப‌ள‌ம‌ த‌ம்பி. இங்க‌ பார்த்து சொல்லுங்க‌. உங்கூரு எங்க‌?

ப‌ழ‌மை: இங்க‌ண்ணே.

வ‌டிவேலு: அது! ப‌க்க‌த்துல‌ இருக்கிற‌து என்னா? பால‌க்காடு. அதாவ‌து சேர‌நாடு. அவிய்ங்க‌ தான் ழ‌ வ‌ நீங்க‌ சொல்றா மாதிரி சொல்லுவாய்ங்க‌. நாம‌ பாண்டிய‌நாடு. ச‌ங்க‌ம் வெச்சு த‌மிழ் வ‌ள‌ர்த்த‌ நாடு. எத்த‌ன‌ புல‌வ‌ய்ங்க‌? அதுல‌யும் ந‌க்கீர‌ரு டெர்ர‌ர் இருந்த‌ நாடு. மொத்த‌ பாண்டிய‌நாட்டு ம‌க்க‌ளும்  ‘ழ‌’ வ‌ நாஞ்சொல்றா மாதிரிதான் சொல்லுவாய்ங்க. இத்தன பேத்தையும் ஒருத்தருமா திருத்தி இருக்க மாட்டாங்க. இதில‌ இருந்து என்ன‌ தெரியுது? நாம‌ சொல்ற‌துதான் ச‌ரி. இது யோசிக்காம பச்சப்புள்ளைங்கள பாடா படுத்திருக்கிறீய. (கதிர் வேக வேகமாக கிறுக்குகிறார்)

ப‌ழ‌மை:(இது என்னா புதுக் க‌தையா இருக்கு. நியாய‌மாவும் இருக்கு போல‌யே. கொஞ்ச‌ நாளா வேலை வேலைன்னு ச‌ரியா தூங்க‌ற‌தில்லை. இன்னைக்கு எப்ப‌டியாவ‌து க‌ன‌வுல‌ அப்ப‌ச்சிய‌ கேக்க‌ணுமே. இப்போதைக்கு எஸ்ஸாகிற‌ வ‌ழியைப் பார்க்க‌லாம்). எங்கூரெல்லாம் காட்டி ஏங்க‌ வெச்சிட்டீங்க‌ண்ணே. சின்ன‌ப் புள்ளைல‌ இப்புடித்தான் குழ‌ப்ப‌த்துல‌ த‌டுக்கி இப்புடி பாடிக்கிட்டே போனேன்!

சிந்தாம சிதறாமப் பொறித்தேன் பூவே,
சித்தாத்துத் தண்ணியில போறயே பூவே,
வாடாம வதங்காம வெச்சிருந்தேன் பூவே,
வறட்டாத்து தண்ணியில போறயே பூவே!



(எஸ்கேப்பாயிட்டாரு)

வ‌டிவேலு: ந‌ம்ம‌ கிட்ட‌யேவாஆஆஆ.

(க‌திரும் ஆரூர‌னும் ஹை ஃபைவ் அடிக்கிறார்க‌ள். க‌திரின் கையிலிருந்த‌ காகித‌த்தில் மாட்னாரு மாப்பு என்று த‌லைப்புப் போட்டு இஃகி இஃகி என்று பக்கம் முழுதும் கிறுக்கியிருந்தார். எழுத்துல‌ சிரிக்கிறாராமா!)

(பொறுப்பி: இஃகி இஃகி. இன்னைக்கு உரிமையா மாப்புங்கள கலாய்ச்சிட்டேன். தப்பாருந்தா முன்னாடியே சாரி அய்யோ இல்லல்ல மன்னாப்பு )

34 comments:

சூர்யா ௧ண்ணன் said...

சூப்பர் தலைவா!

ஈரோடு கதிர் said...

எங்கூட்டு அம்மினி அன்னைக்கே சொல்லுச்சுங்க.... இந்த பாலா அண்ணனோட சேராதீங்கோ...

உங்குளுக்கும், எங்க அண்ணனுக்கும்(மாப்பு) எதனாச்சும் தண்டத்த கொண்டு வந்துறுவாருனு...

நாந்தான் கேக்காம... இந்த கடல பாக்கலாம், சினிமாக்காரவுள பாக்லாமுன்னு மெட்ராசுக்குப் போனா...அந்த மண்டவுத்ல ஒக்காருணாங்க...

கடேசியா பார்த்தா... இத...காதுக்குமேல கைய மடக்கி வெச்சிகிட்டு, என்னுமோ பெரிய ஆளு மாதர இருக்கற பாலா அண்ணே... திடீர்னு
இந்த வடிவேல கூட்டியாந்துட்டாரு...

அட...னு பாத்தா.... நம்மு மணிய மாப்ள வேற தொப்பி கிப்பி போட்டுக்கிட்டு... என்னுமோ 'ழ' ங்கறாரு.. 'ள'ங்கறாரு...

அடே சாமி.... முடியலியப்போ...

இந்த ராகவன் சாரு வேற காயிதத்த கொடுத்து எழுதுங்கறாரு...

ம்ம்ம்ம்ம் என்னத்த எழுதறது போங்க..

நம்மள மாறி பட்டிக்காட்ல இருந்து போற பயவெல்லாம்... வாயத் தெறந்து பாக்க வேண்டியதுதான்..

மணிய மாப்ள பரவால்லே.... சீமைல இருக்கறதால... சும்மா வடிவேலுகிட்ட வெளாசறாரு..

நம்மு குறுந்தாடி ஆரூரு அண்ணங்கூட பட்டாசு களப்பறாரு...

என்னமோ... போங்கப்பு

vasu balaji said...

சூர்யா ௧ண்ணன்
/சூப்பர் தலைவா!/

நன்றி சூர்யா.

vasu balaji said...

கதிர் - ஈரோடு

/எங்கூட்டு அம்மினி அன்னைக்கே சொல்லுச்சுங்க.... இந்த பாலா அண்ணனோட சேராதீங்கோ...

உங்குளுக்கும், எங்க அண்ணனுக்கும்(மாப்பு) எதனாச்சும் தண்டத்த கொண்டு வந்துறுவாருனு.../

ரெண்டு மாப்புவும் வூட்டுக்கு சொல்லாம வந்துட்டு நம்ம தலைய உருட்டப் பார்க்குறாங்க.

/நம்மள மாறி பட்டிக்காட்ல இருந்து போற பயவெல்லாம்... வாயத் தெறந்து பாக்க வேண்டியதுதான்../

வாயத் தொறந்து பார்க்கறதாமா. வாய் பார்க்குறதுன்னா வேடிக்கை பார்க்கறது.
/என்னமோ... போங்கப்பு/

அவ்வளவு அவ்வளவு அவ்வளவு சலிப்பாவா இருக்கு.

ஆரூரன் விசுவநாதன் said...

அடடா.......நெசமாலுமே பழமை வந்தா மாதர இருக்குதுங்ணா......

ஆனாலும் பாருங்க தெங்க போனாலும் இந்த நைஜீரியாக் காரர்கிட்ட மாட்டாம இருக்க முடியாதாட்டிருக்கு.

இம்ச தாங்க முடியாம ஓடினா, திரும்ப புடிச்சிகிட்டு வந்து.......இம்சைடா சாமி......

ஏண்ணே.....ஏன் இந்த கொலவெறி.......


வாழ்த்துக்கள்


ஆமா.....என்ன வச்சு காமெடி கீமெடி பண்ணலையே...... இருங்க எதுக்கும் இன்னொருவாட்டி படிச்சிட்டு வந்து வச்சுக்கறன்.

அன்புடன்(இனிமே மறக்கமாட்டம்ல...)
ஆரூரன்.

ஈரோடு கதிர் said...

//அவ்வளவு அவ்வளவு அவ்வளவு சலிப்பாவா இருக்கு.//

ஆமாண்ணே... சிரிச்சி சிரிச்சி... சலிச்சே போயிடுச்சு போங்க

vasu balaji said...

ஆரூரன் விசுவநாதன்
/அடடா.......நெசமாலுமே பழமை வந்தா மாதர இருக்குதுங்ணா...... /

நெசமாவா

/ஆனாலும் பாருங்க தெங்க போனாலும் இந்த நைஜீரியாக் காரர்கிட்ட மாட்டாம இருக்க முடியாதாட்டிருக்கு. /

பாசவலையில்ல விரிச்சிருக்காரு. சிக்காம தப்ப முடியுமா?

/வாழ்த்துக்கள்/

=)). இதுக்கே இருக்கு மாப்புகிட்ட ஆப்பு. எத்தன பேத்துக்கு எத்தன வாட்டி வாழ்த்துக்கள் இல்ல வாழ்த்துகள்னு சொல்லியிருக்காரு.

/ஆமா.....என்ன வச்சு காமெடி கீமெடி பண்ணலையே...... இருங்க எதுக்கும் இன்னொருவாட்டி படிச்சிட்டு வந்து வச்சுக்கறன்./

அதெப்புடி? இன்னைக்குதான் பண்ணல.

vasu balaji said...

கதிர் - ஈரோடு
/ஆமாண்ணே... சிரிச்சி சிரிச்சி... சலிச்சே போயிடுச்சு போங்க/

அது சரி. =))

க.பாலாசி said...

//வ‌டிவேலு: அட‌ அட‌. புல்ல‌ரிக்குது த‌ம்பி. அமெரிக்கால‌ போயும் த‌மிளுக்கு இவ்வ‌ள‌வு அக்க‌ரை எடுக்க‌ ஆளிருக்கேன்னு//

ஆமாங்னா அதானுங்னா எங்களாலையும் முடியல....

ஆமா இதெல்லாம் எப்ப நடந்துது. இந்த கதிரும், ஆரூரனும் இப்படித்தான், என்னைமாதிரி ஒரு பிராபிள ச்ச்சி...பிரபள பதிவர விட்டுட்டு போறோமேன்னு கொஞ்சம் கூட யோசிக்க மாட்றாங்க....அவ்வ்வ்வ்வ்..........

எவ்வளவுதான் சிரிக்கிறது....முடியல.....

பிரபாகர் said...

அய்யா... வடிவேலுவை செமையா கூர்ந்து கவனிச்சிருப்பீங்கபோல.... ரொம்ப அருமையா எழுதியிருக்கீங்க... கதிர், ஆரூரன், பழமைபேசி ன்னு ஒவ்வொருத்தரையும் கலாய்ச்சிட்டீங்க... உங்ககிட்ட டியூஷன் வரலாம்னு இருக்கேன். யார் என்ன சொன்னாலும் நான் உங்க கட்சிதான்.

பிரபாகர்.

பிரபாகர் said...

அய்யா இன்னிக்கி நான் 8/8

வெண்ணிற இரவுகள்....! said...

அசத்துறிங்க

அது சரி(18185106603874041862) said...

//
வ‌டிவேலு: சோடி போட்டுக்கிருவ‌மா சோடி! நீங்க‌ சொன்னா மாதிரி ழ‌ ஒரு சிடில‌ போடுங்க‌. நாஞ்சொன்னா மாதிரி ஒரு சிடில‌ போட்டு தெப்ப‌ குள‌த்துல‌...
//

ஆஹா...பளமைய (ஆமா, இனிமே ரொம்ப கஷ்டப்பட்டு பழமைன்னு கூப்பிடறதில்ல...இது வரை கூப்டதுக்கே நாக்கு சுளுக்கி டென்டிஸ்ட்டிக்கு எம்புட்டோ செலவாயி போச்சி...) கலாய்க்க இப்படி ஒரு கண்டுபிடிப்பா?? ரொம்ப டேங்க்சுண்ணே... :0))

எங்க ஊர்ல எல்லாம் பளம, பளசுன்னு பேசி தான் பளக்கம்...

பழமைபேசி said...

ஆகா, வர வர பாலாண்ணே திரைக்கதைல பரிணமிச்சுத் தள்ளுறாரே?

நீங்க கலக்குங்க அண்ணே!

vasu balaji said...

க.பாலாஜி
/ஆமா இதெல்லாம் எப்ப நடந்துது. இந்த கதிரும், ஆரூரனும் இப்படித்தான், என்னைமாதிரி ஒரு பிராபிள ச்ச்சி...பிரபள பதிவர விட்டுட்டு போறோமேன்னு கொஞ்சம் கூட யோசிக்க மாட்றாங்க....அவ்வ்வ்வ்வ்........../

பாலாஜி. தப்பாதும்மா. யாரையும் விடுறதா இல்ல. நேத்து அப்படி பின்னூட்டம் போட்டு இன்னைக்கு எஸ்ஸாக முடியாது சாமி.
/எவ்வளவுதான் சிரிக்கிறது....முடியல...../

கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு சிரிக்கலாம்.

vasu balaji said...

பிரபாகர்
/அய்யா... வடிவேலுவை செமையா கூர்ந்து கவனிச்சிருப்பீங்கபோல.... ரொம்ப அருமையா எழுதியிருக்கீங்க... கதிர், ஆரூரன், பழமைபேசி ன்னு ஒவ்வொருத்தரையும் கலாய்ச்சிட்டீங்க... உங்ககிட்ட டியூஷன் வரலாம்னு இருக்கேன். யார் என்ன சொன்னாலும் நான் உங்க கட்சிதான்./

ஹி ஹி. சாப்பிடும்போது காமெடி சானல் பார்க்கிறதுதான். என்ன படம்னு எல்லாம் தெரியாது. நானே கத்துக்குட்டிங்க. =)). நன்றி பிரபாகர் பாராட்டுக்கும் ஆதரவுக்கும்.

vasu balaji said...

பிரபாகர்
/அய்யா இன்னிக்கி நான் 8/8/

=))

vasu balaji said...

வெண்ணிற இரவுகள்....!
/அசத்துறிங்க/

வாங்க. முதல் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

vasu balaji said...

அது சரி
/இது வரை கூப்டதுக்கே நாக்கு சுளுக்கி டென்டிஸ்ட்டிக்கு எம்புட்டோ செலவாயி போச்சி...) கலாய்க்க இப்படி ஒரு கண்டுபிடிப்பா?? ரொம்ப டேங்க்சுண்ணே... :0))/

அய்யோ. நாக்கு சுளுக்கினா டெண்டிஸ்ட் கிட்ட ஏன் போனீங்க. எல்லாம் இந்த வேதாளம் பண்ற வேலை. =))

நன்றிங்க முதல் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்.

vasu balaji said...

பழமைபேசி
/ஆகா, வர வர பாலாண்ணே திரைக்கதைல பரிணமிச்சுத் தள்ளுறாரே?/

ஆகா. இதுக்கு பேருதான் திரைக்கதையா?

/நீங்க கலக்குங்க அண்ணே!/

இன்னைக்கு கலங்கப் போவது யாரு=))

vasu balaji said...

விழா ஒருங்கிணைப்பாளர் நைஜீரியா இராகவன் உடனடியாக மேடைக்கு வரவும்.

காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு:
துபாய் ராஜா, பிரியமுடன் வசந்த் இருவரையும் காணவில்லை. கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு வெகுமதி உண்டு.

மணிஜி said...

அய்யோ...அய்யோ....மாப்பு சரி மப்பு

இது நம்ம ஆளு said...

இஃகி இஃகி. இன்னைக்கு உரிமையா மாப்புங்கள கலாய்ச்சிட்டேன். தப்பாருந்தா முன்னாடியே சாரி அய்யோ இல்லல்ல மன்னாப்பு

:)
:)\

vasu balaji said...

தண்டோரா ......
/அய்யோ...அய்யோ....மாப்பு சரி மப்பு/

வாங்க அய்யா. வணக்கம்.=))

vasu balaji said...

இது நம்ம ஆளு
/:)
:)\/

:))

ப்ரியமுடன் வசந்த் said...

//வ‌டிவேலு: சார‌ட்டா. ஆமாப்பா. அருமையான‌ வ‌ண்டி. புலிகேசில‌ ந‌டிக்கிற‌ப்ப கொள்ள‌வாட்டி அதுல‌ போயிருக்கேன். என்னா? க‌ளுத‌ ஏ.சி. வைக்க‌ முடியாது. //

ha ha haa...

அடங்க மாட்டீன்றீங்களே பாலா சார்

பாத்து ஜாக்கிரதையா இர்ங்க....

பழமை ஐயா டிசம்பர் ஊருக்கு வர்றாராம்.....

vasu balaji said...

பிரியமுடன்...வசந்த்

/அடங்க மாட்டீன்றீங்களே பாலா சார்/

ஆஹா! வாங்க வசந்த்.

/பழமை ஐயா டிசம்பர் ஊருக்கு வர்றாராம்...../

வரவேற்பு குடுத்துட்டா போச்சு. அதுக்குள்ள மறந்துடுவாங்க.

தமிழ் நாடன் said...

ஐயோ! சிரிச்சி சிரிச்சி வயத்துவலிக்குதண்ணே!
என் அறைய கடந்து போற எல்லாரும் என்ன ஒரு மாதிரி பார்க்கிறாங்கண்ணே! நான் மாட்டுக்க தனியா சிரிச்சிட்டு இருக்கேன்!

அருமை!அருமை!அருமை!அருமை!அருமை! இக்கி!இக்கி!

vasu balaji said...

தமிழ் நாடன்
/ஐயோ! சிரிச்சி சிரிச்சி வயத்துவலிக்குதண்ணே!
என் அறைய கடந்து போற எல்லாரும் என்ன ஒரு மாதிரி பார்க்கிறாங்கண்ணே! நான் மாட்டுக்க தனியா சிரிச்சிட்டு இருக்கேன்!

அருமை!அருமை!அருமை!அருமை!அருமை! இக்கி!இக்கி!/

நன்றிங்க தமிழ் நாடன்.

துபாய் ராஜா said...

இஃகி இஃகி இஃகி இஃகி இஃகி இஃகி இஃகி இஃகி இஃகி இஃகிஇஃகி இஃகி இஃகி இஃகி......................

சிரிச்சி முடியல. பாலா சார்.... :)))))

vasu balaji said...

துபாய் ராஜா
/சிரிச்சி முடியல. பாலா சார்.... :)))))/

நன்றி

ராஜ நடராஜன் said...

//அய்யோ. நாக்கு சுளுக்கினா டெண்டிஸ்ட் கிட்ட ஏன் போனீங்க. எல்லாம் இந்த வேதாளம் பண்ற வேலை. =))//

அது சரி:)

ராஜ நடராஜன் said...

//ஆகா, வர வர பாலாண்ணே திரைக்கதைல பரிணமிச்சுத் தள்ளுறாரே?

நீங்க கலக்குங்க அண்ணே!//

எங்கே இடுகையின் நாயகனைக் காணோமேன்னு பார்த்தேன்:)

vasu balaji said...

ராஜ நடராஜன் said...

/அது சரி:)/

/எங்கே இடுகையின் நாயகனைக் காணோமேன்னு பார்த்தேன்:)/

:))