(நீறில்லா நெற்றிபாழ்).
_______________________________________________________________________________________________________ ஊரார் இடுகைக்கு பின்னூட்டமிட்டால் தன் பதிவு தானே வளரும்
( ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.)
_______________________________________________________________________________________________________ தமிழிசும் தமிழ்மணமும் பதிவுக்குறுதி
(ஆலும் வேலும் பல்லுக்குறுதி)
_______________________________________________________________________________________________________ பின்னூட்டமில்லாத இடுகையும், ஃபாலோயரில்லாத பதிவும் பாழ்
(பார்க்காத பயிரும் கேட்காத கடனும் பாழ்)
_______________________________________________________________________________________________________ இடுகை போட முடியலன்னா பின்னூட்டமாவது போடு
(பொன்னு வைக்கிற இடத்துல பூவை வை)
_______________________________________________________________________________________________________ பதிவரின் பின்னால் 100 பேர்.
(பைத்தியக் காரன் பின்னால் பத்து பேர்)
_______________________________________________________________________________________________________அனானிக்கு பயந்து இடுகை போடாம இருக்கலாமா
(மூட்டைப் பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்தலாமா)
_______________________________________________________________________________________________________ மொக்கையானாலும் சொந்தமாய் எழுது
(கந்தையானாலும் கசக்கிக் கட்டு)
_______________________________________________________________________________________________________ இடுகை போட்டவன் இளிச்சவாயன்னா அனானியும் அலப்பறை பண்ணும்.
(கேக்குறவன் கேனையன்னா எருமையும் ஏறி மேய்க்கும்)
_______________________________________________________________________________________________________ பதிவர் விமரிசனம் போட்டாராம். படம் பொட்டிக்குள்ள போயிடிச்சாம்.
(தென்னமரத்துல தேளு கொட்டிச்சாம். பன மரத்துல நெறி கட்டிச்சாம்)
_______________________________________________________________________________________________________ ஓஹோன்னு பின்னூட்டம் போட்டு ஓட்டு போடாம போறதா
(படிக்கிறது ராமாயணம் இடிக்கிறது பெருமாள் கோவிலா)
_______________________________________________________________________________________________________ பிரபல பதிவரானாலும் அனானிக்கு அட்டுதான்.
(இராசா மகளானாலும் கொண்டவனுக்கு பெண்டுதான்)
_______________________________________________________________________________________________________ இடுகை உள்ளவரை எல்லாமே கருதான்.
(உடல் உள்ளவரை கடல் கொள்ளா கவலை)
_______________________________________________________________________________________________________ கவுஜ போடத் துணிஞ்சா எதிர் கவுஜ தப்புமா?
(உரலில் தலை கொடுத்தா உலக்கை இடி தப்புமா?)
_______________________________________________________________________________________________________ ஒத்தை பத்தி எழுதினாலும் பத்து ஓட்டுதான். பத்து பத்தி எழுதினாலும் பத்தே ஓட்டுதான்
(எகிறி எகிறி குத்தினாலும் ஒரே கூலிதான். எகிறாம குத்தினாலும் அதே கூலிதான்.)
_______________________________________________________________________________________________________
எழுதத் தெரியாத பதிவருக்கு பின்னூட்டம் சரியில்லையாம்
(ஆடத் தெரியாதவளுக்கு கூடம் கோணலாம்)
_______________________________________________________________________________________________________ இடுகை போட்டு புலம்பினா எல்லாம் மாறிடுமா?
( சொப்பனம் கண்ட அரிசி சோறாகுமா?)
_______________________________________________________________________________________________________அனானி பாராட்டினா கசக்குமா?
(கருவாடு வித்த காசு நாறுமா)
_______________________________________________________________________________________________________(டிஸ்கி:ச்ச்ச்ச்சும்ம்ம்ம்மாஆஆஆ. டமாஆஆஆஆசு.இஃகி இஃகி.)
67 comments:
suupparu...
அப்பாவி முரு
/suupparu.../
:)) நன்றி முரு
ஊரார் இடுகைக்கு ஓட்டுப்போட்டா தன் இடுகை தமிழ்மணத்தில் தானே வளரும் (எதோ நம்ம பங்குக்கு, இஃகிஃகி)
//பிரபல பதிவரானாலும் அனானிக்கு அட்டுதான்.//
சும்மா சும்மா சிரிப்பு மூட்டிட்டு
கதிர் - ஈரோடு
/சும்மா சும்மா சிரிப்பு மூட்டிட்டு/
:)).அதுக்குதான எழுதறது
//ஓஹோன்னு பின்னூட்டம் போட்டு ஓட்டு போடாம போறதா
(படிக்கிறது ராமாயணம் இடிக்கிறது பெருமாள் கோவிலா)//
தலைவா! சூப்பர்!
சூர்யா ௧ண்ணன்
/தலைவா! சூப்பர்!/
டிஸ்கி டிஸ்கி. நன்றி தலைவா.
// பின்னூட்டமில்லா இடுகை பாழ்.
(நீரில்லா நெற்றிபாழ்). //
ஆஹா... இந்த மொழி சூப்பர் அண்ணே...
// இடுகை போட முடியலன்னா பின்னூட்டமாவது போடு
(பொன்னு வைக்கிற இடத்துல பூவை வை) //
அண்ணே இது எனக்காக சொன்ன மாதிரி இருக்குதுங்க..
// ஓஹோன்னு பின்னூட்டம் போட்டு ஓட்டு போடாம போறதா
(படிக்கிறது ராமாயணம் இடிக்கிறது பெருமாள் கோவிலா) //
நான் அதெல்லாம் கரீக்க்டு தலைவா... பின்னூட்டமும் போட்டு, ஓட்டும் உங்களுக்கு போட்டுடறேன்.
// பின்னூட்டமில்லாத இடுகையும், ஃபாலோயரில்லாத பதிவும் பாழ்
(பார்க்காத பயிரும் கேட்காத கடனும் பாழ்) //
இஃகி.. இஃகி... சரியாகத்தாங்க இருக்கு
இராகவன் நைஜிரியா
/ஆஹா... இந்த மொழி சூப்பர் அண்ணே.../
நன்றி சார்.
இராகவன் நைஜிரியா
/அண்ணே இது எனக்காக சொன்ன மாதிரி இருக்குதுங்க../
ஐயோ. உங்க பின்னூட்டத்தில தான் நாங்க ஏதோ இடுகைன்னு ஒன்னு ஃபேக்டரி மாதிரி தினம் போடுறம். இது எங்களுக்கு.
// ஊரார் இடுகைக்கு பின்னூட்டமிட்டால் தன் இடுகை தானே வளரும்
( ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.)//
இது அனுபவத்தில் கண்ட உண்மை. நீங்க சொல்வது சரிதான்.
இராகவன் நைஜிரியா
/நான் அதெல்லாம் கரீக்க்டு தலைவா... பின்னூட்டமும் போட்டு, ஓட்டும் உங்களுக்கு போட்டுடறேன்./
உங்கள மாதர யாரும் வர முடியாது சார். எந்த அவசரத்திலையும் ஓட்டு போட்டு அப்புறம் வந்து பின்னூட்டம் போட்டு ஊக்குவிக்கிறதில உங்களுக்கு ஈடு சோடே இல்லை.
இராகவன் நைஜிரியா
/இஃகி.. இஃகி... சரியாகத்தாங்க இருக்கு/
ஆமாங்க ஒன்னு ஊட்டம். மத்தது ஓட்டு. இஃகி இஃகி
இராகவன் நைஜிரியா
/இது அனுபவத்தில் கண்ட உண்மை. நீங்க சொல்வது சரிதான்./
ஆமாங்க. நிறையப் பேரு நல்லா எழுதறாங்க.
// அனானி பாராட்டினா கசக்குமா?
(கருவாடு வித்த காசு நாறுமா) //
கசக்கத்தாங்க செய்கின்றது.
இராகவன் நைஜிரியா
/கசக்கத்தாங்க செய்கின்றது./
அவங்களுக்கு என்ன பிரச்சனையோ?
முடியல.... தலைவரே....!! ஏன் இப்புடி....??
பட்டய கிளப்புறீங்க பாலா சார்
நீறில்லா...
எங்க உக்காந்து யோசிப்பீங்க சார் இதெல்லாம்..
அப்புறம் வந்து பார்க்கறேன்..
லவ்டேல் மேடி
/முடியல.... தலைவரே....!! ஏன் இப்புடி....??/
மொக்க போடலாம்னுதான். நன்றி மேடி. :))
பிரியமுடன்...வசந்த்
/பட்டய கிளப்புறீங்க பாலா சார்/
நன்றி.
கலகலப்ரியா
/நீறில்லா.../
திருத்திட்டேனம்மா. நன்றி
கலகலப்ரியா
/எங்க உக்காந்து யோசிப்பீங்க சார் இதெல்லாம்../
ஏதோ தோணிச்சி. கொஞ்ச கொஞ்சமா போட்டு வெச்சேன்.
கலகலப்ரியா
/அப்புறம் வந்து பார்க்கறேன்../
த்தோ. ரொம்ப நாளாச்சி படிச்சி பின்னூட்டம் போட்டு. மறக்காம போடணும்.
பதிவுலக மொழிகளுக்குக் கொடுத்த பழமொழிகள் கலக்கல் ரகம் :)
//பதிவர் விமரிசனம் போட்டாராம். படம் பொட்டிக்குள்ள போயிடிச்சாம்.
(தென்னமரத்துல தேளு கொட்டிச்சாம். பன மரத்துல நெறி கட்டிச்சாம்)//
இது..செல்லாத பழமொழி சார்..
இது செரியா வரும் பாருங்கோ.. > பனம்பழத்தில காக்கா இருந்திச்சாம்.. பனம்பழம் தொப்னு விழுந்திச்சாம்..
//பதிவரின் பின்னால் 100 பேர்.
(பைத்தியக் காரன் பின்னால் பத்து பேர்) //
இது ரொம்ப நல்லா இருக்கு சார்.. ஆண்பால்ல சொன்னது இன்னும் நல்லா இருக்கு சார்.. ஆனா பாருங்கோ.. பதிவர் பின்னால பதிவர்தான் நிக்கறாய்ங்க.. ஹிஹி..
ச.செந்தில்வேலன்(09021262991581433028)
/பதிவுலக மொழிகளுக்குக் கொடுத்த பழமொழிகள் கலக்கல் ரகம் :)/
நன்றிங்க செந்தில்.
////பின்னூட்டமில்லாத இடுகையும், ஃபாலோயரில்லாத பதிவும் பாழ்//
follower.. pronunciation thappu sir.. :p
கலகலப்ரியா
/இது செரியா வரும் பாருங்கோ.. > பனம்பழத்தில காக்கா இருந்திச்சாம்.. பனம்பழம் தொப்னு விழுந்திச்சாம்../
ஆஹா. காக்கா உட்கார பனம் பழம் விழுந்ததா. சரிதான்.
//மொக்கையானாலும் சொந்தமாய் எழுது
(கந்தையானாலும் கசக்கிக் கட்டு)//
இதுவும் இடிக்குது சார்..
கலகலப்ரியா
/இது ரொம்ப நல்லா இருக்கு சார்.. ஆண்பால்ல சொன்னது இன்னும் நல்லா இருக்கு சார்.. ஆனா பாருங்கோ.. பதிவர் பின்னால பதிவர்தான் நிக்கறாய்ங்க.. ஹிஹி../
அடியாத்தி. ஆண்பால்ல சொன்னது நானில்ல. மூத்தோர்.
/பதிவர் பின்னால பதிவர்தான் நிக்கறாய்ங்க.. ஹிஹி..//
அது எல்லாருக்கும் பொதுதானே ஹி ஹி
//ஓஹோன்னு பின்னூட்டம் போட்டு ஓட்டு போடாம போறதா
(படிக்கிறது ராமாயணம் இடிக்கிறது பெருமாள் கோவிலா)//
ஹிஹி.. இந்த அரசியல் இன்னும் முடிஞ்ச பாடில்லையா..
கலகலப்ரியா
/follower.. pronunciation thappu sir.. :p/
ம்கும். உங்களுக்கு இந்தூரு இங்கிலீஸ் தெரியல:))
கலகலப்ரியா
/இதுவும் இடிக்குது சார்../
புரியலயே:(
கலகலப்ரியா
/ஹிஹி.. இந்த அரசியல் இன்னும் முடிஞ்ச பாடில்லையா../
அவ்வ்வ்வ். தமிழ்மணத்தில ரெண்டு ஓட்ட காணமே. யாரு போடாம போய்ட்டாங்கன்னு தலைய பிச்சிக்கிறேன்.
அனானி பத்தி நிறைய சொல்லி இருக்கீங்க.. இதோ இன்னொண்ணு..
"காகம் திட்டி மாடு சாகாது" (நான் திட்டியும்தான்..)
கலகலப்ரியா
/அனானி பத்தி நிறைய சொல்லி இருக்கீங்க.. இதோ இன்னொண்ணு..
"காகம் திட்டி மாடு சாகாது" (நான் திட்டியும்தான்..)/
தோடா. பழமொழி மட்டும் சொன்னா எப்புடி. புது மொழி எங்க?
"கிணற்றுத் தவளை"க்கு நாட்டு வளப்பமேன்? < இது உங்களுக்கு..
"ஆரால் கேடு, வாயால் கேடு" < இது எனக்கு..
"வாங்கிறதைப் போலிருக்கணும் கொடுக்கிறதும்" < இது அல்லாருக்கும்..
எதார்த்தவாதி வெகுசன விரோதி << அதனால நான் அப்பீட்டு..
கலகலப்ரியா
/"கிணற்றுத் தவளை"க்கு நாட்டு வளப்பமேன்? < இது உங்களுக்கு..
"ஆரால் கேடு, வாயால் கேடு" < இது எனக்கு..
"வாங்கிறதைப் போலிருக்கணும் கொடுக்கிறதும்" < இது அல்லாருக்கும்..
எதார்த்தவாதி வெகுசன விரோதி << அதனால நான் அப்பீட்டு../
:o யோவ். அவ்வ்வ்வ்வ். நான் எத்தன நாள் யோசிச்சி ஒன்னொன்னா எழுதி வெச்சி போட்டேன். என்னமொ கண்ணதாசன் ட்யூனுக்கு எழுதுவாரும்பாங்களே அப்பிடி சிமிட்ற நேரத்துல இந்த தாக்கு தாக்கிட்டியே. இதான் சூஊஊஊஊஊப்பரு.
//கலகலப்ரியா
/அனானி பத்தி நிறைய சொல்லி இருக்கீங்க.. இதோ இன்னொண்ணு..
"காகம் திட்டி மாடு சாகாது" (நான் திட்டியும்தான்..)/
தோடா. பழமொழி மட்டும் சொன்னா எப்புடி. புது மொழி எங்க?//
"கலகல திட்டி... வானம்பாடி சாவாது"ன்னு கேக்கணும்னுதானே ஆசைப் படுறீங்க.. ச்சே ச்சே.. அப்டி சொல்லுவேனா சார்..
(இததான் சொல்லுறது.. பொல்லு கொடுத்து பல்லு உடைச்சிக்கிறதுன்னு)
கலகலப்ரியா
/"கலகல திட்டி... வானம்பாடி சாவாது"ன்னு கேக்கணும்னுதானே ஆசைப் படுறீங்க.. ச்சே ச்சே.. அப்டி சொல்லுவேனா சார்..
(இததான் சொல்லுறது.. பொல்லு கொடுத்து பல்லு உடைச்சிக்கிறதுன்னு)/
இது இது இதத்தான் எதிர்பார்த்தேன்=))
நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்
நசரேயன்
/நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்/
:) நன்றிங்க நசரேயன்.
நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்
50 ( ஹ ஹாஹா)
கலக்கல்!
:)))))
பிரியமுடன் பிரபு
/நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்//
/50 ( ஹ ஹாஹா)//
வாங்க பிரபு:)) நன்றி.
பழமைபேசி
/கலக்கல்!/
நன்றி:)பழமை.
சந்தனமுல்லை
/:)))))/
:)) நன்றி
சூப்பர். கொஞ்சம் இதையும் படீங்க
பதிவு எழுதிப்பார்
//ஊரார் இடுகைக்கு பின்னூட்டமிட்டால் தன் பதிவு தானே வளரும்// அண்ணே இதுல உள்குத்து ஒன்னும் இல்லையே?
உங்கள் கருத்துருவுக்கு முதலில் ஒரு சபாஷ்!
பதிவர் விமரிசனம் போட்டாராம். படம் பொட்டிக்குள்ள போயிடிச்சாம்.
(தென்னமரத்துல தேளு கொட்டிச்சாம். பன மரத்துல நெறி கட்டிச்சாம்)
அவ்வ்வ்வ்வ்வ்வ்...............
உண்மைத்தத்துவங்களா இருக்கே.........
வயிறு வலிக்குது. விட்ருங்க..
சார் கலக்கல் ... :-))
Subankan
/சூப்பர். கொஞ்சம் இதையும் படீங்க/
நன்றிங்க. படிச்சேன்:))
தமிழ் நாடன்
/அண்ணே இதுல உள்குத்து ஒன்னும் இல்லையே?/
எந்தக் குத்தும் இல்லை:)) டிஸ்கி
/உங்கள் கருத்துருவுக்கு முதலில் ஒரு சபாஷ்!/
நன்றி
அகல் விளக்கு
/அவ்வ்வ்வ்வ்வ்வ்...............
உண்மைத்தத்துவங்களா இருக்கே.........
வயிறு வலிக்குது. விட்ருங்க../
சரி சரி பிழைச்சுப் போங்க இப்போதைக்கு:))
கிரி
/சார் கலக்கல் ... :-))/
நன்றி கிரி
superappu
krishna
/superappu/
நன்றிங்க
ஆஹா அருமையாக உள்ளது! எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறீர்கள்? :)
எது என்று குறிப்பிட்டு சொல்லத் தெரியவில்லை, மொத்ததில எல்லாமே நன்றாக இருக்கு. நானும் சில நாட்களுக்கு முன்னர்" ஒரு பதிவரிடம் (Blogger) காணப்படும் 12 விசேட / பிரத்தியேக அம்சங்கள்" என்ற தலைப்பில் பதிவொன்று இட்டேன். ஆனால் இது வித்தியாசம். நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்! :)
Post a Comment