போன வாரத்தில் ஒரு காலை நாளிதழில் வந்த கலங்கடிக்கும் செய்தி இது. தூத்துக்குடி அருகில் அரசு மருத்துவ மனையில் ஒரு ஆட்டோ ஓட்டுனரின் மனைவிக்கு பிறந்த இரட்டைக் குழந்தைகளை அவர் மனைவியும் அவரின் தாயும் கழுத்தைத் திருகி கொன்றிருக்கிறார்கள்.
குறைப் பிரசவமானாலும் கிட்டத்தட்ட 2 கிலோ எடையுடன் இன்குபேட்டரில் இருந்த குழந்தைகளை பாலூட்ட அனுமதித்த போது முதலில் ப்ளேடால் அறுத்துக் கொல்ல முயன்று பிறகு இப்படிக் கொன்றார்களாம். காரணம் அவர்கள் பெண் குழந்தைகள்.
கருவிலிருக்கும் குழந்தை பெண் எனத் தெரிந்தால் கருக்கலைப்புச் செய்வதால் குழந்தைகளின் பால் குறித்த தகவல் சொல்லப் படக்கூடாது என்ற சட்டம் சரியாக இருக்கலாம். பிறந்த பிறகு இப்படிக் கொடூரமாக கொல்லத் துணிவார்களேயானால் அந்தச் சட்டம் எதிராகவல்லவா இருக்கிறது?
தாய் சேய் நலத்துறை கருவுற்ற/பிரசவித்த பெண்களின் ஆரோக்கியம் குறித்து கவலைப் படுகிறதேயல்லாமல் இந்த மாதிரி பெற்றும் வளர்க்கத் தயாரில்லாத பெற்றோர்களிடமிருந்து குழந்தையைக் காக்க ஏதும் அமைப்பிருக்கிறதா தெரியவில்லை.
கருவிலிருக்கும் குழந்தை பெண் எனத் தெரிந்தால் கருக்கலைப்புச் செய்வதால் குழந்தைகளின் பால் குறித்த தகவல் சொல்லப் படக்கூடாது என்ற சட்டம் சரியாக இருக்கலாம். பிறந்த பிறகு இப்படிக் கொடூரமாக கொல்லத் துணிவார்களேயானால் அந்தச் சட்டம் எதிராகவல்லவா இருக்கிறது?
தாய் சேய் நலத்துறை கருவுற்ற/பிரசவித்த பெண்களின் ஆரோக்கியம் குறித்து கவலைப் படுகிறதேயல்லாமல் இந்த மாதிரி பெற்றும் வளர்க்கத் தயாரில்லாத பெற்றோர்களிடமிருந்து குழந்தையைக் காக்க ஏதும் அமைப்பிருக்கிறதா தெரியவில்லை.
மேலை நாடுகளில் தந்தையின் குடிப்பழக்கம் அல்லது தாயின் இயலாமையினால் குழந்தை வளர்ப்பில் குறைபாடுகள் இருப்பின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட பாதுகாவலர்கள் குழந்தையை உரிய முறையில், சகல வசதிகளுடனும் வளர்க்கும் பொறுப்பை ஏற்றுப் பாதுகாக்கும் வசதி இருக்கிறது. ஆனால் இங்கு அதற்கான எந்த வழிகாட்டலும் அமைப்பும் இல்லாத நிலையில் இத்தகைய அறைகுறை சட்டங்களால் குழந்தைகளுக்கு என்ன பாதுகாப்பு?
அரசு காப்பகங்கள், மற்றும் தனியார் காப்பகங்களில் கொடுத்து விட்டால், வருமானம் இருக்கிற பெற்றோர் இதற்கான கட்டணத்தைச் செலுத்த சட்டம் வேண்டும். அதற்கும் வழியற்றவர்களுக்கு அரசே மானியம் வழங்கலாம். இந்தக் குழந்தைகளை சட்டப்படி தத்தெடுத்துக் கொள்ள வழியிருப்பதால், அந்தக் குழந்தைகள் தத்து எடுக்கப்படும் வரையிலான காலத்துக்கு கட்டணமோ மானியமோ தேவைப்படும்.
தத்தெடுப்பது குறித்தும் இரண்டு வாரங்களுக்கு முன்னால் பத்திரிகையில் ஒரு செய்தி வந்தது. மும்பையைச் சேர்ந்த ஒரு நடிகர் தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தை இருப்பதால் அவர்கள் தத்தெடுத்த இரண்டாவது குழந்தை சட்ட பூர்வமானது என்றறிவிக்கக் கோரி மும்பை உயர்நீதி மன்றத்தில் தொடுத்த வழக்கில் அவர்களுக்குச் சாதகமாக தீர்ப்பு என்பது.
ஒரு நடிகருக்கு இன்னொரு பெண் குழந்தை தத்தெடுத்து வளர்ப்பதில் என்ன பெரிய சட்டச் சிக்கல் இருக்கிறது என்று தேடிய போது விழி பிதுங்கிப் போனது. இந்து தத்தெடுப்பு மற்றும் பரிபாலனச் சட்டம் 1956 (மொழி பெயர்ப்பு சரியா தெரியவில்லை) பார்த்த போது அதிர்ந்து போனேன்.
அரதப் பழச்சான இந்தச் சட்டம் சொல்வது என்ன?
விதி 11 (1) ஆண் குழந்தையை தத்தெடுக்க விரும்பினால் அந்தத் தந்தைக்கோ தாய்கோ மகனோ, பேரனோ, கொள்ளுப் பேரனோ சட்டபூர்வமான இரத்த உறவிலோ அல்லது தத்தெடுத்ததன் மூலமோ இருக்கக் கூடாது.
விதி 11(2)பெண் குழந்தையானால் அந்தத் தந்தைக்கோ தாய்க்கோ இன்னொரு பெண் அல்லது மகனுக்கு பெண் இரத்த உறவிலோ அல்லது தத்து மூலமாகவோ இருக்கக் கூடாது.
இந்த இரண்டாவது விதியை எதிர்த்துத்தான் வெற்றி. கலாச்சார மாறுதல், இன்ன பிற காரணங்களால் சட்ட பூர்வமற்ற குழந்தைப் பேறு, மற்றும் பெண் சிசுக் கொலை என்று இவ்வளவு நடந்தும் 52 ஆண்டுகளாக ஒரு சட்டம் நடைமுறைகேற்ப எந்த மாறுதலும் மேற்கொள்ளவில்லை என்பது பெரிய அதிர்ச்சி.
இப்பொழுது கூட இது ஒரு தனிமனிதனின் வெற்றியே தவிர சட்டத் திருத்தத்திற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப் படுமா என்பது கேள்விக் குறியே. பெரிய பணக்காரர்களுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல.
தெருவோர வாசிகளில் நான் கண்கூடாகக் கண்டிருக்கிறேன். தாயிழந்த ஒரு பிள்ளை அழுது கொண்டிருக்க, அதன் தந்தை குடித்துவிட்டு மயங்கி கிடக்க, ஒரு தாய், தோ அழுவுது பாரு, அதக் கூட்டியா. அவங்கப்பன் எப்போ தெளிஞ்சி அதுக்கு நாஷ்டா குடுக்குறது என்று தண்ணி சோற்றை ஊட்டி விட்டார். அவர்களுக்கும் இது பிரச்சனையில்லை. அவன் விட்டு ஓடினால் கூட யாரோ வளர்த்து விடுவார்கள்.
சமுதாயச் சாக்கடையில் சாதி, கௌரவம் இன்ன பிற எழவுக்கு வாழ்வைத் தொலைத்த நடுத்தர வர்க்கம் மான் கறி வைத்தியனுக்கு கொட்டிக் கொடுக்குமே தவிர இப்படிக் குழந்தைகளை தத்தெடுக்க முன்வருவதே பெரிய விடயம்.
சமுதாயச் சாக்கடையில் சாதி, கௌரவம் இன்ன பிற எழவுக்கு வாழ்வைத் தொலைத்த நடுத்தர வர்க்கம் மான் கறி வைத்தியனுக்கு கொட்டிக் கொடுக்குமே தவிர இப்படிக் குழந்தைகளை தத்தெடுக்க முன்வருவதே பெரிய விடயம்.
இதில் இவ்வளவு சட்டச் சிக்கல் இருந்தால் எப்படி? இனிமேலாவது குழந்தை நலனுக்கு முக்கியத்துவம் தந்து அரசு தானே முன் வந்து ஊக்குவிக்காவிடில் இத்தகைய சமூக அவலங்கள் நடந்துகொண்டுதான் இருக்கும்.
40 comments:
அரதப் பழசான சட்டம்தான் நிறையத் தவறுகளுக்கு வசதியாக இருக்கிறது அல்லது நிறைய நல்ல காரியங்களுக்கு தடையாக இருக்கிறது..
இதையெல்லாம் சீரமைக்க எங்களுக்கெங்கேங்க நேரம் இருக்கு... ம்ம்ம் நீங்களே சொல்லுங்க...
கல்லாக் கட்டவே நேரம் போதறதில்லை...
//ஒரு தாய், தோ அழுவுது பாரு, அதக் கூட்டியா.//
அதுக எல்லாம் படிக்காதய்விங்கண்ணே அப்படித்தான் பாசாமா இருப்பாய்ங்க
கதிர் - ஈரோடு
/இதையெல்லாம் சீரமைக்க எங்களுக்கெங்கேங்க நேரம் இருக்கு... ம்ம்ம் நீங்களே சொல்லுங்க...
கல்லாக் கட்டவே நேரம் போதறதில்லை.../
இது அதிகாரவர்க்கத்தின் வேலையாச்சுங்களே. சம்பளத்துக்கு உழைக்க வேணாமா எப்போவாவது.
/அதுக எல்லாம் படிக்காதய்விங்கண்ணே அப்படித்தான் பாசாமா இருப்பாய்ங்க/
நிஜம்மா. பல சமயம் இவங்க கிட்டதான் மனுசத்தனம்னா என்னான்னு பார்க்கலாம்.
//இனிமேலாவது குழந்தை நலனுக்கு முக்கியத்துவம் தந்து அரசு தானே முன் வந்து ஊக்குவிக்காவிடில் இத்தகைய சமூக அவலங்கள் நடந்துகொண்டுதான் இருக்கும்.//
சரியாகச் சொல்கிறீர்கள் அய்யா.... சட்டம் இலகுவானால்தான் நிறையப்பேர் மனமுவந்து வருவார்கள். ஒரு வகையில் கடுமையாயிருப்பது அயல் நாடுகளுக்கு கடத்துதலை தடுக்கிறது என என் எண்ணம்....
இன்று நான் 3/3.
பிரபாகர்.
அருமையான தகவல்களுடன் கூடிய பதிவு
பிரபாகர்
/சரியாகச் சொல்கிறீர்கள் அய்யா.... சட்டம் இலகுவானால்தான் நிறையப்பேர் மனமுவந்து வருவார்கள். ஒரு வகையில் கடுமையாயிருப்பது அயல் நாடுகளுக்கு கடத்துதலை தடுக்கிறது என என் எண்ணம்....
இன்று நான் 3/3.
பிரபாகர்./
நன்றி பிரபாகர். ஆனால் யோசித்துப் பாருங்கள். ஒரு முதியவர். வசதி இருக்கிறது. பையன்/பெண் இருக்கிறார். ஏதோ விபத்தில் அவரின் பேத்தியோ பேரனோ ஆதரவின்றி இருக்கும் பட்சத்தில் இந்தச் சட்டத்தால் அந்தக் குழந்தையின் கதி?
T.V.Radhakrishnan
/அருமையான தகவல்களுடன் கூடிய பதிவு/
நன்றிங்க.
//இந்தச் சட்டத்தால் அந்தக் குழந்தையின் கதி?
//
கஷ்டம்தான். சட்டங்கள் காலத்துக்கேற்றவாறு திருத்தப்படவேண்டும் அய்யா. இன்னும் குண்டு சட்டிக்குள் குதிரை ஒட்டுதல் கூடாது.
பிரபாகர்.
பிரபாகர்
/கஷ்டம்தான். சட்டங்கள் காலத்துக்கேற்றவாறு திருத்தப்படவேண்டும் அய்யா. இன்னும் குண்டு சட்டிக்குள் குதிரை ஒட்டுதல் கூடாது./
ஆமாங்க பிரபாகர். மறு பின்னூட்டத்திற்கு நன்றி.
நல்ல சமூக அக்கறையுள்ள பதிவு. தனிமனிதரும்,அரசாங்கமும் சிந்திக்க வேண்டிய விஷயம்.
ஐந்தறிவு படைத்த பறவைகள், மிருகங்கள் கூட குட்டிகளுக்காகவும், குஞ்சுகளுக்காகவும் போராடும்போது இந்த மனிதர்கள் மட்டும் ஏன் இப்படி படுபாதகங்களில் ஈடுபடுகிறார்கள்.... அந்த பச்சிளம் குழந்தைகள் செய்த பாவம் என்ன... இதுபோன்ற கொடுமை புரிவோர்க்கு நிச்சயம் கடுமையான தண்டனைகள் வழங்கப்படவேண்டும்... :((
மிருகங்கள் கூட தான் பெற்ற குட்டியை கொல்லாது. பெண் குழந்தை என்றால் அவ்வளவு இளக்காரமாகப் போய்விட்டதா இவங்களுக்கு. இன்றைக்கு இருக்கும் நிலையில் பெண் குழந்தைகள் தான் தாய் தந்தையிரிடம் பாசமாக இருக்கின்றனர்.
இவங்களை எல்லாம் அம்மணமாய் நிக்க வச்சு கல்லால் அடிக்க வேண்டுமய்யா..
// சமுதாயச் சாக்கடையில் சாதி, கௌரவம் இன்ன பிற எழவுக்கு வாழ்வைத் தொலைத்த நடுத்தர வர்க்கம் மான் கறி வைத்தியனுக்கு கொட்டிக் கொடுக்குமே தவிர இப்படிக் குழந்தைகளை தத்தெடுக்க முன்வருவதே பெரிய விடயம். //
சரியாகச் சொன்னீர்கள்...
துபாய் ராஜா
/ஐந்தறிவு படைத்த பறவைகள், மிருகங்கள் கூட குட்டிகளுக்காகவும், குஞ்சுகளுக்காகவும் போராடும்போது இந்த மனிதர்கள் மட்டும் ஏன் இப்படி படுபாதகங்களில் ஈடுபடுகிறார்கள்.... /
நல்லாச் சொன்னீங்க.
இராகவன் நைஜிரியா
/இன்றைக்கு இருக்கும் நிலையில் பெண் குழந்தைகள் தான் தாய் தந்தையிரிடம் பாசமாக இருக்கின்றனர்./
ஆமாங்க.
:)..
கலகலப்ரியா
/:)../
:(
//வானம்பாடிகள்
October 13, 2009 2:15 AM
கலகலப்ரியா
/:)../
:(//
ஹ ஹ ஹா
இங்கேயுமா?
சரியான விளக்கங்கள் பாலா சார்
இந்த சட்டமுறைகள்தாம் தேடிட்டு இருந்தேன்...படிச்ச பிறகு இவ்ளோ பிரச்சனைன்னு தோணுனாலும் எவ்ளோ பண்றோம் இதப்பண்ணமாட்டோமான்னு வசனம் முன்னாடி நிக்குது.....எதுக்குன்னு கேக்காதீங்க அப்பறம் விளம்பரம் பண்றேன்னு சொல்லிடுவீங்க...
பிரியமுடன்...வசந்த்
/இந்த சட்டமுறைகள்தாம் தேடிட்டு இருந்தேன்...படிச்ச பிறகு இவ்ளோ பிரச்சனைன்னு தோணுனாலும் எவ்ளோ பண்றோம் இதப்பண்ணமாட்டோமான்னு வசனம் முன்னாடி நிக்குது.....
http://www.vakilno1.com/bareacts/hinduadoptionsact/hinduadoptionsact.htm
முழு சட்டம். இது கூட Juvenile actum serththu parkkanum
/எதுக்குன்னு கேக்காதீங்க அப்பறம் விளம்பரம் பண்றேன்னு சொல்லிடுவீங்க.../
சரி கேக்கல. நீங்களே சொல்லிடுங்க.
//
அருகில் அரசு மருத்துவ மனையில் ஒரு ஆட்டோ ஓட்டுனரின் மனைவிக்கு பிறந்த இரட்டைக் குழந்தைகளை அவர் மனைவியும் அவரின் தாயும் கழுத்தைத் திருகி கொன்றிருக்கிறார்கள்.
//
என்னால இந்த லைனுக்கு மேல படிக்க முடியலை....என்ன கொடுமை இது...இவங்கள்லாம் மனுசங்களா இல்ல பேய்களா??
நியாமான அலசல். ஆளுவர்கள்தான் இதை கண்டுகொள்ளவேண்டும். ஆனால் அவங்களுக்கு இதைவிட முக்கியமான வேலைகள் இருக்கே! குத்ரோச்சியை எப்படி காப்பாத்தறது? இத்தாலியை பின்வாசலை தவிர்த்து முன்வாசல் வழியா எப்படி விடுறது? அப்படீன்னு நிறைய கவலைகள் இருக்கு!
:-((((((((((
அது சரி
/என்னால இந்த லைனுக்கு மேல படிக்க முடியலை....என்ன கொடுமை இது...இவங்கள்லாம் மனுசங்களா இல்ல பேய்களா??/
ஏன் இப்படி இருக்காங்கன்னே தெரியலையே. :((
தமிழ் நாடன்
/அவங்களுக்கு இதைவிட முக்கியமான வேலைகள் இருக்கே! குத்ரோச்சியை எப்படி காப்பாத்தறது? இத்தாலியை பின்வாசலை தவிர்த்து முன்வாசல் வழியா எப்படி விடுறது? அப்படீன்னு நிறைய கவலைகள் இருக்கு/
ஆமாங்க. இதெல்லாம் உடனடியா செஞ்சாவணும்.
கார்த்திகைப் பாண்டியன்
/:-((((((((((/
:((.
இதெல்லாம் நடக்கற காரியமா சார்? நம்ம நாட்டுல பல சட்டங்கள் இப்படிப் பரண் மேலதான் இருக்குது
அவர்களை அந்த முடிவுக்குத தூண்டியது நம் சமூக அமைப்புகள்தான். கல்வி அறிவுஇல்லாமை, வரதட்சனைக் கொடுமை, பாலியல் பலாத்காரம், எத்தனை முதிர்கன்னிகள், குடிகாரக்கணவன், ஒரு சொட்டு கண்ணிர்தான் அந்தக் குழைந்தைகளுக்கு நம்மால் விடமுடயும் . ....மவுன சாட்சிகளாய்........
பாலாண்ணே, நல்ல இடுகை.
ஆட்டோ ஓட்டுனரின் குடும்பம் செய்தது வருந்தத்தக்கது. பிள்ளையே இல்லை என்று ஏங்குவோர் பலரிருக்க.. :(
சமுதாயச் சாக்கடையில் சாதி, கௌரவம் இன்ன பிற எழவுக்கு வாழ்வைத் தொலைத்த நடுத்தர வர்க்கம் மான் கறி வைத்தியனுக்கு கொட்டிக் கொடுக்குமே தவிர இப்படிக் குழந்தைகளை தத்தெடுக்க முன்வருவதே பெரிய விடயம்.// உண்மை..
//இதில் இவ்வளவு சட்டச் சிக்கல் இருந்தால் எப்படி? இனிமேலாவது குழந்தை நலனுக்கு முக்கியத்துவம் தந்து அரசு தானே முன் வந்து ஊக்குவிக்காவிடில் இத்தகைய சமூக அவலங்கள் நடந்துகொண்டுதான் இருக்கும்// வழிமொழிகிறேன்.
//கலாச்சார மாறுதல், இன்ன பிற காரணங்களால் சட்ட பூர்வமற்ற குழந்தைப் பேறு, மற்றும் பெண் சிசுக் கொலை என்று இவ்வளவு நடந்தும் 52 ஆண்டுகளாக ஒரு சட்டம் நடைமுறைகேற்ப எந்த மாறுதலும் மேற்கொள்ளவில்லை என்பது பெரிய அதிர்ச்சி.//
இதைபோல பல சட்டங்கள் நடைமுறைக்கு தகுந்தவாறு மாற்றப்படாமலேயே இயங்கிகொண்டிருக்கின்றது. அதற்கான எதிர்ப்பு பலமானதாக இல்லை என்பதே காரணம்....
நல்ல சிந்தனை இடுகை அன்பரே....
நாகா
/இதெல்லாம் நடக்கற காரியமா சார்? நம்ம நாட்டுல பல சட்டங்கள் இப்படிப் பரண் மேலதான் இருக்குது/
நடக்கும். வெகுதாமதமாக.
வாத்துக்கோழி
/ ஒரு சொட்டு கண்ணிர்தான் அந்தக் குழைந்தைகளுக்கு நம்மால் விடமுடயும் . ....மவுன சாட்சிகளாய்......../
பொறுப்பின்மை, அறியாமை அதெல்லாமும் தாண்டி இப்படி நிகழாமல் தடுக்க வழி வேண்டுமென்பது தான் என் கருத்து. முதல் வரவுக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றிங்க
ச.செந்தில்வேலன்
/பாலாண்ணே, நல்ல இடுகை./
நன்றிங்க. பாராட்டுக்கும் ஆதரவுக்கும்.
க.பாலாஜி said...
/இதைபோல பல சட்டங்கள் நடைமுறைக்கு தகுந்தவாறு மாற்றப்படாமலேயே இயங்கிகொண்டிருக்கின்றது. அதற்கான எதிர்ப்பு பலமானதாக இல்லை என்பதே காரணம்....
நல்ல சிந்தனை இடுகை அன்பரே..../
எதிர்ப்புக்கு காத்திருக்காமல் சரியான இடைவெளியில் மறு ஆய்வு செய்தாலே போதும். நன்றி பாலாஜி.
இவர்கள் எல்லாம் திருந்த வாய்ப்பே இல்லைன்னு நினைக்கிறேன்!
கிரி said...
/இவர்கள் எல்லாம் திருந்த வாய்ப்பே இல்லைன்னு நினைக்கிறேன்!/
குழந்தைங்க வாழ வாய்ப்புமில்லாம போகுதே கிரி. என்ன செய்ய.
நல்ல சமூக சிந்தையுள்ள பதிவு ...!! பகிர்வுக்கு நன்றிங்க தோழரே...!!
லவ்டேல் மேடி said...
/நல்ல சமூக சிந்தையுள்ள பதிவு ...!! பகிர்வுக்கு நன்றிங்க தோழரே...!!/
நன்றி மேடி.
உங்கள் பதிவு நன்றாக உள்ளது.
என் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்..
பெற்றோர்களுக்கு ஆண் பெண் சிறார்களில் அவரவர்களிடம் இல்லாத குழந்தைக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்திலும், குழந்தை இல்லாதோர் தத்து எடுத்து வளர்க்கவேண்டும் என்பதற்காகவே இவ்வாறு சட்டம் இயற்றப்பட்டு இருக்கும் என்று நினைக்கிறேன்..
அதே நேரத்தில், தற்காலத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பிள்ளைகளை நன்றாகவே வளர்க்கும் நிதி நிலைமை இருப்பதால் பிள்ளை இருப்பவர்கள் கூட கருணை அடிப்படையில் தத்து எடுக்கிறார்கள்.. தற்போது பிள்ளை இல்லாத ஏக்கத்துக்கு தத்து எடுப்பவர்களுக்கும், ஒரே பாலில் இரண்டு பிள்ளைகளை (ஒன்று சொந்தம், இன்னொன்று தத்து எனில்) வளர்த்தால் எதிர்காலத்தில் சொத்துப் பிரச்சினை, உரிமைப் பிரச்சினை போன்றவை ஏற்படக்கூடாது என்பதற்காகவே இவ்வாறு இருக்கும் எனவும் கொள்ளலாம்.
தத்து எடுத்த பின் அந்த பெற்றோருக்கு அதே பாலில் ஒரு குழந்தை பிறந்தால் என்ன செய்ய முடியும் என்று தெரியவில்லை?
ஈ ரா said...
/உங்கள் பதிவு நன்றாக உள்ளது./
முதல் வரவுக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி.
/எதிர்காலத்தில் சொத்துப் பிரச்சினை, உரிமைப் பிரச்சினை போன்றவை ஏற்படக்கூடாது என்பதற்காகவே இவ்வாறு இருக்கும் எனவும் கொள்ளலாம். /
நிச்சயமாக அது தான். ஆனால் ஆண் பிள்ளை என்றால் கொள்ளுப் பேரன் இருந்தாலும், பெண் என்றால் பெயர்த்தி இருந்தாலுமே அதே பாலில் உள்ள குழந்தையை தத்தெடுக்க அனுமதியில்லை என்பது எந்த வகையில் நியாயம். பால் வேறுபாடு ஏன்? பெண்ணுக்கும் உரிமை உண்டு எனச் சட்டம் வந்த பின் இது மாற்றப் பட வேண்டுமா இல்லையா?
/தத்து எடுத்த பின் அந்த பெற்றோருக்கு அதே பாலில் ஒரு குழந்தை பிறந்தால் என்ன செய்ய முடியும் என்று தெரியவில்லை?/
நீங்களே விடையும் சொல்லி விட்டீர்கள்.
நன்றிங்க மீண்டும் சந்திப்போம்.
very good article...
akm said...
/very good article.../
Thankyou again
Post a Comment