(படம்: நன்றி யூத்ஃபுல் விகடன்)
யூத்ஃபுல் விகடன் படைப்புகளில் வெளிவந்த என் கவிதை.
ஓராயிரம் முறை நான் எனக்குள் வைத்த பட்டிமன்றத்தில்
தீர்ப்பானது, நீ ஓவியம்!
உன் உதடெழுதி பிரமனிட்ட கையெழுத்தின்
கடைசிப் புள்ளி உன் கன்னத்தில்.
உன் உதட்டோரம் தொடங்கி காதோரம் போக
கண்களால் பயணித்தேன் உன் கன்னச் சாலையில்
கண்டு கொண்ட நீ நாணிப் புன்னகைத்தாய்
கனவாய்த் தோன்றிய கன்னக் குழியில் நான் காணாமல் போனேன்.
அட்சய பாத்திரத்துக்கு
எதிர்ப்பதமா உன் கன்னம்?
எத்தனை முத்தங்களால் நிறைத்தாலும்
அது நிறைவதில்லையே!
அழகு நிலையப் பெண்கள்
அன்றாடம் திட்டுகிறார்கள்..
உன்னைப் போல் அழகாக்க வேண்டுமென
உயிரெடுக்கிறார்களாம் வருபவர்கள்.
காவல் துறையும்
கலங்கி நிற்கிறது.
நீ கடந்து செல்கையில்
போக்குவரத்து நெரிசலாம்.
உன் ஊரில் கலியாணத் தரகர்கள்
காணாமல் போனார்கள்!
எல்லோரும் உன்னைப் போல்
பெண் தேடச் சொன்னதால்.
அடிக்கடி நீ உன்
உதடு கடிப்பாய்..
அதனால் சிவப்பது உன் உதடா?
அல்லது ஜொலிப்பதுன் பற்களா?
என்னைப் பித்தனாக்கிய தத்தையே
நான் கொடுத்த ஒற்றை ரோஜா
இன்னும் அழகாய்த் தெரிகிறது!
நீ ஏற்றுக் கொண்டதால்!
______/\______
108 comments:
அருமை சார். சந்தோஷத்தோடு ஒத்துக்கிறோம். நீங்க ஒரு சகலகலாவல்லவர்தான்...
படைப்புகள் தொடர வாழ்த்துக்கள்.
ஹேய் நைனா கலக்குற......
துபாய் ராஜா said...
/அருமை சார். சந்தோஷத்தோடு ஒத்துக்கிறோம். நீங்க ஒரு சகலகலாவல்லவர்தான்...
படைப்புகள் தொடர வாழ்த்துக்கள்./
நன்றி ராஜா.
//உன் உதட்டோரம் தொடங்கி காதோரம் போக
கண்களால் பயணித்தேன் உன் கன்னச் சாலையில்
கண்டு கொண்ட நீ நாணிப் புன்னகைத்தாய்
கனவாய்த் தோன்றிய கன்னக் குழியில் நான் காணாமல் போனேன்.//
ம்ம். சாருக்கு இளமை கீ போர்டில் ஆடுகிறது.... :))
பிரியமுடன்...வசந்த் said...
/ஹேய் நைனா கலக்குற....../
ஓஹோ.=))
துபாய் ராஜா
/ம்ம். சாருக்கு இளமை கீ போர்டில் ஆடுகிறது.... :))/
=))
//அட்சய பாத்திரத்துக்கு
எதிர்ப்பதமா உன் கன்னம்?
எத்தனை முத்தங்களால் நிறைத்தாலும்
அது நிறைவதில்லையே!//
ஐம்பதிலும் ஆசை வரும். ஆசை வந்தால் கலக்கல் கவிதை வரும்.
துபாய் ராஜா said...
/ஐம்பதிலும் ஆசை வரும். ஆசை வந்தால் கலக்கல் கவிதை வரும்./
அது சரி=))
//அழகு நிலையப் பெண்கள்
அன்றாடம் திட்டுகிறார்கள்..
உன்னைப் போல் அழகாக்க வேண்டுமென
உயிரெடுக்கிறார்களாம் வருபவர்கள்.//
அழகுக்கு அழகு
சேர்க்கும் அழகு அவள்...
பார்ப்போர் கவரும்
விதம் பழகுபவள்...
//காவல் துறையும்
கலங்கி நிற்கிறது.
நீ கடந்து செல்கையில்
போக்குவரத்து நெரிசலாம்.//
காவல்துறையையும்
கலங்கச்செய்யும்
காதல்துறை நீ....
துபாய் ராஜா said...
/அழகுக்கு அழகு
சேர்க்கும் அழகு அவள்...
பார்ப்போர் கவரும்
விதம் பழகுபவள்.../
/காவல்துறையையும்
கலங்கச்செய்யும்
காதல்துறை நீ..../
ஆஹா. குட்.
//உன் ஊரில் கலியாணத் தரகர்கள்
காணாமல் போனார்கள்!
எல்லோரும் உன்னைப் போல்
பெண் தேடச் சொன்னதால்.//
அட்டகாசம் சார்...
//ஓராயிரம் முறை நான் எனக்குள் வைத்த பட்டிமன்றத்தில்//
யாரு நடுவரா வந்தது?
சாலமன் பாப்பையாவா? இல்ல லியோனியா?
//அடிக்கடி நீ உன்
உதடு கடிப்பாய்..
அதனால் சிவப்பது உன் உதடா?
அல்லது ஜொலிப்பதுன் பற்களா?//
தெரியவில்லை என்றாலும்
வலி ஏற்படுவது
என் உருவத்தில்...
காதல் குழி ஏற்படுவது
என் உள்ளத்தில்....
//தீர்ப்பானது, நீ ஓவியம்!//
தீர்ப்பு எழுதிட்டு பேனாவ உடைச்சுட்டாங்களா இல்லியா?
//உன் உதடெழுதி பிரமனிட்ட கையெழுத்தின்
கடைசிப் புள்ளி உன் கன்னத்தில்.//
அப்பறம் ஆரம்பபுள்ளியா வைக்கமுடியும்?
//உன் உதட்டோரம் தொடங்கி காதோரம் போக
கண்களால் பயணித்தேன் உன் கன்னச் சாலையில்//
எதுல போன பஸ்லயா? இல்ல கார்லயா?
/என்னைப் பித்தனாக்கிய தத்தையே
நான் கொடுத்த ஒற்றை ரோஜா
இன்னும் அழகாய்த் தெரிகிறது!
நீ ஏற்றுக் கொண்டதால்!//
அழகுக்கு ரோஜா
சூட்டுவர் பெண்கள்...
ரோஜாவுக்கு அழகை
கூட்டியவள் நீ...
//கண்டு கொண்ட நீ நாணிப் புன்னகைத்தாய்//
ஒருவேளை லூசுன்னு நினைசுருக்குமோ என்னவோ
//கனவாய்த் தோன்றிய கன்னக் குழியில் நான் காணாமல் போனேன்.//
காதல்னா கானலா போற கனவுதான நைனா
//அட்சய பாத்திரத்துக்கு
எதிர்ப்பதமா உன் கன்னம்?//
ஏன் அவ்வளவு கஞ்சியா அவங்க(கஞ்சனுக்கு எதிர்பதம்)
//அழகு நிலையப் பெண்கள்
அன்றாடம் திட்டுகிறார்கள்..
உன்னைப் போல் அழகாக்க வேண்டுமென
உயிரெடுக்கிறார்களாம் வருபவர்கள்.//
உன்னைய மாதிரியே நைட்டுன்னு கூட பாக்கம கவிதை போட்டு கொல்றியே
//காவல் துறையும்
கலங்கி நிற்கிறது.
நீ கடந்து செல்கையில்
போக்குவரத்து நெரிசலாம்.//
போயும் போயி ஒரு பிந்துகோசப்போயி லவ் பண்ணிருக்கியே உனக்கு வெக்கமாயில்ல
//உன் ஊரில் கலியாணத் தரகர்கள்
காணாமல் போனார்கள்!
எல்லோரும் உன்னைப் போல்
பெண் தேடச் சொன்னதால்.//
ஹ ஹ ஹா....
துபாய் ராஜா said...
/அட்டகாசம் சார்.../
நன்றிங்க.
அகால வேளையிலும்
விடாது பதில் தர்ற
உங்க தமிழார்வத்திற்கு
தலைவணங்குகிறேன்...
//அடிக்கடி நீ உன்
உதடு கடிப்பாய்..
அதனால் சிவப்பது உன் உதடா?
அல்லது ஜொலிப்பதுன் பற்களா?//
இல்லை எதுனாலும் வாயில வந்துடப்போகுது....நெம்ப ஓவரா இருக்கே.....
//என்னைப் பித்தனாக்கிய தத்தையே
நான் கொடுத்த ஒற்றை ரோஜா
இன்னும் அழகாய்த் தெரிகிறது!
நீ ஏற்றுக் கொண்டதால்!//
எப்பிடியோ நல்லா இருந்தாஞ்சரித்தேன்...
வாழ்க உன் காதல் வளர்க உன் கூந்தல்
பிரியமுடன்...வசந்த் said...
/யாரு நடுவரா வந்தது?
சாலமன் பாப்பையாவா? இல்ல லியோனியா?/
என் இதயம்
/தீர்ப்பு எழுதிட்டு பேனாவ உடைச்சுட்டாங்களா இல்லியா?/
அடிங்கொய்யாலே. மரண தண்டனை குடுத்தாதான் அப்புடி.
/அப்பறம் ஆரம்பபுள்ளியா வைக்கமுடியும்?/
நீ தான் பிரமனா?=))
/எதுல போன பஸ்லயா? இல்ல கார்லயா?/
இதுல வேற என்ன நக்கலு. கண்ணால்னு போட்டிருக்கேன்ல
/ஒருவேளை லூசுன்னு நினைசுருக்குமோ என்னவோ/
அந்த சிரிப்பே வேற ராசா
/காதல்னா கானலா போற கனவுதான நைனா/
அட ஏம்பா இவ்வளவு விரக்தி:(
/ஏன் அவ்வளவு கஞ்சியா அவங்க(கஞ்சனுக்கு எதிர்பதம்)/
ம்கும் இது புரியல பாரு இவருக்கு..
/உன்னைய மாதிரியே நைட்டுன்னு கூட பாக்கம கவிதை போட்டு கொல்றியே/
இது பகல்ல போட்டு பப்ளிஷ் ஆனது
/போயும் போயி ஒரு பிந்துகோசப்போயி லவ் பண்ணிருக்கியே உனக்கு வெக்கமாயில்ல/
அடங்கொன்னியா. அடங்கமாட்றானே இவன்=))
/ஹ ஹ ஹா..../
சிரிப்பு வேறயா
துபாய் ராஜா said...
/ அகால வேளையிலும்
விடாது பதில் தர்ற
உங்க தமிழார்வத்திற்கு
தலைவணங்குகிறேன்.../
=)). நன்றிங்க
பிரியமுடன்...வசந்த் said...
/இல்லை எதுனாலும் வாயில வந்துடப்போகுது....நெம்ப ஓவரா இருக்கே...../
அவுங்க உதடு. நீ எப்புடி ஓவர்னு சொல்லலாம்.
/எப்பிடியோ நல்லா இருந்தாஞ்சரித்தேன்...
வாழ்க உன் காதல் வளர்க உன் கூந்தல்/
போவாத ஊருக்கு வாழ்த்துறான். சே. வழி சொல்றாரு=))
நன்றி வசந்த்.ராஜா. குட்நைட்.
கண்ணைக் கட்டுது.. ரைட்டு, ஜூட்டு, குட்நைட்.....
துபாய் ராஜா said...
/கண்ணைக் கட்டுது.. ரைட்டு, ஜூட்டு, குட்நைட்...../
குட் நைட் ராஜா.:)
//
அட்சய பாத்திரத்துக்கு
எதிர்ப்பதமா உன் கன்னம்?
எத்தனை முத்தங்களால் நிறைத்தாலும்
அது நிறைவதில்லையே!
//
அட....இது வித்தியாசமா இருக்கு!!!
அண்ணே... சூப்பர் அண்ணே...
இனிமே இடுகை போடுவதற்கு முன் raghavannigeria@gmail.com என்ற முகவரிக்கு ஒரு மெயில் அனுப்பிடுங்க அண்ணே... எல்லாரும் முன்னாடியே துண்டு போட்டுறாங்க, நாம் நெருக்கி அடிச்சுகிட்டு உட்கார வேண்டியிருக்கு
ada.. nallaa irukkunga nainaa.. ithu vasanthoda jodikkili padaththa paarththu uthiththa kavithaiyo...
கன்னக் குழிதனை காதலியர் காட்டிவிட்டால்
வானம்பாடி கூட பறக்கும்
வாலிபம் கூடி..
----------------------------------
நல்ல feelings மேட்டரு சார்.
வானம்பாடியாரே, என்னய்யா இப்படி அசால்ட்டா அசத்திப்புட்டீறு....?
//கண்டு கொண்ட நீ நாணிப் புன்னகைத்தாய்
கனவாய்த் தோன்றிய கன்னக் குழியில் நான் காணாமல் போனேன்.//
அட மனுஷா..ஆழம் தெரியாம கால விட்டுடீரே.....
//அட்சய பாத்திரத்துக்கு
எதிர்ப்பதமா உன் கன்னம்?
எத்தனை முத்தங்களால் நிறைத்தாலும்
அது நிறைவதில்லையே!//
உள்ளதான் நீர் உட்காருந்துட்டு இருக்கேரே ... வெளிய வந்து முத்தத்தைப் போடுமையா....
//என்னைப் பித்தனாக்கிய தத்தையே//
நீர் பித்தனானதுக்கு இப்படி ஒரு காரணமா?
(கம்மென்ட் எல்லாம் தமாசுக்குத்தான் போட்டேன்.....உண்மையில் படித்து பேஜாராயிட்டேன்...தூள்..._)
//இனிமே இடுகை போடுவதற்கு முன் raghavannigeria@gmail.com என்ற முகவரிக்கு ஒரு மெயில் அனுப்பிடுங்க அண்ணே... எல்லாரும் முன்னாடியே துண்டு போட்டுறாங்க, நாம் நெருக்கி அடிச்சுகிட்டு உட்கார வேண்டியிருக்கு//
..)
கல்யாணம் ஆனவங்க, காதல் கவிதைகள் எழுதுறாங்க...
கல்யாணம் ஆகாதவங்க அரசியல்
கவிதைகள் எழுதுறாங்க...
என்ன உலகமய்யா இது?
:)
(தப்பா புரிஞ்சுக்கப் போறாங்க, நகைப்பான் போட்டுக்கிறேன்)
அய்யா எனக்கு படித்தவுடன் தோன்றியது உமக்கு ஐம்பத்திரண்டா இல்லை இருபத்தைந்தா?
மன்னிக்கவும், இந்த கவிதையை நான் விமர்சிக்கப்போவதில்லை... பொறாமையாய் இருக்கிறது, நமக்கு இப்படியெல்லாம் தோன்றவில்லையே என...
அருமை அய்யா. விகடனில் வந்ததற்கு ஒரு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்.
பிரபாகர்.
காதல் ஒவ்வொரு எழுத்திலும் கசிகிறது...
வாழ்ந்த காதலோ, வாழும் காதலோ எழுத எழுத எப்போதுமே இனித்துக் கொண்டேயிருக்கிறது
//எத்தனை முத்தங்களால் நிறைத்தாலும்
அது நிறைவதில்லையே!//
ஆஹா... அழகு கொஞ்சும் வரிகள்
//அட்சய பாத்திரத்துக்கு
எதிர்ப்பதமா உன் கன்னம்?
எத்தனை முத்தங்களால் நிறைத்தாலும்
அது நிறைவதில்லையே!
//
அழகான வரிகள்........ரசித்தேன்.
அருமையான கவிதை பாலாண்ணே!
அழகாக ரசித்துள்ளீர்கள்!! கொடுத்து வைத்தவர் உங்கள் காதலி :)
அது சரி said...
/அட....இது வித்தியாசமா இருக்கு!!!/
நன்றிங்க
இராகவன் நைஜிரியா said...
/அண்ணே... சூப்பர் அண்ணே...
இனிமே இடுகை போடுவதற்கு முன் raghavannigeria@gmail.com என்ற முகவரிக்கு ஒரு மெயில் அனுப்பிடுங்க அண்ணே... எல்லாரும் முன்னாடியே துண்டு போட்டுறாங்க, நாம் நெருக்கி அடிச்சுகிட்டு உட்கார வேண்டியிருக்கு/
=)). சரிண்ணே.
கலகலப்ரியா said...
/ada.. nallaa irukkunga nainaa.. ithu vasanthoda jodikkili padaththa paarththu uthiththa kavithaiyo.../
இதென்னா கூத்து. =))
rajesh said...
/கன்னக் குழிதனை காதலியர் காட்டிவிட்டால்
வானம்பாடி கூட பறக்கும்
வாலிபம் கூடி..
----------------------------------
நல்ல feelings மேட்டரு சார்./
இது நல்லாருக்கே. நன்றிங்க
ஈ ரா said...
/வானம்பாடியாரே, என்னய்யா இப்படி அசால்ட்டா அசத்திப்புட்டீறு....? /
ச்ச்ச்ச்ச்சும்மாதான்.
அப்பாவி முரு said...
/கல்யாணம் ஆனவங்க, காதல் கவிதைகள் எழுதுறாங்க...
கல்யாணம் ஆகாதவங்க அரசியல்
கவிதைகள் எழுதுறாங்க...
என்ன உலகமய்யா இது?
:)
(தப்பா புரிஞ்சுக்கப் போறாங்க, நகைப்பான் போட்டுக்கிறேன்)/
அதான் வசந்துக்கு சொன்னேன். இத எழுத ஆளு வேணாமா. நகைப்பான் போடாட்டியும் நாமளே போட்டுக்குவம்ல.
பிரபாகர் said...
/அய்யா எனக்கு படித்தவுடன் தோன்றியது உமக்கு ஐம்பத்திரண்டா இல்லை இருபத்தைந்தா?
மன்னிக்கவும், இந்த கவிதையை நான் விமர்சிக்கப்போவதில்லை... பொறாமையாய் இருக்கிறது, நமக்கு இப்படியெல்லாம் தோன்றவில்லையே என...
அருமை அய்யா. விகடனில் வந்ததற்கு ஒரு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்./
=)) நன்றி. 25 வயசுல இப்புடி எழுத ஆரம்பிச்சா சரி வராதே. இப்புடி எழுதறதுன்னா ஒன்னு 18ஆ இருக்கணும் இல்ல 50கு மேல இருக்கணும்.
கதிர் - ஈரோடு said...
காதல் ஒவ்வொரு எழுத்திலும் கசிகிறது...
வாழ்ந்த காதலோ, வாழும் காதலோ எழுத எழுத எப்போதுமே இனித்துக் கொண்டேயிருக்கிறது
//எத்தனை முத்தங்களால் நிறைத்தாலும்
அது நிறைவதில்லையே!//
ஆஹா... அழகு கொஞ்சும் வரிகள்//
வாங்க மகுடப் பொறையனாரே. நன்றி.
புலவன் புலிகேசி said...
/அழகான வரிகள்........ரசித்தேன்./
நன்றிங்க
ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...
/அருமையான கவிதை பாலாண்ணே!
அழகாக ரசித்துள்ளீர்கள்!! கொடுத்து வைத்தவர் உங்கள் காதலி :)//
நன்றிங்க=))
அண்ணே கவிதை சூப்பர் கலக்குறீங்க
//கதிர் - ஈரோடு Says:
காதல் ஒவ்வொரு எழுத்திலும் கசிகிறது...
வாழ்ந்த காதலோ, வாழும் காதலோ எழுத எழுத எப்போதுமே இனித்துக் கொண்டேயிருக்கிறது//
நான் சொல்ல வந்ததை எங்க தலைவரே சொல்லிட்டதால நாம பொதுவான விசயத்துக்கு வருவோம்....
//அட்சய பாத்திரத்துக்கு
எதிர்ப்பதமா உன் கன்னம்?
எத்தனை முத்தங்களால் நிறைத்தாலும்
அது நிறைவதில்லையே!//
ம்ம்....பார்ரா....வயசானாலும் இன்னும் அடங்க மாட்றாங்களே.....
//என்னைப் பித்தனாக்கிய தத்தையே
நான் கொடுத்த ஒற்றை ரோஜா
இன்னும் அழகாய்த் தெரிகிறது!
நீ ஏற்றுக் கொண்டதால்!//
ஓஹோ...இதெல்லாம் வேறு நடக்குதா...நடக்கட்டும்....வயசு பசங்க நாங்களே கம்முன்னு இருக்கோம்....
//அழகாக ரசித்துள்ளீர்கள்!! கொடுத்து வைத்தவர் உங்கள் காதலி :)//
நன்றிங்க=))//
செந்தில் சொல்லிட்டாருன்னு இவரும் நன்றிங்கராரு. என்ன நடக்கதுங்கே....மக்கா யாரும் உயிரோட இல்லையா........
க.பாலாசி said...
/செந்தில் சொல்லிட்டாருன்னு இவரும் நன்றிங்கராரு. என்ன நடக்கதுங்கே....மக்கா யாரும் உயிரோட இல்லையா......../
=)) ஏன் ஏன்! சொன்னா என்ன. வயசுப்பசங்க நீங்க சமுதாய சிந்தனையா எழுதினா நாங்க போட்டியில்லன்னு இங்க வந்தோம்
//க.பாலாசி said...
வயசு பசங்க நாங்களே கம்முன்னு இருக்கோம்....//
என்னா... வயசுப் பையனா...ஊட்ல கண்ணாலம் பண்ணிவைக்கலனா வயசுப் பையனோ...
பாலா அண்ணனுக்கு கமல்/ரஜினி/சத்யராஜ்/ சரத் இவங்கள விட வயசு கம்மிப்பா
Suresh Kumar said...
/அண்ணே கவிதை சூப்பர் கலக்குறீங்க/
நன்றிங்க.
க.பாலாசி said...
/நான் சொல்ல வந்ததை எங்க தலைவரே சொல்லிட்டதால நாம பொதுவான விசயத்துக்கு வருவோம்....
/
அது! அது!
/ம்ம்....பார்ரா....வயசானாலும் இன்னும் அடங்க மாட்றாங்களே...../
கவிதைக்கு வயசேது.
/ஓஹோ...இதெல்லாம் வேறு நடக்குதா...நடக்கட்டும்....வயசு பசங்க நாங்களே கம்முன்னு இருக்கோம்..../
=)).
அண்ணே... நீங்க நடத்துங்கண்ணே... தங்கமணி அக்கா பாக்குற வரைக்கும் ஒன்னும் சேதாரமில்லை
கதிர் - ஈரோடு said...
/என்னா... வயசுப் பையனா...ஊட்ல கண்ணாலம் பண்ணிவைக்கலனா வயசுப் பையனோ.../
அது அப்படித்தான்
//பாலா அண்ணனுக்கு கமல்/ரஜினி/சத்யராஜ்/ சரத் இவங்கள விட வயசு கம்மிப்பா/
இது சரியான வார்த்தை.=))
//பாலா அண்ணனுக்கு கமல்/ரஜினி/சத்யராஜ்/ சரத் இவங்கள விட வயசு கம்மிப்பா//
எத்தன....ஒரு 60-70 வரையிருக்குமா?
//என்னா... வயசுப் பையனா...ஊட்ல கண்ணாலம் பண்ணிவைக்கலனா வயசுப் பையனோ...//
கண்ணாலமா....இன்னும் நாங்கல்லாம் சைட்டடிக்கவே ஆரம்பிக்கல....
கதிர் - ஈரோடு said...
/அண்ணே... நீங்க நடத்துங்கண்ணே... தங்கமணி அக்கா பாக்குற வரைக்கும் ஒன்னும் சேதாரமில்லை/
ஆஹா.
//க.பாலாசி said...
கண்ணாலமா....இன்னும் நாங்கல்லாம் சைட்டடிக்கவே ஆரம்பிக்கல....//
இந்த கவிதையைப் படிச்சுமா?
//பாலா அண்ணனுக்கு கமல்/ரஜினி/சத்யராஜ்/ சரத் இவங்கள விட வயசு கம்மிப்பா//
சத்யராஜ மட்டும் சொல்லியிருந்தீங்கன்னா பொருத்தமா இருக்கும்...இரண்டுபேருக்குமே ஒரு விசயம் ஒத்துப்போகும்....
//க.பாலாசி said...
எத்தன....ஒரு 60-70 வரையிருக்குமா?//
யாருக்கு கமல்/ரஜினி/சத்யராஜ்/ சரத் இவங்களுக்கா?
க.பாலாசி said...
/கண்ணாலமா....இன்னும் நாங்கல்லாம் சைட்டடிக்கவே ஆரம்பிக்கல..../
அதான் சரி. அப்போ 50கு மேல ஆரம்பிச்சு இப்புடி எழுதிக்கலாம்னு ஐடியா போல.
///அண்ணே... நீங்க நடத்துங்கண்ணே... தங்கமணி அக்கா பாக்குற வரைக்கும் ஒன்னும் சேதாரமில்லை//
ஆஹா.//
என்னது ஆஹாவா? அப்ப டெய்லியும் பூஜை உண்டுன்னு சொல்லுங்க....வரட்டும்....
//யாருக்கு கமல்/ரஜினி/சத்யராஜ்/ சரத் இவங்களுக்கா?//
இவங்களோட அண்ணன் வானம்பாடி பாலாவுக்கு...
//அதான் சரி. அப்போ 50கு மேல ஆரம்பிச்சு இப்புடி எழுதிக்கலாம்னு ஐடியா போல.//
என்னது யாரப்பாத்து என்ன வார்த்த சொல்றீங்க....எட்றா பாலாசி கீபோர்ட....எதுடா உன் பிளாக்கில் ’இவர்கள் வயசானவர்கள் என்று......‘
கதிர் - ஈரோடு said...
/இந்த கவிதையைப் படிச்சுமா?/
இத கேக்கணுமா. இல்லன்னா இன்னேரம் ஒரு ரோசம் வந்து அந்த வேலைக்கில்ல போயிருக்கணும்
கதிர் - ஈரோடு said...
/யாருக்கு கமல்/ரஜினி/சத்யராஜ்/ சரத் இவங்களுக்கா?/
அதானெ
க.பாலாசி said...
/சத்யராஜ மட்டும் சொல்லியிருந்தீங்கன்னா பொருத்தமா இருக்கும்...இரண்டுபேருக்குமே ஒரு விசயம் ஒத்துப்போகும்..../
ஹி ஹி ..பாலாஜி..லொள்ளதான சொல்றீங்க
//க.பாலாசி said...
எட்றா பாலாசி கீபோர்ட....//
அண்ணே... இது அடங்கறமாதிரி தெரியல... கலகல கிட்ட சொல்லி நம்ம நண்பய்ங்கள வரச்சொல்லி... கும்மாங்குத்துதான் குத்த சொல்லோனும்
க.பாலாசி said...
/என்னது ஆஹாவா? அப்ப டெய்லியும் பூஜை உண்டுன்னு சொல்லுங்க....வரட்டும்..../
ஏன் ஏன் இந்த கொலைவெறி. ஒரு கவிஞன வளர விடமாட்டாங்கப்பா
க.பாலாசி said...
/என்னது யாரப்பாத்து என்ன வார்த்த சொல்றீங்க....எட்றா பாலாசி கீபோர்ட....எதுடா உன் பிளாக்கில் ’இவர்கள் வயசானவர்கள் என்று......‘/
தோ. மாட்டுக்காரன் பொண்டாட்டிய கொஞ்சினத மாடு சொன்னாமாதிரி எழுதப்படாது. டைரக்ட் டச். சரியா.
//இத கேக்கணுமா. இல்லன்னா இன்னேரம் ஒரு ரோசம் வந்து அந்த வேலைக்கில்ல போயிருக்கணும்//
ஏங்கண்ணே சொல்லமாட்டீங்க....ஆடி அடங்கும் வாழ்க்கையடான்னு பாட்டு பாடுற வயசுல டூயட்...நாங்கல்லாம் இப்பதான் கடைய போடவே ஆரம்பிச்சிருக்கோம்....இனிமேதான யாவாரம் பண்ணணும்....
// வானம்பாடிகள் said...
ஏன் ஏன் இந்த கொலைவெறி. ஒரு கவிஞன வளர விடமாட்டாங்கப்பா//
அதுதான் வளர்ந்துட்டீங்களே... எங்க வெண்ணைக்கு முன்னாடியே...
இன்னும் என்ன வளரனும்
//இருக்கும்...இரண்டுபேருக்குமே ஒரு விசயம் ஒத்துப்போகும்..../
ஹி ஹி ..பாலாஜி..லொள்ளதான சொல்றீங்க//
என்னது லொள்ளா?...நீங்க சத்யராஜ விக் இல்லாம பாத்ததில்லையா?
கவிகானம் அருமை
வானம்”பாடி”
// வானம்பாடிகள் said...
ஏன் ஏன் இந்த கொலைவெறி. ஒரு கவிஞன வளர விடமாட்டாங்கப்பா//
ம்ம்ம்....யாருப்பா அது....இந்தப்பக்கம் கொஞ்சம் கொசுத்தொல்லை அதிகமா இருக்கப்பா......
கதிர் - ஈரோடு said...
/அண்ணே... இது அடங்கறமாதிரி தெரியல... கலகல கிட்ட சொல்லி நம்ம நண்பய்ங்கள வரச்சொல்லி... கும்மாங்குத்துதான் குத்த சொல்லோனும்/
ஆமாங்க. அவங்க வரப்போ பார்க்கலாம். ராகவன் ஐயா பிசியா இருப்பாரு.
//Blogger கதிர் - ஈரோடு said...
அதுதான் வளர்ந்துட்டீங்களே... எங்க வெண்ணைக்கு முன்னாடியே...
இன்னும் என்ன வளரனும்//
ம்ம்...இப்பதான் நீங்க நம்ம பக்கம் வந்திருக்கீங்க....
க.பாலாசி said...
/ஏங்கண்ணே சொல்லமாட்டீங்க....ஆடி அடங்கும் வாழ்க்கையடான்னு பாட்டு பாடுற வயசுல டூயட்...நாங்கல்லாம் இப்பதான் கடைய போடவே ஆரம்பிச்சிருக்கோம்....இனிமேதான யாவாரம் பண்ணணும்..../
அட இது வேறயா=))
//வானம்பாடிகள் said...
கதிர் - ஈரோடு said...
/அண்ணே... இது அடங்கறமாதிரி தெரியல... கலகல கிட்ட சொல்லி நம்ம நண்பய்ங்கள வரச்சொல்லி... கும்மாங்குத்துதான் குத்த சொல்லோனும்/
ஆமாங்க. அவங்க வரப்போ பார்க்கலாம். ராகவன் ஐயா பிசியா இருப்பாரு.//
அய்யோ...அய்யோ....பயந்துட்டாங்க....பெரிய பசங்க...
தண்டோரா ...... said...
/ கவிகானம் அருமை
வானம்”பாடி”/
அண்ணே வாங்க. நன்றிங்க. ஊருக்கெல்லாம் போய்ட்டு வந்தாச்சுங்களா
//அட இது வேறயா=))//
இல்லியா பின்னே....நாங்கல்லாம் யூத்து....
கதிர் - ஈரோடு said...
/அதுதான் வளர்ந்துட்டீங்களே... எங்க வெண்ணைக்கு முன்னாடியே...
இன்னும் என்ன வளரனும்/
ஹெ ஹெ. கவிஞனா.வாலி மாதிரி தாடி நரைச்சப்புறம் நல்லா வருமோ என்னமோ
//வானம்பாடிகள் said...
தோ. மாட்டுக்காரன் பொண்டாட்டிய கொஞ்சினத மாடு சொன்னாமாதிரி எழுதப்படாது. டைரக்ட் டச். சரியா.//
ம்கூம்....மாட்டோட வேதனை யாருக்கு தெரியப்போகுது...
‘டைரக்ட் டச்’ ன்னா?
//வானம்பாடிகள் said...
ஹெ ஹெ. கவிஞனா.வாலி மாதிரி தாடி நரைச்சப்புறம் நல்லா வருமோ என்னமோ//
ஓகோ....இந்த ஆச வேற இருக்கா?
க.பாலாசி said...
/அய்யோ...அய்யோ....பயந்துட்டாங்க....பெரிய பசங்க.../
தொடா. இதுக்கு பேரு பயமாம்ல.இதுல கொசுத்தொல்லை வேறயாமா
க.பாலாசி said...
/ இல்லியா பின்னே....நாங்கல்லாம் யூத்து..../
அப்ப நாங்கல்லாம் யாரு=))
க.பாலாசி said...
/‘டைரக்ட் டச்’ ன்னா?/
ம்ம்ம். நேர உங்க மனசுல இருந்து எங்க மனசுக்கு. வேற வில்லங்கமா நினைச்சா டங்கு வாரு அந்துடும்
க.பாலாசி said...
/ஓகோ....இந்த ஆச வேற இருக்கா?/
ஹூம்ம்ம்ம். ஆச தான் படலாம். அவர மாதிரியெல்லாம் எழுத முடியுமா?
// வானம்பாடிகள் said...
அப்ப நாங்கல்லாம் யாரு=))//
நாஞ்சொல்லிதான் தெரியனுமா என்ன?
நாடி தளந்தவங்க...ஆடி நடப்பவங்க......
இதல்லாம் எப்ப? சொல்லவே இல்லை?
அருமை! அருமை! சில வரிகள் வழக்கமானது என்றாலும் அந்த அட்சய பாத்திரம் மேட்டர் அட்டகாசம்!
க.பாலாசி said...
/நாஞ்சொல்லிதான் தெரியனுமா என்ன?
நாடி தளந்தவங்க...ஆடி நடப்பவங்க....../
=)).நினைப்புதான்.
தமிழ் நாடன் said...
/இதல்லாம் எப்ப? சொல்லவே இல்லை?
அருமை! அருமை! சில வரிகள் வழக்கமானது என்றாலும் அந்த அட்சய பாத்திரம் மேட்டர் அட்டகாசம்!/
நன்றிங்க.
ஹய்யா...நாந்தேன் நூறாவது......(பின்னூட்டத்தில்...)
க.பாலாசி said...
/ஹய்யா...நாந்தேன் நூறாவது......(பின்னூட்டத்தில்...)/
வாங்க ராசா=))
//=)) ஏன் ஏன்! சொன்னா என்ன. வயசுப்பசங்க நீங்க சமுதாய சிந்தனையா எழுதினா நாங்க போட்டியில்லன்னு இங்க வந்தோம்//
நீங்கள் நேரில் சொல்வது போலவே நினைத்து பார்த்தேன்....சிரிப்பு தாங்க முடியவில்லை....
கலக்குறீங்க இளைஞரே !
//ஈ ரா said...
நீங்கள் நேரில் சொல்வது போலவே நினைத்து பார்த்தேன்....சிரிப்பு தாங்க முடியவில்லை....
கலக்குறீங்க இளைஞரே !//
உங்களுக்கும் தெரிஞ்சிபோச்சா?....
ஈ ரா said...
/=)) ஏன் ஏன்! சொன்னா என்ன. வயசுப்பசங்க நீங்க சமுதாய சிந்தனையா எழுதினா நாங்க போட்டியில்லன்னு இங்க வந்தோம்//
நீங்கள் நேரில் சொல்வது போலவே நினைத்து பார்த்தேன்....சிரிப்பு தாங்க முடியவில்லை....
கலக்குறீங்க இளைஞரே !
=))
"உன் உதட்டோரம் தொடங்கி காதோரம் போக
கண்களால் பயணித்தேன் உன் கன்னச் சாலையில்
கண்டு கொண்ட நீ நாணிப் புன்னகைத்தாய்"
சூப்பருங்க.....
வாழ்த்துகள்... வாழ்த்துகள்...
M.Kuruparan said...
/சூப்பருங்க.....
வாழ்த்துகள்... வாழ்த்துகள்.../
நன்றிங்க.
//அடிக்கடி நீ உன்
உதடு கடிப்பாய்..
அதனால் சிவப்பது உன் உதடா?
அல்லது ஜொலிப்பதுன் பற்களா?///
இல்லை ஜொள்ளா??
நசரேயன் said...
/இல்லை ஜொள்ளா??/
இது லொள்ளு=))
Post a Comment