Showing posts with label கற்பனை. Show all posts
Showing posts with label கற்பனை. Show all posts

Monday, May 16, 2011

நசரேயனுக்கு கலைஞர் கடிதம்

நசரின் கடிதம் இங்கே

அன்பு உடன் கருப்பே சே சே பிறப்பே,

துண்டு போட நீ எழுதும் கடிதமெல்லாம் பட்டாணி மடிக்கப் போனாலும், நீ வீசிய துண்டெல்லாம் தீரும்பிவந்தாலும், சற்றும் மனம் தளராமல் துண்டு வீசியபடியே இருப்பது இந்தக் கடிதத்தை எழுதும் முழுத்தகுதியும் உனக்கு உண்டு என்பதை உலகறியச் செய்தாலும், உன் ஆறுதலில் என் துண்டு நனைந்து விட்டது.

/ஒய்ந்திருக்கும் வேளையிலே எள்ளி நகையாடுவார்கள், இறுமாப்பாய் பேசுவார்கள், புன்முறுவலோடு, நன்முகம் காட்டி இயல்பாய் கடந்து சொல்வோம்.களங்கள் பல கண்ட கழகத்திற்கு போர்க்களம் காணும் நேரம் இன்னும் இருக்கிறது./

இந்த வரிகள் என்னை மெய் சிலிர்க்கச் செய்துவிட்டன. இதைத்தானே உன் கவசமாய்க் கொண்டு உள்ளூர் வளவளத்தா முதல், வெளியூர் கருப்பு, சிவப்பு, ப்ரவுன், உறிச்ச கோழி, சோகை வெள்ளை என்று பாய்ந்து பாய்ந்து துண்டு வீசி மனமுடைந்த போதெல்லாம் கடந்திருப்பாய்.

‘காதல்’ மூன்றெழுத்து. ‘ஜொல்லு’ மூன்றெழுத்து. அதற்கு நீ வீசும் ‘துண்டு’ மூன்றெழுத்து. அதற்கு விழும் ’வசவு’ மூன்றெழுத்து. அப்போது உடையும் உன் ‘மூக்கு’ மூன்றெழுத்து. நீ தின்ன அலையும் ‘நொங்கு’ மூன்றெழுத்து. அதை வைத்து நீ போடும் ‘பதிவு’ அல்லது ‘இடுகை’ மூன்றெழுத்து. அதன் வகை ‘மொக்கை’ மூன்றெழுத்து. அதற்கு நீ வாங்கும் ‘ஓட்டு’ மூன்றெழுத்து. படிப்பவர்களிடம் நீ எடுக்கும் ‘உயிர்’ மூன்றெழுத்து. அதற்கு வாங்கும் ’திட்டு’ மூன்றெழுத்து.  அந்தப் பத்தியில் வேண்டுமென்றே அந்தக் கனியை, கனியை என்று இழுத்த உன் ‘லொல்லு’ மூன்றெழுத்து. நீ மட்டும் சிக்கினா நான் வைக்கப் போகும் ‘ஆப்பு’ம் மூன்றெழுத்து.

ஏனோ இதைப் படிக்கையில், நீ எழுதாமலே கடந்த ஆட்சியில் நான் கொண்ட ‘திமிர்’ மூன்றெழுத்து. கொடுத்துக் கொண்ட ‘விருது’ மூன்றெழுத்து. நானே கொடுத்துக் கொண்ட ‘பேட்டி’ மூன்றெழுத்து.  வந்து சேர்ந்த ‘குஷ்பு’ மூன்றெழுத்து. நம்பி மோசம் போன ‘அன்னை’யும் ‘சோனியா’வும் மூன்றெழுத்து. செய்த ‘ஊழல்’ மூன்றெழுத்து. ராசா போன ‘ஜெயில்’ ‘திஹார்’ கூட மூன்றெழுத்து. குடைச்சல் கொடுக்கும் ‘சி.பி.ஐ’ மூன்றெழுத்து. போன ‘ஆட்சி’ மூன்றெழுத்து. வந்து சேர்ந்த ‘சோகம்’ மூன்றெழுத்து. ‘காமெடி’ என்ற மூன்றெழுத்தால் ‘வெற்றி’ என்ற மூன்றெழுத்து கிட்டும் என்பதும் ‘கனவு’ என்ற மூன்றெழுத்தாயிற்றே என்றெல்லாம் நீ சொல்லாமலே சொன்னாற்போல் தோன்றுகிறது.

வாலிப வயதிலே காணாத தோல்விகளை புதிதாக ஒன்றும் காணப் போவதில்லைதான். அதற்காக கள்ளும் காஜாபீடியும் அடித்து அடுத்த துண்டு வீச்சுக்கு காத்திருக்கும் களமில்லை இது. ஐந்து வருடம் காத்திருக்க வேண்டும். நீ இடுகை போடும்போது வரும் பிழை மாதிரி இல்லை இது. நொங்கு நொங்கு என்று நீ இந்த வயதில் பறப்பதைப் போல் இந்த வயதில் என்னை நோண்டி நொங்கெடுப்பார்களோ என்று பயந்து தொலைய வேண்டியிருக்கிறது.

கண்ணை மூடிக் கொண்டு கையை வைத்து ஆதவனை மறைப்பதற்குச் சமம் என்ற உன் வரியில் பின்லேடனை விட பெரிய குண்டு வைத்திருப்பதை நான் அறிவேன். இதைப் பாராட்டி நான் எழுதப் போக காண்டிலிருக்கும் தங்கபாலு சொக்குவிடம் போட்டுக் கொடுத்து கூட்டணியை உடைக்க வழி செய்கிறாயா உடன் பிறப்பே? அழிவில்லா விதைகளா? விதை அழியாமல் செடி எப்படி முளைக்கும்? இதில் மரமாகி விண்ணை முட்டும் என்று உன் பதிவின் வரிகளைச் சேர்த்து விளம்பரம் வேறு தேடுகிறாய்.

கார்காலத்திலே துளிர் விட்ட இலைகள், இலையுதிர் காலத்திலேயே தன்னாலே தள்ளிவிடாமலே விழும். பொறுத்திரு என்கிறாயே. குப்பை கூட்டி குளிர்காயச் சொல்லி நக்கலடிக்கிறாயா? ராத்தூங்கும் நம்மோடா? நான் தூங்கி எத்தனை நாளாயிற்று தெரியுமா? ஆனாலும் உடன் பிறப்பே இத்தனை வேலையிலும் ஆட்டையை போடலாம் என்ற ஆசையில் பொன்னர் சங்கர் படத்தை வெளியிட்டதை எள்ளல் செய்து நமக்காகக் காத்திருக்கிறது சரித்திரமும், சாதனையும் என்று நொந்த புண்ணில் நூடில்ஸ் வேக வைக்கிறாயே.

உன் கடிதம் மூலம் ஒன்று மட்டும் தெரிகிறது. என் கடிதம் என்று அழைப்பும் இல்லாமல் முடிவும் இல்லாமல் உன் பாணியில் துண்டு வீச எழுதும் உசார் மொட்டைக் கடிதப் பாணியில் எழுதியதிலிருந்தே உன் துண்டு ஏன் விலை போகவில்லை என்று தெரிகிறது. ‘பத்து பிள்ளை பெத்தவளுக்கு தலைச்சன் பிள்ளைக்காரி பத்தியம் சொன்னது போல்’ என்று ஒரு பழமொழி உண்டு. அதைப் போல் மூணு துண்டு வீசி வெற்றி பெற்ற எனக்கு ஒரு துண்டு கூட போணியாகாத உன் ஆறுதல் இந்தச் சோகத்திலும் சிரிப்பை வரவழைக்கிறது.

அன்புள்ள

மு.க. (முழுதும் கற்பனை)

(பொறுப்பி: மொக்கையாய் போட்டுத் தள்ளினாலும் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம் என்று ஆதரவு தரும் நட்புக்களுக்கு இந்த என் 500வது இடுகை சமர்ப்பணம்.)

Friday, October 8, 2010

ங்கொய்யா டிவியில் ‘போட்டிக்கு பேட்டி’...



(இந்த படம் காட்டதான் முடியும்..ஓட்ட முடியாது. ஹி ஹி)

வலையுலக வரலாற்றில் முதல் முறையாக, ங்கொய்யா டிவியில் கிரகணம் பிக்சர்ஸ் வழங்கும், சமூக ஆர்வலர் கதிர் (வலிக்காத மாதிரியே) நடிக்கும் ‘போட்டிக்கு பேட்டி’ நிகழ்ச்சி!! தூண்டுகோல்: தளபதி நசரேயன் ..உலகெங்கும்  ஒரே நேரத்தில் எல்லா கணினியிலும் ரிலீசாகும் முதல் தமிழ் பேட்டி!! காணத்தவராதீர்கள்..

வா.பா. வணக்கம் வலையுலக நண்பர்களே. முந்தா நாள் ஜெயா டிவியில் காலை மலர் நிகழ்ச்சியில் அட்டகாசமான பேட்டியளித்து நேற்று பிறந்தநாள் கொண்டாடிய திரு.கதிர், ஈரோடு கதிர், சமூக ஆர்வலர், மாப்பு என்று பலருக்கும் அறிமுகமான பி.ப. திரு கதிர் அவர்கள் தனது பேட்டி அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறார். அவர் என்ன சொல்றார்னு பார்ப்போம். வணக்கம் கதிர் அவர்களே.

கதிர்: வணக்கம்.

வா.பா. வணக்கம்னு சொன்னா போதும். எலக்‌ஷன்ல நிக்கிறவரு மாதிரி கூப்புன கை கூப்புன படியே இருந்தா எப்புடி. முதலில் பிறந்த நாள் வாழ்த்துகள். ஒரு வயசு கூடி இருக்கு. எப்படி ஃபீல் பண்றீங்க.

கதிர்: இப்படியெல்லாம் அலும்பு பண்ணுவீங்கன்னுதானே உசாரா பென்சமின் பட்டன் படம் பார்த்தேன்னு போட்டேன். ஒரு வயசு இளைஞனா ஆனா மாதிரிதான் ஃபீல் பண்றேன். ஆமாம். நீங்க மட்டும்தான் பேட்டி எடுப்பீங்களா?

வா.பா. இல்லைங்க பரவை முனியம்மாவும் பங்கேற்கிற மாதிரி இருந்தது. அவசரமா ஒரு ஷூட்டிங்னு போய்ட்டாங்க. தேவைன்னா டெலிகான்ஃபரன்ஸிங்ல கேப்பாங்க. சரியா.

கதிர்:ரொம்பத் தேவை. கேளுங்க

வா.பா: செந்தமிழ் மாநாட்டுலயே உங்க பேச்சைக் கேக்கணும்னு ரொம்ப ஆர்வமா இருந்தது வலையுலகம். அங்க ஏற்பாடு சொதப்பி பேச முடியாம போயிருச்சி. அந்த கடுப்பிலதான் நீங்க அம்மா கட்சிக்கு மாறி ஜெயா டி.வில பேட்டி குடுத்தீங்களா?

கதிர்:இப்புடியெல்லாம் கெளப்புவீங்கன்னு தெரிஞ்சிதான் நான் ஊட்டுல சோனி டிவி இருந்தாலும் ஆஃபீசுல கலைஞர் டி.வில என் பேட்டி பார்த்தேன். யார்ட்ட. ஹெ.

வா.பா: ஆமாம். ஈரோட்டில கரண்ட் இருக்காது 8-10னு சொன்னீங்க. அப்புறம் எப்படி சரியாச்சி.

கதிர்:அது ரொம்ப சுவாரசியங்க. ஒரு நாள் ‘மனுசன் கண்டு புடிச்ச கரண்ட மனுசன் ஆசையா தொட்டு பார்க்க முடியல, ஆனா கரண்டுல காக்கா ஊஞ்சலாடுதேன்னு’ ஒரு பஸ் போட்டேன். கண்ணு பட்டு ஒரு காக்கா கரண்ட்ல அடிபட்டு செத்து போச்சாம். அதோட சாபம்னு அந்தியூர் சந்தையில சோசியம் சொன்னுச்சு. அவங்க சொன்னா மாதிரியே போன ஞாயித்துகிழமை சைலண்டா எஸ்ஸாயி, காக்காத்தா கோவில்ல காக்கா பிரியாணி போட்டேன். கரண்ட் வந்துடுச்சி. அதான் பஸ்ஸே தூக்கிட்டேன் இப்போ.

வா.பா.: ரொம்ப சிலிர்ப்பான அனுபவங்க. அப்புறம் அந்த பேட்டில ஒரு ஆச்சரியமான விஷயம், உங்க ஷூ மினு மினுன்னு மின்னிச்சே. சென்னை தூசுல ஒரு ஷூ பாலிஷ் போட்டு மறு ஷூ போடுறதுக்குள்ள ஒரு இஞ்சுக்கு மூடிக்குமே. நீங்க கூட அடிக்கடி தூசு வந்துடுச்சோன்னு பார்த்துகிட்டே இருந்தீங்க. ஷூட்டிங் ரூம்ல இன்ஸ்டா ஷைன் போட்டீங்களா?

கதிர்: (யோவ்! மூக்குதான் காக்கா மாதிரி இருக்குன்னு பார்த்தா முழி கழுகால்லயா இருக்கு. ஆத்தாடி) ஹி ஹி. ஆமாங்க. முடி கலைஞ்சுடுச்சான்னு பார்த்துகிட்டேங்க அப்பப்ப. லுக்கு முக்கியமில்லையா?

வா.பா.
:யப்பா! தாங்கல சாமி! அந்த பேட்டில நாற்பது நிமிஷம் அந்த சோஃபால முகம் சிரிச்சா மாதிரி இருந்தாலும், சலூன்ல முடி வெட்ட சேர் மேல பலகை போட்டு உக்கார வச்ச பையன் மாதிரி கவட்டிக்குள்ள கைய இடுக்கிக்கிட்டு வெறச்சா மாதிரி இருந்தீங்களே, ஏன் அப்படி?

கதிர்: அது ஃபேசு ஸ்ட்ராங்கு. போஸ்ச்சரு வீக்கு. ஹி ஹி.

வா.பா.:அப்புறங்க, போனமாசம் அந்த மாப்புவ மூணே மூணு கேள்வி கேட்டாங்க. உங்கள நோண்டி நொங்கெடுத்தாங்களே ஏன்?

கதிர்:
வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்னு விட்டுட்டாங்களோ?

வா.பா:பேட்டில உங்க படிப்பு எல்லாம் கிராமப்புறத்துல, அரசு பள்ளிலன்னு சொல்லியிருந்தீங்க. அது எங்கன்னாலும் ஆங்கிலம், தமிழ், கணிதம், விஞ்ஞானம், சமூகப்பாடம்னு அஞ்சு பாடம் இருந்தாலும் அதெப்படி சமூகத்துல மட்டும் ஆர்வம் அதிகமாகி சமூக ஆர்வலர்னு பட்டம் வாங்கினீங்க?

கதிர்: (அடப்பாவிங்களா! இப்படியெல்லாமா புரிஞ்சுக்குவீங்க. சமாளிடா கதிரு). அது வந்துங்க நான் ஒன்னாப்பு படிக்கும்போதே கற்பனை கசிய ஆரம்பிச்சிடுச்சி. மத்த சப்ஜெக்ட்ல கதை விட முடியாது. சமூகப்பாடத்துல சொந்த சரக்கும் சேர்த்து அடிப்பேன். ஒன்னாப்புல இருந்து 12ம்பு வரைக்கும் சமூகப் பாடத்துல முதல் மாணவனானதால அந்தப் பட்டம். ஹி ஹி.

வா.பா: ஆமா! நீங்க ரெண்டாயிரத்து எட்டில இருந்து பதிவுலகுக்கு பரிச்சியம்னு சொல்லியும் பேட்டி எடுத்தவர் திரும்ப எத்தன வருஷமா எழுதுறீங்கன்னு கேட்டாரே. அப்ப என்ன நினைச்சீங்க.

கதிர்: எங்காளுங்க படிக்காமலே பின்னூட்டம் போடுவானுங்க. பதிவுலகம்னு சொன்ன தோஷமா. என்ன சொல்றேன்னு உள் வாங்காமலே இப்புடி கேக்கறாங்களே இவங்கன்னு தோணிச்சி.

வா.பா. ஆமாங்க. இன்னோரு ஆச்சரியம். முதல் பகுதி முடிஞ்சதும் வந்த விளம்பரத்துல ‘கும்மியடி பெண்ணே கும்மியடின்னு’ பாடிக்கிட்டு அனிதா குப்புசாமி எண்ணெய் வித்தாங்க. நான் கூட நினைச்சேன் பதிவர்னதும் கும்மி பொருத்தமா போட்டாங்களான்னு.

வா.பா. திரு ஈரோடு கதிர் அவர்கள் தன்னோட பேட்டி பத்தி மேலதிக விளக்கம் ரொம்ப சுவையா சொல்லிட்டிருக்காரு. ஒரு சிறிய விளம்பர இடைவேளைக்குப் பின் மீண்டும் சந்திப்போம் நேயர்களே.

(ஆரோக்கியமான பல்லுக்கு மெஸ்வாக் டூத் பேஸ்ட்..ஆலங்குச்சி சாற்றில்......)

வா.பா.:நேயர்களே. இடைவேளிக்கு முன்பு திரு கதிர் அவர்கள் தன்னுடைய பேட்டி அனுபவங்களை சொல்லிட்டிருந்தாரு. தொடர்வோம். கதிர்! அந்த பேட்டியில கண் தானம் பத்தி வெகு சிறப்பா சொல்லியிருந்தீங்க. இந்த கண்ணுல பூ விழாட்டி தானம் பண்ணலாம்னு ஏதோ சொன்னீங்க. அப்ப நீங்க சந்திக்கிறவங்கள எல்லாம் முதல்ல இது நல்ல கண்ணா இல்ல நொள்ளைக் கண்ணான்னுதான் பார்ப்பீங்களா?

கதிர்:ஹி ஹி. பேட்டி எடுத்த ரெண்டு பேத்தையுமே அப்படி பார்த்தேன். அந்த வெளிச்சத்துல கண்ண சுருக்கிட்டாங்க. சரியாத் தெரியல.

வா.பா: அப்புறம் கதிர், ரத்த தானம் பத்தி சொல்லும்போது, நிறைய பேரு தயங்குவாங்க. சேராதும்பாங்க. அதனால, அரசு மருத்துவமனைல போய் ரத்தம் கொடுத்துட்டு வந்தாதான் நாங்க அரேஞ்ச் பண்ணுவோம்னு சொன்னீங்க. இந்த ஐடியா எப்படி வந்தது.

கதிர்: ஆரம்பத்துல நாங்களும் யார் கேட்டாலும் ரத்தம் ஏற்பாடு பண்ணமுங்க. அப்புறம் பதிவுலகம் வந்தப்புறம்தான், இந்த நீ ஓட்டு போட்டா ஓட்டு, பின்னூட்டம் போட்டா பின்னூட்டம்னு ஒரு ஸ்கீம் இருக்கறதா தெரிய வந்துச்சி. அட இது நல்லாருக்கேன்னு முயற்சிபண்ணோம். அங்கயும் இந்த ஃபார்முலா சக்ஸ்ஸஸ் ஆயிடுச்சி. இத பத்தி நிறைய ஆராய்ச்சி பண்ணி, விசேசத்துக்கு மொய் எல்லாம் கணக்கு எழுதி வச்சி திரும்ப செய்யறதுங்கறது டமிலன் பண்பாடு. அது ரத்தத்துல ஊறின விஷயமாச்சே. அதனாலதான் ரத்ததானத்துக்கும் ஒர்கவுட் ஆகுதுன்னு கண்டு புடிச்சனுங்க.

வா.பா: அபாரங்க. முக்கியமா உங்க கிட்ட கேக்கணும்னு நினைச்சதுங்க. பேட்டி முழுசும், 97 ஜோடி கண் தானம், 37 வாட்டி ரத்த தானம், 4000 மரம், 11 ஆயிரம் மரம், 2 லட்சம் டன்னுன்னு ஒரே புள்ளி விபரமா கொட்டுனீங்க. யூத்து யூத்துன்னு வேற அலப்பறை தாங்கல. ஒரு வேளை டி.வி.க்கு வந்தாச்சி. அடுத்தது வெள்ளித் திரையில விஜயகாந்த் விட்ட இடத்த புடிக்கிற அகுடியா இருக்கா?

கதிர்:ஹி ஹி. கண்டு புடிச்சிட்டீங்களா?

வா.பா.
அப்புறம் அந்த ப்ளாஸ்டிக் கேரி பேக் பத்தி சொன்னீங்க. அது மேல உங்களுக்கு வெறுப்பு எப்படி ஏற்பட்டது? அங்க நீங்க என்னதான் கதை விட்டாலும், மொத நாள் சொல்லி சக்கரை வாங்க மறந்துட்டு, காலைல தூங்க விடாம விரட்டின வெறுப்புல தூங்கிட்டிருந்த நாயை ச்சூன்னு எழுப்பி விட்டு (அதை ஒரு இடுகையா தேத்தினதும் தெரியும்டி) அது தொறத்தினதுல ஓடி பை அறுந்து கொட்டி ஊட்டுல வாங்கிக் கட்டிக்கிட்டதுதானே உண்மையான காரணம்?

கதிர்:ஹி ஹி. அது மட்டுமில்லைங்க. ஒரு வாட்டி சோப்பு, ஷேவிங் ஐட்டமெல்லாம் வாங்கி பாத்ரூம்ல வச்சிட்டு கைமறதியா கேரி பேக்கை ஃப்ளஷ்ல போட்டுட்டேன். அது ஃப்ளஷ் பண்ணும்போதெல்லாம் உப்பி அடைச்சிகிட்டு 500 ரூபாய்க்கு ஆப்பு வச்சிடுச்சி. எடுத்த ஆளு, எந்த கூமுட்ட இத ஃப்ளஷ்ல போட்டுச்சின்னு திட்டிட்டான். அதான்.

வா.பா.
இந்த ப்ளாஸ்டிக் டம்ப்ளர் பத்தி சொல்றப்ப ரீ சைக்கிள் பண்ணமுடியாதுன்னீங்க. எவர்சில்வர் டம்ப்ளர் வச்சா ஆட்டய போட்டுட்டு போறாங்கன்னு தானே இது வந்துச்சு. பின்ன என்ன பண்ணலாங்கறீங்க.

கதிர்:
பேப்பர் கப் உபயோகிக்கலாமே.

வா.பா. அதுக்கு மரக்கூழ் வேணுமே. மரமும் வெட்ட கூடாதுங்கறீங்களே.

கதிர்: அது வந்து வந்து..ஐ நல்ல ஐடியா. ‘நட்டுக்குங்க! வெட்டிக்குங்க’ன்னு ஒரு இயக்கம் ஆரம்பிக்கலாமுங்க.

வா.பா: சரிங்க. இந்த வலைப்பூ பத்தி சொல்லும்போது தமிழ்ல எழுதறதப் பத்தி சொன்னீங்க. என்னமோ கருப்புன்னு உள்வாங்கி ப்ளாக்னு வெளிய துப்பின்னு வலை நண்பர்களுக்கு புரியறா மாதிரி சொல்லுங்களேன்.

கதிர்: ஒரு நாள் ஆஃபீஸ் போறேன்னு சொல்லிட்டு சீக்கிரம் கிளம்பிட்டேங்க. அரை மணில தங்க்ஸ் ஃபோன் பண்ணி ஏங்க டிஃபன் ஆறிப்போகுது எங்க தொலைஞ்சீங்கன்னு கத்துனாங்க. ஏம்மா ஆஃபீஸ் போறேன்னு சொல்லிட்டுதானம்மா வந்தேன்னேன். ஏங்க புரியறா மாதிரி ஆணி புடுங்க போறேன்னு சொல்லிட்டு போயிருக்கலாம்லங்கன்னு சொன்னாங்க.

இன்னோரு நாள் மக கூட லேப்டாப்ல விளையாண்டுக்கிட்டிருந்தேன். காலிங் பெல் அடிக்கவும் போய் பார்த்தா யாரோ அட்ரஸ் மாத்தி வந்துட்டாங்க. வந்ததும் மக கேட்டாங்க யாருப்பான்னு. யாருன்னு தெரியலைம்மான்னு சொன்னதும் டக்னு ஓ!  ‘அனானி’ யான்னுச்சு. இப்படி நாம சொல்ற விஷயத்த அவங்களுக்கு ஏத்தா மாதிரி புரிஞ்சிக்க வைக்கிறததான் அப்படி விளக்கினேன்.

வா.பா: அருமையா விம் போட்டு விளக்கிட்டீங்க. இந்த வலைப்பூ அறிமுகம்னு ஒன்னு பத்தி சொன்னீங்க. நிறைய பேர் வலைப்பூ ஆரம்பிக்கணும். வலையில பதிவேத்தணும்னு சொன்னீங்க. இந்தக் கொலை வெறிக்கு என்ன காரணம். அங்க நீங்க என்ன காரணம் சொன்னாலும் எனக்கென்னமோ ‘தான் கெட்ட குரங்கு வனத்தையும் கெடுத்துச்சாம்னு’ ஒரு சொலவடை கவனம் வருது. சரிதானா?

கதிர்:
ஏனுங்க ரெண்டாவது வெளம்பர இடைவேளை விடலையே.

வா.பா. என்னாங்க பதிவர் நீங்க. தமிழ் பதிவில கூகிள் அட் கூட வராது. ஒன்னு விட்டதே பெரிய காரியம். உங்க பேட்டி பற்றிய சுவையான தகவல்களை பகிர்ந்துகிட்டதுக்கு ங்கொய்யா டீவி சார்பிலும், வலைப்பூ நண்பர்கள் சார்பிலும் மிக்க நன்றி வணக்கம்.

கதிர்: யோவ். நானா பகிர்ந்துகிட்டேன். பாதிக்கு மேல நீங்களே சொல்லிட்டு என்னைய மாட்டி விடுறீங்களா. நாட்டாமைக்கே சொம்பா? நல்ல்ல்ல்லா இருங்கடி. வணக்கம்.  
~~~~~~~~~~~

Tuesday, July 27, 2010

வடை கொத்திப் பறவை!...

(டிஸ்கி: திரையுலக காமெடி பீசும், பதிவுலக காமெடி பீசும் [என்னையச் சொன்னேன் என்னையச் சொன்னேன். ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா.
டிஸ்கிக்குள்ளையே டிஸ்கி போட விட்டாய்ங்களே..]  சந்திச்சி ரொம்ப நாளாச்சா அதான்)

வடிவேலுவைப் பார்த்து ஆளத்தேளப் புடிச்சி, தொடர் எழுதணுமிங்கற நப்பாசை வந்தா படும் பாடு இது. அப்பாயிண்டு வாங்கி அண்ணன பார்க்க ஆட்டோ பிடிச்சி போய்ட்டிருக்க

( செல்லில் பெல்லடிக்கிறது)

கதிர்: வணக்கமண்ணே.

வா.பா: வணக்கம் கதிர். எங்க வெளிய இருக்கீங்களா. காலைல இருந்து காணோம்.

கதிர்: இஃகி இஃகி. உங்க ஊர்ல இருக்கமண்ணே. 

வா.பா. அப்படியா? எங்க?

கதிர்: அசோக்நகர்ல இறங்கி ஃபோன் பண்ணேன். நீங்க எங்க. 

வா.பா. ஹி ஹி. வடிவேலுவை பார்க்க கிளம்பிட்டிருக்கேன். ஒரு டீ சாப்டு நில்லுங்க பில்லர் கிட்ட. பிக்கப் பண்ணிக்கறேன்.

(அடையாளம் கண்டு ஆட்டோவில் ஏத்த, ஆரூரன்)

ஆரூரன்: தென்னுங் நாட்டாம. ஈரோட்டில இருந்து பின்னாடியே வரேன். என்றா யாரோ வர மாதர இருக்கேன்னு செத்த அக்கம் பக்கம் பாக்க மாட்டிங்களா? ஏனுங் பாலாண்ணா. இந்த நாயத்த கேளுங்க.

கதிர்: அட! நம்மள யாரு ஃபாலோ பண்ணப் போறாங்கன்னு தேமேனு நான் வந்து சேர்ந்தேன். நீங்க எங்க மொதலாளி?

ஆரூரன்: தான் சொன்னேன்ல. உங்க பின்னாடியே வந்துட்டேன். எங்க போறீங்க?

வா.பா: வடிவேலுவை பார்க்க.

ஆரூரன்: அட! நானும் வாரனுங்ணா. 

(போய் இறங்க, பின்னாடியே ஒரு கால் டாக்ஸியில் பழமை)

பழமை: அட என்னுங் மாப்பு. டீக்கடையில மாப்பு மாப்புன்னு கூப்பிட்டிட்டிருக்கேன் கண்டுக்காம மூணு பேரும் கிளம்பிட்டீங்க. எங்க வந்தீங்க மூணு பேரும்?

வா.பா. வாங்க வாங்க. நீங்க எங்க இந்த பக்கம். இது வடிவேலு வீடு பார்க்கலாம்னு வந்தா நீங்க இங்க எப்படி?

பழமை: சரியாஆஆப் போச்சி போங்க. நானு அப்துல்லா, ரம்யாக்காவல்லாம் பார்த்து அழைப்பு கொடுத்துட்டு அப்புடியே வடிவேலு அண்ணனையும் பார்க்கலாம்னு அப்துல்லாட்ட கேட்டுகிட்டிருக்க தானா வந்தாச்சி. சரி வாங்க போவம்.

வடிவேலு: ஆஆஆக்கா. வாங்க வாங்க. எம்புட்டு நாளாச்சி பார்த்து. எல்லாம் ஒன்னா வந்திருக்கீங்க. என்னா விசயம். வாங்க உள்ள உக்காந்து பேசுவம்.

வடிவேலு: உக்காருங்கப்பா. என்னா விசயமண்ணே. எல்லாம கூடி வந்திருக்கீங்க. அண்ணன் என்னமோ உதவின்னாரு. மொத்தமா வந்திருக்கறத பார்த்தா டொனேசனு அது இதுன்னு...

வா.பா: ஏண்ணே! சொன்னேன்ல துட்டு, சான்செல்லாம் இல்லைண்ணே.  நான் எனக்காக கேக்க வந்தேன். வழியில இவங்கள எல்லாம் பார்த்தேன். சரி அண்ணன பார்த்துட்டு போலாம்னு பாசமா கூட்டிட்டு வந்தேண்ணே.

வடிவேலு: ச்செரி ச்செரி சொல்லுங்க. நான் என்ன யெல்ப் பண்ணனும்.

வா.பா: ஒன்னுமில்லண்ணே. வடை கொத்திப் பறவைன்னு ஒரு தொடர் எழுதப் போறண்ணே. அது ஆவில வரதுக்கு வழி பண்ணனும்னே.

வடிவேலு: அட காக்கான்னு சொல்லிட்டு போவேண்டியதுதானே. அதென்ன வடை கொத்திப் பறவை. அது ஆவில வரதுக்கு நான் என்னப்பா பண்ண முடியும்.

வா.பா. இல்லண்ணே. நீங்க மனசு வெச்சா முடியும்ணே. எனக்கு பீலா பீலாவா வருதுண்ணே. அத இப்புடித்தாண்னே தீத்துக்க முடியும். 

வடிவேலு: யோவ். என்னமோ மாட்டத் தண்ணிக்குள்ள எறக்கி வெல பேசிட்டிருக்க? அது என்ன ஏதுன்னு சொன்னாத்தானே யெல்ப் பண்ண முடியுமா இல்லையான்னு சொல்ல முடியும்.

வா.பா.: இந்தாங்கண்ணே. மூணு வார ஆ.வி. இதப் படிங்கண்ணே. 

வடிவேலு: (படித்துவிட்டு) ஏப்பா? இப்புடியெல்லாமா எழுதுவாய்ங்க? எனக்கு ஒரு பத்து படத்துக்கு காமெடி சீன் கிடைச்சிடும் போலயே. ச்சரி நீ சொல்லு. நீ என்ன பீலா உடப்போற?

வா.பா. பீலால்லாம் இப்புடி உட்டாலக்கிடி பீலா இல்லண்ணே. கொஞ்சமாச்சும் ட்ரூத் வேணும்னே. மணிரத்னம் சார் கால்ஃப் ஆடுறப்ப என்னையும் அங்க கூட்டிப் போங்கண்ணே. நான் பந்து பொறுக்கி போட்டுட்டு மணியும் நானும் கால்ஃப் ஆடினோம். பெனால்டில ஜெயிச்சிட்டாருன்னு சொல்லிப்பேண்ணே. 

வடிவேலு: கால்ஃப்! நீய்யி!! அந்த மட்டை உயரமிருப்பியா. நீ ஆடினன்னா எவன் நம்புவான்.

வா.பா. தோ பாருண்ணே. எனக்கும் தொப்பையிருக்குண்ணே. அப்புறம் நான் கூட ஒரு இங்கிலீசு புக்கு படிச்சிட்டு அதுக்கு மொழி பெயர்ப்பு போட்டேண்ணே. அப்புறம் ஜெர்மன் மொழில டங்கே, உந்த், ஷோன், சண்டாக் எல்லாம் தெரியும்ணே. மதுராந்தகத்துக்கு போய்ட்டு மாண்டி நீக்ரோ போனேன்னு சொல்லிக்குவண்ணே. ப்ளீஸ்ணே.

வடிவேலு: இருய்யா இருய்யா. நீம்பாட்டுக்கு என்னமோ அடுக்கிக்கிட்டு போற. 

கதிர்: அல்லோ! அப்புறம் நாங்கல்லாம் எதுக்கு வந்திருக்கோம். சொல்லியாச்சில்ல. அப்புடி மவுனமா உக்காருங்க. நம்ம பிட்ட கேக்கட்டும். அண்ணே! சும்மா கால்ஃப வெச்சி படைப்பாளின்னு சொல்றதில்லண்ணா. தோற்றம் முக்கியம். இந்தாளு ஜீன்ஸ் போட்டிருக்காரா? டி.ஷர்ட் போட்டு இன் பண்ணியிருக்காரா?

அத விடுங்க. கார்த்தி கிட்ட கேட்டு கை கொள்ளாம ஒளகப் படம் ஆட்டையப் போட்டு சப்டைட்டில பார்த்து விமரிசனம் எழுதியிருக்காரா? இல்ல தண்ணியடிப்போர் நலவாழ்வுக்கு வழிகாட்டி இடுகை போட்டிருக்காரா? இந்தாளுக்கு தெரிஞ்சதெல்லாம் சீட்டுகட்டுல இருக்கிற க்ளப்பு. அந்தாளு மாதர யூத்தா இருக்காரா? வேணும்னா தலைப்புக்கு நன்றின்னு போட்டுக்குறேன். நான் எழுதறத போட சொல்லுங்கண்ணா.

வடிவேலு: அதும் நியாயமாத்தான் படுது. அப்ப எல்லாரும் இதுக்குதான் வந்திருக்கியளா? ஏந்தம்பி!என்னமோ கண்ண உருட்டிகிட்டு குறுகுறுனு பார்த்துட்டிருந்தா எப்புடி. நீங்க சொல்லுங்க.

ஆரூரன்: இல்லீங்ணா! இவங்க என்ன தகுதியிருக்குன்னு போட்டிக்கு வராங்கன்னு தெரியல. டி சர்ட்டு போட்டா சரியாப் போச்சா? மைனர் மாதிரி பட்டன தொறந்து விட்டுகிட்டு உள்ள போட்டிருக்கிற செயின் தெரிய வேணாமா? பாலாண்ணன் மூஞ்சப் பாருங்க! திருவிழால தொலைஞ்சா மாதர ஒரு லுக்கு. நாட்டாமைய கேக்கவே வேணாம். அவரு பாப்பாவ ஸ்கூல்ல விடப் போனா, ஒண்ணாப்பு டீச்சர் புடிச்சி க்ளாசுக்கு போவாம எங்க சுத்தறன்னு மெரட்டுச்சு. அந்தாளு மாதிரி ஒரு கரடு முரடான லுக்கு வேணாமா? என்னைய விட்டா வேற யாருக்கு சரி வரும் சொல்லுங்க?

அத விடுங்ணா. இவங்களுக்கு நாயைப் பத்தி தெரியுமா? நான் காலையில டீ குடிக்கலாம்னு இறங்கினா எந்த நாய் வாலாட்டும், எந்த நாய் தலைய தூக்கி பார்த்துட்டு அட சீ! நீதானான்னு படுக்கும், எந்த நாய் குலைச்சு குட்மார்னிங் சொல்லும், ஊட்டுக்குள்ள இருக்கிற நாய் அவசரப்பட்டு குலைச்சிட்டு கதவிடுக்கு வழியா பார்த்து சாரி சொல்லும்னு நாயோஃபோபியா தெரியுமா? 

வடிவேலு: ஒருத்தனுக்கு ஒருத்தன் வாங்கலில்லாம பாயிண்ட புடிக்கிறாய்ங்களே. நான் என்ன பண்ணுவேன். தம்பி! பழமை தம்பி நீங்க சொல்லுங்க.

பழமை: ஒரு மணித்துளி அண்ணே. அமெரிக்காவில இருந்து அழைப்புண்ணே. நம்ம தளபதிண்ணே. சொல்லுங்க தளபதி! என்ன விசயம்? என்னுங்? ஆமாங். வடிவேலு அண்ணன் குரல்தான். அவங்க கிட்ட பேசணுமா? இருங்! கொடுக்கிறேன். ‘அண்ணே! நம்ம நசரேயன் தளபதிண்ணே’

வடிவேலு: அல்லோ! சொல்லுங்கண்ணே. அமெரிக்கால்லாம் எப்புடியிருக்கு. ஹாலிவுட்ல ஒரு காமெடி சீனு வாங்கிக் கொடுங்கண்ணே. கழுத ஆஸ்கார் ஒன்ன வாங்கிப் போட்டா கெடக்கும். என்னண்ணே? நான் எல்ப் பண்ணனுமா? சொல்லுங்கண்ணே. மனுசன்னா ஒருத்தருக்கு ஒருத்தர் உதவாம முடியுமா?

நசரேயன்: அண்ணே! வரலாறு முக்கியம்ணே. ஒரு பாண்டியனுக்கு இன்னோரு பாண்டியன் உதவாம, சேர, கொங்கு, பல்லவ பரதேசிக்களுக்கு உதவினான்னு ஆயிரும்ணே. அவிய்ங்களுக்கு என்ன தகுதியிருக்குண்ணே. அந்தாள மாதிரி தோழியிருக்கா? துண்டு போடத் தெரியுமா? மெக்ஸிகோகாரி  ‘ஓலா’ன்னு சொன்னா கெட்ட வார்த்தைன்னு சண்டைக்கு போவாய்ங்கண்ணே. 

ஒரு பயலுக்கும் நொங்கு தின்னத் தெரியாதுண்ணே. என் நண்பன் சொறிவுஜீவி என்னய ஜொள்ளோமேனியாக்குன்னு சொல்லுவாண்ணே. நொங்காலஜின்னு புதுசா ஒரு சப்ஜக்ட் சேர்க்குறோம். நீதான் தலைன்னு நியூயார்க் யூனிவர்சிடில கெஞ்சுறாய்ங்க. அதனால 'துண்டு தூக்கி நண்டு'ன்னு நான் எழுதறத போட சொல்லுங்கண்ணே.

வடிவேலு: அவ்வ்வ்வ்வ். ஏன்யா? ஏன்? 

பழமை : இஃகிக்கிக்கிக்கீ. என்னண்ணே கொழப்பிட்டாய்ங்களா? நானும் இவய்ங்க பழமைய கேட்டுகிட்டுதான் இருந்தேன். மாப்பு என்ன சொன்னாரு? ஜீன்ஸ்! அங்க பாருங்க. இவங்க சைசுக்கு ஜீன்ஸ் கிடைக்கலன்னு கிடைச்சத வாங்கி முட்டி வரைக்கும் வெட்டி ஆல்டரேசன் பண்ணி, மாவு மிசினுக்கு கட்டிவிட்ட துணி மாதர போட்டுகிட்டு நவீனம்னு சொல்லுறாய்ங்க. 

இந்த இடுகையப் பாருங்க. கோவைக்கு விமானமேறப் போனா காப்பிக் கடை தோழி கலியாணமாயிருச்சிங்களான்னு கேட்டுச்சி.சும்மா கால்ஃப் கால்ஃப்னு பேசினா ஆச்சா? என்னைய மாதிரி தொப்பி யாராச்சும் போட்டிருக்காங்களா. இவிங்கள்ளாம் கால்ஃப் குச்சிய இப்புடி புடிச்சா சுவத்துக்கு ஒட்டரை அடிக்கிறா மாதரயிருக்கும். 

கதிர்: ம்கும். காலையில நாலரை மணிக்கு தொப்பிய போட்டுகிட்டு திரிஞ்சா அய்யோ பாவம்னு கேட்டிருக்கும்.

வடிவேலு: அட இருங்க. வெள்ளையா இருக்கிறவரு பொய் சொல்ல மாட்டாரு. 

பழமை: இவிங்கள்ள யாரும் எழுத்தாளரில்ல. என்னோட புத்தகம் அமெரிக்கால ரிலீஸ் ஆகி, இப்ப இந்தியால ரிலீசாக போகுது. அதெல்லாம் உடுங்க. எங்கப்புச்சிகிட்டயே, கதவத் தொறந்து வச்சாலும் நீலமலைக் காத்து வரமாட்டிங்குதுன்னு சொன்னவன் நானு. இப்பச் சொல்லுங்க. ஒழுங்கு மரியாதைக்கு ‘பழமை பேசும் வழமைன்னு’ நான் எழுதறத போடச் சொல்லுங்கண்ணே. 

வடிவேலு: ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா. கண்ணகட்டுதே.  ச்சேரி! இருங்க பக்கிகளா. கேட்டுப் பார்க்கிறேன். நானே சிந்திச்சி யார ரெகமன்சன் பண்ணலாம்னு பார்க்கிறேன். அப்புறம் அண்ணன் மேல கோவிச்சிக்கக் கூடாது சரியா?

(எழுந்து போய் சிறிது நேரம் கழித்து)

வடிவேலு: சக்ஸஸ். சக்ஸஸ். தம்பிகளா! அண்ணன் நல்லா யோசனை பண்ணேன். உங்கள்ள ஒருத்தர ரெகமன்சன் பண்றத விட, நானும் பதிவர்தானே! 'மீ உருட்டி வண்டுன்னு’ நானே எழுதறேன்னு கேட்டேன். சரின்னுட்டாங்க.

வானம்பாடிகள், கதிர்,ஆரூரன்,பழமை,(ஃபோனில் நசரேயன்): ‘வட போச்சே’

வடிவேலு:  அத்த்த்த்த்த்து! பதிவரா லட்சணமா அதச் சொல்லிக்கிட்டே போய்க்கிருங்க.  போய் புள்ள குட்டிய படிக்கவைங்க போங்க. பேமஸ் பேமஸ்னு அலையாதீங்க. எனக்கு சூட்டிங்க் இருக்கு. வர்ட்டா...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
(இடுகையைப் படித்த பிறகு)
அது சரி: போற போக்கப் பார்த்தா நான் ‘அய்யாங்..டொய்ங் தொடர்ந்து எழுதணும்னு ஆ.வில இருந்து மெயில் வருமோ:O))

Thursday, June 10, 2010

சொர்கத்தில் சோ. அசிங்கப்பன் -2

வடிவேலு: எச்சூஸ் மீ! அய்ய்ய் வாண்ட் தமில் சொர்க்கம்?

பாண்ட்:வாட்? தமில் சொர்க்கம்? தேர்ஸ் நோ டமில் சொர்க்கம் ஹியர்.

வடிவேலு: ஸ்டாப்! ஸ்டாப் தி நான்சென்ஸ் யூஊஊஊ ஃபூலாபனிடியட்டாபனேஸ். தமில் லிவ் ஆஃப்டர் டெத். தெரிஞ்சா சொல்லு. தெரியலன்ன தெரியலன்னு சொல்றா என் வென்ட்று. அதென்ன நோ தமில்னு சொல்றது. அந்தா அங்க பாரு! எங்கூரு அப்பத்தா ஒன்னு போகுது. அத்த்த்து தமில்.  ஏத்தா! ஆத்தோவ்! கொஞ்சம் நில்லுத்தா..ஸ்ஸப்பா..

ஆத்தா: மகனே! யார் நீ! ஏன் ஓடி வருகிறாய்! யார் வேண்டும் உனக்கு!

வடிவேலு: நிப்பாட்டு நிப்பாடு ஆத்தா! காலையில கேள்விய டிப்பனா சாப்டியா?. அந்தா போறாம்பாரு ஒரு எடுபட்டபய. அவன தமில் சொர்கம் எங்கடான்னு கேட்டேன். தெரிஞ்சா சொல்லணும் தெரியாட்டி தெரியலன்னு போய்க்கே இருக்கவேண்டியதுதானே. நோ தமில்னு சொல்றான் பக்கிப்பய. பன்னாடப்பய. திரும்ப சிக்கின உங்கத கந்தல்டியேய். ஆத்தா! உங்கள எங்கயோ பார்த்தாமாதிரி இருக்கே. 

அவ்வை: மகனே என்னைத் தெரியவில்லையா உனக்கு? நாந்தானாப்பா அவ்வை!

வடிவேலு: ஏத்தா! நீயுமா? என்னப் பார்க்கும்போதே கலாய்க்கலாம்னு தோணுமா? எனக்கு அவ்வையைத் தெரியாதா? அந்தாத்தா நல்லா குண்டாயிருக்கும். குரல் சும்மா குழாய்ஸ்பீக்கர் மாதிரி இருக்கும். எங்க! நீ பாடின நீபழம் நீயப்பா பாடு?

அவ்வை: அப்படி ஒரு பாடல் நான் பாடவேயில்லையே மகனே!

வடிவேலு: ஹெ ஹெ! நம்மளுக்கு தெரியும்ல. சின்னக் குழந்தையக் கேட்டாலும் சொல்லுந்த்தா சொல்லும். பழம் நீயப்பா பாடினது அவ்வைய்யாருன்னு. இந்தா இந்தா பேசிட்டிருக்கும் போதே தடிய ஓங்காத! பேச்சு பேச்சாத்தான் இருக்கணும். பின்ன நீ என்ன பாட்டு பாடின சொல்லு!

அவ்வை: முழுமுதற்கடவுளாம் என் அப்பன் விநாயகனுக்கு பாலும் தெளிதேனும் என்ற பாடலைப் படைத்தவள் நானப்பா.

வடிவேலு: ஆத்தா! அவ்வையாருக்கும் முருகனுக்கும்தான் டீலிங்கு. நீ விநாயகனுக்கு பாட்டைப் போட்டுட்டு அவ்வைங்கிற. எங்க சினிமால டூப்பு போடுவாங்கல்ல டூப்பு! அப்பிடியா?

(தண்டபாணித்தெய்வமேஏஏஏஏஏஏஏஎய் என்று பாடியபடி கே.பி.எஸ் வருகிறார்)
வடிவேலு: அவ்வையே! புல்லரிச்சிப் போச்சு அவ்வையே! நீங்க பாடி நேராக் கேப்பேன்னு கனவில கூட நினைச்சதில்லையே ஆத்தா! அந்த முருயன் கருணையே கருணை! அந்த கிழவி நாந்தான் அவ்வைன்னு ஏமாத்துதுதா?சொர்க்கத்துல கூடவா ப்ராடு?

கே.பி.எஸ்: அபசாரம் அபசாரம்! அவர்தானப்பா அவ்வையார். சிறு பிராயத்திலேயே அறம் செய விரும்பு என்று பிள்ளைகளுக்கு ஆத்திச்சூடி சொன்னவரப்பா. அவரைப்போய் இப்படிப் பேசலாமா?

வடிவேலு: ஆக்கா! ஏத்தா! அந்தப்பாட்ட எளுதினதுன்னு சொல்லிருக்கப்படாதா! ஏத்தா! சின்னப் பசங்க மேல உனக்கென்ன கோவம்? 

அவ்வை: குழந்தைகள் நன்றாக வளர வேண்டும் என்றல்லவா எழுதினேன். 

வடிவேலு: ஏன் பேசமாட்ட? ஆத்திச் சூடி சொல்றா சொல்றான்னு எங்க தமிழ் வாத்திக்கிட்ட அடி வாங்கினவன் நானு! நீ ரொம்ப சலம்பற. எங்க நான் கேக்கறதுக்கு பதில் சொல்லு. ஒம்பாட்டுக்கு ஈவது இகழ்ச்சின்னும் சொல்லிட்டு, ஐயம் இட்டு உண்ணுன்னும் எழுதிட்டு போய்ட்டிய. டேய் வாங்கிக்கடா பசிக்குதுன்னு ஒருத்தன் அழுறான். பிச்சை வாங்குனா கேவலம் போடான்னு ஒருத்தன் போய்க்கே இருக்கான். ஏன் இப்புடி மாத்தி மாத்தி பேசின . அந்தா அங்க உக்காந்து நிதானமா யோசிச்சி சொல்லு. எனக்கு கொள்ள வேல கெடக்கு.

திருவள்ளுவர்: அவ்வையே! யார் இவர்? எந்த மொழி பேசுகிறார். தமிழ் போலவும் இருக்கிறது?

வடிவேலு: ஏன்! ஏன் இந்தக் கொலவெறி! ஒரு கூட்டமாத்தான்யா திரியறாங்க.

கே.பி.எஸ். : மகனே இவர்தான் திருவள்ளுவர். வாழ்வியல் நூல் தந்த வள்ளல் வணங்கிக் கொள் மகனே!

வடிவேலு: வள்ளுவரா! வணங்குகிறேன் அய்யா! உங்களை ஒன்று கேட்கலாமா? முன்ன பின்ன உங்களுக்கும் எனக்கும் வாய்க்கா வரப்பு தகராரு இருந்திருக்கா? பின்ன எதுக்கு பல்லு உடையிறா மாதிரி துப்பார்க்கு துப்பாக்கின்னு எல்லாம் செய்யுல் எழுதி என்னைய மாதிரி சின்னப் பசங்கள அடி வாங்கி வச்சிய. அவ்வ்வ்வ்வ்வ்வ். தோ! அந்தாத்தாவாவது ஒரு வரி ஒரு வரி எளுதிச்சி. நீங்க இரண்டு வரி எழுதி இந்தக் கையில ஒன்னு அந்தக் கையில ஒன்னுன்னு எங்க வாத்தி பிச்சிப்புடுவாரு.

வள்ளுவர்: கல்லாதது உன் தவறல்லவா மகனே!

வடிவேலு: ஏன் பேசமாட்டீரு. இத்தன வருஷம் கால் மறத்துப் போனாலும் கெடக்கட்டும்னு உக்காந்தா மாதிரியே போசுல வச்சிருந்தாங்க உங்கள. எங்க தலைவர் இப்போ செந்தமில் விளாக்கு உங்கள நிக்க வச்சிட்டாருல்லா.  (ஆஆஆக்கா! வடிவேலு! ஒரு வேள அகுடியா ஒர்க்கவுட்டாவலன்னு வைய்யி, உக்காந்திருந்த வள்ளுவரை நிற்கவைத்த தலைவருக்கு ஒரு விளா எடுக்கச் சொல்லி கவுத்துறலாம்டா).

நாலடியார்: வள்ளுவரே! யார் இவர்? அமைதியான இங்கு வந்து ஏன் தகராறு செய்கிறார். நக்கீரரை அழைக்கவா?

வடிவேலு: தோ! பெருசு! ஏன் மெரட்ரீய பேசிக்கிருக்குபோதே? நீர் யார் அதைச் சொல்லும்.

நாலடியார்: நாந்தான் நாலடியார் மகனே.  “உணர உணரும் உணர்வுடையாரை..”

வடிவேலு: ஸ்டாப் ஸ்டாப். இதோட விட்ருவோம். திரும்ப பழசெல்லாம் கிண்ட வேண்டாம். ஹ்ம். ஏம் பெருசு! எங்க புண்ணுன்னு பார்த்தே அங்க மிளகாய்  தேய்க்கிறீங்களே. அந்தப் பாடலச் சொல்லச் சொல்லி சொல்லத் தெரியலன்னு புளிய மிளாருல எங்க தமிழ் வாத்தி டவுசர் கிழிய அடிச்சதும், அதோட பள்ளிக்கு ஒரு கும்புடு போட்டதும் உங்க புண்ணியம்தாம்யா உங்க புண்ணியந்தேன். உக்காரக் கூட முடியாம ஒரு வாரம் நின்ன வாக்குலயே தூங்குனம்னா பாத்துக்கிருங்க. என்னா அடி!

வாத்தி: டேய்! யார்ரா அது வடிவேலுவா! உருப்படாத பயலே! இப்பவாச்சும் அந்த பாட்டச் சொல்லு. நான் மூணாப்புல சேத்துக்கிர்றேன்.

வடிவேலு: போதும்யா! போதும்! அடி வாங்கி வாங்கியே பொழப்பு போயாச்சு. பாட்டை மட்டும் கேக்காதிய! எவ்வளவு வேணும்னாலும் அடிச்சிக்கிருங்க. இப்ப நான் சொல்றத கேளுங்க.

எங்கூருல தமிலுக்கு, செந்தமிலுக்கு ஒரு விளா எடுக்குறோம். அதுக்கு ஒரு வெளம்பரப்படம் எடுக்கணும். என்னையத்தான் பொறுப்பாக்கிட்டாய்ங்க. நீங்கள்ளாம் சேர்ந்து ஒரு பாட்டு எளுதி, ஆளுக்கு ஒரு வரி பாடி உதவணும்.

தமிழய்யா! நீங்களாவது சொல்லுங்கைய்யா

தமிழய்யா: மகனே! உனக்கோ ஞாபக மறதி. இங்கு பனை ஓலை, பேப்பர் பேனா எதுவும் கிடையாது. மேலும் இவர்களை பூலோகத்தில் அழைத்துப் போய் படப்பிடிப்பும் நடத்த முடியாது. என்ன செய்யப் போகிறாய்.

வடிவேலு: அய்யா! உங்க மாணவனுக்கு தமில் செய்யுல் தான்யா வராது. இப்புடி பல்ல புடுங்கறா மாதிரியில்லாம “ நானடிச்சா தாங்க மாட்ட நாலு மாசம்  தூங்க மாட்ட” மாதிரி சுளுவ்வா எழுதச் சொல்லுங்கைய்யா. வகுத்துக்குள்ள இருக்கிற புள்ள கூட பாடுதாம்யா. அப்புறம் இந்த ஓல, பேப்பரு, பேனா எளவெல்லாம் போயாச்சிய்யா.

இந்தா இருக்கு கம்பூட்டர் பொட்டி. பேசுறா மாதிரியே அமுக்கினா எழுத்து வரும்யா. இந்தா செந்தமில்.ப்ளாக்ஸ்பாட்.காம்னு ஒரு பதிவு ஆரம்பிச்சிருக்கம்யா. இந்தா இங்க சின்ன பொட்டியிருக்கே அதில அவுங்கவுங்க பேரப் போட்டு ஒரு ஒரு வரி ஒரு பாட்டு எளுத சொல்லுங்கைய்யா. அம்புட்டு தூரம் வந்தது கண்ண கட்டுது. நான் அப்புடி ஒரு ஓரமா படுக்கிறேன்.

(சிறிது நேரத்தில் ஒரே கலவரம். திடுக்கிட்டு எழுந்த வடிவேலு)


வடிவேலு: இருங்க இருங்க. அமைதி அமைதி! என்ன இது சின்னப் புள்ளத்தனமா? ஒரு பாட்டு எளுதச் சொன்னா ஆளாளுக்கு கத்திக்கிட்டு மனுசன தூங்க விடாம. என்ன நடந்துச்சி இப்ப?

தமிழையா: ஏன்யா! நாங்க பாட்டுக்கு அமைதியா தமிழ்க்கடலில் திளைத்திருந்தோம். பதிவப்போட்டு இதுல இழுத்து விட்டு அடிதடில கொண்டு வந்துட்டியே. அவ்வையார் கவுஜ அடச்சீ செய்யுளுக்கு எதிர் செய்யுள்னு கம்பர் எழுதுறாரு. எதிரெதிர் செய்யுள்னு திருவள்ளுவர் எழுதுறாரு. மாணிக்க வாசகர் முன் நவீனத்துவம்ங்குறாரு. காளமேகப் புலவர் பின் நவீனத்துவம்தான்னு பொலம்புறாரு. நக்கீரன் அவரு பாட்டுக்கு குற்றம் குற்றமேன்னு புலம்பிட்டு திரியிறாரு. உன்ன பள்ளிய விட்டு ஓட விட்டது பத்தாது. அடடா. புளிய மிளாரு இல்லாம போச்சே. அவ்வையாரே! அந்தத் தடியக் குடுங்க.

வடிவேலு: வேணாம்யா. அப்போ வாங்கினதே இன்னமும் உக்காந்தா வலிக்குது. இதுக்கு ஆட்டோல வந்து அடிச்சாலே எண்ணிக்குவேன். வர்ரம்யா. எம்பொட்டிய குடுக்கச் சொல்லுங்க.  நல்லாக் கெளப்பறாய்ங்கய்யா பீதிய! ஏரோப்ளேன் ஸ்டார்ட்! மீ த எஸ்கேப்பு..

(படுக்கையிலிருந்து விழுந்து எழுந்து)

ஆஹா! அம்புட்டும் கனவா! தப்பிச்சண்டா சாமி! ஆனாலும் பரவால்ல. தலைய வெச்சி, எல்லாரும் வாழ்த்துறா மாதிரி ஒரு டேன்ஸ் சீன் போட்டு, ஒரு செந்தமிலர் வால்த்து சாங் போட்டு ஒப்பேத்திருவோம். முடிவுல ஒரு விழா எடுக்கணும்னு கோரிக்கை போட்டு முடிச்சிருவோம். ஏ பெரவு! அய்யா பெரவு! ஒரு சாங் எளுதுய்யா!

பிரவு: சாங்தானே! அஞ்சே நிமிசம்ணே!
             ‘செந்தமிழ் சிங்கமே
              சேர்த்து வைத்த தங்கமே
              உன் தமிழில் உலகமே
              ஓடி ஒளியும் கலகமே’
வானம்பாடிகள்,கதிர்,ப்ரியா,பாலாசி மற்றும் 165 ஃபாலோயர்: என்னாஆஆஆஆஆஆஆஆஅது?

பிரவு: தற்காலிக விடுப்பில் செல்வதால் எல்லாம் ட்ராஃப்டில். அய்யா! ஒரு நிமிடம் அழைக்கவா! கதிர் பிசியா?

...........................................................................................................

வடிவேலு, பிரபா: ஓடிட்டாய்ங்களா? :))))))))) நாம யாரு! டெர்ரர்ல...:))))))
~~~~~~~~~~~~~~~~~~~~

பஞ்சரா ஹில்ஸ் ப்ரேமா..

(அல்லோ! அண்ணாச்சி! ச்ச்சும்மா எழுதறேன்னு சவுண்ட் விடுறதும், அப்புறம் எழுதிட்டேன்னு இடுகை போடாம இருக்கறதும் இல்ல. தட்டச்சினமா, இடுகை போட்டமாதான்..எப்புடீ)

சுந்தரி டாட்டா காட்டிட்டு போன பெறவு கைக்கான் குப்பம் நரகமாகி போனது. ஒரு சனிக்கிழமை காலை பதினோரு மணிக்கு எழுந்து, பல் விளக்கினதும் பசி எடுக்க ஆரம்பித்தது. கையில் சல்லி காசு இல்லாட்டியும், நண்பனை மதியம் பன்னிரண்டரை மணிக்கு நகராட்சி பூங்காவில் சந்திக்கிறதா சொல்லி இருந்தேன். இருந்ததில் நல்ல உடும்பா பார்த்து போட்டுகிட்டு நடையை கட்டினேன். 

வழியில் ஒரு கட்டிடத்துல கார் நிறுத்துற இடத்துல சாமியானா போட்டு இருந்தாங்க. ஆணும் பெண்ணுமா இளைஞர்கள் வரிசையில நின்னு இருந்தாங்க. மோர் பந்தல் வச்சி இருக்காங்க, ரெண்டு மோர் அடிச்சிட்டு போகலாம். வெட்டியா அலையாம, இங்க துண்டு போட்டாமாதிரியும் ஆச்சின்னு நானும் நின்னேன்.

அதுக்குள்ள ஒரு கலர் குடைய விரிச்சி, அதி கீழ ஒரு மேசைய போட்டு வாங்க வாங்கன்னு கைய காட்டினாங்க. நான் ஓடி போய் முதல் ஆளா நின்னேன். மோர் பானை இன்னும் வரலைன்னு பார்த்து கொண்டு இருக்க ஒரு கார் வந்து நின்றது. அதில இருந்து ஒரு வெள்ளைச்சாமி இறங்கினான். இறங்கினவன் கார் கதவை திறந்து ஏதோ பேச, ஒரு அழகான வெள்ளச்சி இறங்கினாங்க. அவங்க பேசிக்கிட்டே கார் கதவை விட அது மூடும் போது வெள்ளச்சியோட கவுன் சிக்கிக்கிட்டது.

காரை எடுத்தா வெள்ளச்சி உசிருக்கு ஆபத்துன்னு பதறினாலும், வரிசையை விட்டு போனா மோர் கிடைக்காது என்ற பயமும் இருந்தது. அப்போதான் மேசையில ஒரு ஆள் வந்து உக்காந்து ஆங்கிலத்தில என்னமோ கேட்டான். என் கவனமெல்லாம் எங்க வெள்ளச்சிக்கு அடி படுமோ என்று இருந்ததால நான் கவுனு என்றேன். அவன்  “மனவாடா”  என்றான். திரும்பவும் கவுனு என்றேன். அப்புறம் அவன் ஏதோ மொழியில கேட்க கேட்க நான் கவுனு என்றே சொல்லிக் கொண்டிருந்தேன்.

திடீரென காரோட்டி காரைக் கிளப்பவும் ஒரு அழகான பெண்ணுக்கு அடிபடுவதை தடுப்பதைவிட மோர் முக்கியமில்லை என்று ஒரே பாய்ச்சலில் போய் காரைத்தட்டி  ‘கவுனு’  என்று காட்டினேன். வெள்ளச்சாமி ‘ஓ மை காட்’ என்ரு இதான் சாக்கு என்று நொங்கு தின்ன பார்த்தான். அந்த பெண் என்னைக் காட்டி ஏதோ ஆங்கிலத்தில் சொல்லிவிட்டு அழகாக புன்னகைத்து விட்டு காரில் ஏறிவிட்டாள்.

பிறகுதான் தெரிந்தது அது ஒரு ஆந்திர சாஃப்ட்வேர் கம்பெனி என்பதும், அதற்கு ஆளெடுக்கிறார்கள் என்பதும், என்னை நேர்முகம் செய்தவன் கொல்டி என்பதும். நான் அவன் கேட்ட போதெல்லாம் கவுனு என்று சென்னதை அவன் அவுனு (ஆமாம்) என்று நினைத்து கொண்டு, கணினியில் எத்தனை மொழி உண்டோ எல்லாம் எனக்கு தெரியும் என்று நினைத்திருக்கிறான்.

வெள்ளைச்சாமி எனக்கு வேலை கொடுக்க முடியுமா என அவனை கூப்பிட்டு கேட்க அவன் இவனுக்கு எல்லா கணினி மொழியும் தெரியுமாம் என்று சொல்லி இருக்கிறான். எப்படியோ எனக்கு டேமேஜர் வேலை கொடுத்து ஐதராபாத் போக சொல்லிவிட்டார்கள். 

நண்பன் உனக்கு தமிழே வராது இதில கணினி மொழின்னு வேற சொல்லி இருக்க. எப்படி சமாளிக்க போகிறாய் என்றான். டேமேஜேர்தானே. மேய்க்கிற வேலை நமக்கு தெரியாதா என்று சொல்லிவிட்டு ஐதராபாத் வந்தேன். 

மின் தூக்கிக்காக காத்திருந்த போதுதான் அவளைப் பார்த்தேன். பக்கத்து மின் தூக்கி வரிசையில் அவள் நின்றிருந்தாள். மஞ்சள் நிற சூடிதார், ஊதா நிறா துப்பட்ட, பச்சை நிறத்தில் செருப்பு, ரோஸ் பவுடர் போட்டிருந்தாள். ஆரஞ்சு வண்ண நகப்பூச்சும், பஞ்சு மிட்டாய் உதட்டுச் சாயமும் போட்டு, ஒரு வெள்லை ரோஜா காதோரம் வைத்திருந்தாள். பார்த்ததும், ரயில் நிலைய வாசல் போஸ்டரில் பார்த்த தெலுங்கு பட கதாநாயகி கவனம் வந்தது. என் சட்டைப்பையில் இருந்த கைக்குட்டை, துண்டாய் மாறவா என்றது.

அதற்குள் பின்னால் இருந்தவன் “போரா” என்றான். நான் இல்லை இருக்கா என்றேன். திரும்பவும் “போரா” என்றான். எங்கே என் ஆளை இவன் துண்டு போடுவானோ என்று கண்டிக்க திரும்புகையில் அவள் மின் தூக்கியும் வர அவள் உள்ளே நுழைந்தாள். அப்போதுதான் தெரிந்தது. என் மின் தூக்கி வந்தும் நான் உள்ளே போகாததால் அவன் கோபத்தில் என்னை போரா(போடா) என்று தெலுங்கில் சொல்லியிருக்கிறான். 

ஆறாவது மாடியில் இறங்கி அவசரமாய் வெளியே வர அவளும் இறங்கியிருந்தாள். எப்படியோ என் அதிர்ஷ்டம் நான் டேமேஜராகவும், அவள் என் குழு தலைவியாகவும் அமைந்தது. மதியம் அகோரப் பசியுடன் அலுவலக கேண்டீனுக்குப் போனபோது அவளும் வந்திருந்தாள். சரியாக இரண்டே இருக்கைகள் எதிர் எதிரில் காலியாக இருந்தன. 

நான் கை காட்ட அவளும் நாணத்துடன் சிரித்துக் கொண்டே அங்கு அமர்ந்தாள். நான் எதிரில் அமர்ந்தேன். இருவரும் சூப்பும், சாப்பாடும் ஆர்டர் செய்ய பரிமாறுபவர் ஒரு கிண்ணத்தை என் முன் வைத்தார். எடுத்து சர்ரென்று உரிந்த பிறகுதான் தெரிந்தது அது சூப் இல்லை. படு காரமான ஆந்திரா ஆவக்காய் ஊறுகாய்.

ஒரு புறம் ஒரு வருசத்து சைட் டிஷ்ஷை ஒரே மூச்சில் காலியாக்கிவிட்ட வருத்தமிருந்தாலும், ஆசிட் குடித்தாற்போல் வாயிலிருந்து வயிறு வரை எறிந்தாலும், காதலி என்ன நினைப்பாளோ என்று சிரித்தபடி பார்த்தேன். அவள் கண்ணில் பிரமிப்பு தெரிந்தது. எதுவும் பேசாமல் உணவு முடித்து வேலைக்குத் திரும்பினோம்.

நான் என் அறையிலிருந்து அவளையே பார்த்துக் கொண்டும், அவள் அவ்வப்போது என்னைப் பார்த்துக் கொண்டும் எங்கள் வேலையில் மும்முறமாக இருந்தோம். அலுவலகம் முடிந்து கிளம்புகையில் நான் அவளை ஏக்கமாக பார்க்க, அவள் நாணமாய் சிரித்துக் கொண்டே, தலை குனிந்து நின்றாள். கம்பெனி பஸ் வரவும், இருவரும் பக்கத்து பக்கது இருக்கையில் அமர்ந்தபடி எங்கள் தங்குமிடத்துக்கு வந்தோம். இறங்கிப் போகையில் என்னை பார்த்து ‘நல்லோடா’ என்று சொல்லிவிட்டு ஓடிவிட்டாள்.

என் அறையில் என் சக ஊழியன் ஏபிசிடி(Akkumalla Bangaru Chinna Dorasami சுருக்கமாக) ரெட்டி நண்பனானான். அவன் ஏற்கனவே ஒரு பெண்ணைத் துண்டு போட்டிருந்தான். அவள் பெயர் அஸ்கா. என் ஆளும் அஸ்காவும் தோழிகள். பேருந்தில் வருகையில் நான் என் ஆளைப் பார்த்துக் கொண்டே வருவதைப் பார்த்து என் நண்பன் நீ அவளுக்குத் துண்டு போடுகிறாயா என்றான். நான் ஆம் என்று சொல்லி, அவன் ஆளிடம் சொல்லி என் துண்டை ஏற்றுக் கொள்ள உதவ வேண்டும் எனக் கேட்டேன். 

அவன் அவளும் உன் துண்டை ஏற்றுக் கொண்டாள் என்று எப்படி தெரியும் என்றான். அவள் என்னைப் பார்த்து சிரித்து ‘நல்லோடா’ என்று சொல்லிவிட்டு ஓடினாள் என்றேன். அவன் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்து பிறகு சொன்னான். நல்லோடா என்றால் நான் நினைத்தாற்போல் நல்லவன் என்ற அர்த்தம் இல்லையாம். கருப்பா என அர்த்தமாம். அவள் செல்லமாய்த்தான் சொன்னாள் என்று சொல்லி சம்மதிக்க வைத்தேன். 

அன்றும் மதியம், உணவுக்குப் போகும் போது இரண்டே இருக்கைகள் காலியிருந்தன. எதிர் எதிரில் அமர்ந்து அவள் சோறு சாப்பிட்டாள். நான் அவளைக் கண்ணால் சாப்பிட்டபடி ஏதோ கொரித்தேன். அவள் வழக்கத்தை விட ரொம்பவும் அழகாக இருந்தாள். சாப்பிட்டு முடித்ததும், மெதுவாக கிசு கிசு குரலில் ப்ரேமா? என்றாள். அப்போது அந்த வார்த்தையின் விபரீதம் எனக்கு தெரியவில்லை. அவளை அப்படி செல்லமாக அழைக்கச் சொல்கிறாள் என நினைத்து நானும் கிசுகிசு குரலில் ப்ரேமா என்றேன். ச்ச்ச்சீ என்றபடி ரொம்பவும் வெட்கத்துடன் சிரித்தால்.

ரெட்டி? என்றாள். நானும் ரெடி என்று எழுந்துக் கொண்டேன். அவளும் என்னுடன் கிளம்பி வர ஜோடியாக நடக்கத் தொடங்கினோம். பாரதி ராஜா படத்தில் வருவது மாதிரி வெள்ளை உடைதேவதைகள் சுற்றி வருவது போல் எங்கள் இருக்கைக்குத் திரும்பினோம். பார்வையாலேயே எங்கள் காதல் வளர்ந்தது. நான் அவளுடன் பேசுவதற்காகவே மொக்கை தெலுங்கு படங்களெல்லாம் பார்த்து மொழி அறிவை வளர்த்துக் கொண்டதில் ப்ரேமா என்றால் காதல் என்று புரிந்து கொண்டிருந்தேன்.

இரண்டு மாதங்கள் சென்றதும், அஸ்கா மூலம் என் ஆளின் அப்பன் அதான் என் மாமா, அவளைப் பார்க்க வருவதாகவும், அப்போது அவரிடம் எங்கள் காதலை சொல்லி திருமணத்துக்கு சம்மதம் வாங்க வேண்டும் என்றும் சொல்லி இருந்தாள். நானும் அவர் வந்த உடன் போய் பார்த்தேன். ‘மீரு ரெட்டியா’ என்றார். அட எவ்வளவு நல்ல மாமா என்று சந்தோசத்தில், நானும் ‘அவுனு! ரெடி’ என்றேன். 

‘ப்ரேமிஸ்தாவா’ (காதலிக்கிறாயா) என்றார். நான் அவர் சம்மதிக்க மறுத்து அவர் மகளின் காதலைத் திரும்ப கேட்கிறார் என நினைத்து ‘இஷ்டம் லேது’ (விருப்பமில்லை) என்று சொன்னதும், அவர் என்னை வெளியே போகச் சொல்லி விரட்டினார். என் ஆள் அழுது கொண்டு ஓடி விட்டாள். ரெட்டியும் அஸ்காவும் என் மீது கோபமாகி பேசுவதை நிறுத்திக் கொண்டார்கள். என் ஆளும் வேலைக்கு வரவில்லை.

பதினைந்து நாட்களில், என் ஆளின் திருமணம் அவள் மாமா பையனுடன் நடப்பதாக அறிந்தேன்.  உயிரே போனாலும் பரவாயில்லை. என் ஆளைக் கடத்தியாவது திருமணம் செய்ய வேண்டும் என்ற முடிவோடு, அதிகாலை மூன்று மணிக்கு சத்திரத்தில் நுழைந்து என் ஆளின் அறைக்குச் சென்றேன். அவள் கழுத்தில் புதுத் தாலியோடு படுத்திருந்தாள். 

அப்புறம்தான் தெரிந்தது, இரவு 12.11க்கு கலியாணம் முடிந்திருந்ததும் நான் லேட்டாக மூன்று மணிக்கு சென்றதும். அவள் கோபமாக ‘கருப்பா! என்ன திமிர் இருந்தால் காதலித்து விட்டு என் அப்பா காதலிக்கிறாயா என்றால் விருப்பமில்லை என்று சொல்வாய்’ என சீறினாள். காதலைத் திருப்பிக் கொடுக்க சொல்கிறார் என நினைத்து விருப்பமில்லை எனச் சொன்னதை சொல்ல முடியாமல் நொறுங்கிய இதயத்தை அவள் காலடியில் போட்டு விட்டு, வேறு இதயத்துடன் அமெரிக்கா வந்துவிட்டேன். 

(டிஸ்கி: எழுத்துப் பிழைகள் அண்ணாச்சியின் ஒரிஜினாலிட்டிக்காக:)))

இதையும் ஒருக்கா படிங்களேன்

Monday, June 7, 2010

சொர்க்கத்தில் சோ.அசிங்கப்பன் -1

வடிவேலு: அல்லோ! ஆரு பேசறது

குரல்: நீதான்யா பேசற டுபுக்கு!

வடிவேலு: (என்னைய பார்த்தா எகத்தாளமா போச்சுறா உங்களுக்கு. வச்சிக்கிர்றேன் உன்னைய) யோவ். இதெல்லாம் புளிச்சி போனது. புதுசா ஏதாச்சும் சொல்லு. என்ன விசயம்?

குரல்: மூன் ட்வார்ஃப் பிக்சர்ல இருந்து மேனேஜர் பேசறேன். ரெடியா இரு. ஆட்டோ வரும். உடனே வரணும். 

வடிவேலு:ஏன்யா ஏன்யா. ஆட்டோன்னு பீதிய கெளப்பற. நான் மாட்டன்னு சொன்னனாய்யா

குரல்: சாரி. காருண்ணே. ரெடியா இருங்க. தலைவரு வந்துருவாரு(க்ளிக்)

(எதுக்கு நம்மள கூப்டுறாய்ங்க. தலைவருன்னு வேற பிட்ட போடுறான். ச்ச்சேரி. ரெடியாய்க்கிருவோம்.)

வடிவேலு:போலாமாண்ணே. எம்புட்டு நேரமா வெயிட்டிங்கு. 
(மூன் ட்வார்ஃப் பிக்சர்ஸ்)

மேனேஜர்:ஹி ஹி. வணக்கம்ணே. வாங்க வாங்க.

வடிவேலு: நேர பார்த்தா வணக்கம். ஃபோன்லன்னா நக்கலு! வந்து வச்சிக்கிர்றேன் உன்னைய. 

மேனேஜர்:அண்ணே! போங்கண்ணே! நாங்களும் மருததான். இந்த பிளிமெல்லாம் வேணாம். நேர போய் லெப்ட்ல ரெண்டாவது ரூம்பு.

வடிவேலு: போறேன் போறேன். என்னா பில்டப்பு.ஹும்

வடிவேலு:அல்லோ. எச்சூஸ் மீ! மே அய் கமின்?

குரல்:யாரது? தம்பி வடிவேலுவா! வருக வருக!

வடிவேலு:தெய்வமேஏஏஏஏஏஏஏஏ! நீங்கன்னு தெரியாம பேசிட்டேன் தெய்வமே! ஒரு வார்த்த ஃபோன்ல சொல்லியிருந்தா மாட்டன்னா சொல்லப்போறன் தெய்வமே. நீங்க போய் இம்புட்டு தூரம் வந்து...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

தல:தம்பி உதை..

வடிவேலு:அய்யா! தெய்வமே. நான் எதுவுமே சொல்லலையே தெய்வமே. ஏன் உதைன்னுகிட்டு

தல:பேச விடு தம்பி. தம்பி உதை..ச்செரி சொல்லலை. செந்தமிழ் மாநாட்டுக்கு திரைப்படத் துறை சார்பில் ஒரு குறும்படம் எடுக்க வேண்டும். முடியுமா?

வடிவேலு:அய்ய்யா! ஏன்யா இப்புடி. செய்ன்னு சொல்லக்கூட வேணாம்யா. செஞ்சிரலாம்யா. நீங்க கெளம்புங்க தெய்வமே. நான் தம்பிட்ட பேசிக்கிர்றன்.

வடிவேலு: நீங்க சொல்லுங்க தம்பி. என்னா ஸ்டோரி. யாரு டைரடக்கரு. ஈரோ யாரு? 

உதை: அண்ணே இப்போதைக்கு டைட்டில்தான் ரெடி. ‘சொர்க்க லோகத்தில் சோ.அசிங்கப்பன்’ மிச்சமெல்லாம் உங்க பொறுப்பு. 10 நாள் சூட்டிங்கு. 

வடிவேலு: (ஆஹா! ஏன்யா ஏன்! மொத்தமா ஒழிச்சிகட்டவா?) தம்பி..வந்து..பத்துநாள்ள..எப்புடி? படம் ஓடலைன்னா..

உதை: என்னாது. ப்ளூ ட்வார்ஃப் பேனர்ல ஓடாமலா. ஓட்டுவோம். ஒரு லட்சம் ப்ரிண்ட்னாலும் எடுத்து ஓட்டுவோம். நீங்க வேலையப் பாருங்கண்ணே. வெளிய ஆட்டோ நிக்குது. போங்க.

வடிவேலு: ஹ்ம். ஏந்தம்பி. ச்சும்மா ஆட்டோ ஆட்டோன்னுகிட்டு. வர்ட்டா
(போலிசுக்காரன விட கேவலமா இருக்காய்ங்களே. வரப்ப காரு. போறப்ப ஆட்டோவாடா. நடத்துங்க நடத்துங்க. இந்தக் கட்டதொரைக்கு கட்டம் சரியில்ல) ஏப்பா மேனசரூஊஊ மேனேசரு. ஆட்டோ கூப்புடுவியாம்யாய்யா.

மேனேஜர்: வாடி! என்னமோ திரும்பி போறப்ப வச்சிக்கிறன்னு சொன்ன!

வடிவேலு:யப்பா! ஆட்டோன்னு நானே நடுங்கிப்போய் வந்திருக்கேன். ஏன் இந்த கொலவெறி. 

மேனேஜர்:அந்த பயம் இருக்கட்டும். ஆட்டோ வெளிய ரெடியா இருக்கு. போங்கண்ணே போங்க!

வடிவேலு: ட்ரைவரண்ணே! கொஞ்சம் வீட்ல ட்ராப் பண்றிங்களா? 

ஆட்டோ: அண்ணே! நீங்களாண்ணே. ஏறி உக்காருங்கண்ணே. 

வடிவேலு: யப்பா! போற வழில டாஸ்மாக்குல கொஞ்சம் நிறுத்துப்பா. சரக்கு வாங்கிக்கிரணும். அப்புடியே நீயும் ஒரு க்வார்ட்டர் வாங்கிக்க. என்னைய எறக்கி விட்டுட்டு நீ ஏத்திக்க சாமி! நமக்கு நேரமே செரியில்ல..அவ்வ்வ்வ்வ்

வடிவேலு: நிப்பாட்டு நிப்பாட்டு. வீடு வந்திரிச்சி நிப்பாட்டுண்ணே. ரெம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப டேங்க்ஸ். 

(செந்தமிலப்பத்தி வெளம்பரப்படம் எடுக்க நாந்தானா கெடச்சேன். நம்ம இங்கிலீச வெச்சித்தானே பேமசானது. நாம பேசினா அப்புடி வார்த்த இருக்கான்னு வெள்ளக்காரனே கம்பீட்டர்ல தேடுவானே. என்னையப்போயி இதுக்கு கூப்புட்டு, எல்லாத்தையும் நீயே பார்த்துக்கடான்னா நான் என்ன பண்ணுவேன்! என்ன பண்ணுவேன்! ச்ச்சேரி. சரக்கப் போடுவோம். அகுடியா வந்தா அகுடியா. தூக்கம் வந்தா தூக்கம். என்ன நாஞ்சொல்றது..ஆஆஹா! பொலம்ப விட்டுட்டானுங்களெய்யா பொலம்ப விட்டுட்டானுங்களே..ஹ்ம்ம்ம். என்னா டைட்டிலு? சொர்க்க லோகத்தில்.. கொர்ர்ர்ர்)

(கனவில் சொர்க்க லோகத்தில் அசிங்கப்பன்)

வடிவேலு: என்னா இடம் இது? யாரயாச்சும் கேக்கலாம்னா ஒரு பயத்தையும் காணமே.. ம்ம்ம்.. அந்தா ஒரு வெள்ளக்காரன் வாரான்..அவன கேப்போம்..ஏஏஏஏய்ய்ய்.. எச்சூஸ் மி.. ஊ ஆர்ர்ர்ர்ர்ர்ர் யூஊஊஊ, கமான் டெல் டெல்

ஜேம்ஸ் பாண்ட்: வாட்? மீ? மை நேம் ஈஸ் பாண்ட்! ஜேம்ஸ் பாண்ட்

வடிவேலு:மை நாம் அப்பன்! அஸ்ஸ்ஸ்ஸிங்ங்ங்ங்ங்கப்பன்!

(இடைவேளை)
~~~~~~~~~~~~~~~~~

Thursday, April 8, 2010

பதிவர்ஃபோபியா பலவிதம்..

(ஓசில ப்ளாக்கர் கிடைச்சது, ஒளிஞ்சிகிட்டிருந்த எழுத்தாளன் எட்டிபார்த்தான்னு எழுத வந்துட்டு, தானே வச்சிக்கிட்ட ஆப்பு, பின்னூட்டத்துல அடிச்ச வேப்பிலை, ஓட்டு படுத்தற பாடு, அறச்சீற்றம், புறச்சீற்றம், குழு கூடி கும்மின்னு பலதுலயும் சிக்கி சின்னாபின்னமாகி, நிச்சயமா ஒரு மனோதத்துவ நிபுணர்கிட்ட போனா கொஞ்ச்ச்ச்சமா கழண்டிருக்குன்னு சந்தேகப்படுற அளவுலதான் இருக்கோம் என்பதில் சந்தேகமில்லை. செல்ஃப் அனாலிசிஸ்ல எனக்கு கலாய்ச்சோ ஃபோபியா இருக்கும் போல தெரியுது. அதனால மத்த பதிவர்கள் ஒரு மனோதத்துவ நிபுணர்கிட்ட போய் பிரச்சனைய சொன்னாமாதிரி கலாய்ச்சிக்க வேண்டிய நிர்பந்தம். ஹி ஹி..)

கதிர்: நல்ல விசயமாச்சேன்னு கண் தானம் பத்தி எடுத்து சொல்லி கிட்ட கிட்ட 85 கண்ணு தானம் வாங்கிட்டங்க. இப்ப என்னன்னா யாராச்சும் தாத்தாக்கு ஜலதோஷம்னு பேசினாலே, கண் தானம் பண்ணிட்டீங்களான்னு கேட்டுப்புடுறேன். கடைக்கு போனா கண்ணைப் பார் சிரின்னு போர்ட் வெச்சிருந்தா லவட்டிட்டு போலாமான்னு வருது. காலையில தூங்கிட்டிருக்க தயிர்க்கார பொம்பள நம்ம பாப்பாவ கண்ணூஊன்னு கூப்டுருக்குங்க. நான் வாரி சுருட்டிகிட்டு தோ வந்துட்டேன்னு ஓட, தங்கமணி கண்ணுல க்ராஃபிக்ஸ் தெரிஞ்சதுங்க. ஹி ஹின்னு சமாளிச்சிட்டு ஆஃபீஸ் கெளம்புறேன், பக்கத்தூட்டு அக்கா பேத்திக்கு சோறூட்டுது. ஒளுங்கா சாப்புடு, இல்லீன்னா கண்ணு புடுங்கற மாமாவ கூப்புடுவேன்னு மெரட்டுது. அதான் வந்துட்டேன். 

டாக்டர்:இது நல்ல விசயந்தான். ஆனாலும் ஃபாலோயர், ஓட்டுன்னு அடிமனசு தாக்கத்துல இன்னும் சிறப்பா செய்யணும்னு வர நம்பரோ ஃபோபியா. அதுனால கொஞ்ச நாளைக்கு கண்ண பார்த்து காதல் கவிதை எழுதுனீங்கன்னா சரியாயிரும். 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பாலாசி: அதிகாலைச் சூரிய ஒளியில் வரட்டு வரட்டென்ற விளக்குமாற்றின் ஒலியில் சிறுவயது நினைவுகள் சிலிர்தெழ, நடுங்கியபடி எழுந்து, சிறுபறவை ஒலியை ரசித்தபடி, கோபால் பற்பொடி கொண்டு துலக்கி, வெறும்பல்லில் போட்டிக்கு ஒலியெழுப்பி மகிழ்ந்தவாறே நாயர்கடை சென்று மணக்கும் மசால் வடையும், மசாலா பாலும் உண்டு..

டாக்டர்: யோவ்! என்னா?

பாலாசி: இப்ப கொஞ்ச நாளா இப்புடிதாங்க எழுதவருது. எல்லாரும் என்னமோ சாண்டில்யன் பேரன் ரேஞ்சுக்கு ஏத்திவிடுறாங்களா? இன்னைக்கு ஆஃபீஸ்ல மேனஜர்கிட்ட இப்புடி பேசப் போய் உங்க கிட்ட போய் காட்ட சொன்னாருங்க.

டாக்டர்: இது வருணனையோஃபோபியாப்பா. கொஞ்ச நாளைக்கு கவிதை படிக்காம இரு சரியாயிரும். 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஷங்கர்: செக்கர் வான் நிறக்காவி அணிந்த பின்னா, கருகருவென தாடி வளர்த்த பின்னா, ஒளகப் படம் பார்த்த தாக்கமா? ஒடுங்கி நின்ற மனதின் ஏக்கமா? போதி மரம் தேடினேன். மீதி மரம் தென்படவில்லை. வெண்ணெய். தோசை. உள்குத்து. வெளிக்குத்து. சென்னை வெய்யிலா கொக்கா?

டாக்டர்: ஒன்னுமே சொல்ல வேணாம். கொஞ்ச நாளைக்கு சாரு சங்கர் கூட பேசாம இருங்க. ஜெட்லீ கூட ஒரு படம் விடாம பாருங்க. கொழப்போமேனியா வந்தமேனிக்கு போயிரும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பழமை: ஆங்கிலம் கலந்து பேசிட்டேன்னு அப்புச்சிக்கு கோவம். உள்ளுக்குள்ள குத்து குத்துன்னு குத்துது. இவனுங்க வேற எம்பேரு பழமைன்னு எழுதுனாகூட படிக்காமலே இதுல உள்குத்து இருக்கான்னு போட்டு கடுப்பேத்துறானுங்க. அன்னைக்கு இடுகை போட்டு லேபில்ல உள்குத்துன்னு போட வச்சிட்டானுங்க..அவ்வ்வ்வ்வ்வ்.

டாக்டர்: இது செம்மொழியோ டெஃபிஷியன்சி சிண்ட்ரோம் பழமை. ஒரு பத்து நாளைக்கு அகராதி, சங்கப்பாடல்னு படிச்சா சரியாயிரும். இதும் ஒரு ஒவ்வாமைதான்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
முகிலன்:கடவுள் செஞ்சுரி. ரங்கநாதன் தெரு. ராயல் சேலஞ்சர்ஸ். தோஹால நகை. சென்னைல போறப்ப பதிவர் சந்திப்புன்னு கூப்பிட்டா போலாமா வேணாமா? ப்ளேன்ல முகிலன் ஸ்னோல விளையாடலாம்னு அடம் புடிச்சா என்ன பண்ணுவேன்.?

டாக்டர்: இதான் ப்ரச்சனையா? இது டபுள் சேனல் ஊருக்குபோனோ ஃபோபியா. காலண்டர்ல மொத்தமா தேதி கிழிக்க சொல்லுமே. கொஞ்சம் பொறுத்துக்க வேண்டியதுதான். ஊருக்கு போய்ட்டு வந்து இடுகை தேத்தினா சரியாயிரும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அதுசரி:  :O))). கொஞ்ச நாளா யுனைடட் அராப் ஏர்லைன்ஸ்ல ஏறிட்டு, ஷிவாஸ் ரீகல், ஹலால் பண்ணாத சிக்கன், போர்க் சாப்ஸ்னு ஆர்டர் பண்ணி அவிங்க அதெல்லாம் இல்லன்னா, சரி நான் வெச்சிருக்கேன் செர்வ்பண்ணுன்னு வெறுப்பேத்தணும் போல வருது. அந்தரத்துலயே எறக்கி விட்ருவானா டாக்டர்? :O)))

டாக்டர்: இதுக்கு கொழுப்போஃபோபியான்னு பேரு. கொஞ்ச நாளைக்கு வெறும் மோர்க்குழம்பு சாதம் சாப்டா சரியாயிருவ!

அதுசரி: அதுக்கு கருப்பு சாம்பார் சாப்டு செத்துபோய்க்குவேன் போய்யா :O)))
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கலகல: ஷிட். ஷ்ஷ்ஷ்ஷ்ஷிட். ப்லடி ஷிட்.

அட்டெண்டர்: நேரா போயி லெப்ட்லங்கம்முனி

கலகலா: வாட் ட ஹெல். இங்கதானே சொன்னாங்க

அட்டெண்டர்: அட இது டாக்டர் ரூம்புங்க அம்முணி. ஷிட்டெல்லாம் நேரா போய் லெஃப்ட்ல

கலகல: யோவ். ஒத்துய்யா.ஷிட் @#!~*&^+_|].வந்தூட்டான்

டாக்டர்: வாம்மா. உக்காரு

கலகல: டாக்டர் வேணாம் அவந்தான் ஏதோ சொல்றான்னா நீங்களும் வாங்கி கட்டிக்காதிங்க. த ஹோல் வர்ல்ட் ஈஸ் ஷிட். &^%$#@!

டாக்டர்: ஓஓஓஓ. புரிஞ்சது. கொஞ்ச நாளைக்கு சமையல் இடுகை போடும்மா. மிளகுரசம், கருப்பு சாம்பார். ஷிட்டோஃபோபியா சரியா ‘போயிரும்’

கலகல: ம்கும். போகல நீ போய்ச்சேந்துருவ. வர்ட்டா.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பிரபா:அய்யா! வணக்கங்கைய்யா!

டாக்டர்: அட வித்தியாசமா இருக்கே.

பிரபா: ஆமாங்கைய்யா. நடைய மாத்திட்டம்ல. பிரச்சனையே அதாங்கையா. சுத்திலும் எதப்பார்த்தாலும் இடுகை மேட்டராவே தெரியுதுய்யா. பயங்கரமா கற்பனை பிச்சிக்கிட்டு வருதுய்யா. ஒன்னுமில்ல பட்டாபட்டின்னு ஒருத்ததரு பின்னூட்டம் பார்த்ததும் எங்கூருல பட்டாபட்டி நெஜார் போட்ட தாத்தாவ டரியல் பண்ணது கவனம் வந்து பஸ்லயே ஐஃபோன்ல இடுகை போட்டுடேன்னா பார்த்துக்குங்களேன். அருவத்தியஞ்சு இடுகை ரெடியா இருக்குய்யா. ஒரு 5 மினிட்ஸ். உங்களமாதிரி எங்க ஊருல ஒரு டாக்டரப்பத்தி ஒரு இடுகை போட்றங்கைய்யா?

டாக்டர்: இது பின்னூட்டோ டெஃபிஷியன்ஸி சிண்ட்ரோம் அண்ட் இடுகையோ மேனியா காம்பி. நிறைய பின்னூட்டம் போடுங்க. நைட்டூட்டில நெட்ல லாகின் பண்ணாதீங்க. முக்கியமா பஸ் வாட்ச்சிங் ஆகவே ஆகாது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வானம்பாடி: யோவ் என்ன உடுய்யா. ஏன்யா கடத்திகிட்டு போறீங்க.

ஆம்புலன்ஸ் அட்டெண்டர்ஸ்: ங்கொய்யால. கலாய்ச்சோ மேனியா முத்திப்போச்சுன்னு அட்மிட் பண்ணா கக்கூசுக்கு போறேன்னு தப்பிச்சி வந்து இங்க டாக்டர் வேலையா பார்க்குற. இருடி அங்க வச்சி நொங்கெடுக்குறோம். 
~~~~~~~~~

Friday, March 5, 2010

பதிவர்களை டரியலாக்கும் ஜூனியர்கள்....

ஜூனியர் முகிலன்: அம்மாவ வம்புக்கிழுத்தா அடி விழுகுதுன்னு என்னிய தோச திங்கவிடாம, டேன்ஸ் ஆட விடாம பண்ணி இடுகை போட்டது கூட பரவால்ல. ஸ்னோக்குள்ள இறக்கிவிட்டு ஃபோட்டோ புடிச்சி போட்டு இதுக்கு நான் அலையறேன்னு இடுகை போட்டாரு பாருங்க..அவ்வ்வ்வ்...என்னா குளிரு!..குடுகுடுப்பை அங்கிள் எதிர் கவுஜ போட்டா இவரு எதிரெதிர் கவுஜ போட்டாரு சரி. அதுக்காக அந்தக்காவ ஸ்னோல இறக்கி அவரு போட்ட ஃபோட்டோக்கு எதிர் ஃபோட்டோ போடுறாரே..சொல்லி வைங்க.. நல்லால்ல இதெல்லாம்.

ஜூனியர் ஆருரன்
: பாவி மனுசன் பாண்டிச்சேரி போலாமுடா. இந்த கண்ணாடிய தூக்கி கடாசிடலாம்னு சொன்னாரேன்னு நம்ம்ம்ம்ம்பி போனேன். இத வச்சி ஒரு இடுகைய தேத்தி பெரிய சமூக சேவகராயிட்டாரு எங்கப்பா!

ஜூனியர் நசரேயன்: அல்ல்ல்லோ! இந்த மனுசன் மனசுல பெரிய துண்டாலங்கிடி ஈரோன்னு நெனப்பு. போட்டோ போடமாட்டாரு. என் ஃபோட்டோ போட்டா என்ன? என்கூட ஆன்லைன்ல கேம் ஆடி தோத்துப் போன கடுப்பில இடுகை தேத்தி நம்ம பேர ரிப்பேராக்கப் பார்த்தாரு. பின்னாடி நின்னு என்ன்ன்ன்ன்னாஆன்னேன்! ச்ச்ச்ச்ச்சும்மான்னு அப்புடியே டெயில் பீச மாத்தி காமெடி பீசாயிட்டாரு!

குடுகுடுப்பையார் வூட்டு சின்னம்முனி
: எதிர் கவுஜ எழுத தெரிஞ்ச எங்கப்பாக்கு எதிர் ஸ்னோமேன் பண்ண தெரியாது தெரியுமா? யார் ஊட்டு ஸ்னோமேன் ஃபோட்டோவோ போட்டுட்டு அசல்னு தொடுப்பு குடுக்காத ஊழல அதுசரி அங்கிள் கூட கண்டு புடிக்கல. அதெல்லாமாவது பரவால்லைங்க. இதான் ஜக்கம்மா உழுந்து கும்புடுன்னு அழிச்சாட்டியம் பண்ணாரு தெரியுமா? அவ்வ்வ்வ்வ்.

கதிரூட்டு சின்னம்முனி
: ஒரு நா ராத்திரி நல்லா தூங்கிட்டிருந்தேனா? கிக்கிக்கினு சிரிப்பு சத்தம். எழுந்து பார்த்தா சத்தமில்லாம டி.வி. வெச்சிட்டு டேன்ஸ் பார்த்துகிட்டு சிரிப்ப கசிய விடுறாரு எங்கப்பா. நீங்களே சொல்லுங்க, நடுராத்திரில காரணமில்லாம ஒருத்தரு கிக்கிக்கின்னா சிரிப்பு வருமா வராதா? நானும் சிரிச்சிட்டு தூங்கிட்டேன். அடுத்த நாள் பார்த்தா என்னையும் சேர்த்துகிட்டு செம பில்டப்போட இடுகை போட்டுட்டாரு எங்கப்பா!  அப்புறம் கார்ல தூங்கிட்டிருந்த என்னய வெச்சு காமிரா இடுகையில காமெடி பீசாக்கிட்டாரு. கொஞ்சம் ஏத்தமாதான் போச்சு அய்யாக்கு. அம்மாவ காமெடி பண்ண போய் அடுத்த நாள் சாப்பாடு கடையில.. அப்பவே சொன்னேன். கசியும் உண்மைன்னு:))..ஹி ஹி. வர்ட்டா.

பழமையூட்டு சின்னம்முனி: தாத்தாக்கு பல்லு விழுந்து போச்சின்னு எவ்ளோ ரகசியமா சொன்னேன் அப்பாட்ட. ஊரு பழமை பேசுற மனுசனுக்கு பல்லு விழுந்தத சத்தமா சொன்னாலோ, வானத்துக்கு காட்டினாலோ பல்லு மொளைக்காதுன்னு தெரியாது? இதப் போயி இடுகையா போட்டு, இப்ப பாருங்க தாத்தாக்கு பல்லே முளைக்கல. பர்கர் கேட்டேன்னு இடுகைய போட்டு மானத்த வாங்கீட்டு இவரு ஃபாண்டு சாப்புட்டதுமில்லாம படம் புடிச்சி போட்டு வெறுப்பேத்துறாரே..இந்த மாப்பு மாமா வேஸ்டு பீசு. அப்பாவ ஒன்னும் கேக்க மாட்டீங்குறாரு.

ஜூனியர் பாலாசி: அட இருங்க இருங்க. ஈரோடு பதிவர் குழுமத்துல இருந்து மொத்தமா அடிக்க பொறப்டா எப்புடி. இவ்ளோ பெரிய மனுசங்க இருக்கீங்க. எங்கள அழகழகா படம் புடிச்சி போட்டுட்டு நாங்க பிறக்க வழி பண்ணாம தமிழ்மணத்துல கவிதை வருமா, கட் பேஸ்ட் போடலாமான்னு இருக்கானே மனுசன். அதுக்கும் ரெண்டு சேர்த்து போடுங்க சொல்றேன்.


ஜூனியர் வானம்பாடிகள்: அய்ய! யப்பா! 25 வருசத்துக்கு முன்னாடி கொசுவத்தி சுத்தி இடுகை தேத்தின மனுசன் இப்புடி சொந்த காசுல சூனியம் வெச்சுக்கலாமா? ஹூஊஊம் அவன் அவன் எடுக்கற முடிவு பாதகமாத்தான் போவுது வானம்பாடி!

Thursday, February 4, 2010

தி.கு.ஜ.மு.க. முதல் மாநாடு. (நிறைவு)

(5 நிமிடத்திற்குள் முகிலன் வருகிறார்)

குடுகுடுப்பை: என்ன முகிலன் சாப்டாச்சா அதுக்குள்ள?

முகிலன்: இல்ல தலைவரே! அவ்வளவு தூரம் போகணுமே என்ன சாப்பாடுன்னு போன் பண்ணேன் தங்கமணிக்கு. சாப்பிட்டு கழுவி வெச்சிட்டாங்களாம். தான் கழுவினதால தட்டில பருக்கை கூட இல்லைன்னு நக்கல் வேற. சரிம்மான்னு நொந்து போய் சொன்னா, காலைல சாப்பிட்டு கிளம்பறப்போ பார்த்தாங்களாம். வாயோரம் ஒரு பருக்கை இருந்திச்சி பாருங்கன்னாங்க. அதான் சாப்பாடு. கிர்ர்ர்ர்ர்ர்ர். நீங்க நடத்துங்க.

(உணவுக்குப் பிறகு தொடர்கிறது)

அது சரி: இங்க பாருங்க தலைவரே. காதல் சொல்லி வந்தாய் எடுத்துக்குங்க. அது ரேட் பேசிக்கலாம். :O))). வேற எந்தக் கதையும் வடக்கச்சி ஏன் நசரேயன லவ் பண்ணுதுன்னு லாஜிக் இடிக்கும். பதிவில கிழிச்சி ஒட்டிடுவாங்க. இதுன்னா தற்கொலையா காதலான்னு ஒரு கேள்வி வந்து, இதுவே மேலுன்னு முடிவெடுத்தான்னு மாத்திக்கலாம்.

குடுகுடுப்பை:(படுபாவி. என்னமா மார்க்கட்டிங் பண்ணி துட்டு பாக்குறாருய்யா இந்தாளு! எதுனாச்சும் கேட்டா கலிஃபோர்னியா தீர்மானம்னு ஆரம்பிச்சிடுவாரே! இப்பதான் தலைவரேன்னு கூப்புடுறாரு வேற) அதும் நல்ல ஐடியாதான்.

அது சரி: ஹீரோக்கு ஒரு ஃப்ரெண்ட் கேரக்டர சொருகி விடுறேன். பழமைதான் அந்த ஃப்ரெண்ட்.

நசரேயன்:யோவ். அப்ப படத்துல கூட என்னால துண்டு போட முடியாதா? என்னா வேலையிது?

அது சரி: அட இருங்க அண்ணாச்சி. நீங்க வெரட்டி வெரட்டி வடக்கச்சிக்கு துண்டு போடுறீங்க. அந்தம்மணி ஓடி ஓடி பழமைக்கு துண்டு போடுது. ஒரு நாள் ஆங்கிலத்துல ஐ லவ் யூனு சொல்லிடுது. பழமைக்கு கோவம் வந்து ஒன்னு உன் தாய்மொழி இந்திலயாவது சொல்லியிருக்கணும். இல்ல எனக்காக தமிழ் கத்துக்கிட்டாவது சொல்லியிருக்கணும்.

ஆங்கில மோகத்துல சொன்ன உன்காதல் எனக்கு வேணாம்னு சொல்லிடுறாரு. மனசொடிஞ்சி அந்த பொண்ணு தற்கொலை பண்ணிக்க நயாகரா போகுது. அப்ப நசரேயன் ஒளிஞ்சிருந்து சொந்தக் குரல்ல ஒரு பின் நவீனத்துவ பேதாஸ் சாங் பாடுறாரு. இந்தப் பாட்டு கேக்குறத விட, நயாகரால விழுந்து எலும்பு நொறுங்கி சாவரத விட இந்தக் காதலை ஏத்துக்கிறது பெரிய வலியில்லைன்னு ஹீரோயின் கை பிரிச்சிக்கிட்டே ஹீரோவ பார்த்து ஸ்லோ மோஷன்ல ஓடி வராங்க. நசரேயனும் ஓடி வராரு.

நசரேயன்: வெள்ளை ட்ரெஸ்ல.

சின்னம்மணி: ரொம்ப முக்கியம்.

நசரேயன்: ஏ! அதோட கத முடிஞ்சிரும்லா! நான் எப்புடி லால்பாக்ல பூ குடுக்குறது?

முகிலன்: அடடடா. கனவு சீன் இருக்கில்லா

நசரேயன்: அட ஆமா! அப்ப ஒரு பத்து பதினஞ்சி வடக்கச்சிங்கள வெள்ள ட்ரெஸ்ல உடுவீங்களா?

அது சரி: அக்கவுண்ட்ல எவ்வளவு போடுவீங்க? அத பொறுத்துதான்.

நசரேயன்: அட ஒரு நப்பாசைல கேட்டா! சரி அது கேமரா ட்ரிக்ஸ்ல வடக்கச்சி பத்தா பிரிஞ்சி வராமாதிரி பார்த்துக்குங்க.

குடுகுடுப்பை: காமெடிக்கு யாரு?

நசரேயன்: நானே டபுள் ரோல் பண்றேனே!

அது சரி: ம்கும். ஈரொயினும் நீங்களே இருங்களேன். சுண்ணாம்பு அடிச்சா அவ்வளவு செலவாகாது.

பழமை:(பொட்டியை தட்டியபடி) அட இருங்க நம்ம மாப்பு ஆன்லைன்ல இருக்காரு. அவர கேக்கலாம். ஏனுங் மாப்பு? பதிவர் பிக்சர்ஸ்ல ஒரு காமெடி ரோல் இருக்கு? யார போடலாம் சொல்லுங்க.

கதிர்: அது வந்துங்க மாப்பு, நானே பண்றேன். ஆனா கூட ஆரூரனும் இருந்தா கலக்கலா இருக்கும்.

பழமை: ஏனுங் அது சரி? ரெண்டு பேருக்கு காமெடி ரோல் கதையில முடியுமா?

அது சரி: நோ ப்ராப்ஸ். விக்கிரமாதித்தன், வேதாளம் ரெண்டு பேர்த்தையும் நசரேயனுக்கு ஃப்ரெண்டாக்கிடலாம்.

பழமை: சரிங்க மாப்பு. காமெடி ட்ராக் எப்படிங்க. நீங்களே எழுதுவீங்களா?

கதிர்: அது ஒன்னும் பிரச்சினையில்லிங்க. இந்த பாலாசி பய போடுற பின்னூட்டத்த தேத்தினாலே செம காமெடியா இருக்கும்.

பழமை: சரிங் மாப்பு! அப்ப தயாரா இருங்க. படப்பிடிப்பு தேதி சொல்லுவாங்க.

கதிர்: மாப்பு! அது வந்துங்..வந்துங்..கோவை சரளா நடிக்குதுங்ளா?

பழமை: இருங்க தங்கச்சிய கேக்கறேன்..

கதிர்: அட எனக்கில்லீங்..நீங்க வேற. ஆரூரன் கேக்க சொன்னாருங்..

பழமை: அப்புறங் மாப்பு, இந்த டைரக்‌ஷனுக்கு, திரைக்கதைக்கு கேமராக்கு எல்லாம் யார போடலாமுங்.

கதிர்: இருங்க! கேபிள கான்ஃபரன்ஸ்ல போடுறேன்.

கேபிள்: சொல்லுங்க தலைவரே.

கதிர்: அமெரிக்கால இருந்து பேசராங்க தலைவரே! ஒரு படம் எடுக்கறாங்களாம். டைரக்‌ஷன், கேமராக்கு எல்லாம் என்ன பண்ணலாம்னு கேட்டாங்க. அதான். மாப்பு நீங்களே பேசுங்க.

பழமை: சொல்லுங்க சங்கர். நல்லாருக்கீங்களா? அது வந்துங் தி.கு.ஜ.மு.க. சார்பில ஒரு படம் எடுக்குறமுங். அதுக்கு டைரக்‌ஷனுக்கு உங்கள கேக்க சொன்னாருங்! கதிர்.

கேபிள்: நானே பண்றேங்க பழமை! ஆனா ஒரு கண்டிஷன். என்னோட எண்டர் கவிதை ஒரு சாங்கா வரணும்.

பழமை: (போச்சுரா) எண்டர் தானுங்ளே! டைட்டில் சாங்கா வெச்சிடலாமுங். எப்புடீஈஈஈ

கேபிள்: அசத்திட்டீங்க தலைவரே. கேமராக்கு தண்டோராவ போடலாங்க! ஜாக்கி கிட்ட கன்ஸல்டேஷன் வெச்சிகிட்டா சூப்பரா பண்ணிடலாம். ஹீரோயின் யாருங்க.

தண்டோரா: ரீமாவ  போட்றலாமா கேளுங்கண்ணே.

அது சரி: இந்த பட்ஜட்டுக்கு ரீமாவோட டூப்பு கூட நடிக்கமாட்டாங்க. அங்கயே சௌகார்பேட்டயில யாராவது மார்வாடி வீட்ல வேலை செய்யற பொண்ணா பாருங்க.

நசரேயன்: வெள்ளையா இருந்தா போறாது சொல்லிபுட்டேன். என்னிய மாதிரி அளக்க்க்க்க்கா இருக்கணும். நாந்தான் செலக்ட் பண்ணுவேய்ன்.

குடுகுடுப்பை:(ஷூட்டிங்க் முடியறதுக்குள்ள எத்தன ஹீரோயின மாத்தணுமோ தெரியலையே) அதான் சொல்லிருக்கில்ல?

தண்டோரா: ஏங்க கேபிள்? விசாக்கெல்லாம் அவங்களே பார்த்துப்பாங்களா? எங்க லொகேஷன்லாம் கேட்டீங்களா? நெட்ல தேடி லோகல் சரக்கு ப்ராண்ட் நேமெல்லாம் பார்த்து வைச்சுக்கணும்.

அது சரி: நோ வே! அவ்வளவு பேரு இங்க வரதுக்கு, ஹீரோவ அங்க அனுப்பி விடுறோம். ஒரு வாரத்துக்கு. அது சீப். எப்புடீ?

கேபிள்: தல எழுத்துடா. எண்ட்ரீயே ஃபாரின் லொகேஷன்னு நினைச்சா ஏர்போர்ட்ல கூட ஷூட்டிங் பண்ண முடியாது போல.

குடுகுடுப்பை: ஓகே. இப்போ சாங்ஸ்.

அப்துல்லா: அய்! சாங் நான் பாடுவேன். அதுசரி கூட சொன்னாங்கல்ல.

குடுகுடுப்பை: (என் பிரச்சனை இவங்களுக்கு புரியுதா. ரெண்டு அம்மணிங்க வாயத் தொறக்காமலே மெறட்டுறாங்களே) அட இருங்க சார். பாட்டு இருந்தாதானே அப்புறம் பாடுறது யாருங்கற கேள்வி? கவிஞர் யாருன்னு தீர்மானம் பண்ணனும்ல. ஒரு பின் நவீனத்துவ சாங் நான் எழுதுறேன்.

கலகலப்ரியா, சந்தனமுல்லை: சொந்தமா எழுதணும். எதிர்கவுஜ போட்டா....

அது சரி: :O)))..கவுஜ மோசடிக்கும் சேர்த்து ஜக்கம்மாவும் குடுகுடுப்பையும் விரட்டப்படுவார்கள்.

குடுகுடுப்பை: சரிங்க ஆளுக்கு மூணு சாங் எழுதிக் குடுங்க. தலா ரெண்டு ரெண்டு அப்புடியே போட்டுடலாம். ஒண்ணே ஒண்ணு நான் எதிர் கவுஜ போட்டுக்கறேன்.

முகிலன்: அல்லோ. தல. எளக்கிய அணித் தலைவர் இதெல்லாம் வேடிக்கை பார்க்கவா உக்காந்திருக்கேன்.

குடுகுடுப்பை: யப்பா. ராஜா. படுத்தாதப்பா. அந்தகால சினிமாக்கு பாட்டு புத்தகம் மாதிரி இவங்க பாட்டுக்கு விளக்க உரை போட்டுக்க ராசா.

முகிலன்: சரி சரி! ஆனா இதான் கடைசி. பேக்ரவுண்ட் ம்யூசிக்குக்கு என்ன வழி?

தண்டோரா: தேவாக்கு ஒரு கம்பேக் குடுக்கலாங்க. அங்க இருந்தே டெலிகான்ஃபரன்ஸ்ல கிராமிய அவார்ட் குடுத்தா நல்லது.

நசரேயன்: என்னோட சாங் யாரு எழுதினதுன்னு சொல்லுங்க. முக்கியமா டூயட் சாங்.

கலகலா: அண்ணாச்சி! என்னோட கவுஜதான்.

நசரேயன்: போச்சிடா. படிக்கும்போதே ஸ்பெல்லிங் மிஸ்டேக் வருமே! அப்போ டூயட்டு?

அப்துல்லா: அந்த கடைசியா எழுதினாங்களே அந்த பாட்டு இருக்கட்டும்ணே. எஸ்பிபி மாதிரி மூச்சுவிடாம பாட அதான் சரி:))

நசரேயன்: நீர் பாடுவீரு. நான் மூச்சு விடாம வாயசைச்சா போய் சேந்திருவேன். அப்புறம் எப்படி துண்டு போடுறது?

தண்டோரா: அது முதுகு பக்கமா எடுக்கிறப்ப மூச்சு விட்டுக்குங்க சாமி. ரிலீஸ் எப்ப?

அது சரி: அது நான் சொல்றேன். சும்மா சுறா படத்துக்கெல்லாம் போட்டியா இறக்கி பேர கெடுத்துக்கறதில்லை. முடிஞ்சா எந்திரன். அது வர நேரமாகும்னா பெண்சிங்கம்.
(போயும் போயும் பெண்சிங்கத்துக்கு எதிரா ஊத்திக்கிட்ட படம்னு பேரு வந்தா ஒரே ஸ்ட்ரோக்ல குடுகுடுப்பை, ஜக்கம்மா, நசரேயன் எல்லாரும் காலி..அப்புடி ஒரு வேள எந்திரனையும் கவுத்துட்டு ஒரு தூக்கு தூக்கினா என்னோட ஸ்ட்ராடஜின்னு அமுக்கிறலாம் இவங்கள. அதுக்குள்ள திருட்டு டிவிடி வந்தா அந்த ஊழலையும் சேர்த்தே ஈசியா கழட்டி விடலாமே! எப்படியும் வின் வின் சிடுவேஷன்...ஹ ஹ ஹ)

குடுகுடுப்பை:(இப்படியெல்லாம் யோசிப்பீருன்னு தெரியாமலா நேத்தே ரம்யாவ வருங்கால முதல்வராக்கினேன்?) சரி சரி. அவங்க அவங்க ஒழுங்கா ப்ளான் பண்ணி வேலையப் பாருங்க. ப்ளான் முக்கியம். அடுத்த மாநாடு ரஷ் பார்க்க பின்னர் தேதி அறிவிக்கப்படும்.

அதுசரி: அட்லீஸ்ட் என்னோட கொள்கை விளக்கப் பாடலை பாடிட்டாவது கலைஞ்சி போகலாமே!

நசரேயன்: நான் சொந்த குரல்ல பாடவா?

(அடுத்த நிமிடம் நசரேயன் மட்டும் நிற்க அனைவரும் எஸ்ஸாகிறார்கள்)

Wednesday, February 3, 2010

தி.கு.ஜ.மு.க. முதல் மாநாடு.

(புதிய பொறுப்பாளர்களை அறிவித்த பிறகு சட்ட அணித்தலைவர் அது சரி அவர்களின் தீவிர எதிர்ப்பு காரணமாகவும், மற்ற பதவிகளுக்கான கோரிக்கைகள், ஒரே தலைவர் இரண்டு கட்சிக்கும் பொ.செ.வாக இருக்க முடியுமா என்ற முக்கியமான முடிவுகளை எடுக்கவும் தி.கு.ஜ.மு.க. அவசரக் கூட்டம் நடைபெறுகிறது)

குடுகுடுப்பை: ஜக்கம்மா சொல்றா! வணக்கம்! வணக்கம்! வணக்கம்!

அது சரி: ம்கும். இதக்கூட சொந்தமா சொன்னா செலவாயிரும்.

குடுகுடுப்பை: கட்சித்தலைவர் வரும்போது எழுந்து நிற்காமல், வணக்கமும் சொல்லாமல் இருப்பதுதான் பண்பாடா?

அது சரி: இல்லவே இல்லை. இனி நீங்க படப்போறதுதான் பெரும்பாடு.

முகிலன்: இலக்கிய அணித்தலைவர் நாந்தான் ரைமிங்கோட பேசலாம் என்பதை சபைக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

குடுகுடுப்பை: எல்லாரும் வந்தாச்சா? அங்க யாரு சேர்ல தலைல கை வெச்சிக்கிட்டு தூங்கறது?

வானம்பாடி: நான் தூங்கல தூங்கல. முடி பறக்குதுன்னு எழுதி தொங்கவிட்டுக்கிட்டு தானே உக்காந்திருக்கேன்.

குடுகுடுப்பை: நசரேயன் எங்கே?

வானம்பாடி: அதோ ஜன்னல் கிட்ட நின்னு கட்சிப் பணியாற்றுகிறாராம்.

குடுகுடுப்பை: இங்க வாரும்யா நசரேயன். அங்க என்ன பண்றீரு.

நசரேயன்: ஏ! மூணாவது வீட்டில ஒரு வெள்ளச்சிக்கு துண்டு போடுறம்லா? இந்தா வந்துட்டேன்.

குடுகுடுப்பை: ஆரம்பிக்கலாமா?

(வாட் ட ஹெல்! நாமன்னா இளிச்ச வாயா சந்தனமுல்லை. விடுறதில்லை. லகலகலக)

குடுகுடுப்பை: அங்க என்ன சத்தம்? யாரங்க?

கலகலப்ரியா: ஹூஊஊஊஊஊஊம். ஜக்கம்மா! பெண்களுக்கு இட ஒதுக்கீடு இல்லாத கட்சி எப்படி நடக்கும்னு பார்க்கலாம். நாங்க இல்லாம எதிர் கவுஜ எப்படி எழுதுவீங்கன்னு பார்க்கலாம்? என்ன நடக்குது இங்க?

அது சரி: :O))))

குடுகுடுப்பை: அட இருப்பா. எப்ப பாரு பீப்பீ ஊதிக்கிட்டு. இவங்க சொல்றதும் சரிதான். சமாளிப்போம். வாங்க வாங்க. ஹி ஹி. அதான் அஜண்டால போட்டிருக்கே, இதர பதவிகளுக்கு நியமனம்னு. இமெயில் அனுப்பறதுக்குள்ள நீங்களே வந்துட்டீங்க. வாங்க வாங்க.

கலகலா: அத்த்த்த்த்து!

(நாட்டாமாஆஆஆஆஆஆ! தீர்ப்ப மாத்திச் சொல்லுங்)

குடுகுடுப்பை: என்ன எழவுடா. இப்பதான் ஒரு சவுண்டுக்கு சரண்டர் ஆனோம் இப்ப யாரு? அட பழமை! வாங்க வாங்க!

பழமை: வரதெல்லாம் இருக்கட்டுங்ணா! இந்தக் குழந்த என்னமோ கேக்குது பாருங்! ஒரு வேல பார்க்க முடியலிங். ஒரே அழுவாச்சி!

அப்துல்லா:அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ். எனக்கு சிறுவர் அணி தலைவர் பதவி வேணூஊஊஊம்.

குடுகுடுப்பை: குடுத்தாச்சி குடுத்தாச்சி. தோ! அந்த ஓரம் சொப்பு சாமான்லாம் இருக்கு பாரு குழந்தை. அங்க போய் சமர்த்தா விளையாடிக்க கண்ணு! ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா..

கலகலா: தலைவரா இருந்தாலும் ஸ்ஸ்ஸ்ஸப்பால்லாம் என்கிட்ட திருடப்படாது. அது நாந்தான் சொல்லுவேன்.

குடுகுடுப்பை: சைலேன்ஸ்! கூட்டம் ஆரம்பிக்கப் போறேன்!

அது சரி: அல்லோ! நீங்க யாரு கூட்டம் ஆரம்பிக்க? கட்சில இருந்தே தூக்கியாச்சிங்கறேன். அப்புறம் கூட்டம் ஆரம்பிக்கறாராம்ல.

குடுகுடுப்பை: (அது சரின்னு பேர வெச்சிகிட்டு எது பண்ணாலும் தப்புன்னே சொல்லிக்கிட்டிருக்காரே. கேப்பாரே இல்லையா ஜக்கம்மாஆஆஆ)

கலகலா: கூப்டிங்களா குடுகுடுப்பை.

குடுகுடுப்பை: இந்தாள சமாளிக்கவே கோழி செரிச்சி போச்சி. நீங்க வேறயாம்மா. உக்காருங்க.

பழமை: அது சரிங்கண்ணே. அந்த வருங்கால முதல்வர் யாருன்னு கேட்டேனே.

அது சரி: என் கேள்விக்கு பதில் சொல்லாம வேற எந்த தீர்மானமும் செல்லாது! சொல்லிட்டேன்.

குடுகுடுப்பை:ஓஒ. சரி சரி. இப்பத்தாம்வே புரியுது. உம்ம பதிவில எமினெம் படத்த தூக்கிட்டு டாலர் படம் போட்டதுக்கு அர்த்தம். நிதித்துறைத் தலைவரும் நீர்தான்யா. போதுமா? (இனிமே கருப்புப் பணம் கூட கோழி, காடைன்னு வாங்கித்தான் தேத்தணும்)

அது சரி:மிஸ்டர் குடுகுடுப்பை! யூ ஆர் ஸ்மார்ட். பட் வேதாளம் என்ன கேக்குதுன்னா அந்த நிதில நாய் பத்திர ஊழல் பணமும் செண்ட் சுத்தமா கணக்கில வந்திருக்கான்னு. இதுக்கு பதில் தெரிஞ்சும் சொல்லலைன்னா....)

குடுகுடுப்பை: சிக்கன் புளிசாதம் வாங்காம மிச்சம் பண்ண காசு கூட அதிலதான் இருக்கு போதுமா?

அது சரி: தி.கு.ஜ.மு.க தலைவர் வாழ்க (இப்போதைக்கு)

பழமை: அந்த வருங்கால முதல்வர் பதவி..

குடுகுடுப்பை: பழமை! தெரியாம கேக்கறேன். எம்.ஜி.ஆர். கலர்ல இருக்கீரு. தொப்பியும் போட்டிருக்கீரு. அதுக்காக அடுத்த முதல்வரா உங்களை ஆக்கிட்டு கட்சித்தலைவர்னு நான் எதுக்கு? முதல்ல கட்சிய பலப்படுத்தணும். முதல்வர்னா திரைப்படத்துறையில சம்பந்தமிருக்கணும். இல்லைன்னா போணியாகாது. அதுக்கு வழிய பார்ப்பம் வாங்க. ஒரு படம் எடுப்போம்.

அதுசரி: அதான பார்த்தேன். நிதித்துறையை குடுத்துட்டு சினிமா எடுக்கறா மாதிரி எடுத்து இருக்கற பணத்தை சூறை விட்டுட்டு வட போச்சேன்னு நான் இருக்கணும்னு ப்ளானா? சன் பிக்சர்ஸ் ரிலீஸா?

குடுகுடுப்பை: அதெல்லாம் இல்லப்பா. எல்லாத் துறையிலயும் பதிவர் இருக்கோம்ல. பதிவர் பிக்சர்ஸ்னு ஆரம்பிச்சி அவங்கவங்க பங்களிப்புன்னு ஒரு இடுகை போட்டு அத்தனை பதிவரும் தன்பதிவில் ஒரு இடுகை போட்டா...

நசரேயன்: அருமை அருமைன்னு பின்னூட்டம்தான் வரும். ஓட்டு கூட வராது..

முகிலன்: அதும் ஒரு சிலர் ஓட்டு மட்டும் இன்னைக்கு.. அப்பால படிக்கறேன்னு பின்னூட்டம் போடுவாங்க.

கலகலா: யோவ்! இனிமே பொழிப்புரைன்னு பேச்சு வரட்டும்..அப்புறம் இருக்கு சேதி..

முகிலன்: ஓ. அது ஒன்னு இருக்கோ. என் அறிக்கையை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன்.

குடுகுடுப்பை: இருங்கப்பா. எல்லாத் துறையிலயும் நாம இருக்கிறதால டைரக்‌ஷன் ஒருத்தரு, பாட்டு ஒருத்தரு, மீஜிக் ஒருத்தரு, திரைக்கதை, நடிப்புன்னு நாமளே எடுத்தா

அது சரி: நாமளே பார்த்து மகா கழிசடைன்னு இடுகை போடலாம்:O)))

பழமை: இதும் நல்ல ஆலோசனையாத்தானுங்க தெரியுது. பண்ணலாமுங்க.

குடுகுடுப்பை:சரி முதல்ல ஹீரோ!

நசரேயன்: கையில வெண்ணெய வெச்சிக்கிட்டு நெய்க்கு என்ன யோசனைன்னேன். அதான் நான் இருக்கம்லா?

(அத்தனை பேரும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள்)

நசரேயன்: (கடுப்பாகி) நான் இந்த ஆட்டைக்கு வரலை. ஏன் எல்லாரும் இப்படி சிரிக்கணும்?

முகிலன்:ஹிஹ்ஹீஈஈஈ. முடியல..கருப்பு கருப்புன்னு சொல்லிகிட்டு வெண்ணைன்னு சொல்றத கேட்டு சிரிக்கிறதா இல்ல தன்னையே வெண்ணெய்னு சொல்லிக்கிறீங்கன்னு சிரிக்கிறதா.

பழமை: சே! பாவம்யா. நாமளே ஒரு சக பதிவருக்கு உதவலைன்னா எப்படி. நசரேயந்தான் ஹீரோ.

நசரேயன்: (நா தழுதழுக்க) நல்லாருங்க அண்ணாச்சி..அவ்வ்வ்வ்வ்வ்...

குடுகுடுப்பை:(குணசித்திர நடிகராம். என்னமா சீன் போடுராரு பாரு) சரி சரி. அப்புறம் மேக்கொண்டு..

நசரேயன்: அல்லோ. நாந்தான் ஹீரோ! கண்டிசன கேட்டுக்கிடுங்க. ஈரோயினி ஒரு வடக்கச்சியாதான் இருக்கணும். அதே லால்பாக்ல நான் குடுக்கிற ரோஜாப்பூவ தலையில வெச்சிகிட்டு மரத்த சுத்தி சுத்தி டூயட் பாடணும். வடக்கச்சி சம்பளம் வேணும்னாலும் நான் ஒரு விட்ஜெட் எழுதி சம்பாதிச்சி தாரன்.

குடுகுடுப்பை:திரைக்கதை?

முகிலன்: இப்ப லஞ்ச் டைம் வந்துட்டுது. தலைவரே! சாப்பாட்டுக்கு என்ன அரேஞ்மெண்ட்?

குடுகுடுப்பை: இப்புடி வேற ஆட்டைய போடுவீங்கன்னு தெரிஞ்சிதான் நான் நேத்து ரைஸ், மீன் கொழம்பு கொண்டுவந்துட்டேன். அவங்கவுங்க பார்த்துக்க வேண்டியதுதான். இந்த பழமை பக்கத்துல உக்காந்ததுல இருந்து பறவை வாசனை வேற பசிய தூக்குது.

(டிஸ்கி: எல்லாரும் கலைந்து போகிறார்கள். நிஜம்மா மொத்தம் எழுதிட்டேன். நீளம் காரணமாதான் ப்ரேக். கண்டிப்பா நாளைக்கு முடிச்சிடுவேன்.ஹி ஹி)

Wednesday, January 20, 2010

பட விமரிசனப் பஞ்சாயத்து -1

(பொங்கல் படங்களை விமரிசனம் செய்து டரியலாக்கியாதால் கடுப்பான திரையுலகம் பஞ்சாயத்துக்கு தலைவர் தலைமையில் கூட்டம் நடக்கிறது. வழக்கம் போல் அதிகப்பிரசிங்கித் தனமான கற்பனை மற்றும் உரிமை. எப்பவும் போல மன்னிச்சுடுங்க எஜமான்)

ரா.ர: எங்கப்பா தலைவர் வர நேரமாச்சி இன்னும் பதிவருங்க ஒருத்தர் கூட வரலை.

மு.காளை: தல! கெளம்பிட்டாங்களாம் தல. வர வழியில ஓட்டேரி முக்கு சந்துல ஒரு மெஸ்ல இட்லி வடகறி சூப்பர்னு கேபிள் அங்க எல்லாரையும் கூட்டிட்டு போய்ட்டாராம். வந்துட்டே இருக்காங்களாம். தோ வந்துட்டாங்க.

ரா.ர: வாங்க வாங்க. பதிவர்லாம் அந்த பக்கம் உக்காருங்க.

(கேபிளார் எப்பவும் போல் ஆட்டோவில் வந்து லேட்டாக வருகிறார்.)

ரா.ர: ஏப்பா காளை. இவரு படவுலகா? பதிவுலகா?

வடிவேலு: நான் சொல்றேன் நான் சொல்றேன். ரெண்டும். இவருதான் கேபிள் சங்கர். கவிதையெல்லாம் எழுதுவாரு. தோ எண்டர் ஆய்ட்டாரு. கூப்பிட்டு நம்ம பக்கம் இழுத்து விடுங்க பாதி செயிச்சிட்டா மாதிரி.

ரா.ர: ஓ. அதனாலதான்  இவரு  எண்டர் கவியா?

கேபிள்: அவ்வ்வ்வ்வ்வ்வ்வ். அண்ணே! ரொம்ப சந்தோஷம்ணே. நீங்களாவது எண்டர் கவிதைய புரிஞ்சி வெச்சிருக்கீங்களே.

தண்டோரா: தோ! தோ! இந்த பக்கம் வாங்கண்ணே. இப்புடியே அந்த பக்கம் போனா அப்புறம் எதிர் இடுகை போடுவேன்.

கேபிள்: இருப்பா இருப்பா. நான் எந்த பக்கமும் இல்லை. நடுவில. நியாயமாதான் பேசுவேன்.

ஆ.வீ: நியாயம் பேச தலைவர் உந்தி. வேற யாரும் நியாயம் பேச அருகதை உள்ளதா என சிந்தித்து....சரி சரி. கட்சி மீட்டிங்னு நினைச்சிட்டேன். இதோ தலைவர் ஒச்சிந்தி..

பாலாசி: அய்யோஓஓ(மயங்கி விழுகிறார். கதிர் பண்ணாரி அம்மன் திருநீறு பூசி, தம்பி வேணாம்னா கேக்காம நமீதாவ பார்க்கணும்னு முன்வரிசையில வந்தா இப்புடிதான்.பின்னாடி போய் உக்காரு ராசா)

ஆ.வீ:ஏமாய்ந்தி?

கதிர்: அது ஒண்ணுமில்லீங். ஒரு நாள் பவர்கட்டுல வீட்டுக்கு போயிருக்காரு ராத்திரி. டி.வி குடுக்க போறீங்கன்னு உங்க கட் அவுட் பார்த்து பேய்னு பயந்துட்டாரு. அப்பல இருந்து உங்க ஃபோட்டோ பார்த்தாலே இப்புடித்தான்.

ஆரூரன்: ஆமா. பாலாசி. நீ இங்க வா. நான் அங்க வரேன்.

பாலாசி: அட இவரு வேறங்ணா. இடுகை படிக்கப் போனாதான் பின்னாடியே வராருன்னா இங்கயும் போட்டியா?

ஆ.வீ: தலைவர் ஒச்சிந்தி. வாழ்க!

தலைவர்: வணக்கம். வணக்கம். இதாருப்பா நடுவில எனக்கு எதிரா இன்னோரு சேர் போட்டது. அம்மா வராங்களா?

ஆ.வீ: லேது லேது. அது கேபிளாருக்கு. அவரு நியாயமா ரெண்டு பக்கமும் சேராம இருக்காராம்.

தலைவர்: அன்பு உடன் பிறப்பே. அண்ணா அன்றே சொன்னார். நன்றே சொன்னார். நாட்டாமை என்று ஒன்று உண்டென்றால் அது தம்பி...

ஆ.வீ: தலைவா! நீங்கதான் துண்டு போட்டிருக்கீங்க. நீங்கதான் நாட்டாமை. டவுட்டே லேது.

தண்டோரா: ஏன் கேபிள். அப்போ சொம்பு...

கேபிள்: (சிரிப்பை அடக்க முடியாமல்) தலைவரே. அடக்கி வாசிங்க. போகும்போது கவனிச்சிக்கறேன். அய்யோ சாமி முடியல..

ரா.ர: இவங்கல்லாம் பதிவருங்க. இவரு கேபிள் சங்கர். குறும்படம் எல்லாம் எடுத்திருக்காரு. அடுத்ததா படம் எடுக்க போறாரு. அதனால திரையுலகத்தை

தண்டோரா: அல்லோ. இந்த கதையெல்லாம் வேணாம். அவர் பதிவ பார்த்தீங்களா? பதினெட்டே நாளில் எவ்ளொ ஹிட் வாங்கியிருக்காருன்னு.. அதெல்லாம் விட அவர் எங்க கூட இருக்கிறப்பதான் யூத்தா இருப்பாரு. உங்க மேக்கப் கூட்டத்துல அந்த இமேஜ் போய்டும். சினிமால எண்டர் கவிதை எடுக்க முடியுமா? வந்துட்டாரு..பதிவர் கேபிள்யா. பதிவர் கேபிள்.

கார்க்கி:மி த ஃபர்ஸ்ட். கலக்கிட்டீங்க தலைவா

கேபிள்: தண்டோரா. :))

வானம்பாடி: அசத்தல்

டி.வி.ஆர் :  :))

பட்டர்ஃப்ளை சூர்யா: தலைவா! பிரமாதம்.

தலைவர்: இருங்கப்பா இருங்கப்பா. என்ன இது

ரா.ர: இதாங்க. இவங்கல்லாம் ஃபாலோயர்ஸ். இடுகை போட்ட கையோட இப்படியே ஏத்தி விடுவாங்க.

தலைவர்: ஹூம். நம்ம தொண்டனுங்க இவ்ளோ சுறுசுறுப்பா இருந்தா எவ்ளோ காசு மிச்சம்.

ஆ.வி.: தலைவரே. இவங்க இண்டிக்கி பவர் கட் பண்ணிட்டா? இடுகை போட முடியாதில்ல. எப்புடீஈஈ

தலைவர்: முதல்ல உன் பவர் கட் பண்ணனும் ஓவரா ஊத்துற. சரி சரி! இப்போ என்ன பிரச்சன அத சொல்லுங்க.

ரா.ர: அய்யா.. பொங்கலுக்கு அய்யா மனசிறங்கி 5 காட்சி நடத்தலாம்னு அனுமதி குடுத்தீங்க. ராத்திரி ஒன்னரை மணிக்கு படம் முடிஞ்சி 2 மணிக்கு இடுகை போட்டு கிழிக்கிறாங்கய்யா. 5 காட்சிக்கு 25 விமரிசனம்லாம் டூ மச்சுங்கய்யா.

ரஜினி: அய்யா! நா சொன்னேன். திருட்டு விசிடி நல்ல விளம்பரம் உடனே ரிலீஸ் பண்ணுங்கன்னு. இவங்க அத விட வேகமா இண்டர்வல்லயே பொட்டி தட்டி பாதி படம் போர் மீதி பட விமரிசனம் தொடரும்னு போடுவாங்க போலய்யா. அடங்க மாட்றாங்க.

தலைவர்: இருங்கப்பா. முதல்ல ஒரு ஒரு படமா சொல்லுங்க. முதல்ல யாரு

ரா.ர: ஆயிரத்தில் ஒருவன்.

தலைவர்: ஐ ஊத்திகிச்சா? அம்மையார் படம் ஊத்திகிச்சா. உய் உய் அ உய்.

ரா.ர: தல தல. இது அதில்ல. இது செல்வராகவன்

தண்டோரா: ஆஆஆ. செல்வா எங்க எங்க! நான் கட்டி பிடிச்சி பாராட்டணும் எங்க?

செல்வா: அய்யாங். எம்பேண்டு. புடிங்க புடிங்க அவர.

ரா.ர. பாருங்க தலைவா! பய புள்ள எப்புடி பயந்து போயிருக்கு. விமரிசனம் எழுதறேன்னு அநியாயம் பண்றாங்க தலைவா.

(தொடரலாமா)

Saturday, January 2, 2010

பி.ப.க்களின் புத்தாண்டுத் தீர்மானங்கள்

சில பி.ப. அதாங்க மைனஸ் ஓட்டு வாங்குறவங்க, பிரபல பதிவர்கள் புத்தாண்டுத் தீர்மானங்கள் குறித்து விபரங்கள் கசிந்துள்ளது.

(கதிர்:தாருங் என்ன கேக்காம கசிய உட்றது
 வானம்பாடி:யூத்து! இது அது இல்ல.கொஞ்சம் பொருமை)

கதிர்:
இனிமே இட்லிலருந்து வர ஆவி, சட்னில இருக்குற கடுகெல்லாம் பார்த்து ஓவரா கசியமாட்னுங். அட கவிதை எழுதி பாலாசி, ராஜா மாதிரி பெருசுங்கள டார்ச்சர் பண்ணமாட்னுங்.

வாரத்துக்கு ரெண்டு மொக்கன்னாச்சும் போடுவனுங்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கலகலப்ரியா:
வலையூர் வண்டிப் பயணத்தில்
அடிக்கடி களைத்து ஓசோன்
ஓட்டையில் இளைப்பாறி
மேகம் மூடிக் களிக்க
விதியின் கவிதை
முற்றுப்புள்ளியாய்.

குறைந்தது 5 இடுகை வாரத்துக்கு அதிலும் 2 கலகல மொக்கை கட்டாயம் எழுதப் பார்க்கிறேன்.
        
(முகிலன்: ஹய்யா! அசைன்மெண்ட்!நோட்ஸ்!
/வலையூர் வண்டிப் பயணத்தில்/ நெட்ல இருக்கிறது
/அடிக்கடி களைத்து ஓசோன் ஓட்டையில் இளைப்பாறாமல்/
ஒரு இடுகை போட்டுட்டு 3 அல்லது 4 நாள் கேப் விடுறது
/மேகம் மூடிக் களிக்க/ ம்ம்.ஓ. அப்டி வரீங்களா நோட்ஸ் கம்பெனிய மூடிட்டு முகிலன் சந்தோஷமா இருக்க
/விதியின் கவிதை/புரியாத கவிதை
/முற்றுப் புள்ளியாய்/ எழுத மாட்டேன்.
பாஸா ப்ரியா?ம்கும் இத கூட இப்படித்தான் சொல்லுவீங்களா?/
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பிரபாகர்: 
பாட்டில் பின்னூட்டம்
பரபரவென்றெழுதி
வரி கோர்த்து வார்த்தையில்
வாகாய்  வந்திடினும்

தங்கையவள் தமிழ் கண்டு
தேன் குடித்த வண்டாகி
அம்பான வார்த்தையையும்
அன்பாய் உரைத்த விதம்
(எட்டு வரி தாண்டிடிச்சே இடுகையா போட்டுடலாமா?
  வானம்பாடி:நாட்டாமை..இங்காருங்க
பிரபாகர்: அய்யா. இல்லீங்கைய்யா. இப்படி இனிமே பண்ணமாட்டன்னு சொல்ல வந்தேன் அதுக்குள்ள நாட்டாமைல்லாம் ஏங்கையா

சந்திரமுகி மயான கதை, நல்லதங்காள் கதை மாதிரி இல்லாம இடுகைக்கு பொருத்தமான பேர் யோசிச்சி வைப்பேன்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஆரூரன்:
தென்னங். என்ன வார்த்த போடுறதுன்னு தெரியாம முழிக்க வைக்கிற இடுகையில இனிமே அருமை அருமை அன்புடன் ஆரூரன் போடமாட்னுங்.
(பாலாசி:அட ஏங் நீங்க வேற. எப்புடியும் 2 வரி புரியாம போகாதுங். அத வெட்டி ஒட்டி அசத்தல். உண்மை, பிரமாதம்னு போட்டா போச்சி)

என்ன வேலையிருந்தாலும் சி.எஸ்.பர்தி மாதிரி மொக்கை ஒன்னு, நல்ல பழைய பாடல் ஒண்ணு, ஊரு அக்க போரு ஒன்னுன்னு இடுகை போடுவனுங்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பாலாசி:
இந்த யூத்துங்க கொட்டம் தாங்கல சாமி. இனிமே கவிதையே படிக்க மாட்டன். முக்கியமா மாடு வண்டிக்காரன பார்த்து பொறாம படுற மேட்டர்லாம் எழுத மாட்டன்.ஆரூரனுக்கு சொன்ன ஐடியாலதான் பொழப்ப ஓட்டிகிட்டிருந்தேன். அத இனிமே பண்ண முடியாது.

என்னேரமும் தமிழ்மணம் ஓபன் பண்ணி வெச்சிகிட்டு இல்லாம நானே எழுதுவேன். தினம் ஒரு இடுகை காமெடி அதிகமா போடுவன்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
முகிலன்:
விசா கதைக்கு க்ளைமாக்ஸ், கலகலா கவிதைக்கு விளக்கம்னு கல்லா கட்ட மாட்டேன். நம்ம சரக்குதான் இனிமே.

கலிஞ்சர் மாதிரி அறிக்கையோட இருக்காம அந்த பத்து பேர் சேர்ந்து எழுதுற கதைய ஆரம்பிச்சிடுவேன்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நசரேயன்:
நம்ம இங்கிலீஷ நக்கலடிச்சி எழுதுற இடுகையில தமிழ் எழுத்துப் பிழை கல்லுல சோறு மாதிரி எழுதமாட்டேன்.

இனிமே எண்டர் கவிதை, பின் நவீனத்துவ கவிதையெல்லாம் முயற்சி பண்ணுவேன்.
(குடுகுடுப்பை:இத படிக்கறதுக்கு நான் கக்கூசுலயே உக்காந்திருக்கலாம்)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தண்டோரா: 

 இனிமே ஈரோடு போனா குப்பண்ணா மெஸ் பக்கமே போகமாட்டேன். போனாலும் கோழி சாப்டவே மாட்டேன். சாப்பிட்டாலும் சொல்ல மாட்டேன்.

அப்படி சொல்லி இருந்தா அது சரக்கு சொன்னதாத்தான் இருக்கும். நான் இதை கவிதையிலயே சொல்லுவேன்.
(கேபிள்:யோவ். எண்டர் கவிதை ஓனர் நானு. என்ன கேக்காம எப்புடி சொல்லலாம்)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இராகவன் நைஜீரியா:

இனிமே ஃபோட்டோ இடுகையில காமிரா பேரு சொல்லுவேன். கலையரசன் காமிரான்னு சொல்லமாட்டேன்.

வாரம் ஓவர்டைம் பண்ணியாவது 2 இடுகை போடுவேன்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
(டிஸ்கி 1. உன் கதை என்னன்னு கேக்க வேணாம். வலைச்சரம் பொறுப்பு இருந்ததால எனக்கு இதுக்கு நேரமில்லை..எப்புடீஈஈஈஈ)

(டிஸ்கி 2. சம்பந்தபட்டவங்க எல்லாரும் மன்னிச்சிக்கங்க. டமாசுக்கு)                 
                                

Thursday, November 26, 2009

ஹீரோ!





என் பேரு. அது எதுக்கு உங்களுக்கு? நான் ரொம்ப மென்மையானவன்.  பார்க்கத்தான் கொஞ்சம் கரடு முரடா தெரிவேன். ஆனா ரொம்ப சாஃப்ட் நானு. எங்க போனாலும் ஒரு ஓரமா நான் பாட்டுக்கு ஒழுங்கா இருப்பேன். வெள்ளையா வேற இருப்பேன்.

இந்தப் பொண்ணுங்க‌ இருக்காங்களே! எம்பாட்டுக்கு இருக்க விடமாட்டாளுங்க. என்ன பார்த்துட்டா போறும். பாய்ஞ்சி ஓடி வந்து தூக்கி கொஞ்சம் கூட வெக்கமில்லாம உதடு அழுந்த முத்தம் குடுப்பாங்க. சில பேரு சாப்ட வாய் கூட துடைக்காம முத்தம் குடுப்பாங்க. எனக்கு எப்புடி எரியும் தெரியுமா?

சில பேருக்கு அப்புடி என்னா வெறி வருமோ அப்புடியே மூஞ்சி,கன்னம்னு பொரட்டி எடுப்பாங்க.ச்சீ தூ.வியர்வை நாத்தம் வாந்திவரும். எல்லாம் என்னோட தப்பு. இவ்வளவு வெறுப்பிருந்தாலும், யாராசும் அழுதா என்னால தாங்க முடியாது. முதல்ல போய் கண்ணு துடைப்பேன். அதெல்லாம் யாருங்க நினைச்சி பார்க்குறாங்க.

நேத்து வ‌ரைக்கும் மூக்கு ஒழுகிக்கினு இருந்த‌ மீனா, மைனா வாய் ம‌கி பொண்ணு அதான் மொச்சு மொச்சுன்னு அசைபோட்டு போட்டு வாயோர‌ம் புண்ணு வ‌ந்திருக்குமே மைனா வாய் மாதிரி அந்த‌ ம‌கி பொண்ணு இவ‌ளுங்க‌ ச‌க‌வாச‌மே இல்லாம‌ நான் பாட்டுக்கு இருந்தேன். காலேஜுல‌ சேர்ந்துட்டாங்க‌ளாம். இவ‌ங்க‌ளுக்கும் என்ன‌ப் பார்த்தா இப்போ லவ்ஸூ. என்னா? எம் பொழப்ப பார்த்தா பொறாமையா இருக்கா?

இவ‌ங்க‌ளாவ‌து ப‌ர‌வால்ல‌. ஆம்பிளைங்களுக்கென்ன? உவ்வ்வே. வெக்க‌மில்லாம‌ அவ‌ங்க பொண்டாட்டிகிட்ட சொல்லி என்ன‌ க‌ட‌த்தி கொண்டு வ‌ந்து மீசை குத்த‌ குத்த‌ அழுத்தி முத்த‌ம் குடுப்பானுங்க‌ பாரு. ப‌த்திக்கிட்டு வரும்.

ஆம்பளையோ பொம்பளையோ எல்லாம் ஒரே மாதிரிதான். இத்தினி பாசமும் கொஞ்ச நேரம்தான். அப்புறம் கெடாசிட்டு போயிட்டே இருப்பாங்க. ஒரு ஆறுதல் என்னன்னா அது எந்த விசேஷமா இருக்கட்டும். எவ்ளோ பெரிய வி.ஐ.பியா இருந்தாலும் முதல்ல நான் இருக்கனான்னு தேடுவாங்க.

என்னைக் காணலைன்னா திட்டுவாங்க. சிலரு சண்டை கூட போடுவாங்க, இவ்ளோ செஞ்சி என்ன? இவன கூப்புடலையான்னு. யாருடா இந்த ஹீரோன்னு தானே பார்க்கரீங்க. நாந்தாங்க டிஷ்யூ பேப்பர். சரிங்களா. பிடிச்சிருந்தா பிடிச்சிருக்குன்னு சொல்லுங்க. பிடிக்காட்டி பிடிக்கலன்னு சொல்லுங்க. எதுனாலும் பின்னூட்டத்தில சொல்லிட்டு போங்க. எனக்கு பின்னாடி போய் பேசுனா பிடிக்காது. சரியா?

டிஸ்கி 1: இது வசந்த் மாதிரி எழுதியிருக்கேன். சரியா இருக்கான்னு பின்னூட்டத்தில சொல்லுங்க. மெஜாரிடி முடிவை ஏற்றே ஆக வேண்டும். அதனால போட்டு குடுக்க வேணாம். சரின்னா மட்டும் வசந்த் மாதிரின்னு சொல்லுங்க.

டிஸ்கி 2: இந்த மாதிரி அவர் எழுத வேண்டிய எழுத்து கதிர், பாலாசி, இது போக அவருக்கு விருப்பமான முடியுமென்று தோன்றக் கூடிய வேறு யாருடைய எழுத்தாகிலும்.