Monday, June 7, 2010

சொர்க்கத்தில் சோ.அசிங்கப்பன் -1

வடிவேலு: அல்லோ! ஆரு பேசறது

குரல்: நீதான்யா பேசற டுபுக்கு!

வடிவேலு: (என்னைய பார்த்தா எகத்தாளமா போச்சுறா உங்களுக்கு. வச்சிக்கிர்றேன் உன்னைய) யோவ். இதெல்லாம் புளிச்சி போனது. புதுசா ஏதாச்சும் சொல்லு. என்ன விசயம்?

குரல்: மூன் ட்வார்ஃப் பிக்சர்ல இருந்து மேனேஜர் பேசறேன். ரெடியா இரு. ஆட்டோ வரும். உடனே வரணும். 

வடிவேலு:ஏன்யா ஏன்யா. ஆட்டோன்னு பீதிய கெளப்பற. நான் மாட்டன்னு சொன்னனாய்யா

குரல்: சாரி. காருண்ணே. ரெடியா இருங்க. தலைவரு வந்துருவாரு(க்ளிக்)

(எதுக்கு நம்மள கூப்டுறாய்ங்க. தலைவருன்னு வேற பிட்ட போடுறான். ச்ச்சேரி. ரெடியாய்க்கிருவோம்.)

வடிவேலு:போலாமாண்ணே. எம்புட்டு நேரமா வெயிட்டிங்கு. 
(மூன் ட்வார்ஃப் பிக்சர்ஸ்)

மேனேஜர்:ஹி ஹி. வணக்கம்ணே. வாங்க வாங்க.

வடிவேலு: நேர பார்த்தா வணக்கம். ஃபோன்லன்னா நக்கலு! வந்து வச்சிக்கிர்றேன் உன்னைய. 

மேனேஜர்:அண்ணே! போங்கண்ணே! நாங்களும் மருததான். இந்த பிளிமெல்லாம் வேணாம். நேர போய் லெப்ட்ல ரெண்டாவது ரூம்பு.

வடிவேலு: போறேன் போறேன். என்னா பில்டப்பு.ஹும்

வடிவேலு:அல்லோ. எச்சூஸ் மீ! மே அய் கமின்?

குரல்:யாரது? தம்பி வடிவேலுவா! வருக வருக!

வடிவேலு:தெய்வமேஏஏஏஏஏஏஏஏ! நீங்கன்னு தெரியாம பேசிட்டேன் தெய்வமே! ஒரு வார்த்த ஃபோன்ல சொல்லியிருந்தா மாட்டன்னா சொல்லப்போறன் தெய்வமே. நீங்க போய் இம்புட்டு தூரம் வந்து...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

தல:தம்பி உதை..

வடிவேலு:அய்யா! தெய்வமே. நான் எதுவுமே சொல்லலையே தெய்வமே. ஏன் உதைன்னுகிட்டு

தல:பேச விடு தம்பி. தம்பி உதை..ச்செரி சொல்லலை. செந்தமிழ் மாநாட்டுக்கு திரைப்படத் துறை சார்பில் ஒரு குறும்படம் எடுக்க வேண்டும். முடியுமா?

வடிவேலு:அய்ய்யா! ஏன்யா இப்புடி. செய்ன்னு சொல்லக்கூட வேணாம்யா. செஞ்சிரலாம்யா. நீங்க கெளம்புங்க தெய்வமே. நான் தம்பிட்ட பேசிக்கிர்றன்.

வடிவேலு: நீங்க சொல்லுங்க தம்பி. என்னா ஸ்டோரி. யாரு டைரடக்கரு. ஈரோ யாரு? 

உதை: அண்ணே இப்போதைக்கு டைட்டில்தான் ரெடி. ‘சொர்க்க லோகத்தில் சோ.அசிங்கப்பன்’ மிச்சமெல்லாம் உங்க பொறுப்பு. 10 நாள் சூட்டிங்கு. 

வடிவேலு: (ஆஹா! ஏன்யா ஏன்! மொத்தமா ஒழிச்சிகட்டவா?) தம்பி..வந்து..பத்துநாள்ள..எப்புடி? படம் ஓடலைன்னா..

உதை: என்னாது. ப்ளூ ட்வார்ஃப் பேனர்ல ஓடாமலா. ஓட்டுவோம். ஒரு லட்சம் ப்ரிண்ட்னாலும் எடுத்து ஓட்டுவோம். நீங்க வேலையப் பாருங்கண்ணே. வெளிய ஆட்டோ நிக்குது. போங்க.

வடிவேலு: ஹ்ம். ஏந்தம்பி. ச்சும்மா ஆட்டோ ஆட்டோன்னுகிட்டு. வர்ட்டா
(போலிசுக்காரன விட கேவலமா இருக்காய்ங்களே. வரப்ப காரு. போறப்ப ஆட்டோவாடா. நடத்துங்க நடத்துங்க. இந்தக் கட்டதொரைக்கு கட்டம் சரியில்ல) ஏப்பா மேனசரூஊஊ மேனேசரு. ஆட்டோ கூப்புடுவியாம்யாய்யா.

மேனேஜர்: வாடி! என்னமோ திரும்பி போறப்ப வச்சிக்கிறன்னு சொன்ன!

வடிவேலு:யப்பா! ஆட்டோன்னு நானே நடுங்கிப்போய் வந்திருக்கேன். ஏன் இந்த கொலவெறி. 

மேனேஜர்:அந்த பயம் இருக்கட்டும். ஆட்டோ வெளிய ரெடியா இருக்கு. போங்கண்ணே போங்க!

வடிவேலு: ட்ரைவரண்ணே! கொஞ்சம் வீட்ல ட்ராப் பண்றிங்களா? 

ஆட்டோ: அண்ணே! நீங்களாண்ணே. ஏறி உக்காருங்கண்ணே. 

வடிவேலு: யப்பா! போற வழில டாஸ்மாக்குல கொஞ்சம் நிறுத்துப்பா. சரக்கு வாங்கிக்கிரணும். அப்புடியே நீயும் ஒரு க்வார்ட்டர் வாங்கிக்க. என்னைய எறக்கி விட்டுட்டு நீ ஏத்திக்க சாமி! நமக்கு நேரமே செரியில்ல..அவ்வ்வ்வ்வ்

வடிவேலு: நிப்பாட்டு நிப்பாட்டு. வீடு வந்திரிச்சி நிப்பாட்டுண்ணே. ரெம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப டேங்க்ஸ். 

(செந்தமிலப்பத்தி வெளம்பரப்படம் எடுக்க நாந்தானா கெடச்சேன். நம்ம இங்கிலீச வெச்சித்தானே பேமசானது. நாம பேசினா அப்புடி வார்த்த இருக்கான்னு வெள்ளக்காரனே கம்பீட்டர்ல தேடுவானே. என்னையப்போயி இதுக்கு கூப்புட்டு, எல்லாத்தையும் நீயே பார்த்துக்கடான்னா நான் என்ன பண்ணுவேன்! என்ன பண்ணுவேன்! ச்ச்சேரி. சரக்கப் போடுவோம். அகுடியா வந்தா அகுடியா. தூக்கம் வந்தா தூக்கம். என்ன நாஞ்சொல்றது..ஆஆஹா! பொலம்ப விட்டுட்டானுங்களெய்யா பொலம்ப விட்டுட்டானுங்களே..ஹ்ம்ம்ம். என்னா டைட்டிலு? சொர்க்க லோகத்தில்.. கொர்ர்ர்ர்)

(கனவில் சொர்க்க லோகத்தில் அசிங்கப்பன்)

வடிவேலு: என்னா இடம் இது? யாரயாச்சும் கேக்கலாம்னா ஒரு பயத்தையும் காணமே.. ம்ம்ம்.. அந்தா ஒரு வெள்ளக்காரன் வாரான்..அவன கேப்போம்..ஏஏஏஏய்ய்ய்.. எச்சூஸ் மி.. ஊ ஆர்ர்ர்ர்ர்ர்ர் யூஊஊஊ, கமான் டெல் டெல்

ஜேம்ஸ் பாண்ட்: வாட்? மீ? மை நேம் ஈஸ் பாண்ட்! ஜேம்ஸ் பாண்ட்

வடிவேலு:மை நாம் அப்பன்! அஸ்ஸ்ஸ்ஸிங்ங்ங்ங்ங்கப்பன்!

(இடைவேளை)
~~~~~~~~~~~~~~~~~

44 comments:

அன்புடன் நான் said...

வணக்கமய்யா....

vasu balaji said...

வணக்கம் கருணாகரசு:)

அன்புடன் நான் said...

ஆரம்பம்...அமைகளம்... தொடருங்கைய்யா....

நேசமித்ரன். said...

ஆஹா !

பாலா சார் பின்றீங்களே சார்

ம்ம் பூமாலைல ஆரம்பிச்சது சார் எல்லாம்

இந்த வீடியோ கேசட்டு இருக்கே சசியம்மா...


நான் வரலைப்பா சாமி! :(

பொறவு ஆட்டோ வரும்

அன்புடன் நான் said...

அமர்க்களம்! அமர்க்களம்!!

Chitra said...

"மூன் ட்வார்ஃப் பிக்சர்" - ஹா, ஹா,ஹா,ஹா,ஹா,ஹா..... ரெட் ஜயன்ட்- மூவ் ஓவர். பெயரிலே கலக்கல் ஆரம்பம் ..... பாலா சார், தொடர்ந்து அசத்துங்க!

cheena (சீனா) said...

அன்பின் பாலா

சும்மா தூள் பறத்தறீங்க - சூப்பர் - தொடர்க - ஜாலி ஜாலி

நல்வாழ்த்துகள் பாலா
நட்புடன் சீனா

ப.கந்தசாமி said...

நல்லாஆஆஆஆஆஆருக்குங்க.

Unknown said...

நல்லா கேளபுரங்கயா பீதிய..

பிரபாகர் said...

ம்... நடத்துங்க நடத்துங்க... தலைப்பு கான்செப்ட்டு எல்லாம் எப்படித்தான் கெடைக்குதோ... ம்... அதுக்கெல்லாம் யானைப்பால் ச்சீய் ஞானப்பால் குடிச்சிருக்கனும்...

கலக்கல் அய்யா... தொடருங்கள்...

பிரபாகர்...

T.V.ராதாகிருஷ்ணன் said...

அமர்க்களம்! எப்படி பாலா....இப்படி:))))

க ரா said...

அய்யா பின்னுங்க.

காமராஜ் said...

வலைத்தளத்திலிருந்து,
திரைத்தளத்துக்கு
தயாராகியாச்சா..

ஒன் லைன்
நல்லாருக்கு
பாலாண்ணா.

HVL said...

:):):)

ஈரோடு கதிர் said...

சொ.சோ.அ.....
இஃகிஃகி

லிப்கோ... வடிவேலு இங்லீசுக்கு ஒரு டிக்‌ஷ்னரி போட போறாய்ங்களாமே

ஜோதிஜி said...

கலைஞர் எழுதி ரஹ்மான் இசையில் வந்துள்ள செந்தமிழ் பாட்டு கேட்டீர்களா? அதைப்பற்றி கொஞ்சம் உங்கள் நடையில் எழுதுங்களேன்.

balavasakan said...

வடிவேலு பட்டைய கிளப்புறாரு...

பின்னோக்கி said...

செந்தமிழ் மாநாடு நடக்குறத்துக்குள்ள நீங்க இன்னும் என்ன பண்ண போறீங்க்ளோ ?? கடவுளே !!!

Unknown said...

தொடருங்க தொரத்துரோம்...(ஆட்டோவில இல்லை)

ஆரூரன் விசுவநாதன் said...

ரொம்ப நாளாச்சு, உங்க நகைச்சுவை தொடரைப் படித்து....கலக்குங்க

சூர்யா ௧ண்ணன் said...

கலக்கல் தலைவா! தொடருங்க..

VR said...

.... அண்ணே, சிரிச்சு சிரிச்சி....... அய்யோ.... அய்யோ ...... பாத்து ........ இது புனைவுன்னு சொல்லிராதிங்க! அப்புறம் ஆனாதிக்கவாதம், பார்பனிய ஆணாதிக்கவாதம், மூட்டுவாதம், முடக்குவாதம்ன்னு கிளம்பிற போறாங்க..... இப்போ எல்லாம் சரியாய் மூத்திரம் போனோமா .... இல்ல அதையும் கண்டித்து யாராவது "நின்று போகும் ஆணாதிக்கம்" என்று பதிவு போட்டுருவாங்கன்னு பயமா இருக்கு. வலையுலகுக்கு வந்தாலே வருத்தமும் மன அழுத்தமும் வரும் இந்த நேரத்தில் உங்கள் இடுகை சற்று ஆசுவாசம் தந்தது. நன்றிகள் பல.

Ahamed irshad said...

அசத்துங்கய்யா அசத்துங்க...

மணிஜி said...

கொஞ்சம் வில்லங்கமா பின்னூட்டம் போடுவேன். பரவாயில்லையா?

க.பாலாசி said...

நான் இத ஒத்துக்கமாட்டேன்... எந்த பதிவர்கள் பேரும் இதுல வரல... அட்லீஸ்ட் முகிலன் பேராவது வரும்னு பார்த்தா அதுவும் இல்ல...

Menaga Sathia said...

ஆஹா அமர்க்களமாய் இருக்கு சார்...

"உழவன்" "Uzhavan" said...

பிரமாதம் :-)

Bibiliobibuli said...

செந்தமிழை கலாய்த்த வடிவேலு தமிழ்!!! நல்லதொரு அரசியல் நகைச்சுவை.

சத்ரியன் said...

//குரல்: நீதான்யா பேசற டுபுக்கு//

பாலாண்ணே,

அவசரமா படிச்சேன். கடைசி சொல்லில் எழுத்தை இடம் மாத்தி படிச்சிட்டேன் போங்கோ.

சத்ரியன் said...

அசத்தறேள் போங்கோ.

ப்ரியமுடன் வசந்த் said...

சத்ரியன் அண்ணா

:))

Mahi_Granny said...

சிரிச்சு முடியல சார் அகுடியா பிரமாதம்

நசரேயன் said...

போட்டும் .. போட்டும்

செ.சரவணக்குமார் said...

அல்ல்லோ...

கலக்குறீங்க போங்க.

prince said...

கெளம்பிட்டாங்கையா!! கெளம்பிட்டாங்க!!! அவ்வ்வ்வவ்வ்வ்வவ்!

Anonymous said...

இப்ப நம்ம காட்டில மழையா? தூள் கிளப்புங்க. சுனாமி ஓய்ஞ்சுடுச்சா?
சரி நானும் பதிவு போடுறேன்.

தாராபுரத்தான் said...

வெரிகுட்டுங்கோ..

கலகலப்ரியா said...

ஐய்யகோ... இந்த மர்ர்ரணமொக்கைக்கு நான் கண்டனம் தெரிவிக்கவில்லை... கள்ள மௌனம் என்று என்னைச் சீண்டும் வானமொக்கை வானம்பாடி அவர்களுக்காக இந்தப் பின்னூட்டத்தை இங்கு பதிவு செய்யும் நிலமைக்கு ஆளாகி உள்ளேன்..

ம.மொ.க.க.ப்ரியா..

பத்மா said...

ஐயோ இதுக்கு காப்பி ரைட் போட்டுக்குங்க யாரவது சுட்டுற போறாங்க .அப்பிடியே வடிவேலு மாரியே இருக்கு .
SUPER ங்க

vasu balaji said...

ரெம்ப களைச்சிட்டேன். இந்த ஒரு வாட்டி எல்லாருக்கும் பொதுவில ஒரு நன்றி:)

Chitra said...

http://blogintamil.blogspot.com/2010/06/blog-post_09.html

:-)

நிஜாம் கான் said...

அண்ணே! இதுல இடைவேளை வேறையா??

நிஜாம் கான் said...

செம்மொழி மாநாடு செந்தமிழ் மா நானாடா ஆகிப்போச்சின்னு யாரு கிட்டேயும் சொல்லிபுடாதிய. அப்பறம் வடிவேலுக்கு அனுப்பின ஆட்டோவ திருப்பி அங்கிட்டு அனுப்சிருவாய்ங்கே!

ரோஸ்விக் said...

இது வேறையா... நல்லா கிளப்புறாங்கைய்யா பீதிய... :-)))))