Thursday, June 10, 2010

சொர்கத்தில் சோ. அசிங்கப்பன் -2

வடிவேலு: எச்சூஸ் மீ! அய்ய்ய் வாண்ட் தமில் சொர்க்கம்?

பாண்ட்:வாட்? தமில் சொர்க்கம்? தேர்ஸ் நோ டமில் சொர்க்கம் ஹியர்.

வடிவேலு: ஸ்டாப்! ஸ்டாப் தி நான்சென்ஸ் யூஊஊஊ ஃபூலாபனிடியட்டாபனேஸ். தமில் லிவ் ஆஃப்டர் டெத். தெரிஞ்சா சொல்லு. தெரியலன்ன தெரியலன்னு சொல்றா என் வென்ட்று. அதென்ன நோ தமில்னு சொல்றது. அந்தா அங்க பாரு! எங்கூரு அப்பத்தா ஒன்னு போகுது. அத்த்த்து தமில்.  ஏத்தா! ஆத்தோவ்! கொஞ்சம் நில்லுத்தா..ஸ்ஸப்பா..

ஆத்தா: மகனே! யார் நீ! ஏன் ஓடி வருகிறாய்! யார் வேண்டும் உனக்கு!

வடிவேலு: நிப்பாட்டு நிப்பாடு ஆத்தா! காலையில கேள்விய டிப்பனா சாப்டியா?. அந்தா போறாம்பாரு ஒரு எடுபட்டபய. அவன தமில் சொர்கம் எங்கடான்னு கேட்டேன். தெரிஞ்சா சொல்லணும் தெரியாட்டி தெரியலன்னு போய்க்கே இருக்கவேண்டியதுதானே. நோ தமில்னு சொல்றான் பக்கிப்பய. பன்னாடப்பய. திரும்ப சிக்கின உங்கத கந்தல்டியேய். ஆத்தா! உங்கள எங்கயோ பார்த்தாமாதிரி இருக்கே. 

அவ்வை: மகனே என்னைத் தெரியவில்லையா உனக்கு? நாந்தானாப்பா அவ்வை!

வடிவேலு: ஏத்தா! நீயுமா? என்னப் பார்க்கும்போதே கலாய்க்கலாம்னு தோணுமா? எனக்கு அவ்வையைத் தெரியாதா? அந்தாத்தா நல்லா குண்டாயிருக்கும். குரல் சும்மா குழாய்ஸ்பீக்கர் மாதிரி இருக்கும். எங்க! நீ பாடின நீபழம் நீயப்பா பாடு?

அவ்வை: அப்படி ஒரு பாடல் நான் பாடவேயில்லையே மகனே!

வடிவேலு: ஹெ ஹெ! நம்மளுக்கு தெரியும்ல. சின்னக் குழந்தையக் கேட்டாலும் சொல்லுந்த்தா சொல்லும். பழம் நீயப்பா பாடினது அவ்வைய்யாருன்னு. இந்தா இந்தா பேசிட்டிருக்கும் போதே தடிய ஓங்காத! பேச்சு பேச்சாத்தான் இருக்கணும். பின்ன நீ என்ன பாட்டு பாடின சொல்லு!

அவ்வை: முழுமுதற்கடவுளாம் என் அப்பன் விநாயகனுக்கு பாலும் தெளிதேனும் என்ற பாடலைப் படைத்தவள் நானப்பா.

வடிவேலு: ஆத்தா! அவ்வையாருக்கும் முருகனுக்கும்தான் டீலிங்கு. நீ விநாயகனுக்கு பாட்டைப் போட்டுட்டு அவ்வைங்கிற. எங்க சினிமால டூப்பு போடுவாங்கல்ல டூப்பு! அப்பிடியா?

(தண்டபாணித்தெய்வமேஏஏஏஏஏஏஏஎய் என்று பாடியபடி கே.பி.எஸ் வருகிறார்)
வடிவேலு: அவ்வையே! புல்லரிச்சிப் போச்சு அவ்வையே! நீங்க பாடி நேராக் கேப்பேன்னு கனவில கூட நினைச்சதில்லையே ஆத்தா! அந்த முருயன் கருணையே கருணை! அந்த கிழவி நாந்தான் அவ்வைன்னு ஏமாத்துதுதா?சொர்க்கத்துல கூடவா ப்ராடு?

கே.பி.எஸ்: அபசாரம் அபசாரம்! அவர்தானப்பா அவ்வையார். சிறு பிராயத்திலேயே அறம் செய விரும்பு என்று பிள்ளைகளுக்கு ஆத்திச்சூடி சொன்னவரப்பா. அவரைப்போய் இப்படிப் பேசலாமா?

வடிவேலு: ஆக்கா! ஏத்தா! அந்தப்பாட்ட எளுதினதுன்னு சொல்லிருக்கப்படாதா! ஏத்தா! சின்னப் பசங்க மேல உனக்கென்ன கோவம்? 

அவ்வை: குழந்தைகள் நன்றாக வளர வேண்டும் என்றல்லவா எழுதினேன். 

வடிவேலு: ஏன் பேசமாட்ட? ஆத்திச் சூடி சொல்றா சொல்றான்னு எங்க தமிழ் வாத்திக்கிட்ட அடி வாங்கினவன் நானு! நீ ரொம்ப சலம்பற. எங்க நான் கேக்கறதுக்கு பதில் சொல்லு. ஒம்பாட்டுக்கு ஈவது இகழ்ச்சின்னும் சொல்லிட்டு, ஐயம் இட்டு உண்ணுன்னும் எழுதிட்டு போய்ட்டிய. டேய் வாங்கிக்கடா பசிக்குதுன்னு ஒருத்தன் அழுறான். பிச்சை வாங்குனா கேவலம் போடான்னு ஒருத்தன் போய்க்கே இருக்கான். ஏன் இப்புடி மாத்தி மாத்தி பேசின . அந்தா அங்க உக்காந்து நிதானமா யோசிச்சி சொல்லு. எனக்கு கொள்ள வேல கெடக்கு.

திருவள்ளுவர்: அவ்வையே! யார் இவர்? எந்த மொழி பேசுகிறார். தமிழ் போலவும் இருக்கிறது?

வடிவேலு: ஏன்! ஏன் இந்தக் கொலவெறி! ஒரு கூட்டமாத்தான்யா திரியறாங்க.

கே.பி.எஸ். : மகனே இவர்தான் திருவள்ளுவர். வாழ்வியல் நூல் தந்த வள்ளல் வணங்கிக் கொள் மகனே!

வடிவேலு: வள்ளுவரா! வணங்குகிறேன் அய்யா! உங்களை ஒன்று கேட்கலாமா? முன்ன பின்ன உங்களுக்கும் எனக்கும் வாய்க்கா வரப்பு தகராரு இருந்திருக்கா? பின்ன எதுக்கு பல்லு உடையிறா மாதிரி துப்பார்க்கு துப்பாக்கின்னு எல்லாம் செய்யுல் எழுதி என்னைய மாதிரி சின்னப் பசங்கள அடி வாங்கி வச்சிய. அவ்வ்வ்வ்வ்வ்வ். தோ! அந்தாத்தாவாவது ஒரு வரி ஒரு வரி எளுதிச்சி. நீங்க இரண்டு வரி எழுதி இந்தக் கையில ஒன்னு அந்தக் கையில ஒன்னுன்னு எங்க வாத்தி பிச்சிப்புடுவாரு.

வள்ளுவர்: கல்லாதது உன் தவறல்லவா மகனே!

வடிவேலு: ஏன் பேசமாட்டீரு. இத்தன வருஷம் கால் மறத்துப் போனாலும் கெடக்கட்டும்னு உக்காந்தா மாதிரியே போசுல வச்சிருந்தாங்க உங்கள. எங்க தலைவர் இப்போ செந்தமில் விளாக்கு உங்கள நிக்க வச்சிட்டாருல்லா.  (ஆஆஆக்கா! வடிவேலு! ஒரு வேள அகுடியா ஒர்க்கவுட்டாவலன்னு வைய்யி, உக்காந்திருந்த வள்ளுவரை நிற்கவைத்த தலைவருக்கு ஒரு விளா எடுக்கச் சொல்லி கவுத்துறலாம்டா).

நாலடியார்: வள்ளுவரே! யார் இவர்? அமைதியான இங்கு வந்து ஏன் தகராறு செய்கிறார். நக்கீரரை அழைக்கவா?

வடிவேலு: தோ! பெருசு! ஏன் மெரட்ரீய பேசிக்கிருக்குபோதே? நீர் யார் அதைச் சொல்லும்.

நாலடியார்: நாந்தான் நாலடியார் மகனே.  “உணர உணரும் உணர்வுடையாரை..”

வடிவேலு: ஸ்டாப் ஸ்டாப். இதோட விட்ருவோம். திரும்ப பழசெல்லாம் கிண்ட வேண்டாம். ஹ்ம். ஏம் பெருசு! எங்க புண்ணுன்னு பார்த்தே அங்க மிளகாய்  தேய்க்கிறீங்களே. அந்தப் பாடலச் சொல்லச் சொல்லி சொல்லத் தெரியலன்னு புளிய மிளாருல எங்க தமிழ் வாத்தி டவுசர் கிழிய அடிச்சதும், அதோட பள்ளிக்கு ஒரு கும்புடு போட்டதும் உங்க புண்ணியம்தாம்யா உங்க புண்ணியந்தேன். உக்காரக் கூட முடியாம ஒரு வாரம் நின்ன வாக்குலயே தூங்குனம்னா பாத்துக்கிருங்க. என்னா அடி!

வாத்தி: டேய்! யார்ரா அது வடிவேலுவா! உருப்படாத பயலே! இப்பவாச்சும் அந்த பாட்டச் சொல்லு. நான் மூணாப்புல சேத்துக்கிர்றேன்.

வடிவேலு: போதும்யா! போதும்! அடி வாங்கி வாங்கியே பொழப்பு போயாச்சு. பாட்டை மட்டும் கேக்காதிய! எவ்வளவு வேணும்னாலும் அடிச்சிக்கிருங்க. இப்ப நான் சொல்றத கேளுங்க.

எங்கூருல தமிலுக்கு, செந்தமிலுக்கு ஒரு விளா எடுக்குறோம். அதுக்கு ஒரு வெளம்பரப்படம் எடுக்கணும். என்னையத்தான் பொறுப்பாக்கிட்டாய்ங்க. நீங்கள்ளாம் சேர்ந்து ஒரு பாட்டு எளுதி, ஆளுக்கு ஒரு வரி பாடி உதவணும்.

தமிழய்யா! நீங்களாவது சொல்லுங்கைய்யா

தமிழய்யா: மகனே! உனக்கோ ஞாபக மறதி. இங்கு பனை ஓலை, பேப்பர் பேனா எதுவும் கிடையாது. மேலும் இவர்களை பூலோகத்தில் அழைத்துப் போய் படப்பிடிப்பும் நடத்த முடியாது. என்ன செய்யப் போகிறாய்.

வடிவேலு: அய்யா! உங்க மாணவனுக்கு தமில் செய்யுல் தான்யா வராது. இப்புடி பல்ல புடுங்கறா மாதிரியில்லாம “ நானடிச்சா தாங்க மாட்ட நாலு மாசம்  தூங்க மாட்ட” மாதிரி சுளுவ்வா எழுதச் சொல்லுங்கைய்யா. வகுத்துக்குள்ள இருக்கிற புள்ள கூட பாடுதாம்யா. அப்புறம் இந்த ஓல, பேப்பரு, பேனா எளவெல்லாம் போயாச்சிய்யா.

இந்தா இருக்கு கம்பூட்டர் பொட்டி. பேசுறா மாதிரியே அமுக்கினா எழுத்து வரும்யா. இந்தா செந்தமில்.ப்ளாக்ஸ்பாட்.காம்னு ஒரு பதிவு ஆரம்பிச்சிருக்கம்யா. இந்தா இங்க சின்ன பொட்டியிருக்கே அதில அவுங்கவுங்க பேரப் போட்டு ஒரு ஒரு வரி ஒரு பாட்டு எளுத சொல்லுங்கைய்யா. அம்புட்டு தூரம் வந்தது கண்ண கட்டுது. நான் அப்புடி ஒரு ஓரமா படுக்கிறேன்.

(சிறிது நேரத்தில் ஒரே கலவரம். திடுக்கிட்டு எழுந்த வடிவேலு)


வடிவேலு: இருங்க இருங்க. அமைதி அமைதி! என்ன இது சின்னப் புள்ளத்தனமா? ஒரு பாட்டு எளுதச் சொன்னா ஆளாளுக்கு கத்திக்கிட்டு மனுசன தூங்க விடாம. என்ன நடந்துச்சி இப்ப?

தமிழையா: ஏன்யா! நாங்க பாட்டுக்கு அமைதியா தமிழ்க்கடலில் திளைத்திருந்தோம். பதிவப்போட்டு இதுல இழுத்து விட்டு அடிதடில கொண்டு வந்துட்டியே. அவ்வையார் கவுஜ அடச்சீ செய்யுளுக்கு எதிர் செய்யுள்னு கம்பர் எழுதுறாரு. எதிரெதிர் செய்யுள்னு திருவள்ளுவர் எழுதுறாரு. மாணிக்க வாசகர் முன் நவீனத்துவம்ங்குறாரு. காளமேகப் புலவர் பின் நவீனத்துவம்தான்னு பொலம்புறாரு. நக்கீரன் அவரு பாட்டுக்கு குற்றம் குற்றமேன்னு புலம்பிட்டு திரியிறாரு. உன்ன பள்ளிய விட்டு ஓட விட்டது பத்தாது. அடடா. புளிய மிளாரு இல்லாம போச்சே. அவ்வையாரே! அந்தத் தடியக் குடுங்க.

வடிவேலு: வேணாம்யா. அப்போ வாங்கினதே இன்னமும் உக்காந்தா வலிக்குது. இதுக்கு ஆட்டோல வந்து அடிச்சாலே எண்ணிக்குவேன். வர்ரம்யா. எம்பொட்டிய குடுக்கச் சொல்லுங்க.  நல்லாக் கெளப்பறாய்ங்கய்யா பீதிய! ஏரோப்ளேன் ஸ்டார்ட்! மீ த எஸ்கேப்பு..

(படுக்கையிலிருந்து விழுந்து எழுந்து)

ஆஹா! அம்புட்டும் கனவா! தப்பிச்சண்டா சாமி! ஆனாலும் பரவால்ல. தலைய வெச்சி, எல்லாரும் வாழ்த்துறா மாதிரி ஒரு டேன்ஸ் சீன் போட்டு, ஒரு செந்தமிலர் வால்த்து சாங் போட்டு ஒப்பேத்திருவோம். முடிவுல ஒரு விழா எடுக்கணும்னு கோரிக்கை போட்டு முடிச்சிருவோம். ஏ பெரவு! அய்யா பெரவு! ஒரு சாங் எளுதுய்யா!

பிரவு: சாங்தானே! அஞ்சே நிமிசம்ணே!
             ‘செந்தமிழ் சிங்கமே
              சேர்த்து வைத்த தங்கமே
              உன் தமிழில் உலகமே
              ஓடி ஒளியும் கலகமே’
வானம்பாடிகள்,கதிர்,ப்ரியா,பாலாசி மற்றும் 165 ஃபாலோயர்: என்னாஆஆஆஆஆஆஆஆஅது?

பிரவு: தற்காலிக விடுப்பில் செல்வதால் எல்லாம் ட்ராஃப்டில். அய்யா! ஒரு நிமிடம் அழைக்கவா! கதிர் பிசியா?

...........................................................................................................

வடிவேலு, பிரபா: ஓடிட்டாய்ங்களா? :))))))))) நாம யாரு! டெர்ரர்ல...:))))))
~~~~~~~~~~~~~~~~~~~~

45 comments:

பிரபாகர் said...

மொதல்ல துண்ட போட்டுட்டு அப்புறம் படிப்போம்!

பிரபாகர்...

பிரபாகர் said...

அய்யா, பாம்ப பாத்துட்டோம்னா அடிக்கிற வரைக்கும் தூக்கம் வராது. அதனாலதான் ஸ்னேக் பிரபான்னு பேர வெச்சி, (ரொம்ப நல்லாருக்கேன்னு நினைச்சிட்டிருந்தேன்) இப்படி அடிச்சா... வலிக்குது... வேணாம்.... அழுதுடுவேன்...

பிரபாகர்...

பிரபாகர் said...

சங்ககால புலவர்களையும் விட்டு வைக்கலயா சாமி! உங்க ரவுசு தாங்கல... நிசமா வடிவேல வெச்சி ஒரு ரேக்கிங் பண்ணினாத்தான் வழிக்கு வருவீங்க!

பிரபாகர்...

ஈரோடு கதிர் said...

யாருக்காவது ’தில்’ இருந்தா சிரிக்காம படிங்க பார்க்கலாம்........

thenammailakshmanan said...

அவ்வையார் கவுஜ அடச்சீ செய்யுளுக்கு எதிர் செய்யுள்னு கம்பர் எழுதுறாரு. எதிரெதிர் செய்யுள்னு திருவள்ளுவர் எழுதுறாரு. மாணிக்க வாசகர் முன் நவீனத்துவம்ங்குறாரு. காளமேகப் புலவர் பின் நவீனத்துவம்தான்னு பொலம்புறாரு. நக்கீரன் அவரு பாட்டுக்கு குற்றம் குற்றமேன்னு புலம்பிட்டு திரியிறாரு.//

:))))))))))))

ஈரோடு கதிர் said...

அய்யோ சாமி...

சிரிச்சி சிரிச்சி வயிறு வலியோட வந்தா...

ஸ்ஸ்ஸ்நேக் பிரவு போட்ட காமடி அத விட தூள்...

ஈரோடு கதிர் said...

//ஏன்யா! நாங்க பாட்டுக்கு அமைதியா தமிழ்க்கடலில் திளைத்திருந்தோம். பதிவப்போட்டு இதுல இழுத்து விட்டு அடிதடில கொண்டு வந்துட்டியே. அவ்வையார் கவுஜ அடச்சீ செய்யுளுக்கு எதிர் செய்யுள்னு கம்பர் எழுதுறாரு. எதிரெதிர் செய்யுள்னு திருவள்ளுவர் எழுதுறாரு. மாணிக்க வாசகர் முன் நவீனத்துவம்ங்குறாரு. காளமேகப் புலவர் பின் நவீனத்துவம்தான்னு பொலம்புறாரு. நக்கீரன் அவரு பாட்டுக்கு குற்றம் குற்றமேன்னு புலம்பிட்டு திரியிறாரு. உன்ன பள்ளிய விட்டு ஓட விட்டது பத்தாது. அடடா. புளிய மிளாரு இல்லாம போச்சே. அவ்வையாரே! அந்தத் தடியக் குடுங்க.//

யெப்பா.... வலை அரசியல்ல கரை கண்டாச்சு போல...

ம்ம்ம்ம் நடத்துங்கண்ணே

D.R.Ashok said...

என்ன ஒரு எகதாளம்... இப்பிடியெல்லாம் சிரிக்கவைக்க கூடாது.. சொல்லிட்டேன்... அம்புடுதேன்.. (மதர slangu எனக்கு அவ்வளவா வராது..)

ஜெட்லி said...

தமில் வால்க.... ஐயா...

சூப்பர் காமெடி கற்பனை.....

D.R.Ashok said...

அப்ப ... பழம் நீயப்பா... அவ்வை பாடிய பாடல் இல்லையா...

சரி.. ’ஒன்றானவன் உருவில் இரண்டானவன்’ பாட்டு கூடவாங்க?

சி. கருணாகரசு said...

மிக ரசித்தேன்....
தூள்!

இராகவன் நைஜிரியா said...

மொத்த கும்மியையும் இடுகையில் இப்படி அடிச்சா, என்ன மாதிரி, அப்பாவிங்க எல்லாம் பின்னூட்டத்தில் என்னத்த கும்மி அடிக்கிறது.

அவ்...வ்....வ்...

இராமசாமி கண்ணண் said...

அய்யா. சாமி. நான் வரல் இந்த வெலாட்டுக்கு. ஏன் இப்படி. நக்கிரர், நாலாடியார்லாம் என்ன பாவம் பன்னினாங்க. முடியல.

Jey said...

ஒன்னையும் சொல்றதுக்கு இல்ல போங்க.
ஷ்டார்ட்ங்ல இருந்து ப்பினிஷிங் வரைலயும் னையாண்டி+கலக்கல் காமடிதான்.
ட்ராமா போட்டா கோட நல்லா வரும்போலயே.

Jey said...

ஒன்னையும் சொல்றதுக்கு இல்ல போங்க.
ஷ்டார்ட்ங்ல இருந்து ப்பினிஷிங் வரைலயும் னையாண்டி+கலக்கல் காமடிதான்.
ட்ராமா போட்டா கோட நல்லா வரும்போலயே.

நிஜாம் நியூஸ்.., said...

அண்ணே! உங்க நக்கலுக்கு ஒரு அளவேயில்லையா? திருவள்ளுவரையும்,அவ்வையையும் சேர்த்து காமெடிப் புயலோட கைகோக்க உட்டது நல்ல காமெடி.. அதுல டூப்பிளிகேட் அவ்வையையும் காட்டினது அற்புதம். ஒருவேள அவ்வைக் கிளவி வந்தா இப்படித்தான் சொல்லும் போலத்தெரியிது...

அமைதிச்சாரல் said...

//அவ்வையார் கவுஜ அடச்சீ செய்யுளுக்கு எதிர் செய்யுள்னு கம்பர் எழுதுறாரு. எதிரெதிர் செய்யுள்னு திருவள்ளுவர் எழுதுறாரு. மாணிக்க வாசகர் முன் நவீனத்துவம்ங்குறாரு. காளமேகப் புலவர் பின் நவீனத்துவம்தான்னு பொலம்புறாரு. நக்கீரன் அவரு பாட்டுக்கு குற்றம் குற்றமேன்னு புலம்பிட்டு திரியிறாரு. உன்ன பள்ளிய விட்டு ஓட விட்டது பத்தாது. அடடா. புளிய மிளாரு இல்லாம போச்சே. அவ்வையாரே! அந்தத் தடியக் குடுங்க.//

சிரிச்சி தீரலை.. செம காமெடி :-))))

பழமைபேசி said...

Annae Annae

எம்.எம்.அப்துல்லா said...

இஃகிஃகிஃகி

:)))

நசரேயன் said...

//மொத்த கும்மியையும் இடுகையில் இப்படி அடிச்சா, என்ன மாதிரி, அப்பாவிங்க எல்லாம் பின்னூட்டத்தில்
என்னத்த கும்மி அடிக்கிறது.//

ஆமா .. ஆமா

நேசமித்ரன் said...

present sir

Mahi_Granny said...

கதிரை வழி மொழிகிறேன் . சிரிக்காமல் வாசிக்க முடியாது
. பாலா சார் உங்களால் மட்டும் எப்படி முடிகிறது.superb

ராசராசசோழன் said...

வானம்பாடி சார், நீங்க ரொம்ப நல்லவருருருருருருருருருன்னு நினைகிறேன்....

சத்ரியன் said...

பாலா சார்,

பக்கத்து பெட்ல தூங்கறவன் எழுந்து அடிக்க வந்துட்டான். பதிவு படிச்சிட்டு போயி படுத்தாலும் கனவுலயும் வந்து தொல்லை பண்ணுது. பின்னே, தூங்கிக்கிட்டே சிரிச்சா அடிக்க வராமா என்ன பண்ணுவாங்க.?

முடியில சாமீய்ய்ய்ய்...!

நாய்க்குட்டி மனசு said...

தூள் ! காலையில முத போணி உங்களுது தான். அப்பாடா. இன்னைய பொழுது சந்தோஷமா போகும். இன்னும் ஒரு தூள் !

ஆரூரன் விசுவநாதன் said...

//யாருக்காவது ’தில்’ இருந்தா சிரிக்காம படிங்க பார்க்கலாம்........//

you are right kadir,..........

ஆரூரன் விசுவநாதன் said...

//எங்கூருல தமிலுக்கு, செந்தமிலுக்கு ஒரு விளா எடுக்குறோம். அதுக்கு ஒரு வெளம்பரப்படம் எடுக்கணும். என்னையத்தான் பொறுப்பாக்கிட்டாய்ங்க. நீங்கள்ளாம் சேர்ந்து ஒரு பாட்டு எளுதி, ஆளுக்கு ஒரு வரி பாடி உதவணும்.//

nice......

Chitra said...

வடிவேலு: வள்ளுவரா! வணங்குகிறேன் அய்யா! உங்களை ஒன்று கேட்கலாமா? முன்ன பின்ன உங்களுக்கும் எனக்கும் வாய்க்கா வரப்பு தகராரு இருந்திருக்கா? பின்ன எதுக்கு பல்லு உடையிறா மாதிரி துப்பார்க்கு துப்பாக்கின்னு எல்லாம் செய்யுல் எழுதி என்னைய மாதிரி சின்னப் பசங்கள அடி வாங்கி வச்சிய. அவ்வ்வ்வ்வ்வ்வ். தோ! அந்தாத்தாவாவது ஒரு வரி ஒரு வரி எளுதிச்சி. நீங்க இரண்டு வரி எழுதி இந்தக் கையில ஒன்னு அந்தக் கையில ஒன்னுன்னு எங்க வாத்தி பிச்சிப்புடுவாரு..............ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா..... எப்படிங்க.....எப்படி? வடிவேலுவையும் திருவள்ளுவரையும் சேர்த்து ஒரு கான்செப்ட் யோசித்ததுக்கே இந்தாங்க ஒரு பூங்கொத்து!

க.பாலாசி said...

//நோ தமில்னு சொல்றான் பக்கிப்பய. பன்னாடப்பய.//

அதானே.. ராஸ்கோலு...பிச்சிபுடுவேன் பிச்சி....

க.பாலாசி said...

//எங்க! நீ பாடின நீபழம் நீயப்பா பாடு?//

என்னது பழநீயப்பா பாடுனது அவ்வையாரா... அது கே.பி.எஸ் இல்லையா..??

க.பாலாசி said...

//அந்த கிழவி நாந்தான் அவ்வைன்னு ஏமாத்துதுதா?சொர்க்கத்துல கூடவா ப்ராடு?//

க்க்க்க்கும்... ப்ப்ப்ராடுன்னு ஆனப்பெறவு சொக்கமாயிருந்தாயென்ன நரகமாயிருந்தாயென்ன...

க.பாலாசி said...

//ஏன் பேசமாட்ட? ஆத்திச் சூடி சொல்றா சொல்றான்னு எங்க தமிழ் வாத்திக்கிட்ட அடி வாங்கினவன் நானு! //

ம்ம்ம்... அதெல்லாம் ஒரு காலம்... அந்த கெழவி மட்டும் சிக்குனுச்சி...

க.பாலாசி said...

//பின்ன எதுக்கு பல்லு உடையிறா மாதிரி துப்பார்க்கு துப்பாக்கின்னு எல்லாம் செய்யுல் எழுதி என்னைய மாதிரி சின்னப் பசங்கள அடி வாங்கி வச்சிய.//

இந்த கொறல துப்பார்க்கு துப்பாய்ய்ய்ய ன்னு சொல்லும்பேதே காலைல திண்ண சோறெல்லாம் வெளியில வந்திடும்... என்னாக்கொடுமைங்க இது....

க.பாலாசி said...

//நாலடியார்: நாந்தான் நாலடியார் மகனே. “உணர உணரும் உணர்வுடையாரை..”//

அஹ்ஹ..அஹ்ஹ... சிக்கிட்டாருய்யா மனுஷன்...

க.பாலாசி said...

//வாத்தி: டேய்! யார்ரா அது வடிவேலுவா! உருப்படாத பயலே! இப்பவாச்சும் அந்த பாட்டச் சொல்லு. நான் மூணாப்புல சேத்துக்கிர்றேன்.//

அவ்வ்வ்வ்வ்வ்வ்...... கொடும கொடுமன்னு கோவிலுக்குப்போனா அங்கவொண்ணு எப்டியோ ஆடுனாச்சாம்ல... வந்துட்டாருய்யா வாத்தியாரு... நல்லா கௌப்புறாய்ங்கய்யா பீதிய....

க.பாலாசி said...

//அவ்வையார் கவுஜ அடச்சீ செய்யுளுக்கு எதிர் செய்யுள்னு கம்பர் எழுதுறாரு. எதிரெதிர் செய்யுள்னு திருவள்ளுவர் எழுதுறாரு. மாணிக்க வாசகர் முன் நவீனத்துவம்ங்குறாரு. காளமேகப் புலவர் பின் நவீனத்துவம்தான்னு பொலம்புறாரு. நக்கீரன் அவரு பாட்டுக்கு குற்றம் குற்றமேன்னு புலம்பிட்டு திரியிறாரு//

அங்கய்ய்ய்ய்யும்மமா...... ஆத்தாடி தாங்குமா...

//ஆஹா! அம்புட்டும் கனவா! தப்பிச்சண்டா சாமி! //

நாங்களும்தான் சாமீ......

//பிரவு: சாங்தானே! அஞ்சே நிமிசம்ணே! ‘செந்தமிழ் சிங்கமே சேர்த்து வைத்த தங்கமே உன் தமிழில் உலகமே
ஓடி ஒளியும் கலகமே’//

எடுத்து நான் விடவா.. என்பாட்டை தோ..தோ..தோ..தோழா... குடிக்கத்தான் உடனே கொண்டாநீ..சோ..சோ..சோ..சோடா......


யப்பா சாமீ... ஆளவிடுங்க.... நான் இப்டியே ஒரு மண்ணுலாரியாவது புடிச்சி ஊருக்கு ஒடிடுரேன்...

பிரேமா மகள் said...

இது எங்க போய் முடிய போகுது?

Robin said...

:)

மாதேவி said...

"சின்னக் குழந்தையக் கேட்டாலும் சொல்லுந்த்தா சொல்லும். பழம் நீயப்பா பாடினது அவ்வைய்யாருன்னு".

சிரித்துத் தாங்கலை.

அக்பர் said...

//யாருக்காவது ’தில்’ இருந்தா சிரிக்காம படிங்க பார்க்கலாம்........//

இது வேறையா!

நல்லா கிளப்புறாங்க பீதிய...

பாலா சார். பிரிச்சு மேய்ஞ்சிட்டிங்க...

கலகலப்ரியா said...

||யாருக்காவது ’தில்’ இருந்தா சிரிக்காம படிங்க பார்க்கலாம்........||

சிரிக்காமதான் படிச்சேன்.. என்ன இப்போ?!

sinhacity said...

இன்றைய டாப் ஐம்பது வலை பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்

ரோஸ்விக் said...

அருமையான காமெடிண்ணே... அசத்தப்போவது யாரு... கலக்கப்போவது யாருல போட்டா எல்லாரும் விழுந்து விழுந்து சிரிக்கலாம்... அப்புடி ஒரு ஸ்க்ரிப்டு... பட்டைய கெளப்பீருக்கீங்க....

ரோஸ்விக் said...

பேசாம நம்ம ஸ்நேக் பிரபாகர் அண்ணாச்சியையும், மேற்படி புலவர்களை பார்க்க கூட்டிகிட்டு போயிருந்தா... எப்புடியாவது கரெக்ட் பண்ணி அவனுக எல்லாரையும் இங்க சூட்டிங்குக்கு கொண்டுவந்திருப்பாரு...

"உழவன்" "Uzhavan" said...

சான்ஸே இல்ல :-))))))))))))))))