Friday, June 4, 2010

ரூல்ஸ் முக்கியம் அமைச்சரே..

இந்த அரசாங்க ஊழியன் இருக்கானே. அவனுக்கு அம்மா அப்பா பேரு கூட மறந்தாலும் மறந்துடும். ரூல்ஸ மட்டும் மறக்கவே மாட்டான். இந்தியன்ல வர பாஸாதி மாதிரி எதுக்கெடுத்தாலும் ரூல்சுனு சொல்லுவாய்ங்க. வேலைய கட்டி வைக்க ரூல்சு. லஞ்சம் வாங்க ரூல்சு. மேலதிகாரி மொட்ட தலையில கட்டவிரல் முளைக்கணும். என்னா பண்ணுவியோ தெரியாதுன்னா, எங்கிட்டோ சந்து பொந்து தேடி அதுக்கும் ஒரு வழி சொல்லுவானுவ. 

ஆனாலும் அவனுவளுக்கே சிப்பு சிப்பா வர ரூல்சுங்க இருக்கு. ஒன்னு ரெண்ட பாப்பமா?

கெவருமெண்டு உத்தியோகஸ்தனோட பொழப்பு இருக்கே பொழப்பு. அதுக்கு அடிப்படை விதிகள்னு ஒரு சித்திரகுப்தன் கணக்கு ஒன்னு இருக்கு. அத புடிச்சிகிட்டுதான் தொங்கோணும். அதுல ஒன்னு இது. 

ஒரு அரசு ஊழியனுக்கு பதவி உயர்வு வந்தா அடுத்த ஒரு 21 நாளைக்கு கேஷுவல் லீவ், விடுமுறை நாட்கள் தவிர வேற விடுப்பு எடுக்கப்படாது. எடுத்தா, திரும்பவும் 21 நாளு விரதம் மாதிரி இருக்கணும். 22ம் நாளுக்கு அப்புறம்தான் பதவி உயர்வு எடுத்த நாளில இருந்து கூட சம்பளம் தருவாய்ங்க.

அது! அது! உங்கள மாதிரியே எனக்கும் சந்தேகம் வந்திச்சி. அது என்னடா 21 நாள் கணக்குன்னு. எனக்கு முன்னாடி 30 வருஷம் குப்பை கொட்டினவன், என் அதிகாரி அத்தன பேத்தையும் கேட்டேன். யோவ், அடிப்படைச் சட்டத்துல போட்டிருக்கான்லயா? அப்புறம் கேள்வி வேற கேக்குற கேள்வின்னே சொல்லி ஏச்சிப்புட்டானுவ.

ஆனாலும், இது ஒரு உறுத்தலாவே இருந்திச்சி. கிட்டத்தட்ட 25 வருஷம் கழிச்சி, நம்ம சர்வீஸ் பெரிய காலேஜ் இருக்கு வதோதரால. அங்க போய் படிச்சிட்டு வாடான்னாங்க. நாம பாட்டுக்கு ஒரு சந்தேகம் கேக்காம இங்கிலீஷ்ல சொன்னத புரிஞ்சிகிட்டு, இந்தில சொன்னத புரிஞ்சா மாதிரி நடிச்சிகிட்டு நாளக் கடத்தினா விதி விடமாட்டன்னுச்சு. வந்தான் ஒருத்தன் வாத்தி. எதுனா டவுட் கேட்டே ஆவணும்னு அடம் புடிச்சான்.

ங்கொய்யால. இந்த கேள்விக்கு சொல்றா பாப்பம்னு எடுத்து விட்டேன். கட்டிப் புடிக்காத குறையா, குட் கொஸ்சன்னு சொல்லிட்டு, ஏய் நீ சொல்லேன் ஏய் நீ சொல்லேன்னு கிட்டதட்ட 50 பேரை கேட்டான். ஒருத்தனுக்கும் தெரியல. அப்புறம் சொன்னான் பாருங்க விளக்கம், மயக்கம் வராத குறை.

வெள்ளக்காரன் காலத்துல அரசு ஊழியன (அட பங்கா இழுக்கிறவினில்லைங்க) வெள்ளைச்சாமிங்கள, இங்கிலாந்துல பதவி உயர்வு குடுத்து இந்தியா போ ராசான்னு அனுப்புவாய்ங்களாம். அவரு அங்க சரி, நான் பதவி ஏத்துக்கிட்டேன்னு எழுதி குடுத்துட்டு கப்பல் ஏறினா, இந்தியா வந்து அவரு ஆபீஸுல ரிப்போர்ட் குடுக்க 21 நாளாகுமாம்.

அத இன்னும் அப்புடியே பிடிச்சிகிட்டு தொங்கறமாம். ஒரு பயலும் ஏன்னு கேக்கல. எனக்கு மட்டும் என்ன வந்திச்சி. சரி போங்கடான்னு இருக்கேன்.

அடுத்ததா இந்த பென்சன் குடுக்கிறாய்ங்கள்ள அதுல ஒரு ரூலு. அப்பங்காரன் மண்டைய போட்டு, ஆத்தாக்காரி மண்டைய போட்டு, அடுத்ததா நிக்கிறது பையன்னா 25 வயசு, பொண்ணுன்னாலும் 25 வயசு அல்லது கண்ணாலம் கட்டிக்கிட்டு போற வரைக்கும் (25 வயசுக்குள்ளதான்) அவிங்களுக்கு பென்சன் உண்டுன்னான். இது எப்ப? அரசு ஊழியனாக அதிக பட்ச வயசு 25 இருந்தப்ப போட்டது. அதுக்கப்புறம் 28 வயசுன்னு ஆச்சே மாத்தணுமா வேணாமா? ஒரு பயலும் கேக்குறதா இல்லை. 

அது போகட்டும், பையனுக்கு வேலை கிடைக்கலைன்னு வைங்க, ஒரு 26, 27 வயசுல கண்பார்வை போயிடுது, அல்லது மண்டைல அடிபட்டு சித்த சுவாதீனமில்லாம போச்சுன்னு வைங்க. அவனுக்கு பென்சன் கிடையாது. ஹி ஹி 25 வயசுக்கு முன்னாடின்னா, அப்பங்காரன் வேலையில இருக்கிறப்பவே இப்படி ஆயிருந்தா உண்டு. இல்லைன்னா இல்லை போடாம்பாய்ங்க.

அவரு பொண்ணு இருக்குன்னு வைங்க. அது பில்கேட்ஸ் பேரன கட்டியிருந்துச்சுன்னு வைங்க. 70 வயசுல புருசங்காரன் செத்துபூட்டான்னு வைங்க. சொந்த விமானத்துல வந்து, எங்கப்பா ரயிலுக்கு பிகிலூதற வேலையில இருந்தாரு. எம்புருசன் போய் சேர்ந்துட்டாரு. எனக்கு சம்பாத்தியமில்ல. வேற கண்ணாலம் கட்டல. பென்சன குடுடான்னா. வாங்க மேடம். இதில கையெழுத்து போடுங்க மேடம். போங்க மேடம். சாவற வரைக்கும் பென்சன் உண்டுன்னு அனுப்புவாய்ங்க.

ஏன்னா சட்டம் அப்புடிச் சொல்லுது. மகள் விதவையாகி பிறந்தவீட்டுக்கு வரணும். அதான் ரூல்ஸ். மாமியா ஊட்டுல இருந்தா கிடையாது. நீங்க சொல்லுங்க. அப்பா போய், அம்மா போய், அதுக்கப்புறம் அம்மா ஊடுன்னு ஒன்னு எங்க இருந்து வரும் சொல்லுங்க? 

அத விட வங்கொடுமை ஒன்னு இருக்கு. இவரு சர்வீசில இருக்கும் போதே பையனோ பொண்ணோ ஊனமானாலோ, மனச்சிதைவு ஏற்பட்டாலோதான் பென்சனாம். கெளவன் ரிட்டையர் ஆயி, அப்புறம் ஒரு பொண்ண கட்டி, அவங்களுக்கு குழந்தை பிறந்தா, அந்த குழந்தைக்கு 25 வயசு வரைக்கும் பென்ஷன். அதுக்கு ஊனம்னா ஆயுள் வரைக்கும் பென்ஷன். 

ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ. நல்லா சொல்லுறானுங்கைய்யா ரூல்ல்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸு.

நமக்கு ஏம்பா அக்கப்போரு. ரூல் சொல்லுது. கேட்டுட்டு நம்ம பொழப்ப பாக்கலாம். வர்ர்ர்ர்ட்ட்ட்டா...

48 comments:

இராகவன் நைஜிரியா said...

மீ த பர்ஸ்ட்டோய்..

சூர்யா ௧ண்ணன் said...

முதல் ஒட்டு என்னோடது..

இராகவன் நைஜிரியா said...

அண்ணே .. ரொம்ப நாளைக்குப் பின்னாடி முதல் பின்னூட்டம்...

ஊய்....ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

(ஓன்னுமில்ல அண்ணே விசில் சத்தம்தான்..)

இராகவன் நைஜிரியா said...

// ரூல்ஸ் முக்கியம் அமைச்சரே..//

அண்ணே ரூல்ஸ் அப்படின்னு ஆங்கிலத்தில் சொல்வதை - விதி அப்படின்னு சொல்லலாமா?

சொல்லலாம் என்றால்.. விதி முக்கியமா அமைச்சரே என்று கேள்வி கேட்கலாமா?

சந்தேகம் கேட்போர் சங்கம்
நைஜிரியா கிளை

இராகவன் நைஜிரியா said...

அடுத்த சந்தேகம்

அண்ணே இது கும்மி இடுகையா?
சீரியஸ் இடுகையா?

இதுக்கு பதில் சொன்னீங்கன்னா அடுத்த சந்தேகம் கேட்போம்...

சந்தேகம் கேட்போர் சங்கம்
நைஜிரியா கிளை.

இராகவன் நைஜிரியா said...

// வேலைய கட்டி வைக்க ரூல்சு. //

வேலையை யாருக்கு கட்டி வைக்கணும்..

சந்தேகம் கேட்போர் சங்கம்
நைஜிரியா கிளை

இராகவன் நைஜிரியா said...

// ரூல்ஸ மட்டும் மறக்கவே மாட்டான். //

மறந்திட்டா... அடுத்த பரீட்சையில் தோல்வி அடைஞ்சுடுவோமா அண்ணே?

சந்தேகம் கேட்போர் சங்கம்
நைஜிரியா கிளை

வானம்பாடிகள் said...

வாங்கண்ணா:)

வானம்பாடிகள் said...

வாங்க சூர்யா

இராகவன் நைஜிரியா said...

// என்னா பண்ணுவியோ தெரியாதுன்னா, எங்கிட்டோ சந்து பொந்து தேடி அதுக்கும் ஒரு வழி சொல்லுவானுவ. //

மெயின் ரோடில் தேடினா கிடைக்காதா அண்ணே?

சந்தேகம் கேட்போர் சங்கம்
நைஜிரியா கிளை

இராகவன் நைஜிரியா said...

// லஞ்சம் வாங்க ரூல்சு. மேலதிகாரி மொட்ட தலையில கட்டவிரல் முளைக்கணும். //

மொட்டைதலையில் மட்டும் ஏன் கட்ட விரல் முளைக்கணும். முடியிருக்கிற தலையில் முளைக்க கூடாதா?

சந்தேகம் கேட்போர் சங்கம்
நைஜிரியா கிளை

இராகவன் நைஜிரியா said...

// ஒரு அரசு ஊழியனுக்கு பதவி உயர்வு வந்தா அடுத்த ஒரு 21 நாளைக்கு கேஷுவல் லீவ், விடுமுறை நாட்கள் தவிர வேற விடுப்பு எடுக்கப்படாது. //

பரவாயில்லையே.... ரூல்ஸ் நல்லாத்தான் இருக்கு...

சரி எனக்கு ஒரு வேலை கொடுக்கச் சொல்லுங்க... 21 நாள் இல்லை 210 நாள் லீவே போடாம வரேன்.

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

///////////வெள்ளக்காரன் காலத்துல அரசு ஊழியன (அட பங்கா இழுக்கிறவினில்லைங்க) வெள்ளைச்சாமிங்கள, இங்கிலாந்துல பதவி உயர்வு குடுத்து இந்தியா போ ராசான்னு அனுப்புவாய்ங்களாம். அவரு அங்க சரி, நான் பதவி ஏத்துக்கிட்டேன்னு எழுதி குடுத்துட்டு கப்பல் ஏறினா, இந்தியா வந்து அவரு ஆபீஸுல ரிப்போர்ட் குடுக்க 21 நாளாகுமாம்.///////ஆஹா இதுதான் மேட்டரா ! இப்பத்தான் தெரிந்துகொண்டேன் . உங்க தமிழ்மணம் ஓட்டுப்பட்டை இயங்கவில்லை சற்று சரி பார்க்கவும் . புரிதலுக்கு நன்றி !

இராகவன் நைஜிரியா said...

// உங்கள மாதிரியே எனக்கும் சந்தேகம் வந்திச்சி. //

எங்கள மாதிரியா? அண்ணே எங்களுக்கு எப்ப சந்தேகம் வந்துச்சு... சான்சே இல்ல..

உங்களுக்கு வந்துச்சு சொல்லுங்க ஓத்துக்கறோம்...

மங்குனி அமைச்சர் said...

ரூல்ஸ பாலலோ பண்ண கூட காசு கேப்பானுக

க.பாலாசி said...

//சரி போங்கடான்னு இருக்கேன்.//

இப்டித்தான் இருக்கணும்... இன்னும் நிறைய இருக்குமே...

நானும் ஏதாவது கவருமண்டு வேல கெடைக்குமான்னு பாக்குறேன்... தரமாட்டுங்கிறானுவோ...

இப்டிக்கா செல மேட்டர தெரிஞ்சிகிட்டேன்.....

க.பாலாசி said...

ஆகா... இன்னுமா அப்ரூவல்...???

இராமசாமி கண்ணண் said...

உள்ளேன் ஐயா :-).

அகல்விளக்கு said...

அந்த 21நாள் ரூல்ஸ்தாங்கண்ணா டாப்பு...

இன்னுமா நம்மாளுங்க இப்பிக்கீறாங்க...

ஹைய்யோ.... ஹைய்யோ....

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

ஒரு அரசாங்க ஊழியனா இன்னும் சில கேள்வி கேக்கணும் பாஸ், அப்புறமா வர்றேன்!

ஈரோடு கதிர் said...

//நானும் ஏதாவது கவருமண்டு வேல கெடைக்குமான்னு பாக்குறேன்... தரமாட்டுங்கிறானுவோ...//

ஏண்ணே... வெரலு சூப்ப கவர்மெண்டுல வேலைக்கு ஆளெடுக்கறதில்லீங்ளா

ஈரோடு கதிர் said...

21 நாள் ரகசியத்தச் சொன்ன வானம்பாடி தொடர்ந்து 21 நாள் இடுகை போட சபிக்கிறேன்

ஈரோடு கதிர் said...

அடங்கொன்னியா... வானம்பாடி ஊட்டல பின்னூட்னா... கதவு சாத்தியிருக்குது...

ஓ... ஆனானப்பட்ட வானம்பாடியவே மெரட்டிப்பொட்டாங்களா அனானி சங்கத்தாளுக

பழமைபேசி said...

அண்ணே, இப்படி நிறைய உலகம் பூராவும் இருக்கு... மனசைத் தேத்திகுங்க.....

தொடர்வண்டி, அகலப் பாதையில இரண்டு சட்டத்துக்கும் உள்ள இடைவெளி எவ்ளோங்ண்ணா??

பழமைபேசி said...

என்னாதிது?? அண்ணன் வீட்டுக்கும் மட்டுறுத்தலா??

சி. கருணாகரசு said...

வித்தியாசமாத்தான் (முட்டாள் தனமாகவும்) இருக்கு விதிமுறைகள்.

பகிர்தலுக்கு... நன்றிங்கைய்யா.

நேசமித்ரன் said...

@ராகவன் அண்ணே
//சந்தேகம் கேட்போர் சங்கம்
நைஜிரியா கிளை
//

என்னை கேட்காமல் துவக்கியதால் சங்க கூட்டத்தை புறக்கணிக்கிறேன்
(ஞாயிறு கூட்டத்தில் ஆசிட் வீசும் முயற்சிகள் இருப்பதாக ’கேள்வி’பட்டதாலும்)

:)

பாலா சார்

ஏர் இந்தியா நிறுவனத்தின் சமீபத்திய தொடர் சறுக்கல் பற்றி உங்க பாணியில எழுத வேண்டுகோள் வைக்கிறேன்

நன்றி!

padma said...

சாதாரணமா ஒரு பதிவு படிச்சு எத்தனை நாளாச்சு?

வானம்பாடிகள் said...

பழமைபேசி said...

//அண்ணே, இப்படி நிறைய உலகம் பூராவும் இருக்கு... மனசைத் தேத்திகுங்க.....//

அது மரத்துப் போச்சு.:(

//தொடர்வண்டி, அகலப் பாதையில இரண்டு சட்டத்துக்கும் உள்ள இடைவெளி எவ்ளோங்ண்ணா?//

அது 5’ 6” (1676 மி மீ)

வானம்பாடிகள் said...

பழமைபேசி said...

//என்னாதிது?? அண்ணன் வீட்டுக்கும் மட்டுறுத்தலா??//

பொரணி போட்டுட்டு போயிடுறாய்ங்க. இல்லீன்னா மத்தவங்கள வம்புக் கிழுக்கிறாய்ங்க. அதான்:))

வானம்பாடிகள் said...

ஈரோடு கதிர் said...

//அடங்கொன்னியா... வானம்பாடி ஊட்டல பின்னூட்னா... கதவு சாத்தியிருக்குது...

ஓ... ஆனானப்பட்ட வானம்பாடியவே மெரட்டிப்பொட்டாங்களா அனானி சங்கத்தாளுக//

ம்கும். நம்மளால மத்தவங்களுக்கு எதுக்கு நோக்காடுன்னு தானுங்ணோவ். சாவு வீட்டுல வந்து வடிவேலு ஜோக்கு சொல்லி சிரிக்கிற ஆளுங்களும் இருக்காய்ங்களே என்ன பண்ண?

வானம்பாடிகள் said...

நேசமித்ரன் said...
@ராகவன் அண்ணே
//சந்தேகம் கேட்போர் சங்கம்
நைஜிரியா கிளை
//

என்னை கேட்காமல் துவக்கியதால் சங்க கூட்டத்தை புறக்கணிக்கிறேன்
(ஞாயிறு கூட்டத்தில் ஆசிட் வீசும் முயற்சிகள் இருப்பதாக ’கேள்வி’பட்டதாலும்)

:)//

அத வீசாம போத்தல்ல குடுத்தா கக்கூசாவது கழுவலாம்ல. என்னமோ போங்க:(

/பாலா சார்

ஏர் இந்தியா நிறுவனத்தின் சமீபத்திய தொடர் சறுக்கல் பற்றி உங்க பாணியில எழுத வேண்டுகோள் வைக்கிறேன்

நன்றி!/

ரயிலோட்றவன் விமானத்தபத்தி எப்புடி எழுதலாம்னு வெவகாரம் வராதா?:))

சாந்தப்பன் said...

இந்த மாதிரி பதிவுகளும், கும்மிகளும் பார்த்து ஒரு வாரம் ஆகிவிட்டது.

அந்த 21 நாள் மேட்டர் அட்டகாசம்....

பிரபாகர் said...

அய்யா! ரூல்ஸ்னா முறையான விஷயங்களா இருக்கும்னு ரொம்ப தப்பா இது வரைக்கும் நினைச்சிட்டிருந்தேன்...

பிரபாகர்...

ரோஸ்விக் said...

ஏண்ணே, நம்ம நாட்டுல சட்டத்தையும், ரூல்சையும் ஹாலோ பிளாகால கட்டிரிப்பனுகளோ... ஒரே ஓட்டையா இருக்குது??

ராஜ நடராஜன் said...

//சாதாரணமா ஒரு பதிவு படிச்சு எத்தனை நாளாச்சு?//

//என்னாதிது?? அண்ணன் வீட்டுக்கும் மட்டுறுத்தலா??//

வந்ததுக்கு இவங்களோடு கூட்டு சேர்ந்துக்கிறேன்.

இன்னும் நிறைய பேர் இப்படியே இரண்டு நாளா மாற்றுக்களை எழுதினாங்கன்னா இப்பத்த ரூல்ஸ மாத்திடலாம்.

K.B.JANARTHANAN said...

21 நாட்களுக்குப் பின்னே இப்படி ஒரு சுவையான விஷயமா?

K.B.JANARTHANAN said...

21 நாட்களுக்குப் பின்னே இப்படி ஒரு சுவையான விஷயமா?

sriram said...

மேட்டரெல்லாம் ஜுப்பரு.. கருப்பு கவுனு, கோடைக்கால விடுமுறை, மனிதரின் பேர் போடாமல் பதவியின் பேர் மட்டும் போடுவது (லெட்டர்ல ஜனாதிபதி,பிரதர்னு தான் எழுதுவாங்க, திரு. மன்மோகன் சிங் என்று எழுத மாட்டாங்க), இப்படி இன்னும் நெறய இருக்கு.
நீங்க சொன்னது சுவையா இருந்தது.

அப்புறம்.. நம்ப ராகவன் அண்ணனுக்கு ஆபிஸ்ல பிடுங்க ஆணியே குடுக்க மாட்டாங்களா?? இத்தன பின்னூட்டம் போட்டு தள்றார்?

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
நிரந்தரத் தலைவர்
மேல் கேள்வி கேட்போர் சங்கம்
தலைமையகம் : பாஸ்டன்

பா.ராஜாராம் said...

வெக்கை.

ஜன்னலோர இருக்கை கிடைத்த ரயில் பயணம் பாலா சார்.

கதிர் சொல்வது போல இப்படி தினம் ஒண்ணு போடுங்களேன். ப்ளீஸ்.

கொஞ்சம் மாறட்டும்,

வெக்கை.

பட்டாபட்டி.. said...

ஓ..இப்படியெல்லாம் சட்டம் இருக்கா சார்?..புது விசயங்களை தெரிந்துகொண்டேன்..

காமராஜ் said...

அந்த 21 அழுத்தமான வரலாறு.பின்னதுகளும் சோடையில்லை.கடற்கரை மணலில் விரல் அலையும் போது சொப்பு விக்ரஹம் கிடைச்சா மாதிரி, அழகு பாலாண்ணா.

ஸ்ரீராம். said...

இருபத்தொரு நாள் கண்டிஷன் அரசாங்கத்தின் நகைச்சுவை உணர்வைக் காட்டுகிறது போலும். இப்போதான் பென்ஷன் கிடையாது..ஏதோ கான்ட்ரிப்யூட்டரி பென்ஷன்னு சொன்னாங்களே...

சத்ரியன் said...

கேள்விய மட்டும் நல்லா கேளுங்க!

இராகவன் நைஜிரியா said...

// sriram said...
மேட்டரெல்லாம் ஜுப்பரு.. கருப்பு கவுனு, கோடைக்கால விடுமுறை, மனிதரின் பேர் போடாமல் பதவியின் பேர் மட்டும் போடுவது (லெட்டர்ல ஜனாதிபதி,பிரதர்னு தான் எழுதுவாங்க, திரு. மன்மோகன் சிங் என்று எழுத மாட்டாங்க), இப்படி இன்னும் நெறய இருக்கு.
நீங்க சொன்னது சுவையா இருந்தது.

அப்புறம்.. நம்ப ராகவன் அண்ணனுக்கு ஆபிஸ்ல பிடுங்க ஆணியே குடுக்க மாட்டாங்களா?? இத்தன பின்னூட்டம் போட்டு தள்றார்?

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
நிரந்தரத் தலைவர்
மேல் கேள்வி கேட்போர் சங்கம்
தலைமையகம் : பாஸ்டன் //

அது அப்படித்தான் அண்ணே. விடாது ஆணி இருந்தாலும், அண்ணன் வலைப்பூவில் கும்மி அடிக்க அண்ணன் ஸ்பெஷல் அனுமதி கொடுத்திருக்காரு. அதனால, இங்க மட்டும் ரொம்ப ஜாலியா இருப்பேன். அது பூர்வ ஜன்ம பந்தம் அண்ணே. இங்கு எனக்கு இருக்கும் உரிமை மத்த இடத்தில் கிடைக்காது இல்லையா அதனால் அங்கெல்லாம் ரொம்பவே அடக்கி வாசிப்பேன்.

மேலும் பார்த்தீங்கன்னா.. முதல் பின்னூட்டத்திற்கும், கடைசி பின்னூட்டத்திற்கும் உள்ள நேர வித்யாசம் 15 நிமிஷம். என்னதான் ஆணி அதிகமாக இருந்தாலும், அண்ணன் வலைப்பூ என்பதால், நடுவில் ஒரு 15 நிமிஷம் வந்துட்டு கும்மி அடிச்சுட்டு ஓடிடுவோம்.

மேல் கேள்வி கேட்போருக்கு பதில் சொல்லும் சங்கம்
நைஜிரியா கிளை

பிரேமா மகள் said...

கவர்மெண்ட் வேலை கிடைக்க என்ன பண்ணனும்?

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//பிரேமா மகள் said...
கவர்மெண்ட் வேலை கிடைக்க என்ன பண்ணனும்?
//

வேலை நடக்க என்ன பண்ணனும்னு எல்லாருக்கும் தெரியும். வேலை கிடைக்க நல்லா படிச்சு எக்ஸாம் பாஸ் பண்ணனும்னு நான் நினைக்கிறேன்.

வானம்பாடிகள் said...

@@நன்றி பனித்துளி
@@நன்றி மங்குனி. அதத்தானே சொன்னேன்.
@@நன்றி பாலாசி. பார்த்தால்லாம் கெடைக்காது. பரீட்சை எழுதோணும்.
@@நன்றிங்க இராமசாமி கண்ணன்
@@நன்றி ராஜா
@@நன்றிங்க பெயர் சொல்ல விருப்பமில்லை.
@@நன்றி கருணாகரசு
@@நன்றிங்க பத்மா
@@நன்றிங்க சாத்தப்பன்
@@நன்றிங்க ஜனா
@@நன்றி பிரபா
@@நன்றி நடராஜன்
@@நன்றி ஸ்ரீராம். அதற்கும் ஒரு காரணம் உண்டு.
@@நன்றி பாரா
@@நன்றி பட்டாபட்டி
@@நன்றி காமராஜ்
@@நன்றி ஸ்ரீராம்.ஆமாம். ஆனாலும் பழைய ஊழியர்களின் பென்ஷன் தொடருமே.
@@நன்றி சத்திரியன்
@@நீங்க கும்மினாதான் களையே இராகவண்ணே.
@@நன்றி ப்ரேமா மகள்.படிக்கணும். பரிட்சை எழுதணும்.