Wednesday, June 30, 2010

ப்ரோட்டோகால்

இந்த மாதம் 26ம் தேதி நம்ம சிதம்பரம் ஐயாவும் மாலிக் ஐயாவும் இஸ்லாமாபாத் நகரில் சந்திச்சாங்களாம். அப்ப இந்தியக் கொடி தலைகீழா இருந்திச்சாம். சிதம்பரம் ஐயா என்ன இருந்தாலும் ஐ.பி. தலைவரில்லையா. டக்குன்னு கண்டுபிடிச்சி மாலிக் கிட்ட ‘என்ன்னாதிது’ன்னாராம். அவரு ‘ஹி ஹி..ச்ச்சாஆஆரி’ன்னு சரி செய்தாராம். இதெல்லாம் ஒரு மேட்டர்னு இடுகை தேத்துறியான்னு கேக்கறீங்களா! நாயந்தான். சிதம்பரம் ஐயாவே அப்புடித்தான் சொல்லி இருக்காரு. 

“I think its a minor mistake and I don’t think we should make much of it.’’

தமிழ் பேப்பரில் திரு சிதம்பரம், கொடி தலைகீழா இருந்ததை ஃபோட்டோ பிடித்தவர்கள் சரி செய்த பிறகும் படம் எடுக்க வேண்டாமா என்று கேட்டிருக்கிறார். நாயந்தானே!

இந்த கொடிகாத்த குமரன்னு ஒருத்தர சொல்லுவாய்ங்களே அவரு காங்கிரஸ்காரருங்ளாண்ணா? 

சரி சரி! நமக்கெதுக்கு வீண் விவகாரம். அவரே சின்ன்ன விஷயம் இதுன்னு சொன்னப்புறம் நாம ஊதி பெருசாக்குறது சரியில்லை. இப்ப மேட்டரு என்னன்னா படிச்சதும் படக்குன்னு தோணுனது,  அத கண்டு பிடிச்சி அவருகிட்ட நொணாவட்டம் சொல்லி அவருதான் மாத்தணுமா? என் தேசக் கொடி இப்புடி சிரசாசனம் பண்ணப் போச்சான்னு பதறிப் போய் இவரு மாத்தியிருக்க வேணாமாங்கிறது.

இந்த ப்ரோட்டோகால்னு வேற எங்க இருக்கோ இல்லையோ, அரசியல்லையும் அதிகார வர்க்கத்திலையும் இதில்லாம முடியாது. புரோட்டாகாலுன்னாவது சொல்லத் தெரிஞ்சிருக்கணும். இந்த ப்ரோட்டோகால் என்கிற நெறிமுறை காரணமாத்தான் நம்ம ஐயா, அவர மாத்த வச்சிருக்கணும்னு தோணுது. 

இந்த ப்ரோட்டோகால் படுத்தற பாடு இருக்கே. சிப்பு சிப்பாவும் வரும். துப்பலாம் போலவும் வரும். சாம்பிளுக்கு கொஞ்சம்:

  • காலையில அதிகாரி வரும்போது அவரு டவாலி அதான் ப்யூன் போர்ட்டிகோவில் காத்திருக்கணும். ஒரு வணக்கம் சொல்லி, கதவைத் திறந்துவிட்டு, அவரு பொட்டி, சாப்பாடு எல்லாம் எடுத்துகிட்டு அவருக்கு முன்ன ஓடி, அறைக் கதவைத் திறந்து பிடிக்கணும். திரும்ப சாயந்திரம் கிளம்பும் போதும் இதே கூத்து. ஒரு அதிகாரி சொன்னாராம் அவர் ப்யூனிடம்.தம்பி காலைல ஒரு முறை சாயந்திரம் ஒரு முறைன்னு இல்லை. நான் போக வர நீ வணக்கம் சொல்லணும்னு. 
  • போகுறப்ப கார்க்கதவ சாத்திட்டு, கிளம்பற வரைக்கும் பக்கத்துல நிக்கப் படாது. எதிர் பக்கமா சல்யூட் அடிச்சிட்டு நிக்கணும். அதிகாரி உடனே தலையாட்ட மாட்டாரு. கொஞ்ச நேரம் நிக்க வச்சிட்டு அப்புறம் சரிம்பாரு.
  • வெளியூர்ல இருந்து ஒரு அதிகாரியோ, மந்திரியோ வராருன்னா விமான நிலையத்துல போய் காத்திருந்து வரவேற்று, திரும்ப ஏத்தி விடுறது முறை. உள்ளூர் ஆளுங்களுக்கு என்ன? அதிகாரிக்கு 6 மணிக்கு விமானம்னா கீழதிகாரிங்க மூணுக்கும் நாலுக்கும் அலாரம் வச்சி, எங்க தூங்கிறுவமோன்னு ராவெல்லாம் விழிச்சி எழுந்து ஓடணும்.
  • இதுங்க உதவியாளருங்க பாடு இருக்கே பெரும்பாடு. இங்க இருக்கிற அதிகாரி சீனியரா இருப்பாரு. ஏதோ ஒரு காரணத்துல இவருக்கு அதிகாரி ஜுனியரா இருப்பாரு. இவரு உதவியாளரிடம் அவருக்கு கனக்‌ஷன் போடும்பாரு. உதவியாளர் ஃபோன் போட்டா அந்த அதிகாரியோட உதவியாளர், நீ உங்காள கூப்புடு எங்காளுதான் அதிகாரிம்பாரு. இங்க இருக்கிறவன், யோவ் எங்காளுதான் சீனியரும்பான். இதுல என்னாங்கறீங்களா? முதல்ல எடுக்கிறவரு மத்தவருக்காக காத்திருந்தா ப்ரோட்டோகால் என்னாவறது?
  • நம்ம நண்பர் ஒருத்தர் இருக்காரு. ப்ரோட்டோகால்ல கரை தேர்ந்தவரு. அவர் கைமறதியா பெல்லடிச்சிடுவாரு. ப்யூன் வந்து என்னாங்கன்னு நிப்பாரு. எதாவது காரணமா கூப்பிட்டிருந்தாதானே? சாரி சொல்லிட முடியுமா? ஒரு துண்டு பேப்பரை கிழிச்சி சுருட்டி, குப்பைக் கூடை பக்கத்துல எரிஞ்சிட்டு, அதை எடுத்து கூடையில போடுன்னு சொல்லிட்டு வேலையப் பார்ப்பாரு. 
  • இன்னொருத்தருக்கு ஒரு கிலோமீட்டரில் வீடு. மதியம் சாப்பிட வீட்டுக்குப் போவார். காலையில் வந்து இறங்கியதும் அவருடைய ப்யூன் இவரோட ப்ரீஃப் கேசை எடுத்துக்கிட்டு வரணும். திரும்ப சாயந்திரம் எடுத்துட்டு போகணும். உள்ள ஹிந்து பேப்பரும், ஆஃபீஸ் சாவியும் இருக்கும். இதச் சுமக்க முடியாதாங்கறீங்களா? ப்ரோட்டோகால் என்னாவறது?
வெளிய வந்து அவன் திட்டுறதிட்டு எந்த ப்ரோட்டோகால்லையும் அடங்காது. ச்ச்சேரி. இதுக்கே உங்களுக்கெல்லாம் பொரட்டிகிட்டு வரும். இதுக்கு மேலையும் சொல்லுறது ப்ரோட்டோகாலில்லை. வர்ட்ட்டா!... 

(டிஸ்கி: இதைப் படிச்சிட்டு அடப்பாவி மனுஷா! ஏடிஎம்ல பணம் எடுக்குறதில இருந்து எல்லாத்துக்கும் ஒரு ஆளைத்தேடுற ஒரு ப்யூனாதிக்கவாதி என்னமா எழுதுறான்னு இந்த ப்ரியா பொண்ணு நக்கலடிக்கும். அது ப்ரோடோகாலில்லை. அன்பு. அம்புட்டுதான். )

74 comments:

ஆரூரன் விசுவநாதன் said...

புரோட்டாகால்......சூப்பருங்ணா....

ஆரூரன் விசுவநாதன் said...

அட இன்னிக்கு நாந்தான் மொதலா......

vasu balaji said...

ஆஹா வாங்கண்ணா! எம்புட்டு நாளாச்சி.

அகல்விளக்கு said...

புரோட்டாக்கால்... கலக்கல் அய்யா...

ராஜ நடராஜன் said...

மும்பாய்ல மனுசங்களப் போட்டுத்தள்ளிட்டு மக்கள் மறந்துட்டாங்கன்னு பாகிஸ்தான்கூட பேச்சு வார்த்தை வச்சுக்கிறதும் இந்த புரோட்டாவுல சேருமான்னு ப.உ.சிதம்பரனார்கிட்ட கேட்டுச் சொல்லுங்ண்ணா.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

இந்த பிரிட்டிஷ் காரன் நம்மை ஆண்டதிலிருந்து, அதிகாரத்திற்கு அடி பணியற இந்த கேவலத்திற்கு ப்ரொட்டோக்கால் என்று பாலிஷா ஒரு பெயர்!! நல்லா இருந்ததுங்ணா, நிசமாலுமே!!!

பின்னோக்கி said...

பியூனுங்க பாவங்க.... இதுல மாட்டிக்கிட்டு முழிக்கிறாங்க.

இன்னமும் இதெல்லாம் இருக்காங்க அரசாங்க ஆபீஸ்ல ?

Subankan said...

புரோட்டாக்கால் - As usual :)

sriram said...

பாலாண்ணா..
பதிவுலக ப்ரோட்டோகால் பத்தியும் சொல்லுங்களேன்..

அப்புறம் - அரசு அலுவலகங்களின் கடிதப் போக்குவரத்துக்களில் பேர் போடாம பதவி மட்டும் போடும் காரணம் பத்தி சொல்றேன்னு சொன்னீங்களே - எப்ப சொல்வீங்க?

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Chitra said...

இந்த ப்ரோட்டோகால்னு வேற எங்க இருக்கோ இல்லையோ, அரசியல்லையும் அதிகார வர்க்கத்திலையும் இதில்லாம முடியாது. புரோட்டாகாலுன்னாவது சொல்லத் தெரிஞ்சிருக்கணும்.

..... ...... ... அன்று ஒரு Buffet Party போனப்போ, இந்த ஊரு Mayor/Sheriff, எல்லோரும் மற்றவங்க கூட லைன் ல இருந்து தான் அவர்களும் சாப்பாடு எடுத்து சாப்பிட்டார்கள். அமெரிக்கா மாதிரி, அமெரிக்கா மாதிரி என்று வேண்டாதது எல்லாம் பிடிச்சுப்பாங்க ..... இந்த மாதிரி விஷயங்களுக்கு இன்னும் அந்த காலத்து British rules தான். சே...........

Ashok D said...

:)) ... இதெலருந்து நீங்க நல்ல ஆபிஸர்ன்னு தெரிகிறது...

ஸ்ரீராம். said...

கடவுளே... இந்த புரோட்டோக்கால் படுத்தும் பாடு...!

நசரேயன் said...

//பதிவுலக ப்ரோட்டோகால் பத்தியும்
சொல்லுங்களேன்..//

ஆமாண்ணே

க ரா said...

நல்லாதான் சொல்லிருக்கீங்க.நம்மளக்கு புரோட்டாதான் தெரியும். புரோட்டாகால்னா கோழிகால் மாதிரின்னு நினைச்சுகிட்டு இருக்கேன்.

இப்படிக்கு,

ஒன்னும் தெரியாத அப்பாவி.

Paleo God said...

//வெளிய வந்து அவன் திட்டுறதிட்டு எந்த ப்ரோட்டோகால்லையும் அடங்காது. //

ஹா ஹா ஹா நெனெச்சேன் சொல்லிட்டீங்க! :))

செ.சரவணக்குமார் said...

//இதுங்க உதவியாளருங்க பாடு இருக்கே பெரும்பாடு. இங்க இருக்கிற அதிகாரி சீனியரா இருப்பாரு. ஏதோ ஒரு காரணத்துல இவருக்கு அதிகாரி ஜுனியரா இருப்பாரு. இவரு உதவியாளரிடம் அவருக்கு கனக்‌ஷன் போடும்பாரு. உதவியாளர் ஃபோன் போட்டா அந்த அதிகாரியோட உதவியாளர், நீ உங்காள கூப்புடு எங்காளுதான் அதிகாரிம்பாரு. இங்க இருக்கிறவன், யோவ் எங்காளுதான் சீனியரும்பான். இதுல என்னாங்கறீங்களா? முதல்ல எடுக்கிறவரு மத்தவருக்காக காத்திருந்தா ப்ரோட்டோகால் என்னாவறது?//

இதான் புரோட்டாகாலுங்களாய்யா?

நல்லாச் சொன்னீங்க.

நாடோடி said...

ப்ரோட்டாகாலு... நான் ஏதோ ஆட்டு காலா இருக்குமுனு நெனைச்சேன்.... ஹி..ஹி..

Thamira said...

:-))

பா.ராஜாராம் said...

சகல சந்துகளிலும் புகுந்து வர்றீங்களே பாலாண்ணா! :-)

Anonymous said...

//அமெரிக்கா மாதிரி, அமெரிக்கா மாதிரி என்று வேண்டாதது எல்லாம் பிடிச்சுப்பாங்க ..... இந்த மாதிரி விஷயங்களுக்கு இன்னும் அந்த காலத்து British rules தான். சே...........//

நச் =))

கலகலப்ரியா said...

ஆகா... சூப்பரு.. அப்டியே... வாட்டர் பாட்டில் மேஜிக்கு... etc.. etc.. எல்லாம் எடுத்து விடலாமே..

என்னதான் டிஸ்கி போனாலும்.. நெசம் நெசம்தானுங்களே..

ஈரோடு கதிர் said...

ப்ரோட்டா + ஆட்டுக்”கால்” சூப்புதான் .... ப்ரோட்டாகாலோ

இந்த விமானம் விழுந்துடும் போதுகூட ப்ரோட்டோகால் பார்ப்பாய்ங்ளா

Bruno said...

//வெளியூர்ல இருந்து ஒரு அதிகாரியோ, மந்திரியோ வராருன்னா விமான நிலையத்துல போய் காத்திருந்து வரவேற்று, திரும்ப ஏத்தி விடுறது முறை. உள்ளூர் ஆளுங்களுக்கு என்ன? அதிகாரிக்கு 6 மணிக்கு விமானம்னா கீழதிகாரிங்க மூணுக்கும் நாலுக்கும் அலாரம் வச்சி, எங்க தூங்கிறுவமோன்னு ராவெல்லாம் விழிச்சி எழுந்து ஓடணும்.//

:) :)

அதிலும் வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு மாலை போட்டு கையில் இளநீரை கொடுக்கும் கொடுமை இருக்கே

அதனால் எவ்வளவு பிரச்சனை தெரியுமா. அவர்களில் யாருக்காவது வயிறு கலங்கி விட்டது என்றால் கழிப்பறையை தேட வேண்டும்

இந்த கலாச்சாரத்தை தசாவதாரம் படத்தில் நச்சென்று கிண்டலடித்திருப்பார்கள்

ஜோதிஜி said...

ப.உ.சிதம்பரனார்கிட்ட கேட்டுச் சொல்லுங்ண்ணா.

ரொம்ப நாளா மனசுக்குள் வைத்திருந்த கேள்வி இது? சரியான பெயரும் கூட?

காமராஜ் said...

//வெளிய வந்து அவன் திட்டுறதிட்டு எந்த ப்ரோட்டோகால்லையும் அடங்காது. ச்ச்சேரி. இதுக்கே உங்களுக்கெல்லாம் பொரட்டிகிட்டு வரும். இதுக்கு மேலையும் சொல்லுறது ப்ரோட்டோகாலில்லை. வர்ட்ட்டா!...//

நிஜம்மா( ) அதுதான் ப்ரோட்டாக்கால்.

பெசொவி said...

//அப்புறம் - அரசு அலுவலகங்களின் கடிதப் போக்குவரத்துக்களில் பேர் போடாம பதவி மட்டும் போடும் காரணம் பத்தி சொல்றேன்னு சொன்னீங்களே - எப்ப சொல்வீங்க?//

இதுக்கு நானே பதில் சொல்லிடுவேன். இருந்தாலும் புரோட்டோக்கால் என்று ஒன்று இருப்பதால், பாலா அண்ணன் பதில் கூறுவார். (இப்படி பேசுவதும் ஒருவகை புரோட்டோக்கால் தான்) :))))

க.பாலாசி said...

//வெளிய வந்து அவன் திட்டுறதிட்டு எந்த ப்ரோட்டோகால்லையும் அடங்காது.//

புண்படுற மனச ஆத்துறதுக்கு அப்பப்ப இதுதாங்க உதவுறது... என்னதான் திட்டினாலும் அடுத்தநாளு காலையில மறுபடியும் போயீ நிக்கணும்.. சிலபேருக்கு மட்டும் தலையெழுத்து இப்டி அமைஞ்சிடுது...

ப்ரோட்டோகாலாவது புண்ணாக்காவது...

மங்குனி அமைச்சர் said...

சார் , நான் வேணா உங்களுக்கு உங்க A.T.M ல பணம் எடுத்திட்டு வரட்டா ???? பேலன்ஸ் எவ்ளோ இருக்கு ??

VELU.G said...

நான் ஏதோ கம்ப்யூட்டரில் வருதே அதுதான் புரோட்டகால் நெனைச்சேன்

இப்படியெல்லாம் இருக்கா?

அது சரி(18185106603874041862) said...

//

நம்ம நண்பர் ஒருத்தர் இருக்காரு. ப்ரோட்டோகால்ல கரை தேர்ந்தவரு. அவர் கைமறதியா பெல்லடிச்சிடுவாரு. ப்யூன் வந்து என்னாங்கன்னு நிப்பாரு. எதாவது காரணமா கூப்பிட்டிருந்தாதானே? சாரி சொல்லிட முடியுமா? ஒரு துண்டு பேப்பரை கிழிச்சி சுருட்டி, குப்பைக் கூடை பக்கத்துல எரிஞ்சிட்டு, அதை எடுத்து கூடையில போடுன்னு சொல்லிட்டு வேலையப் பார்ப்பாரு.
//

என்னா அக்கிரமம்? ஏன் சார் இப்படி செய்றீங்க :)))

shortfilmindia.com said...

protocal என்பதே ஆங்கிலேயன் நம்மை அடிமையாய் வளர்க்க ஏற்படுத்திய ஒரு வழி என்பதே என் அபிப்ராயம்

cablesankar

Unknown said...

பாலா சார்!
முக்கியமான ப்ரோடோகோல் வார்த்தைக்கு வார்த்தை சார் சார்னு சொல்லன்னும்கிரத எதிபார்கிரத விட்டுடிங்க! சார் னு கூப்பிடறது common ஆயிட்டுது.

கலகலப்ரியா said...

||Sethu said...

பாலா சார்!
முக்கியமான ப்ரோடோகோல் வார்த்தைக்கு வார்த்தை சார் சார்னு சொல்லன்னும்கிரத எதிபார்கிரத விட்டுடிங்க! சார் னு கூப்பிடறது common ஆயிட்டுது.||

ஆ.. அப்போ இது பாலா சார் இல்ல... சார்ன்னு சொன்னதுக்காக ஒரு அஸி்ஸ்டண்டயே தூக்கி எறிஞ்ச பாலா சார்:)).. வாழ்க...

ஆனா.. மேடம் மேடம்ன்னு கூப்டனுமா சார்..

(ரொம்ப சார் போட்டுட்டேனா.....சார்..)

Unknown said...

ஐயையோ! நான் பாலா சார் எதிர் பார்பதாக சொல்ல வில்லை.

Unknown said...

ஐயையோ! நான் பாலா சார் எதிர் பார்பதாக சொல்ல வில்லை.

Unknown said...

IyaiYo! I am not saying Baal Sir is expectin 'Sir!'.

கலகலப்ரியா said...

||Sethu has left a new comment on the post "ப்ரோட்டோகால்":

ஐயையோ! நான் பாலா சார் எதிர் பார்பதாக சொல்ல வில்லை. ||

ஐய்யயோ... பயப்டாதீங்க... தமாஷு... அது தெரியும்.. நீங்க அவங்கள சொல்லலைன்னு..

மாத்தி மாத்தி புலம்பறீங்க... மெஸேஜ் மட்டும் வர காணோம்..

ரிஷபன் said...

எங்க ஆபிஸ்ல நீங்கதான் சொன்னீங்கன்னு சொல்றப்ப.. பக்கத்து சீட்காரர் சொன்னாரு.. கலெக்டர்கிட்ட இப்படி சொல்ல முடியாதாம்.. அவர் சொன்னத திருப்பி சொல்றப்ப ‘அய்யாதான் சொன்னார்..’னு சொல்லணுமாம்..

vasu balaji said...

@@நன்றி ராஜா
@@நன்றிங்க சுபாங்கன்
@@நன்றிங்க இராமசாமி கண்ணன்

vasu balaji said...

ராஜ நடராஜன் said...
மும்பாய்ல மனுசங்களப் போட்டுத்தள்ளிட்டு மக்கள் மறந்துட்டாங்கன்னு பாகிஸ்தான்கூட பேச்சு வார்த்தை வச்சுக்கிறதும் இந்த புரோட்டாவுல சேருமான்னு ப.உ.சிதம்பரனார்கிட்ட கேட்டுச் சொல்லுங்ண்ணா.//

:)). கேட்டுட்டாலும்

vasu balaji said...

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...
இந்த பிரிட்டிஷ் காரன் நம்மை ஆண்டதிலிருந்து, அதிகாரத்திற்கு அடி பணியற இந்த கேவலத்திற்கு ப்ரொட்டோக்கால் என்று பாலிஷா ஒரு பெயர்!! நல்லா இருந்ததுங்ணா, நிசமாலுமே!!!//

நன்றிங்க

vasu balaji said...

பின்னோக்கி said...
பியூனுங்க பாவங்க.... இதுல மாட்டிக்கிட்டு முழிக்கிறாங்க.

இன்னமும் இதெல்லாம் இருக்காங்க அரசாங்க ஆபீஸ்ல ?//

இல்லாம:))

vasu balaji said...

sriram said...
பாலாண்ணா..
பதிவுலக ப்ரோட்டோகால் பத்தியும் சொல்லுங்களேன்..

அப்புறம் - அரசு அலுவலகங்களின் கடிதப் போக்குவரத்துக்களில் பேர் போடாம பதவி மட்டும் போடும் காரணம் பத்தி சொல்றேன்னு சொன்னீங்களே - எப்ப சொல்வீங்க?

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்//

சொல்றேனே:)

vasu balaji said...

Chitra said...
இந்த ப்ரோட்டோகால்னு வேற எங்க இருக்கோ இல்லையோ, அரசியல்லையும் அதிகார வர்க்கத்திலையும் இதில்லாம முடியாது. புரோட்டாகாலுன்னாவது சொல்லத் தெரிஞ்சிருக்கணும்.

..... ...... ... அன்று ஒரு Buffet Party போனப்போ, இந்த ஊரு Mayor/Sheriff, எல்லோரும் மற்றவங்க கூட லைன் ல இருந்து தான் அவர்களும் சாப்பாடு எடுத்து சாப்பிட்டார்கள். அமெரிக்கா மாதிரி, அமெரிக்கா மாதிரி என்று வேண்டாதது எல்லாம் பிடிச்சுப்பாங்க ..... இந்த மாதிரி விஷயங்களுக்கு இன்னும் அந்த காலத்து British rules தான். சே...........//

அந்த கூத்து வேற:))

vasu balaji said...

D.R.Ashok said...
:)) ... இதெலருந்து நீங்க நல்ல ஆபிஸர்ன்னு தெரிகிறது...//

ஆஹா. நன்றி நன்றி:)

vasu balaji said...

ஸ்ரீராம். said...
கடவுளே... இந்த புரோட்டோக்கால் படுத்தும் பாடு...!//

கடவுளுக்குமே ப்ரோடோகால் இருக்கு:)). முக்கியமா எல்லா டிபார்ட்மெண்டுலயும் திருப்பதில ஒரு ப்ரோட்டோகால் ஆஃபீசர் இருப்பாரு

ஈரோடு கதிர் said...

300+ க்கு வாழ்த்துகள்

முனியாண்டி பெ. said...

:)

http://adisuvadu.blogspot.com/2010/06/blog-post_27.html

நிஜாம் கான் said...

அண்ணே! பொரொட்டா கால் நல்லாத்தான் இருக்கு.

vasu balaji said...

நசரேயன் said...
//பதிவுலக ப்ரோட்டோகால் பத்தியும்
சொல்லுங்களேன்..//

ஆமாண்ணே//

மூத்தவரு நீங்கதான் சொல்லணும்.:))

vasu balaji said...

இராமசாமி கண்ணண் said...
நல்லாதான் சொல்லிருக்கீங்க.நம்மளக்கு புரோட்டாதான் தெரியும். புரோட்டாகால்னா கோழிகால் மாதிரின்னு நினைச்சுகிட்டு இருக்கேன்.

இப்படிக்கு,

ஒன்னும் தெரியாத அப்பாவி.//

ஆஹா நம்பீட்டம்ல:))

vasu balaji said...

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
//வெளிய வந்து அவன் திட்டுறதிட்டு எந்த ப்ரோட்டோகால்லையும் அடங்காது. //

ஹா ஹா ஹா நெனெச்சேன் சொல்லிட்டீங்க! :))//

=))இல்லையா பின்னே

vasu balaji said...

செ.சரவணக்குமார் said...
//இதுங்க உதவியாளருங்க பாடு இருக்கே பெரும்பாடு. இங்க இருக்கிற அதிகாரி சீனியரா இருப்பாரு. ஏதோ ஒரு காரணத்துல இவருக்கு அதிகாரி ஜுனியரா இருப்பாரு. இவரு உதவியாளரிடம் அவருக்கு கனக்‌ஷன் போடும்பாரு. உதவியாளர் ஃபோன் போட்டா அந்த அதிகாரியோட உதவியாளர், நீ உங்காள கூப்புடு எங்காளுதான் அதிகாரிம்பாரு. இங்க இருக்கிறவன், யோவ் எங்காளுதான் சீனியரும்பான். இதுல என்னாங்கறீங்களா? முதல்ல எடுக்கிறவரு மத்தவருக்காக காத்திருந்தா ப்ரோட்டோகால் என்னாவறது?//

இதான் புரோட்டாகாலுங்களாய்யா?

நல்லாச் சொன்னீங்க.//

நன்றிங்க சரவணக்குமார்.

vasu balaji said...

நாடோடி said...

//ப்ரோட்டாகாலு... நான் ஏதோ ஆட்டு காலா இருக்குமுனு நெனைச்சேன்.... ஹி..ஹி..//

ஹி ஹி. நன்றிங்க நாடோடி

vasu balaji said...

@@நன்றி ஆதி
@@நன்றிங்க பா.ரா.
@@நன்றி அனாமிகா துவாரகன்.

vasu balaji said...

கலகலப்ரியா said...

//ஆகா... சூப்பரு.. அப்டியே... வாட்டர் பாட்டில் மேஜிக்கு... etc.. etc.. எல்லாம் எடுத்து விடலாமே.. //

ஷ்ஷ்ஷ்ஷ். நல்ல காலம் யாரும் படிக்கல. இப்படியா போட்டுக் குடுக்கறது.

//என்னதான் டிஸ்கி போனாலும்.. நெசம் நெசம்தானுங்களே..//

எது! பாசம்னு சொன்னதுதானே. நெசந்தேன்:))

vasu balaji said...

ஈரோடு கதிர் said...

//ப்ரோட்டா + ஆட்டுக்”கால்” சூப்புதான் .... ப்ரோட்டாகாலோ

இந்த விமானம் விழுந்துடும் போதுகூட ப்ரோட்டோகால் பார்ப்பாய்ங்ளா//

அட அவன் படிக்ஸே பத்தி எரிஞ்சா கூட ப்ரோட்டோகால் முக்கியம் அமைச்சரே:))

vasu balaji said...

புருனோ Bruno said...
//வெளியூர்ல இருந்து ஒரு அதிகாரியோ, மந்திரியோ வராருன்னா விமான நிலையத்துல போய் காத்திருந்து வரவேற்று, திரும்ப ஏத்தி விடுறது முறை. உள்ளூர் ஆளுங்களுக்கு என்ன? அதிகாரிக்கு 6 மணிக்கு விமானம்னா கீழதிகாரிங்க மூணுக்கும் நாலுக்கும் அலாரம் வச்சி, எங்க தூங்கிறுவமோன்னு ராவெல்லாம் விழிச்சி எழுந்து ஓடணும்.//

:) :)

அதிலும் வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு மாலை போட்டு கையில் இளநீரை கொடுக்கும் கொடுமை இருக்கே

அதனால் எவ்வளவு பிரச்சனை தெரியுமா. அவர்களில் யாருக்காவது வயிறு கலங்கி விட்டது என்றால் கழிப்பறையை தேட வேண்டும்//

அப்படி வேணாம்னு சொன்னப்புறம் மீந்து போனதை லவட்டறது இன்னோரு ப்ரோடோகால்:))

vasu balaji said...

@@நன்றி டி.வி.ஆர்.சார்
@@நன்றிங்க தேவிஜி

vasu balaji said...

காமராஜ் said...
//வெளிய வந்து அவன் திட்டுறதிட்டு எந்த ப்ரோட்டோகால்லையும் அடங்காது. ச்ச்சேரி. இதுக்கே உங்களுக்கெல்லாம் பொரட்டிகிட்டு வரும். இதுக்கு மேலையும் சொல்லுறது ப்ரோட்டோகாலில்லை. வர்ட்ட்டா!...//

நிஜம்மா( ) அதுதான் ப்ரோட்டாக்கால்.//

ஆமாங்க:))

vasu balaji said...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...
//அப்புறம் - அரசு அலுவலகங்களின் கடிதப் போக்குவரத்துக்களில் பேர் போடாம பதவி மட்டும் போடும் காரணம் பத்தி சொல்றேன்னு சொன்னீங்களே - எப்ப சொல்வீங்க?//

இதுக்கு நானே பதில் சொல்லிடுவேன். இருந்தாலும் புரோட்டோக்கால் என்று ஒன்று இருப்பதால், பாலா அண்ணன் பதில் கூறுவார். (இப்படி பேசுவதும் ஒருவகை புரோட்டோக்கால் தான்) :))))//

அஹா! இது எஸ்கேப்பு:))

vasu balaji said...

க.பாலாசி said...
//வெளிய வந்து அவன் திட்டுறதிட்டு எந்த ப்ரோட்டோகால்லையும் அடங்காது.//

புண்படுற மனச ஆத்துறதுக்கு அப்பப்ப இதுதாங்க உதவுறது... என்னதான் திட்டினாலும் அடுத்தநாளு காலையில மறுபடியும் போயீ நிக்கணும்.. சிலபேருக்கு மட்டும் தலையெழுத்து இப்டி அமைஞ்சிடுது...

ப்ரோட்டோகாலாவது புண்ணாக்காவது...//

அப்புடி சொன்னா எப்புடி? இது பெரிய மந்திரம் சாரே:))

vasu balaji said...

மங்குனி அமைச்சர் said...

//சார் , நான் வேணா உங்களுக்கு உங்க A.T.M ல பணம் எடுத்திட்டு வரட்டா ???? பேலன்ஸ் எவ்ளோ இருக்கு ??//

நிஜம்மா எனக்கு தெரியாது. என்னைக்காச்சும் அவசரதுக்கு ஏ.டி.எம் போனா பின் நம்பர், நம்ம உதவியாளருக்கு ஃபோன் பண்ணாதான் தெரியும்.

vasu balaji said...

VELU.G said...
நான் ஏதோ கம்ப்யூட்டரில் வருதே அதுதான் புரோட்டகால் நெனைச்சேன்

இப்படியெல்லாம் இருக்கா?//

இல்லாமயா இவ்வளவு அளக்குறேன்.

vasu balaji said...

அது சரி said...
//

நம்ம நண்பர் ஒருத்தர் இருக்காரு. ப்ரோட்டோகால்ல கரை தேர்ந்தவரு. அவர் கைமறதியா பெல்லடிச்சிடுவாரு. ப்யூன் வந்து என்னாங்கன்னு நிப்பாரு. எதாவது காரணமா கூப்பிட்டிருந்தாதானே? சாரி சொல்லிட முடியுமா? ஒரு துண்டு பேப்பரை கிழிச்சி சுருட்டி, குப்பைக் கூடை பக்கத்துல எரிஞ்சிட்டு, அதை எடுத்து கூடையில போடுன்னு சொல்லிட்டு வேலையப் பார்ப்பாரு.
//

என்னா அக்கிரமம்? ஏன் சார் இப்படி செய்றீங்க :)))//

இன்னாது நானா? அதுக்கு நான் அடுத்த க்ரேடுக்கு போணும். இப்போ பண்ணா, குப்பைதொட்டிய தலையில கவுத்துடுவாய்ங்க=))

vasu balaji said...

shortfilmindia.com said...
protocal என்பதே ஆங்கிலேயன் நம்மை அடிமையாய் வளர்க்க ஏற்படுத்திய ஒரு வழி என்பதே என் அபிப்ராயம்

cablesankar//

அவந்தான் போய்ட்டானே. அவன விட மோசமால்ல நம்மாளுங்க ஆடுறாய்ங்க

vasu balaji said...

Sethu said...
பாலா சார்!
முக்கியமான ப்ரோடோகோல் வார்த்தைக்கு வார்த்தை சார் சார்னு சொல்லன்னும்கிரத எதிபார்கிரத விட்டுடிங்க! சார் னு கூப்பிடறது common ஆயிட்டுது.//

சரியாத்தான் சொன்னீங்க.

vasu balaji said...

கலகலப்ரியா said...
||Sethu said...

பாலா சார்!
முக்கியமான ப்ரோடோகோல் வார்த்தைக்கு வார்த்தை சார் சார்னு சொல்லன்னும்கிரத எதிபார்கிரத விட்டுடிங்க! சார் னு கூப்பிடறது common ஆயிட்டுது.||

ஆ.. அப்போ இது பாலா சார் இல்ல... சார்ன்னு சொன்னதுக்காக ஒரு அஸி்ஸ்டண்டயே தூக்கி எறிஞ்ச பாலா சார்:)).. வாழ்க...

ஆனா.. மேடம் மேடம்ன்னு கூப்டனுமா சார்..

(ரொம்ப சார் போட்டுட்டேனா.....சார்..)//

ஆஹா! ஒரு முடிவோடதான் இருக்கிறா:))

vasu balaji said...

Sethu said...

ஐயையோ! நான் பாலா சார் எதிர் பார்பதாக சொல்ல வில்லை.//

யம்மாடி! என்னா இப்படி மெரச்சலாக்கிட்ட=)). விடுங்க சேது. தமாஷுக்கு சொன்னாங்க=))

vasu balaji said...

கலகலப்ரியா said...
||Sethu has left a new comment on the post "ப்ரோட்டோகால்":

ஐயையோ! நான் பாலா சார் எதிர் பார்பதாக சொல்ல வில்லை. ||

ஐய்யயோ... பயப்டாதீங்க... தமாஷு... அது தெரியும்.. நீங்க அவங்கள சொல்லலைன்னு..

மாத்தி மாத்தி புலம்பறீங்க... மெஸேஜ் மட்டும் வர காணோம்..//

வாலு வாலு=))முடியல.

vasu balaji said...

ரிஷபன் said...
எங்க ஆபிஸ்ல நீங்கதான் சொன்னீங்கன்னு சொல்றப்ப.. பக்கத்து சீட்காரர் சொன்னாரு.. கலெக்டர்கிட்ட இப்படி சொல்ல முடியாதாம்.. அவர் சொன்னத திருப்பி சொல்றப்ப ‘அய்யாதான் சொன்னார்..’னு சொல்லணுமாம்..//

ஆமாங்க. சார் ஒன்லி இன்ஸ்ட்ரக்டட் தி அதர் டே சார்னு சொல்லணும்.

vasu balaji said...

ஈரோடு கதிர் said...
300+ க்கு வாழ்த்துகள்

நன்றிங்ணா!

vasu balaji said...

முனியாண்டி said...
:)

http://adisuvadu.blogspot.com/2010/06/blog-post_27.html

:)

vasu balaji said...

இப்படிக்கு நிஜாம் ..., said...

அண்ணே! பொரொட்டா கால் நல்லாத்தான் இருக்கு.
//

நன்றிங்க நிஜாம். வேலை அதிகமோ:)