Wednesday, June 2, 2010

வீர சுதந்திரம் வேண்டி..

நட்புகளே!

முதலிலேயே கை கூப்பிச் சொல்லிக் கொள்கிறேன். உங்கள் அனுதாபம் தேடியல்ல இந்த இடுகை. ஆணாதிக்கத்தை நொறுக்குகிறேன் என்ற பெயரில் ஒரு பெண்ணை தன்னைத்தானே தற்காத்துக் கொள்ள விட்டு சுத்தி நின்று அடித்த இந்த ஆதிக்கத்துக்கு பெயரென்னவென்றாவது கூறுங்கள் நண்பர்களே.

எத்தனை பெண் பதிவர்கள் இருக்கிறார்கள். எல்லாருமா நர்சிம்மை கண்டித்தார்கள். அல்லது அவர்கள் எவருமே ஏதோ ஒரு பொது விசயத்தைக் குறித்து இடுகை இடவில்லையா?

தோழி கலகலப்ரியாவை தனிமைப்படுத்தி அவரின் தன்னிலை விளக்கத்துக்கு பின்னூட்டமாக கேவலப் படுத்தியபோது நாம் யார் எதிர்த்தோம்? யார் பேசினார்கள்? யார் கண்டித்தார்கள். 

சந்தனமுல்லையின் மன உளைச்சலைப் பற்றி, அவருக்கு நேர்ந்த அவமானத்தைப் பற்றி உணராதவன் மனிதனில்லை. இதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமும் இல்லை. ஆனால், அது பின்விளைவை எதிர் பார்க்காமல் ஏதோ ஒரு விதத்தில் அவரே தேடிக் கொண்டது என்பதும் மறுக்கவியலாதது. 

கலகலப்ரியா செய்தது என்ன? என்ன தெரியும் அவரைப் பற்றி உங்களுக்கு? இங்கு சுமஜ்லாவுக்கு எதிராக எழுதிவிட்டார் என இரண்டு பக்கமும் சொம்படித்த ஈனப்பிறவிகளும், புரிதலின்றி தாக்கிய பெரிய மனிதர்களுக்கும் தெரியுமா, அந்த நேரம் அவர்கள் இருக்கும் ஊரில் மசூதிக்கு பாங்கு கூவும் ஸ்தூபிகள் வைக்க விதிக்கப்பட்ட தடைக்கெதிராக அவர்கள் மத சுதந்திரத்தை ஆதரித்து வாக்களித்தவள். 

நணபர்கள் மாதவராஜ், செந்தழல் ரவி, காமராஜ், இன்னும் எத்தனையோ பேர் தோழி சந்தனமுல்லை குறித்த அவதூறுக்கு கண்டனம் தெரிவித்தது தவறென யாரேனும் கூறமுடியுமா? நர்சிம் எழுதிய அசிங்கத்தை கண்டிப்பதுதானே சரியெனப்பட்டது. அதைத்தானே கலகலப்ரியா செய்தார். பர்தா அணிந்தவர்கள் மட்டுமே நற்குடி என்ற வார்த்தையை எதிர்த்து தன் ஊரில் பர்தா அணியாத ஒரு தோழியும் தாழ்ந்தவளல்ல என்பது தானே அவரது கவிதை?

அதற்காக இப்போது ஏன் கண்டிக்கவில்லை எனக் கேட்பது தவறில்லை எனில், நான் கேட்கிறேன் ஏன் கலகலப்ரியா ஒரு பெண்ணில்லையா? ஆணாதிக்கத்துக்கு பாதிக்கப் படவில்லையா? எங்கே சொல்லுங்கள்? 

நேற்றைய இடுகையில் எத்தனை வார்த்தைகள் இருந்ததோ அவையெல்லாம் உங்களுக்கு திமிராகத் தோன்றலாம். அதன் பின்னான வலி எனக்குத் தெரியும். சந்தனமுல்லையின் வலியும் வாதையும் உங்களுக்கெல்லாம் எப்படித் தெரியுமோ அப்படி எனக்குத் தெரியும்.

ரவி சார். காயப்பட்டு நிற்கிறேன். உங்களால். பகுத்தறிவுடன், பட்ச பாதம் இல்லாமல் உங்கள் எழுத்தைக் காதலித்ததால் உங்களை மதித்ததால் காயப்பட்டு நிற்கிறேன். சந்தனமுல்லையின் வலியுணர்ந்த உங்களுக்கு கலகலப்ரியாவின் வலி ஏன் தெரியவில்லை. என்ன கேட்டீர்கள்? கள்ள மவுனமா? மாதவராஜைப் படியுங்கள். காமராஜைப் படியுங்கள்.  என்ன சொன்னீர்கள்? வானம்பாடி பாட ஆரம்பித்து விட்டதா. அகோரத்தின் மடியில் நிற்கிறதா? என்ன அர்த்தம் என் எழுத்துலக ஆதர்ஸமே? 

நர்சிம் என்னை அறிமுகப்படுத்திய விஷயம் ஏன் வந்ததோ தெரியவில்லை. நர்சிம்மின் பார்வையில் நான் படும்போது 150க்கும் மேல் என் இடுகைகள் அது மொக்கையோ குப்பையோ வெளியாகி இருந்தன. அவரின் அறிமுகத்திலும் நான் எப்படி தவறவிட்டேன் என்றே குறிப்பிட்டிருந்தார். ஒரு பெண்ணுக்கு நீதி கேட்ட உங்களுக்கு மறு பெண்ணுக்கு நீதி கேட்க தோன்ற வேண்டாம். சீண்டும் எண்ணம் எப்படி வந்தது. இது ஆணாதிக்கம் இல்லையா?

உணமைத்தமிழன் இடுகையில் நீங்கள் பின்னூட்டமிடும்போது கொச்சையாய், பெண்பெயரில் ஒரு பின்னூட்டம் வந்ததே? கண்டித்தீர்களா? சொல்லலாம். அங்கு கலகலப்ரியா ஒரு பெண்போல் பேசவில்லை என்று? எங்கே சொல்லுங்கள் பார்ப்போம். அதென்ன சார் பெண் போல் பேசுவது? பெண் என்று நினைத்திருந்தீர்களானால் வினவில் அவரின் பெயரை, மிஸஸ் டவுட்டின் பெயரை நீக்கச் சொல்லியிருக்கலாமே? யார் செய்தீர்கள்?

நெஞ்சு நிமிர்த்திச் சொல்கிறேன். என் தோழிக்கு எவர் ஆதரவும் தேவையில்லை. எந்த ஆறுதலும் தேவையில்லை. ஒரு தோழனாக உங்கள் முன் கேட்கிறேன். நீங்கள் கண்டிக்க வேண்டாம். தண்டிக்க வேண்டாம். நாங்கள் உன் பக்கம் தோழி என நிற்க வேண்டாம். அதற்கான தகுதியும், மன வளர்ச்சியும் நமக்கில்லை. 

தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே. ஒரு நண்பனாக என் கடமை இது. அறச்சீற்றம், அநியாயத்தை எதிர்த்து இடுகை, Pleading, roughing up இன்னும் என்னல்லாம் உண்டோ அத்தனைக்கும் இடுகை இதையெல்லாம் செய்து கொண்டு அருமையாகச் சொன்னீர்களிலும், நச், போன்ற பின்னூட்டங்களிலும் புளகாங்கிதம் நாம் அடையும் நேரத்தில் என் தோழியெனும் தேவதையால் ஒரு தமிழின மன நோயாளிக்கு சரியான சிகிச்சை, ஒரு நோயாளிக்கு தன் நிலை குறித்த தெளிவு, ஒரு பெற்றோருக்கு தன் குழந்தையின் பிரச்சினை, ஒரு குழந்தைக்கு ஒரு நல்ல பெற்றோர், ஒரு புலம் பெயர்ந்தவருக்கு வாழ்வு, இன்னும் என்னவெல்லாம் முடியுமோ அத்தனையும் நெறிப்படுத்திக் கொடுக்கும் வரம் அவளுக்கு கடவுள் கொடுத்தது. 

அதையும் மீறி எழுத வந்ததற்கு வலியும் அவமானமும் நாம் கொடுத்தது. வளர்க ஆணாதிக்க ஒழிப்பு. 

எனக்கு எது சரியெனப் படுகிறதோ அதைச் செய்யவும், எது சரியில்லை எனத் தோன்றுகிறதோ அதை எதிர்க்க மட்டுமல்ல நிராகரிக்கவும் உரிமை உண்டு. அதை எவரும் மறுக்க முடியாது. அதைத்தான் நான் செய்தேன். என்னைப் போல் பலரும் அப்படித்தான் இருந்தனர். அதனால் அப்படி இருப்பவர்கள் குற்றவாளிகளானால் இருந்துவிட்டுப் போகிறோம். 

மீண்டும் சொல்கிறேன். என் வார்த்தைகள் யாரையாவது காயப் படுத்தியிருப்பின் இதோ என்னை மன்னித்துவிடுங்கள்.

தயவு செய்து என் இந்த இடுகைக்காக எதுவும் செய்ய வேண்டாம். நான் கேட்பதெல்லாம் ஒன்றுதான். மன்னிப்பல்ல. கண்டனமல்ல. ஆதரவல்ல. அங்கீகாரமல்ல. அனுதாபம் சத்தியமாய் அல்ல. 

தயவு செய்து அவரை சுதந்திரமாய் விடுங்கள். அவராய் இருக்க விடுங்கள். அவரில்லாமலும் பதிவுலகத்தில் நியாயம் தேவையெனில் கிடைக்கும். அனியாயம் வெருட்டப்படும். ப்ளீஸ்.  
~~~~~~~

(மன்னியுங்கள் தோழர்களே! மட்டறுத்தல் செய்திருக்கிறேன். குறைந்தபட்சம் வேறு யாரும் காயமுறாமல் இருக்க என்னால் செய்யக்கூடியது அவ்வளவே)

48 comments:

பிரபாகர் said...

அய்யாவின் ஒவ்வொரு வார்த்தையையும் மனப்பூர்வமாய் ஏற்று எனது கருத்தும் இதுவேதான் என்பதை தெளிவுப்படுத்துகிறேன். வலையுலகம், நட்பினை ஏற்படுத்திக்கொண்டு நமது எண்ணங்களை பகிர்ந்து கொள்வதற்குத்தானேயன்றி, நம்மைச் சுற்றி சிக்கல்கல் எனும் வலையினை பின்னிக்கொள்வதற்கு அல்ல...

பிரபாகர்...

Bruno said...

//என் தோழியெனும் தேவதையால் ஒரு தமிழின மன நோயாளிக்கு சரியான சிகிச்சை, ஒரு நோயாளிக்கு தன் நிலை குறித்த தெளிவு, ஒரு பெற்றோருக்கு தன் குழந்தையின் பிரச்சினை, ஒரு குழந்தைக்கு ஒரு நல்ல பெற்றோர், ஒரு புலம் பெயர்ந்தவருக்கு வாழ்வு, இன்னும் என்னவெல்லாம் முடியுமோ அத்தனையும் நெறிப்படுத்திக் கொடுக்கும் வரம் அவளுக்கு கடவுள் கொடுத்தது.//

:) :)

Radhakrishnan said...

இனிமேலும் எவரும் காயப்படுத்தாமல் இருந்தாலே போதும், அதுவே உங்கள் எண்ணத்திற்கான வெற்றி ஐயா

மசக்கவுண்டன் said...

பதிவுலகில் அறச்சீற்றத்தின் பயன் என்ன?

அது சரி(18185106603874041862) said...

என் தலைக்குள் பல்வேறு மின்சாரங்கள் பாய்கின்றன...ப்ரியாவின் இடுகையில் பின்னூட்டங்களை நான் இன்னும் முழுதாக படிக்கவில்லை...படித்தவரை பதிவுலகில் சாக்கடை எவ்வளவு நீளம் ஆழமாக ஓடுகிறது என்று தெரிகிறது!

க ரா said...

அவசியம் தேவை படுகின்ற இடுக்கை சார். உங்களின் ஒவ்வொரு வார்த்தைக்ளோடும் உடன்படுகிறேன். கடந்த சில நாட்களாக வலைஉலகில் நடந்து வருகின்ற விரும்பதகாத நிகழ்வுகள விரைவில் முற்று பெரும் என்று நம்புகிறேன்.

சத்ரியன் said...

பாலா அண்ணாவிற்கு,

இரு நாட்களாய் வலைப்பக்கம் வராமல் இருந்து, நேற்று வந்தேன்.

எனக்குள்ளான கேள்வி.நாம்(தமிழர்கள்) சண்டையிட்டுக்கொள்ளும் நேரமா இது?

பெண்கள் எல்லாருமே மதிப்பிற்குரியவர்கள்.ஒரு பெண் காயப்பட்டார் என்பதற்கு, இன்னொரு பெண்ணை இழிவாகப் பேசுபவர்கள் எப்படி ஆணாதிக்கத்தை எதிர்க்கிறார்கள் என புலப்படவில்லை.

ஆணாதிக்கம் பற்றிய மேடையில் ஜாதிக்கென்ன தேவை வந்ததோ தெரியவில்லை.

திருந்துமா இந்த தமிழினம்?

எல் கே said...

உங்கள் வார்த்தைகளில் நியாயம் உள்ளது :)

நாளும் நலமே விளையட்டும் said...

//அது பின்விளைவை எதிர் பார்க்காமல் ஏதோ ஒரு விதத்தில் அவரே தேடிக் கொண்டது என்பதும் மறுக்கவியலாதது//

அந்த பெண் உங்கள் மகளாக இருந்திருந்தாலும் இது தான் நீங்கள் சொல்லும் சொல்லா?
ஒரு எதிர் பதிவுக்கு பின்னூட்டம் இட்ட ஒரே காரணத்துக்காக ஒரு ....... , இப்படி ஒரு கீழ் புனைவை எழுதுகிறான்.
நாளை உங்கள் மகளுக்கும் எங்கோ ஒருவன் எவனோ ஒருவன் தீங்கு இளிப்பான்! அப்போது தெரியும்!

Sabarinathan Arthanari said...

மத சாதி அரசியல் செய்பவர்களின் புத்தி எப்படி இருக்கும் ?

தாக்குபவர்களுக்கு பதிவர் என்ற உணர்வில்லை. மனிதர் என்பதும் நினைவில்லை. மதவெறி / சாதிவெறி பிடித்தவர்கள் அவர்கள்.

தாக்குபவரின் மதம் அது தான் அவர்களது நோக்கம். இரண்டாவது பார்ப்பான், அடிவருடி, சொம்புதூக்கி போன்ற பட்டங்கள் மூலம் தாக்குபவரின் சாதியை தெரிந்து கொண்டு அவர்களை பயமுறுத்துவது. நேற்று கலகலபிரியாவிற்கு நடந்ததும் அதுவே.

dheva said...

We are with you sir....!

settaikkaran said...

புதிதாக வலைப்பதிவு உலகில் அடியெடுத்து வைத்திருப்பவர்களை இந்த விரும்பத்தகாத நிகழ்ச்சிகள் அச்சுறுத்தியிருக்கின்றன என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இங்கே ஆண்-பெண் வேறுபாடின்றி, மத-ஜாதி வித்தியாசமின்றி செங்குத்தாக ஏற்பட்டிருக்கிற பிரிவு திகைக்க வைக்கிறது. இதில் சம்பந்தப்பட்ட அனுபவசாலியான பதிவர்கள் உணர்ச்சிப்பெருக்கில் கண்ணியம் காக்கத் தவறியிருப்பது மிக மிக மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது போன்ற எதிர்மறையான விளைவுகள் ஏற்பட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இந்த சர்ச்சையை ஆரம்பித்தவர்களுக்கு வெற்றியை தங்கத்தாம்பாளத்தில் கொண்டு போய் கொடுத்தாகி விட்டது. என்னைப் போன்ற அனுபவமற்ற பதிவர்களுக்கு யாரையும் குற்றம் சொல்லும் அருகதையோ, மன்னிக்கிற தகுதியோ இல்லாமல் இருக்கலாம். ஆனால், பிரபலமான பதிவர்கள் அடுத்தடுத்து புதிது புதிதாக சர்ச்சைகளை உருவாக்கிக்கொண்டிருப்பது ஆரோக்கியமான நிலையல்ல! மிகவும் வலிக்கிறது ஐயா! வெட்கமாக இருக்கிறது!

vasu balaji said...

நாளும் நலமே விளையட்டும் said...

//அந்த பெண் உங்கள் மகளாக இருந்திருந்தாலும் இது தான் நீங்கள் சொல்லும் சொல்லா?//

நிச்சயமாக நண்பரே. என் மகளானாலும் இப்படித்தான் சொல்வேன்.

//ஒரு எதிர் பதிவுக்கு பின்னூட்டம் இட்ட ஒரே காரணத்துக்காக ஒரு ....... , இப்படி ஒரு கீழ் புனைவை எழுதுகிறான்.//

உங்கள் புரிதலுக்கு நன்றி. ஆனால் எனக்கு இதில் எனக்கு சம்பந்தமில்லை. நடந்தவை குறித்து நான் அறிந்தது அதிகம் என்பதைத் தவிர


//உங்கள் மகளுக்கும் எங்கோ ஒருவன் எவனோ ஒருவன் தீங்கு இளிப்பான்! அப்போது தெரியும்!//

உங்கள் விருப்பத்துக்கு நன்றி. அப்போது எனக்கு வருத்தமிருக்கும். என் மகள் மீது. விளைவறியாமல், யார் சொல்லும் கேளாமல் தேடிக் கொண்டதற்காக.

இந்த பின்னூட்டம் என்னைக் காயப்படுத்த என்றால் சாரி நண்பரே. இது ரொம்ப பழைய டெக்னிக். :)

ஈரோடு கதிர் said...

சாதி ஊறுகாயைத் தொட்டுக்கொள்ளவே பிரியா பெயரை இழுத்ததையும்...

இழுத்ததிற்கு மேல் அதன் காரத்தை அதிகமாகவே அவர்கள் உணர்ந்ததையும் நினைக்கும் போது...

ரௌத்திரமாகப் போராடிய பிரியாவுக்கு மிகப் பெரிய வணக்கங்கள்

தமிழ் அமுதன் said...

தனித்து நின்று போராடி எதிராளிகளை
துவம்சம் செய்து ஒரு வீராங்கனையாகவே தோன்றினார் கலகல பிரியா..!

தனக்கு எதிராக கொச்சையான வார்த்தைகள் விழுந்த போதும் பதிலுக்கு தானும் கொச்சையான வார்தைகளை பயன்படுதாமல் எதிராளியை தூளாக்கினர்...!

இதனை ’’அனைவருமே’’ கற்று கொள்ள வேண்டும்..!

இராகவன் நைஜிரியா said...

// எனக்கு எது சரியெனப் படுகிறதோ அதைச் செய்யவும், எது சரியில்லை எனத் தோன்றுகிறதோ அதை எதிர்க்க மட்டுமல்ல நிராகரிக்கவும் உரிமை உண்டு. அதை எவரும் மறுக்க முடியாது. அதைத்தான் நான் செய்தேன். என்னைப் போல் பலரும் அப்படித்தான் இருந்தனர். அதனால் அப்படி இருப்பவர்கள் குற்றவாளிகளானால் இருந்துவிட்டுப் போகிறோம் //

உங்களுடன் 100% ஓத்துப் போகின்றேன்.

Santhappanசாந்தப்பன் said...

சரியான, தெளிவான பதிவு!!

த‌ங்க‌ள் க‌ருத்துக்க‌ளோடு, எல்லா வித‌த்திலும் உட‌ன்ப‌டுகிறேன்!

உங்க‌ளுக்கும், தீரமாக போராடிய‌ தோழிக்கும் வ‌ண‌க்க‌ங்க‌ள்!!

வால்பையன் said...

பிரியா இழுகப்பட்டது தேவையற்றது தான்!

பிரியா உண்மைதமிழன் பதிவில் ஒருவரை, ”நீங்க வந்ததே தீட்டு” என்று எழுதியதே அவருக்கு இந்துத்துவா முத்திரை குத்த காரணம் என்று நினைக்கிறேன்!

பிரியா வினவு பதிவோடு விளக்கம் கொடுத்து விலகி இருந்தால் இவ்வளவு பிரச்சனை இருந்திருக்காது!

vasu balaji said...

வால்பையன் ..

//”நீங்க வந்ததே தீட்டு” என்று எழுதியதே அவருக்கு இந்துத்துவா முத்திரை குத்த காரணம் என்று நினைக்கிறேன்!//
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ப்ரியா சொன்னது இதுதானே வால்.

||நீ மொக்கைய வாசிச்சா மட்டும் உன்னோட அறிவு வளந்துடுமா.. போ ராசா போ.. வந்ததே தீட்டு.. போய் நீ புரண்டுக்கிட்டிருக்கிற சேற்றில கையக் காலக் கழுவிட்டு||

உங்களுக்குமா இதில் குழப்பம்? அர டிக்கட் வந்தது தீட்டு என்ற அர்த்ததில் சொல்லி இருந்தால் தீட்டுப் போக தானல்லவா கை கால் கழுவ வேண்டும் எனச் சொல்லி இருக்க வேண்டும்?

மொக்கைப் பதிவர் என்றதை நக்கலாக அப்படி கேவலமான ஒன்றுக்கு அர டிக்கட் வந்ததால் அவருக்கு தீட்டுப் பட்டுவிட்டது, அதனால் சேற்றில் கால் கை கழுவிக்கொண்டு என்ற அர்த்ததில் சொல்லப்பட்டது.

இப்போது சரிதானே வால்.

vasu balaji said...

என் பதிவில் உங்கள் முதல் பின்னூட்டம் பாஸ். நன்றி வரவுக்கும் புரிதலுக்கும்.

உண்மைத்தமிழன் said...

இதுதான் இவர்களது முதல் படி.. முதல் எச்சரிக்கை..

இதை உணர்ந்துதான் நாம் இவர்களைப் பற்றித் தெரிந்து கொண்டு அடிவணங்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்..!

இதனால்தான் நான் இவர்களை வன்மையாக, வன்மமாக எதிர்க்கிறேன்..!

இன்றைக்கு கலகலப்பிரியா.. நாளை யாரோ ஒருவர்..

ஆக.. வலையுலகம் என்னும் கட்டற்ற கருத்துச் சுதந்திரத்திற்கு வேலி போட முனைகிறார்கள் இந்த அரசியல்வியாதிகள்..!

புரிந்து கொள்ளுங்கள்..!

கலகலப்பிரியாவின் தைரியத்திற்கு எனது சல்யூட்..!

Anonymous said...

//தயவு செய்து அவரை சுதந்திரமாய் விடுங்கள். அவராய் இருக்க விடுங்கள். அவரில்லாமலும் பதிவுலகத்தில் நியாயம் தேவையெனில் கிடைக்கும். அனியாயம் வெருட்டப்படும். ப்ளீஸ்//

எதுக்காக இவர்களிடம் இரைஞ்சுகிறீர்கள். முதன்முதலாக உங்கள் மேல் கோவம் வருகிறது. சுற்றி நின்று அடிக்கும் பேடிகளிடம் இரைஞ்சுவது தேவையா? போங்கடா போக்கத்தவங்களே என்று பின்னூட்டங்களை அழித்துவிட்டு அப்படியே போவீங்களா இப்படி அவர்களையும் மதித்து எழுதுவீர்களா?

Unknown said...

// சேட்டைக்காரன் said...
புதிதாக வலைப்பதிவு உலகில் அடியெடுத்து வைத்திருப்பவர்களை இந்த விரும்பத்தகாத நிகழ்ச்சிகள் அச்சுறுத்தியிருக்கின்றன என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இங்கே ஆண்-பெண் வேறுபாடின்றி, மத-ஜாதி வித்தியாசமின்றி செங்குத்தாக ஏற்பட்டிருக்கிற பிரிவு திகைக்க வைக்கிறது. இதில் சம்பந்தப்பட்ட அனுபவசாலியான பதிவர்கள் உணர்ச்சிப்பெருக்கில் கண்ணியம் காக்கத் தவறியிருப்பது மிக மிக மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது போன்ற எதிர்மறையான விளைவுகள் ஏற்பட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இந்த சர்ச்சையை ஆரம்பித்தவர்களுக்கு வெற்றியை தங்கத்தாம்பாளத்தில் கொண்டு போய் கொடுத்தாகி விட்டது. என்னைப் போன்ற அனுபவமற்ற பதிவர்களுக்கு யாரையும் குற்றம் சொல்லும் அருகதையோ, மன்னிக்கிற தகுதியோ இல்லாமல் இருக்கலாம். ஆனால், பிரபலமான பதிவர்கள் அடுத்தடுத்து புதிது புதிதாக சர்ச்சைகளை உருவாக்கிக்கொண்டிருப்பது ஆரோக்கியமான நிலையல்ல! மிகவும் வலிக்கிறது ஐயா! வெட்கமாக இருக்கிறது!
//

I am also having the same feeling as Settaikkaran.

But I am really amazed at Kalakalapriya.

கலகலப்ரியா said...

ம்ம்.. நட்புக்கு நன்றின்னு சொன்னா சரியா இருகுமா தெரியல... ஆனா ரொம்ம்ப நன்றி சார்...

ஆனா இந்தப் பதிவில் என்னை மிகைப்படுத்திக் கூறியுள்ளதாகவே உணர்கிறேன்... நான் என்னுடைய வேலை.. மற்றும் கடமை என்று உணர்வதை மட்டும் செய்து கொண்டிருக்கிறேன்.. ப்ளீஸ் சார்... இனிமே இப்டியான விளக்கங்கள் வேண்டாம்..

கலகலப்ரியா said...

||வால்பையன் said...

பிரியா உண்மைதமிழன் பதிவில் ஒருவரை, ”நீங்க வந்ததே தீட்டு” என்று எழுதியதே அவருக்கு இந்துத்துவா முத்திரை குத்த காரணம் என்று நினைக்கிறேன்!||

மிகத் தெளிவாக ஒரு விடயத்தை ஆராய்ந்து தெளிந்து அதுக்கப்புறம் அதைப் பற்றிப் பேசுவீர்களென்று ஒரு அபிப்பிராயம் கொண்டிருந்தேன்.. ம்ம்.. இந்த ஒரு வரி இன்னும் ஆயிரமாயிரம் ஆஃப்டர் வேவ்ஸ்களைக் கிளப்பி விடலாம்.. உண்மையெதுவும் இல்லாமலே... நான் அப்படிச் சொல்லவில்லை.. இல்லையென்று நான் அங்கப்பிரதட்சணம் பண்ணலாம்.. அவ்வளவே..

neway... you've misread it..!!!!

thank you...!!!

Bibiliobibuli said...

///பிரியா இழுகப்பட்டது தேவையற்றது தான்!///

வால்பையன்,

இதை நீங்கள் வினவு தளத்திலும் சொல்லியிருக்கிறீர்களா?

vasu balaji said...

ஆரூரன் விசுவநாதன் has left a new comment on your post "வீர சுதந்திரம் வேண்டி..":

"வீர சுதந்திரம்" கேட்டுப் பெறுவதில்லை, பாலாண்ணே....

செருப்பால் அடித்து பெறுவது. இனி அதை தொடர்ந்து செய்வோம்.

கண்ணுக்கு கண்ணும், பல்லுக்கு பல்லும் தான் தீர்வு என்ற நிலைக்கு நாம் தள்ளப் பட்டுவிட்டோம்.//

பின்னூட்டம் பதிய முடியலை ஆரூரன்.

பனித்துளி சங்கர் said...

////////முதலிலேயே கை கூப்பிச் சொல்லிக் கொள்கிறேன். உங்கள் அனுதாபம் தேடியல்ல இந்த இடுகை. ஆணாதிக்கத்தை நொறுக்குகிறேன் என்ற பெயரில் ஒரு பெண்ணை தன்னைத்தானே தற்காத்துக் கொள்ள விட்டு சுத்தி நின்று அடித்த இந்த ஆதிக்கத்துக்கு பெயரென்னவென்றாவது கூறுங்கள் நண்பர்களே.//////

இதற்கு பதில் சொல்லும் அளவிற்கு சிந்தித்திருந்தால்தான் , இந்த பதிவெ வந்திருக்க வாய்ப்புகள் இல்லையே !

எந்த அங்கீகாரமும் இன்றி நமக்கு நாமே எழுதி, நமக்கு நாமே வாசித்து ,நமக்கு நாமே கருத்தை பரிமாறிக்கொள்ளும் இந்த தொடக்கத்திலே இவளவு அநாகரிக நிகழ்வுகள் என்றால் இனி வரும் காலங்களில் என்னவாகுமோ !

மதார் said...

//ஒரு பெண்ணுக்கு நீதி கேட்ட உங்களுக்கு மறு பெண்ணுக்கு நீதி கேட்க தோன்ற வேண்டாம். சீண்டும் எண்ணம் எப்படி வந்தது. இது ஆணாதிக்கம் இல்லையா?
//
//எனக்கு எது சரியெனப் படுகிறதோ அதைச் செய்யவும், எது சரியில்லை எனத் தோன்றுகிறதோ அதை எதிர்க்க மட்டுமல்ல நிராகரிக்கவும் உரிமை உண்டு. அதை எவரும் மறுக்க முடியாது. அதைத்தான் நான் செய்தேன்.//
நல்லா இருக்கு , நானும் பெண் பதிவர்தான் யாருக்காவது தெரியுமா ?

vasu balaji said...

@@நன்றி பிரபாகர்
@@நன்றி டாக்டர்
@@நன்றி வெ.இரா
@@நன்றிங்க மசகவுண்டன் ஐயா. ஒன்னுமிருக்கிறதாத் தெரியலீங்க.

vasu balaji said...

அது சரி said...
//என் தலைக்குள் பல்வேறு மின்சாரங்கள் பாய்கின்றன...ப்ரியாவின் இடுகையில் பின்னூட்டங்களை நான் இன்னும் முழுதாக படிக்கவில்லை...படித்தவரை பதிவுலகில் சாக்கடை எவ்வளவு நீளம் ஆழமாக ஓடுகிறது என்று தெரிகிறது!//

Stinky

vasu balaji said...

இராமசாமி கண்ணண் said...
அவசியம் தேவை படுகின்ற இடுக்கை சார். உங்களின் ஒவ்வொரு வார்த்தைக்ளோடும் உடன்படுகிறேன். கடந்த சில நாட்களாக வலைஉலகில் நடந்து வருகின்ற விரும்பதகாத நிகழ்வுகள விரைவில் முற்று பெரும் என்று நம்புகிறேன்//

நன்றிங்க இராமசாமி கண்ணன். நம்புவோம்.

vasu balaji said...

சத்ரியன் said...
பாலா அண்ணாவிற்கு,

இரு நாட்களாய் வலைப்பக்கம் வராமல் இருந்து, நேற்று வந்தேன்.

எனக்குள்ளான கேள்வி.நாம்(தமிழர்கள்) சண்டையிட்டுக்கொள்ளும் நேரமா இது?

பெண்கள் எல்லாருமே மதிப்பிற்குரியவர்கள்.ஒரு பெண் காயப்பட்டார் என்பதற்கு, இன்னொரு பெண்ணை இழிவாகப் பேசுபவர்கள் எப்படி ஆணாதிக்கத்தை எதிர்க்கிறார்கள் என புலப்படவில்லை.

ஆணாதிக்கம் பற்றிய மேடையில் ஜாதிக்கென்ன தேவை வந்ததோ தெரியவில்லை.

திருந்துமா இந்த தமிழினம்?//

என்னத்தச் சொல்ல.

vasu balaji said...

LK said...
உங்கள் வார்த்தைகளில் நியாயம் உள்ளது :)//

நன்றிங்க

vasu balaji said...

நாளும் நலமே விளையட்டும் said...

பேரு நல்லா இருக்குங்கண்ணா. ஆனா போற இடமெல்லாம் விசம் கக்கினா எப்புடி நலம் விளையும் சொல்லுங்க. எனக்கும் உங்களுக்கும் வரப்பு வாய்க்கா தகராரு கூட இல்லிங்கண்ணா. நல்லது. போய்ட்டு வராதீங்ணா

vasu balaji said...

@@நன்றிங்க சபரி
@@நன்றிங்க ஆரூரன்

vasu balaji said...

@@நன்றிங்க தேவா.
@@நன்றிங்க சேட்டை. நூற்றுக்கு நூறு சரி.
@@நன்றிங்க மாப்பு
@@நன்றிங்க தமிழ் அமுதன்
@@நன்றிங்க அண்ணே
@@நன்றிங்க பிள்ளையாண்டான்

vasu balaji said...

@@நன்றிங்க உண்மைத்தமிழன். என்ன பெரிய வார்த்தையெல்லாம்.
@@நன்றிம்மா அனாமிகா. :). அதுவும் சலிப்பாப் போச்சும்மா.
@@நன்றி முகிலன். :D. Me too:))

vasu balaji said...

கலகலப்ரியா said...

//ம்ம்.. நட்புக்கு நன்றின்னு சொன்னா சரியா இருகுமா தெரியல...

அப்ப ஃப்ரீயா உடு.

// ஆனா ரொம்ம்ப நன்றி சார்... //

இந்த தேவையில்லாம புள்ளி வச்சா வில்லங்கம்னு தெரியாது உனக்கு?

//ஆனா இந்தப் பதிவில் என்னை மிகைப்படுத்திக் கூறியுள்ளதாகவே உணர்கிறேன்... நான் என்னுடைய வேலை.. மற்றும் கடமை என்று உணர்வதை மட்டும் செய்து கொண்டிருக்கிறேன்..//

ஆனா நான் சொன்ன படி உணர்கிறேனே. என்ன செய்ய? அதில் பொய்யில்லைதானே.

//ப்ளீஸ் சார்... இனிமே இப்டியான விளக்கங்கள் வேண்டாம்..//

அல்லோ! போய் புள்ளகுட்டிய படிக்க வைம்மா. தேவைன்னா பண்றதுதான். இப்படியில்லைன்னா வேறமாதிரி:))//

vasu balaji said...

@@நன்றிங்க ரதி! வால் எழுதுனவங்களையே கேட்டிருக்காருங்கம்மா.
@@நன்றிங்க பனித்துளி சங்கர்.

vasu balaji said...

மதார் said...

//நல்லா இருக்கு , நானும் பெண் பதிவர்தான் யாருக்காவது தெரியுமா ?//

நன்றிங்கம்மா மதார். ஆனா இத ஏன் இப்போ இங்க கேக்கறீங்கன்னு புரியல. :). Anyway, Thanks again Madam.

Unknown said...

தங்கச்சிய கடிச்சது வெறி நாயா சொறி நாயான்னு பதிவு போட்டு எகத்தாளம் பேசி கும்மி அடிக்க வேண்டியதுதானா???????? இப்ப தெரியுதா வலி என்னானு????

vasu balaji said...

pillaival said...
//தங்கச்சிய கடிச்சது வெறி நாயா சொறி நாயான்னு பதிவு போட்டு எகத்தாளம் பேசி கும்மி அடிக்க வேண்டியதுதானா???????? இப்ப தெரியுதா வலி என்னானு????//

இவ்வளவு நாள் மைனஸ் மட்டும் குத்திட்டு போய் இப்போ பின்னூட்டமும் போடுறதுக்கு நன்றிங்க. ஆனா பாருங்க. முகமூடி இல்லாம வந்து இதயே கேளுங்க பதில் சொல்லுவேன். இப்போதைக்கு இது என்னமோ வலிதாங்காம போட்ட இடுகைன்னு நினைச்சா சிப்பு சிப்பா வருது. இந்த போக்கிரித்தனத்தனம் இங்க விலைபோகாதுங்கோவ். போய் வேலையப் பாருங்க. :)) ரொம்ப டாங்ஸ்.

kathir said...

//மதார் said...
நல்லா இருக்கு , நானும் பெண் பதிவர்தான் யாருக்காவது தெரியுமா ?//

ஏனுங்க... மதார்

அன்னிக்கு வந்த பிரச்சனை உங்க இடுகை பற்றித்தானே...

மனசைத் தொட்டுச் சொல்லுங்க..
அந்தப் பிரச்சனை.... நீங்க பெண் என்பதற்காகவா?

கடைசியில் நீங்கள் ”ஒரு பெண்ணை இப்படிப் பேசுகிறார்களே” என்று பிரச்சனையை திசை திருப்பும் போதுதான் உங்களிடம் எதைப் பேசியும் உபயோகம் இல்லையென்று பின் வாங்கினேன்..

நீங்கள் பெண் / ஆண் என்பது பிரச்சனையில்லை..

உங்கள் இடுகையும், அதில் நீங்கள் இட்ட பின்னூட்டமும்தான்

Unknown said...

என்கிட்ட ஒரு ஜிமெயில் அக்கவன்ட் இருக்கு அவ்ளோதான். அது மூலமா கேட்டன்.இதுல முகமுடி எங்கிருந்து வந்துச்சு.முகமுடி இல்லாம வரதுனா எப்டி?


///சொறி புட்ச நாய்பா..அவ்வ்வ்./// நாபகம் இருக்கா????

vasu balaji said...

pillaival said...
என்கிட்ட ஒரு ஜிமெயில் அக்கவன்ட் இருக்கு அவ்ளோதான். அது மூலமா கேட்டன்.இதுல முகமுடி எங்கிருந்து வந்துச்சு.முகமுடி இல்லாம வரதுனா எப்டி? //

இவ்வளவு தெரிஞ்ச உங்களுக்கு இது தெரியாதுங்களா. போங்க டமாசு பண்ணிகிட்டு.


///சொறி புட்ச நாய்பா..அவ்வ்வ்./// நாபகம் இருக்கா????

ஏதோ ஒரு நாய் கத்துச்சு. ஆனா அது வெறிபிடிச்ச நாய்ன்னுல்ல நினைச்சேன். சொறியுமா? போய் வேலைய பாருங்கப்பு.

vasan said...

ப‌திவுல‌க‌ம் ஒரு முற்போக்காய்,
தேச‌ ந‌லன், ம‌க்க‌ள் நேச‌ம் என‌
பொதுச்சிந்த‌னை வ‌ள‌ர்த்து புதிய‌ன‌
புகுத்துவார்களொன‌ எதிர் பார்த்தால்!!

ப‌ழைய‌ ப‌ஞ்சாங்க‌ளாய், அதே குட்டையை
குழ‌ப்பும் (எந்த‌ வில‌ங்குக‌ளையும் குறிப்பிட்டு
அவ‌ற்றை வ‌ருத்த‌ ம‌ன‌மில்லை)

நாம் மாறாம‌ல், மாற்ற‌ம் வாராது.

ரோஸ்விக் said...

அண்ணே அனுதாபமும், ஆறுதலும் தேடுகிற ஆட்கள் இல்லை நீங்களும், பிரியாவும். அது எனக்கு நன்றாகவே தெரியும்.
விஷமத்தனமாக பலரின் பெயரை அவர்கள் இழுத்தது தேவையில்லாதது. ஏதோ ஒரு வகையில் ஆதிக்கம் இருந்துகொண்டு தான் இருக்கிறது. அதில் வருத்தமே.

சத்ரியனின் பின்னூட்டத்தையும் நான் வழிமொழிகிறேன்.