வாழ்க்கையின் மிக உயரத்தை எட்டியவர்கள் நன்றாக நிலைத்திருப்பது அவர்களின் வேர்கள் நிலத்தில் ஆழ ஊடுருவி நிலைத்திருப்பதால்தான். கொஞ்சம் வசதி வந்ததும் பேயாட்டம் போடுபவர்கள் மத்தியில் சாமானியனாக இருப்பது மிக அபூர்வம்.
நேற்றைய செய்தித் தாளில் அத்தகைய இருவரை அறியமுடிந்ததைப் பகிர்ந்து கொள்ள ஆவல்.
அவர் இந்தியாவிலே பெரிய பணக்காரர். அவர் மனைவி பிரபல சமூக சேவகி. இவர்களின் குழந்தைகள் ஒரு நடுத்தரக் குடும்பத்துப் பிள்ளைகள் போல் வளர்க்கப்படுகிறார்கள். தனி விமானமிருந்தும் படிக்குமிடத்திலிருந்து வந்து போக இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம்தானாம். மகள் 20 பேருடன் குளியல் அறையைப் பகிர்ந்து கொள்கிறாராம். டார்மிட்டரியில் மற்ற குழந்தைகளுடன் ஒரு மேல்தட்டுப் படுக்கைதானாம்.
அந்தப் பணக்காரர் பிள்ளைகள் அவர்களுடன் தங்கிப் படிக்கையில் பாடம் சொல்லித்தருவாராம் தந்தை. பிள்ளைகளுடன் அதிக நேரம் செலவழிப்பாராம். மகன் கேட்டாராம். கால்குலேட்டர் இருக்கும்போது ஏன் வாய்ப்பாடு படிக்க வேண்டுமென. தந்தை சொன்ன பதில், எல்லாவற்றுக்கும் மூளையைப் பயன்படுத்தப் பழகு என்பது. மனைவி சொல்கிறார், நான் மனதளவில் ஒரு நடுத்தர வர்க்கப் பெண்தான் என்று.
திரு முகேஷ் அம்பானியும், அவர் மனைவி நீதா அம்பானியும்தான் இவர்கள்.
ஹூம்! இன்னைக்கு 7 மணி வரைக்கும் க்ளாஸ். ஆட்டோக்கு சட்டையில இருந்து 150 ரூபாய் எடுத்துகிட்டேன்னு சொல்ற மவள கூப்பிட்டு படின்னு சொல்லத் தோணுச்சி. வில்லங்கமா நீங்க அம்பானி ஆயிட்டு சொல்லுங்கன்னு சொன்னாலோ, இல்லன்னா நான் மட்டும் இண்டியன் ஏர்லைன்ஸ்ல போக மாட்டேன்னா சொல்றேன்னோ வில்லங்கமா பேசிட்டா என்ன பண்றதுன்னு மடிச்சி வச்சிட்டேன்.
ஹூம்! இன்னைக்கு 7 மணி வரைக்கும் க்ளாஸ். ஆட்டோக்கு சட்டையில இருந்து 150 ரூபாய் எடுத்துகிட்டேன்னு சொல்ற மவள கூப்பிட்டு படின்னு சொல்லத் தோணுச்சி. வில்லங்கமா நீங்க அம்பானி ஆயிட்டு சொல்லுங்கன்னு சொன்னாலோ, இல்லன்னா நான் மட்டும் இண்டியன் ஏர்லைன்ஸ்ல போக மாட்டேன்னா சொல்றேன்னோ வில்லங்கமா பேசிட்டா என்ன பண்றதுன்னு மடிச்சி வச்சிட்டேன்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அப்பா மத்திய அமைச்சர். அண்ணன் மாநில முதல்வர். கணவர் எம்.பி. அம்மணி ஐ.நா.நிதியத்தில் நல்ல பொறுப்பில் இருந்தவர். ஜம்பத்துக்காக இன்றி எவர் உதவியும் பெறாமல் தன் முயற்சியில் லோரா பிரபு என்பவருடன் இணைந்து சமூகத்தில் மிகக் கீழ்மட்டத்தில் இருக்கும் முஸ்லிம் பெண்களின் முன்னேற்றத்துக்காக செக்யூன் என்ற அமைப்பை நடத்தி வருபவர் சாரா.
மிகவும் கடினமான இந்த முயற்சியில் சம்பந்தப்பட்ட பெண்களின் குடும்பத்துடன் பேசி, அவர்கள் சம்மதத்துடன் இந்தப் பெண்கள் சுயமாக சம்பாதிக்கவும், சேவை செய்யவும் ஏற்ற வகையில் தொழிற்பயிற்சி, மருத்துவ முகாம்கள், விலை குறைந்த தானியங்களைக் கொண்டு சத்துணவு தயாரிக்கும் பயிற்சியோடு, பெண்களுக்காக பெண்களே செயல்படும் ‘மகளிர் பஞ்சாயத்து’ அமைப்புக்காக சட்டக் கல்வி முகாமும் நடத்தி வருகிறார்களாம்.
மத்திய அமைச்சர் ஃபரூக் அப்துல்லாவின் மகளும், காஷ்மீர் மாநில முதல்வர் ஓமர் அப்துல்லாவின் தங்கையும், சச்சின் பைலட் எம்.பி.யின் மனையுமான திருமதி சாராதான் இவர்.
சங்கமத்துக்கு காஷ்மீரி மொழியில வார்த்தையில்லையோ?
சங்கமத்துக்கு காஷ்மீரி மொழியில வார்த்தையில்லையோ?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கலிஃபோர்னியாவைச் சேர்ந்த உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) உலகத் தமிழ்ச் செந்தமிழ் மாநாட்டோடு இணைந்து நடத்தும் தமிழ் இணைய மாநாடு 2010ல் வலைப்பதிவர்களுக்கான நிகழ்வில் வரும் 25/06/2010ல் பிற்பகல் 3:45 மணியிலிருந்து 4:15 மணிவரை முரசொலிமாறன் அரங்கத்தில் கவிஞர்.திலகபாமா,சிவகாசி அவர்கள் தலைமையில் நடைபெறும் அரங்கில் "வலைப்பூக்களால்நிகழ்ந்த சாதனை " என்ற தலைப்பில் உரைநிகழ்த்த நண்பர் ஈரோடு கதிர் அழைக்கப்பட்டிருப்பது பெருமையளிக்கும் விடயம்.
பாராட்டுகள் மாப்பு! அங்க போய் கஸ்ஸியப்படாது. காட்டாறு மாதிரி கலக்கிட்டு வாங்க. வாழ்த்துகள்.
சும்மாக் கிடைச்சா சித்தப்பாக்கு ரெண்டு. ஃப்ரீயா கிடைச்சா பினாயிலானாலும் குடிப்பான். இதெல்லாம் தமிழனுக்கேயான சொலவடையில்லையா? ஹி ஹி. ஒன்னரை லட்சம் தமிழ் எழுத்துருக்கள், மென்பொருட்கள் அடங்கிய சிடி கொடுக்குறாங்களாம். கொஞ்சம் வாங்கி அனுப்புங்க மாப்பு .
60 comments:
//தந்தை சொன்ன பதில், எல்லாவற்றுக்கும் மூளையைப் பயன்படுத்தப் பழகு என்பது//
சரியாத்தான் சொல்லி இருக்காரு!
சிங்கம் சிங்கிளா போய் கல்க்கிட்டு வரட்டும்:)
வில்லங்கமா நீங்க அம்பானி ஆயிட்டு சொல்லுங்கன்னு சொன்னாலோ, இல்லன்னா நான் மட்டும் இண்டியன் ஏர்லைன்ஸ்ல போக மாட்டேன்னா சொல்றேன்னோ வில்லங்கமா பேசிட்டா என்ன பண்றதுன்னு மடிச்சி வச்சிட்டேன்.
..... ha,ha,ha,ha,ha....
நீங்களே சொல்லி கொடுப்பீங்க போல.
........கதிர் சாருக்கு வாழ்த்துக்கள்!
நம்ம கதிர்க்கு வாழ்த்துக்கள்.
முதல் இரண்டு பகிர்வும் வியப்பு!
பகிர்வுக்கு நன்றிங்கைய்யா.
வாழ்த்துகள் ஈரோடு கதிர்.
(பாலா அந்த சிடி கிடைச்சா ஒரு பிரதி எடுத்து எனக்கு அனுப்பிடுங்க..நான் யார் கிட்டேயும் இது பற்றி மூச்சுவிட மாட்டேன் :)))
சகோதரர் கதிருக்கு வாழ்த்துகள்.
அம்பானி விஷயம் அருமை.
கலக்கறீங்க அண்ணே..
கதிர் சாருக்கு வாழ்த்துக்கள்...
எல்லோரும் ஒரே மாதிரி இருப்பதில்லை. சில நல்ல உதாரணங்களை பகிர்ந்ததற்கு நன்றி
கதிர் சாருக்கு மீண்டும் என் இனிய வாழ்த்துக்கள்
கதிர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..
//வில்லங்கமா நீங்க அம்பானி ஆயிட்டு சொல்லுங்கன்னு சொன்னாலோ, இல்லன்னா நான் மட்டும் இண்டியன் ஏர்லைன்ஸ்ல போக மாட்டேன்னா சொல்றேன்னோ வில்லங்கமா பேசிட்டா என்ன பண்றதுன்னு மடிச்சி வச்சிட்டேன்.//
ம்ம்ம்.. நம்மளாட்டமாதிரி வயசானவங்க இப்டித்தான் கம்முன்னு இருந்திடனும்..
ஒரு சாதாரண செய்திதான் ஆச்சர்யம் தரக்கூடியதாக இச்சமுதாயத்தில் மாறியிருக்கிறது.
இரண்டாவது ஆச்சர்யம்தான்..
கதிர் அய்யாவுக்கு மீண்டும் மனமார்ந்த வாழ்த்துக்கள்..
செய்திகள் அருமை.
கதிருக்கு வாழ்த்துக்கள்.
//பாராட்டுகள் மாப்பு! அங்க போய் கஸ்ஸியப்படாது. காட்டாறு மாதிரி கலக்கிட்டு வாங்க. வாழ்த்துகள்.//
ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்...........
அம்பானி கதை அருமை..
//கால்குலேட்டர் இருக்கும்போது ஏன் வாய்ப்பாடு படிக்க வேண்டுமென. தந்தை சொன்ன பதில், எல்லாவற்றுக்கும் மூளையைப் பயன்படுத்தப் பழகு என்பது. //
கேம்ப்ல அமெரிக்க பையன் ஒருத்தன் பொட்டிக்கடை வச்சு இருந்தான்.2 ஐஸ்கிரிம்,2 சிப்ஸ்,2 பெப்சிக்கு கால்குலேட்டரில் கணக்கு போட்டு குடைஞ்சுகிட்டு இருந்தான்.அவன் போடுற கணக்குக்கு முன்னாடி மனக்கணக்கு போட்டு சொல்லி காசு நீட்டுன நினைவு வருது.
இப்ப கால்குலேட்டரை உபயோகிச்சு உபயோகிச்சு போனவாரம் இன்சாட் சாட்டிலைட் அலைவரிசை 3845 ல 600 குறைக்க கூட கால்குலேட்டரை கண் தேடுது.அவ்வ்வ்வ்......
//"வலைப்பூக்களால்நிகழ்ந்த சாதனை " என்ற தலைப்பில் உரைநிகழ்த்த நண்பர் ஈரோடு கதிர் அழைக்கப்பட்டிருப்பது பெருமையளிக்கும் விடயம்.///
நல்ல விஷயம். வாழ்த்துக்கள் !!(எல்லாரும் பண்றாங்களேன்னு யாரையும் பாராட்டி பேச வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்)
முடிந்தால் YOUTUBE-இல் பதிவேற்றினால் பார்த்து சந்தோசம் அடைவேன்
நன்றி வணக்கம்
செய்திப் பகிர்வு அருமை பாலா சார்.
கதிர் அண்ணனுக்கு வாழ்த்துகள்.
நல்ல பகிர்வு பாலாண்ணா.
வாழ்த்துகள் கதிர்!
//வில்லங்கமா நீங்க அம்பானி ஆயிட்டு சொல்லுங்கன்னு சொன்னாலோ, இல்லன்னா நான் மட்டும் இண்டியன் ஏர்லைன்ஸ்ல போக மாட்டேன்னா சொல்றேன்னோ வில்லங்கமா பேசிட்டா என்ன பண்றதுன்னு மடிச்சி வச்சிட்டேன்.//
:-))
//பாராட்டுகள் மாப்பு! அங்க போய் கஸ்ஸியப்படாது. காட்டாறு மாதிரி கலக்கிட்டு வாங்க. வாழ்த்துகள்.//
ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்...........
எல்லா செய்திகளும் அருமை சார். கதிர் அண்ணனுக்கு வாழ்த்துகள்.
அம்பானி மேட்டர் "அடடா"
கதிர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
ஐயா நம்ம பதிவுப் பக்கம் கொஞ்சம் வந்து பாருங்க
www.jillthanni.blogspot.com
அண்ணே! ரெண்டு செய்தியுமே அருமையான செய்தி. இன்னிக்கி உள்ள புள்ளைங்க ( நான் உட்பட) 18ம் 13ம் எவ்வளொன்னு கேட்டா உடனே செல்போன தூக்கி அதுல கால்குலேட்டர தேடுறோம்..,
அனைவரின் வாழ்த்துகளுக்கும் நன்றி
//சும்மாக் கிடைச்சா சித்தப்பாக்கு ரெண்டு.//
எங்க அப்புச்சி வயசில இருந்துகிட்டு சித்தப்பா மாதிரினு சந்துல சிந்து பாடறீங்களாக்கும்
//ஈரோடு கதிர் said...
அனைவரின் வாழ்த்துகளுக்கும் நன்றி
//சும்மாக் கிடைச்சா சித்தப்பாக்கு ரெண்டு.//
எங்க அப்புச்சி வயசில இருந்துகிட்டு சித்தப்பா மாதிரினு சந்துல சிந்து பாடறீங்களாக்கும்
//
ஆமா, ஆமா.... சொல்றவருக்கு வயசு பதினாறு!
//எங்க அப்புச்சி வயசில இருந்துகிட்டு சித்தப்பா மாதிரினு சந்துல சிந்து பாடறீங்களாக்கும்//
அல்லோ! உங்க அப்புச்சி சீக்கிரமா அப்புச்சியானா நாங்களும் அப்புச்சி கணக்கோ:))
ம்ம்... பிரபலங்கள் அப்டின்னு தலைப்பு வச்சிட்டு.. என்னைய எப்பூடி விடலாம்... அதும் அம்பானி நம்ம ஐடியாவ காப்பி பண்ணி இருக்காரு... அதில கூட ஒரு வார்த்த சொல்லல.. மக்கா இத விடுறதில்ல.. இன்னைக்கு இரவு சாப்ட்டுட்டு நாளைக்கு காலை வரைக்கும் உண்ணா விரதம்..
சங்கவி (பதிவர்) பக்கத்தில படங்கள் பார்த்தேனுங்க... அங்க சுவிஸ் கொடிய நிலத்தில டிஸைன் பண்ணி இருக்காய்ங்க... எனக்காகவான்னு எனக்கு ஒரே சந்தேகமாவே இருக்குங்க..ஹிஹி.. கொஞ்சம் விசாரிச்சு சொல்லுங்க ப்ளீஸ்..
கதிரு பேசறப்போ நம்மளப் பத்தி நாலு வார்த்த சொல்லவும்..
இப்போதான் ஆறாயிரத்தில காலக் கோட்டை விட்டேன்... ப்ளீஸ்.. பார்த்து பண்ணுங்கப்பு.. அவ்வ்வ்வ்... எப்பூடியாவது பேமஸ் ஆவனும்..
நல்ல பகிர்வு.
வாழ்த்துகள் கதிர்.
அட!
ஹூம்! இன்னைக்கு 7 மணி வரைக்கும் க்ளாஸ். ஆட்டோக்கு சட்டையில இருந்து 150 ரூபாய் எடுத்துகிட்டேன்னு சொல்ற மவள கூப்பிட்டு படின்னு சொல்லத் தோணுச்சி. வில்லங்கமா நீங்க அம்பானி ஆயிட்டு சொல்லுங்கன்னு சொன்னாலோ, இல்லன்னா நான் மட்டும் இண்டியன் ஏர்லைன்ஸ்ல போக மாட்டேன்னா சொல்றேன்னோ வில்லங்கமா பேசிட்டா என்ன பண்றதுன்னு மடிச்சி வச்சிட்டேன்.---//
இப்படி ஒரு யோசனை வந்துச்சி பாருங்க.. அது பெரிய விஷயம்...
கதிர் சாருக்கு வாழ்த்துகள்.
நல்ல பகிர்வு.
நம்மாளுங்க 500ருபாய் பாக்கெட்ல இறுந்தாலே பார் ஏசி எங்கேன்னு தேடுவோம்.
கலக்குங்க கதிர்.
சங்கமத்துக்கு காஷ்மீரி மொழியில வார்த்தையில்லையோ?//
நல்லாத் தான் கடிக்கிறீங்கள்.
நகைச்சுவைகளுடன், பயனுள்ள விடயங்கள் அருமை. தொடருங்கோ.
அறிந்த பிரபலங்கள் என்றாலும் அவர்களின் எளிமை பற்றி புதுமையாகத் தகவல்கள் தந்தமைக்கு நன்றி .
நண்பர் கதிருக்கு வாழ்த்துக்கள் .
【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
//தந்தை சொன்ன பதில், எல்லாவற்றுக்கும் மூளையைப் பயன்படுத்தப் பழகு என்பது//
சரியாத்தான் சொல்லி இருக்காரு!
சிங்கம் சிங்கிளா போய் கல்க்கிட்டு வரட்டும்:)//
சிங்கமா? அப்ப பிடறி?=))
Chitra said...
வில்லங்கமா நீங்க அம்பானி ஆயிட்டு சொல்லுங்கன்னு சொன்னாலோ, இல்லன்னா நான் மட்டும் இண்டியன் ஏர்லைன்ஸ்ல போக மாட்டேன்னா சொல்றேன்னோ வில்லங்கமா பேசிட்டா என்ன பண்றதுன்னு மடிச்சி வச்சிட்டேன்.
..... ha,ha,ha,ha,ha....
நீங்களே சொல்லி கொடுப்பீங்க போல.//
ம்கும். அதுங்க நமக்கு சொல்லிக் கொடுக்காது?
நன்றிங்க
சி. கருணாகரசு said...
நம்ம கதிர்க்கு வாழ்த்துக்கள்.
முதல் இரண்டு பகிர்வும் வியப்பு!
பகிர்வுக்கு நன்றிங்கைய்யா.//
நன்றி கருணாகரசு:)
T.V.ராதாகிருஷ்ணன் said...
வாழ்த்துகள் ஈரோடு கதிர்.
(பாலா அந்த சிடி கிடைச்சா ஒரு பிரதி எடுத்து எனக்கு அனுப்பிடுங்க..நான் யார் கிட்டேயும் இது பற்றி மூச்சுவிட மாட்டேன் :)))//
:)). கண்டிப்பா. ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்
இராகவன் நைஜிரியா said...
சகோதரர் கதிருக்கு வாழ்த்துகள்.
அம்பானி விஷயம் அருமை.
கலக்கறீங்க அண்ணே..//
நன்றிண்ணே:)
நாடோடி said...
கதிர் சாருக்கு வாழ்த்துக்கள்...//
நன்றிங்க நாடோடி:)
@@நன்றிங்க வேலு
@@நன்றி இர்ஷாத்
@@நன்றி பாலாசி
@@நன்றிங்க காமராஜ்
@@நன்றி ஆரூரன்
@@நன்றி யூர்கன்
@@நன்றிண்ணா:)
@@நன்றி சரவணக்குமார்
@@நன்றி பா.ரா.
@@நன்றி செந்தில்
@@நன்றி இராமசாமி கண்ணன்
@@நன்றிங்க ஜில்தண்ணி
@@நன்றிங்க நிஜாம்
@@நன்றிங்க பழமை. அதான:))
கலகலப்ரியா said...
//ம்ம்... பிரபலங்கள் அப்டின்னு தலைப்பு வச்சிட்டு.. என்னைய எப்பூடி விடலாம்...//
எல்லா பிரபலத்தையும் ஒரே நாள்ள சொல்லிட்டு நான் எப்புடி கல்லா கட்றதாம்.
// அதும் அம்பானி நம்ம ஐடியாவ காப்பி பண்ணி இருக்காரு... அதில கூட ஒரு வார்த்த சொல்லல..//
அது வேறயா? இந்த தினத்தந்திக்காரன் இப்புடித்தாம்மா
// மக்கா இத விடுறதில்ல.. இன்னைக்கு இரவு சாப்ட்டுட்டு நாளைக்கு காலை வரைக்கும் உண்ணா விரதம்.. //
அய்யோ! அது பழைய ஃபேஷன். 8 மணிநேரமாவது இருக்கணூமே. காலைல சீரியல் சாப்டு லஞ்ச் வரைக்கும் இரும்மா. அதான் ட்ரெண்ட்.
//சங்கவி (பதிவர்) பக்கத்தில படங்கள் பார்த்தேனுங்க... அங்க சுவிஸ் கொடிய நிலத்தில டிஸைன் பண்ணி இருக்காய்ங்க... எனக்காகவான்னு எனக்கு ஒரே சந்தேகமாவே இருக்குங்க..ஹிஹி.. கொஞ்சம் விசாரிச்சு சொல்லுங்க ப்ளீஸ்..//
சொல்லாம கொள்ளாம வரியா என்னா?:))
கலகலப்ரியா said...
//கதிரு பேசறப்போ நம்மளப் பத்தி நாலு வார்த்த சொல்லவும்..//
நீ வேறம்மா! சொல்லாம விட்றுவாரா? அப்புறம் ஒரு பதிவு விடாம எல்லாத்துக்கும் எதிர் போடமாட்டோம். அப்புறம் எப்புடி கஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸியராரு பார்க்கலாம்.
கலகலப்ரியா said...
//இப்போதான் ஆறாயிரத்தில காலக் கோட்டை விட்டேன்... ப்ளீஸ்.. பார்த்து பண்ணுங்கப்பு.. அவ்வ்வ்வ்... எப்பூடியாவது பேமஸ் ஆவனும்..//
அடிங்கொக்கமக்கா:)) இன்னுமா ஃபேமஸாவலன்னு சீனு:)). நன்றிம்மா
@@நன்றி மாதேவி
@@நன்றி சுபாங்கன்
ஜாக்கி சேகர் said...
//இப்படி ஒரு யோசனை வந்துச்சி பாருங்க.. அது பெரிய விஷயம்...//
பசங்க கிட்ட உசாரா இருக்கணுமே:))
@@நன்றி அக்பர்
@@நன்றி ராஜவம்சம்
@@நன்றிங்க தமிழ் மதுரம்
@@நன்றிங்க சங்கர்.
நானும் போயி பார்த்திட்டு வாரண்ங்கண்ணா..நீங்களும் வாங்க.
//இன்னைக்கு 7 மணி வரைக்கும் க்ளாஸ். ஆட்டோக்கு சட்டையில இருந்து 150 ரூபாய் எடுத்துகிட்டேன்னு சொல்ற மவள கூப்பிட்டு படின்னு சொல்லத் தோணுச்சி. வில்லங்கமா நீங்க அம்பானி ஆயிட்டு சொல்லுங்கன்னு சொன்னாலோ, இல்லன்னா நான் மட்டும் இண்டியன் ஏர்லைன்ஸ்ல போக மாட்டேன்னா சொல்றேன்னோ வில்லங்கமா பேசிட்டா என்ன பண்றதுன்னு மடிச்சி வச்சிட்டேன்// நியாயம் தான?
பணம் நெறய சம்பாறிச்சிட்டு எளிமையா இருந்தாலும், ஒரு ஏழை தம்புள்ளைய இஞ்சினியரிங் படிக்க போட்டாலும், அது சுவாரஷ்யமான செய்திதான் இல்லையா சார்.
கதிர் சார்க்கு வாழ்த்துக்கள். (பாமரன் சார், என்னபத்தியும் பெருமையா பேச சொல்லி கொஞ்சம் பர்ந்துரை செய்ங்க சார், எப்பாடுபட்டாவது இந்த மாசத்துக்குள்ளார ஒரு பதிவ போட்டு பிரபல பதிவராகுறதா முடிவு செஞ்சிட்டேன் சார்)
பணம் நெறய சம்பாறிச்சிட்டு எளிமையா இருந்தாலும், ஒரு ஏழை தம்புள்ளைய இஞ்சினியரிங் படிக்க போட்டாலும், அது சுவாரஷ்யமான செய்திதான் இல்லையா சார்.
கதிர் சார்க்கு வாழ்த்துக்கள். (பாமரன் சார், என்னபத்தியும் பெருமையா பேச சொல்லி கொஞ்சம் பர்ந்துரை செய்ங்க சார், எப்பாடுபட்டாவது இந்த மாசத்துக்குள்ளார ஒரு பதிவ போட்டு பிரபல பதிவராகுறதா முடிவு செஞ்சிட்டேன் சார்)
1 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் 27 அடுக்கு மாடி சொகுசு வீடு(?) கட்டி வரும் முகேஷ் அம்பானி பற்றி நீங்கள் சொல்லுவது நம்பகமாக இல்லை.
http://www.youngeagerminds.com/2009/08/mukesh-ambani-new-house-pictures.html
தாராபுரத்தான் said...
//நானும் போயி பார்த்திட்டு வாரண்ங்கண்ணா..நீங்களும் வாங்க.//
குடுத்து வச்சவங்க. சந்தோசமா போய்ட்டு வாங்க.:)
@@நன்றிங்க புலிகேசி
@@நன்றி ஜே. பி.ப. ஆக வாழ்த்துகள்.
தியாகு said...
1 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் 27 அடுக்கு மாடி சொகுசு வீடு(?) கட்டி வரும் முகேஷ் அம்பானி பற்றி நீங்கள் சொல்லுவது நம்பகமாக இல்லை.
http://www.youngeagerminds.com/2009/08/mukesh-ambani-new-house-pictures.html//
1.முகேஷ் அம்பானி தராவில குடியிருக்காருன்னோ, சைக்கிள்ள போறாருன்னோ சொல்லவில்லை.
2.மன்னிக்கணும் ஒரு பில்லியன் இல்லை 2.
3.அவ்வளவு பெரிய வீட்டில அம்பானி தரையில் படுக்கலாம். விருந்தாளிங்களையும் படுக்க சொல்ல முடியாது.
4.நீங்க பதிவில பார்த்தா மாதிரி நான் பத்திரிகையில் படித்தேன். நம்பகத் தன்மைக்கு நான் கேரண்டி தரவில்லை.:)
நன்றிங்க.
அவங்க பணத்தால அடிச்சாலும்...நாங்க சொல்லால அடிப்போல...
ஐயா, முகேஷினை சாமானியனாக வாழ்கிறார் என்று நீங்கள் கூருவதைத்தான் என் மனம் ஏற்க மறுக்கிறது. உலகின் மிகப்பெரிய குடிசைப்பகுதியினை கொண்ட ஒரு நகரில் இப்படி ஒரு ஆடம்பர மாளிகையினை கட்டிவருபவரை நீங்கள் சொல்லும் பிம்பத்திர்க்குள் பொருத்தி பார்க்க இயலவில்லை. தங்கள் குழந்தைகளை வேண்டுமானால் ஒரு நடுத்தர குடும்பத்து பிள்ளைகளை போல வளர்க்கலாம் ஆனால் முகேஷ் அம்பானியும், நீட்டா அம்பானியும் ஒரு நடுத்தர குடும்பத்து வாழ்க்கையினை கடைப்பிடிக்கவில்லை என்பதே என் கருத்து.
நானும் அம்பானி அளவு பணம் சேர்த்த பிறகு யோசிக்கிறேன் என்று சொல்ல வந்தால்..நீங்களே கீழே எழுதி விட்டீர்கள்..!!
ஈரோடு கதிருக்கு வாழ்த்துக்கள்...கலக்குங்கள் கதிர்.
Post a Comment