Saturday, June 5, 2010

சாலட் -1

விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்க ஆரம்பித்துவிட்டன. இன்றைய நாளிதழில் எழுத்து பூர்வமாக புகார் கொடுக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அரசின் வழமையான ஒரு அறிவிப்பும் வெளியாகிவிட்டது. அடுத்த தலைமுறையை வழிநடத்தும் பள்ளிகளின் கயவாளித்தனம் சற்றும் குறையாமல் நடந்தும் முடிந்துவிட்டது.

ஆம்! எனது ஆட்டோ ஓட்டுனர் நண்பரின் மகள் சி.பி.எஸ்.இ. 10ம் வகுப்புத் தேர்வில் 9.2 புள்ளியெடுத்தும் ஒரு சுமாரான பள்ளியில் இடம் கிடைக்கவில்லை. அவளுக்கும் மிகக்கீழான மதிப்பெண் எடுத்தவர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்தது. ஏன் என்ற கேள்விக்கு வந்த பதில், குடித்துவிட்டு தகராறு செய்கிறாயா? போலீசைக் கூப்பிடவா என்பது. மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்ட லட்சணம் இது.

மற்றோர் பள்ளியில், பள்ளி குறித்த எந்த தகவலுமற்ற ஒரு தாள். விண்ணப்பம் என அவசரமாக அச்சடிக்கப்பட்டு ஈரம் காயுமுன்னே வினியோகப்பட்டது. ஏதோ ஒரு ரெகமண்டேஷன் பேரிலேயே கொடுக்கப்பட்டது. சீருடை, புத்தகம், நோட்டுப் புத்தகம் கட்டாயம் பள்ளியிலேயே என்ற கண்டிஷனுடன், கட்டணம் ரூ20000 எனப்பட்டு, ஒரு பள்ளி ஊழியரின் பரிந்துரையில் ரூ18,500 ஆக்கப்பட்டது. 

பரவாயில்லை எனத் தோன்றலாம். இதற்கு மட்டும்தான் ரசீது தரப்படுமாம். இது போக மாதம் 1500 கட்டப்பட வேண்டுமாம். அதற்கு ரசீது இல்லையாம். சம்மதம் கேட்டு கடிதம் வாங்கிய பின்னே அனுமதி கொடுக்கப்பட்டது.  அரசாங்கம் எல்லாப் பள்ளியிலும் அப்ளிகேசனை சரிபார்த்தாலே போதும். ஊழல் வெளிவந்துவிடும். எழுத்துமூலம் புகார் என்பது கூட்டுக்களவாணித்தனமே! சட்டத்தை அமல்படுத்துவதில் அக்கறையின்மையே!
-------------------------------------------------------------------------------------------------------------
முந்தைய இடுகையின் தொடர்ச்சியாக இரயில் பயணத்தில் முன்பதிவு குறித்த புகாரின் ஊழலின் இன்னொரு பரிமாணம் வெளிவந்திருக்கிறது. நண்பர்கள் சரவணக்குமார், காமராஜ் ஆகியோரின் கேள்விகளுக்கான விடை இது. காலை 5லிருந்து காத்திருந்து காலை 8 மணிக்கு கவுண்ட்டர் திறந்து 15 நிமிடத்தில் எல்லா இருக்கைகளும் நிரம்பிவிடும் மர்மம் பிடிபட்டிருக்கிறது. 

ப்ரோக்கர்கள், தங்கள் ஆள் ஒருவரின் உண்மையான தகவலுடன், அடையாள அட்டைச் சான்றுகளுடன் புனைவாக 5 நபர்களின் பெயர், வயது விபரங்களை IRCTC பதிவு விண்ணப்பத்தில் நிரப்பிக் காத்திருப்பார். 8 மணிக்கு பதிவு தொடங்கியவுடன் ஒரே அழுத்தில் 6 டிக்கட் பதிவாகிவிடும். இது போல் ஒன்றல்ல இரண்டல்ல பல நூறு பதிவுகள். 

அதே நேரம், கவுண்டரில் இரயில்வே ஊழியர் பொது ஜனத்தின் ஒரு அப்ளிகேஷனைச் சரிபார்த்து தகவலைப் பதிந்து டிக்கட் ப்ரிண்ட் செய்ய ஆகும் நேரம் 25 நொடிகள். (நிச்சயம் இது ஒரு நிமிடம் தாண்டிவிடும் என்பது திண்ணம்) . இந்த நேரத்தில் எத்தனை டிக்கட்டுகள் மேற்படி முறையில் சட்டப்படி ப்ரோக்கர்களாலும், கணினி மூலம் டிக்கட் வாங்கும் பொது ஜனங்களாலும் பதியப்பட முடியும் என்பதை உணரமுடியும்.

ஊழல் என்னவெனில், இப்படிப் பதிந்த டிக்கட்டுகளில் உண்மையான தகவல் உள்ள ஆசாமியும் பயணப்படுவார். அவரின் அடையாளம் மட்டுமே பதிவு செய்யப்படும். மற்றவர்களுக்கு பேரும் வயதும் சொல்லப்படும். அதிக வித்யாசமிருப்பின் அவர் எழுந்து கழிப்பறைக்குச் சென்றுவிடுவார். இத்தகைய பயணிகளிடம் இருமடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறதாம். 

இதற்குத் தீர்வுதான் என்ன? இரயில் நிலையங்களில் பதிவு தொடங்கி அரை மணி நேரம் கழித்து கணினிப்பதிவை அனுமதிக்கலாம் என்பது முன்வைக்கப்படுகிறது.  இது தீர்வாகாது. 

ஒன்று யார் பெயரில் டிக்கட் பதியப்படுகிறதோ மற்றவர்களின் அடையாளத்துக்கான அத்தாட்சியும் அவர் காட்டவேண்டும் என்பது கட்டாயமாக்கப் படவேண்டும். இல்லாத பட்சத்தில் அனைவரும் அடுத்த ஸ்டேஷனில் இறக்கி விடப்படவேண்டும். இதற்கு பொதுஜன எதிர்ப்பு எழத்தான் செய்யும். ஏமாற்றப் பட்டவர்கள் என அனுதாபம் தேட முயல்வார்கள். தளராமல் நடைமுறைப் படுத்தப்பட்டால் மட்டுமே நம் ஆட்கள் இதற்கு ஆதரவு தரமாட்டார்கள்.

IRCTC கணினி மூலம் பதிவதால், அளவுக் கதிகமாக யார் பேரில் டிக்கட் பதியப்படுகிறது என்பதைக் கண்டுபிடிப்பது சுலபம். இத்தகையோர் ப்ளாக் லிஸ்ட் செய்யப்பட்டு அவர்களின் டிக்கட்டுகள் மட்டுமாவது மற்றவரின் அடையாளங்களுடன் பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.  (நடராஜன் சார்! உங்க அடையாள அட்டை ஐடியாக்கும் வச்சிட்டானுங்க ஆப்பு)
_____________________________________________________________________________

அனைவருக்கும் தீர்வளிக்கும் முயற்சிக்கு உண்மைத் தமிழனுக்கும், ஆணித்தரமான நியாயமான கேள்விகளோடு பாதிக்கப்பட்டும் கண்டுகொள்ளாமல் விடப்பட்ட சம்பந்தப்படாதவர்களுக்காக குரலெழுப்பிய அது சரிக்கும் நன்றி. 

27 comments:

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

சாலட் புதுசா இருக்கே.. ??

இனி அடிக்கடி சாலட் பார்க்கலாம் போல.. :)

கல்வி கட்டணம் :(

ரயில் முன்பதிவு :((

பிரபாகர் said...

ஆஹா... நான் தான் முதலா!

சாலட்ரொம்ப சுவையாத்தான் இருக்கு. நறுக் மாதிரி இதிலும் கலக்குங்க!

பிரபாகர்...

பிரபாகர் said...

மட்டறுத்தலில் முதலென நினைத்து.... ஹி... ஹி... தோற்றது அன்பு செந்திலிடம்தானே! சாலட்... இதிலும் பாருங்கள் என் ஆசான் எடுத்திருக்கும் தலைப்பை! (கொத்து, காக்டெயில்...) என்ன ஒரு மென்மை, அவரது காதல் கவிதைகள் போல...

பிரபாகர்...

பின்னோக்கி said...

என் பையன் சமச்சீர் கல்வியில். வழக்கம் போல, வெப்பம் அதிகம் என சிறு குழந்தைகளுக்கு 1 வாரம் தாமதமாக துவங்கும் பள்ளி, இந்த முறை சரியான நாளில் தொடங்கியது. காரணம் ? சமச்சீர் கல்வி புத்தகங்கள் இன்னும் கிடைக்கவில்லை. இப்பொழுது பள்ளி தொடங்குவதை தள்ளி வைத்தால், புத்தகத்தின் தாமதம், வெளியே தெரியும் என்ற காரணம்.

மதுரை சரவணன் said...

சால்ட் உண்மையின் உறைக்கல். நன்றி வாழ்த்துக்கள்.

சிநேகிதன் அக்பர் said...

குழந்தைகளின் படிப்பை நினைத்தால் கலக்கமாக இருக்கிறது சார்.

கே. பி. ஜனா... said...

சாலட் சுவையாக இருக்கிறது...

Unknown said...

.சாலட்.. டேஸ்ட் வெரி குட்....

க ரா said...

சாலட் சால பாகவுந்தி சார்.

பழமைபேசி said...

நல்லா இருக்கு....

//சாலட் //

ஆனா, இதுதான் கொஞ்சம்....இஃகி!!

prince said...

சாலட் : தேவையான விட்டமின்களின் (தகவல்கள்) கலவை..

balavasakan said...

என்ன கொடுமை சார் இது...இந்த ஊழல் இல்லாத இடம்ன்னு இல்லியா...

காமராஜ் said...

சாலட் உடம்புக்கு நல்லது.
இது வியாதி நாட்டுக்கு கெடுதி பாலாண்ணா.
லஞ்சம் இயல்பானதாகிப்போனது. வாங்குகிறவன்
சமத்தனாம்.
கொடுக்கரவன்
கௌரவன்.

Hai said...

வெளிப்பட்டவை குறைவு.

தட்கால் பெயரில் வரிசையில் நின்று வாங்கும் பயனச்சீட்டுக்கு எந்த அடையாள அட்டையும் தேவையில்லை. இவற்றை குறைந்தபட்சம் முன்னூறு ரூபாய் முதல் அதிகம் வைத்து இரயில நிலையங்களின் முன்னாலேயே ஏஜண்டுகள் என்ற பெயரில் போர்டு மாட்டிக்கொண்டு விற்கிறார்கள். அவற்றிற்கு எவ்வித அடையாள அட்டையும் தேவையில்லை. குத்துமதிப்பகத்தான் வயது இருக்கும். அதற்காகவே இரவிலிருந்து காத்திருக்கிறார்கள் ஏஜண்டுகள்.

ஐஆர்சிடிசி ஐ எட்டு பதினைந்து வரை பிசியாக வைத்திருப்பதுவும் இந்த நபர்களே.

மிகச்சமீபத்தில் நண்பரொருவர் அவருடன் நானும் மற்ற நண்பர்களும் மூன்று நாட்களாக முயற்சி செய்து பின்னரும் அதிகாலை முதல் வரிசையில் காத்திருந்தே டிக்கட் பெற்றார்.

ஏன் நாற்பது சதம் வரை தட்கால் டிக்கட். பத்து முதல் பதினைந்து சதமே போதுமே.

நீங்கள் முன்னர் எழுதிய வெள்ளைக்காரன் விட்டுப்போன சட்டம் போல லாலு விட்டுப்போன மிச்சம் இவை. இவற்றை மாற்ற யாரும் தயாரில்லை.

இதன் பின்னர் பெரும் பணபரிவர்த்தனையே இருக்க வேண்டும் அதனாலேயே இப்படி என்றே எண்ணுகிறேன்.

Rangarajan said...

Sir, I am unable to add my daughter's name in my rationcard since last 4 years !(They ommitted her name mistakenly ,though I applied correctly 4 to 5 years back). She has birth certificate, school identity and what not! Railway reservation fraud in this country is not surprising.

நாடோடி said...

ப‌ள்ளிக‌ளின் க‌ல்வி க‌ட்ட‌ண‌ம் க‌வ‌லை அளிக்கிற‌து..

T.V.ராதாகிருஷ்ணன் said...

சுவை

கிரி said...

//RCTC கணினி மூலம் பதிவதால், அளவுக் கதிகமாக யார் பேரில் டிக்கட் பதியப்படுகிறது என்பதைக் கண்டுபிடிப்பது சுலபம். இத்தகையோர் ப்ளாக் லிஸ்ட் செய்யப்பட்டு அவர்களின் டிக்கட்டுகள் மட்டுமாவது மற்றவரின் அடையாளங்களுடன் பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்//

இதை பரிசீலிக்கலாம் சார்.

ஆரூரன் விசுவநாதன் said...

//எழுத்துமூலம் புகார் என்பது கூட்டுக்களவாணித்தனமே! சட்டத்தை அமல்படுத்துவதில் அக்கறையின்மையே//

அத விடுங்கண்ணே....இது வரை கல்வித்துறை, எந்த பள்ளிகளுக்கு எவ்வளவு கட்டணம் என்று எங்காவது தெளிவாக குறிப்பிட்டுள்ளார்களா?

அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகள் எல்லா பள்ளிகூடங்களும் கட்டணத்தொகையை நோட்டீஸ் போர்டில் போடனும் சொல்லியிருக்கே, எங்கயாவது போட்டிருக்கிறர்களா?


ம்ம்.. என்னத்தச் சொல்ல.......

சத்ரியன் said...

பாலா ,

நம்ம வயித்தெரிச்சல் பதிவுகள் எல்லாம், புரியவேண்டிய நபர்களைச் சென்றடையுமா?

வலைப்பதிவின் புண்ணியத்தில் விடிவு காலம் பொறக்குமா?

Suresh S R said...

நான் நெட் மூலம் train ticket reserve செய்பவன்.
நீங்கள் சொல்வது போல ஒரே தட்டில் புக் பண்ண முடியாது.
நாம் முன்னாடியே போரம் பூர்த்தி செய்து வைத்து இருந்து 8 மணிக்கு click பண்ணினால், "இன்னும் 8 மணி ஆகவில்லை" என்று error காண்பிக்கும்.
மிக சரியாக 8 மணிக்கு போரம் உள்ளே செல்ல Plan my Travel/Quick Book-ஐ click பண்ணினால் கடந்த ஒரு வருடமாக "Service Unavailable" என்ற error தான் காண்பிக்கிறது.
எனக்கு தெரிந்து நெட் மூலம் train ticket reserve செய்யும் யாரும் கடந்த ஒரு வருடமாக தட்கல் 8 மணிக்கு reserve செய்ய முடிந்தது இல்லை.
குறைந்தது 8:30 மணிக்கு மேல் தான் IRCTC மூலம் reserve செய்கிறோம்.

ஈரோடு கதிர் said...

வழக்கமா வங்கியில கட்டும் கட்டணத்தை இந்த முறை பள்ளியில் ஒரு நோட்டில் டிக் பண்ணிக்கொண்டு வாங்கி வருகிறார்கள்..

கொடுக்கிறவங்க இருக்கிற வரைக்கும் வாங்குறவங்களுக்கு என்ன நோகுது!!!

-----------

ரயில் டிக்கெட்... ஏதாவது செய்யனும் பாஸ் (இஃகிஃகி நம்மாள செய்ய முடியாததுக்கெல்லாம் இப்படித்தான் சமாளிக்கனும்ணே)

செ.சரவணக்குமார் said...

சாலட் சூப்பர். ரயில் டிக்கட் ஊழல் பகீர்ங்குது தலைவரே.

என்னைப் போன்றவர்களெல்லாம் ட்ரெய்ன்ல போறது ரொம்ப சிரமமாயிட்டதால, அடுத்த வாட்டி ஊருக்கு வரும்போது ஒரு டிக்கட் மட்டும் ரிசர்வ் பண்ணிக் கொடுத்துடுங்க.

('உண்மைய சொன்னது ஒரு குத்தமாடா' என்று நீங்கள் புலம்புவது கேட்கிறது)

Unknown said...

வணக்கம் பாலா சார்,
உங்க பாணியிலே, திடீர்னு ரயில்வே துறை ஒரு ஊழலற்ற துறையா மாறிடுச்சுனு வச்சிக்கிங்க, அப்ப அதன் செயல்பாடு, அதை நம்பி வாழும் மற்றவைர்களின் வாழ்கையை பற்றி ஒரு சுவை பட எழுத முடியுமா!
இத நான் கேட்டு நீங்க எழுதி, அதை உங்க துறை ஆளுங்க பார்த்துவிட்டு, எல்லோரையும் ஒரு வாங்கு வாங்கினா,
என்ன பண்ணுவோம். அதையும் யோசிச்சு வச்சுகிடனும்.
மறுபடியும் இதற்கு 'உங்கைய்யல' எங்காதிங்க. எங்க மாவட்டதுங்கரங்க இந்த வார்த்தையே கேட்டா ஒரு முறை முறைப்பாங்க .

vasu balaji said...

@@நன்றிங்க செந்தில்
@@நன்றி பிரபா
@@நன்றி பின்னோக்கி. இருக்கும்.
@@நன்றிங்க மதுரை சரவணன்
@@நன்றிங்க அக்பர்
@@நன்றிங்க ஜனா
@@நன்றிங்க செந்தில்

vasu balaji said...

@@மஞ்சிதண்டி கண்ணன்காரு:)
@@நன்றிங்க பழமை:))
@@நன்றி ப்ரின்ஸ்
@@நன்றி வாசு
@@சரியாச் சொன்னீங்க காமராஜ்.:(
@@பணப்பரிவர்த்தனை அந்தளவு இருக்க முடியாதுங்க. நம்மாளுங்க பண்ற ஃப்ராடு வேலை.:(
@@நன்றிங்க சீனா. ஆனா இதில அரசாங்க மெத்தனமில்லீங்க.
@@நன்றி நாடோடி
@@வாங்க டி.வி.ஆர். சார். நன்றி
@@நன்றி கிரி
@@நன்றி ஆரூரன்
@@நன்றி கண்ணா

vasu balaji said...

@@சுரேஷ் பத்திரைகைச் செய்தியின் அடிப்படை அது.
@@நன்றி கதிர்
@@நன்றி சரவணா
@@நன்றிங்க சேது:)).