Showing posts with label செய்தி. Show all posts
Showing posts with label செய்தி. Show all posts

Sunday, September 26, 2010

மத்தாப் பூ...


சாதனை:  

69 வயசு சா சா சூன் தென் கொரியாவைச் சேர்ந்த அம்மணி. இந்த வயசுல கார் ஓட்டணும்னு ஆசை வந்துடுச்சாம். 2005ல முதல் டெஸ்ட் எழுதுனாங்களாம். மூணு வருஷமா விடாம முயற்சி பண்ணி 959 தடவை எழுதி 960-வது தடவை பாஸ் பண்ணிட்டாங்களாம். லீவ் நாள் தவிர மத்த நாள் எல்லாம் எழுதியிருப்பாங்களோ? அத விட பரிட்சை எழுதின கையோட அடுத்த பரிட்சைக்கும் அப்ளை பண்ணிட்டு வீட்டுக்கு போவாய்ங்க போல. கொரியால ட்ரைவிங் லைசன்ஸ் எடுக்க பணம் கிடையாதா? எப்புடியோ! இதையும் ஒரு சாதனைன்னு ஒரு கார் கம்பேனிக்காரன் விளம்பரதுக்கு புடிச்சிட்டானாம். லைசன்ஸ் எடுக்க விட்ட காச விளம்பரத்துல புடிச்சிருவாய்ங்க.  

ஜம்பலக்கிடி பம்பா:  

இங்கிலாந்தில் க்ளஸ்டர்ஷேரில் இருக்கும் கே ரஸலுக்கு மைக்ரேன் இருந்துச்சாம். ஒரு நாள் ரொம்பத் தலைவலின்னு படுத்து எழுந்தாங்களாம். குரல் தெளிவில்லாம இருந்திச்சாம். கொஞ்ச நேரத்துல அது தெளிஞ்சதும் ஃப்ரென்ச் மொழியில பேசறாங்கன்னு தெரிஞ்சதாம். அந்தம்மணிக்கு முன்னாடி ஆங்கிலம் மட்டுமே தெரியுமாம்.  

வட போச்சே: 

திரும்பவும் உலகின் கோடீஸ்வரர்களில் முதல் இடத்தைப் பிடிச்சிட்டாராம் பில் கேட்ஸ். 2லட்சத்து 70ஆயிரம் கோடி ரூபாயாம். கொடுமை என்னன்னா அது அவரோட ரெண்டு பசங்களுக்கும் கொடுக்கறது நல்லதில்லைன்னு நினைக்கிறாராம். அது அவங்கள கெடுத்துடுமாம். சல்லிக் காசு பேறாது போல. ப்ச். பாவம். அந்த பசங்களுக்கு தமிழ் தெரிஞ்சாலாவது ‘வட போச்சே’ன்னு இடுகை போட்டு ஆத்திக்கலாம்.   

இந்த படை போதுமா:  

ரோம்ல ஒரு லிபியன் கலாச்சார மையத்துல அதிபர் கதாஃபி பேசுனாராம். அதுக்காக 500 பெண்கள் தலா ரூ 5000 கொடுத்து கூட்டிட்டு வந்தாங்களாம். பாரம்பரிய உடை உடுத்தி கூட்டிட்டு வந்தாங்களாம். கடாஃபி நெகிழ்ந்து போய் லிபியா நாட்டு பசங்கள கலியாணம் பண்றதுக்கு ஹெல்ப் பண்றேன்னு சொன்னாராம். மாட்ரிமோனியல் ஏஜன்ஸி சைட்ல ஓட்டுறாரோ? எங்கள பாத்து கதாஃபியே காப்பி அடிக்கறாண்டான்னு நம்ம அரசியல் வாதிங்க மார் தட்டிக்கலாம்.  

கொடுமை:  

அமெரிக்காவில ஒரு அம்மணி தொல்லையில்லாம சீரியல் பார்க்கறதுக்காக தன்னோட 2 வயசு பொண்ணுக்கு போதை சிகரட் புடிக்க கத்து கொடுத்திருந்திச்சாம். அதுக்கு ஊக்கம் வேற குடுத்து அத செல்ஃபோன்ல படம் வேற புடிச்சி வச்சிருக்கு. அத யாருக்கோ தப்பா அனுப்பி, அவிய்ங்க போலீசுல சொல்லி அம்மணி இப்ப ஜெயில்ல. நம்மூர்ல அந்த பிரச்சனையே இல்லை. சீரியலே போதையாத்தானே கெடக்கு.   

மின்சாரக் கண்ணா:  

ஏழு வயதில் அம்மா இறந்த துக்கம் தாளாமல் இந்த சேட்டன் ட்ரான்ஸ்ஃபார்மரில் ஏறி வயரைப் பிடித்து தற்கொலை செய்ய முயன்றாராம். ஒன்னும் ஆகலையாம். இந்த வீடியோவில் பாருங்கள். சேட்டன் லைட் என்ன, மிக்ஸி என்ன  என்னன்னு உடம்புல மின்சாரம் பாய்ச்சிகிட்டு ஓட விடுறாரு. பக்கு பக்குன்னு பார்த்துட்டிருந்தா பய புள்ள ஆம்லட் போடுறான். இதுல அலங்காரம் வேற.    



 (டிஸ்கி: சிறுவர் சிறுமியர் எதிரில் பார்க்கவோ காண்பிக்கவோ வேண்டாம்)
(நன்றி: தினத்தந்தி, யூ ட்யூப்)
~~~~~~~~~~~~~~

Monday, August 30, 2010

மத்தாப் பூ...

இரயில்வேத்துறையில் அப்ரெண்டிஸ் சர்வீஸ் என்ற ஒன்றிருப்பதை பலரும் அறிவார்கள். அது தொழிற்பயிற்சி மட்டுமே, வேலை உத்தரவாதமில்லை என்பதும் அறிந்ததே. ஆனால் Special Class Railway Apprentices என்ற ஒரு பயிற்சி குறித்து பரவலாக அறிந்திருக்கவில்லையோ எனத் தோன்றுகிறது.

இது பி.யூ.சி/+2 படித்தவர்களுக்கான அனுமதித் தேர்வு. நுழைவுத் தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்கள் ஜமால்பூரிலுள்ள இந்திய இரயில்வே இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெகானிகல் அண்ட் எலக்ட்ரிகல் எஞ்சினீரிங் எனும் பயிற்சிக் கல்லூரியில் நான்காண்டு கடும் பயிற்சிக்குப் பிறகு Indian Railway Service of Mechanical Engineer பிரிவில் Class I அதிகாரியாக இரயில்வேயில் பணியில் சேரலாம். இந்தப் பயிற்சித் திட்டமானது பிர்லா இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி, ராஞ்சியின் செமஸ்டர் திட்டப்படி நடக்கும். 

பயிற்சிக்காலத்தில் கிட்டத்தட்ட மாதம் ரூ 12,000க்கும் அதிகமான ஸ்டைபண்ட், மருத்துவ உதவி, பாஸ் மற்றும் பி.டி.ஓ என்ற சலுகையும் பெறலாம். இதற்கான நுழைவுத் தேர்வு குறித்த தகவல் இங்கே 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


புறாக்கூண்டு போன்ற ஓர் ஒண்டுக் குடித்தனத்திலிருந்து, ஒரு நடுத்தர வர்க்கத்தினருக்கு ரெண்டு பெட்ரூம் அபார்ட்மெண்ட் என்பது கனவுலகம். கடனை உடனை வாங்கி, நகை நட்டை விற்றோ அடமானம் வைத்தோ ஓர் அளவான ஃப்ளாட் வாங்கலாம் என்று போனால், தங்க முலாம் பூசிய குழாய் (வருவது கடலிலிருந்து நேரடியான உப்புத் தண்ணீர்), க்ளோஸ்ட் லாஃப்ட், இன்ன பிற லக்சுரி அயிட்டங்களைச் சேர்த்து சதுர அடி ரூ 3000-4000 என்று ப்ளானில் பெரிய பங்களா மாதிரி தோற்றம் தரும் ஃப்ளாட்டை வாங்கி, குடியேறிய பின், ஒரு பெட்ரூம் ஸ்டோர் ரூம் ஆக மாற, பழையபடி புறாக்கூண்டு போலவே நெருக்கடியாய் அமைந்து விடும்.

சிலவோடு சிலவென்று இன்னும் கொஞ்சம் கடன் வாங்கி ஃபர்னிச்சர் என்று போனால், அசல் தேக்கு என்று ஏமாற்றி விற்கும் மரச் சாமான்களும், உரிந்து வரும் சீன ஃபர்னீச்சர்களும் ஏமாற்றக் காத்திருக்கும். இருக்கும் இடத்தை எவ்வளவு அழகாக, நேர்த்தியாக பயன்படுத்தி வித விதமான ஃபர்னிச்சர்களை உருவாக்கியிருக்கிறார்கள். நம்ம ஊரில் மட்டும் ஏன் இப்படி யோசிப்பதில்லை. அவ்வ்வ்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நம்ம கவுண்டர் காந்தக் கண்ணழகி என்று அலப்பறை செய்யும் காட்சி கவனமிருக்கும்.லண்டனில் ஒரு அம்மணி நிஜமாகவே காந்தசக்தி கொண்ட உடல் வாகாம். சின்ன வயதிலிருந்து கடிகாரம் கூட ஓடாமல் கெட்டுப் போகுமாம். டி.வி., ம்யூசிக் ஸிஸ்டங்கள் கெட்டுப் போவது ஒரு புறம், கடை கண்ணிக்கு போனால், எடை போடும் எந்திரங்கள் ஆகியவை தாறுமாறாக அம்மணிக்கு எத்தனை சங்கடம். 45 நிமிடம் இந்த காந்த சக்தி இருக்குமாம். செம்பு, பித்தளை, இரும்பு எல்லாம் ஒட்டிக் கொள்ளுமாம். ஹூம். நமக்கு இந்த சக்தி இருந்தால் பஸ் உள்ளில் நெரிபடாமல் வெளியே பல்லி மாதிரி ஒட்டிக் கொண்டு போகலாம். 

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சினிமால ஹீரோவா வாரவங்க எல்லாம் நிஜத்தில அப்படி இருக்கணுமா என்ன? நாமளுந்தான் ப்ளாக் வெச்சிருக்கோம். எப்புடியெல்லாமோ பின்னூட்டம் வருது. வடிவேலு மாதிரி வந்தல்ல, அடிச்சியா போய்க்கேயிருன்னு நம்ம வேலைய பார்க்கிறோம்ல. இந்த அமிதாப்பு பதிவுல எவனோ டாஆஆர்ச்சர் பண்றான்னு சின்னப்புள்ளத்தனமா போலீசுக்கு போயிருக்காரு. ஹெ ஹேஹே..என்னதான்னாலும் நம்ம டமில் ப்ளாகர் மாதிரி வருமா..வீஈஈரய்ங்க நாம..
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பேச்சே பாட்டுப் போலிருக்கும் மலையாள மொழியில் நான் ரசித்த நாடன் பாடல் எனும் நாட்டுப்புறப் பாடல். உழைத்துப் பிழைக்கும் ஓர் ஏழைப் பெண்ணைத் திருமணம் செய்ய ஒருவன் வருவான் என ஆறுதலாக தோழியர் பாடி, காதில் கழுத்தில் கையில் காலில் நகையில்லாவிடினும், அழகில்லாவிடினும், உன் அழகான மனதை நாடி வருவான் என்று பாட, திருமணம் செய்ய வருபவனுக்கு காசு, பணம்தான் முக்கியம் என அந்தப் பெண் பாட மனதை ஏதோ செய்யும் பாடல். ஆடும் பெண்களின் உற்சாகம், பாடும் குரலின் அழகு..
அறிமுகப்படுத்திய மஹேசுக்கும் பகிர்ந்த ப்ரியாவுக்கும் நன்றி
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நன்றி..
கடந்த வார நட்சத்திரப் பதிவராக வாய்ப்பளித்த தமிழ்மணம் குழுவினருக்கும், பாராட்டி ஊக்குவித்த சக பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் மனமார்ந்த நன்றி.
__/\__

Tuesday, August 24, 2010

நறுக்னு நாலு வார்த்த V.5.1

புலிகள்- தமிழக அரசியல்வாதிகள் தொடர்பு: குமரன் பத்மநாதன் விளக்கமளிக்க வேண்டும்: கருணாநிதி

ம்கும். அவரு அரிச்சந்திரரு. அப்புடியே உண்மை உண்மையா வாந்தி எடுக்குறாரு. லிஸ்டக் குடுத்தா அப்புடியே சொல்லப்போறாரு. 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இலங்கை போர் நிறுத்த ஒப்பந்தம் மாயம்?

அது கையெழுத்து போட்ட அன்னைக்கே காணோம்னு கரடியாக் கத்தினாலும் அதுதான் எல்லாத்துக்கும் தீர்வுன்னு கத்துனது ச்ச்சும்ம்வா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இலங்கை: இந்துக்கோயிலில் திருவிழா நடத்த தடை

ஏன்? சாமியையும் வலையத்துக்குள்ள வச்சிட்டானுவளா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இலங்கைச் செல்லும் தூதுக்குழுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் இடம் பெறவில்லை: கலைஞர்.

அதாஞ்சரி. தேர்தல் நேரத்துல யார நம்புறது. ஏன்? இதுக்கு ஒரு கடுதாசு போடலாமே?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
திருப்பதியில் மேலும் ஒரு சிறுத்தைப்புலி சிக்கியது

இதெல்லாம் புடிங்கடா! திருட்டுப் பூனைங்கதான் சிக்காது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
விமானி இல்லாமல் குண்டு வீசும் விமானம்

ரொம்ப வசதிடா! கோளாறாயி குண்டப் போட்டுடிச்சி. குருவி சுட அனுப்புனா குழந்தைங்கள போட்டு தள்ளிறுச்சின்னு சொல்லிக்கலாம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
என் வெற்றிக்கு பின்னால் எனது மனைவி இருக்கிறார்: மு.க.ஸ்டாலின்

தோல்வியான அரசியல்வாதி ஊட்டுங்கள்ள தகராருதான். பத்த வெச்சிட்டியே பரட்ட...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
விளை நிலங்களை கையகப்படுத்தக் கூடாது. ராமதாஸ்

யாருங்கைய்யா விளைக்கிறாங்க. அதான் வளைக்கிறாய்ங்களே.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தமிழர் இறையாண்மை மாநாடு: திருமா

இறைவன் இருக்குறானோ இல்லையோ. தமிழனுக்கு இறையாண்மை இல்லைன்னு தெரிஞ்சப்புறமும் மாநாடு வேறயா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
போதை பொருள் விவகாரம்: என் பெயரை பயன்படுத்தினால் வழக்கு தொடருவேன்: திரிஷா

அடப்பாவிகளா! சுருட்டு, பீடி, பனியன் விளம்பரம் மாதிரி இதுக்கும் பயன்படுத்துறாங்களா.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஊழலைப் பற்றி பேச விஜயகாந்த்துக்கு தகுதி இல்லை: கலைஞர்

அதான தல! ஒரு வாட்டி கூட ஆட்சில இல்லாம ஊழலப்பத்தி பேச இவரு யாரு?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கிரீன்பீல்டு விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதில் உள்நோக்கம்: கலைஞர் குற்றச்சாட்டு

ஆமாங்க தலைவரே! பச்சை அவங்க ராசி கலராச்சே. ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம்ல. யெல்லோஃபீல்டுன்னு மாத்திடுங்க தலைவா.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஈ.வி.கே.எஸ்.க்கு காங். மேலிடம் கண்டிப்பு

சொல்லவேண்டியதெல்லாம் சொன்னப்புறம் இது கண்டிப்பா? கண் துடைப்பு.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
செஸ் ஆனந்திடம் இந்திய குடியுரிமை இல்லை!

அப்ப சாம்பியன்னு நாம அலட்டிக்க முடியாதா? அவ்வ்வ்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

பார்க்காத பயிர் மட்டுமல்ல பிள்ளைகளும்..

ஞாயிறு தினத்தந்தியில் ஒரு செய்தி. சென்னையின் ஒரு பிரபல பள்ளிக்கூடத்தில் 100 சதம் தேர்ச்சி பெற முடியவில்லை என்பதற்காக, கற்பிக்கும் முறையிலும், மாணவர்களை ஆர்வம் கொள்ளச் செய்வதிலும் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தியும், அவர்கள் எதிர்பார்த்த அளவு மாற்றம் ஏற்படவில்லையாம். இதன் காரணம் என்ன எனக் கண்டறிய விரும்பிய நிர்வாகம் 40 கேள்விகள் அடங்கிய ஒரு சர்வே எடுத்ததாம். அதில் 10 கேள்விகள் அப்பா, அம்மா, வீடு, வீட்டுச் சூழல் குறித்ததாம். ஆசிரியர்கள் கூட படிக்க அனுமதி கிடையாது அதனால் உள்ளதை உள்ளபடியே எழுதவேண்டும். பதில் வீட்டுக்கும் தெரியப் படுத்தப்பட மாட்டாது என்ற உத்தரவாதத்தின் பேரில் கிட்டத்தட்ட நான்காயிரம் மாணவ மாணவிகள் அளித்த பதிலைத் தொகுத்த நிர்வாகம் ஆடிப்போய்விட்டதாம். 

மாணவர்கள் கூறியவற்றுள் முக்கியமானவை
  • தந்தை குடித்துவிட்டு வந்து தாயை அடிப்பது எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற கவலையை உண்டாக்குவதால் படிப்பில் நாட்டம் குறைவது
  • படிக்கும் நேரத்தில் தாய்மார்கள் அக்கம் பக்கத்து பெண்களை அழைத்து வந்து வீட்டில் அரட்டையடிப்பது (அதிக எண்ணிக்கை மாணவர்களின் குறை)
  • எவ்வளவு முக்கியமான பரிட்சை என்றாலும் சத்தமாக சீரியல் பார்ப்பது
  • தாயார் முதலில் தூங்கப் போய் தாமதமாக எழுவது.

இதை அடிப்படையாகக் கொண்டு நிர்வாகம் கூறியதாக செய்தி கூறுவது

“முன்பெல்லாம் தங்கள் பிள்ளைகள் நன்றாகப் படிக்க வேண்டும் என்பதற்காக தங்களது தனிப்பட்ட தேவைகளையும், ஆசைகளையும் பெற்றோர் குறிப்பிட்ட காலத்துக்கு ஒதுக்கி வைப்பார்கள், அல்லது தியாகம் செய்வார்கள்.” இப்போது அப்படியல்ல. தாங்கள் வாழும் காலம் வரை தாங்கள் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்பதையும் குழந்தைகளுக்காக விட்டுக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கருதுகிறார்கள். மொத்தத்தில் பெற்றோர்களிடம் சுயநலம் அதிகரித்துவிட்டதைத்தான் இந்த சர்வே காட்டுகிறதாம். 

இது முழுதும் பெற்றோரைக் குற்றம் சொல்லும் செயலேயன்றி வேறெதுவுமில்லை. இதே போல் பெற்றோரும் தனித்தனியாக கண்டிப்பாக இதே சர்வேக்கு பதில் சொல்லவேண்டும் என்று பதிலைப் பெற்று ஒப்பு நோக்கி ஒரு தேர்ந்த மனநல மருத்துவரின் உதவியுடன் காரணிகளைக் கண்டு பிடித்திருந்தால் பெருமளவு பயனுள்ளதாக இருந்திருக்கும்.

பிள்ளைகள் தங்கள் நாளின் பெரும்பகுதியை படிப்பு என்ற சூழலில் செலவிடும் இடம் பள்ளி. மேற்கூறிய காரணங்கள் இருப்பினும், கவனச்சிதறல் என்பது கண்டுகொள்ளக் கூடிய ஒன்று. அத்தகைய மாணவர்களை தனிப்பட்ட கவனம் செலுத்தி, அல்லது அவர்களோடு உரையாடி காரணம் அறிந்து பெற்றோர்கள் காரணமெனின் அவர்களுக்கு அறிவுறுத்துவதும் பள்ளியின் கடமை அல்லவா?

மற்ற மாணவர்களுடன் இருக்கையில் அவர்கள் உலகம் தனியல்லவா? கவலைகள் மறையாவிடினும் மறந்து, படிப்பில் கவனம் செலுத்தும் இடமாயிற்றே. அப்படியிருந்தும் தேர்ச்சி அடைய முடியாமல் என்ன தடை? அவர்களின் ஆர்வமின்மை குறித்து பள்ளி நிர்வாகம் ஏன் சொல்லவில்லை. எத்தனை பெரிய பள்ளியானாலும் மெடிக்கல் செக்கப் என்ற பெயரில் கட்டணம் வசூலித்தும் ஒரு பல் டாக்டர், அல்லது பொது மருத்துவரின் பரிந்துரை தருகிறதே தவிர, பிள்ளைகளின் மனநலனுக்கு ஒரு மன நல மருத்துவரை அழைத்திருக்கிறதா என்றால், எனக்குத் தெரிந்த வரை இல்லை.

அவர்களையும் முழுதாய்க் குற்றம் சொல்ல முடியாது. அப்படி ஒரு வேளை அம்முயற்சியில் ஈடுபட்டாலும், என் பிள்ளை பைத்தியமா? எப்படி மனநோய் மருத்துவரிடம் காட்டலாம் என்று சண்டைக்கு வரும் பெற்றோர்கள் அதிகம். 

“Kinder Garten" என்பதை அப்படியேவோ அல்லது “Children's Garden" என்று மொழிமாற்றம் செய்தோ போடாமல் “Kinder Garden" என்று போடும் கான்மெண்ட் இஸ்கூலில் சேர்ப்பது நம் கவுரவமல்லவா? அடுத்தவரை கைகாட்டி குற்றம் சொல்வதை விட, நாம் பிள்ளைகளிடம் பேசுவதும், தொலைக்காட்சியைப் பார்த்தே தீரவேண்டும் என்ற அவா இருக்குமானால் பிள்ளைகளிடம் அவர்களுக்கு தொந்தரவில்லையா என்று கேட்ட பிறகு பார்ப்பதும், தூங்கப் போகுமுன் ஏதாவது வேண்டுமா என்று கேட்டுவிட்டு தூங்கப் போவதும் வேறெதுவுமில்லாவிடினும் தங்கள் மீதான அன்பின் வெளிப்பாடு என்று பிள்ளைகளுக்கு புரிய வைக்கும். அதனால் ஒரு சிறு முன்னேற்றமிருப்பினும் நல்லதுதானே.
~~~~~

Friday, August 20, 2010

நறுக்னு நாலு வார்த்த V.5.0

பிரபாகரனைப் பாதுகாக்க எடுத்த முயற்சிகளுக்கு நெடியவன் ஒத்துழைப்பு வழங்கவில்ல: குமரன் பத்மநாதன்

குடுத்த காசுக்கு மேல கூவுறாண்டாங்கொய்யாலே! இத அப்பவே கூவியிருக்கலாம்ல. தமிழனோட விஸ்வாசம் இருக்கே! அடடடா த்த்த்த்தூஊஊ 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கே.பி.யை கைது செய்வதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன: கெஹலிய


அந்தாளு சொல்றதெல்லாம் வச்சிப் பார்த்தா செட்டப்பு மாதிரித்தான்யா தெரியுது. 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பொன்சேகாவிற்கு எதிரான தீர்ப்பு தொடர்பில் சர்வதேச மனித உரிமை ஆணையகத்தில் முறைப்பாடு செய்யப்படும்: ஐ.தே.க


ங்கொய்யால இந்தாளு யூனிஃபார்ம்ல இருந்தப்ப இந்த ஆணையகம் சொன்னதுக்கு என்னா மதிப்பிருந்திச்சி. இப்ப மட்டும் மனித உரிமையோ?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சிரேஸ்ட இராணுவ அதிகாரிகள் நல்லிணக்க ஆணைக்குழுவில் சாட்சியமளிக்க உள்ளனர்

அது சரி. சொன்னத சொல்லிட்டு போறதுக்கு சலம்பலெதுக்கு.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வேறுபாடுகளிருந்தாலும் ஐ.நா.வுடன் இணைந்து பணியாற்றுவதற்கு தயார்: பஷில் ராஜபக்ஷ

நேற்று இல்லாத மாற்றம் என்னது? காசு என்னல்லாமோ பண்ணுது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
முதலாவது யுத்த நீதிமன்றின் தீர்ப்புக்களை ஏற்றுக்கொள்ள முடியாது! இலங்கையில் எனக்கு நீதி கிடைக்காது!: சரத் பொன்சேகா

உனக்கே கிடைக்காதுன்னா தமிழனுக்கு எங்க கிடைக்கும். எதுக்கும் ராஜீவ்-ஜெயவர்த்தன உடன்படிக்கையில இதுக்கு தீர்வு இருக்கும். நல்லா தேடு பாரு ராசா.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ராஜீவ் காந்தி படுகொலையை எப்படி மன்னிக்க முடியும்? கார்த்தி சிதம்பரம்
  
அதெப்டி மறக்கறது. இதச் சொல்லியேதானே கொள்ளுப்பேரன் வரைக்கும் ஓட்டு பதவி எல்லாம் வாங்கியாவணும். ராகுல் மன்னித்தாலும் நான் மன்னிக்கமாட்டேன்னு சொல்லியிருக்கணும் கண்ணு.
  ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இந்தியாவில் முதலீட்டை குறைக்க மாட்டோம்: அமெரிக்கா

முன்னாடியே கோர்ட்ல குத்துமதிப்பா ஃபைன் கட்டிடுங்கப்பா. சும்மா முப்பது வருஷம் கேஸ் இழுத்து  கோடிக்கணக்குல செலவு பண்ணி தம்பிடி ஃபைன் போடுவாய்ங்க. 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
விமானத்தை கடத்தினால் மரண தண்டனை

மந்திரிங்க சொந்தகாரங்க யாரும் அந்த விமானத்தில் இல்லாவிடில்...... 
 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
எம்பிக்கள் சம்பளம் அதிகரிப்பு: அமைச்சரவை ஒப்புதல்

கொள்ளு வேணாங்கிற குதிரை உண்டா? மந்திரிப் பதவி போனா என்ன பண்றது?
 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இந்தியா அளித்த நிதியை பாகிஸ்தான் ஏற்றது 

அய்ங்! அப்ப ஆயுதமா குடுத்தாதான் வாங்குவேன்னு அடம் புடிச்சானோ?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மருத்துவ படிப்புக்கு அகில இந்திய நுழைவுத் தேர்வு முடிவை கைவிட வேண்டும்: ராமதாஸ் 

நம்ம மருத்துவக் கல்லூரி வருதாங்ணா? டீல் ஓக்கேவா?
 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தமிழகத்தில் உணவுப் பூங்கா: மத்திய அரசு ஒப்புதல்

சூரியனில்லாமல் உணவு ஏது?  Food Giantனு பேரு வச்சிடலாம். ரைமிங்கா வரும்.
 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தமிழகத்தில் மது அருந்தாதவர்களே இல்லை என்ற நிலை உருவாகும்: அன்புமணி கவலை

அப்பத்தானே குடியரசுங்கற வார்த்தைக்கு மருவாதி. ஏன் எதிர்க்கிறாரு?
 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
திராவிட கொள்கைகளை பாதுகாக்க வேண்டும்: கலைஞர்


தலைவரே! திராவிடக் கொள்கைகள் யாதுன்னு ஒரு பரிட்சை வைங்களேன். வீரமணி கூட ஃபெயில்தான். ஆமா! காங்கிரஸ் திராவிட கட்சியா தல!
 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
(இது 150வது நறுக். )

Thursday, August 19, 2010

நறுக்னு நாலு வார்த்த V 4.9

அரசின் தகவல்களைப் பெற்றுக் கொள்ளும் உளவாளியாக கருணாவைப் பயன்படுத்த புலிகள் முயற்சித்தனர்

அடங்கப்பா! அகில மகா புளுகுடா சாமி. போயும் போயும் இவரு குடுக்குற தகவலை நம்புற அளவுக்கா இருந்தாங்க? கேக்கறவன்......போங்கடா...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
புலிகளுக்கு வாகனங்களை விற்பனை செய்த நபர்கள் கைது

ஒன்னுத்தையும் முழுசா செய்யமாட்டிங்களாடா? அப்புடியே காத்தடிச்சவன், மெக்கானிக்கு எல்லாரையும் புடிக்க வேண்டியதுதானே.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பிரபாகரன் ஆயுதம் ஏந்தக் காரணம் தெற்கின் அரசியல் பக்குவமின்மையே! மங்கள முனசிங்க சாட்சியம்

அது சரிடா சாமி!. உங்கூர்ல பக்குவம்னா போட்டு தள்றதுதானே.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சந்தேகமே போர் நிறுத்த உடன்படிக்கையின் தோல்விக்கு காரணம்: முன்னாள் பாதுகாப்பு செயலாளர்

பசிச்சவந்தான் பழங்கணக்கு பார்ப்பான்னு சொலவடை. போட்டுதள்ளிட்டு உக்காந்து பழசுக்கு காரணம் கண்டு பிடிக்கிறானுவ பரதேசிங்க.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கிளி.மாவட்ட மீளக்குடியமர்ந்த மக்களுக்கு ரூபா 5000 நிதி உதவி: சிறிதரன் பா.உ. வழங்கி வைத்தார்

இத வச்சு ரெண்டு நாளைக்கு கஞ்சி குடிக்க காணுமா? அடிச்ச கோடி அத்தனையில சிந்தின அளவு கூட இருக்காதேடா பாவிங்களே! இதனாச்சும் குடுத்தீங்களா? போட்டோ புடிச்சப்புறம் புடுங்கிட்டீங்களா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நான் குற்றம் செய்யவில்லை; எனக்கு சனி மாற்றம் ஏற்பட்டுள்ளது : மேவின் சில்வா

சனி மாற்றமா ஏமாற்றமா? ராஜபிச்சை மாதிரி ஒரு நடை திருநள்ளாறு வந்துட்டு போயிருக்கலாம்ல? ஹய்யோ ஹய்யோ.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு: முக்கிய முடிவு எடுக்கப்படும்: இலங்கை மீனவர்கள் குழு

முக்காமலே எடுத்தாலும் கெடாச போறதுக்கு எதுக்குடா சீனு? ஒரே முடிவுதான் தமிழனுக்கு.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பாக். ராணுவம் துப்பாக்கிச் சூடு: இந்தியா பதிலடி

சரியா குடுங்கப்பா. சிங்களத்தான்னு நினைச்சானுவளோ கண்டுக்காம விடுறதுக்கு.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கள்ள மார்க்கெட்டில் திருப்பதி தரிசன டிக்கெட்: நாயுடு

ங்கொய்யால டிக்கட்டே விக்காம விட்டு பாரு. அவனவன் பார்த்துட்டு போய்ட்டே இருப்பான். தடுத்து தடுத்து, மந்திரி, மசுராண்டிக்கெல்லாம் தரிசனம் காட்டுறேன்னு காக்க வச்சிட்டு பேசுறானுவ.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஈகை குணம் கொண்டவர்களை வரலாறு புகழும்: ஜெ

அப்புறம் ஏங்க கலர்டிவி, கேஸ் ஸ்டவ்வு, ஓட்டுக்கு காசெல்லாம் குடுத்தா திட்றீங்க.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
திமுக அரசை வீழ்த்துவோம்: மதிமுக தீர்மானம்

ஒரு அரச மரத்துல திமுகன்னு எழுதி கூட உங்களால வீழ்த்த முடியாது. மருத்துவர் ஐயா சண்டைக்கு வருவாரு. அது எங்க உரிமைன்னு.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மதுரையில் நவீன நிழற்குடை: மு.க.அழகிரி

கொடைக்குள்ள டிவி வச்சி டிவிடி காட்டுவீங்ளாண்ணா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மக்கள்தொகை கணக்கெடுப்பில் இல்லத்தரசிகளாக இருக்கும் பெண்கள் வேலை செய்யாதவர்கள்.

என்னேரமும் சீரியல் பாக்காதீங்கன்னா கேக்குதுங்களா? சென்ஸஸ் எடுக்க வரும்போதாவது நிறுத்தி இருக்கலாம்ல. இப்ப பாருங்க. 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Wednesday, August 18, 2010

நறுக்குன்னு நாலு வார்த்த V 4.8

மனிதாபிமான படை நடவடிக்கையின் போது 6000 படையினர் கொல்லப் பட்டனர். 30,000 படையினர் காயமடைந்தனர்: கோத்தபாய

அடங்கொன்னியா! ஒன்னுக்கு பத்துன்னு கணக்கு வெச்சாக் கூட நீ போட்டுத்தள்ளுனது ஒரே நாள்ள எத்தனை. அந்த கணக்கச் சொல்ல மாட்டானே.
-------------------------------------------------------------------------------------------------------
இலங்கை விவகாரம்: கருணாநிதியை சந்திக்கிறார் நிருபமா ராவ்.

சரி சரி! அங்க எல்லாருக்கும் மறுவாழ்வு வழங்கப்படும். மீனவர் பிரச்சனை குறித்து உறுதி மொழி வாங்கியாச்சு.  மேடம் யேப்பி. தலீவர் யேப்பி. ஊதுங்கப்பா பீப்பீ!
-------------------------------------------------------------------------------------------------------
ஜீஎஸ்பி வரிச்சலுகையை இழப்பதற்கு ரணில், மங்கள மற்றும் புலி ஆதரவாளர்களுமே காரணம்: டலஸ்

இவங்களால இவ்வளவு பண்ணமுடியுது. உங்க அத்தனை பேரு, உங்க அல்லக்கைங்களால இதத் தடுக்க முடியலைன்னா, இவங்க கிட்ட குடுத்துட்டு வாத்து மேய்க்க போலாமே வெண்ணைகளா!
-------------------------------------------------------------------------------------------------------
பிரபாகரன், மாத்தையாவை கொன்றதை விடவும் பொன்சேகாவுக்கு இழைக்கப்படும் அநீதி கொடுமை: ரணில்

யா யா! புண்சேகா மசிரு கொட்டிப் போறத விடவா தமிழன் உசுரு போறது பெருசு?
-------------------------------------------------------------------------------------------------------
நல்லிணக்க ஆணைக்குழு முன் பாதுகாப்பு செயலாளர் சாட்சியம்: செய்தி

என்ன கைய புடிச்சி இளுத்தியா மாதிரி எது கேட்டாலும், இஃப் யூ கொஸ்சன் ட குட் காஸ் யூ ஹாவ் ப்லட் இன் யுவ்ர் ஹாண்ட்ஸ்னு வெறிபுடிச்சா மாதிரி கத்தி  இருப்பான்.
-------------------------------------------------------------------------------------------------------
சரத் பொன்சேகாவை ஜெனரல் என அழைக்கக் கூடாது : இராணுவப் பேச்சாளர்

பின்ன? அவரு பெசலில்லையா?
-------------------------------------------------------------------------------------------------------
இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை: இலங்கை மீனவர் சொல்கிறார்

அய்ங்! அப்ப மீன் புடிக்கப் போய் கடல்ல கனவு கண்டுட்டு சொல்றாய்ங்களா? முதல்ல இவரு மீனவரா அரசியல் அல்லக்கையா செக் பண்ணுங்கப்பா செக் பண்ணுங்கப்பா.
-------------------------------------------------------------------------------------------------------
எம்.பிக்களுக்கு சம்பள உயர்வு.

நியாயாம்தானே! நாள பின்ன வருமானத்துக்கு அதிகமான சொத்துன்னு வந்தா கணக்கு காட்ட வேணாமா?
-------------------------------------------------------------------------------------------------------
111 விமானங்கள் வாங்க ஏர் இந்தியா முடிவு

அய்ய! ஏற்கனவே கோவிந்தா! ஒன்னு கூட குறைய வாங்குங்கப்பா. இந்த நம்பர் சரியில்லை.
 -------------------------------------------------------------------------------------------------------
திரைப்படத்தொழிலில் இறங்கும் முகேஷ் அம்பானி

ஏம்பா? வம்பா நீ?. எங்க ஒரு தமிழ் படம் எடு பார்க்கலாம்.
-------------------------------------------------------------------------------------------------------
புதிய விமான நிலையத்துக்கு குறுக்கே நிற்பது நியாயமா? கலைஞர்

தில்லிருந்தா விமானத்துக்கு குறுக்கே நிற்கட்டும். அதென்னா சின்னப்புள்ளத்தனமா விமான நிலையத்துக்கு குறுக்க நிக்கிறது.
-------------------------------------------------------------------------------------------------------
ஊதிய உயர்வு போதாது: டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழு

போதை கூடத்தான் போதலைன்னு கத்துறாங்க. நீங்க கலக்காமலா விடுறீங்க?
-------------------------------------------------------------------------------------------------------
டாஸ்மார்க் ஊழியர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

ஆமா! டாஸ்மார்க் ஊழியருக்கு ஆதரவா பேசினா ஏழைகளுக்கு எதிரில்லையோ?
-------------------------------------------------------------------------------------------------------
அன்புமணி வாய் திறந்தது உண்டா? கலைஞர்

அவரு டாக்டருங்கையா! மத்தவங்களை வாய் திறக்கச் சொல்லிதான் பழக்கம்.
-------------------------------------------------------------------------------------------------------
சமூக நீதியைப்பற்றி பேச யார் தகுதி படைத்தவர்கள்: ராமதாசுக்கு கலைஞர் கேள்வி

சன் அண்ட் சன்ஸ்தான். நீங்க ஏன்யா கேள்வி கேட்டுகிட்டு. ஒரு பய இல்லைன்னு சொல்லட்டும்.
-------------------------------------------------------------------------------------------------------
புதிய தமிழகம் கட்சியினர் கோஷ்டி மோதல்

இதுல கோஷ்டி சேர்க்குற அளவுக்கா இருக்காய்ங்க?
-------------------------------------------------------------------------------------------------------
கோவையில் மாபெரும் கூட்டத்தை கூட்ட வேண்டும்: காங்கிரசாருக்கு தங்கபாலு வேண்டுகோள்.

ஒரு 25000 பேரு வந்தா போறாது? அதுக்கு மேலல்லாம் எதிர்பார்த்தா நெம்ப ஓவருல்ல?
-------------------------------------------------------------------------------------------------------
அசின் படத்தை வாங்க சக்தி சிதம்பரம் முடிவு

பேரு குடுக்குற சக்திதான்.
-------------------------------------------------------------------------------------------------------
ஈழத்தமிழர்கள் நிலை: கண்கலங்கிய ரஜினி

ப்ச்! தலைவரே கலங்கிட்டாரு. இனிமே விடிஞ்சிடும்.
-------------------------------------------------------------------------------------------------------

Friday, August 13, 2010

இட ஒதுக்கீடு விழலுக்கிறைத்த நீரா?

பொறுப்பி:

1.இந்த இடுகையிலிருக்கும் தகவல்கள் மேம்போக்காக எழுதப்பட்டவை அல்ல. என் முப்பத்து ஐந்து வருட சர்வீஸில் முப்பது வருடங்கள் இட ஒதுக்கீடு சம்பந்தமான விதிமுறைகளுடன் கழிந்துள்ளதன் அடிப்படையில் எழுதியது.

2.ஒரு புறம் இதன் பயனை அடைவோர்களின் மேலான என் பெருங்கோபத்தைச் சரிவர புரியவைக்க இயலுமா என்ற பயமிருந்த போதிலும் வேறெந்த வழியிலும் இந்த உண்மை தெரியவரப் போவதில்லை என்பதே எழுதியாக வேண்டும் என்ற உந்துதலைத் தருகிறது.

3. எடுத்தோம் எழுதினோம் என்று எழுதியதில்லை இது. திரு காமராஜ் இடுகையில் அனேகமாக மூன்று மாதங்களுக்கு முன் இட்ட பின்னூட்டத்தின் தொடர்ச்சி இது.

4.தகவலில் சந்தேகமிருப்பின் தகவல் பெறும் சட்டத்தின் கீழ் எந்த அரசு அலுவலகத்திலும் இதில் சொல்லப்படும் தகவலை உறுதி செய்துக் கொள்ள இயலும்.
______

சாதிவாரிக் கணப்பெடுப்புக்கு கோரிக்கை வைத்திருக்கும் நேரமிது. அதன் பின்னான அரசியல் குறித்த விடயம் நமக்கு அக்கறையில்லை. இப்போதிருக்கும் சட்டத்தின் படி இட ஒதுக்கீடு என்பது முற்று முழுதாக அரசு அலுவலகங்களில் கடைப்பிடிக்கப்படும் ஒன்று. 

இதனைப் பெற எத்தனைப் போராட்டங்கள்? எத்தனை உயிர்த் தியாகங்கள்? அப்படிப் போராடிப் பெற்ற ஒரு சலுகை எதற்காகக் கொடுக்கப்பட்டதோ அந்தக் குறிக்கோளை அடைந்திருக்கிறதா? இல்லையெனில் காரணம் யார்?

இது குறித்தான அலசலுக்கு முன் இரண்டு நாட்களுக்கு முன்பான செய்தி இது. ஒரு முறை படித்துக் கொள்ளுங்கள்.

New Delhi, Aug 11 (IANS) A total of 54,637 posts for Scheduled Caste, Scheduled Tribe and Other Backward Classes are vacant in central government ministries and departments.

Minister of State in the Prime Minister's Office Prithviraj Chavan told parliament Wednesday that the number of vacancies in the three categories were 26,565, 25,649 and 21,143 respectively.

Of these, 12,045, 2,799 and 3,876 posts had been filled, Chavan said in the Lok Sabha in reply to a question from P.L. Punia.

The minister said a special recruitment drive was launched Nov 19, 2008 to fill up the backlog of reserved vacancies

படித்தவுடன் மனதில் எழும் கேள்வி, இத்தனை காலியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதற்குக் காரணமென்ன? அரசா என்பது.

ஸ்பெஷல் ரெக்ரூட்மெண்ட் ட்ரைவ் எனும் சொல் இது அரசின் தவறல்ல. வழக்கம்போல் நடைபெற்ற தேர்வுகளில் நிரப்பப்படாமல் சேர்ந்து போன இடங்கள் என்பதாலேயே, மீண்டும் இவர்களுக்கு மட்டுமே ஒரு சிறப்புத் தேர்வு நடத்த அரசு நடவடிக்கை எடுத்திருப்பதைச் சுட்டுகிறது.

அப்படியெனில், நாட்டில் வேலையின்மை என்பதே இல்லையா? அரசுத் துறையை புறந்தள்ளி தனியார்த் துறையில் சலுகைகளும் சம்பளமும் அதிகமாகவா இருக்கிறது? பின்னெப்படி இத்தனை காலியிடங்கள் சேர்ந்திருக்க முடியும் என்ற கேள்வி எழும்புகிறதா இல்லையா?

மாநில வாரியாகப் பார்த்தோமானால், கேரளாவில் ஒரு இடம் கூட இப்படி காலியிருக்காது. தமிழகத்தில் மிக அதிகமாயிருக்கும் என்பது என் கணிப்பு. இதற்கு முன்பே ஒரு இடுகையில் கூறியிருந்தபடி ரயில்வே ரெக்ரூட்மெண்ட் ட்ரைவ் நடத்தும் இத்தகைய ஸ்பெஷல் ட்ரைவ்களில் பங்கேற்போர் பெரும்பாலும் பீகார் மாநிலத்திலிருந்தும் இதர வட மானிலங்களிலிருந்து வந்தவர்களுமே. அப்படியும் பங்கேற்போர் சதவீதம் வெகு குறைவே.

இது பனிப்பாறையின் ஒரு விளிம்பே. ஆரம்பக்கட்ட வேலை வாய்ப்பில் நிரப்பப் படாத காலியிடங்களின் எண்ணிக்கை மட்டுமென்றே கொள்ளவேண்டி யிருக்கிறது.

இதையும் தாண்டி இச் சலுகையின் பின்னான முக்கியத்தை உணராமல் அரசு இயந்திரத்தை முடக்கிப் போடுபவர்கள் யார்? தன்னலம் என்று கூட சொல்லமாட்டேன் தன்சுகம் கருதி, தன்னையொத்தவன் வயிற்றில் மண்ணள்ளிப் போடுவது யார்? இட ஒதுக்கீட்டின் பயன் அனுபவிப்பவர்களே என்பது அதிர்ச்சியளிக்கக் கூடும்.

அரசுப் பணியானது வர்ணாஸ்ரமத்தைப் போன்றே நான்கு. க்ரூப் ‘A’, ‘B', 'c', மற்றும் ‘D' எனப்படும் கடை நிலை ஊழியர்கள். இதில் க்ரூப் 'A' என்பது ஐ.ஏ.எஸ் போன்ற நேரடி வேலை வாய்ப்பு. அதிலும் பின் தங்கல் இருக்கிறதென்றாலும் அது குறித்த விவாதமில்லை இது. B,C, மற்றும் D குறித்தான நிலைப்பாடு இது. 

க்ருப் ‘D' மற்றும் க்ருப் ‘c' பிரிவுகளில் பணி உயர்வுக்கு வாய்ப்பாக பல்வேறு நிலைகளில் பதவிகள் இருக்கும். ஒவ்வொரு பதவியிலும் மொத்த எண்ணிக்கையில் 15 சதம் தாழ்த்தப் பட்டவர்களுக்கும் 7.5 சதவீதம் மலைச் சாதியினருக்குமான ஒதுக்கீடாகும்.

பதவி உயர்வு பெரும்பாலும் மூப்பு மற்றும் தகுதி என்ற அடிப்படையிலும், பல பதவிகளுக்கு தேர்வு மற்றும் தகுதி அடிப்படையிலும் அமைந்துள்ளது. இந்தத் தேர்விலும் பொதுஜன பாதுகாப்பு தவிர இதரப் பதவிகளுக்கு குறைந்த மதிப்பெண்கள் போதுமானது. 

ஆனால் உண்மையில் நடப்பதென்ன? மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு கிடைக்கும் வரை இவர்களுக்குப் பிரச்சனையில்லை. தேர்வு என்ற கட்டம் வரும்போது பெரும்பாலோர் பங்கேற்க முன்வருவதில்லை. காரணம் பொறுப்பை ஏற்கத் தயக்கமும், எதற்கு தேவையற்ற ரிஸ்க் என்ற மனோபாவமும் என்பது அனுபவத்தில் கண்ட உண்மை.

சரி இதனால் என்ன பாதிப்பு? அது அவர்கள் உரிமையல்லவா என்று கேட்கலாம். நிச்சயமாக அவர்கள் உரிமைதான். ஆனால் அவர்கள் உரிமைக்கு பலிகடா ஆவது யார் தெரியுமா? அவர்களேதான். காரணம், அவர்கள் தேர்வுக்கு தயாரில்லை எனும் பட்சத்தில் அவர்களுக்கு மேலான பதவிகளுக்கான காலியிடம் அப்படியே இருக்கும். வேறு எந்த விதமாகவும் அதை நிரப்ப முடியாது.

அதே போல் இவர்களுக்கு கீழ் பதவியில் இருப்பவர்களின் பதவி உயர்வையும் இவர்கள் தடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இது ஒரு சங்கிலித் தொடர் பாதிப்பாகும். இதற்குக் காரணமென்ன? சலுகையளிக்கிறோம் என்ற பெயரில் அரசும் ஒரு வகையில் காரணம்.

ஒரு பதவியில் குறித்த காலம் பணியாற்றி அனுபவம் பெறு முன்னரே அதற்கும் உயரிய பதவியில் காலியிடமிருக்கிறது என்ற காரணத்துக்காக, மடமடவென பதவி உயர்வளித்து ஒரு நிர்வாகப் பொறுப்புக்கு உரித்தாna பதவியில் அவர்களை அமர்த்துகையில் அப்பணி குறித்தான அனுபவ அறிவோ, தகவலறிவுக்கோ வழியின்மை அவர்களை தன்னம்பிக்கை அற்றவர்களாக்குகிறது. 

இப்படித் தேங்கிப் போன பதவி உயர்வுகளுக்கான காலியிடங்களை நிரப்பவே முடியாது என்ற நிலையில், அடிப்படைப் பதவியிலும் சேர ஆட்களே இல்லாமல் பதவிகள் தேங்கியும் கிடக்கிறதென்றால் தவறு எங்கே?

பெரும்பாலான நிர்வாகப் பதவிகள், காலியிடங்களாகவே இருக்கும் பட்சத்தில் அரசு நிர்வாகம் எப்படி சீராக நடக்கும். அரசுக்கு இதனால் நஷ்டமா என்ன? துண்டு போட்டு வைத்திருக்கிறது, குந்த ஆட்கள் இல்லையெனச் சொல்லிவிட்டு சும்மாயிருக்கும். 

இஞ்சினியரிங் மற்றும் மருத்துவக் கல்லூரி, பட்டப்படிப்புகளிலும் இட ஒதுக்கீடு இருக்கிறது அல்லவா. அவற்றிலும் காலியிடங்கள் இருந்தாலும் அது மிகக் குறைவே. அப்படிப் படித்து தேறி வருபவர்கள் அரசுத் தேர்வு எழுத மறுப்பது ஏன்? இரயில்வே போன்ற தொழில் நுட்பம் சார்ந்த துறைகளில் ஏன் இஞ்சினியர்கள் பங்கெடுப்பதில்லை. 

எஞ்சினியரிங் படித்துவிட்டு பேங்க் கிளார்க் வேலைக்கு தேர்வாகி அட்டெஸ்டேஷன் என்று வருபவர்களிடம் ஏன் இப்படி என்றால் வரும் பதில் என்ன தெரியுமா? ஏதோ ஒரு வேலை வேணும்சார். இதுன்னா ரிஸ்க் இல்லையாம். ஒரு பட்டப் படிப்பு படித்து இந்த வேலைக்கு காத்திருப்பவன் வாயில் மண்ணள்ளிப் போடுவதில்லையா இது? 

இன்று DNB டாக்டர்கள் இல்லையெனில் பல அரசு மருத்துவ மனைகளில் நோயாளிகளைக் கவனிக்க டாக்டர்கள் இருக்க மாட்டார்கள். காண்ட்ராக்ட் மருத்துவர்களாக வரத்தயாராய் இருப்பவர்கள் ஏன் UPSC பரீட்சை எழுதி அரசு டாக்டராக வர மறுக்கிறார்கள்?

இப்போது சொல்லுங்கள். இட ஒதுக்கீடு விழலுக்கிறைத்த நீரா இல்லையா?
~~~~~

Wednesday, June 30, 2010

ப்ரோட்டோகால்

இந்த மாதம் 26ம் தேதி நம்ம சிதம்பரம் ஐயாவும் மாலிக் ஐயாவும் இஸ்லாமாபாத் நகரில் சந்திச்சாங்களாம். அப்ப இந்தியக் கொடி தலைகீழா இருந்திச்சாம். சிதம்பரம் ஐயா என்ன இருந்தாலும் ஐ.பி. தலைவரில்லையா. டக்குன்னு கண்டுபிடிச்சி மாலிக் கிட்ட ‘என்ன்னாதிது’ன்னாராம். அவரு ‘ஹி ஹி..ச்ச்சாஆஆரி’ன்னு சரி செய்தாராம். இதெல்லாம் ஒரு மேட்டர்னு இடுகை தேத்துறியான்னு கேக்கறீங்களா! நாயந்தான். சிதம்பரம் ஐயாவே அப்புடித்தான் சொல்லி இருக்காரு. 

“I think its a minor mistake and I don’t think we should make much of it.’’

தமிழ் பேப்பரில் திரு சிதம்பரம், கொடி தலைகீழா இருந்ததை ஃபோட்டோ பிடித்தவர்கள் சரி செய்த பிறகும் படம் எடுக்க வேண்டாமா என்று கேட்டிருக்கிறார். நாயந்தானே!

இந்த கொடிகாத்த குமரன்னு ஒருத்தர சொல்லுவாய்ங்களே அவரு காங்கிரஸ்காரருங்ளாண்ணா? 

சரி சரி! நமக்கெதுக்கு வீண் விவகாரம். அவரே சின்ன்ன விஷயம் இதுன்னு சொன்னப்புறம் நாம ஊதி பெருசாக்குறது சரியில்லை. இப்ப மேட்டரு என்னன்னா படிச்சதும் படக்குன்னு தோணுனது,  அத கண்டு பிடிச்சி அவருகிட்ட நொணாவட்டம் சொல்லி அவருதான் மாத்தணுமா? என் தேசக் கொடி இப்புடி சிரசாசனம் பண்ணப் போச்சான்னு பதறிப் போய் இவரு மாத்தியிருக்க வேணாமாங்கிறது.

இந்த ப்ரோட்டோகால்னு வேற எங்க இருக்கோ இல்லையோ, அரசியல்லையும் அதிகார வர்க்கத்திலையும் இதில்லாம முடியாது. புரோட்டாகாலுன்னாவது சொல்லத் தெரிஞ்சிருக்கணும். இந்த ப்ரோட்டோகால் என்கிற நெறிமுறை காரணமாத்தான் நம்ம ஐயா, அவர மாத்த வச்சிருக்கணும்னு தோணுது. 

இந்த ப்ரோட்டோகால் படுத்தற பாடு இருக்கே. சிப்பு சிப்பாவும் வரும். துப்பலாம் போலவும் வரும். சாம்பிளுக்கு கொஞ்சம்:

  • காலையில அதிகாரி வரும்போது அவரு டவாலி அதான் ப்யூன் போர்ட்டிகோவில் காத்திருக்கணும். ஒரு வணக்கம் சொல்லி, கதவைத் திறந்துவிட்டு, அவரு பொட்டி, சாப்பாடு எல்லாம் எடுத்துகிட்டு அவருக்கு முன்ன ஓடி, அறைக் கதவைத் திறந்து பிடிக்கணும். திரும்ப சாயந்திரம் கிளம்பும் போதும் இதே கூத்து. ஒரு அதிகாரி சொன்னாராம் அவர் ப்யூனிடம்.தம்பி காலைல ஒரு முறை சாயந்திரம் ஒரு முறைன்னு இல்லை. நான் போக வர நீ வணக்கம் சொல்லணும்னு. 
  • போகுறப்ப கார்க்கதவ சாத்திட்டு, கிளம்பற வரைக்கும் பக்கத்துல நிக்கப் படாது. எதிர் பக்கமா சல்யூட் அடிச்சிட்டு நிக்கணும். அதிகாரி உடனே தலையாட்ட மாட்டாரு. கொஞ்ச நேரம் நிக்க வச்சிட்டு அப்புறம் சரிம்பாரு.
  • வெளியூர்ல இருந்து ஒரு அதிகாரியோ, மந்திரியோ வராருன்னா விமான நிலையத்துல போய் காத்திருந்து வரவேற்று, திரும்ப ஏத்தி விடுறது முறை. உள்ளூர் ஆளுங்களுக்கு என்ன? அதிகாரிக்கு 6 மணிக்கு விமானம்னா கீழதிகாரிங்க மூணுக்கும் நாலுக்கும் அலாரம் வச்சி, எங்க தூங்கிறுவமோன்னு ராவெல்லாம் விழிச்சி எழுந்து ஓடணும்.
  • இதுங்க உதவியாளருங்க பாடு இருக்கே பெரும்பாடு. இங்க இருக்கிற அதிகாரி சீனியரா இருப்பாரு. ஏதோ ஒரு காரணத்துல இவருக்கு அதிகாரி ஜுனியரா இருப்பாரு. இவரு உதவியாளரிடம் அவருக்கு கனக்‌ஷன் போடும்பாரு. உதவியாளர் ஃபோன் போட்டா அந்த அதிகாரியோட உதவியாளர், நீ உங்காள கூப்புடு எங்காளுதான் அதிகாரிம்பாரு. இங்க இருக்கிறவன், யோவ் எங்காளுதான் சீனியரும்பான். இதுல என்னாங்கறீங்களா? முதல்ல எடுக்கிறவரு மத்தவருக்காக காத்திருந்தா ப்ரோட்டோகால் என்னாவறது?
  • நம்ம நண்பர் ஒருத்தர் இருக்காரு. ப்ரோட்டோகால்ல கரை தேர்ந்தவரு. அவர் கைமறதியா பெல்லடிச்சிடுவாரு. ப்யூன் வந்து என்னாங்கன்னு நிப்பாரு. எதாவது காரணமா கூப்பிட்டிருந்தாதானே? சாரி சொல்லிட முடியுமா? ஒரு துண்டு பேப்பரை கிழிச்சி சுருட்டி, குப்பைக் கூடை பக்கத்துல எரிஞ்சிட்டு, அதை எடுத்து கூடையில போடுன்னு சொல்லிட்டு வேலையப் பார்ப்பாரு. 
  • இன்னொருத்தருக்கு ஒரு கிலோமீட்டரில் வீடு. மதியம் சாப்பிட வீட்டுக்குப் போவார். காலையில் வந்து இறங்கியதும் அவருடைய ப்யூன் இவரோட ப்ரீஃப் கேசை எடுத்துக்கிட்டு வரணும். திரும்ப சாயந்திரம் எடுத்துட்டு போகணும். உள்ள ஹிந்து பேப்பரும், ஆஃபீஸ் சாவியும் இருக்கும். இதச் சுமக்க முடியாதாங்கறீங்களா? ப்ரோட்டோகால் என்னாவறது?
வெளிய வந்து அவன் திட்டுறதிட்டு எந்த ப்ரோட்டோகால்லையும் அடங்காது. ச்ச்சேரி. இதுக்கே உங்களுக்கெல்லாம் பொரட்டிகிட்டு வரும். இதுக்கு மேலையும் சொல்லுறது ப்ரோட்டோகாலில்லை. வர்ட்ட்டா!... 

(டிஸ்கி: இதைப் படிச்சிட்டு அடப்பாவி மனுஷா! ஏடிஎம்ல பணம் எடுக்குறதில இருந்து எல்லாத்துக்கும் ஒரு ஆளைத்தேடுற ஒரு ப்யூனாதிக்கவாதி என்னமா எழுதுறான்னு இந்த ப்ரியா பொண்ணு நக்கலடிக்கும். அது ப்ரோடோகாலில்லை. அன்பு. அம்புட்டுதான். )


Thursday, June 17, 2010

என்னத்தச் சொல்லி....

என்னதான் பத்திரிகைச் செய்தியை நம்புறதில்லைன்னு ஒரு தீர்மானத்துல இருந்தாலும்கூட காது குத்தி ஈர்க்குச்சி சொருகினா பரவாயில்லை. கடப்பாரையே சொருகுவேன்னு சொருகுறப்ப புடிச்சி சாத்தலாமான்னு வருதாயில்லையா?

ராமநாதபுரத்தில் ஒரு தனியார் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படிக்கும் 15வயது சிறுமிக்கு பள்ளியில் பிரசவம் நடந்ததாம். பெண்ணின் தந்தை வெளிநாட்டில் வேலை செய்கிறாராம். கடந்த வெள்ளியன்று பள்ளியில் அடிக்கடி கழிப்பறைக்கு சென்று வந்த இவர், அதிகமான உதிரப் போக்கு இருந்ததாகக் கூறினாராம். ஆசிரியைகள், மாற்று உடைக்கு வழி செய்தார்களாம்(?). அப்படியும் ரத்தப் போக்கு நிற்காததால், பெண்ணின் தாயை அழைத்து அனுப்பி வைத்தார்களாம்.

சற்று நேரத்தில் குழந்தை அழும் சத்தம் கேட்டு கழிப்பறைக்குச் சென்ற மாணவிகள்,அங்கு ஒரு பிறந்த குழந்தை இருப்பதாகச் சொன்னார்களாம். அப்போதுதான் ஆசிரியர்களுக்கு ரத்தப் போக்கு என்று கூறிய பெண்ணின் மீது சந்தேகம் வந்ததாம். அவளையும் அவள் தாயையும் அழைத்து விசாரித்த போது, திருவிழாவில் ஏற்பட்ட உறவின் மூலம் கருவுற்றதாகவும், வகுப்பு நடக்கையில், பிரசவம் நடந்ததாகவும், அங்கு கிடந்த கண்ணாடித் துண்டால் தொப்புள் கொடியை அறுத்து குழந்தையைப் போட்டுவிட்டு வகுப்புக்கு வந்ததாகவும் கூறினாராம். அவர்கள் விருப்பப் படி பெண்ணின் எதிர்காலம் கருதி, மாற்றுச் சீட்டு கொடுத்து அனுப்பி விட்டார்களாம்.

1. அந்த மாணவியின் தாய்க்கு தெரியாமலா இருக்கும் பெண் கர்ப்பமானது?
2. ஆசிரியைகளுக்குமா தெரியாது ஒரு நிறைமாத கர்ப்பமான மாணவியை?
3.நல்ல பிராயத்திலேயே பிரசவம் என்பது எத்தனை சுலபமானதாக இருந்தாலும் வலியற்று இருந்திருக்குமா என்ன? 15 வயது மாணவி, தானாக யார் உதவியும் இன்றி கழிப்பறைக்கு பலமுறை சென்று வந்து, பிரசவம் தானே பார்த்துக் கொண்டு, திரும்பவும் வகுப்பறைக்கு வரமுடியுமா என்ன?
4.தானே பிரசவம் பார்த்துக் கொள்ள ஒரு 15 வயது பெண்ணுக்கு தெரியுமா என்ன? அந்த அளவு தெளிவிருப்பவர், கருவுறுதல் குறித்தும், அபார்ஷன் குறித்தும் அறியாமலா இருப்பார்.
5.அதெப்படி குழந்தை பிறந்ததும் அழாமல், ஆசிரியர்கள் மாற்றுத் துணியெல்லாம் கொடுத்து, அதன் பிறகும் ரத்தப்போக்கு நிற்காமல், அவர் தாயை அழைத்து அனுப்பிய பிறகு அழும்?
6.குழந்தையின் உடலில் காயங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
7.தாளாளர் வக்கீலாம். அவரு சொன்ன கதை இது. இவரை நம்பி கேசு கொடுக்கிறவன் கதிய நெனைச்சா அவ்வ்வ்வ்வ்:((

போய்யா கதை விடாதே என்பவர்கள் சுட்டிப் படிச்சுக்குங்கப்பா.












~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மாவோயிஸ்டுகளுக்கு எதிரான அதிரடி வேட்டைக்குச் சென்ற இராணுவத்தினரிடம் போராடி ஒரு பெண் தீவிரவாதி உயிர் இழந்தாராம். ஒரு என்கவுண்டருக்குப் போகும் இராணுவத்தினருடன் ஒரு ஆம்புலன்ஸ் கூடவா போகாது? அல்லது ஒரு ஸ்ட்ரெச்சர் கூடவா இருக்காது? அடிபட்ட பெண்ணை இறந்த மாடு, பன்றி ஆகியவற்றைப் போல் தூக்கிச் செல்லும் அவலம் இது. இறக்கும் வரை தீவிரவாதியோ, சமூக விரோதியோ என்னவானாலும், இறந்த ஒரு மனுஷியை இப்படியா தூக்கிச் செல்வார்கள்?


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அட நம்ம ஊருல என்னன்னாலும் நடக்கும்னு தட்டி விட்டுக்கிட்டு வேலயைப் பார்க்கலாம்தான். இந்த இங்கிலாந்துக்கு என்னா கேடு? எலிசபத் ராணியம்மா நடக்கறதே நாராயணான்னு இருக்கிறப்ப, காரை எடுத்துகிட்டு படு வேகமா பாதுகாப்பு பெல்ட் போடாம ஓட்டுச்சாம்.

ராணின்னா எப்படி வேணுமானாலும் ஓட்டலாமான்னா, கோர்ட்டே அவங்களுதாம். அவங்கள புடிச்சா, அவங்களே அவங்களுக்கு தண்டன குடுத்தா மாதிரி ஆயிடுமாம். அதனால ஒன்னும் பண்ணலயாம்.

ஹூம் இது தெரியாம, தேர்ச் சக்கரத்துல கன்னுகுட்டி மாட்டி செத்துப் போச்சுன்னு மம்மி மாடு பெல் அடிச்சா, தன் மகனுக்கு தண்டன குடுத்தாராம்ல டமிலர் மன்னர். 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஆமா! ஆங்கிலப் பாட டிவிடில பிட்டுப்படம் இருந்துச்சின்னு பரபரப்பா நியூஸ் வந்து, மதுரையிலதான் லேபில் மாத்தி ஒட்டிட்டாய்ங்கன்னு கப்புன்னு அடங்கிப் போச்சே ஏன்? அல்லோவ்! நீங்க பாட்டுக்கு மதுரை, டிவிடி, பிட்டுபடம், கப்புன்னு எதையோ ஊகிச்சிகிட்டு ஆட்டோவ அனுப்பிச்சிராதீய்ங்கப்பு.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


Wednesday, April 7, 2010

பச்சை நிறமே! பச்சை நிறமே!

முதன் முதலாக பெரம்பூர் மேம்பாலத்தை கட்டி முடித்திருப்பதன் மூலம் சாதனை நிகழ்த்திய சென்னை மாநகராட்சி இன்னொரு வறவேற்கத்தக்க நடவடிக்கை எடுத்திருக்கிறது.

இன்றைய தேதியில் சென்னை மற்றும் வளர்ந்து வரும் புறநகர்ப் பகுதிகளில் மிக அத்தியாவசியமான நடவடிக்கை இது. விரைவில் இதர நகராட்சிகளும் பின்பற்றவேண்டிய முன் உதாரணமாக இது அமைய வேண்டும். மாநகராட்சிக் கமிஷனர் நடத்திக்காட்டுவார் என்ற நம்பிக்கையிருக்கிறது.

ஆம்! சென்னையில் இனிமேல் மரங்களை வெட்டுவது தடை செய்யப் பட்டிருக்கிறது. தவிர்க்க முடியாத பட்சத்தில் வெட்டவேண்டுமாயின், முன் அனுமதி பெறவேண்டும். அப்போதும் கூட 25 மரக் கன்றுகளை நட்டாக வேண்டும். ஆண்டுக்கு 10000 மரங்களை நட ஏற்பாடும் செய்யப்பட்டு வருகிறது.

இது குறித்த முழு செய்தி இங்கே:



வரவேற்கப் படவேண்டிய இத்திட்டத்தில் மக்களாக பங்கேற்க ஊக்குவிப்பதும், குறைந்தபட்சம் இந்த விஷயத்திலாவது ரெகம்மண்டேஷன், லஞ்சத்துக்கு வழி வகுக்காமலும் பார்த்துக் கொண்டாக வேண்டும். எத்தனை காசிருந்தாலும், நல்ல காற்றும் தண்ணீரும் வாங்கி மாளாது. ஆயின் மாநகராட்சி மட்டுமே இதில் பங்கு கொள்வது சாத்தியமில்லை. மக்களும், அதனுடன் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமமும் பங்குபற்றியாக வேண்டிய ஓர் நடவடிக்கையாகும் இது.

  • இனிமேல் வரைபடத்துக்கு ஒப்புதலுக்கு வரும்போது சுற்றுப்புறம் விட வேண்டிய அடிப்படை காலி மனைகளில் குறிப்பிட்ட அளவு வெறும் மண் இருக்குமாறு அமைந்திடல் வேண்டும்.
  • மழைநீர் சேகரிப்புக்கு வழி செய்திருப்பதுடன் இந்த மண்ணில் வீடுகளின் அமைப்புக்கேற்ப மரங்கள் நட்டிருக்க வேண்டும்.
  • பெரிய தொகுப்பு வீடுகள், அடுக்குமாடி வீடுகள் அமைக்கப் படும்போது அதிக அளவில் மரங்களுக்கு வழி செய்திருக்க வேண்டும்.
  • குடியிருப்பு சங்கங்களைப் பதியும் போது குறைந்த பட்ச மரங்கள் அதன் பராமரிப்பு குறித்த விதிகள் வகுக்கப் பட்டிருக்க வேண்டும்.
  • தனி வீடுகளில் மரவளர்ப்பும், பராமரிப்பும் கட்டாயம் எனச் சட்டம் கொண்டு வரப்படவேண்டும்.
  • மாநகராட்சியில் இது குறித்த ஆலோசனை மற்றும் உதவிக்கு ஒரு தனி அலுவலகம் செயல் படுதல் வேண்டும்.
  • இலவச டிவி கொடுப்பதை விட இப்படி மரம் வளர்ப்பவர்களுக்கு வீட்டு வரி, தண்ணீர் வரியில் குறிப்பிட்ட சதவீதம் தள்ளுபடி கொடுப்பது கட்டாயம் பலனளிக்கும்.
  • இப்போது இருக்கும் கட்டிடங்கள், பொது அமைப்புகள், கலியாண மண்டபங்களில், கான்கிரீட்டால் மூடப்பட்ட பகுதிகளை ஓரங்களில் நீக்கி, மரக்கன்று நடுவதும், மழைநீர் சேகரிக்கவும், கார்ப்பரேஷனே மேற் கொள்ளவேண்டும். இதற்கான நோட்டீஸ் கொடுத்தபின் இதற்கான செலவை குறிப்பிட்ட காலத்தில் செலுத்தத் தவறினால் மேல் முறையீடின்றி ஜப்தி செய்ய ஏதுவாக சட்டம் கொண்டு வரப்பட்டேயாக வேண்டும்.
  • அழகுக்காக கல்பனை, கல்வாழை, கத்தாழை போல் நிலத்தடி நீர் உறிஞ்சும் மரங்களை தடை செய்ய வேண்டும். அல்லது அதற்குச் சரியான விகிதத்தில் தூங்குமூஞ்சி, வேம்பு, அசோக மரங்கள் நடப்பட வேண்டும்.
  • மாநகராட்சி வார்டுகளில் வார்டு வாரியாக சிறப்பாக செயல் படுத்தும் கவுன்சிலர்களுக்கு அரசின் பாராட்டும் அந்த வார்டுக்கு சான்றிதழ் வழங்குதல், தொடர்ந்து சிறப்பாக செயல்படும் வார்டுகளுக்கு மாநகராட்சியின் சிறப்பு உதவி போன்றவை செயல்படுத்தப் படவேண்டும்.
  • இதற்கான நடவடிக்கையோ நாட்டமோ இல்லாத கவுன்சிலர்கள் கட்சி வேறுபாடின்றி பதவி நீக்கம் செய்யப்படவேண்டும்.
  • சட்டசபை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் நிதியில் குறைந்தபட்ச பிடித்தம் செய்யப்பட்டு, மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டு, அந்த தொகுதியில் மரவளர்ப்புக்கு இந்த நிதி செலவிடப்படுதல் வேண்டும்.
  • சாலையோரங்களில் மரம் வளர்த்துப் பாதுகாக்க முன்வரும் பெரிய நிறுவனங்களுக்கு நடைபாதை விளம்பரம் அழகாக அமைத்துக் கொள்ள அனுமதியளிக்க வேண்டும்.

எந்த எதிர்ப்புக்கும் ஈடு கொடுத்து கமிஷனர் அவர்களும் துணை முதல்வர் ஸ்டாலின் அவர்களும் இதை முன்னெடுத்துச் செல்வார்கள் என்ற நம்பிக்கையிருக்கிறது. செய்தாக வேண்டும்.

Friday, April 2, 2010

ரெட் ரிப்பன் ரயில்

ஒரு பத்திரிகைன்னா குறைஞ்ச பட்சம் மலச்சிக்கல் இருக்கிறவங்க கழிப்பறைக்கு கொண்டு போய் படிக்கவாவது உதவணும். காலையில பத்திரிகைய படிச்சா வாந்தி வருது.

சம்பளமோ, போனசோ எதுனாலும் திநகர்ல கொண்டு கொட்டினாதான் நமக்கு விடியும். ரோட்டோரம் மரங்களும் அங்கனதான் இருக்கு. மரத்து கீழதான் ஹேர்கிளிப், ஸ்டிக்கர் பொட்டு கடைகளும் இருக்கு. நான் நிறைய பார்த்து நொந்து போயிருக்கேன். வயசு புள்ளைங்க மரத்திலிருக்கும் ஒரு விளம்பரத்தை கண்ணு விரியப் பார்த்து திகைத்து நிற்பதை.

மரத்துக்கு மரம் ஒரு பிரபல மருத்துவமனையின் விளம்பரம்.  “அரை மணி நேரத்தில் வலியின்றி கருக்கலைப்புச் செய்யப்படும். ஒரு நெருங்கிய உறவினருடன் வரவும்.” இன்னும் ஐம்பது வருடமானாலும் நாம் இப்படித்தான் இருப்போம் போலும்.

எங்கம்மா 16 வயசுலதான் வேண்டாத தெய்வத்த வேண்டி பெரிய மனுசியாச்சி. நாம்பதினஞ்சு. எம்பொண்ணும் என்னய மாதிரிதான்னு இருந்துட்டு அது 12 வயசுல பள்ளியில் வயதுக்கு வந்து பயந்து அழுது வந்தாலும் உறைக்காது நம்மவர்க்கு. தெரிஞ்சிக்க வேண்டியதை சொல்லிக் கொடுக்கக் கூச்சம் என்பதா? சொல்லத் தெரியாது என்பதா?

ஏன் பொங்குறன்னு கேக்கறீங்களா? பல லட்சம் ப்ரதிகள் விற்பனையாகும் ஒரு எழவெடுத்த தினசரி செய்யும் சமூக சேவையை பாருங்கள்.


பல கோடி ரூபாய் செலவில், அரசுத்துறை எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்ச்சிக்கு ரெட் ரிப்பன் ரெயில் என்ற ஒரு இரயில் மூலம் தேர்ந்த மருத்துவ நிபுணர்கள் உதவியுடன் விளக்கத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறது. அதில் காட்டப்படும் படங்கள் மாணவ மாணவிகளைக் கெடுத்து விடுமாம். கருத்தடைச் சாதனம் பற்றிக் கேட்டு மாணவிகள் வெட்கப்பட்டு ஓடி விட்டார்களாம்.

ஒரு அதி மேதாவி சொன்னதாம். எய்ட்ஸ் குறித்து, உடல் உறுப்பு குறித்து யாருக்கு சந்தேகம் இருக்கிறதோ அவர்களுக்குதான் விழிப்புணர்வு தேவை. அது குறித்து ஒன்றும் அறியாத மாணவ மாணவிகளுக்கு இது தேவையில்லையாம்.

ஆமாம். இது குறித்தெல்லாம் தெரிந்துவிட்டால் சாமியார் சல்லாப வியாபாரம் நடக்காதே. விழிப்புணர்வு வந்துவிடுமே.

சரி! ஒரு வேளை தான் எழுதுவதிலாவது ஒரு நேர்மையான நம்பிக்கையுடன் தொழில் தர்மம், கொள்கை, கலாச்சாரக் காவலன் முத்திரையாவது இருக்கிறதா என்றால் காசுக்கு இவன் செய்யும் சேவை இது


ரயிலாவது இவன் சொல்கிறார்போல் தேடிப் போய் கெட்டுப் போகும் வழி. இவன் பத்திரிகையை வாங்கி வீட்டில் வைத்தாலே பிள்ளைகள் கெட்டுப் போகுமே.

அரசு கண்டிப்பாக இத்தகைய பத்திரிகைகள் மேல் தயங்காமல் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

பெற்றோர்களாக நம் பிள்ளைகளை இதற்கு ஊக்குவிப்பது நம் கடமை. சென்னை செண்ட்ரலில் 11ம் ப்ளாட்பாரத்தில் இந்த ரயில் இருக்கிறது.

Monday, February 1, 2010

நறுக்குன்னு நாலு வார்த்த V 4.4

இலங்கை தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு: கருணாநிதி-மேனன் ஆலோசனை

ஓ. அப்போ இறையாண்மை?
______________________________________________________________________________________
பிரபாகரனின் இறப்பு சான்றிதழை இலங்கை இதுவரை கையளிக்கவில்லை: இந்திய புலனாய்வு பிரிவு

பாவம். யார் தகவலறியும் சட்டத்தில் இதைச் சொன்னாங்களோ இருக்கு ஃபைன். சிம்பு வந்துடுச்சின்னு ஆப்பு வச்சிட்டாரப்பா.
______________________________________________________________________________________
பிரபாகரன் மரண சான்றிதழ் வந்து விட்டதாக ப.சிதம்பரம் சொல்கிறார்

சிம்பு. இதென்னா வம்பு. அத தேடி கண்டுபிடிக்கட்டும் சி.பி.ஐன்னு சொல்லாம விட்டுட்டாங்களா?
______________________________________________________________________________________
அரசின் காலக்கெடுவான ஜனவரி 31 முடிவடைந்தும் இடம்பெயர் மக்கள் முகாம்களில்....

ஆமாம். வருஷம் சொல்லைலைன்னு சொல்லுவான் பரதேசி.
______________________________________________________________________________________
தமக்கு எதிரான துன்புறுத்தல்களை நிறுத்தாவிடின் உயிரை பணயம் வைத்து அரசாங்கத்தின் இரகசியங்களை வெளியிடப்போகிறேன்: சரத் பொன்சேகா எச்சரிக்கை

சொல்லுப்பா புண்ணு. வச்சிக்கிட்டு வஞ்சன பண்ணாத. ’போற’ வழிக்கு புண்ணியம் சேத்துகோ.
______________________________________________________________________________________
நடந்து முடிந்த சிறீலங்காவின் தேர்தல் சொன்ன சங்கதி என்ன?

என்ன? திரும்ப ரகசியமா திருப்பதி வந்து போய்ட்டார்னு சொல்லுதா என்ன?
______________________________________________________________________________________
நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் எந்த நபரும் கைது செய்யப்படுவர்: கெஹலிய

ஓஹோ. நாலாவது மாடில ரூம் ரெடியோ?
______________________________________________________________________________________
இந்தியாவிற்குள் பிரபாகரன் வந்தால்.....  :EVKSஇளங்கோவன் பேச்சு

அங்க யாரோ சத்தியமூர்த்தி பவனுக்குள் நீங்கள் வந்தால்னு... சொல்றாங்க பாரப்பு.
______________________________________________________________________________________
நளினியை விடுதலை செய்வது தீவிரவாதத்தை விடுதலை செய்வது போன்றதாகும்: இளங்கோவன்

கோர்ட்டு கூட இவர கேட்டுதான் பண்ணனும் போல. செல்லாத தம்பிடிக்கு லொள்ளப் பாரு.
______________________________________________________________________________________
புலிகள் வைத்திருந்த 4 ஆயிரம் கிலோ தங்கம் எங்கே?

கோட்டபாய சம்சாரம் கொண்டு போச்சோ என்னமோ?
______________________________________________________________________________________
நாங்கள் உயிருக்கு பயந்தவர்கள் அல்ல:EVKS

செரி! போய் தெலுங்கானால சமாதானம் பேசிப் பாருங்களேன்.
______________________________________________________________________________________
அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வேன்:வைகோ

செஞ்சிட்டாலும்!.....
______________________________________________________________________________________
கலைஞருடன் சிவசங்கர மேனன் சந்திப்பு

காத்து ரட்சிக்கேணும் எண்ட கன்னி பகவதீஈஈஈஈஈ.
______________________________________________________________________________________

Sunday, January 10, 2010

பாக்கட் மணி.


அஞ்சாம்பு படிக்கும் போதுதான் இஸ்கோலு வாசல்ல அவிச்ச மரவள்ளி, பனங்கிழங்கு, பனம்பழம், மூக்குசளிப் பழம், கமருகட்டு இத்யாதி விக்கறது பசங்க வாங்கன்னு ஞானம் பொறந்துச்சி.

அதுலயும் பலப்ப மூக்கு தண்டபாணிதான் எப்பவும் ஏதாச்சும் வாங்கி வச்சிகிட்டு தின்னுட்டே இருப்பான். அதும் புளியம்பழம் சப்புனா நாக்கு ஊறுமா ஊறாதா. ஏதுறான்னா அப்பா கை காசு குடுத்தாருங்கற கான்ஸப்ட அறிமுகம் பண்ணான்.

அடப் பன்னாடையே! இது தெரியாம அஞ்சாம்பு வரைக்கும் எப்புடிடா படிச்சன்னு நொந்துகிட்டு, அடுத்த நாள் இஸ்கோல் கிளம்ப, நேர அப்பாட்ட போய் கேட்ற முடியுமா? அம்மாதான். யம்மா கைகாசுன்னா அவங்களுக்கும் கான்ஸப்ட் தெரியல.

என்னாமோ கேக்கறான் பாருங்கன்னா ரெகமண்ட் பண்றது? யப்பாரு என்னாடான்னாரு. கேக்க வந்த காசு தொண்டையை அடைக்க எச்சிய முழுங்கிகிட்டு இல்ல, இல்ல, வாங்கித் திங்க கைகாசு கொண்டுவராங்க எல்லாரும். எனக்கும் தாங்கன்னேன்.

படிக்க போறியா? வாங்கித் திங்க போறியா? யாரு உங்க வாத்தின்னு ஆரம்பிச்ச ஜோர்ல நான் இஸ்கோல்ல நின்னேன். சாயந்திரம் வந்ததும் கூப்டு வெச்சி, கைக்காசு கேக்குறதுக்கும் கொலக்குத்தம் பண்ணதுக்கும் பெரிய வித்யாசமில்லன்னு புரிய வச்சாங்க.

கொஞ்சம் விவரம் தெரியவும், அதாவது எட்டாம்பு போகவும், கைக்காசுங்கறது கொலக்குத்தமில்ல. பசங்க வாங்கித்திங்கதான் குடுக்கறது. சில நேரம் லஞ்சமா, சில நேரம் டிப்ஸான்னு எல்லாம் புரிஞ்சாலும் அதுக்கெல்லாம் வழியில்லாம கெஞ்சி கெஞ்சி 10 காசு எப்பவாவது கிடைச்சா பால் ஐஸ், இல்லாட்டி சேமியா ஐஸ் வாங்கித்தின்னு நாங்களும் பாக்கட் மணி வச்சிருக்கோம்டின்னு காட்டிக்கறது.

வெயில் காலம் வந்தா, சர்பத் வண்டி தெருவுல வரும். அதனால நோண்டி நொங்கெடுத்து திட்டு வாங்கினாலும், இழைப்புளிய கவுத்து போட்டு அதில ஐசை துருவி, சிரப் தெளிச்சி குடுப்பானே அது வாங்க காசு தருவாங்க.

வேலைக்கு போய், ஒரு வருஷம் கழிச்சிதான், மதியம் டீ கூட கொண்டு வரும் மிக்சர், காராபூந்தி (20 பைசா) வாங்கி யாரும் பாராம சாப்டுறது. இல்லீன்னா அங்க இருக்குற பெருசுங்க வெட்டி செலவு பண்றியாடான்னு ஆரம்பிச்சுடுவாங்க.

ஒரு நாள், நம்ம பாஸ் சொன்னாரு. அவங்க மக படிக்கிற இஸ்கூல்ல டீச்சரம்மா ஒரு பையன பாக்கட்ல கை உட்டு செக் பண்ணிச்சாம். எட்டாம்பு படிக்கிற பய. 900 ரூ ஏதோ வச்சிருந்தானாம். பக்கி பயபுள்ள அந்த டீச்சருக்கு இது ஒரு பெரிய விசயமா பட்டு போச்சி. நமக்கு 2 நாள் சம்பளம்னு நினைச்சதோ தெரியல.

ஏதுடா காசுன்னா பாக்கட் மணின்னானாம். எட்டாம்பு படிக்கிற பரதேசிக்கு 900ரூ பாக்கட் மணி தராங்களான்னு புடுங்கி, ஹெட்மாஸ்டர்கிட்ட கூட்டிட்டு போய் சொல்லி குடுத்திருக்காங்க. எச்சம்மு அலண்டு போய் என்னடான்னா தெனாவட்டா பாக்கட்மணின்னானாம்.

சரி! நாளைக்கு உங்கம்மாவ வர சொல்லுன்னு சொல்லி லெட்டர் குடுத்து உட்டாங்களாம். அந்த பையனோட அம்மா சும்மா பின்னி பெடலெடுத்துச்சாம். அட ஹெட்மாஸ்ட்ரசங்க! என்னா நினைச்சிருக்கற. எம்புள்ளய திருடன்னா நினைச்ச? எட்டாம்பு படிக்கிற பையன் கையில பாக்கட் மணி 1000 ரூ இருக்கிறது பெரிய விஷயமா?

என்னமோ பெரிய காஸ்மோபாலிடன் ஸ்கூலுன்னு சேர்த்தா இவ்ளோ சீப்பா பிஹேவ் பண்றீங்கன்னு எகிறிச்சாம். ஒரு கட்டத்துல இத இப்புடியே விட்டா டேஞ்சர்னு ஹெட்மிஸ்ட்ரஸ், தோ! ஆடாத குந்து. பாக்கட் மணி ஒரு நாளைக்கு 50ரூ அலவ்ட். அதும் ஒரு வேளை ஆட்டோ பஸ், அல்லது வேற சிலவு தேவையானது ஏற்பட்டா அதுக்குதான்.

அதுக்கு மேல பார்த்தேன், டி.சி தான். இல்ல சரி வராதுன்னா உக்காரு. டி.சி தரேன்னா, இங்கிலிபீசுல கத்திகிட்டு போச்சாம் அந்த காஸ்மோ அம்மாக்காரி. இன்னைக்கு ஒரு நியூஸ் படிச்சேன். அப்புடி ஒரு இஸ்கோல்ல பய புள்ளைக வீக் எண்டுக்கு 70ஆயிரத்துல இருந்து ஒரு லட்சத்துக்கு மேல செலவு பண்றாங்களாம். அதுவும் கடனட்டைல.

ஒரு பரதேசி, அப்பன் சுட்டு வச்ச கள்ள பணத்த சுட்டு வெச்சி காரே வாங்கிட்டானாம். (ஆமா! டாகுமெண்ட்லாம் வேணாம்?).







இப்பதான் புரியுது. எங்க பாத்தாலும் நகை பறிப்புல கல்லூரி மாணவர் கைதுன்னு ந்யூஸ் வருதே ஏன்னு. இதுக்கு யாரை போய் நொந்துக்கறது. வயத்த கட்டி வாயக் கட்டி கொஞ்சம் நல்ல இஸ்கோலுன்னு சேர்த்து, வண்டி, கோச்சிங்னு எல்லாம் தியாகம் பண்றதே பெரிய பாடா இருக்கிறப்ப, இதுங்களையெல்லாம் பார்த்து கெட்டு போக சின்ன வயசா?

உழைப்பால் உயர்ந்தவர்களுக்குத் தெரியும் காசின் அருமையை விட உழைப்பின் அருமை. அவர்களின் பிள்ளைகளுக்கு இந்த மாதிரி பணப் புழக்கத்துக்கு வழியிருக்காது.  நேர்மையற்ற முறையில் சம்பாதிக்கும் பரதேசிகள்தான் நெறிப்படுத்த வாயிழந்து தானும் கெட்டு தன் சந்ததியையும் கெடுப்பவர்கள்.

பசங்களை விட பெத்ததுங்களுக்கு ஆப்பு வச்சாதான் சரியாவும். ம்கும். இதெல்லாம் பண்ண வேண்டியவங்க பசங்க என்ன பண்ணுதோ?

Wednesday, December 16, 2009

அய்யோ! வட போச்சே!

ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு குறித்து பல்வேறு நையாண்டிகள் பேசப்படுகின்றன. இனப்படுகொலையின் போது உருப்படியாக எதுவும் பெரியண்ணன் என்ற முறையில் செய்யவில்லை என்பது நம் மனதில் உறுத்திக் கொண்டுதான் இருக்கும்.

இந்த நோபல் பரிசின் லட்சணம்தான் என்ன என்று கூகிளாண்டவரிடமும், விக்கியிடமும் கெஞ்சியதில் இரண்டு துரதிர்ஷ்டங்கள் குறித்து அறிய முடிந்தது.

அமைதிக்கான நோபல் பரிசுக்கு மகாத்மா காந்தியின் பெயர் ஒன்றல்ல இரண்டல்ல, ஐந்து முறை 1937 முதல் 1948 வரை பரிந்துரைக்கப்பட்ட போதும் அவருக்கு வழங்கப்படவேயில்லை. பல வருடங்களுக்குப் பிறகு நோபல் பரிசுக் கமிட்டி தன் தவற்றை ஒப்புக்கொண்டது.

எனினும், 1948ம் ஆண்டு காந்திஜி இறந்த வருடம், உயிருடன் இருக்கும் எவரும் இந்தப் பரிசுக்குத் தகுதி பெறவில்லை என்ற அறிவிப்போடு இந்தத் துறைக்கான பரிசு வழங்கப்படவில்லை. ஆனால், டக் ஹெம்மர்ஸ்க்ஜோல்ட் என்ற ஸ்காண்டிநேவியருக்கு 1961ம் ஆண்டு அவருடைய இறப்புக்குப் பிறகு வழங்கப்பட்டது. அதற்காகச் சொல்லப் பட்ட சப்பைக் கட்டுக் காரணம், பரிசு அறிவிக்கப்பட்ட போது அவர் உயிரோடிருந்தார் என்பதாகும்.




எண்ணக்கல் சாண்டி ஜார்ஜ் சுதர்சன். கோட்டயத்தில் 1931ல் பிறந்த இவர் சென்னை கிருத்துவக் கல்லூரியில் பயின்றவர். பிறகு சென்னைப் பல்கலைக் கழகத்தில் முதுகலைப்பட்டம் பெற்ற இவர் பௌதிகத்தில் குறிப்பாக க்வான்டம் பிஸிக்ஸ் எனப்படும் சக்திச் சொட்டுப் பௌதிகவியலில் பல கண்டுபிடிப்புகளுக்குக் காரணமாக இருந்தவர்.

இவரது கண்டுபிடிப்பான V-A கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு ஃபெயின்மேன் மற்றும் மர்ரேக்கு 1963ல் நோபல் பரிசு கொடுக்கப்பட்டதே ஒழிய சுதர்சனுக்குக் கொடுக்கப்படவில்லை. அந்தக் காலக் கட்டத்தில் வெளிப்படையாகவே அறிவியல் உலகில் இந்தக் கண்டுபிடிப்பு சுதர்சனால் கண்டுபிடிக்கப்பட்டு, மற்ற இருவரால் பிரபலப்படுத்தப்பட்டது என்றே பேசப்பட்டது.

1979ல் இவர் 29 வயது இளைஞராக இருந்தபோது கண்டுபிடித்த கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு வெயின்பெர்க், க்ளாஷோ, சலாம் ஆகியோருக்கு நோபல் பரிசு கொடுக்கப்பட்ட போது ஒரே ஒருமுறை தன் அதிருப்தியை இவ்வாறு வெளிக்காட்டினார் சுதர்ஷன்:

"ஒரு கட்டிடத்துக்கு பரிசளிக்கப் படுமேயானால் தரைத்தளத்தைக் கட்டியவரை விட்டு இரண்டாம் தளத்தை கட்டியவருக்கு மட்டும் கொடுப்பது முறையா?" என்று.

பட்ட காலிலே படும் என்பது போல் மீண்டும் ஒரு முறை 2005ம் ஆண்டு,க்வாண்டம் ஆப்டிக்ஸ் துறையில் இவரது கண்டு பிடிப்பை அடிப்படையாகக் கொண்டு க்ளாபர் என்பவருக்கு வழங்கப்பட்டது. இது குறித்து பல அறிவியல் அறிஞர்கள் எதிர்ப்புத் தெரிவித்த போதும் நோபல் பரிசுக் கமிட்டி கண்டு கொள்ளவேயில்லை.

என்னதான் விஞ்ஞானியாக, காந்தியாக இருந்தாலும் நோபல் பரிசு வாங்க  கட்டம் சரியா இருக்கணும் போல. இல்லை அமெரிக்கனா இருக்கணுமோ?

இதுக்கு பேசாம கட்சித் தலைவரா இருந்தா தனக்குத் தானே அப்பப்போ சாதனையாளர் விருது கொடுத்துக் கொண்டிருக்கலாம்.

Friday, December 4, 2009

செம்மறி ஆடுகள்!

காலையில் படித்த குழந்தைகளின் பள்ளி வண்டி நீரில் மூழ்கிய அவலச் செய்தியின் தாக்கத்தையும் மீறி இரண்டு பெண்களின் செயல் இமயத்தை விஞ்சி நிற்கிறது என நினைக்கிறேன். யார் சொன்னது பெண்கள் வீக்கர் செக்ஸ் என்று? தன்னலம் கருதாது, சம்யோசித புத்தியுடன் செயல்படுவதில் அவர்களை யாரும் விஞ்ச முடியாது என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணமாகியிருக்கிறது.

சேரும் சகதியுமான குட்டையில் இறக்கிய மனிதாபிமானமற்ற ட்ரைவர் மிருகம் செல்ஃபோனில் பேசியபடி ஓட்டி வந்ததாக தினத் தந்தி கூறுகிறது. நீரில் விழுந்தவுடன் தான் மட்டும் நீந்தித் தப்பித்திருக்கிறது அந்த மிருகம். ஆனால் நீச்சல் தெரியாத ஆசிரியை சுகந்தி வேனுக்குள் மூழ்கி மூழ்கி 11 குழந்தைகளைக் காப்பற்றி, கடைசி குழந்தை ஆழத்தில் போய்விட அதைக் காப்பாற்றப் போய் தன் உயிர் ஈந்தார் என்பது படிக்கும்போதே சிலிர்க்க வைக்கிறது.

அதே வேனில் ஏற்றிவிட தன் குழந்தையோடு காத்திருந்த இன்னொரு பெண் , காப்பாற்றப் பட்ட 11 குழந்தைகளைக் கரை சேர்க்க உதவியதோடு, அதற்கு பெரும்பாடு பட்ட க்ளீனரை ஊர்மக்கள் அடிக்கக் கூடும் என்பதை சமயோசிதமாக உணர்ந்து, அவரை அருகில் ஒரு வீட்டில் மறைத்து வைத்து, போலீசார் சம்பவம் நடந்த இடத்துக்கு வந்த பிறகு சரணடைய உதவியிருக்கிறார்.

ஆம். நம் மக்கள் கலாச்சாரம் அப்படி. ஒரு கும்பல் சேர்ந்தால் போதும். எவனோ ஒரு கலகக்காரன் சும்மா விடக்கூடாதுய்யா இவனுங்களை! போடுங்கைய்யா பேசிக்கிட்டு, என்று குரல் கொடுத்தால் போதும். யோசிக்கவோ, ஏன் என்று கேட்கவோ மாட்டார்கள். குரல் கொடுத்தவன் வேடிக்கை பார்த்துக் கொண்டு நழுவி விடுவான்.

இதைப் ப‌டித்த‌வுட‌ன் சிறுவ‌ய‌தில் ந‌ட‌ந்த‌ ச‌ம்ப‌வ‌ம் க‌வ‌ன‌த்திற்கு வ‌ந்த‌து. மெயின் ரோடில் விள‌க்குக‌ள் அதிக‌மில்லாத‌ ப‌குதி அது. அப்பொழுது க‌டைக‌ளில் எல்லாம் குண்டு ப‌ல்புதான். பெரிய‌ க‌டைக‌ளில் குழாய் விள‌க்குக‌ள். இருட்டி விட்டிருந்த ஒரு மாலை, ப‌ஸ் ஸ்டேன்டில் ஒரு ப‌ஸ் வ‌ந்து நிற்க‌ பின்னாடியே வ‌ந்த‌ டிராக்ட‌ர் டிரெயில‌ரும் நின்ற‌து.

ப‌ஸ் ஸ்டேன்ட் அருகில் விளையாடிக் கொண்டிருந்த‌ ஒரு சிறுவ‌ன் டிராக்ட‌ருக்கும் டிரெயில‌ருக்கும் இடையில் புகுந்து ஓட முயற்சித்தான். அதற்குள் ப‌ஸ் கிள‌ம்ப‌, டிராக்ட‌ர் டிரைவ‌ரும் வ‌ண்டியை எடுத்துவிட்டார். டிரெயில‌ர் இடித்த‌தில் நடுவில் இருந்த சிறுவ‌ன் விழுந்து விட்டான். இதைக் க‌ண்ட‌ ப‌ஸ் ஸ்டாண்டில் இருந்த‌ ஜ‌ன‌ம் அல‌ற‌ நொடியில் டிராக்ட‌ர் டிரைவ‌ர் வ‌ண்டியை நிறுத்திவிட்டார்.

காக‌ம் க‌ர‌ண்டு க‌ம்பியில் அடிப‌ட்டாலே ப‌ட்டிம‌ன்ற‌ம் வைப்ப‌வ‌ர்தாமே நாம். கூட்ட‌ம் கூடிவிட்ட‌து.  டிரைவ‌ர் இற‌ங்கி ந‌டுங்கிய‌ப‌டி வ‌ண்டிக்கு அடியில் பார்த்தார். இருட்டு வேறு. கும்ப‌லில் ஒரு ப‌ர‌தேசி, குழ‌ந்தை போற‌து கூட‌ தெரியாம‌ வ‌ண்டியை எடுத்து சாவ‌டிச்சிட்டான், போடுங்கையா என்று குர‌ல் கொடுத்தான். அந்தாளைப் பார்க்க‌க் கூட‌ விடாம‌ல் ச‌ர‌மாரியாக‌ அடி விழுந்த‌து.

ஒரு நாட்டாமை, குழ‌ந்தைக்கு என்னாச்சோ வ‌ண்டிய‌ எடுக்க‌ சொல்லுங்கைய்யா என்று குர‌ல் விட‌வும், கும்ப‌ல் ஆமாம் வ‌ண்டிய‌ எடு என்று அடிக்க‌ ஆர‌ம்பித்த‌து. அத்த‌னை அடியும் வாங்கிக் கொண்டு அழுத‌ப‌டி அந்த‌ டிரைவ‌ர், போலீஸ் வ‌ந்தாதாங்க‌ வ‌ண்டியை ந‌க‌ர்த்த‌லாம் என்று சொன்ன‌துதான் தாம‌த‌ம், கையாலும் க‌ட்டையாலும் கண்மண் தெரியாமல் அடித்தார்க‌ள்.

ஒரு த‌டிய‌ன் அலேக்காக டிரைவரைத் தூக்கி வ‌ண்டியில் போட்டு, எடுய்யா வ‌ண்டியை! குழ‌ந்தைக்கு ஏதாவ‌து ஆச்சோ நீ செத்த‌ என்று அடித்தான். டிரைவர் வேறு வ‌ழியின்றி வ‌ண்டியை எடுத்தார். தேங்காய் உடைத்தாற்போல் ச‌த்த‌ம். அவ்வ‌ள‌வுதான். மொத்த‌ கும்ப‌லும் ப‌ற‌ந்துவிட்ட‌து. ப‌ய‌மோ த‌லையில் இடித்த‌தனாலோ ம‌ய‌ங்கி விட்டிருந்த‌ சிறுவ‌ன் மேல் அப்பொழுதுதான் ட‌ய‌ர் ஏறி இற‌ங்கி இருக்கிற‌து.

எதிரிலிருந்த‌ நூல‌க‌த்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த‌ என‌க்கு இர‌ண்டு மூன்று நாட்க‌ள் மிக‌ப் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கிய‌ காட்சி, அனைவ‌ரும் ஓடிய‌ பின், அடிவாங்கிய‌ டிரைவ‌ர் ர‌த்த‌ம் ஒழுக‌ அர‌ற்றிய‌ப‌டி, ஐயோ! என்னைக் கொலைகார‌னா ஆக்கிட்டானுங்க‌ளே! சின்ன‌ புள்ளைய‌ கொன்னுட்டாங்களே! நான் வேணாம் வேணாம்னு சொன்னேனே! என்று பைத்திய‌ம் மாதிரி ஓடி ஓடி ஜ‌ன‌ங்க‌ளிட‌ம் முறையிட‌, அவ‌ரவர்களும் ஆதரவாக ஒன்றும் சொல்லாமல் ப‌த‌றி ஓடிய‌ காட்சி.

போலீசுக்குத் த‌க‌வ‌ல் போய், அவ‌ர்க‌ளும் வ‌ந்த‌வுட‌ன் இர‌ண்டு அறை விட‌, நூல‌க‌ர், ம‌ற்றும் இர‌ண்டு வாச‌க‌ர்க‌ள் துணிச்ச‌லாக‌ எடுத்துச் சொல்ல‌ அடிப்ப‌தை நிறுத்தி, சோடா வாங்கிக் கொடுத்து அவ‌ரை ஜீப்பில் உட்கார‌ வைத்தார்க‌ள்.

அந்தப் பெண் சமயோசிதமாக செயல் பட்டிராவிட்டால், க்ளீனர் கதியும் இப்படித்தான் ஆகியிருக்கும்.  கூட்டமாய் அடித்தால் குற்றமில்லை என்ற கும்பல் மனப்பான்மை என்றுதான் ஒழியுமோ!