Wednesday, December 16, 2009

அய்யோ! வட போச்சே!

ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு குறித்து பல்வேறு நையாண்டிகள் பேசப்படுகின்றன. இனப்படுகொலையின் போது உருப்படியாக எதுவும் பெரியண்ணன் என்ற முறையில் செய்யவில்லை என்பது நம் மனதில் உறுத்திக் கொண்டுதான் இருக்கும்.

இந்த நோபல் பரிசின் லட்சணம்தான் என்ன என்று கூகிளாண்டவரிடமும், விக்கியிடமும் கெஞ்சியதில் இரண்டு துரதிர்ஷ்டங்கள் குறித்து அறிய முடிந்தது.

அமைதிக்கான நோபல் பரிசுக்கு மகாத்மா காந்தியின் பெயர் ஒன்றல்ல இரண்டல்ல, ஐந்து முறை 1937 முதல் 1948 வரை பரிந்துரைக்கப்பட்ட போதும் அவருக்கு வழங்கப்படவேயில்லை. பல வருடங்களுக்குப் பிறகு நோபல் பரிசுக் கமிட்டி தன் தவற்றை ஒப்புக்கொண்டது.

எனினும், 1948ம் ஆண்டு காந்திஜி இறந்த வருடம், உயிருடன் இருக்கும் எவரும் இந்தப் பரிசுக்குத் தகுதி பெறவில்லை என்ற அறிவிப்போடு இந்தத் துறைக்கான பரிசு வழங்கப்படவில்லை. ஆனால், டக் ஹெம்மர்ஸ்க்ஜோல்ட் என்ற ஸ்காண்டிநேவியருக்கு 1961ம் ஆண்டு அவருடைய இறப்புக்குப் பிறகு வழங்கப்பட்டது. அதற்காகச் சொல்லப் பட்ட சப்பைக் கட்டுக் காரணம், பரிசு அறிவிக்கப்பட்ட போது அவர் உயிரோடிருந்தார் என்பதாகும்.




எண்ணக்கல் சாண்டி ஜார்ஜ் சுதர்சன். கோட்டயத்தில் 1931ல் பிறந்த இவர் சென்னை கிருத்துவக் கல்லூரியில் பயின்றவர். பிறகு சென்னைப் பல்கலைக் கழகத்தில் முதுகலைப்பட்டம் பெற்ற இவர் பௌதிகத்தில் குறிப்பாக க்வான்டம் பிஸிக்ஸ் எனப்படும் சக்திச் சொட்டுப் பௌதிகவியலில் பல கண்டுபிடிப்புகளுக்குக் காரணமாக இருந்தவர்.

இவரது கண்டுபிடிப்பான V-A கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு ஃபெயின்மேன் மற்றும் மர்ரேக்கு 1963ல் நோபல் பரிசு கொடுக்கப்பட்டதே ஒழிய சுதர்சனுக்குக் கொடுக்கப்படவில்லை. அந்தக் காலக் கட்டத்தில் வெளிப்படையாகவே அறிவியல் உலகில் இந்தக் கண்டுபிடிப்பு சுதர்சனால் கண்டுபிடிக்கப்பட்டு, மற்ற இருவரால் பிரபலப்படுத்தப்பட்டது என்றே பேசப்பட்டது.

1979ல் இவர் 29 வயது இளைஞராக இருந்தபோது கண்டுபிடித்த கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு வெயின்பெர்க், க்ளாஷோ, சலாம் ஆகியோருக்கு நோபல் பரிசு கொடுக்கப்பட்ட போது ஒரே ஒருமுறை தன் அதிருப்தியை இவ்வாறு வெளிக்காட்டினார் சுதர்ஷன்:

"ஒரு கட்டிடத்துக்கு பரிசளிக்கப் படுமேயானால் தரைத்தளத்தைக் கட்டியவரை விட்டு இரண்டாம் தளத்தை கட்டியவருக்கு மட்டும் கொடுப்பது முறையா?" என்று.

பட்ட காலிலே படும் என்பது போல் மீண்டும் ஒரு முறை 2005ம் ஆண்டு,க்வாண்டம் ஆப்டிக்ஸ் துறையில் இவரது கண்டு பிடிப்பை அடிப்படையாகக் கொண்டு க்ளாபர் என்பவருக்கு வழங்கப்பட்டது. இது குறித்து பல அறிவியல் அறிஞர்கள் எதிர்ப்புத் தெரிவித்த போதும் நோபல் பரிசுக் கமிட்டி கண்டு கொள்ளவேயில்லை.

என்னதான் விஞ்ஞானியாக, காந்தியாக இருந்தாலும் நோபல் பரிசு வாங்க  கட்டம் சரியா இருக்கணும் போல. இல்லை அமெரிக்கனா இருக்கணுமோ?

இதுக்கு பேசாம கட்சித் தலைவரா இருந்தா தனக்குத் தானே அப்பப்போ சாதனையாளர் விருது கொடுத்துக் கொண்டிருக்கலாம்.

67 comments:

க.பாலாசி said...

//இல்லை அமெரிக்கனா இருக்கணுமோ?//

இது சரியா இருக்கலாம்....

//இதுக்கு பேசாம கட்சித் தலைவரா இருந்தா தனக்குத் தானே அப்பப்போ சாதனையாளர் விருது கொடுத்துக் கொண்டிருக்கலாம். //

அதைவிட ஒரு நடிகனா இருந்தா சுலபமா கலைமாமணி, பாசிமாமணி, ஊசிமாமணி விருது வாங்கிடலாம்.

கொடுமை....எத்தனைபேர் இதுபோல் வடையை இழந்திருக்கிறார்களோ????

மணிஜி said...

நம்ம ஆளு ”நோ”பல் பரிசு வாங்குவாரு

vasu balaji said...

க.பாலாசி said...

//இல்லை அமெரிக்கனா இருக்கணுமோ?//

இது சரியா இருக்கலாம்....

ஆமாம். இவரு இந்திய அமெரிக்கன். அவ்வ்வ். அதான் கண்டுக்கலை.

//இதுக்கு பேசாம கட்சித் தலைவரா இருந்தா தனக்குத் தானே அப்பப்போ சாதனையாளர் விருது கொடுத்துக் கொண்டிருக்கலாம். //

அதைவிட ஒரு நடிகனா இருந்தா சுலபமா கலைமாமணி, பாசிமாமணி, ஊசிமாமணி விருது வாங்கிடலாம்.

கொடுமை....எத்தனைபேர் இதுபோல் வடையை இழந்திருக்கிறார்களோ????//

அது இருக்கு நிறைய. அப்பப்ப போடுறன்.

vasu balaji said...

தண்டோரா ...... said...

//நம்ம ஆளு ”நோ”பல் பரிசு வாங்குவாரு//

ஆமாம். அவரே குடுத்து அவரே வாங்கிப்பாரு=))

ஆரூரன் விசுவநாதன் said...

நல்ல தகவல்கள்......

//இதுக்கு பேசாம கட்சித் தலைவரா இருந்தா தனக்குத் தானே அப்பப்போ சாதனையாளர் விருது கொடுத்துக் கொண்டிருக்கலாம். //


மஞ்சத்துண்டு மடாதிபதி யோகம் எல்லாருக்கும் வருமாண்ணே....

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்ல தகவல்கள்

Chitra said...

இதுக்கு பேசாம கட்சித் தலைவரா இருந்தா தனக்குத் தானே அப்பப்போ சாதனையாளர் விருது கொடுத்துக் கொண்டிருக்கலாம். ................பாமரன் பஞ்ச்.

ஸ்ரீ.கிருஷ்ணா said...

அருமையான பகிர்வுங்க ஐயா.


am folower 174......

ஸ்ரீ.கிருஷ்ணா said...

"அய்யோ! வட போச்சே!" 175

Prathap Kumar S. said...

ஐயா. கேனப்பயல ஊர் சொம்பு வச்சுருக்கவெனல்லாம் நாட்டாமை... ஒண்ணும் பண்ணும் பண்ணமுடியாது.

பிரபாகர் said...

அய்யா,

நோபல் பரிசு பற்றிய உயர்வான எண்ணம் என்று ஒபாமாவுக்கு வழங்கப்பட்டு வந்ததோ அப்போதே மறைந்து விட்டது, உளியின் ஓசை வரிசைக்கு வந்துவிட்டது.

பிரபாகர்.

பிரபாகர் said...

//
நாஞ்சில் பிரதாப் said...
ஐயா. கேனப்பயல ஊர் சொம்பு வச்சுருக்கவெனல்லாம் நாட்டாமை... ஒண்ணும் பண்ணும் பண்ணமுடியாது.

//
பிரதாப்பு,

சும்மா ஃபுளோ தானா வருது? கலக்குங்க....

பிரபாகர்.

ஸ்ரீராம். said...

நோபல் ஆஸ்கார் என்றெல்லாம் நாம் ஏன் ஆசைப் படணும்? அது அவிங்களுக்குதான்...இவனுங்க சொல்லிதான் நமக்கு மகாத்மாவைத் தெரியணுமா என்ன?

பின்னோக்கி said...

அநியாயம்..அக்கிரமம். எல்லா டாபிக்கையும் நீங்களே எழுதிட்டா நாங்க எல்லாம் என்னத்த எழுதறது ? கொஞ்சம் கருணை காட்டுங்க.

பின்னோக்கி said...

அமைதிக்கான நோபல் பரிசு - அமைதின்னா அவங்க அகராதியில என்னன்னு தெரியலையே ? என்ன பண்றது ?

Unknown said...

ராஜபக்சேக்குக் குடுக்கலையேன்னு சந்தோசப்படுவிங்களா அத உட்டுட்டு காந்திக்கு கிடைக்கல சுதர்சனுக்குக் கிடைக்கலன்னுட்டு.. போங்க போங்க போய் புள்ளக்குட்டிகள படிக்க வய்யிங்க

vasu balaji said...

ஆரூரன் விசுவநாதன் said...

நல்ல தகவல்கள்......
நன்றிங்க ஆரூரன்

// மஞ்சத்துண்டு மடாதிபதி யோகம் எல்லாருக்கும் வருமாண்ணே....//

அதுவும் இவருக்கு மஞ்சத் துண்டு திவால் மக்கள்.

vasu balaji said...

T.V.Radhakrishnan said...

/நல்ல தகவல்கள்//

நன்றி சார்.

vasu balaji said...

Chitra said...

// இதுக்கு பேசாம கட்சித் தலைவரா இருந்தா தனக்குத் தானே அப்பப்போ சாதனையாளர் விருது கொடுத்துக் கொண்டிருக்கலாம். ................பாமரன் பஞ்ச்.//

ஹி ஹி. நன்றிங்க

geethappriyan said...

வேதனையான விஷயம் ஐயா, திறமையானவர்கள் காலத்தே கவுரவிக்கப்படனும்.

vasu balaji said...

ஸ்ரீ.கிருஷ்ணா said...

//அருமையான பகிர்வுங்க ஐயா.//

நன்றி ஸ்ரீ.கிருஷ்ணா.

vasu balaji said...

ஸ்ரீ.கிருஷ்ணா said...

//"அய்யோ! வட போச்சே!" 175//

=)) நல்வரவு.

vasu balaji said...

நாஞ்சில் பிரதாப் said...

//ஐயா. கேனப்பயல ஊர் சொம்பு வச்சுருக்கவெனல்லாம் நாட்டாமை... ஒண்ணும் பண்ணும் பண்ணமுடியாது.//

இது புதுசா இருக்கே=))

vasu balaji said...

பிரபாகர் said...

அய்யா,

/நோபல் பரிசு பற்றிய உயர்வான எண்ணம் என்று ஒபாமாவுக்கு வழங்கப்பட்டு வந்ததோ அப்போதே மறைந்து விட்டது, உளியின் ஓசை வரிசைக்கு வந்துவிட்டது.//

ஒபாமாவ பார்த்து உளியின் ஓசையா? உளிய பார்த்து ஒபாமாவா?

vasu balaji said...

ஸ்ரீராம். said...

//நோபல் ஆஸ்கார் என்றெல்லாம் நாம் ஏன் ஆசைப் படணும்? அது அவிங்களுக்குதான்...இவனுங்க சொல்லிதான் நமக்கு மகாத்மாவைத் தெரியணுமா என்ன?//

அப்படியில்லைதான். ஆனால் பரிந்துரை செய்யப்பட்டும் மறுக்கப்பட்டிருப்பது உறுத்தல் தானே.

பூங்குன்றன்.வே said...

என்னது வானம்பாடியாருக்கு நோபல் பரிசு கிடைச்சுடுச்சா?
இன்னும் ரெண்டு நாளைக்கு அவர் இடுகை எழுத மாட்டாரா?
ஹல்லோ..ஹல்லோ..ச்சே..லைன் கட் ஆயிடுச்சே..

vasu balaji said...

பின்னோக்கி said...

//அநியாயம்..அக்கிரமம். எல்லா டாபிக்கையும் நீங்களே எழுதிட்டா நாங்க எல்லாம் என்னத்த எழுதறது ? கொஞ்சம் கருணை காட்டுங்க.//

=)).

vasu balaji said...

பின்னோக்கி said...

//அமைதிக்கான நோபல் பரிசு - அமைதின்னா அவங்க அகராதியில என்னன்னு தெரியலையே ? என்ன பண்றது ?//

குடுக்கலைன்னாலும் கத்தாம இருக்காரான்னு டெஸ்டு பண்ணியிருப்பாங்களோ டெஸ்டு.

vasu balaji said...

முகிலன் said...

//ராஜபக்சேக்குக் குடுக்கலையேன்னு சந்தோசப்படுவிங்களா அத உட்டுட்டு காந்திக்கு கிடைக்கல சுதர்சனுக்குக் கிடைக்கலன்னுட்டு.. போங்க போங்க போய் புள்ளக்குட்டிகள படிக்க வய்யிங்க//

த்தோ! முதல்ல நீங்க தோசை எப்படி சாப்பிடணும்னு குட்டிப்பய சொன்னா மாதிரி படிச்சீங்களா? அந்த வீடியோ வரட்டும். அப்புறம் பார்க்கலாம்.

கலகலப்ரியா said...

அட உங்களுக்கு இப்டி கூட எழுத வருமா சார்.. =))... வாழ்த்துகள்... பாராட்டுகள்... etc.. etc..

கலகலப்ரியா said...

//ண்டோரா ...... said...

நம்ம ஆளு ”நோ”பல் பரிசு வாங்குவாரு//

=))

vasu balaji said...

கலகலப்ரியா said...

//அட உங்களுக்கு இப்டி கூட எழுத வருமா சார்.. =))... வாழ்த்துகள்... பாராட்டுகள்... etc.. etc..//

ஹிஹி. ட்ரையல் தான். டரியலாகல. சந்தோஷமா இருக்கு. நன்றிம்மா.

vasu balaji said...

// கலகலப்ரியா said...

//ண்டோரா ...... said...

நம்ம ஆளு ”நோ”பல் பரிசு வாங்குவாரு

=))//

மஞ்சதுண்டு காரர அப்பீட் ஆக்கறதுன்னா தண்டோராக்கு அல்வா மாதிரி=))

ஜிகர்தண்டா Karthik said...

இந்த மாதிரி பண்ணுவாங்கனு எனக்கு அப்போவே தெரியும். அதான் நான் எதையும் கண்டுபிடிக்கல, அப்படியே கண்டுபிடிச்சாலும் வெளிய சொல்றது இல்ல...

எம்.எம்.அப்துல்லா said...

அது நோபல் பரிசு. எனவே ஏரியாவுக்கு செட் ஆகுற மாதிரி “அய்யோ!பர்கர் போச்சே!” ன்னு தலைப்பை மாத்திருங்க :)

vasu balaji said...

Karthik Viswanathan said...

/இந்த மாதிரி பண்ணுவாங்கனு எனக்கு அப்போவே தெரியும். அதான் நான் எதையும் கண்டுபிடிக்கல, அப்படியே கண்டுபிடிச்சாலும் வெளிய சொல்றது இல்ல...//

யப்பே. நீ அசல் ஜிகிர்தண்டா சாமீய்ய்=))

vasu balaji said...

எம்.எம்.அப்துல்லா said...

/அது நோபல் பரிசு. எனவே ஏரியாவுக்கு செட் ஆகுற மாதிரி “அய்யோ!பர்கர் போச்சே!” ன்னு தலைப்பை மாத்திருங்க :)/

ஏரியா ஸ்விஸ்னாலும் பார்ட்டி நம்மாளுதானே:))

துபாய் ராஜா said...

ஏதாவது செய்யணும் சார்.... :((

அது சரி(18185106603874041862) said...

//
இதுக்கு பேசாம கட்சித் தலைவரா இருந்தா தனக்குத் தானே அப்பப்போ சாதனையாளர் விருது கொடுத்துக் கொண்டிருக்கலாம்.
//

பகுத்தறிவு பகலவன் அறிவு யாருக்கும் வராதுங்களே...இல்லாட்டி எதுக்கு இப்பிடி நோபல், ஆஸ்கர், புக்கர், புலிட்சர் விருதுக்கல்லாம் அடிச்சிக்கிட்டு க்யூவுல நிக்கிறாய்ங்க?? :0))

இராகவன் நைஜிரியா said...

// என்னதான் விஞ்ஞானியாக, காந்தியாக இருந்தாலும் நோபல் பரிசு வாங்க கட்டம் சரியா இருக்கணும் போல. இல்லை அமெரிக்கனா இருக்கணுமோ? //

கட்டம் சரியா இருக்கோ இல்லையோ... அமெரிக்கனாவோ, அய்ரோப்பாவை சேர்ந்தவனாகவோ இருக்க வேண்டியது அவசியம்.

இராகவன் நைஜிரியா said...

// இரண்டு துரதிர்ஷ்டங்கள் குறித்து அறிய முடிந்தது.//

விதி?

Unknown said...

//முகிலன் said...

//ராஜபக்சேக்குக் குடுக்கலையேன்னு சந்தோசப்படுவிங்களா அத உட்டுட்டு காந்திக்கு கிடைக்கல சுதர்சனுக்குக் கிடைக்கலன்னுட்டு.. போங்க போங்க போய் புள்ளக்குட்டிகள படிக்க வய்யிங்க//

த்தோ! முதல்ல நீங்க தோசை எப்படி சாப்பிடணும்னு குட்டிப்பய சொன்னா மாதிரி படிச்சீங்களா? அந்த வீடியோ வரட்டும். அப்புறம் பார்க்கலாம்.
//

அமெரிக்கா மட்டும் ஈழப்போரை பின்னாடி இருந்து (இந்தியா நடத்தினமாதிரி) நடத்தியிருந்தானா ராஜபக்சேக்கு தான் அமைதிக்கான நோபல் பரிசு.

kathir said...

அண்ணே... அதிகமா மைனஸ் வாங்கினதுக்கு நமக்கு ஏதாவது நோப்ப்ப்ப்ப்பல் கொடுப்பாய்ங்களா?

புலவன் புலிகேசி said...

நீங்க சொன்னதுதான்..ஒன்னு அமெரிக்கனா இருக்கனும் இல்ல அரசியல்வியாதியா இருக்கனும்...

balavasakan said...

##இதுக்கு பேசாம கட்சித் தலைவரா இருந்தா தனக்குத் தானே அப்பப்போ சாதனையாளர் விருது கொடுத்துக் கொண்டிருக்கலாம். ##

அதை விட சும்மா இருக்கலாம்
இவங்கட பரிசெல்லாம் வெறும் மோசடி என்னவோ தெரியாது ஆஸ்கார் மட்டும் ஒழுங்கா நம்ம தலைக்கு கொடுத்திட்டாணுகள்

vasu balaji said...

kathir said...

/அண்ணே... அதிகமா மைனஸ் வாங்கினதுக்கு நமக்கு ஏதாவது நோப்ப்ப்ப்ப்பல் கொடுப்பாய்ங்களா?//

ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்.முதல்ல கின்னஸ் வாங்கீரலாம். அப்புறம் படிப்படியா. ச்ச்செரியா?

vasu balaji said...

முகிலன் said...

/ அமெரிக்கா மட்டும் ஈழப்போரை பின்னாடி இருந்து (இந்தியா நடத்தினமாதிரி) நடத்தியிருந்தானா ராஜபக்சேக்கு தான் அமைதிக்கான நோபல் பரிசு.//
ம்கும். இப்போ மட்டும் முன்னாடி நடத்திச்சோ. இவங்க பின்னாடி தானே அவன்

vasu balaji said...

புலவன் புலிகேசி said...

/நீங்க சொன்னதுதான்..ஒன்னு அமெரிக்கனா இருக்கனும் இல்ல அரசியல்வியாதியா இருக்கனும்...//

ம்ம்ம்.

vasu balaji said...

Balavasakan said...

/ அதை விட சும்மா இருக்கலாம்
இவங்கட பரிசெல்லாம் வெறும் மோசடி என்னவோ தெரியாது ஆஸ்கார் மட்டும் ஒழுங்கா நம்ம தலைக்கு கொடுத்திட்டாணுகள்//

அதும் வெள்ளச்சாமி படத்துக்காக தானே வாசு=))

Unknown said...

ஆமா..., என்ன பேசி என்ன பண்றது..., நம்ம ஊர்ல மட்டும் ஒழுங்கா குடுககுறானுன்களா..., விருதெல்லாம் கடை சரக்கு போல காசு குடுத்து வாங்கிக்க வேண்டியது தான் இல்லன வேண்டியவங்களுக்கு அவுங்களே குடுப்பாங்க அவ்ளோ தான்...

vasu balaji said...

பேநா மூடி said...

/ஆமா..., என்ன பேசி என்ன பண்றது..., நம்ம ஊர்ல மட்டும் ஒழுங்கா குடுககுறானுன்களா..., விருதெல்லாம் கடை சரக்கு போல காசு குடுத்து வாங்கிக்க வேண்டியது தான் இல்லன வேண்டியவங்களுக்கு அவுங்களே குடுப்பாங்க அவ்ளோ தான்...//

ம்ம்

S.A. நவாஸுதீன் said...

என்னத்த சொல்ல போங்க. என்னதான் இருந்தாலும் நம்மாளுங்க வாங்குற டாக்டர் பட்டத்துக்கு ஈடாகுமா. இந்தமாதிரி விஷயமெல்லாம் இனி ஆதித்யா, சிரிப்பொலி மாதிரி சேனலில் தான் காமிக்கனும்.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

//சக்திச் சொட்டுப் பௌதிகவியலில்//

அடேங்கப்பா!!!இப்படி ஒரு வார்த்தை இருக்கறதே தெரியாது.

அகல்விளக்கு said...

சர்ர்ர்ர்ர்தான்...

நோபல் பரிசு நம்மூரு டாக்டர் பட்டம் மாதிரின்னு நினைக்கிறேன்...

vasu balaji said...

S.A. நவாஸுதீன் said...

//என்னத்த சொல்ல போங்க. என்னதான் இருந்தாலும் நம்மாளுங்க வாங்குற டாக்டர் பட்டத்துக்கு ஈடாகுமா. இந்தமாதிரி விஷயமெல்லாம் இனி ஆதித்யா, சிரிப்பொலி மாதிரி சேனலில் தான் காமிக்கனும்.//

ம்கும். அப்படி நடந்தாலும் நடந்துடும்.

vasu balaji said...

//ஸ்ரீ said...

//சக்திச் சொட்டுப் பௌதிகவியலில்//

அடேங்கப்பா!!!இப்படி ஒரு வார்த்தை இருக்கறதே தெரியாது.//

எங்கல்லாமோ தேடி தமிழ்டிக்ட் ல கிடைச்சது=))

vasu balaji said...

//அகல்விளக்கு said...

சர்ர்ர்ர்ர்தான்...

நோபல் பரிசு நம்மூரு டாக்டர் பட்டம் மாதிரின்னு நினைக்கிறேன்...//

=))

பா.ராஜாராம் said...

ஆரூரன் விசுவநாதன் ...
நல்ல தகவல்கள்......

//இதுக்கு பேசாம கட்சித் தலைவரா இருந்தா தனக்குத் தானே அப்பப்போ சாதனையாளர் விருது கொடுத்துக் கொண்டிருக்கலாம். //


மஞ்சத்துண்டு மடாதிபதி யோகம் எல்லாருக்கும் வருமாண்ணே....

அதானே..

:-))))

நினைவுகளுடன் -நிகே- said...

ஆக்கபூர்வமான படைப்பு
வாழ்த்துக்கள்

malar said...

காந்திக்கு கொடுத்தாலும் அவர் அதை வாங்கமாட்டார் .அவர் அதை எல்லாம் மிஞ்சியவர் .

அன்னை தெரசா வுக்காவது கொடுத்தாங்களே அதை எண்ணி சந்தோசபடலாம்

vasu balaji said...

பா.ராஜாராம் said...

/மஞ்சத்துண்டு மடாதிபதி யோகம் எல்லாருக்கும் வருமாண்ணே....

அதானே..

:-))))//

:)). வாங்க பா.ரா.

vasu balaji said...

நினைவுகளுடன் -நிகே- said...

/ஆக்கபூர்வமான படைப்பு
வாழ்த்துக்கள்/

நன்றிங்க நிகே.

vasu balaji said...

malar said...

/காந்திக்கு கொடுத்தாலும் அவர் அதை வாங்கமாட்டார் .அவர் அதை எல்லாம் மிஞ்சியவர் .//

அது சரிதாங்க. அவருக்குக் கொடுத்திருந்தால் பெருமை நோபல் பரிசுக்குத்தான். மறுத்ததால் கரைபட்டுப் போனது.

/ அன்னை தெரசா வுக்காவது கொடுத்தாங்களே அதை எண்ணி சந்தோசபடலாம்//

ஆமாம்.

முதல் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

Pradeep said...

Informative sir...

கோவி.கண்ணன் said...

///இதுக்கு பேசாம கட்சித் தலைவரா இருந்தா தனக்குத் தானே அப்பப்போ சாதனையாளர் விருது கொடுத்துக் கொண்டிருக்கலாம். ///

:)

vasu balaji said...

Pradeep said...

/ Informative sir.../

Thank you.

vasu balaji said...

கோவி.கண்ணன் said...

///இதுக்கு பேசாம கட்சித் தலைவரா இருந்தா தனக்குத் தானே அப்பப்போ சாதனையாளர் விருது கொடுத்துக் கொண்டிருக்கலாம். ///

:)

வாங்க கோவி.:)