Sunday, December 13, 2009

எந்த ஊர் என்றவனே...

உங்களுக்கு சொந்த ஊர் எது சார்?  மிகச் சாதாரணமாக எல்லோராலும், அறிமுகமாகையில் கேட்கப்படும் கேள்வி. பளிச்சென்று ஏதோ ஒரு ஊரைச் சொல்வதும், கேட்பவர் அதே ஊராயின் அப்படியா? அங்கு எங்கே என்று மேலே தொடர்வதும் என் மனதுள் வெகுவான ஏக்கத்தை உண்டாக்கும்.

என் மனதுக்குள் பெரும் போராட்டத்தை உண்டாக்கும் கேள்வியாகிவிட்டது இது! ஆமாம்! சொந்த ஊர் என்பது என்ன? சொந்தமாய் எனக்கு வீடோ, நிலமோ இருந்து அங்கே வாழ்ந்தோ, பிழைப்புக்கு என்று வேறிடத்துக்கு வந்திருப்பினும் என் வேர் இங்கே என்ற ஓர் அடையாளம் இருப்பது சொந்த ஊரா? என் பாட்டன் பூட்டன் வாழ்ந்த ஊரா? அல்லது என் சொந்தங்களெல்லாம் இருக்கும் ஊரா?

3 வருடங்கள் கழித்து ஊருக்கு போய் இருந்தேன். சொந்தக் காரங்களைப் பார்க்கிறதுக்கே நேரம் போதவில்லை. வீட்டில் இருந்தா மாதிரியே இல்லை என்று வருந்துவதும், ஊரில மழை பெய்ததா? விளைச்சல் எப்படி என்று கேட்பதாய்ப் படிக்கும் போதும் இது இன்னும் உறுதிப்படுகிறது.

ஒரு வேளை தான் பிறந்து வளர்ந்த ஊர்தான் சொந்த ஊரா என்றாலும் பிறந்தது ஒரு இடம் வளர்ந்தது வேறே ஊர் என்றால் எதைச் சொல்வது? அல்லது நான் ஒரு ஊரிலும், என் உடன் பிறந்ததுகள் வேறு வேறு ஊரிலும் பிறந்தால் அவரவருக்கும் மாறுமா என்ன?

ஏண்டா குழப்பறன்னு அடிக்க வராதீங்க சாமிகளா! காரணமிருக்கு. வீட்டில் விசேஷமென்று வரும்போது சாஸ்திரம், சம்பிரதாயம் என்ற இரண்டும் கூடவே வரும். சாஸ்திரத்துக்காவது  விதிவிலக்கிருக்கலாம். சம்பிரதாயத்துக்கு கிடையவே கிடையாது.

கலியாணமா? எந்த ஊரு. வட ஆற்காடா, தென் ஆற்காடா, திருநெல்வேலியா என்று கேட்டு ஊர் வழக்கப்படி, வீட்டு வழக்கப் படி தாலியில் ஆரம்பித்து சீர் வரை, விருந்து பரிமாறுவதில் பொரியல் இங்கே, பச்சடி அங்கே, உப்பு வைக்கிறது, வைக்காம விடுறதில தொடங்கி, சாப்பிட்ட பிறகு இலை மடிக்கும் விதம், எடுப்பதா விடுவதா என்று எத்தனை சம்பிரதாயங்கள்?

மனுசன் போனப்புறம் கூட ஊர் வழக்கம், சம்பிரதாயம் என்பது தொடர் கதையாகிறாதே. அப்படியானால் சொந்த ஊர் மாறிக்கொண்டே இருக்குமாயின் சம்பிரதாயம் மாறுமா? அப்படியானால் இத்தனை தலைமுறையாய் தொடர்ந்து இவை இருப்பதற்கு காரணம் ஊர்விட்டு ஊர் பிழைப்புக்கு என்று வராமல் போனதுதானே?

இப்போதுதான் எல்லாம் தொலைத்து விட்டு உறவுகள் ஊருக்கு ஒன்று, நாம் பிழைப்புக்கு என்று ஒரு பக்கம் என்று ஆனப்புறமும் இந்த சம்பிரதாயம் மட்டும் மாறாமல் ஒட்டிக்கொள்வது எப்படி? அடுத்த தலைமுறைக்கு இது தெரியாமல் போகலாம். போக வேண்டும்.

சரி இவ்வளவு புலம்பலுக்கு என்ன காரணம் என்கிறீர்களா? எந்த ஊர் என்றால் சென்னை என்று சொல்லிப் பார்த்தேன். சென்னைன்னா எங்கன்னா நான் என்னங்க சொல்றது? பிறந்ததையா? படித்ததையா? பிழைப்பதையா?

சரி சரி. என் குழப்பம் என்னோட. கண்ணதாசன் ஒருத்தன் காதல் தோல்வியில் ஊரை சொல்லி சொல்லி பாடுறத கேட்டு ரசிங்க.





          __/\__

51 comments:

கலகலப்ரியா said...

மிக அருமையான பாட்டு சார்..! பகிர்ந்தமைக்கு நன்றி..!

கலகலப்ரியா said...

பட்... ஐ ஆம் வெரி ஸாரி.. இந்தப் பாட்டுப் போடணும் அப்டிங்கிறதுக்காகவே இடப்பட்ட இடுகை போல் தோன்றுகிறது... ஆழம் குறைவு என்று சொல்ல முடியாமல்... குளம் மிகவும் வறட்சியாக இருக்கிறது..! நான் புரிஞ்சுக்கிட்டதிலதான் கோளாறா தெரியலையே..!

நாடோடி இலக்கியன் said...

சார்,

?

vasu balaji said...

கலகலப்ரியா said...

/ மிக அருமையான பாட்டு சார்..! பகிர்ந்தமைக்கு நன்றி..!//

ஆமாம்மா. அருமையான கற்பனை.

vasu balaji said...

கலகலப்ரியா said...

/பட்... ஐ ஆம் வெரி ஸாரி.. இந்தப் பாட்டுப் போடணும் அப்டிங்கிறதுக்காகவே இடப்பட்ட இடுகை போல் தோன்றுகிறது...//

இல்லை. அவனுக்கு ஊர்க் குழப்பம் மாதிரி எனக்கும் குழப்பம்தான்.


/ஆழம் குறைவு என்று சொல்ல முடியாமல்... குளம் மிகவும் வறட்சியாக இருக்கிறது..! நான் புரிஞ்சுக்கிட்டதிலதான் கோளாறா தெரியலையே..!//

இல்லைம்மா. பொதுவா சொந்த ஊர் எது என்பது ஊரைத் தெரிஞ்சிக்க கேட்கிறது என்றாலும் அதன் பின்னால் ஒட்டிட்டிருக்கிற விஷயங்கள் இன்னும் இருக்கிறது தேவையற்ற குழப்பங்களோடு.

சம்பிரதாயங்களில் இதே உங்கள் சொந்த ஊர் எது என்றால் என் அடையாளம் என்னம்மா?

vasu balaji said...

நாடோடி இலக்கியன் said...

/ சார்,

?/

புரியலைங்கறீங்களா? என்னாச்சிங்கறீங்களா? அடையாளமில்லையேன்னு ஒரு ஆதங்கம்தாங்க.

கலகலப்ரியா said...

//சென்னைன்னா எங்கன்னா நான் என்னங்க சொல்றது? பிறந்ததையா? படித்ததையா? பிழைப்பதையா?//

இவ்ளோ குழப்பம் யாருக்கும் வந்ததா சரித்திரம் இல்லை..! புதியவங்கன்னா... உங்க வீடு இப்போ இருக்கிற இடத்த கேப்பாய்ங்க... தெரிஞ்சவங்க... பெரிய பெரிய ஆபீசர்ஸ்னா அவங்க நாய்க்குட்டிக்கு பிஸ்கட் வாங்கணும்... எங்க இருக்கீங்கன்னு கேக்கலாம்... அப்போ நீங்க சென்னைன்னு கூட சொல்லாம.... இலங்கைல கோத்த பாயீ கூட காப்பி சாப்புடுறேன்னு சொல்லலாம்... கடந்த காலங்கள் பற்றியெல்லாம் அவர்கள் கவலைப் பட மாட்டார்கள் ஐயா... அவ்ளோ விளக்கமா கேட்டா... உக்காருங்கன்னு சொல்லிட வேண்டியதுதான்...

balavasakan said...

ஆனா இது நம்மளமாதிரி ஊர்ஊரா திரியும் ஒரு ஈழத்துகாரனுக்கு ரொம்பவும் பொருந்தும்

vasu balaji said...

கலகலப்ரியா said...

// இவ்ளோ குழப்பம் யாருக்கும் வந்ததா சரித்திரம் இல்லை..! புதியவங்கன்னா... உங்க வீடு இப்போ இருக்கிற இடத்த கேப்பாய்ங்க... தெரிஞ்சவங்க... பெரிய பெரிய ஆபீசர்ஸ்னா அவங்க நாய்க்குட்டிக்கு பிஸ்கட் வாங்கணும்... எங்க இருக்கீங்கன்னு கேக்கலாம்... அப்போ நீங்க சென்னைன்னு கூட சொல்லாம.... இலங்கைல கோத்த பாயீ கூட காப்பி சாப்புடுறேன்னு சொல்லலாம்... கடந்த காலங்கள் பற்றியெல்லாம் அவர்கள் கவலைப் பட மாட்டார்கள் ஐயா... அவ்ளோ விளக்கமா கேட்டா... உக்காருங்கன்னு சொல்லிட வேண்டியதுதான்...//

=)). ம்கும். விட்டா தேவலையே. சென்னைன்னா பூர்வீகமே சென்னையாங்குறாங்க இல்லீங்க அப்பா,தாத்தால்லாம் வடாற்காடு, அம்மா சேலம்னு சொல்லிட்டிருக்கேனே. அப்போ என்னோடது எதுன்னுதான் சொறியுது

Prathap Kumar S. said...

சூப்பர் பாட்டு,பாட்டுக்கேத்த பதிவு... அருமை, வலைப்பூவை திறந்ததுமே...பாட்டுவரவேற்கிறது. சூப்பர்

Prathap Kumar S. said...

சூப்பர் பாட்டு,பாட்டுக்கேத்த பதிவு... அருமை, வலைப்பூவை திறந்ததுமே...பாட்டுவரவேற்கிறது. சூப்பர்

vasu balaji said...

Balavasakan said...

//ஆனா இது நம்மளமாதிரி ஊர்ஊரா திரியும் ஒரு ஈழத்துகாரனுக்கு ரொம்பவும் பொருந்தும்//

அது நிஜமென்றாலும், பிழைப்புக்கு என்றைக்கு ஊர் விட்டு வந்ததோ அந்த தலைமுறையிலிருந்து இது பொருந்தும் எந்த நாடானாலும்.

கலகலப்ரியா said...

//Balavasakan said...

ஆனா இது நம்மளமாதிரி ஊர்ஊரா திரியும் ஒரு ஈழத்துகாரனுக்கு ரொம்பவும் பொருந்தும்//

athe..!

vasu balaji said...

நாஞ்சில் பிரதாப் said...

/சூப்பர் பாட்டு,பாட்டுக்கேத்த பதிவு... அருமை, வலைப்பூவை திறந்ததுமே...பாட்டுவரவேற்கிறது. சூப்பர்/

நன்றி பிரதாப்.

vasu balaji said...

//கலகலப்ரியா said...

//Balavasakan said...

ஆனா இது நம்மளமாதிரி ஊர்ஊரா திரியும் ஒரு ஈழத்துகாரனுக்கு ரொம்பவும் பொருந்தும்//

athe..!//

வாசுக்கு சொன்ன அதே தான் இதுக்கும்.

ஈரோடு கதிர் said...

//அப்படியானால் சொந்த ஊர் மாறிக்கொண்டே இருக்குமாயின் சம்பிரதாயம் மாறுமா? //

அம்புட்டுச் சீக்கிரம் மாறாதுங்க...

சம்பிரதாயம்... சாதி மாதிரி...

அவ்வளவு சீக்கிரம் மாறிடுமா என்ன!!!??

vasu balaji said...

ஈரோடு கதிர் said...

// அம்புட்டுச் சீக்கிரம் மாறாதுங்க...

சம்பிரதாயம்... சாதி மாதிரி...

அவ்வளவு சீக்கிரம் மாறிடுமா என்ன!!!??//

அது சரிதான். ஆனா இல்லாதத புடிச்சிட்டு ஏன் தொங்கணும்.

செ.சரவணக்குமார் said...

பிறந்து வளர்ந்த சொந்த மண்ணின் மீதான காதல் வேறு எதை விடவும் உயர்வானது. நல்ல பகிர்வுக்கும், அருமையான பாடலுக்கும் நன்றி.

ராஜவம்சம் said...

உங்க ஊர்ல எல்லோருமே இப்படிதானா

vasu balaji said...

செ.சரவணக்குமார் said...

/பிறந்து வளர்ந்த சொந்த மண்ணின் மீதான காதல் வேறு எதை விடவும் உயர்வானது. நல்ல பகிர்வுக்கும், அருமையான பாடலுக்கும் நன்றி.//

ஆமாம் சரவணக்குமார். நன்றி.

vasu balaji said...

ராஜவம்சம் said...

// உங்க ஊர்ல எல்லோருமே இப்படிதானா//

எந்த ஊரைக் கேக்குறீங்க? ஆமா உங்க ஊர் எது=))

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

இந்தக் கேள்விக்கு உண்மையிலேயே பதிலளிப்பது கடினம் தான்.

மிக அருமையான பாடல் பாலாண்ணே

இராகவன் நைஜிரியா said...

ஹை... திஸ் இஸ் நாட் கும்மி பதிவு...

என்னா பண்ணுவது...

அண்ணே ஏன் இப்படி?

போர் அண்ணே..

ஓட்டு போட்டாச்சு.

Chitra said...

இந்த பாட்டை கேட்டு கொண்டே படித்தேன். என் கவனத்தை, பாட்டு தன் பக்கம் இழுத்து கொண்டது.

ஆரூரன் விசுவநாதன் said...

அழகான பாடல்........

Anonymous said...

பாட்டு கேட்டுக்கிட்டே படிச்சேன். நீங்க எந்த ஊர்?

புலவன் புலிகேசி said...

பாட்டு போட்டு அசத்திட்டீங்க...சம்பிரதாயமாவது வெங்காயமாவது..இன்னும் பழைய குப்பைகள் கொட்டப்படாமல் தேங்கி கிடக்கிறது.

T.V.ராதாகிருஷ்ணன் said...

பகிர்ந்தமைக்கு நன்றி..!

க.பாலாசி said...

//சென்னைன்னா எங்கன்னா நான் என்னங்க சொல்றது? பிறந்ததையா? படித்ததையா? பிழைப்பதையா?//

கஷ்டம்தான். எனக்குல்லாம் இரண்டே ஊரோட முடிஞ்சிடுச்சு....பாடல் அருமையான பாடல் (அப்ப இடுகை???..சொல்லித்தான் தெரியனுமா???)

vasu balaji said...

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

/இந்தக் கேள்விக்கு உண்மையிலேயே பதிலளிப்பது கடினம் தான்.

மிக அருமையான பாடல் பாலாண்ணே/

ஆமாங்க செந்தில். நன்றிங்க

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/அண்ணே ஏன் இப்படி?

போர் அண்ணே../

இந்த நேர்மைய நான் பாராட்டுறேன்=))

/ ஓட்டு போட்டாச்சு./

நன்றிண்ணே.

vasu balaji said...

Chitra said...

/இந்த பாட்டை கேட்டு கொண்டே படித்தேன். என் கவனத்தை, பாட்டு தன் பக்கம் இழுத்து கொண்டது./

Pause போட்டு இன்னோரு வாட்டி படிக்கலையா=))

vasu balaji said...

ஆரூரன் விசுவநாதன் said...

/அழகான பாடல்......../

நன்றி ஆரூரன். என்னாச்சி? மார்கழி பொறக்கலையே இன்னும்=))

vasu balaji said...

சின்ன அம்மிணி said...

//பாட்டு கேட்டுக்கிட்டே படிச்சேன். நீங்க எந்த ஊர்?//

வாங்க வாங்க. முதல் வரவே இப்புடியா=)). அது சொல்லத் தெரியாமதானே இடுகையே..அவ்வ்வ்வ்வ்

vasu balaji said...

புலவன் புலிகேசி said...

/பாட்டு போட்டு அசத்திட்டீங்க...சம்பிரதாயமாவது வெங்காயமாவது..இன்னும் பழைய குப்பைகள் கொட்டப்படாமல் தேங்கி கிடக்கிறது.//

அப்போவே நினைச்சேன். இந்த ஸ்ரீனிவாஸ் குரல் கேட்டாலே சொக்கிப்போகுமேன்னு சரியாப் போச்சி=))

vasu balaji said...

T.V.Radhakrishnan said...

/பகிர்ந்தமைக்கு நன்றி..!/

நன்றிங்க சார்

vasu balaji said...

க.பாலாசி said...

/ கஷ்டம்தான். எனக்குல்லாம் இரண்டே ஊரோட முடிஞ்சிடுச்சு....பாடல் அருமையான பாடல் (அப்ப இடுகை???..சொல்லித்தான் தெரியனுமா???)//

வெறுப்பேத்துறியாக்கு. ரெண்டுல எத சொல்லுவ ராசா=)).. நன்றி

S.A. நவாஸுதீன் said...

நல்ல இடுகை சார். வெளிநாட்டில் வாழும் தமிழர்கள், அதுவும் தமிழர்களிடம் அதிகம் தொடர்பு வைத்துக்கொள்ள இயலாமல் இருப்பவர்கள், இப்படி எதிர்பாராத சந்திப்பின் போது கேட்டுக்கொள்ளும்போது ஒரே மாவட்டமாக இருந்தாலும் மனதிற்குள் அத்தனை சந்தோசம் வருவது உண்மைதான். ஆனால் நீங்கள் கூறியிருக்கும் கோணத்தில் கொஞ்சம் சிக்கலான தர்மசங்கடமான விஷயம்தான்.

சென்னையில் எப்படி என்று தெரியாது. ஆனால் சில இடங்களில் வெளியூரிலிருந்து குடியேறியவர்கள் இருந்தால் எந்த ஊரிலிருந்து வந்தார்களோ அந்த ஊரின் பெயரே அந்தக் குடும்பத்தாரின் பட்டப்பெயராகவோ, அழைப்பு பெயராகவோ மாறுவது இன்றும் வழக்கத்தில் இருக்கிறது. அதுவே தமிழகத்தின் தெற்கு பகுதியிலிருந்து வந்தவர்களென்றால் ”டே தெக்கத்தியான்” என்று இலக்காரமாக கூப்பிடத்தான் செய்கிறார்கள்.

முனைவர் இரா.குணசீலன் said...

எனக்கு மிகவும் பிடித்த பாடல்...

முனைவர் இரா.குணசீலன் said...

எந்த ஊர் என்றவனே ..

எந்த ஊர் என்றவனே
இருந்த ஊரைச் சொல்லவா?
அந்த ஊர் நீயும்கூட
அறிந்த ஊர் அல்லவா! (எந்த)

உடலூரில் வாழ்ந்திருந்தேன்
உறவூரில் மிதந்திருந்தேன்
கருவூரில் குடி புகுந்தேன்
மண்ணூரில் விழுந்து விட்டேன்!

கண்ணூரில் தவழ்ந்திருந்தேன்
கையூரில் வளர்ந்திருந்தேன்
காலூரில் நடந்து வந்தேன்
காளையூர் வந்துவிட்டேன்! (எந்த)

வேலூரைப் பார்த்து விட்டேன்
விழியூரில் கலந்து விட்டேன்
பாலூறும் பருவமென்னும்
பட்டினத்தில் குடிபுகுந்தேன்!

காதலூர் காட்டியவள்
காட்டூரில் விட்டுவிட்டாள்
கன்னியூர் மறந்தவுடன்
கடலூரில் விழுந்துவிட்டேன்!

பள்ளத்தூர் தன்னில் என்னை
பரிதவிக்க விட்டு விட்டு
மேட்டூரில் அந்த மங்கை
மேலேறி நின்று கொண்டாள்!

கீழுரில் வாழ்வதற்கும்
கிளிமொழியாள் இல்லையடா
மேலூரு போவதற்கும்
வேளை வரவில்லையடா! (எந்த)

பூங்குன்றன்.வே said...

நானும் இப்ப ரொம்ப குழம்பியாச்சு ஸார்.

1) பிறந்தது திருவண்ணாமலை மாவட்டத்தில் போளூர் பக்கம். அது என் சொந்த ஊரா?
2) இப்பதான் சமீபத்தில் சென்னையில் என் பெயரில் ஒரு சொந்த வீடு வாங்கினேன்.. அப்படின்னா சென்னை என் சொந்த ஊரா?
3) ரெண்டு வருசமா பாக்தாத்தில் வேலை செய்றேன்..ஸோ இது என் சொந்த ஊரா?

நான் பைத்தியமில்லை....
நான் பைத்தியமில்லை....
நான் பைத்தியமில்லை....

vasu balaji said...

S.A. நவாஸுதீன் said...

//நல்ல இடுகை சார். வெளிநாட்டில் வாழும் தமிழர்கள், அதுவும் தமிழர்களிடம் அதிகம் தொடர்பு வைத்துக்கொள்ள இயலாமல் இருப்பவர்கள், இப்படி எதிர்பாராத சந்திப்பின் போது கேட்டுக்கொள்ளும்போது ஒரே மாவட்டமாக இருந்தாலும் மனதிற்குள் அத்தனை சந்தோசம் வருவது உண்மைதான். ஆனால் நீங்கள் கூறியிருக்கும் கோணத்தில் கொஞ்சம் சிக்கலான தர்மசங்கடமான விஷயம்தான்.//

சென்னை என்பதை பல ஊர்களின் தொகுப்பு என்ற எண்ணம் இருக்கிறதென நினைக்கிறேன். அது போக ஏனோ ஓர் அடையாளமில்லாமல் போய்விட்டது.

//சென்னையில் எப்படி என்று தெரியாது. ஆனால் சில இடங்களில் வெளியூரிலிருந்து குடியேறியவர்கள் இருந்தால் எந்த ஊரிலிருந்து வந்தார்களோ அந்த ஊரின் பெயரே அந்தக் குடும்பத்தாரின் பட்டப்பெயராகவோ, அழைப்பு பெயராகவோ மாறுவது இன்றும் வழக்கத்தில் இருக்கிறது. அதுவே தமிழகத்தின் தெற்கு பகுதியிலிருந்து வந்தவர்களென்றால் ”டே தெக்கத்தியான்” என்று இலக்காரமாக கூப்பிடத்தான் செய்கிறார்கள்.//

சென்னைமட்டும் விதிவிலக்கா என்ன.
நன்றி நவாஸ்

vasu balaji said...

முனைவர்.இரா.குணசீலன் said...

/எனக்கு மிகவும் பிடித்த பாடல்...//

ஆமாங்கய்யா. பாடலின் வரிகளைத் தந்தமைக்கு நன்றி

vasu balaji said...

பூங்குன்றன்.வே said...

//நானும் இப்ப ரொம்ப குழம்பியாச்சு ஸார்.

1) பிறந்தது திருவண்ணாமலை மாவட்டத்தில் போளூர் பக்கம். அது என் சொந்த ஊரா?
2) இப்பதான் சமீபத்தில் சென்னையில் என் பெயரில் ஒரு சொந்த வீடு வாங்கினேன்.. அப்படின்னா சென்னை என் சொந்த ஊரா?
3) ரெண்டு வருசமா பாக்தாத்தில் வேலை செய்றேன்..ஸோ இது என் சொந்த ஊரா?

நான் பைத்தியமில்லை....
நான் பைத்தியமில்லை....
நான் பைத்தியமில்லை....//

சாம் ப்ளட்...அவ்வ்வ்வ்வ்

ஸ்ரீராம். said...

சொந்தமா ஊர் வாங்கற அளவுல்லாம் வசதி இல்லீங்க...

ராஜ நடராஜன் said...

கொஞ்சம் குழம்ப வைத்து அப்புறம் சரியா யோசிக்க வைச்சிட்டீங்க!

திடீர்ன்னு என்ன பாட்டுச் சத்தமெல்லாம் கேட்குது?கலக்குங்க:)

vasu balaji said...

ஸ்ரீராம். said...

// சொந்தமா ஊர் வாங்கற அளவுல்லாம் வசதி இல்லீங்க...//.

நீங்க வேற. வந்த கடுப்புக்கு ஒரு வீட்ட வாங்கி அதுக்கு ஒரு ஊர் பேரு வைக்க கூட முடியலயேன்னு இருக்கு=))

vasu balaji said...

ராஜ நடராஜன் said...

/ கொஞ்சம் குழம்ப வைத்து அப்புறம் சரியா யோசிக்க வைச்சிட்டீங்க!

திடீர்ன்னு என்ன பாட்டுச் சத்தமெல்லாம் கேட்குது?கலக்குங்க:)//

வாங்கண்ணா. கன நாளாக் காணேல்ல.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

இதெல்லாம் யோசிச்சா தொழில் பண்ண முடியுமா பாஸ். புடிச்ச ஊர சொல்லிக்க வேண்டியதுதான்.நல்ல வேளை எனக்கு இப்படி குழப்பம் இல்லை.தலைமுறை தலைமுறையா மதுரைதான்.

vasu balaji said...

ஸ்ரீ said...

//இதெல்லாம் யோசிச்சா தொழில் பண்ண முடியுமா பாஸ். புடிச்ச ஊர சொல்லிக்க வேண்டியதுதான்.நல்ல வேளை எனக்கு இப்படி குழப்பம் இல்லை.தலைமுறை தலைமுறையா மதுரைதான்.//

:)). லக்கி.

Unknown said...

ஓ.... இது தான் அந்த பதிவா...,