Thursday, December 17, 2009

கல்யாணம் என்பது..


அன்றாட வாழ்க்கையின்
அவ்வப்போதய‌ ஏமாற்றங்கள்
குமைந்து குமைந்து
ஆவியாகிச்
சேர்ந்து சேர்ந்து
அழுத்த‌ ம‌ண்ட‌ல‌மாய்த்
தீவிரமடைந்து
மனம் கடக்கும் தருணங்களில்
கோபப் புயலாய்
பொருட்கள் சிதைத்து
இடியாய் மனைவி
குழந்தைகள் மேல்
விழுந்து
கண்ணீர் வெள்ளத்துக்கு
காரணமாயினும்
வலுவிழந்த அழுத்தத்தால்
பத்து ரூபாய் மல்லியிலும்
பொம்மையிலும்
வாழ்க்கையை
சகஜ நிலைக்குத் திருப்பும்
சாமானிய‌த் த‌க‌ப்பன்..

ஆயிரந்தான் இருந்தாலும்
அடிச்சாலும் உதைச்சாலும்
ஆசையா 'அதுக்கு'
உன்னைத்தானடி தேடி வாரான்!
புரிஞ்சி நடந்துக்கடி என்று
த‌லைமுறை சொன்ன‌
சுக‌வாழ்வு சூத்திர‌த்தை
நினைவிறுத்தி
இன்னும் வ‌லித்த‌
இடுப்பைத் த‌ட‌விய‌ப‌டி
முக‌ம் க‌ழுவிப் பொட்டிட்டு
க‌ண் அவ‌னுக்காய்
காத்திருக்கும் தாய்..

அப்பாவின் முகத்தில்
புயல் எச்சரிக்கைக் கொடி
பார்த்த மாத்திரத்தில்
அம்மாவின்
க‌ண்ணீர் மழைக்கஞ்சி
அடுத்த‌ வீட்டில்
அடைக்க‌ல‌ம் தேடி
பாச‌ப் பொட்ட‌ல‌த்துக்காய்க்
ஏங்கிக் காத்திருக்கும்
அடிதாங்கிக் குழ‌ந்தை..

அடிக்க‌டி நிக‌ழும்
அந‌ர்த்த‌ங்க‌ள் தாங்கி
முளைத்து, துளிர்த்து
த‌ழைத்து, அழிந்து
மீண்டும் முளைக்கும்
ஆயிர‌ம் கால‌த்துப் ப‌யிர்!

___/\___

82 comments:

ஈரோடு கதிர் said...

பாஸ்

அன்புத்தம்பி பாலாசி எழுத வேண்டிய கவிதைய நீங்க எழுதலாமா

vasu balaji said...

ஈரோடு கதிர் said...

/பாஸ்

அன்புத்தம்பி பாலாசி எழுத வேண்டிய கவிதைய நீங்க எழுதலாமா/

ம்கும். அவரு மாடு அழுதாதான் எழுதுவாரு. மனுசா அழுதாலுமா?

முனைவர் இரா.குணசீலன் said...

அடிக்க‌டி நிக‌ழும்
அந‌ர்த்த‌ங்க‌ள் தாங்கி
முளைத்து, துளிர்த்து
த‌ழைத்து, அழிந்து
மீண்டும் முளைக்கும்
ஆயிர‌ம் கால‌த்துப் ப‌யிர்!//

செக்குமாடு போன்ற இந்த வாழ்க்கைமுறை காலகாலமாகத் தொடர்ந்துகொண்டுதான் வருகிறது.

கவிதை நன்றாகவுள்ளது..

முனைவர் இரா.குணசீலன் said...

அப்பாவின் முகத்தில்
புயல் எச்சரிக்கைக் கொடி
பார்த்த மாத்திரத்தில்
அம்மாவின்
க‌ண்ணீர் மழைக்கஞ்சி
அடுத்த‌ வீட்டில்
அடைக்க‌ல‌ம் தேடி
பாச‌ப் பொட்ட‌ல‌த்துக்காய்க்
ஏங்கிக் காத்திருக்கும்
அடிதாங்கிக் குழ‌ந்தை..//


வலி தாங்கிய கவிதை..

ஈரோடு கதிர் said...

அட... அசத்தலான கவிதையண்ணே

//ஆயிர‌ம் கால‌த்துப் ப‌யிர்!//
இப்பெல்லாம் ரொம்ப பூச்சியரிக்குதுங்கண்ணே

க.பாலாசி said...

//அடைக்க‌ல‌ம் தேடி
பாச‌ப் பொட்ட‌ல‌த்துக்காய்க்
ஏங்கிக் காத்திருக்கும்
அடிதாங்கிக் குழ‌ந்தை..//

ஓ....உண்மை...உண்மை...

//மீண்டும் முளைக்கும்
ஆயிர‌ம் கால‌த்துப் ப‌யிர்!//

மீண்டுமா...???

க.பாலாசி said...

//வானம்பாடிகள் said...
ம்கும். அவரு மாடு அழுதாதான் எழுதுவாரு. மனுசா அழுதாலுமா?//

ஏன்????? நல்லாத்தானே போயிட்டிருக்கு...என்னயவச்சு காமடிவேறயா???? வேண்டா...அழுதுடுவேன்...

vasu balaji said...

முனைவர்.இரா.குணசீலன் said...

// செக்குமாடு போன்ற இந்த வாழ்க்கைமுறை காலகாலமாகத் தொடர்ந்துகொண்டுதான் வருகிறது.

கவிதை நன்றாகவுள்ளது..//

ஆமாங்க. நன்றிங்கய்யா.

vasu balaji said...

ஈரோடு கதிர் said...

அட... அசத்தலான கவிதையண்ணே

//ஆயிர‌ம் கால‌த்துப் ப‌யிர்!//
இப்பெல்லாம் ரொம்ப பூச்சியரிக்குதுங்கண்ணே

ஆத்தாடி. நான் அவசரத்துல கவிதையதான் புல்லரிக்குதுக்கு எதிர் பதமா சொல்றீங்களோன்னு நினைச்சிட்டன்.:)) நன்றி கதிர்.

vasu balaji said...

க.பாலாசி said...

//அடைக்க‌ல‌ம் தேடி
பாச‌ப் பொட்ட‌ல‌த்துக்காய்க்
ஏங்கிக் காத்திருக்கும்
அடிதாங்கிக் குழ‌ந்தை..//

ஓ....உண்மை...உண்மை...

//மீண்டும் முளைக்கும்
ஆயிர‌ம் கால‌த்துப் ப‌யிர்!//

மீண்டுமா...???//

ஏஏஏஏந்தம்பி பாஆஆஆஅலாஆஆஆஆஆஅசி. முதல்ல இத சொல்லு. இந்த ப்ரொஃபைல் மொட்டைய என்னையும் கதிரையும் எகத்தாளம் பண்ணன்னே போட்டியா?

vasu balaji said...

க.பாலாசி said...

/ ஏன்????? நல்லாத்தானே போயிட்டிருக்கு...என்னயவச்சு காமடிவேறயா???? வேண்டா...அழுதுடுவேன்...//

அட ஏப்பா? மாட்ட சொன்னா நீ எதுக்கு உன்னிய இளுத்து விட்டுக்குற:))

பிரபாகர் said...

//பத்து ரூபாய் மல்லியிலும்
பொம்மையிலும்
வாழ்க்கையை
சகஜ நிலைக்குத் திருப்பும்
சாமானிய‌த் த‌க‌ப்பன்..//
யதார்த்தம், சுகவாழ்வு சூத்திரம், அடிதாங்கிக் குழந்தை என யாவும்...

பிரபாகர்.

க.பாலாசி said...

//வானம்பாடிகள் Says:
ஏஏஏஏந்தம்பி பாஆஆஆஅலாஆஆஆஆஆஅசி. முதல்ல இத சொல்லு. இந்த ப்ரொஃபைல் மொட்டைய என்னையும் கதிரையும் எகத்தாளம் பண்ணன்னே போட்டியா?//

ஹி.ஹி....அதெப்படி என்வாயால சொல்லுவேன்...

T.V.ராதாகிருஷ்ணன் said...

கவிதை நன்றாகவுள்ளது

aambalsamkannan said...

நல்ல கவிதை.என்ன சார் வானிலை அறிக்கை அதிகமாக பாப்பிங்களா?
உவமைக்கு புயலை பயன்படுத்தியது அருமை.

vasu balaji said...

aambal samkannan said...

//நல்ல கவிதை.என்ன சார் வானிலை அறிக்கை அதிகமாக பாப்பிங்களா?
உவமைக்கு புயலை பயன்படுத்தியது அருமை.//

இல்லைங்க. இங்க ரெண்டு நாளா புயல். :))

vasu balaji said...

T.V.Radhakrishnan said...

/ கவிதை நன்றாகவுள்ளது/

நன்றிங்க

vasu balaji said...

பிரபாகர் said...

// யதார்த்தம், சுகவாழ்வு சூத்திரம், அடிதாங்கிக் குழந்தை என யாவும்...

பிரபாகர்.//

யாவும்?=))

vasu balaji said...

க.பாலாசி said...

/ ஹி.ஹி....அதெப்படி என்வாயால சொல்லுவேன்...//

சரி நேர பார்க்கிறப்ப எழுதிக் கொடு. விடமாட்டம்டி.ஹஹாஆஆஆஆ

பூங்குன்றன்.வே said...

மொத்த மனுசப்பய வாழ்க்கையையும் கல்யாணம்ன்ற பேர்ல கவி எழுதி பாடமே சொல்ட்டீங்க்ன்னா.
பெரியவங்க சொன்னா சரியா இருக்கும்..

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

//அன்றாட வாழ்க்கையின்
அவ்வப்போதய‌ ஏமாற்றங்கள்
குமைந்து குமைந்து
ஆவியாகிச்
சேர்ந்து சேர்ந்து
அழுத்த‌ ம‌ண்ட‌ல‌மாய்த்
தீவிரமடைந்து
மனம் கடக்கும் தருணங்களில்
கோபப் புயலாய்
பொருட்கள் சிதைத்து
இடியாய் மனைவி
குழந்தைகள் மேல்
விழுந்து
கண்ணீர் வெள்ளத்துக்கு
காரணமாயினும்
வலுவிழந்த அழுத்தத்தால்
பத்து ரூபாய் மல்லியிலும்
பொம்மையிலும்
வாழ்க்கையை
சகஜ நிலைக்குத் திருப்பும்
சாமானிய‌த் த‌க‌ப்பன்..//

எவ்வளவு நீளம். தலைவரே ! இலக்கியவாதி ஆயிட்டீங்க.

vasu balaji said...

பூங்குன்றன்.வே said...

/மொத்த மனுசப்பய வாழ்க்கையையும் கல்யாணம்ன்ற பேர்ல கவி எழுதி பாடமே சொல்ட்டீங்க்ன்னா.
பெரியவங்க சொன்னா சரியா இருக்கும்..//

நன்றி பூங்குன்றன்.

vasu balaji said...

ஸ்ரீ said...

/எவ்வளவு நீளம். தலைவரே ! இலக்கியவாதி ஆயிட்டீங்க.//

என்னமோ ஒரு புயலடிச்சி ஓய்ந்தா மாதிரி எனக்கு பட்டது. அப்படியே விட்டுட்டேன்.:))

Unknown said...

ஆமா இது கவிதையா... இல்ல என்ட்டர் கவிதையா..,

balavasakan said...

ம்... நல்ல கவிதை

##அப்பாவின் முகத்தில்
புயல் எச்சரிக்கைக் கொடி
பார்த்த மாத்திரத்தில்
அம்மாவின்
க‌ண்ணீர் மழைக்கஞ்சி
அடுத்த‌ வீட்டில்
அடைக்க‌ல‌ம் தேடி
பாச‌ப் பொட்ட‌ல‌த்துக்காய்க்
ஏங்கிக் காத்திருக்கும்
அடிதாங்கிக் குழ‌ந்தை..##

இதுதான் ரொம்ப பாவம்...

ஆரூரன் விசுவநாதன் said...

வாழ்வியல், சூத்திரத்தை வார்த்தைகளில் வடித்திருக்கிறீர்கள்....

எழுத வார்த்தைகள் இல்லை பாலாண்ணே....

ஆரூரன் விசுவநாதன் said...

//கதிர்//
அன்புத்தம்பி பாலாசி எழுத வேண்டிய கவிதைய நீங்க எழுதலாமா/

ம்கும். அவரு மாடு அழுதாதான் எழுதுவாரு. மனுசா அழுதாலுமா?

ஆனாலும் இம்புட்டு குசும்பு ஆகது உங்களுக்கு.....

பாவம் தம்பி பாலாசி.....

geethappriyan said...

மிக நல்ல வரிகள் ஐயா

vasu balaji said...

பேநா மூடி said...

/ஆமா இது கவிதையா... இல்ல என்ட்டர் கவிதையா..,//

ஆக கவிதைங்கறதுல சந்தேகமில்லையே:))

vasu balaji said...

ஆரூரன் விசுவநாதன் said...

/வாழ்வியல், சூத்திரத்தை வார்த்தைகளில் வடித்திருக்கிறீர்கள்....

எழுத வார்த்தைகள் இல்லை பாலாண்ணே..../

நன்றிங்க ஆரூரன்.

vasu balaji said...

ஆரூரன் விசுவநாதன் said...

/ ம்கும். அவரு மாடு அழுதாதான் எழுதுவாரு. மனுசா அழுதாலுமா?

ஆனாலும் இம்புட்டு குசும்பு ஆகது உங்களுக்கு.....

பாவம் தம்பி பாலாசி.....//

//
பாஆஆஆஅலாஆஆஆஆஆஅசி. முதல்ல இத சொல்லு. இந்த ப்ரொஃபைல் மொட்டைய என்னையும் கதிரையும் எகத்தாளம் பண்ணன்னே போட்டியா?//

ஹி.ஹி....அதெப்படி என்வாயால சொல்லுவேன்...//

அப்ப இது என்னவாம். இவரு பாவமாம்ல.

vasu balaji said...

Balavasakan said...

/ ம்... நல்ல கவிதை

இதுதான் ரொம்ப பாவம்...//

நன்றி வாசு. அதானே யதார்த்தம் பெரும்பாலும்

vasu balaji said...

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

/ மிக நல்ல வரிகள் ஐயா/

நன்றிங்க கார்த்திகேயன்

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

கவிதையுலும் கலக்குறீங்க சார்!

ஜிகர்தண்டா Karthik said...

அண்ணே,

சும்மா பேக் ஃபுட், ஃப்ரண்ட் ஃபுட், புல், ஹூக்-ன்னு தமிழ் எழுத்துல பெரிய சேவாக் ஆகிட்டு வரீங்க...
சூப்பர்ர்ர்....
சரி, கல்யாணம் பண்ணிக்கலாமா வேண்டாமா, உங்க கருத்து என்ன?
இல்ல, ஆயிரம் காலத்து பயிர மேஞ்சுருவோமா?

கலகலப்ரியா said...

//அடுத்த‌ வீட்டில்//

//மீண்டும் முளைக்கும்
ஆயிர‌ம் கால‌த்துப் ப‌யிர்//

:)

Mohan R said...

Enna tamilnattula romba malaiyooo

Chitra said...

பாமரன் சார், கவிதையிலும் எதார்த்தங்களை அருமையா எடுத்து காட்டுறீங்க. அதை கவிதையில் சொன்ன விதம் நல்லா இருக்குங்க.

ஸ்ரீராம். said...

ஒவ்வொரு வரியை எடுத்துப் போட்டுப் பாராட்டுவதைவிட மொத்தமாக சொல்லிடலாம் நல்லா இருக்கு என்று...மத்யமர்களின் ஒருநாள் அல்லது ஒவ்வொரு நாள்...

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்ல அருமையான கவிதைகள் பாலா சார்

vasu balaji said...

நெல்லை எஸ்.ஏ.சரவணக்குமார் said...

/ கவிதையுலும் கலக்குறீங்க சார்!/

நன்றிங்க சரவணக்குமார்.

நிஜாம் கான் said...

அண்ணே! அருமையான பார்வை. நல்ல கருத்துக்கள். அதுவும் குறிப்பாக‌

//அப்பாவின் முகத்தில்
புயல் எச்சரிக்கைக் கொடி//

//பாச‌ப் பொட்ட‌ல‌த்துக்காய்க்
ஏங்கிக் காத்திருக்கும்
அடிதாங்கிக் குழ‌ந்தை..//

தூள்..,

vasu balaji said...

Karthik Viswanathan said...

// அண்ணே,

சும்மா பேக் ஃபுட், ஃப்ரண்ட் ஃபுட், புல், ஹூக்-ன்னு தமிழ் எழுத்துல பெரிய சேவாக் ஆகிட்டு வரீங்க...
சூப்பர்ர்ர்....
சரி, கல்யாணம் பண்ணிக்கலாமா வேண்டாமா, உங்க கருத்து என்ன?
இல்ல, ஆயிரம் காலத்து பயிர மேஞ்சுருவோமா?//

ரைட்டு:)). எப்ப கலியாணம்.

vasu balaji said...

கலகலப்ரியா said...

//அடுத்த‌ வீட்டில்//

//மீண்டும் முளைக்கும்
ஆயிர‌ம் கால‌த்துப் ப‌யிர்//

:)//

:>

vasu balaji said...

இவன் said...

/Enna tamilnattula romba malaiyooo//

ஆமாங்க. :))

vasu balaji said...

Chitra said...

//பாமரன் சார், கவிதையிலும் எதார்த்தங்களை அருமையா எடுத்து காட்டுறீங்க. அதை கவிதையில் சொன்ன விதம் நல்லா இருக்குங்க.//

நன்றிங்க சித்ரா.

vasu balaji said...

ஸ்ரீராம். said...

/ஒவ்வொரு வரியை எடுத்துப் போட்டுப் பாராட்டுவதைவிட மொத்தமாக சொல்லிடலாம் நல்லா இருக்கு என்று...மத்யமர்களின் ஒருநாள் அல்லது ஒவ்வொரு நாள்...//

நன்றிங்க. சரியான புரிதலுக்கு.

vasu balaji said...

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

/ நல்ல அருமையான கவிதைகள் பாலா சார்/

முதல் வரவுக்கும் பாராட்டுக்கும் நன்றி ஸ்டார்ஜன்.

நினைவுகளுடன் -நிகே- said...

படித்து முடிந்த பின்பும்
கவிதை மனதில் பதிந்து நிற்கிறது
வாழ்த்துக்கள்

Unknown said...

அய்யா நீங்க எவ்வளவு அருமையா எல்லாருக்கும் புரியிற மாதிரி எழுதுறீங்க. கொஞ்சம் இந்த கலகலப்ரியாவுக்கும் சொல்லிக்குடுங்க. எனக்குக் குடுத்த அசைன்மெண்ட்டப் படிச்சதுல இருந்து சோறு தண்ணிக் கொள்ள மாட்டேங்குது.

கலகலப்ரியா said...

//முகிலன் said...

அய்யா நீங்க எவ்வளவு அருமையா எல்லாருக்கும் புரியிற மாதிரி எழுதுறீங்க. கொஞ்சம் இந்த கலகலப்ரியாவுக்கும் சொல்லிக்குடுங்க. எனக்குக் குடுத்த அசைன்மெண்ட்டப் படிச்சதுல இருந்து சோறு தண்ணிக் கொள்ள மாட்டேங்குது.//

அங்க எஸ்கேப்... இங்க அழுவாச்சியா... தப்பிக்க முடியாதுங்....

அது சரி(18185106603874041862) said...

//
அப்பாவின் முகத்தில்
புயல் எச்சரிக்கைக் கொடி
பார்த்த மாத்திரத்தில்
அம்மாவின்
க‌ண்ணீர் மழைக்கஞ்சி
அடுத்த‌ வீட்டில்
அடைக்க‌ல‌ம் தேடி
பாச‌ப் பொட்ட‌ல‌த்துக்காய்க்
ஏங்கிக் காத்திருக்கும்
அடிதாங்கிக் குழ‌ந்தை..
//

Simply Great!!!

உரையாடல் போட்டிக்கு அனுப்பி இருக்கீங்க...வெற்றி பெற வாழ்த்துக்கள்...

vasu balaji said...

அது சரி said...

// Simply Great!!!

உரையாடல் போட்டிக்கு அனுப்பி இருக்கீங்க...வெற்றி பெற வாழ்த்துக்கள்...//

நன்றிங்க அது சரி.

vasu balaji said...

கலகலப்ரியா said...

// அங்க எஸ்கேப்... இங்க அழுவாச்சியா... தப்பிக்க முடியாதுங்....//

சரண்டர்தான் வழி:))

vasu balaji said...

முகிலன் said...

//அய்யா நீங்க எவ்வளவு அருமையா எல்லாருக்கும் புரியிற மாதிரி எழுதுறீங்க. கொஞ்சம் இந்த கலகலப்ரியாவுக்கும் சொல்லிக்குடுங்க. //

அய்யோ. அது என் வாத்திச்சி.

//எனக்குக் குடுத்த அசைன்மெண்ட்டப் படிச்சதுல இருந்து சோறு தண்ணிக் கொள்ள மாட்டேங்குது.//

சில நேரம் தடயம் கண்ணெதிரிலேயே இருக்கும். பாருங்க.

vasu balaji said...

நினைவுகளுடன் -நிகே- said...

// படித்து முடிந்த பின்பும்
கவிதை மனதில் பதிந்து நிற்கிறது
வாழ்த்துக்கள்//

மிக்க நன்றி நிகே.

புலவன் புலிகேசி said...

கோபக்கார தந்தைகள் வாழும் குடும்பத்து கல்யாணம்..நல்லா இருந்துது ஐயா..

kavitha said...

வணக்கம்
என்ன சொல்றது, ரொம்ப பிரமாதம், ரொம்ப ரொம்ப எதார்த்தம். அப்போ அப்போ நீங்க சொல்றது நடந்தா எதோ சமாளிக்கலாம், கவிதை ரொம்ப அழகா இருக்கு .

Jerry Eshananda said...

பயிரை மேஞ்சுட்டேன். நீண்ட நேரம் அசை போட்டேன்.ரொம்ப நல்லாயிருக்கு..

vasu balaji said...

புலவன் புலிகேசி said...

/கோபக்கார தந்தைகள் வாழும் குடும்பத்து கல்யாணம்..நல்லா இருந்துது ஐயா..//

நன்றிங்க புலிகேசி

vasu balaji said...

kavi said...

/வணக்கம்
என்ன சொல்றது, ரொம்ப பிரமாதம், ரொம்ப ரொம்ப எதார்த்தம். அப்போ அப்போ நீங்க சொல்றது நடந்தா எதோ சமாளிக்கலாம், கவிதை ரொம்ப அழகா இருக்கு .//

வணக்கம். வரவுக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றிங்க

vasu balaji said...

ஜெரி ஈசானந்தா. said...

/பயிரை மேஞ்சுட்டேன். நீண்ட நேரம் அசை போட்டேன்.ரொம்ப நல்லாயிருக்கு..//

நன்றிங்க ஜெரி.:)

sathishsangkavi.blogspot.com said...

//அப்பாவின் முகத்தில்
புயல் எச்சரிக்கைக் கொடி
பார்த்த மாத்திரத்தில்
அம்மாவின்
க‌ண்ணீர் மழைக்கஞ்சி
அடுத்த‌ வீட்டில்
அடைக்க‌ல‌ம் தேடி
பாச‌ப் பொட்ட‌ல‌த்துக்காய்க்
ஏங்கிக் காத்திருக்கும்
அடிதாங்கிக் குழ‌ந்தை..//

அழுத்தமான வரிகள்...........

ரோஸ்விக் said...

நம் இல்லங்களுக்குள் ஒரு முறை 3D கண்ணாடி அணிந்து சென்று பார்ப்பது போல் உள்ளது உங்கள் கவிதை.

ஈரோடு கதிர் சொல்றமாதிரி.... இந்தப் பயிர்கள் இப்போது பூச்சியரித்துப் போவது தான் வருந்ததக்கது.

malar said...

அருமையான கவிதை ....

ஆனால்

அடிக்க‌டி நிக‌ழும்
அந‌ர்த்த‌ங்க‌ள் தாங்கி
முளைத்து, துளிர்த்து
த‌ழைத்து, அழிந்து
மீண்டும் முளைக்கும்
ஆயிர‌ம் கால‌த்துப் ப‌யிர்!

எல்லோருக்கும் கிடைப்பது இல்லை

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//மீண்டும் முளைக்கும்
ஆயிர‌ம் கால‌த்துப் ப‌யிர்//

ஆகா , இப்பிடியே நடந்து கொண்டு இருக்கும் என்று யாரும் கனவு காண வேண்டாம்.
இப்பவே எல்லாம் மாறிப் போச்சு. குழந்தை அடி வாங்காது. போலீஸ் க்கு அறிவிக்கும்.

vasu balaji said...

Sangkavi said...

/ அழுத்தமான வரிகள்.........../

நன்றிங்க.

vasu balaji said...

malar said...

/ அருமையான கவிதை ....

ஆனால்

எல்லோருக்கும் கிடைப்பது இல்லை/

தலைப்பும் கடைசி வரியும் சேர்ந்தால் சொலவடை. அதற்குள் இருப்பது இத்தனை அநர்த்தங்கள் என்பது கவிதையின் நோக்கம்.

vasu balaji said...

ஜெஸ்வந்தி said...

/ ஆகா , இப்பிடியே நடந்து கொண்டு இருக்கும் என்று யாரும் கனவு காண வேண்டாம்.
இப்பவே எல்லாம் மாறிப் போச்சு. குழந்தை அடி வாங்காது. போலீஸ் க்கு அறிவிக்கும்.//

இது சாதாரண நம்மூர் மத்திய வகுப்புக் குடும்பங்க. இங்க இதெல்லாம் வருமா தெரியாது.

S.A. நவாஸுதீன் said...

///அடிக்க‌டி நிக‌ழும்
அந‌ர்த்த‌ங்க‌ள் தாங்கி
முளைத்து, துளிர்த்து
த‌ழைத்து, அழிந்து
மீண்டும் முளைக்கும்
ஆயிர‌ம் கால‌த்துப் ப‌யிர்!///

வாவ். என்ன அருமையா சொல்லியிருக்கீங்க சார். சூப்பர். அது எப்படி சார். எல்லா பந்திலும் சிக்ஸர் அடிக்கிறீங்க. அந்த ரகசியம் கொஞ்சம் சொல்லித்தாங்களேன்.

vasu balaji said...

S.A. நவாஸுதீன் said...

/ வாவ். என்ன அருமையா சொல்லியிருக்கீங்க சார். சூப்பர். அது எப்படி சார். எல்லா பந்திலும் சிக்ஸர் அடிக்கிறீங்க. அந்த ரகசியம் கொஞ்சம் சொல்லித்தாங்களேன்.//

கண்ணு மூடிட்டு காடா சுத்தறதுதான். =))

அவனி அரவிந்தன் said...

சக்கரச் சுழற்சியில் சிக்கிய வாழ்க்கைக்கு 'கல்யாணம் என்பது' என்ற கவிதை ஒரு தோரணம். மிகவும் ரசித்தேன்.

vasu balaji said...

அவனி அரவிந்தன் said...

/சக்கரச் சுழற்சியில் சிக்கிய வாழ்க்கைக்கு 'கல்யாணம் என்பது' என்ற கவிதை ஒரு தோரணம். மிகவும் ரசித்தேன்./

முதல் வரவுக்கும், பின்னூட்டத்துக்கும் தொடர்வதற்கும் நன்றி அரவிந்தன்.

thiyaa said...

அருமையான கவிதை
நல்ல நடை
வெற்றிபெற வாழ்த்துகிறேன்.

vasu balaji said...

நன்றி தியா

Ashok D said...

//அடிக்க‌டி நிக‌ழும்
அந‌ர்த்த‌ங்க‌ள் தாங்கி
முளைத்து, துளிர்த்து
த‌ழைத்து, அழிந்து
மீண்டும் முளைக்கும்
ஆயிர‌ம் கால‌த்துப் ப‌யிர்!//

எனக்கு பிடித்த வரிகள்.
வாழ்த்துகள்

vasu balaji said...

D.R.Ashok said...


/ எனக்கு பிடித்த வரிகள்.
வாழ்த்துகள்/

வாங்க அஷோக். நன்றிங்க.

Venkata Ramanan S said...

Gud1...kudos

S.A. நவாஸுதீன் said...

போட்டிக்கு அனுப்பியிருக்கீங்களா!!

வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள் பாலா சார்.

Thenammai Lakshmanan said...

அடுத்த‌ வீட்டில்
அடைக்க‌ல‌ம் தேடி
//பாச‌ப் பொட்ட‌ல‌த்துக்காய்க்
ஏங்கிக் காத்திருக்கும்
அடிதாங்கிக் குழ‌ந்தை..

அடிக்க‌டி நிக‌ழும்
அந‌ர்த்த‌ங்க‌ள் தாங்கி
முளைத்து, துளிர்த்து
த‌ழைத்து, அழிந்து
மீண்டும் முளைக்கும்
ஆயிர‌ம் கால‌த்துப் ப‌யிர்!//

மிக அருமை வானம் பாடிகள்
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்

Radhakrishnan said...

வாழ்க்கையின் எதார்த்தம் சொல்லும் அழகிய கவிதை.

அடிபணிந்து அடிமையாய் வாழ்வைத் தொலைக்கும் அன்பு மறந்த மானிடர்கள்.

வெற்றி பெற வாழ்த்துகள் ஐயா.

Sakthi said...

அந‌ர்த்த‌ங்க‌ள் //

apudinna enna?