Thursday, December 24, 2009

செத்தும்...



உச்சி வெயில் போதில்
உருகும் தார்ச் சாலையில்
உருட்டித் தள்ளி
என் காலுக்கு லாடம்..

ஓரமாய் மர நிழலில்
ஊசியால் குத்துப் படும்
என் தாத்தனின்  தோல்
என் எஜமானனுக்கு செருப்பு..

செத்தும் கொடுத்தான்
எனப் பார் புகழ‌
நாங்களென்ன
மனிதர்களா?
***
தாரை, தப்பட்டை
போஸ்டர், சாராயம்
பூத்தேர், புதுப்புடவை

புதை குழியருகில்
பசியால் மரித்த பாட்டிக்கு
வாய் கொள்ளா அரிசி

துண்டு விரித்த காசில்
துக்கம் சுமந்த கூட்டமென்றறியாமல்
பாலூற்ற அழைக்கிறான்
புதைப்பவன் காசுக்காக..
*****

78 comments:

சுண்டெலி(காதல் கவி) said...

//செத்தும் கொடுத்தான்
எனப் பார் புகழ‌
நாங்களென்ன
மனிதர்களா?//

keezhmatta makkalin thyagam eppothumae veli varuvathillai...

க.பாலாசி said...

//ஓரமாய் மர நிழலில்
ஊசியால் குத்துப் படும்//

நானும் ஏற்கனவே அழுதிட்டேன். யாரும் கேட்கமாட்றாங்க தல..

இரண்டாவதும்.... ம்ம்ம்ம்.....

இப்டி போட்டு பின்னிட்டீங்களே.

மணிஜி said...

எதோ ஒரு மாடு வந்து மைனஸ் ஓட்டு போட்டிருக்கு.

எறும்பு said...

ஜூபரு.. கவிதை நல்லாருக்கு... அதுக்கேத்த போடோவும்

aambalsamkannan said...

'எதோ ஒரு மாடு வந்து மைனஸ் ஓட்டு போட்டிருக்கு'
ஏன் இப்படி?

ஏனனோ மனதை தொடவில்லை.

எறும்பு said...

// தண்டோரா ...... said...

எதோ ஒரு மாடு வந்து மைனஸ் ஓட்டு போட்டிருக்கு.///

பிரபலம்னாலே ப்ராபளம் தானே...
பிரபல பதிவர்
வானம்பாடிகள் வாழ்க வாழ்க

சூர்யா ௧ண்ணன் said...

//புதை குழியருகில்
பசியால் மரித்த பாட்டிக்கு
வாய் கொள்ளா அரிசி//

யதார்த்த வரிகள்.. அருமையான கவிதை தலைவா!

ராஜ நடராஜன் said...

கண்ணதாசனுக்குப் பிறகு எளிய நடை கவிதை சொல்றது யாருன்னு கேட்டா ஆட்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.கட்டை விரலை உங்களுக்கு தாரை வார்க்கிறேன்.

அகல்விளக்கு said...

//ராஜ நடராஜன் Says:
December 24, 2009 6:59 PM

கண்ணதாசனுக்குப் பிறகு எளிய நடை கவிதை சொல்றது யாருன்னு கேட்டா ஆட்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.கட்டை விரலை உங்களுக்கு தாரை வார்க்கிறேன்.//

அதே
அதே
அதேதான்...

பெசொவி said...

முதல் கவிதை மிகவும் அருமை.

ஈரோடு கதிர் said...

ரெண்டுமே யதார்த்த கவிதைகள்

மாடெல்லாம் பேச வந்த நம்ம டங்குவாரு அந்துபோயிரும்னே

கலகலப்ரியா said...

அருமை சார்... வர வர ஒளிர்கிறது... எழுத்துகள்...

தண்டோரா... ஒன்றில்லை.. இரண்டு... =))

ஆரூரன் விசுவநாதன் said...

//தண்டோரா//

எதோ ஒரு மாடு வந்து மைனஸ் ஓட்டு போட்டிருக்கு.

ஏன் தல மாட்ட கேவலப் படுத்தறீங்க....

ஆரூரன் விசுவநாதன் said...

பாலாண்ணே.......

எப்பவும் போல அசத்தல்.....

ப்ரியமுடன் வசந்த் said...

ரொம்ப நல்லாருக்கு...!

T.V.ராதாகிருஷ்ணன் said...

பின்னிட்டீங்க

vasu balaji said...

காதல் கவி said...

/ keezhmatta makkalin thyagam eppothumae veli varuvathillai...//

ஆமாங்க.

vasu balaji said...

க.பாலாசி said...

// நானும் ஏற்கனவே அழுதிட்டேன். யாரும் கேட்கமாட்றாங்க தல..//

பண்பலை பாட்டு மாதிரி இந்த கவிதை உனக்குதான் :))

// இரண்டாவதும்.... ம்ம்ம்ம்.....

இப்டி போட்டு பின்னிட்டீங்களே.//

நன்றி.

vasu balaji said...

தண்டோரா ...... said...

//எதோ ஒரு மாடு வந்து மைனஸ் ஓட்டு போட்டிருக்கு.//

:)). நமக்குதான் இது பழகிப்போச்சே தலைவரே.

vasu balaji said...

ராஜகோபால் (எறும்பு) said...

/ஜூபரு.. கவிதை நல்லாருக்கு... அதுக்கேத்த போடோவும்//

வாங்க சார். நன்றி:)

vasu balaji said...

aambal samkannan said...

//'எதோ ஒரு மாடு வந்து மைனஸ் ஓட்டு போட்டிருக்கு'
ஏன் இப்படி?

ஏனனோ மனதை தொடவில்லை.//

இல்லைங்க சாம். அது தண்டோரா,நான்,கதிர்,ப்ரியா என்ன எழுதினாலும் படிக்காம போடுறவங்க இருக்காங்க தினமும். அதுக்கு சொன்னது. மற்றபடி ஆரோக்கியமா பின்னூட்டம் போட்டோ போடாமலோ நெகடிவ் வோட் போடுறவங்களைத் தெரியும். தவறாக எண்ண வேண்டாம். ஏதாவது வருத்தமிருப்பின், மன்னியுங்கள்.:)

vasu balaji said...

ராஜகோபால் (எறும்பு) said...

// தண்டோரா ...... said...

எதோ ஒரு மாடு வந்து மைனஸ் ஓட்டு போட்டிருக்கு.///

பிரபலம்னாலே ப்ராபளம் தானே...
பிரபல பதிவர்
வானம்பாடிகள் வாழ்க வாழ்க//

:)).

கமலேஷ் said...

அழகா இருக்கு... என் வாழ்த்துக்கள்..

vasu balaji said...

சூர்யா ௧ண்ணன் said...

/ யதார்த்த வரிகள்.. அருமையான கவிதை தலைவா!//

நன்றி தலைவா. துறுத்தல் ரொம்ப நாளா அமைதியா இருக்கு:(

vasu balaji said...

ராஜ நடராஜன் said...

/கண்ணதாசனுக்குப் பிறகு எளிய நடை கவிதை சொல்றது யாருன்னு கேட்டா ஆட்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.கட்டை விரலை உங்களுக்கு தாரை வார்க்கிறேன்.//

இந்தப் பாராட்டுக்கு எனக்கு தகுதியிருக்கிறதோ இல்லையோ, நெஞ்சு நிறைகிறது. நன்றி சார்.

vasu balaji said...

அகல்விளக்கு said...

//ராஜ நடராஜன் Says:
December 24, 2009 6:59 PM


அதே
அதே
அதேதான்...//

அவருக்கு சொன்ன அதே:)

vasu balaji said...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

/ முதல் கவிதை மிகவும் அருமை./

நன்றிங்க.

vasu balaji said...

ஈரோடு கதிர் said...

//ரெண்டுமே யதார்த்த கவிதைகள்

மாடெல்லாம் பேச வந்த நம்ம டங்குவாரு அந்துபோயிரும்னே//

அது வாஸ்தவம்:)

vasu balaji said...

கலகலப்ரியா said...

// அருமை சார்... வர வர ஒளிர்கிறது... எழுத்துகள்...//

மிக மிக நன்றியம்மா.

// தண்டோரா... ஒன்றில்லை.. இரண்டு... =))//

ம்கும். அவ்வ்வ்வ்வ்வ். இன்னும் ரெண்டு இன்னும் விழலை. என் க்ளாமர் போச்சா:((

vasu balaji said...

ஆரூரன் விசுவநாதன் said...

//தண்டோரா//

எதோ ஒரு மாடு வந்து மைனஸ் ஓட்டு போட்டிருக்கு.

ஏன் தல மாட்ட கேவலப் படுத்தறீங்க....

:))

vasu balaji said...

ஆரூரன் விசுவநாதன் said...

// பாலாண்ணே.......

எப்பவும் போல அசத்தல்.....//

நன்றி ஆரூரன்.

vasu balaji said...

பிரியமுடன்...வசந்த் said...

/ரொம்ப நல்லாருக்கு...!/

நன்றி வசந்த்:)

ஸ்ரீராம். said...

இரண்டுமே நன்றாக இருக்கின்றன. இரண்டாவது வீரியமாக

vasu balaji said...

T.V.Radhakrishnan said...

/பின்னிட்டீங்க/

நன்றி சார்.

vasu balaji said...

ஸ்ரீராம். said...

/ இரண்டுமே நன்றாக இருக்கின்றன. இரண்டாவது வீரியமாக/

நன்றிங்க ஸ்ரீராம்.

Jerry Eshananda said...

செத்தும் வாழும் கவிதை.

vasu balaji said...

ஜெரி ஈசானந்தா. said...

/செத்தும் வாழும் கவிதை./

வாங்க ஜெரி. நன்றிங்க.

பிரபாகர் said...

//பசியால் மரித்த பாட்டிக்கு
வாய் கொள்ளா அரிசி//

என்னங்கய்யா சொல்றது... இது போன்ற யதார்த்தங்கள் மனதை நிறைய பாதிக்க்கிறது.

வருத்தும் மனம்
ஆனாலும் இக்
கருத்து நிறை
கவியிரண்டும்

சுருக்கென
சொற்களால்
வீரியத்தால்
மிக அருமை.

பிரபாகர்.

இராகவன் நைஜிரியா said...

கவிதை... அருமை.

// துண்டு விரித்த காசில்
துக்கம் சுமந்த கூட்டமென்றறியாமல்
பாலூத்த அழைக்கிறான்
புதைப்பவன் காசுக்காக.. //

அருமை அருமை...

காசுக்காக... பின்னிட்டீங்க அண்ணே.

பா.ராஜாராம் said...

ரெண்டு கவிதைகளுமே, ரொம்ப பாதிப்பு ஏற்படுத்துகிறது பாலா சார்!மிக அருமை.

பா.ராஜாராம் said...

தண்டோரா....

:-)))))

vasu balaji said...

பிரபாகர் said...

//பசியால் மரித்த பாட்டிக்கு
வாய் கொள்ளா அரிசி//

என்னங்கய்யா சொல்றது... இது போன்ற யதார்த்தங்கள் மனதை நிறைய பாதிக்க்கிறது.

வருத்தும் மனம்
ஆனாலும் இக்
கருத்து நிறை
கவியிரண்டும்

சுருக்கென
சொற்களால்
வீரியத்தால்
மிக அருமை.

பிரபாகர்.//

ஆமாங்க. நன்றி பிரபாகர்.

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/ கவிதை... அருமை.

அருமை அருமை...

காசுக்காக... பின்னிட்டீங்க அண்ணே.//

நன்றிண்ணே.:))

vasu balaji said...

பா.ராஜாராம் said...

/ரெண்டு கவிதைகளுமே, ரொம்ப பாதிப்பு ஏற்படுத்துகிறது பாலா சார்!மிக அருமை.//

நன்றிங்க பாரா.

geethappriyan said...

அடடா,ஜோர்

butterfly Surya said...

Simple Punch..

butterfly Surya said...

தண்டோரா அண்ணனுக்கு பதிவை பார்த்ததும் மைனஸ் ஒட்டு மட்டும் கரிட்டா தெரிது பாருங்க சார்...??

வாங்கி பழகிட்டாரு போல..

vasu balaji said...

butterfly Surya said...

/ Simple Punch../

Thank you

vasu balaji said...

butterfly Surya said...

/தண்டோரா அண்ணனுக்கு பதிவை பார்த்ததும் மைனஸ் ஒட்டு மட்டும் கரிட்டா தெரிது பாருங்க சார்...??

வாங்கி பழகிட்டாரு போல../

நாங்க நாலு பேருமே பழகினவங்கதான் சூர்யா சார். சமயத்துல 0/2 வாங்கியிருக்கோம்.=))

vasu balaji said...

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

/அடடா,ஜோர்/

நன்றி கார்த்திக்

Unknown said...

மீ த ஃபிஃப்ட்டி

ரெண்டு கவிதையும் சூப்பர். அருஞ்சொற்பொருள் இல்லாமலே எல்லாருக்கும் புரியும்..

அகநாழிகை said...

//புதை குழியருகில்
பசியால் மரித்த பாட்டிக்கு
வாய் கொள்ளா அரிசி//

அருமை. வாழ்த்துகள்.

- பொன்.வாசுதேவன்

cheena (சீனா) said...

அன்பின் பாலா

கவிதைகள் இயல்பானவை - மாடு லாடம் - என்று தான் இது நவீனமயம் ஆகுமோ - பாவம் வாயில்லா சீவன் - ஆதங்கம் புரிகிறது பாலா

பசியால் வாடிய பாட்டிக்கு வாய் கொள்ளா அரிசி - துக்கம் சுமந்த கூட்டத்தினை பாலூற்ற அழைக்கிறான் - காசுக்காக

அடடா என்ன சிந்தனை என்ன கர்பனை - அற்புதம் பாலா -

நல்வாழ்த்துகள் பாலா

பழமைபேசி said...

Awesome Balannae! I am so glad to meet you!! Now only I am back to normal from such a joyful and truthful event!!!

vasu balaji said...

முகிலன் said...

/மீ த ஃபிஃப்ட்டி

ரெண்டு கவிதையும் சூப்பர். அருஞ்சொற்பொருள் இல்லாமலே எல்லாருக்கும் புரியும்..//

ஆமாமா. அசைன்மெண்ட் பயமில்லைல்ல:))நன்றி முகிலன்

vasu balaji said...

அகநாழிகை said...

//புதை குழியருகில்
பசியால் மரித்த பாட்டிக்கு
வாய் கொள்ளா அரிசி//

அருமை. வாழ்த்துகள்.

- பொன்.வாசுதேவன்//

நன்றி சார்.

vasu balaji said...

cheena (சீனா) said...

அன்பின் பாலா

கவிதைகள் இயல்பானவை - மாடு லாடம் - என்று தான் இது நவீனமயம் ஆகுமோ - பாவம் வாயில்லா சீவன் - ஆதங்கம் புரிகிறது பாலா

பசியால் வாடிய பாட்டிக்கு வாய் கொள்ளா அரிசி - துக்கம் சுமந்த கூட்டத்தினை பாலூற்ற அழைக்கிறான் - காசுக்காக

அடடா என்ன சிந்தனை என்ன கர்பனை - அற்புதம் பாலா -

நல்வாழ்த்துகள் பாலா//

நன்றிங்க சீனா.

vasu balaji said...

பழமைபேசி said...

//Awesome Balannae! I am so glad to meet you!! Now only I am back to normal from such a joyful and truthful event!!!//

Thank you. :)

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நல்லாருக்கு.

Zero to Infinity said...

Touching poem.....it has lot of things if we see in another angle.

உச்சி வெயில் போதில்
உருகும் தார்ச் சாலையில்
உருட்டித் தள்ளி
என் காலுக்கு லாடம்..

Hmmmm....I won't agree on this. In my village we will do this in early morning or in evening. Also லாடம் is good for the cow. With out that, it will have severe pain in legs.

உருட்டித் தள்ளி.....it is not like actually உருட்டித் தள்ளி....they have a technique....by that technique..the cow will come down to floor step by step.

In my village up to my knowledge 1 to 5% people will over load or beat the cow. Rest all will treat cow as family member and they will load below the pulling capacity of the cow.

Now there are no more cows...we have more than 20 tractors emitting tons of CO2.

Till we used the cow(living with nature)...there was rain in time, on time and every time. When we stated the industrialization either there is drought or flood.

ஓரமாய் மர நிழலில்
ஊசியால் குத்துப் படும்
என் தாத்தனின் தோல்
என் எஜமானனுக்கு செருப்பு.

In olden day we won't do the tanning of leather. So no harm to earth.

Now tanning of leather is the biggest threat to mother earth...thats why the developed countries are completely stopped tanning and out sourced to India and other developing countries.

Alternate to this is wearing rubber or plastic or resin which is also equally harm to our mother earth.

துண்டு விரித்த காசில்
துக்கம் சுமந்த கூட்டமென்றறியாமல்
பாலூற்ற அழைக்கிறான்
புதைப்பவன் காசுக்காக..

What to do sir...other wise he will be another பசியால் மரித்த பாட்டி. For us when date "one" comes salary...for him "some one" goes, then only salary.

I enjoyed reading this poem, the above are just outcome of the enjoyment. Not for SHOW OFF.

Unknown said...

//புதை குழியருகில்
பசியால் மரித்த பாட்டிக்கு
வாய் கொள்ளா அரிசி//

உண்மை வரிகள் .. நல்லா இருக்குங்க ...

vasu balaji said...

ஸ்ரீ said...

/நல்லாருக்கு./

நன்றி ஸ்ரீ

vasu balaji said...

Zero to Infinity said...

முதல் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

/Hmmmm....I won't agree on this. In my village we will do this in early morning or in evening. Also லாடம் is good for the cow. With out that, it will have severe pain in legs./

True.

/it is not like actually உருட்டித் தள்ளி....they have a technique....by that technique..the cow will come down to floor step by step./

நர்சிம் மிக அழகாக அய்யனார் கம்மாவில் சொல்லியிருக்கிறார்.

/What to do sir...other wise he will be another பசியால் மரித்த பாட்டி. For us when date "one" comes salary...for him "some one" goes, then only salary./

mostly they dont allow if you dont add coins. Nowadays its minimum 5 rs:)
I enjoyed reading this poem, the above are just outcome of the enjoyment. Not for SHOW OFF.

Thank you once again.

vasu balaji said...

பேநா மூடி said...

/ உண்மை வரிகள் .. நல்லா இருக்குங்க .../

நன்றி.

Maheswaran Nallasamy said...

நல்லதொரு கவிதை.. மாட்டு காலுக்கு லாடம் கட்டாவிட்டால் என்ன ஆகும்? மாட்டின் குளம்பு சீக்கிரம் தேய்ந்து போய் மாடு நடக்கவே இயலாத நிலைக்கு ஆளாகிவிடும். லாடம் அடிக்கும் போது மாட்டு படும் அவஸ்தை கொஞ்சம் கொடுமை.. உங்கள் மனது புரிகிறது.

vasu balaji said...

Maheswaran Nallasamy said...

/நல்லதொரு கவிதை.. மாட்டு காலுக்கு லாடம் கட்டாவிட்டால் என்ன ஆகும்? மாட்டின் குளம்பு சீக்கிரம் தேய்ந்து போய் மாடு நடக்கவே இயலாத நிலைக்கு ஆளாகிவிடும். //

நமக்கு உழைக்கத் தானே.

/லாடம் அடிக்கும் போது மாட்டு படும் அவஸ்தை கொஞ்சம் கொடுமை.. உங்கள் மனது புரிகிறது./

நன்றி மஹேஸ்

balavasakan said...

உருக்கமான வரிகள் சார்... ரொம்ப நன்றாக இருந்தது..

vasu balaji said...

Balavasakan said...

/உருக்கமான வரிகள் சார்... ரொம்ப நன்றாக இருந்தது./

நன்றி வாசு.

நிஜாம் கான் said...

//துண்டு விரித்த காசில்
துக்கம் சுமந்த கூட்டமென்றறியாமல்
பாலூற்ற அழைக்கிறான்
புதைப்பவன் காசுக்காக..//

அண்ணே! இந்த வரிகளுக்கு கோடி கொடுக்கலாம்ணே! பாதிக்கும் வரிகள்.

Prathap Kumar S. said...

நல்லாருக்கு சார் :-)

vasu balaji said...

இப்படிக்கு நிஜாம்.., said...

/ அண்ணே! இந்த வரிகளுக்கு கோடி கொடுக்கலாம்ணே! பாதிக்கும் வரிகள்./

நன்றிங்க நிஜாம்.

vasu balaji said...

நாஞ்சில் பிரதாப் said...

/நல்லாருக்கு சார் :-)/

நன்றி பிரதாப்.

கார்த்திகைப் பாண்டியன் said...

நல்லாயிருக்கு தலைவரே ..

priyamudanprabu said...

செத்தும் கொடுத்தான்
எனப் பார் புகழ‌
நாங்களென்ன
மனிதர்களா?
.

///

nice

S.A. நவாஸுதீன் said...

ரெண்டு கவிதையும் அருமை சார்.

vasu balaji said...

கார்த்திகைப் பாண்டியன் said...

/நல்லாயிருக்கு தலைவரே ../

நன்றிங்க.

vasu balaji said...

பிரியமுடன் பிரபு said...

/// nice///

Thank you Prabhu

vasu balaji said...

S.A. நவாஸுதீன் said...

/ரெண்டு கவிதையும் அருமை சார்./

நன்றி நவாஸ்