Wednesday, December 23, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த V 3.8

அரசியல் பிரிவு தலைவர்களை படைத்தரப்பு சுடவில்லையாம் - சவீந்திர சில்வா

பின்ன யாரு 'கருணை' காட்டினது இந்த மனிதாபிமான இழவில. நாய்ங்களா!
____________________________________________________________________________________________________________
கோகன்னாவே விடுதலைப்புலிகளின் தலைவர்களை வெள்ளைக்கொடியுடன் சரணடைய கூறியவர்: கொழும்பு ஊடகம்

மஞ்சத்தண்ணி தெளிச்சாச்சா? ஆடு அலறினா தெரிஞ்சிடும் யாருன்னு.
____________________________________________________________________________________________________________
படையினர் வெளிநாடு சென்றால் அங்கு கைது செய்யப்படும் ஆபத்து!அமைச்சர் ஜி.எல்.ப்ரீஸ்

யாருமே போடாம வலயம் விழுந்திடுச்சா? ரைட்டு. இப்படி பயந்தே சாவுங்க!
____________________________________________________________________________________________________________
அலரி மாளிகை விருந்துபசாரங்களுக்காக பெருந்தொகை பணம் செலவிடப்பட்டுள்ளது : மங்கள சமரவீர

அதிபர் நிவாரண நிதின்னு எழுதிடுவானுங்க.
____________________________________________________________________________________________________________
விடுதலைப் புலிகளின் கப்பல் வலையமைப்பு குறித்த தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன : சிங்கள ஊடகம்

எல்லாத்தையும் முடிச்சிட்டேன்னு அலட்டிட்டு என்னா வலையெல்லாம் பின்னுறானுங்க பரதேசிங்க.
____________________________________________________________________________________________________________
நிவாரணம் வழங்க வேண்டிய பணம் சூறையாடப்படுவதை தடுக்கும் நோக்கிலே தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்தேன் : சரத் பொன்சேகா

பங்கு கொடுக்காமல்னு சேர்த்துப் படிச்சிக்கணுமாய்யா?
____________________________________________________________________________________________________________
சரத் பொன்சேகாவின் குற்றச்சாட்டு தொடர்பான ஐ.நாவின் கடிதத்தை அரசு பரிசீலனை

ம்கும். ஆமாங்க சாரின்னு சொல்லிடப் போறானுங்க.
____________________________________________________________________________________________________________
வவுனியா- யாழ்ப்பாணம் புகையிரத பாதையை புனரமைக்க ரூ2125 கோடி இந்தியா நிதியுதவி

ஏனுங். யாருமே இல்லாத ஊருக்கு யாருக்குங்க ரயிலுடப் போறீங்க. கம்பெனி வருதோ?
____________________________________________________________________________________________________________
தவறு செய்துவிட்டேன்: ராஜபக்சே புலம்பல்

உப்பு தின்னா தெரியாம தின்னுட்டேன்னா முடியுமா பிச்ச. தண்ணி குடிச்சிதான் ஆவணும்.
____________________________________________________________________________________________________________
கொழும்பு செல்லும் தமிழர்கள் பதிவு செய்ய வேண்டியதில்லை: பாசில் ராஜபக்சே

ஆமாம். அப்போதானே தடயமே இல்லாம முடிச்சிடலாம். இவன் பாய்சன் ராஜபக்சே.
____________________________________________________________________________________________________________
கலைஞர் உழைப்புக்கு மக்கள் தந்த பரிசு: தங்கபாலு

ப‌ரிசுன்னாலும், விருதுன்னாலும் வாங்கீற‌லாம் போல‌யே.
____________________________________________________________________________________________________________
2011 தேர்தலிலும் வெற்றி பெறுவோம்: மு.க.அழகிரி

எவ்ளோ ப‌ட்ஜெட்?
____________________________________________________________________________________________________________
தமிழகத்திற்கு மேலும் பல ரயில்வே பாதைகள்: மம்தா பானர்ஜிக்கு கலைஞர் வேண்டுகோள்

இருங்க‌. இல‌ங்கைல‌ முடிச்சிட்டு காசிருந்தா அறிவுப்பு வ‌ரும்.
____________________________________________________________________________________________________________
வாழ்வதற்கு சுதந்திரம் பெற்றுக் கொடுத்த ஜனாதிபதியின் மீது மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர் – நாமல் ராஜபக்ஷ

யார் வாழ‌! ங்கொய்யால‌.எத்த‌னைன்னு க‌ண‌க்கு கூட‌ இல்லாம‌ கொன்ன‌துக்கு பேரு வாழ‌ சுத‌ந்திர‌மாம்.
____________________________________________________________________________________________________________
என் கூடவே பிறந்த காவிரிப் பிரச்சினை: கலைஞர்

அதுக்கொரு விருது பார்ஸேஏஏஏஏஏஏஏல்.
____________________________________________________________________________________________________________
டிவி நடிகையுடன் இருந்த கேரள மாநில காங். பொதுச்செயலாளருக்கு தர்ம அடி: விபச்சார வழக்கும் பதிவு

இளைஞ‌ர் அணிக்கு ஆள் சேர்க்க‌ பேசிட்டிருந்திருப்பாங்க‌ளோ?
____________________________________________________________________________________________________________

69 comments:

S.A. நவாஸுதீன் said...

///பின்ன யாரு 'கருணை' காட்டினது இந்த மனிதாபிமான இழவில. நாய்ங்களா!///

செருப்பால அடிக்கனும் இந்தப்பயலுவள

நிஜாம் கான் said...

வந்திட்டேன்..வந்திட்டேன்..வந்திட்டேன்

S.A. நவாஸுதீன் said...

////ஏனுங். யாருமே இல்லாத ஊருக்கு யாருக்குங்க ரயிலுடப் போறீங்க. கம்பெனி வருதோ?////

என்ன சொன்னாலும் உறைக்காது இதுங்களுக்கு

S.A. நவாஸுதீன் said...

/////ப‌ரிசுன்னாலும், விருதுன்னாலும் வாங்கீற‌லாம் போல‌யே.////

/////எவ்ளோ ப‌ட்ஜெட்?/////

எல்லாத்துக்கும் ஒரு ரேட் இருக்கு. இவங்களுக்கு ஸ்பெஷல் டிஸ்கௌண்ட் ரெகுலர் கஸ்டமர்ங்கறதால

நிஜாம் கான் said...

//தவறு செய்துவிட்டேன்: ராஜபக்சே புலம்பல்

உப்பு தின்னா தெரியாம தின்னுட்டேன்னா முடியுமா பிச்ச. தண்ணி குடிச்சிதான் ஆவணும். //

அதுக்குத்தான் ஊர் ஊராப் போயி கோயில்ல விழுந்து கும்புடுறாய்ங்கே! அண்ணே! இவனுகள் நம்பாதீக எல்லாம் எலக்சன் பண்ணும் மாயம்

வெற்றி-[க்]-கதிரவன் said...

-:))))))))

aambalsamkannan said...

என் கூடவே பிறந்த காவிரிப் பிரச்சினை: கலைஞர்

அதுக்கொரு விருது பார்ஸேஏஏஏஏஏஏஏல்.''

காவிரி கண்ட கலைமகன்னா? கொடுத்தாலும் கொடுப்பாங்க சார்.

Unknown said...

வழக்கம்போல சேவாக் பேட்டிங் மாதிரி சூப்பர்

நாடோடி இலக்கியன் said...

வழக்கம்போல் அதிரடி.

vasu balaji said...

S.A. நவாஸுதீன் said...

/செருப்பால அடிக்கனும் இந்தப் பயலுவள/

இதையும் உலகம் நம்புதே.

/என்ன சொன்னாலும் உறைக்காது இதுங்களுக்கு/

சும்மா இல்ல. அங்க ஏதோ கம்பெனி வரும். அதுக்கு சரக்கு ஏத்த இறக்க தேவை ரயிலு. பன்னாடைங்க.

/எல்லாத்துக்கும் ஒரு ரேட் இருக்கு. இவங்களுக்கு ஸ்பெஷல் டிஸ்கௌண்ட் ரெகுலர் கஸ்டமர்ங்கறதால/

அதெல்லாம் மக்கள் தெளிவா இருப்பாங்க. ரெகுலர்னு எல்லாம் தள்ளுபடி கிடையாது.

vasu balaji said...

இப்படிக்கு நிஜாம்.., said...

/வந்திட்டேன்..வந்திட்டேன்..வந்திட்டேன்/

வாங்க வாங்க:)

/அதுக்குத்தான் ஊர் ஊராப் போயி கோயில்ல விழுந்து கும்புடுறாய்ங்கே! அண்ணே! இவனுகள் நம்பாதீக எல்லாம் எலக்சன் பண்ணும் மாயம்/

இது எலக்‌ஷன் ஜூரமில்ல நிஜாம். என்க்வயரி ஜூரம்.

vasu balaji said...

[ஞானப்]-[பி]-[த்]-[த]-[ன்] (எ) வெற்றி-[க்]-கதிரவன் said...

/-:))))))))/

:>

vasu balaji said...

aambal samkannan said...

/ காவிரி கண்ட கலைமகன்னா? கொடுத்தாலும் கொடுப்பாங்க சார்./

ம்கும். எங்க கண்டாரு. காணாதன்னு கொடுக்கலாம்.

ஈரோடு கதிர் said...

//2011 தேர்தலிலும் வெற்றி பெறுவோம்: மு.க.அழகிரி

எவ்ளோ ப‌ட்ஜெட்?
//

உங்களுக்கு ஆட்டோ எல்லாம் பத்தாது... ரயில் அனுப்புவாங்க இருங்க

க.பாலாசி said...

//தவறு செய்துவிட்டேன்: ராஜபக்சே புலம்பல்
உப்பு தின்னா தெரியாம தின்னுட்டேன்னா முடியுமா பிச்ச. தண்ணி குடிச்சிதான் ஆவணும். //

உப்ப மட்டுமா திண்ணான் அவன். கடலையேயில்ல குடிச்சிட்டான்.

ஆரூரன் விசுவநாதன் said...

நறுக்..கு நறுக்குன்னு நறுக்குனாலும் இவனுகள திருத்த முடியாது.....

தொடருங்கள்

இராகவன் நைஜிரியா said...

வழக்கம் போல் அனைத்தும் அருமை.

// என் கூடவே பிறந்த காவிரிப் பிரச்சினை: கலைஞர்

அதுக்கொரு விருது பார்ஸேஏஏஏஏஏஏஏல். //

அண்ணே இதுக்கும் விருது கொடுத்தாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை.

இராகவன் நைஜிரியா said...

// பின்ன யாரு 'கருணை' காட்டினது இந்த மனிதாபிமான இழவில. நாய்ங்களா //

அதான் சொல்லிட்டீங்களே... அப்புறம் என்ன?

இராகவன் நைஜிரியா said...

// தவறு செய்துவிட்டேன்: ராஜபக்சே புலம்பல் //

தப்பு... எங்க சொல்லச் சொல்லுங்க தப்பு

இராகவன் நைஜிரியா said...

// வவுனியா- யாழ்ப்பாணம் புகையிரத பாதையை புனரமைக்க ரூ2125 கோடி இந்தியா நிதியுதவி //

அடுத்த ஸ்பெக்ட்ரம்?

இராகவன் நைஜிரியா said...

// 2011 தேர்தலிலும் வெற்றி பெறுவோம்: மு.க.அழகிரி

எவ்ளோ ப‌ட்ஜெட்? //

கம்பெனி சீக்ரெட்... வெளியேச் சொல்ல முடியாது

பிரபாகர் said...

இதையெல்லாம் புத்தகமா போட்டு சம்மந்தப்பட்ட பரதேசிங்களுக்கு தரனுங்கய்யா! அப்பவாச்சும் உரைக்குதான்னு பாப்போம்.

பிரபாகர்.

இராகவன் நைஜிரியா said...

// டிவி நடிகையுடன் இருந்த கேரள மாநில காங். பொதுச்செயலாளருக்கு தர்ம அடி: விபச்சார வழக்கும் பதிவு

இளைஞ‌ர் அணிக்கு ஆள் சேர்க்க‌ பேசிட்டிருந்திருப்பாங்க‌ளோ?//

கேசை அப்படித்தான் முடிக்கணும் :-)

sathishsangkavi.blogspot.com said...

தலைவா சரியான சாட்டை அடி..........

சுண்டெலி(காதல் கவி) said...

marupati.. athirati...

neramirunthaal...en puthiya pathivukku varukai thaarungal...

www.elivalai.blogspot.com

vasu balaji said...

முகிலன் said...

/வழக்கம்போல சேவாக் பேட்டிங் மாதிரி சூப்பர்/

:)). நன்றி முகிலன்.

vasu balaji said...

நாடோடி இலக்கியன் said...

/ வழக்கம்போல் அதிரடி./

நன்றிங்க.

vasu balaji said...

ஈரோடு கதிர் said...

/ உங்களுக்கு ஆட்டோ எல்லாம் பத்தாது... ரயில் அனுப்புவாங்க இருங்க/

அது பக்ஸேக்கு அனுப்புறாங்களாம்.

vasu balaji said...

க.பாலாசி said...

/ உப்ப மட்டுமா திண்ணான் அவன். கடலையேயில்ல குடிச்சிட்டான்.//

ரத்தமும் உப்புதானே பாலாசீ

vasu balaji said...

ஆரூரன் விசுவநாதன் said...

/நறுக்..கு நறுக்குன்னு நறுக்குனாலும் இவனுகள திருத்த முடியாது.....

தொடருங்கள்/

:(. ஒருத்தனாவது சிக்குற வரைக்கும் ஓயறதில்லை.

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

வழக்கம் போல் அனைத்தும் அருமை.

நன்றிண்ணே.

/ அண்ணே இதுக்கும் விருது கொடுத்தாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை./

காவிரி காணாட்டியும் பூம்புகார் கண்டவராச்சே. கொடுக்கலாம்.

நசரேயன் said...

//டிவி நடிகையுடன் இருந்த கேரள மாநில காங். பொதுச்செயலாளருக்கு தர்ம அடி: விபச்சார வழக்கும் பதிவு

இளைஞ‌ர் அணிக்கு ஆள் சேர்க்க‌ பேசிட்டிருந்திருப்பாங்க‌ளோ?//

இருக்கலாம்

கிரி said...

//2011 தேர்தலிலும் வெற்றி பெறுவோம்: மு.க.அழகிரி

எவ்ளோ ப‌ட்ஜெட்?//

நல்ல நச்சுனு கேட்டீங்க! இதெல்லாம் எங்கே சென்று முடியுமோ!

கார்த்திகைப் பாண்டியன் said...

எல்லா கமெண்டுமே நச்..

ப்ரியமுடன் வசந்த் said...

//2011 தேர்தலிலும் வெற்றி பெறுவோம்: மு.க.அழகிரி//

ooh.....

அது தேர்தல் இல்லீங்ணா...!
பண்டமாற்றுமுறைங்ணா...!

ப்ரியமுடன் வசந்த் said...

//தமிழகத்திற்கு மேலும் பல ரயில்வே பாதைகள்: மம்தா பானர்ஜிக்கு கலைஞர் வேண்டுகோள்//

எங்கருந்துங்ணா?......

ப்ரியமுடன் வசந்த் said...

//டிவி நடிகையுடன் இருந்த கேரள மாநில காங். பொதுச்செயலாளருக்கு தர்ம அடி: விபச்சார வழக்கும் பதிவு

இளைஞ‌ர் அணிக்கு ஆள் சேர்க்க‌ பேசிட்டிருந்திருப்பாங்க‌ளோ?
//

இருந்ததுக்கேவா அவ்வ்வ்வ்

அப்போ...

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...
/தப்பு... எங்க சொல்லச் சொல்லுங்க தப்பு/

ம்கும். சொல்லீட்டாலும் விட்டுடறதா.

/அடுத்த ஸ்பெக்ட்ரம்?/

இதில பெரிய வில்லத்தனம் இருக்கு. கண்டு பிடிங்க பார்க்கலாம்.=))

/கம்பெனி சீக்ரெட்... வெளியேச் சொல்ல முடியாது/

சீக்ரடே இல்ல. ஓபன் டீல் தான்.

/கேசை அப்படித்தான் முடிக்கணும் :-)/

அஹா. அண்ணே நீங்க கூட சிரிப்பான் போடுறீங்க.குட் குட்

vasu balaji said...

Sangkavi said...

/தலைவா சரியான சாட்டை அடி........../

:) நன்றி.

vasu balaji said...

பிரபாகர் said...

/இதையெல்லாம் புத்தகமா போட்டு சம்மந்தப்பட்ட பரதேசிங்களுக்கு தரனுங்கய்யா! அப்பவாச்சும் உரைக்குதான்னு பாப்போம்.//

=)). அந்த டார்ச்சர் வேறயா

vasu balaji said...

நசரேயன் said...

/ இருக்கலாம்/

துண்டு போட்டு மாட்டிக்கிட்டானாம்:))

vasu balaji said...

கிரி said...

/ நல்ல நச்சுனு கேட்டீங்க! இதெல்லாம் எங்கே சென்று முடியுமோ!/

போற போக்கில வோடர் ஐ.டி. ல பேய்ட்னு போடுவாங்க போல.

vasu balaji said...

கார்த்திகைப் பாண்டியன் said...

/எல்லா கமெண்டுமே நச்./

நன்றிங்க புரஃபசர்:)

vasu balaji said...

பிரியமுடன்...வசந்த் said...

/ ooh.....

அது தேர்தல் இல்லீங்ணா...!
பண்டமாற்றுமுறைங்ணா...!//

அடிமை வியாபாரம்

/எங்கருந்துங்ணா?....../

நிச்சயமா கோபால புரத்தில இருந்து போயஸ்கார்டனுக்கு இல்லை.

vasu balaji said...

காதல் கவி said...

/marupati.. athirati.../

நன்றி

வால்பையன் said...

//என் கூடவே பிறந்த காவிரிப் பிரச்சினை: கலைஞர்

அதுக்கொரு விருது பார்ஸேஏஏஏஏஏஏஏல்.//

:)

அதிக விருது வாங்கியதற்காக ஒரு விருது கொடுக்கப்போறாங்க!

நினைவுகளுடன் -நிகே- said...

வழக்கம்போல் அதிரடி.

geethappriyan said...

ஐயா ,வழமையான அருமை,
வேடிக்கையும் வேதனையும்.
வாக்களித்துவிட்டேன்

Chitra said...

என் கூடவே பிறந்த காவிரிப் பிரச்சினை: கலைஞர்

அதுக்கொரு விருது பார்ஸேஏஏஏஏஏஏஏல்.
__________________________________அஜக்.......அஜக்...... அடுத்த விழாவுக்கு ஐடியா கொடுத்த பாமரன் சார், உங்களுக்கும் சிறப்பு விருது உண்டு.

இராகவன் நைஜிரியா said...

மீ த 50

ஜன்ம சாபல்யம் அடைந்து விட்டேன்.

vasu balaji said...

வால்பையன் said...

// :)

அதிக விருது வாங்கியதற்காக ஒரு விருது கொடுக்கப்போறாங்க!//

செஞ்சாலும் செய்வாங்க:))

vasu balaji said...

நினைவுகளுடன் -நிகே- said...

/ வழக்கம்போல் அதிரடி./

நன்றி நிகே.

vasu balaji said...

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

/ஐயா ,வழமையான அருமை,
வேடிக்கையும் வேதனையும்.
வாக்களித்துவிட்டேன்/

:) நன்றிங்க கார்த்திக்

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/மீ த 50

ஜன்ம சாபல்யம் அடைந்து விட்டேன்.//

அண்ணே என்ன இது. 50லாம் ஜுஜூபி. 200 அடிச்சவங்கண்ணே நீங்க.:))

vasu balaji said...

Chitra said...

/அஜக்.......அஜக்...... அடுத்த விழாவுக்கு ஐடியா கொடுத்த பாமரன் சார், உங்களுக்கும் சிறப்பு விருது உண்டு.//

:)). அதுக்கும் ஒரு விழாவா. நாடு தாங்காது. வேணாம்.

தாராபுரத்தான் said...

வணக்கம்,சுருக்குனு இருக்குதுங்க,,

புலவன் புலிகேசி said...

//கலைஞர் உழைப்புக்கு மக்கள் தந்த பரிசு: தங்கபாலு

ப‌ரிசுன்னாலும், விருதுன்னாலும் வாங்கீற‌லாம் போல‌யே.//

ஹி ஹி ஹி..பரிசா???

T.V.ராதாகிருஷ்ணன் said...

அனைத்தும் அருமை

Jerry Eshananda said...

நறுக் "தெறிக்குது": பாலாண்ணா உங்களை பார்த்தது சந்தோசம்.

vasu balaji said...

அப்பன் said...

/வணக்கம்,சுருக்குனு இருக்குதுங்க,,/

வணக்கங்கய்யா. நன்றி ஊக்கத்துக்கு

vasu balaji said...

புலவன் புலிகேசி said...

/ ஹி ஹி ஹி..பரிசா???/

hi hi அதும் வாங்கணும்ல:))

vasu balaji said...

T.V.Radhakrishnan said...

/ அனைத்தும் அருமை/

நன்றிங்க.

vasu balaji said...

ஜெரி ஈசானந்தா. said...

/நறுக் "தெறிக்குது": பாலாண்ணா உங்களை பார்த்தது சந்தோசம்./

நன்றிங்க ஜெரி. எனக்கும்:)

பின்னோக்கி said...

ஆ.காரம்
எங்க இருந்து தான் இந்த செய்தியெல்லாம் படிப்பீங்கன்னு தெரியலை.
நான் படிக்குற நியூஸ் பேப்பர்ல இந்த செய்திகள் எல்லாம் வர்றதில்லை.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நறுக் "தெறிக்குது": பாலாண்ணா உங்களை பார்த்தது சந்தோசம்.//

Repeat.:-)))))

vasu balaji said...

பின்னோக்கி said...

//ஆ.காரம்
எங்க இருந்து தான் இந்த செய்தியெல்லாம் படிப்பீங்கன்னு தெரியலை.
நான் படிக்குற நியூஸ் பேப்பர்ல இந்த செய்திகள் எல்லாம் வர்றதில்லை//

:)) நன்றிங்க.

vasu balaji said...

ஸ்ரீ said...

//நறுக் "தெறிக்குது": பாலாண்ணா உங்களை பார்த்தது சந்தோசம்.//

Repeat.:-)))))//

உங்களை பார்த்தது சந்தோசம்.
Repeat.:-)))))

ராஜ நடராஜன் said...

வரலாற்றுப் பிழைகளை சுட்டிக் காட்டி சோர்ந்து போன பதிவர்கள் நிறைய பேர் நான் உள்பட.நீங்கள் மட்டுமே இன்னும் நெற்றிக்கண் திறந்து கொண்டுள்ளீர்கள்.உண்மையைச் சொல்லும் அசாத்திய துணிச்சல்.மேலும் சொல்ல வார்த்தை வரவில்லை.

vasu balaji said...

ராஜ நடராஜன் said...

/வரலாற்றுப் பிழைகளை சுட்டிக் காட்டி சோர்ந்து போன பதிவர்கள் நிறைய பேர் நான் உள்பட.நீங்கள் மட்டுமே இன்னும் நெற்றிக்கண் திறந்து கொண்டுள்ளீர்கள்.உண்மையைச் சொல்லும் அசாத்திய துணிச்சல்.மேலும் சொல்ல வார்த்தை வரவில்லை.//

நன்றி சார். உங்கள் தொடர்ந்த ஊக்கம்தான் எனக்கு தூண்டுகோல்