இந்த டி.வி.காரங்க சுத்த மோசம். ஓர வஞ்சனை பண்ணுவாங்க. அதென்னங்க தமிழ் புத்தாண்டுன்னா மட்டும் பஞ்சாங்க பலன், பல்லி விழுந்த பலன், புத்தாண்டு பலன்னு ராசிக்கல்லு மோதிரம் கட்டை விரலுக்கு கூட போட்டுகிட்டு ஒரு சேனல் விடாம ஜோசியம் சொல்றானுங்க. ஆங்கிலப் புத்தாண்டு மட்டும் என்னா பண்ணிச்சி. அதான் நம்ம சேனல்ல நான் சொல்லிக்கிறேன். ராசிக்கல்லு மோதிரமெல்லாம் இல்லிங்கோ.
"பாரப்பா போனதப்பா ஒன்பதாண்டு
படுத்துமப்பா வரப்போற பத்தாமாண்டு
சூதானமா இருந்தாலே சுகம்தானப்பா
சுருட்டன்னே எத்தனை பேர் இருக்கானப்பா"
படுத்துமப்பா வரப்போற பத்தாமாண்டு
சூதானமா இருந்தாலே சுகம்தானப்பா
சுருட்டன்னே எத்தனை பேர் இருக்கானப்பா"
குடும்பஸ்த சித்தர் 250 வருசத்துக்கு முன்னாடி எழுதி வெச்ச பாட்டு
பொதுப்பலன்: சந்திர கிரகணம் வேற வரதால ஒரு கட்டிங்குக்கு பேஸ்மென்ட் வீக்காற கேஸெல்லாம் உசாரா இருக்கணும். வைகுண்ட ஏகாதசி வந்துட்டதால, கிரகணத்துனால கோவில் தொறக்காட்டியும் வருமானத்துக்கு குறையில்லை. முன்ன பின்ன அட்ஜஸ்ட் பண்ணி கலக்ஷன் கட்டலாம். அவங்க அவங்க கட்டம் சரியா இருந்தா இருக்குற ஏரியாக்கு ஏத்தபடி புது வருச கலெக்ஷன் சிறப்பா இருக்கும்.
பதினோரு மணிக்கு மேல வெளிய போகாம இருக்கிறது நல்லது. அப்புடியே போறதுன்னாலும் அவுங்கவுங்க வீட்டில ஒரு நாலு ரவுண்டு நடந்து தள்ளாடாம இருக்கிறமான்னு முடிவு பண்ணிக்கணும். வழக்கத்த விட அதிகமா பேஸ்ட் வச்சி எகிறுல ரத்தம் வந்தாலும் பரவால்லன்னு தேய்ச்சி, குடல கழுவிட்டு போறது நல்லது. இல்லைன்னா ஊதுறப்ப நாறி அந்த கடுப்பில ஜட்டியோட உக்கார வேண்டிய அபாயம் ஏற்படலாம்.
ச்ச்ச்சும்மா டமாசுக்குன்னு சுத்த போறதுன்னாலும் சட்ட பாக்கட்ல ஒரு 50ரூ வெச்சிகிட்டு போறது நல்லது. வாச்சு, மோதிரம், மைனர் செயினு, ப்ரேஸ்லெட்லாம் அவிழ்த்து வெச்சிட்டு போறது உத்தமம். அந்த 50ரூ உங்க செலவுக்கு இல்லைங்கறத மறக்காம இருக்கணும். வழியில மறிச்சி என்ன வெச்சிருக்க எடுன்னு கேக்குறப்ப ஒன்னுமில்லாட்டி, நீயெல்லாம் ஏன்டா வெளிய சுத்துறன்னு கீறாம இருக்குறதுக்கு.
5ரூபாய்க்கு ஆட்டுகால் சூப்பு, கோழிக்கால் சூப்பு, நூடில்சுன்னு முளைக்கிற கடையில ராத்திரி குளிருக்குன்னு ஒரு கட்டு கட்டாத இருந்தா ஆரோக்கிய விரயத்துல இருந்து தப்பலாம். வைகுண்ட ஏகாதசி, கிரகணம்னு விக்காத போன அயிட்டம்லாம் வெந்தப்புறம் தெரியாதுன்னு கலப்படம் நடக்கலாம்.
செல்ஃபோன் வெச்சிருக்கிறவங்க எல்லாம் உசாரா இருக்கணும். குறுந்தகவல் கணக்கில்லாம அனுப்பிட்டு வட போச்சேன்னு அழுது புண்ணியமில்லை. முகம் தெரியாத ஆளுங்க கிட்டல்லாம் யேப்பி ந்யூ இயர்ன்னு கை நீட்ட வேணாம். முக்கியமா பெண்கள் உசாரா இருக்கணும். போன வருசம் நடந்ததெல்லாம் நினைவில இருக்கணும்.
கர்ம பலன்: விலை வாசி பிச்சிகிட்டு ஏறும். அனியாயத்துக்கு லாபமடிக்க பாக்குறானுங்கன்னு புலம்பிக்கிட்டே எல்லாம் வாங்கணும். வயத்த கட்டி வாய கட்டி சேர்த்து வச்ச காசெல்லாம் ரூ 50000 3 வருசத்துக்கு கட்டினா போதும். மாசா மாசம் 10000ரூக்கு போஸ்ட் பேய்ட் செக் குடுத்துடுவோம்னு சொல்ற கம்பெனில போடுறது, 1.5 லட்ச ரூ காந்த சக்தி பெட் வாங்கினா கான்ஸர் கூட காணாம போயிடும், 80 வயசானாலும் அதுல படுத்தா ஆந்திரா கவர்னர் மாதிரி உற்சாகம் வரும்னு எல்லாம் ஏமாறாம உசாரா இருக்கணும். சேர்த்து வச்ச காசெல்லாம் கொட்டிக் கொடுக்கன்னே தி.நகர்ல இருக்கிற கடைகள மறக்காம இருக்கணும்.
உத்தியோகஸ்தர்களுக்கு: எப்பவும் போல இந்த வருடமும் ஆடித் தள்ளுபடி, பொங்கல் சிறப்புத் தள்ளுபடி, அட்சய த்ருதியை, ரம்பா துவாதசின்னு புதுசு புதுசா வர செலவினங்களுக்கு சிக்கனமா சேர்த்து வைங்க. இல்லாட்டி துப்பு கெட்ட மனுசான்னு தங்கமணி துப்பறத தாங்க வேண்டி வரலாம். பக்கத்து வீட்ல எல்லாம் ப்ளாஸ்மா டிவி இருக்கு நம்ம வீட்டில எல்சிடி டிவி கூட இல்லன்னா எப்படின்னு புதுப் பிரச்சன வரலாம். ஒன்னாந்தேதி ஸ்பூன் கூட வாங்கலைன்னா குடும்பம் விளங்காதுன்னு புதுவருசத்தன்னிக்கு திட்டு வாங்காம உசாரா இருக்கப் பாருங்க. நிஜம்மாவே காசில்லைன்னா யாருக்கும் தெரியாம வெங்காயத்த நறுக்கி கம்முகட்டுக்குள்ள வெச்சிகிட்டு ஜுரம் வந்தா மாதிரி அனத்திக்கிட்டு படுத்து கிடக்கிறது நல்லது.
மாணவர்களுக்கு: ஃப்ரெண்ட்ஸ் கூட ஜாலியா கொண்டாடுறேன்னு முதல் நாளே போலீஸ் ஸ்டேஷன் போகிற துர்பலன் சம்பவிக்கலாம். கட்டம் சரியில்லாதவங்களுக்கு கதிர் இடுகையில எழுதினா மாதிரி கபால மோட்சம், குறிப்பா பெண்களுக்கு ஈவ் டீசிங் போன்ற கண்டங்கள் இருக்கிறதால ஊட்டோட இருக்கிறது நல்லது.
பெண்களுக்கு: போன வருஷம் மாதிரியே இந்த வருஷமும் புது புது சீரியலா வரும். அழுகைக்கு பஞ்சமே இல்ல. வெந்தது வேகாததுனு எதப்போட்டாலும் முனகினா அந்த சீரியல்ல கதாநாயகிக்கு அவ மாமியார் நாய் சாப்பிட்டு மிச்சம் வச்ச சோத்த போடுது. நான் அப்படியான்னா மொத்த குடும்பத்தாரின் அன்புக்கும் பாத்திரமாய்டுவீங்க. என்னதான் புருசன்காரன் இடுக்கி வச்சாலும் சிறுவாடு சேர்த்து, மப்பில வரப்ப மிச்சம் மீதி லவட்டி தேவையில்லாத பொருளெல்லாம் வாங்க நல்ல வாய்ப்பாக அமையும். கிரகங்கள் உச்சத்தில இருக்கிறவங்களுக்கு அக்கம் பக்கத்துல சீட்டு கட்டி அவன் எஸ்ஸாகி அய்யோ போச்சேன்னு வழக்கு சம்பந்தமா பிரச்சனை உருவாகலாம்.
வியாபாரிகளுக்கு: அமோகமான வருசமா அமையும். நீங்க வச்சதுதான் விலைங்கறதால 15ரூபாய்க்கு அரிசிய வித்துட்டு அதே விவசாயி 50ரூக்கு உங்க கிட்ட வாங்குவாரு. கலப்பட பொருள் வியாபாரம் அமோகமா இருக்கும். புதுசு புதுசா உடனடி உணவு எல்லாம் வர சாத்தியமிருப்பதால அரிசி, பருப்பு வியாபாரம் கொஞ்சம் தடுமாறலாம். வீட்டுக்கு தேவையில்லாத எலக்ட்ரானிக் சாமான் விக்கிறவங்களுக்கு அமோகமான வருசமா இது அமையும். செல்ஃபோன், கம்ப்யூட்டர் வியாபாரிகளுக்கு புது புது வெளிநாட்டுல விக்காம போன அயிட்டமெல்லாம் குவியுங்கறதால கொள்ளை லாபம் அடிக்கலாம். கவனிக்க வேண்டியவங்கள கவனிச்சா வரி கட்டுறதில இருந்து தப்பிக்கலாம்.
மருத்துவர்களுக்கு: புதுசு புதுசா நோய் உண்டாகும். இல்லாட்டியும் பழைய நோவுக்கே புது பேரு வச்சிடலாம். பரிசோதனைக் கூடத்தோட மருத்துவ மனை இருக்கிற வைத்தியருக்கு விபரீத ரோக யோகத்தால் பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும். இந்த வருஷத்துக்குள்ளயே 3 மாடி கட்டலாம். தாது புஷ்டி லேகியம் விக்கிற வைத்தியர்கள் உசாரா இருக்கணும். மருந்து கடைக்காரர்களுக்கும் செல்வம் கொழிக்கும் வருடமாக இது அமையும்.
அரசியல்வாதிகளுக்கு: வாரிசுங்களுக்கு வழிகாட்டும் வருசமா அமையும். முன்னைய விட அதிகமா கொள்ளையடிக்க வேண்டி வரலாம். தேர்தல் விரயம் அதிகமாகும். ஜன்மஸ்தானத்துல மரணாதிபதி இருந்தால் ஒதுங்கி இருக்கிறது நல்லது. போட்ட காசு தேத்துமுன்ன இடைத் தேர்தல் வரலாம். களத்திர ஸ்தானம் வீக்கா இருக்கிறவங்க டி.வி.டி. டி.வில வந்து பதவி பறிபோகலாம். குறிப்பா நடிப்புத் துறையில இருக்கிறவங்கள சந்திக்கிறப்ப பீச், பார்க்குன்னு பொது இடத்தில சந்திக்கிறது நல்லது.
எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாட்கள்: எல்லா நாட்களும் எல்லா மாசமும்
எச்சரிக்கையாக இருக்க வேண்டிய வண்ணங்கள்: காக்கி, கருநீலம், வெள்ளை, சிவப்பு
ராசிக்கல்:பொங்'கல்'
மேலே குறிப்பிட்டுள்ளவை பொதுப்பலன்தான். அவர் அவர் ஜாதகத்தில் கிரகங்களின் இடத்துக்கேற்ப கூடவோ குறையவோ பலன்கள் உண்டாகும். வந்தது வரட்டும் விதின்னு இருக்கப் பாருங்க. கண்ட விளம்பரம் பார்த்து 3 கேள்விக்கு 1000ரூனு போய் ஏமாறாதீங்க.
எல்லோருக்கும் மேற்படி சங்கடங்கள் அற்ற இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
92 comments:
///80 வயசானாலும் அதுல படுத்தா ஆந்திரா கவர்னர் மாதிரி உற்சாகம் வரும்னு எல்லாம் ஏமாறாம உசாரா இருக்கணும். ///
சரிதான்...
//போன வருஷம் மாதிரியே இந்த வருஷமும் புது புது சீரியலா வரும். அழுகைக்கு பஞ்சமே இல்ல.//
இதுவேறயா....
//வழக்கத்த விட அதிகமா பேஸ்ட் வச்சி எகிறுல ரத்தம் வந்தாலும் பரவால்லன்னு தேய்ச்சி, குடல கழுவிட்டு போறது நல்லது. //
கதிர் அண்ணா பதிவுக்கு எதிர்பதிவா சார்....
//குடும்பஸ்த சித்தர் 250 வருசத்துக்கு முன்னாடி எழுதி வெச்ச பாட்டு//
அவர் அட்ரஸ் கிடைக்குமா சார்....
ச்ச்ச்ச்ச்சும்மா......
ஆப்பி நியூயார் சொல்றதுக்கு...
//செல்ஃபோன் வெச்சிருக்கிறவங்க எல்லாம் உசாரா இருக்கணும். குறுந்தகவல் கணக்கில்லாம அனுப்பிட்டு வட போச்சேன்னு அழுது புண்ணியமில்லை. //
இன்னிக்கு வேற ப்ப்ரீ மெசேஜ் கிடையாதில்ல?...
செல்போன் கம்பனிக்காரனுக்குத்தான் லாபம்...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...
//பக்கத்து வீட்ல எல்லாம் ப்ளாஸ்மா டிவி இருக்கு நம்ம வீட்டில எல்சிடி டிவி கூட இல்லன்னா எப்படின்னு புதுப் பிரச்சன வரலாம்//
ஆஹா...
அண்ணனுங்களுக்கு இது மேலும் ஒரு பிரச்சனையா...
//புதுசு புதுசா நோய் உண்டாகும். இல்லாட்டியும் பழைய நோவுக்கே புது பேரு வச்சிடலாம். பரிசோதனைக் கூடத்தோட மருத்துவ மனை இருக்கிற வைத்தியருக்கு விபரீத ரோக யோகத்தால் பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும்.//
நாளைக்கே ஆஸ்பிட்டலு நெம்பி வழியும் பாருங்க...
பாலா அண்ணாவிற்கும் வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்..............
யெப்பா...
படிச்சிட்டேன்
சிரிச்சிட்டேன்
கொஞ்சம் ’சாப்ட்ட்ட்டு’ வந்து கும்மியடிக்கிறேன்....
//ஈரோடு கதிர் Says:
கொஞ்சம் ’சாப்ட்ட்ட்டு’ வந்து கும்மியடிக்கிறேன்....//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
பார்ட்டியாண்ணா??
எங்கேன்னு சொல்லவேயில்லையே...
அடி தூள் கிளப்பிட்டீங்க அண்ணே...
கைல மோதிரம் போடாதுதான் பாக்கி.
அப்பாடா நம்ம வேலையை அகல்விளக்குப் பார்த்துகிட்டு இருக்கார்...
வெரி நைஸ் டு சி
அதுக்குள்ளயா! கொஞ்சம் இருங்கண்ணே பட்சிட்டு வர்ரேன்.
// ஈரோடு கதிர் said...
யெப்பா...
படிச்சிட்டேன்
சிரிச்சிட்டேன்
கொஞ்சம் ’சாப்ட்ட்ட்டு’ வந்து கும்மியடிக்கிறேன்...//
அண்ணே நீங்களுமா?
// "பாரப்பா போனதப்பா ஒன்பதாண்டுபடுத்துமப்பா வரப்போற பத்தாமாண்டுசூதானமா இருந்தாலே சுகம்தானப்பாசுருட்டன்னே எத்தனை பேர் இருக்கானப்பா" //
பாட்டு சூப்பரா இருக்குண்ணே...
எங்கேயிருந்து இதெல்லாம் பிடிக்கறீங்க.
உங்க நக்கலுக்கு வரவர அளவேயில்லாம போச்சி. அத்தனையும் ஹாஹாஹா
// போன வருஷம் மாதிரியே இந்த வருஷமும் புது புது சீரியலா வரும். அழுகைக்கு பஞ்சமே இல்ல. வெந்தது வேகாததுனு எதப்போட்டாலும் முனகினா அந்த சீரியல்ல கதாநாயகிக்கு அவ மாமியார் நாய் சாப்பிட்டு மிச்சம் வச்ச சோத்த போடுது.//
No comments..:)))))))))))))))))))
// இப்படிக்கு நிஜாம்.., said...
உங்க நக்கலுக்கு வரவர அளவேயில்லாம போச்சி. அத்தனையும் ஹாஹாஹா //
அப்படின்னா மத்தவங்க நக்கலுக்கு எல்லாம் எதாவது அளவு இருக்குங்களா?
எப்படி... லிட்டரா, கிலோவா...
// இப்படிக்கு நிஜாம்.., said...
// போன வருஷம் மாதிரியே இந்த வருஷமும் புது புது சீரியலா வரும். அழுகைக்கு பஞ்சமே இல்ல. வெந்தது வேகாததுனு எதப்போட்டாலும் முனகினா அந்த சீரியல்ல கதாநாயகிக்கு அவ மாமியார் நாய் சாப்பிட்டு மிச்சம் வச்ச சோத்த போடுது.//
No comments..:)))))))))))))))))))//
இப்படிச் சொன்னா எப்பூடி... வந்ததற்கு எதாவது சொல்லிட்டுப் போறது..
//எச்சரிக்கையாக இருக்க வேண்டிய வண்ணங்கள்: காக்கி, கருநீலம், வெள்ளை, சிவப்பு//
காக்கி : தொப்பிக்காரங்க
கருநீலம் :????(மலேசிய தொப்பிக்காரங்களா?)
வெள்ளை: டாக்டர் பிரகாஷ் மாதிரி ஆளுங்களா?
சிவப்பு: காவல்துறை கலர நீலமா மாத்தியாச்சே! அப்ப இது என்ன?
இராகவன் நைஜிரியா said...
//அப்படின்னா மத்தவங்க நக்கலுக்கு எல்லாம் எதாவது அளவு இருக்குங்களா?
எப்படி... லிட்டரா, கிலோவா...//
அதானே....
அண்ணே! பேசாம நீங்க புத்தாண்டு பலனுக்கு ஒரு புஸ்தகம் போடலாம். கொன்னுட்டேள் போங்கோ!
///இராகவன் நைஜிரியா said...
பாட்டு சூப்பரா இருக்குண்ணே...
எங்கேயிருந்து இதெல்லாம் பிடிக்கறீங்க.///
நானும் அவர் அட்ரஸ்தான் கேட்ருக்கேன்...
//இப்படிக்கு நிஜாம்.., said...
அண்ணே! பேசாம நீங்க புத்தாண்டு பலனுக்கு ஒரு புஸ்தகம் போடலாம். கொன்னுட்டேள் போங்கோ!//
நான் இதை வழிமொழிகிறேன்
//இராகவன் நைஜிரியா said...
// இப்படிக்கு நிஜாம்.., said...
// போன வருஷம் மாதிரியே இந்த வருஷமும் புது புது சீரியலா வரும். அழுகைக்கு பஞ்சமே இல்ல. வெந்தது வேகாததுனு எதப்போட்டாலும் முனகினா அந்த சீரியல்ல கதாநாயகிக்கு அவ மாமியார் நாய் சாப்பிட்டு மிச்சம் வச்ச சோத்த போடுது.//
No comments..:)))))))))))))))))))//
இப்படிச் சொன்னா எப்பூடி... வந்ததற்கு எதாவது சொல்லிட்டுப் போறது..//
அண்ணன் நீங்க வரிக்கு வரி வாரும் போது நான் வேறயா?
///இராகவன் நைஜிரியா said...
அப்பாடா நம்ம வேலையை அகல்விளக்குப் பார்த்துகிட்டு இருக்கார்... வெரி நைஸ் டு சி ///
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....
அட்லீஸ்ட் உங்க யங்கர் பிரதர் இதக்கூட செய்யலின்னா எப்படிங்கண்ணா ??
//இராகவன் நைஜிரியா said...
// இப்படிக்கு நிஜாம்.., said...
உங்க நக்கலுக்கு வரவர அளவேயில்லாம போச்சி. அத்தனையும் ஹாஹாஹா //
அப்படின்னா மத்தவங்க நக்கலுக்கு எல்லாம் எதாவது அளவு இருக்குங்களா?
எப்படி... லிட்டரா, கிலோவா....//
ஆஹா! அண்ணே! முடியல!
ராகவன் அண்ணே! நீங்க புத்தாண்டு பதிவு போடலியா? டிச23 லயே நிக்குதே.., என்னா வலி...,
வழக்கம் போல வானம்பாடிகள் டச். கும்மியடிக்க நேரமில்ல.. அதுனால புத்தாண்டு வாழ்த்து சொல்லிட்டு ஜகா வாங்கிக்கிறேன்.
அப்படியே உங்களுக்குள்ள இருக்கற அந்த சித்தர்கிட்ட பதிவுலக படைப்பாளர்களுக்கு 2010 எப்படி இருக்குனு கேட்டு சொன்னா நல்ல இருக்கும். என்னை காமெடி பீசுன்னு சொல்லிட்டு இப்படி கலாய்க்கறது நல்ல இருக்கா? :D
// இப்படிக்கு நிஜாம்.., said...
ராகவன் அண்ணே! நீங்க புத்தாண்டு பதிவு போடலியா? டிச23 லயே நிக்குதே.., என்னா வலி...,//
அட நீங்க வேற...
சரக்கு இருக்கு எல்லோரும் இடுகைப் போடறாங்க... நாம சும்மா ஜாலிக்காக ஒரு வலைப்பூ வச்சு இருக்கோம்... என்னைப் போய் இடுகைப் போடச் சொல்றீங்க..
அவ்...வ்....வ்...வ்.
// அகல்விளக்கு said...
//செல்ஃபோன் வெச்சிருக்கிறவங்க எல்லாம் உசாரா இருக்கணும். குறுந்தகவல் கணக்கில்லாம அனுப்பிட்டு வட போச்சேன்னு அழுது புண்ணியமில்லை. //
இன்னிக்கு வேற ப்ப்ரீ மெசேஜ் கிடையாதில்ல?...
செல்போன் கம்பனிக்காரனுக்குத்தான் லாபம்...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... //
அதுக்காகத்தான் நமெக்கெல்லாம் ப்ரீ ப்ளாக்கர் கொடுத்து இருக்காங்களோ?
ஆப்பி...நுயி...யியரு.....
:)>
மிகவும் பயனுள்ள எச்சரிக்கை..ரொம்ப அனுபவமோ?
எல்லா பலனுமே நல்லா இருக்கு
ஹா, ஹா, நல்லாருக்குண்ணா.
WISH YOU A VERY HAPPY AND PROSPEROUS NEW YEAR
ஆந்திரா கவர்னரை டரியல் ஆக்கிட்டீங்க. சிரிச்சி வயிறு வலிக்குதுங்கய்யா!
அனுபவப்பலன்:
இந்த இடுகையை படிக்கிற யாராவது சிரிக்காம இருந்தாங்கன்னா அவங்க நரசிம்மராவோட தூரத்து சொந்தமா இருக்கனும். சிரிங்க, சிரிச்சிகிட்டே இருங்க, லூசுன்னு சொன்னாலும்...
பிரபாகர்.
அந்த பாட்டு நானே எழுதினதுண்ணே:))
ஆஹா......வருசம் தொடங்கறதுக்கு முன்னாடியே இப்படி பலன் சொன்னா எப்படி??????????/
இப்பத்தான் கதிர் வீட்ல காத்துகிட்டிருக்கிறாங்கன்னு எழுதறார்....நீங்க இப்படி......
வெளில போறதுக்கே பயமா இருக்குது.....
ஹி...ஹி....
நல்ல நகைச்சுவை....சிரித்து மாளல
அன்புடன்
ஆரூரன்
'இல்லைன்னா ஊதுறப்ப நாறி அந்த கடுப்பில ஜட்டியோட உக்கார வேண்டிய அபாயம் ஏற்படலாம்'
நல்ல வேலை தப்பிசோம்.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சார்....
புத்தாண்டு வாழ்த்துக்கள்..
அகல்விளக்கு said...
/கதிர் அண்ணா பதிவுக்கு எதிர்பதிவா சார்..../
அவர் எச்சரிக்கை சொன்னாரு. நான் பலன் சொன்னேன்:))
/அவர் அட்ரஸ் கிடைக்குமா சார்....
ச்ச்ச்ச்ச்சும்மா......
ஆப்பி நியூயார் சொல்றதுக்கு.../
ஹெ ஹெ நாந்தேன்.
/செல்போன் கம்பனிக்காரனுக்குத்தான் லாபம்...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.../
அது அது
/பாலா அண்ணாவிற்கும் வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்............../
புத்தாண்டு வாழ்த்துகள்.
T.V.Radhakrishnan said...
/ :-)))/
வாங்க சார்.:))
இராகவன் நைஜிரியா said...
/அடி தூள் கிளப்பிட்டீங்க அண்ணே...
கைல மோதிரம் போடாதுதான் பாக்கி./
ம்கும் அது வேறயா.
ஈரோடு கதிர் said...
/யெப்பா...
படிச்சிட்டேன்
சிரிச்சிட்டேன்
கொஞ்சம் ’சாப்ட்ட்ட்டு’ வந்து கும்மியடிக்கிறேன்....//
அடங்கொன்னியா. இது எப்ப. என்னா பிலிமு. என்னா கலர் கலரா டீ சர்டு போட்டு சீன் போட்டாலும் நம்மள விட யூத் ஆய்ட முடியாதுடி:))
அகல்விளக்கு said...
//ஈரோடு கதிர் Says:
கொஞ்சம் ’சாப்ட்ட்ட்டு’ வந்து கும்மியடிக்கிறேன்....//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
பார்ட்டியாண்ணா??
எங்கேன்னு சொல்லவேயில்லையே.//
அட நீ வேற. குப்பண்ணா மெஸ்ஸுல மினரல் வாடர் சாப்டு அலம்பல் பண்ற பார்ட்டி இது. அட்டு பீசு.
இராகவன் நைஜிரியா said...
/ அண்ணே நீங்களுமா?/
இதையெல்லாமா உலகம் நம்புது.
/பாட்டு சூப்பரா இருக்குண்ணே...
எங்கேயிருந்து இதெல்லாம் பிடிக்கறீங்க./
ஷ்ஷ். யார்டயும் சொல்லாதீங்கண்ணே. 2010கு டைடில் சாங் வேணும்னாங்க. எழுதி குடுத்தேன். சென்சார்ல வெட்டிட்டாங்கன்னு அதுக்காக தான் இடுகை போட்டேன்.
இப்படிக்கு நிஜாம்.., said...
/உங்க நக்கலுக்கு வரவர அளவேயில்லாம போச்சி. அத்தனையும் ஹாஹாஹா/
:))
/காக்கி : தொப்பிக்காரங்க
கருநீலம் :????(மலேசிய தொப்பிக்காரங்களா?)
வெள்ளை: டாக்டர் பிரகாஷ் மாதிரி ஆளுங்களா?
சிவப்பு: காவல்துறை கலர நீலமா மாத்தியாச்சே! அப்ப இது என்ன?/
அட நம்ம காவலுங்கதான். ட்ராஃபிக், ச.ஒ.
முகிலன் said...
/வழக்கம் போல வானம்பாடிகள் டச். கும்மியடிக்க நேரமில்ல.. அதுனால புத்தாண்டு வாழ்த்து சொல்லிட்டு ஜகா வாங்கிக்கிறேன்./
அஹா. இது ப்ரபாக்கு போட்ட புது டெம்ப்ளேட் இல்லை.:)) புத்தாண்டு வாழ்த்துகள்.
Karthik Viswanathan said...
/அப்படியே உங்களுக்குள்ள இருக்கற அந்த சித்தர்கிட்ட பதிவுலக படைப்பாளர்களுக்கு 2010 எப்படி இருக்குனு கேட்டு சொன்னா நல்ல இருக்கும். என்னை காமெடி பீசுன்னு சொல்லிட்டு இப்படி கலாய்க்கறது நல்ல இருக்கா? :D//
நல்லாருக்கான்னு நீதான் சொல்லணும்:))
பிரியமுடன்...வசந்த் said...
/ஆப்பி...நுயி...யியரு./
புத்தாண்டு வாழ்த்துகள் வசந்த்
வெற்றி said...
/மிகவும் பயனுள்ள எச்சரிக்கை..ரொம்ப அனுபவமோ?/
=)).
நசரேயன் said...
/எல்லா பலனுமே நல்லா இருக்கு/
வாங்க அண்ணாச்சி
பிரபாகர் said...
ஆந்திரா கவர்னரை டரியல் ஆக்கிட்டீங்க. சிரிச்சி வயிறு வலிக்குதுங்கய்யா!
அனுபவப்பலன்:
இந்த இடுகையை படிக்கிற யாராவது சிரிக்காம இருந்தாங்கன்னா அவங்க நரசிம்மராவோட தூரத்து சொந்தமா இருக்கனும். சிரிங்க, சிரிச்சிகிட்டே இருங்க, லூசுன்னு சொன்னாலும்...
பிரபாகர்.//
நன்றி பிரபாகர்
Subankan said...
/ ஹா, ஹா, நல்லாருக்குண்ணா.
WISH YOU A VERY HAPPY AND PROSPEROUS NEW YEAR//
வாங்க சுபாங்கன். நன்றி
ஆரூரன் விசுவநாதன் said...
ஆஹா......வருசம் தொடங்கறதுக்கு முன்னாடியே இப்படி பலன் சொன்னா எப்படி??????????/
இப்பத்தான் கதிர் வீட்ல காத்துகிட்டிருக்கிறாங்கன்னு எழுதறார்....நீங்க இப்படி......
வெளில போறதுக்கே பயமா இருக்குது.....
ஹி...ஹி....
நல்ல நகைச்சுவை....சிரித்து மாளல//
:)) நன்றி
aambal samkannan said...
'இல்லைன்னா ஊதுறப்ப நாறி அந்த கடுப்பில ஜட்டியோட உக்கார வேண்டிய அபாயம் ஏற்படலாம்'
நல்ல வேலை தப்பிசோம்.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.//
நன்றிங்க. உங்களுக்கும் என் வாழ்த்துகள்.
Balavasakan said...
//இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சார்....//
நன்றி வாசு. உங்களுக்கும் என் வாழ்த்துகள்.
ஸ்ரீராம். said...
/புத்தாண்டு வாழ்த்துக்கள்../
நன்றி ஸ்ரீராம்.
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் SIR
ஹா.ஹா..
புத்தாண்டு வாழ்த்துக்கள் பாலா சார்!
Zero to Infinity said...
/இனிய புத்தாண்டு வாழ்த்துகள் SIR
நன்றிங்க.
பா.ராஜாராம் said...
/ஹா.ஹா..
புத்தாண்டு வாழ்த்துக்கள் பாலா சார்!
நன்றிங்க பா.ரா
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்... நல்லாருக்கு சார்...
கலகலப்ரியா said...
/இனிய புத்தாண்டு வாழ்த்துகள்... நல்லாருக்கு சார்.../
உனக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள். நன்றியம்மா.
புத்தாண்டு வாழ்த்துக்கள்!
yellaarukkum palan sonna neenga yenna maathiri kutti pasangalukku oru palanum sollala :)
happy new year anna.
என்னா நக்கலு! என்னா நக்கலு!
சூப்பர் தலைவா!
புத்தாண்டை வாய்விட்டு சிரிக்கவைத்து வரவேற்றதற்கு..,
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் தலைவா!
அண்ணே! இப்ப நீங்க புதுசா தொடங்கி இருக்கிற இந்த தொழிலு நல்லா போகும்னு... ஸ்டீல் பாடி (ஆமா, எத்தனை நாளைக்கு தான் நாடி ஜோசியம்னு சோறது) ஜோசியம் சொல்லுது... நடத்துங்க அண்ணே... :-))
குசும்பு ஜாஸ்தி தான்.
புத்தாண்டு வாழ்த்துகள். :-)
அன்பின் பாலா
கை வசம் தொழில் இருக்காக்கும் - பொளச்சுக்குவீங்க
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்
nice ! very informative !
Super!
Wish you happy new year!!!
//ரம்பா துவாதசின்னு//
ஓ... அப்டி ஒண்ணு இருக்கா??
//வெங்காயத்த நறுக்கி கம்முகட்டுக்குள்ள வெச்சிகிட்டு ஜுரம் வந்தா மாதிரி அனத்திக்கிட்டு படுத்து கிடக்கிறது நல்லது.//
ஐடியா நல்லாருக்கு. இனிமே பாலோ பண்ணணும்.
புத்தாண்டு வாழ்த்துகள்.
:-))))))))
வெங்காயத்தை நறுக்கவேண்டியதுதான்,,
அகம் மகிழ்ந்த ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
தாமோதர் சந்துரு said...
/புத்தாண்டு வாழ்த்துக்கள்!/
புத்தாண்டு வாழ்த்துகள் சந்துரு.
எம்.எம்.அப்துல்லா said...
/yellaarukkum palan sonna neenga yenna maathiri kutti pasangalukku oru palanum sollala :)
happy new year anna.//
அது 3 வயசுக்குள்ள குழந்தைகளுக்கு ஜோசியம் பாக்கப்படாது அதான்.:))
புத்தாண்டு வாழ்த்துகள்.
சூர்யா ௧ண்ணன் said...
/ என்னா நக்கலு! என்னா நக்கலு!
சூப்பர் தலைவா!
புத்தாண்டை வாய்விட்டு சிரிக்கவைத்து வரவேற்றதற்கு..,
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் தலைவா!/
வாங்க தலைவா. புத்தாண்டு வாழ்த்துகள்.:))
ரோஸ்விக் said...
/அண்ணே! இப்ப நீங்க புதுசா தொடங்கி இருக்கிற இந்த தொழிலு நல்லா போகும்னு... ஸ்டீல் பாடி (ஆமா, எத்தனை நாளைக்கு தான் நாடி ஜோசியம்னு சோறது) ஜோசியம் சொல்லுது... நடத்துங்க அண்ணே... :-))
குசும்பு ஜாஸ்தி தான்.
புத்தாண்டு வாழ்த்துகள். :-)/
நன்றி ரோஸ்விக்.உங்களுக்கும் என் புத்தாண்டு வாழ்த்துகள்.
cheena (சீனா) said...
/அன்பின் பாலா
கை வசம் தொழில் இருக்காக்கும் - பொளச்சுக்குவீங்க
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்/
இப்பிடி பலன் சொன்னா தொலைச்சிடுவாங்களே:)). நன்றிங்க சீனா. உங்களுக்கும் என் புத்தாண்டு வாழ்த்துகள்.
யூர்கன் க்ருகியர் said...
/ nice ! very informative !/
Thank you. wish you a very happy new year.
பழமைபேசி said...
/ Super!
Wish you happy new year!!!/
Thank you. உங்களுக்கும் என் புத்தாண்டு வாழ்த்துகள்.
க.பாலாசி said...
//ரம்பா துவாதசின்னு//
ஓ... அப்டி ஒண்ணு இருக்கா??
ஐடியா நல்லாருக்கு. இனிமே பாலோ பண்ணணும்.
அடப்பாவி.:))
ஸ்ரீ said...
/ புத்தாண்டு வாழ்த்துகள்.
:-))))))))//
வாங்க ஸ்ரீ. புத்தாண்டு வாழ்த்துகள்.
அப்பன் said...
/வெங்காயத்தை நறுக்கவேண்டியதுதான்,,/
:)). புத்தாண்டு வாழ்த்துகள் அப்பன்.
துபாய் ராஜா said...
/அகம் மகிழ்ந்த ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்./
வாங்க ராஜா. உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.
என்னதான் டல்லா இருந்தாலும் உங்க ஏரியா வந்துட்டு போனா போதும் சார். குதூகலம் தானா வந்துடும். அருமையான பலன்கள் ஹா ஹா ஹா.
அண்ணே புத்தாண்டு வணக்கம்னேன்...
S.A. நவாஸுதீன் said...
/என்னதான் டல்லா இருந்தாலும் உங்க ஏரியா வந்துட்டு போனா போதும் சார். குதூகலம் தானா வந்துடும். அருமையான பலன்கள் ஹா ஹா ஹா./
நன்றி நவாஸ்
ஈ ரா said...
/அண்ணே புத்தாண்டு வணக்கம்னேன்.../
நன்றி ஈ.ரா
Post a Comment