Friday, December 4, 2009

செம்மறி ஆடுகள்!

காலையில் படித்த குழந்தைகளின் பள்ளி வண்டி நீரில் மூழ்கிய அவலச் செய்தியின் தாக்கத்தையும் மீறி இரண்டு பெண்களின் செயல் இமயத்தை விஞ்சி நிற்கிறது என நினைக்கிறேன். யார் சொன்னது பெண்கள் வீக்கர் செக்ஸ் என்று? தன்னலம் கருதாது, சம்யோசித புத்தியுடன் செயல்படுவதில் அவர்களை யாரும் விஞ்ச முடியாது என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணமாகியிருக்கிறது.

சேரும் சகதியுமான குட்டையில் இறக்கிய மனிதாபிமானமற்ற ட்ரைவர் மிருகம் செல்ஃபோனில் பேசியபடி ஓட்டி வந்ததாக தினத் தந்தி கூறுகிறது. நீரில் விழுந்தவுடன் தான் மட்டும் நீந்தித் தப்பித்திருக்கிறது அந்த மிருகம். ஆனால் நீச்சல் தெரியாத ஆசிரியை சுகந்தி வேனுக்குள் மூழ்கி மூழ்கி 11 குழந்தைகளைக் காப்பற்றி, கடைசி குழந்தை ஆழத்தில் போய்விட அதைக் காப்பாற்றப் போய் தன் உயிர் ஈந்தார் என்பது படிக்கும்போதே சிலிர்க்க வைக்கிறது.

அதே வேனில் ஏற்றிவிட தன் குழந்தையோடு காத்திருந்த இன்னொரு பெண் , காப்பாற்றப் பட்ட 11 குழந்தைகளைக் கரை சேர்க்க உதவியதோடு, அதற்கு பெரும்பாடு பட்ட க்ளீனரை ஊர்மக்கள் அடிக்கக் கூடும் என்பதை சமயோசிதமாக உணர்ந்து, அவரை அருகில் ஒரு வீட்டில் மறைத்து வைத்து, போலீசார் சம்பவம் நடந்த இடத்துக்கு வந்த பிறகு சரணடைய உதவியிருக்கிறார்.

ஆம். நம் மக்கள் கலாச்சாரம் அப்படி. ஒரு கும்பல் சேர்ந்தால் போதும். எவனோ ஒரு கலகக்காரன் சும்மா விடக்கூடாதுய்யா இவனுங்களை! போடுங்கைய்யா பேசிக்கிட்டு, என்று குரல் கொடுத்தால் போதும். யோசிக்கவோ, ஏன் என்று கேட்கவோ மாட்டார்கள். குரல் கொடுத்தவன் வேடிக்கை பார்த்துக் கொண்டு நழுவி விடுவான்.

இதைப் ப‌டித்த‌வுட‌ன் சிறுவ‌ய‌தில் ந‌ட‌ந்த‌ ச‌ம்ப‌வ‌ம் க‌வ‌ன‌த்திற்கு வ‌ந்த‌து. மெயின் ரோடில் விள‌க்குக‌ள் அதிக‌மில்லாத‌ ப‌குதி அது. அப்பொழுது க‌டைக‌ளில் எல்லாம் குண்டு ப‌ல்புதான். பெரிய‌ க‌டைக‌ளில் குழாய் விள‌க்குக‌ள். இருட்டி விட்டிருந்த ஒரு மாலை, ப‌ஸ் ஸ்டேன்டில் ஒரு ப‌ஸ் வ‌ந்து நிற்க‌ பின்னாடியே வ‌ந்த‌ டிராக்ட‌ர் டிரெயில‌ரும் நின்ற‌து.

ப‌ஸ் ஸ்டேன்ட் அருகில் விளையாடிக் கொண்டிருந்த‌ ஒரு சிறுவ‌ன் டிராக்ட‌ருக்கும் டிரெயில‌ருக்கும் இடையில் புகுந்து ஓட முயற்சித்தான். அதற்குள் ப‌ஸ் கிள‌ம்ப‌, டிராக்ட‌ர் டிரைவ‌ரும் வ‌ண்டியை எடுத்துவிட்டார். டிரெயில‌ர் இடித்த‌தில் நடுவில் இருந்த சிறுவ‌ன் விழுந்து விட்டான். இதைக் க‌ண்ட‌ ப‌ஸ் ஸ்டாண்டில் இருந்த‌ ஜ‌ன‌ம் அல‌ற‌ நொடியில் டிராக்ட‌ர் டிரைவ‌ர் வ‌ண்டியை நிறுத்திவிட்டார்.

காக‌ம் க‌ர‌ண்டு க‌ம்பியில் அடிப‌ட்டாலே ப‌ட்டிம‌ன்ற‌ம் வைப்ப‌வ‌ர்தாமே நாம். கூட்ட‌ம் கூடிவிட்ட‌து.  டிரைவ‌ர் இற‌ங்கி ந‌டுங்கிய‌ப‌டி வ‌ண்டிக்கு அடியில் பார்த்தார். இருட்டு வேறு. கும்ப‌லில் ஒரு ப‌ர‌தேசி, குழ‌ந்தை போற‌து கூட‌ தெரியாம‌ வ‌ண்டியை எடுத்து சாவ‌டிச்சிட்டான், போடுங்கையா என்று குர‌ல் கொடுத்தான். அந்தாளைப் பார்க்க‌க் கூட‌ விடாம‌ல் ச‌ர‌மாரியாக‌ அடி விழுந்த‌து.

ஒரு நாட்டாமை, குழ‌ந்தைக்கு என்னாச்சோ வ‌ண்டிய‌ எடுக்க‌ சொல்லுங்கைய்யா என்று குர‌ல் விட‌வும், கும்ப‌ல் ஆமாம் வ‌ண்டிய‌ எடு என்று அடிக்க‌ ஆர‌ம்பித்த‌து. அத்த‌னை அடியும் வாங்கிக் கொண்டு அழுத‌ப‌டி அந்த‌ டிரைவ‌ர், போலீஸ் வ‌ந்தாதாங்க‌ வ‌ண்டியை ந‌க‌ர்த்த‌லாம் என்று சொன்ன‌துதான் தாம‌த‌ம், கையாலும் க‌ட்டையாலும் கண்மண் தெரியாமல் அடித்தார்க‌ள்.

ஒரு த‌டிய‌ன் அலேக்காக டிரைவரைத் தூக்கி வ‌ண்டியில் போட்டு, எடுய்யா வ‌ண்டியை! குழ‌ந்தைக்கு ஏதாவ‌து ஆச்சோ நீ செத்த‌ என்று அடித்தான். டிரைவர் வேறு வ‌ழியின்றி வ‌ண்டியை எடுத்தார். தேங்காய் உடைத்தாற்போல் ச‌த்த‌ம். அவ்வ‌ள‌வுதான். மொத்த‌ கும்ப‌லும் ப‌ற‌ந்துவிட்ட‌து. ப‌ய‌மோ த‌லையில் இடித்த‌தனாலோ ம‌ய‌ங்கி விட்டிருந்த‌ சிறுவ‌ன் மேல் அப்பொழுதுதான் ட‌ய‌ர் ஏறி இற‌ங்கி இருக்கிற‌து.

எதிரிலிருந்த‌ நூல‌க‌த்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த‌ என‌க்கு இர‌ண்டு மூன்று நாட்க‌ள் மிக‌ப் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கிய‌ காட்சி, அனைவ‌ரும் ஓடிய‌ பின், அடிவாங்கிய‌ டிரைவ‌ர் ர‌த்த‌ம் ஒழுக‌ அர‌ற்றிய‌ப‌டி, ஐயோ! என்னைக் கொலைகார‌னா ஆக்கிட்டானுங்க‌ளே! சின்ன‌ புள்ளைய‌ கொன்னுட்டாங்களே! நான் வேணாம் வேணாம்னு சொன்னேனே! என்று பைத்திய‌ம் மாதிரி ஓடி ஓடி ஜ‌ன‌ங்க‌ளிட‌ம் முறையிட‌, அவ‌ரவர்களும் ஆதரவாக ஒன்றும் சொல்லாமல் ப‌த‌றி ஓடிய‌ காட்சி.

போலீசுக்குத் த‌க‌வ‌ல் போய், அவ‌ர்க‌ளும் வ‌ந்த‌வுட‌ன் இர‌ண்டு அறை விட‌, நூல‌க‌ர், ம‌ற்றும் இர‌ண்டு வாச‌க‌ர்க‌ள் துணிச்ச‌லாக‌ எடுத்துச் சொல்ல‌ அடிப்ப‌தை நிறுத்தி, சோடா வாங்கிக் கொடுத்து அவ‌ரை ஜீப்பில் உட்கார‌ வைத்தார்க‌ள்.

அந்தப் பெண் சமயோசிதமாக செயல் பட்டிராவிட்டால், க்ளீனர் கதியும் இப்படித்தான் ஆகியிருக்கும்.  கூட்டமாய் அடித்தால் குற்றமில்லை என்ற கும்பல் மனப்பான்மை என்றுதான் ஒழியுமோ!

48 comments:

பழமைபேசி said...

Balannae, I have to come back to read after some time.... seeya!

இராகவன் நைஜிரியா said...

அண்ணே.. என்னக் கொடுமைங்க இது..

நேத்து செய்திகளில் பார்த்தேன். செல்போனில் பேசிகிட்டே போய் பல குழந்தைகளின் உயிரை காவு வாங்கிட்டாரே இப்படி.. கொடுமைங்க.

அந்த பெண்மணிகள் இருவரும் பாராட்டுக்குரியவர்கள்.

கலகலப்ரியா said...

நல்ல பதிவு சார்..! வீக்கர் செக்ஸ்தான் சார்... அதனாலதான் அந்தம்மாவால அந்த ஐயா மாதிரி விட்டுட்டு ஓட முடியல..! ம்ம்.. டிரைவர் ஓடினதுக்கு காரணம் கூட சொல்லிட்டீங்களே..!

Chitra said...

நீங்கள் பகிர்ந்து கொண்ட சம்பவம், என்னை மிகவும் பாதித்தது. படித்த எனக்கே இப்படி என்றால், பார்த்த உங்களை போன்றோருக்கு?
"கூட்டமாய் அடித்தால் குற்றமில்லை என்ற கும்பல் மனப்பான்மை என்றுதான் ஒழியுமோ!" ......... இந்த கூட்டத்துக்கு அடிக்க வேண்டியவர்களை அடிக்கும் மனப்பான்மை கிடையாது.

என்ன கொடுமை சார், இது?

vasu balaji said...

பழமைபேசி said...

/Balannae, I have to come back to read after some time.... seeya!/

வாங்க பழமை.:)

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/அண்ணே.. என்னக் கொடுமைங்க இது../

ஆமாம்ணே.

/அந்த பெண்மணிகள் இருவரும் பாராட்டுக்குரியவர்கள்./

ரொம்ப பெரிய விஷயம்ணே இது.

vasu balaji said...

கலகலப்ரியா said...

/நல்ல பதிவு சார்..! வீக்கர் செக்ஸ்தான் சார்... அதனாலதான் அந்தம்மாவால அந்த ஐயா மாதிரி விட்டுட்டு ஓட முடியல..! /

ம்கும். அத்தனை ஆம்பிளைங்க வேடிக்கை பார்த்திருக்காங்க. ஒத்தை பொம்பளை தனியா இவ்வளவு பேரை காப்பாத்தி இருக்கு. என்ன மனதிடம் இருக்கணும்.

//ம்ம்.. டிரைவர் ஓடினதுக்கு காரணம் கூட சொல்லிட்டீங்களே..!//

ஓஹோ. மிருகம்னு சொன்னதா? பின்ன என்ன?

vasu balaji said...

Chitra said...

//நீங்கள் பகிர்ந்து கொண்ட சம்பவம், என்னை மிகவும் பாதித்தது. படித்த எனக்கே இப்படி என்றால், பார்த்த உங்களை போன்றோருக்கு?//

ரொம்ப அலக்கழைச்சது.

/"கூட்டமாய் அடித்தால் குற்றமில்லை என்ற கும்பல் மனப்பான்மை என்றுதான் ஒழியுமோ!" ......... இந்த கூட்டத்துக்கு அடிக்க வேண்டியவர்களை அடிக்கும் மனப்பான்மை கிடையாது.

என்ன கொடுமை சார், இது?//

அப்படி அடிக்க வேண்டிய ஆளுங்க ஒத்தையா சிக்க மாட்டாங்களே. அதான்:)

பழமைபேசி said...

ஆசிரியை....

சமூகத்தின் முன்னால் அடையாளம் காணப்பட்டு, மற்றவர்க்கு முன்னோடியாக்கப்பட வேண்டும்...

Jerry Eshananda said...

சரியாய் சொன்னீர்கள் தமிழன் எப்போதும் செம்மறி ஆடுகள் தான்

T.V.ராதாகிருஷ்ணன் said...

அந்த பெண்மணிகள் இருவரும் பாராட்டுக்குரியவர்கள்

ஸ்ரீராம். said...

நீங்க சொல்லி இருப்பது சரிதான். தொடர்ந்து படித்த வரிகள் மனதை விட்டு அகல பல நாட்கள் அஆகும். கொடுமை

ஆரூரன் விசுவநாதன் said...

பாலாண்ணே.....வணக்கம்.....

சம்மட்டியடி......செம்மறியாடுகளுக்கு...ஆனாலும் இது பத்தாது.

தொடருங்கள்

வாழ்த்துக்கள்

அன்புடன்
ஆரூரன்

பி.கு.
டிசம்பர் 20 ஈரோடு வர்ரீங்க....
சந்திப்போம்

ஈரோடு கதிர் said...

அந்த ஆசிரியை வணக்கத்துக்குரியவர்...

நர்சிம் said...

மிக நல்ல பார்வையில் பதிந்திருக்கிறீர்கள்..

vasu balaji said...

பழமைபேசி said...

/ஆசிரியை....

சமூகத்தின் முன்னால் அடையாளம் காணப்பட்டு, மற்றவர்க்கு முன்னோடியாக்கப்பட வேண்டும்...//

ஆமாங்க பழமை

vasu balaji said...

ஜெரி ஈசானந்தா. said...

/ சரியாய் சொன்னீர்கள் தமிழன் எப்போதும் செம்மறி ஆடுகள் தான்/

நன்றிங்க!

vasu balaji said...

T.V.Radhakrishnan said...

/ அந்த பெண்மணிகள் இருவரும் பாராட்டுக்குரியவர்கள்//

ஆமாங்க.

vasu balaji said...

ஸ்ரீராம். said...

/நீங்க சொல்லி இருப்பது சரிதான். தொடர்ந்து படித்த வரிகள் மனதை விட்டு அகல பல நாட்கள் அஆகும். கொடுமை/

ம்ம். நன்றிங்க.

vasu balaji said...

ஆரூரன் விசுவநாதன் said...

/பாலாண்ணே.....வணக்கம்.....

சம்மட்டியடி......செம்மறியாடுகளுக்கு...ஆனாலும் இது பத்தாது.

தொடருங்கள்

வாழ்த்துக்கள்

அன்புடன்
ஆரூரன்//

வணக்கம் வாங்க ஆரூரன். நன்றி

// பி.கு.
டிசம்பர் 20 ஈரோடு வர்ரீங்க....
சந்திப்போம்//

கண்டிப்பாக முயற்சிக்கிறேன்.

vasu balaji said...

ஈரோடு கதிர் said...

/அந்த ஆசிரியை வணக்கத்துக்குரியவர்...//

ஆமாம் கதிர்.

vasu balaji said...

நர்சிம் said...

/மிக நல்ல பார்வையில் பதிந்திருக்கிறீர்கள்../

வாங்க நர்சிம். நன்றி.

Unknown said...

// கூட்டமாய் அடித்தால் குற்றமில்லை என்ற கும்பல் மனப்பான்மை என்றுதான் ஒழியுமோ! //

உங்களுக்கு பேராசை தான்..,

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

தேவையான இடுகை பாலாண்ணே.

நம் மக்களுக்கு இது போன்ற நேரங்களில் எப்படி நடப்பது என்பது கூட தெரியாது.

S.A. நவாஸுதீன் said...

டீவியில் திரும்பத் திரும்ப இதைக்காட்டும்போது ரொம்ப வேதனையாவும், வருத்தமாவும் இருக்கு சார்.

அந்த ஆசிரியையை நினைக்கும்போது மெய்சிலிர்க்கிறது.

சத்ரியன் said...

//கூட்டமாய் அடித்தால் குற்றமில்லை என்ற கும்பல் மனப்பான்மை என்றுதான் ஒழியுமோ!//

பாலா,

பொருத்தமான தலைப்பு...!

பின்னோக்கி said...

கொடுமைங்க. பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச்செல்லும் வண்டி, பல குழந்தைகளை கொன்றிருக்கிறது. எப்பொழுதுதான் இவர்கள் ஜாக்கிரதையாக இருப்பார்களோ ??.

நீங்கள் பகிர்ந்து கொண்ட சம்பவம் நெஞ்சை உலுக்கியது. அவ்வளவு அலட்சியமாக வண்டியை எடுக்க சொன்னவர்களுக்கு அறிவே இல்லையா. கொடுமைங்க...

பெண்களுக்கு குழந்தைகள் மேல் உள்ள பாசம் இன்னுமொரு முறை உறுதியாகிறது.

cheena (சீனா) said...

அன்பின் பாலா

சில சமயங்கலில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் எவனோ ஒருவன் கூறுவதை அப்படியே கடைப்பிடிக்கும் மனோபாவம் கூட்டத்தினருக்கு உண்டாகிறது. தவிர்க்க வேண்டிய செயல்.

நல்ல நடையில் இயல்பாக எடுத்துச் சொல்லும் பாலாவின் திரமி பாராட்டுக்குரியது.

நல்வாழ்த்துகள்

vasu balaji said...

பேநா மூடி said...

/ உங்களுக்கு பேராசை தான்..,//

இதுவா பேராசை..அவ்வ்வ்.

vasu balaji said...

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

/தேவையான இடுகை பாலாண்ணே.

நம் மக்களுக்கு இது போன்ற நேரங்களில் எப்படி நடப்பது என்பது கூட தெரியாது.//

நன்றிங்க செந்தில். ஆமாங்க. உடனே கொதிச்சிடுவாய்ங்க.

vasu balaji said...

S.A. நவாஸுதீன் said...

/டீவியில் திரும்பத் திரும்ப இதைக்காட்டும்போது ரொம்ப வேதனையாவும், வருத்தமாவும் இருக்கு சார்.

அந்த ஆசிரியையை நினைக்கும்போது மெய்சிலிர்க்கிறது.//

ஆமாங்க நவாஸூதீன். ரொம்ப துணிச்சல் வேணும்.

vasu balaji said...

சத்ரியன் said...

/ பாலா,

பொருத்தமான தலைப்பு...!//

நன்றிங்க.

vasu balaji said...

பின்னோக்கி said...

/ கொடுமைங்க. பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச்செல்லும் வண்டி, பல குழந்தைகளை கொன்றிருக்கிறது. எப்பொழுதுதான் இவர்கள் ஜாக்கிரதையாக இருப்பார்களோ ??.//

ஆரம்பிச்சிட்டாங்க பழிவாங்கலை. ஸ்கூலுக்கு அனுமதி புதுப்பிக்கலையாம்.

/நீங்கள் பகிர்ந்து கொண்ட சம்பவம் நெஞ்சை உலுக்கியது. அவ்வளவு அலட்சியமாக வண்டியை எடுக்க சொன்னவர்களுக்கு அறிவே இல்லையா. கொடுமைங்க.../

ஆமாம்.

/பெண்களுக்கு குழந்தைகள் மேல் உள்ள பாசம் இன்னுமொரு முறை உறுதியாகிறது.//

சரியா சொன்னீங்க.

vasu balaji said...

cheena (சீனா) said...

//அன்பின் பாலா

சில சமயங்கலில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் எவனோ ஒருவன் கூறுவதை அப்படியே கடைப்பிடிக்கும் மனோபாவம் கூட்டத்தினருக்கு உண்டாகிறது. தவிர்க்க வேண்டிய செயல்.

நல்ல நடையில் இயல்பாக எடுத்துச் சொல்லும் பாலாவின் திரமி பாராட்டுக்குரியது.

நல்வாழ்த்துகள்//

ஆமாமுங்க. நன்றி.

ஈ ரா said...

பாலா சார் இரண்டாம் பகுதி சம்பவம் படிக்கும்போதே நடுங்குகிறது....நேரில் பார்த்த உங்கள்ளுக்கு எப்படி இருந்திருக்கும் என்று நினைத்தாலே பதறுகிறது..

இதை விடக் கொடுமை அந்த ஓட்டுனருக்கு.... ஒரு உயிர் போய், இன்னொருவரையும் ஜடமாக்கிவிட்டதே இந்த சம்பவம்..

மிகவும் வருந்துகிறேன்

நிஜாம் கான் said...

அண்ணே! ஒரு ரகசியம் காதக்குடுங்க. உங்களுக்கு 2 பேர் எதிரிகள் இருக்கிறார்கள். அதுயார்???

நிஜாம் கான் said...

அண்ணே! இந்த சம்பவம் நெஞ்சை பதறவைத்தது. அந்த ஆசிரியை உண்மையிலேயே தியாகத்திற்குரியவர். நீங்கள் சொல்லியிருப்பது ஒரு டிராக்டர் கதைதான். ஆனால் வெளிவராத ஆயிரம் கதைகள் இருக்கிறது,

vasu balaji said...

ஈ ரா said...

/இதை விடக் கொடுமை அந்த ஓட்டுனருக்கு.... ஒரு உயிர் போய், இன்னொருவரையும் ஜடமாக்கிவிட்டதே இந்த சம்பவம்..//

ஆமாங்க ஈரா.

/மிகவும் வருந்துகிறேன்/

ம்ம்

vasu balaji said...

இப்படிக்கு நிஜாம்.., said...
/அண்ணே! ஒரு ரகசியம் காதக்குடுங்க. உங்களுக்கு 2 பேர் எதிரிகள் இருக்கிறார்கள். அதுயார்???/

இல்லண்ணே. அது நேர்ந்துகிட்டா மாதிரி தினம் 2 மைனஸ் போட்டு போவாங்க. எனக்கு 2, கலகலப்ரியாக்கு 2, கதிருக்கு 4னு.=))

vasu balaji said...

இப்படிக்கு நிஜாம்.., said...
/அண்ணே! இந்த சம்பவம் நெஞ்சை பதறவைத்தது. அந்த ஆசிரியை உண்மையிலேயே தியாகத்திற்குரியவர். நீங்கள் சொல்லியிருப்பது ஒரு டிராக்டர் கதைதான். ஆனால் வெளிவராத ஆயிரம் கதைகள் இருக்கிறது,
/

ஆமாங்க நிஜாம்.

வெற்றி-[க்]-கதிரவன் said...

-:(

vasu balaji said...

[ஞானப்]-[பி]-[த்]-[த]-[ன்] (எ) வெற்றி-[க்]-கதிரவன் said...

-:(


ம்ம்.

அன்புடன் மலிக்கா said...

செல்போனினால் இன்னும் என்னென்ன ஆபத்துக்கள் கத்திருக்கிறதோ..

Thamira said...

உங்கள் எழுத்து வீரியமாக இருக்கிறது. இரண்டாம் பகுதியில் நீங்கள் எழுதியதை படிக்கவே முடியாத அளவில் கஷ்டமாக இருக்கிறது. :-((

vasu balaji said...

அன்புடன் மலிக்கா said...

/செல்போனினால் இன்னும் என்னென்ன ஆபத்துக்கள் கத்திருக்கிறதோ../

ஆமாங்கம்மா.கவலையா இருக்கு.

vasu balaji said...

ஆதிமூலகிருஷ்ணன் said...

/உங்கள் எழுத்து வீரியமாக இருக்கிறது. இரண்டாம் பகுதியில் நீங்கள் எழுதியதை படிக்கவே முடியாத அளவில் கஷ்டமாக இருக்கிறது. :-((/

நன்றிங்க ஆதி. ஆமாங்க ரொம்ப நாள் இது பாதித்தது என்னை.

ரோஸ்விக் said...

இதன் இரண்டாவது பகுதியில் நீங்க எழுதிய விஷயமும், விதமும் என்னை ஒரு கணம் மயக்க நிலைக்கு தள்ளிவிட்டது. :-(

vasu balaji said...

ரோஸ்விக் said...

// இதன் இரண்டாவது பகுதியில் நீங்க எழுதிய விஷயமும், விதமும் என்னை ஒரு கணம் மயக்க நிலைக்கு தள்ளிவிட்டது. :-(//

ம்ம்