கட்டம் கட்டமான விதிபோல்
தொட்டியில் இரு மீன்கள்
காதல் கடலில் நீந்தி இருந்தன..
வலையென விதியால்
பெண் மீன் அடுத்த தொட்டி சேரும்வரை!
முட்டி மோதி அடையத் தவிக்கிறது ஆண் மீன்
துவண்டு, காணப் பொறாமல் முகம் தவிர்க்கிறது பெண் மீன்
தவிப்புத் தாங்காமல் போடா என்கிறது ஆணை!
ஆணுக்குத் தெரியும் பெண் மீன் தொட்டியில் உப்புக் கரிப்பது!
பெண் மீன் அறியும் ஆண் மீன் தொட்டியில் நீர் மட்டம் உயர்வது!
இதோ நாளையே
வலை
விதி மாற்றும்
ஆணோ பெண்ணோ
மீண்டும் தன்னுடன் சேரும்!
தொட்டியே மீண்டும் கடலாய்! காதலால்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சொன்னால் கேட்கிறாயா நீ
ரோஜாச் செடி அருகில் போகாதேயென்று!
இப்போது பார்! உன் உதட்டோடும்
கன்னத்தோடும் போட்டியிட்டு
இரண்டுமாய் குழம்புகிறது!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நீயும் நானும் ஒரே ஐஸ்கிரீம் தானே வாங்கினோம்
என்னுடையது பாறையாயிருக்க
உன்னைப் பார்த்ததும் உன் ஐஸ்கிரீம்
எப்படி உருகி தளர்ந்திருக்கிறது பார்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
உன்னோடு வெளியில் செல்லும் போதெல்லாம்
மனம் வேண்டும்..
திடீரென மழை பெய்யாதாவென!
சட்டென்று முந்தானை போர்த்து
அணைத்துச் செல்வாய் அல்லவா
யார் பார்த்தாலும் கவலையின்றி...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
52 comments:
சில்லுன்னு இருக்குது...
பாலாண்ணே......ம்ம்ம்ம்....
இப்புடியெல்லாம் நீங்க எழுதினா, நாங்களெல்லாம் என்ன பன்றது...
சும்மா சொல்லப் படாது....ஆனாலும் ரசனையான பதிவுதான்
அன்பின் பாலா
அருமையான கவிதைகல் - காதல் கவிதைகள் - ஐஸ்கிரீம் உருகுதா - உருகும் உருகும் - மழை பெய்யணும் சீக்க்ரம் பெய்யணும் - ஆமா
நல்வாழ்த்துகள் பாலா
முடியல சார்.. நீங்க விண்டர் டைம்ல ஐஸ்க்ரீம் சாப்டா இப்டித்தான் ஆவும்...! அவிங்க சம்மர்ல சாப்புடுராய்ங்க போல... அம்ணி.. கொஞ்சம் பாருங்..!
//சட்டென்று முந்தானை போர்த்து
அணைத்துச் செல்வாய் அல்லவா
யார் பார்த்தாலும் கவலையின்றி...//
அறுபதிலும் ஆசை வரும்னு சொல்வாங்களே அது இது தானா...?
//என்னுடையது பாறையாயிருக்க
உன்னைப் பார்த்ததும் உன் ஐஸ்கிரீம்
எப்படி உருகி தளர்ந்திருக்கிறது பார்!//
வயசானா ஐஸ்க்ரீம் கூட திங்க முடியாதோ...?
//உன் உதட்டோடும்
கன்னத்தோடும் போட்டியிட்டு
இரண்டுமாய் குழம்புகிறது!
//
ரசனை...
//முட்டி மோதி அடையத் தவிக்கிறது ஆண் மீன்
துவண்டு, காணப் பொறாமல் முகம் தவிர்க்கிறது பெண் மீன்
தவிப்புத் தாங்காமல் போடா என்கிறது ஆணை!//
தொட்டியை வச்சி என்னாமா யொசிக்கிறீங்க...
அனைத்து கவிதைகளும் அருமை..காதல் ரசம் சொட்டுகிறது..
அருமை ரஜனி படத்து ஓப்பினிங் பாடல் போல தத்துவமும் கலந்திருக்கு
கலக்கல் சார்
இறங்கி அடிக்கிறீங்க
தலைவா! கவிதை உருகுது.. சூப்பர்!
தூள் கிளப்பீட்டிங்க சார்.........
கடைசி கவிதை அழகு
ஆமா என்ன நடக்கு இங்க?? யாரோ வந்து லவ் கவித எழுதிட்டு போயிருக்காங்க. வானம்பாடிகள்னு ஒரு ‘வயசானவர்’ இருந்தாரே அவரு எங்க???
என்ன காதல் நிரம்பி வழியுது...
அந்த பக்கம் டெஸ்ட் மேட்ச் ஆடிகிட்டு இந்த பக்கம் 20/20 ஆடுறீங்களே சார். எப்புடி?
நீங்க கலக்குங்க சார்.
//நீயும் நானும் ஒரே ஐஸ்கிரீம் தானே வாங்கினோம்
என்னுடையது பாறையாயிருக்க
உன்னைப் பார்த்ததும் உன் ஐஸ்கிரீம்
எப்படி உருகி தளர்ந்திருக்கிறது பார்!
//
profile ல அப்பா ஃபோட்டோவ போட்டுட்டு பதிவு எழுதுற ஒரே ஆள் நீ தானா தம்பி...(!)
வயசான காலத்துல எப்பிடில்லாம் ஃபீல் பண்றாங்கையா.! :-))
அழகான கவிதைகள். முதல் கவிதை மட்டும் சுருக்கமா இருந்தா இன்னும் அழகாக இருக்கும்.
முதல் கவிதை உருக்கம் இரண்டாவது ...குறும்பு மூன்றாவது...குளிர்...நானகாவது குசும்பு...
சரியா சார்...
தலையாறி வீட்டில ஒளியறதுன்னு என்ன கேட்டதுக்கு பதில் இதோ கீழே...
பிரிக்கும் வலை
பிரியும் வரை
பிரியாமல் மீன்கள்....
குழப்பம் எனக்கு
ரோஜாவின் நிறம்
இவ்வளவு மங்கலாய்
அருகில் அவள்.
கரையாமல்
பார்க்கும் கரையுமுன்
ஐஸ்கிரீமை...
உள்ளுள் கரைந்து...
முந்தானை போர்த்தல்
மழையே வா
வேண்டும் மனம்,
வருமா.
பிரபாகர்.
கவிதை நன்றாகவுள்ளது..
கலக்கறீங்க....
1) கடல்(காதல்) கவிதை
2) பூங்கவிதை
3) ஐஸ்க்ரீம் கவிதை
4) கவிதை மழை...!!!!
அப்பன் said...
/சில்லுன்னு இருக்குது../
நன்றிங்கய்யா.
ஆரூரன் விசுவநாதன் said...
/ பாலாண்ணே......ம்ம்ம்ம்....
இப்புடியெல்லாம் நீங்க எழுதினா, நாங்களெல்லாம் என்ன பன்றது...
சும்மா சொல்லப் படாது....ஆனாலும் ரசனையான பதிவுதான்/
நன்றி ஆரூரன்
cheena (சீனா) said...
/அன்பின் பாலா
அருமையான கவிதைகல் - காதல் கவிதைகள் - ஐஸ்கிரீம் உருகுதா - உருகும் உருகும் - மழை பெய்யணும் சீக்க்ரம் பெய்யணும் - ஆமா
நல்வாழ்த்துகள் பாலா/
:)). நன்றிங்க சீனா
கலகலப்ரியா said...
/முடியல சார்.. நீங்க விண்டர் டைம்ல ஐஸ்க்ரீம் சாப்டா இப்டித்தான் ஆவும்...! அவிங்க சம்மர்ல சாப்புடுராய்ங்க போல... அம்ணி.. கொஞ்சம் பாருங்..!/
ஒண்ணா வாங்கினதுன்னு தானே சொன்னேன். தூக்கக் கலக்கம்..grrrrrrr
புலவன் புலிகேசி said...
/ அறுபதிலும் ஆசை வரும்னு சொல்வாங்களே அது இது தானா...?/
எனக்கெப்படித் தெரியும்:)
/வயசானா ஐஸ்க்ரீம் கூட திங்க முடியாதோ...?/
இதுவும் அவுட் ஆஃப் சிலபஸ்
/தொட்டியை வச்சி என்னாமா யொசிக்கிறீங்க...
அனைத்து கவிதைகளும் அருமை..காதல் ரசம் சொட்டுகிறது../
நன்றி புலிகேசி
தியாவின் பேனா said...
/அருமை ரஜனி படத்து ஓப்பினிங் பாடல் போல தத்துவமும் கலந்திருக்கு/
நன்றிங்க தியா.
கரிசல்காரன் said...
/ கலக்கல் சார்
இறங்கி அடிக்கிறீங்க/
நன்றிங்க.
சூர்யா ௧ண்ணன் said...
/தலைவா! கவிதை உருகுது.. சூப்பர்!/
:)). நன்றி தலைவா.
Sangkavi said...
/தூள் கிளப்பீட்டிங்க சார்........./
நன்றிங்க சங்கவி.
ஈரோடு கதிர் said...
/கடைசி கவிதை அழகு/
ஓஹோ
க.பாலாசி said...
/ஆமா என்ன நடக்கு இங்க?? யாரோ வந்து லவ் கவித எழுதிட்டு போயிருக்காங்க. வானம்பாடிகள்னு ஒரு ‘வயசானவர்’ இருந்தாரே அவரு எங்க???//
நேர்ல பார்த்தப்புறமுமா பாலாசி இப்புடி. என் கூட நின்னா வயசானாமாதிரி தெரியரன்னுதான தள்ளி தள்ளீ போன:))
பேநா மூடி said...
/என்ன காதல் நிரம்பி வழியுது.../
நிரம்பிருச்சா:o
S.A. நவாஸுதீன் said...
/அந்த பக்கம் டெஸ்ட் மேட்ச் ஆடிகிட்டு இந்த பக்கம் 20/20 ஆடுறீங்களே சார். எப்புடி?
நீங்க கலக்குங்க சார்./
நன்றி நவாஸ்
நர்சிம் said...
/ profile ல அப்பா ஃபோட்டோவ போட்டுட்டு பதிவு எழுதுற ஒரே ஆள் நீ தானா தம்பி...(!)//
இல்லீங்ணா. அது நானு நானு=))
ஆதிமூலகிருஷ்ணன் said...
/வயசான காலத்துல எப்பிடில்லாம் ஃபீல் பண்றாங்கையா.! :-))//
டோட்டல் டேமேஜ்..அவ்வ்வ்வ்வ்..
// அழகான கவிதைகள். முதல் கவிதை மட்டும் சுருக்கமா இருந்தா இன்னும் அழகாக இருக்கும்.//
ஆமாம். நினைச்சேன். ஏனோ மனசு ஒட்டல.
Balavasakan said...
/முதல் கவிதை உருக்கம் இரண்டாவது ...குறும்பு மூன்றாவது...குளிர்...நானகாவது குசும்பு...
சரியா சார்...//
ம்கும். டாக்டராக எல்லாத் தகுதியும் இருக்கு. ஜுர மாத்திரை தலைவலிக்கும் சொன்னல்ல:))
பிரபாகர் said...
// தலையாறி வீட்டில ஒளியறதுன்னு என்ன கேட்டதுக்கு பதில் இதோ கீழே...
பிரிக்கும் வலை
பிரியும் வரை
பிரியாமல் மீன்கள்....
குழப்பம் எனக்கு
ரோஜாவின் நிறம்
இவ்வளவு மங்கலாய்
அருகில் அவள்.
கரையாமல்
பார்க்கும் கரையுமுன்
ஐஸ்கிரீமை...
உள்ளுள் கரைந்து...
முந்தானை போர்த்தல்
மழையே வா
வேண்டும் மனம்,
வருமா.
பிரபாகர்.//
‘ரி’. றி இல்ல.
இது பின்நவீனத்துவமாண்ணா:))
முனைவர்.இரா.குணசீலன் said...
/ கவிதை நன்றாகவுள்ளது../
நன்றிங்க
ஸ்ரீராம். said...
/கலக்கறீங்க....
1) கடல்(காதல்) கவிதை
2) பூங்கவிதை
3) ஐஸ்க்ரீம் கவிதை
4) கவிதை மழை...!!!!/
நன்றிங்க ஸ்ரீராம்
ம்ம்ம்......கலக்குறீங்க
ஐஸ்க்ரீம் காதல் - உருக்கம்
//நீயும் நானும் ஒரே ஐஸ்கிரீம் தானே வாங்கினோம்
என்னுடையது பாறையாயிருக்க
உன்னைப் பார்த்ததும் உன் ஐஸ்கிரீம்
எப்படி உருகி தளர்ந்திருக்கிறது பார்!//
ரெம்பவே உருகிட்டேன்
முதல் கவிதை ரசனை சூப்பர் நைனா..
ஐஸ்கிரீம் கவிதை இப்டியெல்லாம் கவிதை எழுதியிருந்தா நானெல்லாம் ஒரு மூணு வருஷத்துக்கு முன்னாடியே வாழ்க்கையில செட்டிலாயிருப்பேனே
நர்சிம் சார் கமெண்ட் இன்னும் சிரிப்ப அடக்க முடியல...
:))))))))
அண்ணே! பத்து வயசு பட்டுன்னு கொறஞ்ச மாதிரி இருக்கு. (யாருக்கு ??????)
அவதி,குழப்பம் இவற்றால்
காதல்
உருகி, மழை பொழியுது
மனதில்
வாழ்த்துக்கள்
ஸ்ரீ said...
/ம்ம்ம்......கலக்குறீங்க/
நன்றி ஸ்ரீ.
இராகவன் நைஜிரியா said...
/ஐஸ்க்ரீம் காதல் - உருக்கம்/
நன்றிண்ணே.
நசரேயன் said...
/ ரெம்பவே உருகிட்டேன்/
ஹீட்டர் பக்கதுல உக்காந்தியளோ:))
பிரியமுடன்...வசந்த் said...
/ முதல் கவிதை ரசனை சூப்பர் நைனா..
ஐஸ்கிரீம் கவிதை இப்டியெல்லாம் கவிதை எழுதியிருந்தா நானெல்லாம் ஒரு மூணு வருஷத்துக்கு முன்னாடியே வாழ்க்கையில செட்டிலாயிருப்பேனே
நர்சிம் சார் கமெண்ட் இன்னும் சிரிப்ப அடக்க முடியல...
:))))))))//
ஆமாம்:))
இப்படிக்கு நிஜாம்.., said...
/அண்ணே! பத்து வயசு பட்டுன்னு கொறஞ்ச மாதிரி இருக்கு. (யாருக்கு ??????)/
படிச்சவங்களுக்குதான். எனக்கு 20:))
றமேஸ்-Ramesh said...
/அவதி,குழப்பம் இவற்றால்
காதல்
உருகி, மழை பொழியுது
மனதில்
வாழ்த்துக்கள்/
இது ஒண்ணு போதும் உன்னை இழுத்துவிட.:))
)((((((((((((( முட்டி மோதி அடையத் தவிக்கிறது ஆண் மீன்
துவண்டு, காணப் பொறாமல் முகம் தவிர்க்கிறது பெண் மீன்
தவிப்புத் தாங்காமல் போடா என்கிறது ஆணை! ))))))))))))
அற்புதமான சிந்தனை வாழ்த்துகள் நண்பரே !!!!!
தொட்டியே மீண்டும் கடலாய்! காதலால்......
Juuuuuuuuuuuuuper
Post a Comment