Sunday, December 27, 2009

அரேஞ்ட் லவ்வு!

(இன்று முதல் ஒரு வாரம் வலைச்சரம் ஆசிரியராகவும் இருக்கிறேன். அங்கயும் ஒரு லுக்கு விடுங்க மக்கா. டாங்க்ஸ்:)))




ஈரோடு பதிவர் சந்திப்புக்காக 20ம் திகதி காலை கோவை விரைவு வண்டியில் பதிவு செய்திருந்தேன். ஏ.சி. சேர்காரில் சன்னலோர இருக்கை என்பதே கொஞ்சம் நடுங்க வைத்தது என்றாலும், மார்கழிக் குளிரும், 3 பேர் இருக்கையில் சன்னலோரம் ஏ.சி. முழுதும் மேலடிக்கையில் அடிக்கடி டாய்லட் போக வேண்டிய அவஸ்தை வேறு இன்னும் படுத்தியது.

வண்டி கிளம்பியதும், எதிர் சீட் ஆட்கள் வரிசையாக சீட்டைச் சரித்ததும் 30 டிகிரி பாகையில் வளைந்து கழிப்பறை போவதென்பதே சர்கஸாயிற்றே என்ற கலக்கம் வேறு. மனுசனுக்கு கஷ்டம் சிங்கிளா வராது தானே. எனக்கும் வந்திச்சி. பக்கத்து சீட் பயணி மூலம்.

அய்யா, மலேசியா வழியா சிங்கப்பூர் போயிருக்கிறார். அங்கு லோக்கல் சிம் கார்ட் மாத்தினாராம். இங்கிருக்கும் கார்டுக்கு கால் டைவர்ட் போட்டாராம். இங்கு வந்த பிறகு அலைபேசியில் கால் டைவர்ட் எடுக்கலையாம். மச்சானுக்கு கால் போட்ட போது அந்தாளு கிழிச்சி தொங்கவிட்டு, உன் மனைவி அழுது தவிக்கிறார் என்ற போது தான் தெரிந்ததாம்.

பிடிச்சது போறாத காலம். காலை ஆறு மணிக்குள் எழுந்து ஓடி வண்டி பிடித்து விட்ட தூக்கத்தை தொடர வழியின்றி,  ங்கொய்யால எழுதி வெச்சது படிக்கிறா மாதிரி ஒரு வார்த்தை மாறாமல் ஒன்று இவர் பேசுவார். அல்லது வரும் அழைப்பில் சொல்லுவார்.

குளிர் ஒரு புறம், கொசுக்கடி(அய்யா ஃபோன் பேசுறதுதான்)ஒரு புறம் இருந்தாலும் எப்படியோ அரை மயக்கத்தில் தூங்கி வழிந்து, குளிரில் வடிவேலு ஆகாமல் இருக்க வேண்டி சர்க்கஸ் செய்த படி டாய்லட் போகின்றபோது பார்த்தால் திருவள்ளூர்.

அரை மயக்கத்திலேயே வந்து துண்டு எடுத்து போர்த்துக் கொண்டு கண் மூட, இத்தனை நேரம் கேட்டதில் அவரின் போன் பேச்சு தாலாட்டு மாதிரி பழகிவிட்டிருந்தது. அவரும் கண்மூட, ப்ளீஸ் ஒரு வாட்டி பேசுங்களேன்! நான் தூங்கிக்கிறேன் என்று கெஞ்ச வேண்டும் போல் வந்தது. அதற்கு அவசியமின்றி ஒரு அழைப்பு வர அவசரமின்றி அவர் ஆரம்பிக்க நான் அவசரமாய்த் தூங்கத் துவங்கினேன்.

திரும்பவும் வடிவேலு மணியடிக்க, விழித்த போது காட்பாடி நெருங்கிவிட்டிருந்தது. சர்வர் சுந்தரம் நாகேஷ் போல் சாய்ந்தபடியே கழிப்பறை சென்று திரும்ப, ஓர சீட்டில் ஒரு பெண். இது வேறயா என்றவாறே 26.5 பாகையில் எப்படியோ போய் சீட்டில் உட்கார்ந்தேன்.

அய்யாவை கூட்டிப்போக ஏற்பாட்டுக்கு அழைப்பு மாறி, அந்த விடயம் பரிமாறப்பட, அடுத்த தாலாட்டில் தூங்கவும் முடியாமல் படிக்கவும் முடியாமல் ஒரு மார்க்கமாகிப் போனேன். அப்புறம் ஆரம்பித்தது எனக்கு புது அனுபவம்.

அந்தப் பெண் தன்னுடைய அலைபேசியை எதிர் சீட் ட்ரே மீது வைக்க, ஐய்யா மாடல் பேர் சொல்லி நல்லா இருக்கா என்று முதல் பிட்ட போட்டாரு. அந்தம்முணி பரவாயில்லை என்று குறை நிறை சொல்ல, இப்போ புது மாடல்ல என்று ஆரம்பித்து தான் செல்ஃபோன் கடை ஒன்றும் வைத்திருப்பதை வெளியே விட்டார்.

கொஞ்ச நேரம் செல்ஃபோனைச் சுற்றிய அரட்டை மாறி, நீங்க இங்க படிக்கிறீங்களா என்ற ஒற்றை பிட்டில் ஆரம்பித்து, எந்த கோர்ஸ், என்ன பண்ணப் போகிறார், வாரா வாரம் போய் வருவாரா, விடுமுறையில் மட்டுமா?, ஒன்றாம் வகுப்பிலிருந்து ஹாஸ்டலில் இருந்தது முதல் அத்தனை விவரமும் வரவைத்து விட்டார்.

மெதுவாக தன் மனைவி எப்படி வீட்டுப் புறா, காலேஜ் போவதற்கே என்ன பாடு, திருமணம் முடித்து கரெஸில் பட்டப் படிப்பு முடித்தது எல்லாம் சத்தமாகக் கூறி, லவ் மேரேஜ்தாங்க என்றும் சொன்ன போது என்ன இது என்று தூக்கிப் போட்டது.

மேலதிகமாக, சொந்தம்தான், நம்ம ஜாதிதான். பார்க்கிறோம் இல்லிங்களா? வேற ஜாதின்னா குடும்பத்தில பிரச்சன, லவ் ஃபெயிலியூராயிடும். அதனால அதுல நான் தெளிவா இருந்தங்க. அந்தஸ்தும் ஒன்னும் குறையில்லங்க அதுனால பிரச்சனையில்லங்க என்று காதலுக்கு புது விளக்கமளித்தார்.

அடங்கொன்னியா! யாருன்னே தெரியாத பொண்ணுகிட்ட இப்புடியெல்லாமா பேசுவாங்க? ஏப்பா அந்த கட்டம் போட்ட கடுதாசி பிரச்சனயில்லையான்னு கேக்கணும் போல வந்திச்சி. மனசப் படிச்சவன் மாதிரி, நல்ல காலங்க அதுலயும் பிரச்சனயில்லைன்னு சொன்னதும் சிப்பு சிப்பா வந்தாலும் அமுக்கிட்டு இருந்தேன்.

அம்முணி சர்வ சாதாரணமா நானும் லவ் பண்றேன்னது ஒரு அதிர்ச்சின்னா, எனக்கும் தெரியுமுங்க இப்புடி வேற ஜாதின்னா தகறாரு, ஒறவுல அசிங்கம்னு. என் லவரும் நம்ம ஜாதிதான், வசதியானவங்கதான்னு முன் பின் அறிமுகமில்லாத ஒரு நபர் கிட்ட விளக்கமா சொன்னது பேரதிர்ச்சி.


20-25 வருஷத்துக்கு முன்னாடி  ”கணக்கு பார்த்து காதல் வந்தது..கச்சிதமா ஜோடி சேர்ந்ததுன்னு ” கங்கை அமரன் எழுதுன பாட்டு கவனம் வந்திச்சி. இப்புடி லவ்வரதுதானா அது! வெவரமாத்தான்யா இருக்காங்க.

அதுக்குள்ள என்னாண்ணே எங்க இருக்கீங்க? காவேரி தாண்டியாச்சான்னு கதிர் கால் பண்ணவும், அய்யா! சாமி! நான் சர்க்கஸ் பண்ணி அங்கால போறேன்,கொஞ்சம் பைய குடுங்க சாமிகளான்னு நடைய கட்டி கதவண்டை போனேன்.

59 comments:

கலகலப்ரியா said...

=)).. ம்ம் இப்டித்தான் பல அரேஞ்சிட்டு லவ்வுசு நடக்குது...! உங்க தூக்கம் உலகப் புகழ் பெற்றதாச்சே சார்..=))

Subankan said...

:)))

ப்ரியமுடன் வசந்த் said...

நைனா இதுமாதிரி கணக்கு ஜாதி பாத்து காதலிக்கிறவங்களைப்பாத்து சொல்ல வேறென்னென்னம்மோ மூக்குமேல வந்து நிக்குது பின்ன பெண்களைப்பத்தி தப்பா பேசாதடான்னு சொல்லுவ வேணாம்ன்னு வாய மூடிட்டு போறேன்...!

vasu balaji said...

கலகலப்ரியா said...

/=)).. ம்ம் இப்டித்தான் பல அரேஞ்சிட்டு லவ்வுசு நடக்குது...! உங்க தூக்கம் உலகப் புகழ் பெற்றதாச்சே சார்..=))/

பதிவர் சந்திப்பு ஃபோடோல பாலாசி பக்கத்துல உக்காந்து நான் தூங்கல தூங்கல தூங்கல:))..(கம்பேனி சீக்ரட்லாம் வெளிய விட்றாதம்மா)

vasu balaji said...

Subankan said...

:)))

:)) வாங்க சுபாங்கன்

vasu balaji said...

பிரியமுடன்...வசந்த் said...

/நைனா இதுமாதிரி கணக்கு ஜாதி பாத்து காதலிக்கிறவங்களைப்பாத்து சொல்ல வேறென்னென்னம்மோ மூக்குமேல வந்து நிக்குது பின்ன பெண்களைப்பத்தி தப்பா பேசாதடான்னு சொல்லுவ வேணாம்ன்னு வாய மூடிட்டு போறேன்...!//

நல்ல புள்ள. ஆமாம். அதென்ன பெண்களைப் பத்தி..பேசுறதுன்னா ரெண்டு பேத்தையும்தான் பேசணும்.

jothi said...

அந்த சிங்கப்பூர் செல்போன் கடைக்காரர் நீங்கதானே சார்?

ஊர்சுற்றி said...

லவ்வுக்கு நல்லா விளக்கம் கண்டுபிடிக்கிறாங்கப்பா!

vasu balaji said...

jothi said...

/அந்த சிங்கப்பூர் செல்போன் கடைக்காரர் நீங்கதானே சார்?/

இல்லீங்க நாந்தான் அந்த பொண்ணு. :))

vasu balaji said...

ஊர்சுற்றி said...

/லவ்வுக்கு நல்லா விளக்கம் கண்டுபிடிக்கிறாங்கப்பா!/

இல்லைங்க:)) அரேஞ்டு லவ்வுக்குனு வேணா சொல்லலாம்.

geethappriyan said...

நல்ல கலகல,
அரேஞ்டு லவ் வாழ்க

இராகவன் நைஜிரியா said...

ரயில் பிரயானம் என்பதே ஒரு சுகம்... அதை இதுமாதிரி ஆட்கள் வந்து கெடுத்தாங்கன்னா... ஐயோ பாவம் அண்ணே நீங்க..

இராகவன் நைஜிரியா said...

// மனுசனுக்கு கஷ்டம் சிங்கிளா வராது தானே. //

இந்த டயலாக் கூட நல்லாத்தாங்க இருக்கு

பிரபாகர் said...

//குளிர் ஒரு புறம், கொசுக்கடி(அய்யா ஃபோன் பேசுறதுதான்)//
அதானே! ஏசியில கொசுவான்னு! அது...

பதிலுக்கு கதிர போன் போட சொல்லி போட்டிக்கு விளையாண்டிக்கலாம். ஆனா அவங்க விஷயமெல்லாம் இவ்வளவு கிளியரா கிடைச்சிருக்காது.

அய்யா நல்லாத்தான் சுற்றி கவனிக்கிறாப்ல...

பிரபாகர்.

புலவன் புலிகேசி said...

ஆஹா..பயணங்களில் எவ்வளவு விடயங்களை அறிய முடிகிரது. ஆனா எங்க வீட்டுல ஜாதி பிரச்சினையும் இல்ல. எனக்கு காத்ல்ங்கற பிரச்சினையும் இல்ல...

பெசொவி said...

உங்கள் பதிவு நகைச்சுவை. இதில் ஒரு சீரியசாக ஒரு விஷயம்.
அந்த ஆண் தன் சொந்த விஷயத்தைப் பேசியதே தவறு. அந்தப் பெண்ணும் பதிலுக்கு தன் சொந்த விஷயத்தை பேசியது மிகத் தவறு. ரயில், பஸ் பயணங்களில் அறிமுகமில்லாத நபரிடம் இவ்வாறெல்லாம் கூறுவது ஆபத்தையே விளைவிக்கும்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-))

Rajasurian said...

//அவரும் கண்மூட, ப்ளீஸ் ஒரு வாட்டி பேசுங்களேன்! நான் தூங்கிக்கிறேன் என்று கெஞ்ச வேண்டும் போல் வந்தது. அதற்கு அவசியமின்றி ஒரு அழைப்பு வர அவசரமின்றி அவர் ஆரம்பிக்க நான் அவசரமாய்த் தூங்கத் துவங்கினேன்.//

கவிதை கவிதை...(உரைநடை கவிதை?)

:-)

cheena (சீனா) said...

அன்பின் பாலா

எழுத்தாளன் எனில் கண்ணும் காதும் எப்பொழுதுமே திறதிருக்க வேண்டும் - கண்ணில் பட்டதை எல்லாம் - காதில் பட்டதை எல்லாம் சுவையாக எழுத அது உதவும்.

நல்லா ரசிச்சேன் - நல்லாருந்திச்சி

நல்வாழ்த்துகள் பாலா

thiyaa said...

அருமையான லவ்கதை
நல்ல நடை,வாழ்த்துகிறேன்.

ஆரூரன் விசுவநாதன் said...

உங்களுக்கே உரித்தான நகைச்சுவை உணர்வோடு, பகிர்ந்தது அருமை.

அன்புடன்
ஆரூரன்

Unknown said...

//
உங்கள் பதிவு நகைச்சுவை. இதில் ஒரு சீரியசாக ஒரு விஷயம்.
அந்த ஆண் தன் சொந்த விஷயத்தைப் பேசியதே தவறு. அந்தப் பெண்ணும் பதிலுக்கு தன் சொந்த விஷயத்தை பேசியது மிகத் தவறு.
//

அப்படி பேசுபவதை தூங்குவது போன்ற பாவனையில் ஒட்டுக்கேட்பது இமாலயத் தவறு. ஆனால் அந்தத் தவறை செய்யாவிட்டால் இப்படி சுவாரசியமான பதிவு கிடைத்திருக்காது

ஜிகர்தண்டா Karthik said...

அட இதுக்காகவே நான் ஜாதகம் பாக்க கத்துக்கணும் போல இருக்கே...
பாக்கற பொண்ணுங்கள்ள ஜாதகம் வாங்கி சாதகமா இருந்தா பிக் அப் பண்ணலாம்...

பெசொவி said...

//முகிலன் Says:
//
உங்கள் பதிவு நகைச்சுவை. இதில் ஒரு சீரியசாக ஒரு விஷயம்.
அந்த ஆண் தன் சொந்த விஷயத்தைப் பேசியதே தவறு. அந்தப் பெண்ணும் பதிலுக்கு தன் சொந்த விஷயத்தை பேசியது மிகத் தவறு.
//

அப்படி பேசுபவதை தூங்குவது போன்ற பாவனையில் ஒட்டுக்கேட்பது இமாலயத் தவறு. ஆனால் அந்தத் தவறை செய்யாவிட்டால் இப்படி சுவாரசியமான பதிவு கிடைத்திருக்காது
//
:))))

நிஜாம் கான் said...

அண்ணே! திருவிழா நேரத்துல ஜெனரேட்டர் கிட்டக்க படுத்தவன் கதை(தி)யாச்சி உங்க கதை. அது சரி அது என்ன அரேஞ்ட் லவ்வு?????? :)))))))))))))))))))

பின்னோக்கி said...

ரயில் பயணங்களில் இந்த மாதிரி வித்தியாசமன கேரக்டர்ஸ் நிறைய பார்க்கலாம்.

ரயிலுல தூங்காம வந்தும் அடுத்த நாள் போட்டால அவ்வளவு பளிச்சுன்னு இருந்தீங்களே, அதன் ரகசியம் என்ன ?.

அப்புறம் அந்த பொண்ணுகிட்ட நீங்க போட்ட பிட்டப் பத்தி ஒண்ணும் எழுதலை ? அடுத்த பதிவு வருதா ? :)

க.பாலாசி said...

ஈரோட்டுக்கு வரும்போது ஒரு இடுகைக்கான மேட்டர பக்கத்துலையே வச்சிக்கிட்டுதான் வந்திருக்கீங்க. நல்லவேளை அந்தாளு உங்களை தூங்கவிடல. இல்லன்னா இந்த மேட்டர் வெளியில தெரிஞ்சிருக்குமா??? :-)

க.பாலாசி said...

//வானம்பாடிகள் said...
பதிவர் சந்திப்பு ஃபோடோல பாலாசி பக்கத்துல உக்காந்து நான் தூங்கல தூங்கல தூங்கல:))..//

ஆமாம்..அதை நான் என் இரண்டு கண்களையும் மூடிக்கொண்டே பார்த்தேன்.

balavasakan said...

இன்று முதல் ஒரு வாரம் வலைச்சரம் ஆசிரியராகவும் இருக்கிறேன். அங்கயும் ஒரு லுக்கு விடுங்க மக்கா

என்னது நாங்கெல்லாம் மக்கா யாரங்கே சார்வாள் வீட்டுக்கு அனுப்புங்கடா ஒரு ஆட்டோவை...

S.A. நவாஸுதீன் said...

வழக்கம்போல சுவாரசியத்துக்கு பஞ்சமில்லை சார்.

ஈரோடு கதிர் said...

அட... நெம்ப நாலாச்சுங்க... உங்க பேச்ச இந்த மாதிரி கேட்டு..

அவியல ஒரு போட்டோ புடிச்சிருந்தீன்னா... காதலு பத்தி புக் போடறப்போ... அட்டையில் அவிக போட்டோவ போட்டுருக்கலாமே....

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

வெவரம்தான்.

vasu balaji said...

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

/நல்ல கலகல,
அரேஞ்டு லவ் வாழ்க/

:)) நன்றி கார்த்திக்

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/ ரயில் பிரயானம் என்பதே ஒரு சுகம்... அதை இதுமாதிரி ஆட்கள் வந்து கெடுத்தாங்கன்னா... ஐயோ பாவம் அண்ணே நீங்க..//

இல்லைன்னாலும் ஏ.சி.குளிருண்ணே.

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/ இந்த டயலாக் கூட நல்லாத்தாங்க இருக்கு/

பின்ன!:))

vasu balaji said...

பிரபாகர் said...

/ அதானே! ஏசியில கொசுவான்னு! அது...

பதிலுக்கு கதிர போன் போட சொல்லி போட்டிக்கு விளையாண்டிக்கலாம். ஆனா அவங்க விஷயமெல்லாம் இவ்வளவு கிளியரா கிடைச்சிருக்காது.

அய்யா நல்லாத்தான் சுற்றி கவனிக்கிறாப்ல...//

தெரியுதில்ல. அப்புறம் எதுக்கு குசும்பு:))

vasu balaji said...

புலவன் புலிகேசி said...

/ஆஹா..பயணங்களில் எவ்வளவு விடயங்களை அறிய முடிகிரது. ஆனா எங்க வீட்டுல ஜாதி பிரச்சினையும் இல்ல. எனக்கு காத்ல்ங்கற பிரச்சினையும் இல்ல.../

காதல் பிரச்சனையா? இது புதுசால்ல இருக்கு.

vasu balaji said...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

/உங்கள் பதிவு நகைச்சுவை. இதில் ஒரு சீரியசாக ஒரு விஷயம்.
அந்த ஆண் தன் சொந்த விஷயத்தைப் பேசியதே தவறு. அந்தப் பெண்ணும் பதிலுக்கு தன் சொந்த விஷயத்தை பேசியது மிகத் தவறு. ரயில், பஸ் பயணங்களில் அறிமுகமில்லாத நபரிடம் இவ்வாறெல்லாம் கூறுவது ஆபத்தையே விளைவிக்கும்.//

இதுதான் அதிர்ச்சியைத் தந்தது

ராஜ நடராஜன் said...

//எழுத்தாளன் எனில் கண்ணும் காதும் எப்பொழுதுமே திறதிருக்க வேண்டும் - கண்ணில் பட்டதை எல்லாம் - காதில் பட்டதை எல்லாம் சுவையாக எழுத அது உதவும். //

அப்படின்னா அக்கம் பக்கத்து வீட்டுக்கதைகளுக்கெல்லாம் கண்ணு மூக்கு வைக்கும் மாமிதான் சிறந்த எழுத்தாளராக முடியும்:)

vasu balaji said...

பின்னோக்கி said...

/ரயில் பயணங்களில் இந்த மாதிரி வித்தியாசமன கேரக்டர்ஸ் நிறைய பார்க்கலாம்.

ரயிலுல தூங்காம வந்தும் அடுத்த நாள் போட்டால அவ்வளவு பளிச்சுன்னு இருந்தீங்களே, அதன் ரகசியம் என்ன ?.//

ஷ்ஷ். கம்பேனி சீக்ரட்.

//அப்புறம் அந்த பொண்ணுகிட்ட நீங்க போட்ட பிட்டப் பத்தி ஒண்ணும் எழுதலை ? அடுத்த பதிவு வருதா ? :)//

ம்கும். ஈரோட்டுக்காரங்கள கேட்டுப்பாருங்க. சமஞ்ச பொண்ணு மாதிரி கூச்சப்பட்டுகிட்டு இருந்துட்டு வந்தேன்.:)). இதுல நான் பிட்டு வேறா?

vasu balaji said...

T.V.Radhakrishnan said...

/:-))//

:))

vasu balaji said...

Rajasurian said...

/ கவிதை கவிதை...(உரைநடை கவிதை?)

:-)//

ம்கும். இது வேறயா=))

vasu balaji said...

cheena (சீனா) said...

அன்பின் பாலா

/எழுத்தாளன் எனில் கண்ணும் காதும் எப்பொழுதுமே திறதிருக்க வேண்டும் - கண்ணில் பட்டதை எல்லாம் - காதில் பட்டதை எல்லாம் சுவையாக எழுத அது உதவும்.

நல்லா ரசிச்சேன் - நல்லாருந்திச்சி

நல்வாழ்த்துகள் பாலா//

ஆமாங்க சீனா. நன்றி.

vasu balaji said...

தியாவின் பேனா said...

//அருமையான லவ்கதை
நல்ல நடை,வாழ்த்துகிறேன்.//

இது இருவழிச்சாலை லவ்வு;(( அவ்வ்வ்வு

vasu balaji said...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...


:))))

=))

vasu balaji said...

ஆரூரன் விசுவநாதன் said...

/ உங்களுக்கே உரித்தான நகைச்சுவை உணர்வோடு, பகிர்ந்தது அருமை.

அன்புடன்
ஆரூரன்//

நன்றிங்க ஆரூரன்

vasu balaji said...

இப்படிக்கு நிஜாம்.., said...

/அண்ணே! திருவிழா நேரத்துல ஜெனரேட்டர் கிட்டக்க படுத்தவன் கதை(தி)யாச்சி உங்க கதை. அது சரி அது என்ன அரேஞ்ட் லவ்வு?????? :)))))))))))))))))))//

ஜாதி பாத்து, வசதி பாத்து, அழகு பாத்து, நல்ல பொருத்தம்னு கல்யாணம் பண்ணா அரேஞ்ட் மேரியேஜ்னா இது அப்புடியே லவ்வரது தானே. அதான்.

vasu balaji said...

க.பாலாசி said...

/ஈரோட்டுக்கு வரும்போது ஒரு இடுகைக்கான மேட்டர பக்கத்துலையே வச்சிக்கிட்டுதான் வந்திருக்கீங்க. நல்லவேளை அந்தாளு உங்களை தூங்கவிடல. இல்லன்னா இந்த மேட்டர் வெளியில தெரிஞ்சிருக்குமா??? :-)//

அடுத்த வாட்டி கோவைல வரவே பயம்மாத்தாப்பா இருக்கு:))

vasu balaji said...

முகிலன் said...

// அப்படி பேசுபவதை தூங்குவது போன்ற பாவனையில் ஒட்டுக்கேட்பது இமாலயத் தவறு. ஆனால் அந்தத் தவறை செய்யாவிட்டால் இப்படி சுவாரசியமான பதிவு கிடைத்திருக்காது//

என்னாத்த தூங்குறது போல பாவனை. ஒட்டு வேற கேக்கணுமா. அதான் கத்தி தான் பேசினாங்கன்னு சொல்றன்ல.:))

vasu balaji said...

Balavasakan said...

/ என்னது நாங்கெல்லாம் மக்கா யாரங்கே சார்வாள் வீட்டுக்கு அனுப்புங்கடா ஒரு ஆட்டோவை...//

அப்புடியே அந்த ஆட்டோவ சுபாங்கன் வீட்டுக்கு திருப்பியிருக்கேன். போட்டு வரும் பார்க்கலாம்:))

vasu balaji said...

S.A. நவாஸுதீன் said...

/வழக்கம்போல சுவாரசியத்துக்கு பஞ்சமில்லை சார்./

நன்றி நவாஸ்.

vasu balaji said...

ஈரோடு கதிர் said...

/அட... நெம்ப நாலாச்சுங்க... உங்க பேச்ச இந்த மாதிரி கேட்டு..

அவியல ஒரு போட்டோ புடிச்சிருந்தீன்னா... காதலு பத்தி புக் போடறப்போ... அட்டையில் அவிக போட்டோவ போட்டுருக்கலாமே..../

அட எஞ்சாமி. ஸ்டேசன்ல செல்லு தூக்கினாலே போலீசு புடிப்பானே. இது வேறயா. :))

vasu balaji said...

Karthik Viswanathan said...

//அட இதுக்காகவே நான் ஜாதகம் பாக்க கத்துக்கணும் போல இருக்கே...
பாக்கற பொண்ணுங்கள்ள ஜாதகம் வாங்கி சாதகமா இருந்தா பிக் அப் பண்ணலாம்...//

மொதல்ல ஜாதகம் பிக்கப் ஆகுதா பாரும்மா:))

vasu balaji said...

ஸ்ரீ said...

/ வெவரம்தான்./

:))

vasu balaji said...

ராஜ நடராஜன் said...

/ அப்படின்னா அக்கம் பக்கத்து வீட்டுக்கதைகளுக்கெல்லாம் கண்ணு மூக்கு வைக்கும் மாமிதான் சிறந்த எழுத்தாளராக முடியும்:)//

சுவையா எழுதணுமே சார்:))

aambalsamkannan said...

'ப்ளீஸ் ஒரு வாட்டி பேசுங்களேன்! நான் தூங்கிக்கிறேன் என்று கெஞ்ச வேண்டும் போல் வந்தது'

நல்ல காமெடி சார்.
முழுவதும் அருமை.

நசரேயன் said...

இது நவீன காதல்

vasu balaji said...

aambal samkannan said...

/ 'ப்ளீஸ் ஒரு வாட்டி பேசுங்களேன்! நான் தூங்கிக்கிறேன் என்று கெஞ்ச வேண்டும் போல் வந்தது'

நல்ல காமெடி சார்.
முழுவதும் அருமை./

நன்றிங்க.

vasu balaji said...

நசரேயன் said...

/இது நவீன காதல்/

முன்னா பின்னா சொல்லலையே அண்ணாச்சி.:))