Tuesday, December 1, 2009

வடை போகாதிருக்க வழி!

சிறிது நாளாக என் வலைப்பூவில் திருத்தும் விருப்பம் பணி செய்யவில்லை. கூகிள் ஏதோ பிழை சங்கேதக்குறி (Error Code) கொடுத்து புகார் செய்கையில் தரவேண்டிய விபரங்களைக் காட்டியது. குழுவில் புகார் செய்யப் போனல் நமக்கு முன் வடை போச்சே என்று வரிசையில் இருக்கிறார்கள்.

என்னதான் பிழை பார்த்து, முன்காட்சி பார்த்து பதிப்பித்தாலும் இடுகையாய் படிக்கையில் சிறு மாற்றங்களோ பிழைகளோ திருத்த வேண்டுமெனில் பின் சென்று சென்று சரி செய்தாலும் ஒரு முறை மூடிய பிறகு திருத்துவது இயலாததாகிறது. நேரம் கிடைக்கும் போது வரி வரியாக அடித்து சேமித்து வைத்ததும் திரும்பத் திறக்க முடியவில்லை.

எக்ஸ்போர்ட் ஆப்ஷனும் வேலை செய்வதில்லை. துபாய் ராஜா, அப்துல்லா ஆகியோரின் படைப்புக்கள் தொலைந்தது குறித்து படித்ததில் பயம் வந்துவிட்டது. என்னதான் ரீடரில் எல்லாம் கிடைக்குமெனினும் அதையும் எப்படி நம்புவது?

நாம் எழுதுவது குப்பையோ, ரத்தினமோ ஒவ்வொன்றும் நாம் பிரசவித்த குழந்தைகள்போல் அல்லவா? தரவிறக்கம் செய்ய ஏதாவது வழியிருப்பின் காப்பாற்றிக் கொள்ளலாம் என்று தோன்றியது. அழுதாலும் பிள்ளை அவள்தான் பெறவேண்டும் என்று சொலவடை இருக்கிறதே. வேறே வழி, கூகிளாண்டவரிடம் முறையிட்டதில் போகாத ஊருக்கு வழி (இல்லை எனக்குதான் புரியவில்லையோ?) நிறையக் காட்டினார்.

இதெல்லாம் வேலைக்காவாது என்று ந‌ண்ப‌ர் சூர்யாக‌ண்ண‌னிட‌ம் முறையிட்டேன். ஆயிர‌ம் வேலைக‌ளுக்கிடையேயும் உட‌னே தேடி சில‌ ப‌ல‌ இணைப்புக்க‌ளைக் கொடுத்தார். உருப்ப‌டாத‌ அரைகுறை டேம‌ஜ‌ரின் புண்ணிய‌த்தில் டென்ஷ‌ன் கூடிய‌து. எந்த‌ இணைப்பு கொடுத்தாலும், குழும‌ம், விள‌ம்ப‌ர‌ம் என்று வ‌டிக‌ட்டிச் சாக‌டித்த‌து.

வீட்டில் முய‌ன்ற‌தில் மிக‌ மிக‌ அருமையாக‌ .xml file தரவிரக்கம் செய்ய முடிந்தது. மொத்தமாய் வடை போகும் போது பதிவை அழித்து மீண்டும் அதே பெயரில் திறக்கலாம். தரவிறக்கம் செய்ததை ஒரு பேக்கப் பதிவில் ஏற்றி அடுத்த இடுகை போடுமுன் முந்தைய இடுகையையும் ஏற்றலாம். பின்னூட்டங்களும் கூட தரவிறக்க முடிவதால், இடுகைகள் முழுமையாக திரும்பக் கிடைக்கும்.

சூர்யா கொடுத்த சுட்டி இதோ:

 http://bloggerbackup.codeplex.com/Release/ProjectReleases.aspx?ReleaseId=12201

நன்றி சூர்யா.

__/\__

55 comments:

க.பாலாசி said...

//உருப்ப‌டாத‌ அரைகுறை டேம‌ஜ‌ரின் புண்ணிய‌த்தில் டென்ஷ‌ன் கூடிய‌து//

இருங்க..இருங்க...அவருகிட்ட போட்டுக்கொடுத்தாதான் சரிவரும்....

தகவல்கள் பயனுள்ளது. (ஆமா ‘திருத்தும் விருப்பம்’ அப்டின்னா என்ன?)

சூர்யா ௧ண்ணன் said...

இப்பத்தான் படிச்சேன்!..

அடடா! பதிவே போட்டுடிங்களா.. நன்றி தலைவா!

vasu balaji said...

க.பாலாசி said...

/ இருங்க..இருங்க...அவருகிட்ட போட்டுக்கொடுத்தாதான் சரிவரும்..../

=))

/ தகவல்கள் பயனுள்ளது. (ஆமா ‘திருத்தும் விருப்பம்’ அப்டின்னா என்ன?)//

ம்கும். தமிழ்ல எழுத விட மாட்டாங்களே. Edit option

vasu balaji said...

சூர்யா ௧ண்ணன் said...

/இப்பத்தான் படிச்சேன்!..

அடடா! பதிவே போட்டுடிங்களா.. நன்றி தலைவா/

நன்றியெல்லாம் உங்களுக்கு. வோட்டு மட்டும் எனக்கு=))

ஈரோடு கதிர் said...

//வானம்பாடிகள் Says:
தகவல்கள் பயனுள்ளது. (ஆமா ‘திருத்தும் விருப்பம்’ அப்டின்னா என்ன?)//

ம்கும். தமிழ்ல எழுத விட மாட்டாங்களே. Edit option//


இது... ஜூப்பரு....

vasu balaji said...

ஈரோடு கதிர் said...

/ம்கும். தமிழ்ல எழுத விட மாட்டாங்களே. Edit option//


இது... ஜூப்பரு..../

ஒரு மார்க்கமாவே இருக்கு புள்ள. கலகலா இடுகையில பாம்ப குரங்குங்குது. இங்க திருத்தும் விருப்பம் புரியலயாமா.

இராகவன் நைஜிரியா said...

// "வடை போகாதிருக்க வழி!" //

அது...

இராகவன் நைஜிரியா said...

// சிறிது நாளாக என் வலைப்பூவில் திருத்தும் விருப்பம் பணி செய்யவில்லை. //

சம்பளம் ஒழுங்கா கொடுத்தீங்களா?

இராகவன் நைஜிரியா said...

// கூகிள் ஏதோ பிழை சங்கேதக்குறி (Error Code) கொடுத்து புகார் செய்கையில் தரவேண்டிய விபரங்களைக் காட்டியது.//

அதாவது FIR போடச் சொல்லிச்சு

இராகவன் நைஜிரியா said...

// குழுவில் புகார் செய்யப் போனல் நமக்கு முன் வடை போச்சே என்று வரிசையில் இருக்கிறார்கள். //

நம்ம ஊர் அரசியல்வியாதிகள் யாராவது அந்த குழுத் தலைவரா இருப்பாங்களோ?

இராகவன் நைஜிரியா said...

// நேரம் கிடைக்கும் போது வரி வரியாக அடித்து சேமித்து வைத்ததும் திரும்பத் திறக்க முடியவில்லை. //

நாங்கெல்லாம் ஒவ்வொரு எழுத்தாகத்தான் அடிப்போம். நீங்க பெரிய ஆள் அண்ணே வரி வரியா அடிக்கறீங்க.

S.A. நவாஸுதீன் said...

பகிர்வுக்கு நன்றி சார்.

இராகவன் நைஜிரியா said...

// எக்ஸ்போர்ட் ஆப்ஷனும் வேலை செய்வதில்லை. //

Export Duty, அங்க இருக்கிற ஆபீசருக்கு மால் எல்லாம் ஒழுங்கா கொடுத்தீங்களா?

இராகவன் நைஜிரியா said...

// நாம் எழுதுவது குப்பையோ, ரத்தினமோ ஒவ்வொன்றும் நாம் பிரசவித்த குழந்தைகள்போல் அல்லவா?//

காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு. இருந்தாலும் நீங்க எழுதுவது எல்லாமே ரத்தினம் தாங்க... அதுல சந்தேகமே வேண்டாம்.

இராகவன் நைஜிரியா said...

// தரவிறக்கம் செய்ய ஏதாவது வழியிருப்பின் காப்பாற்றிக் கொள்ளலாம் என்று தோன்றியது. //

ஆமாம் காப்பாத்திகலாம்..

இராகவன் நைஜிரியா said...

// வேறே வழி, கூகிளாண்டவரிடம் முறையிட்டதில் போகாத ஊருக்கு வழி (இல்லை எனக்குதான் புரியவில்லையோ?) நிறையக் காட்டினார். //

ஆண்டவர், ஆள்பவர் எல்லோருமே இப்படித்தானா.. போகத ஊருக்கு வழி காண்பிப்பாங்க

இராகவன் நைஜிரியா said...

// . ஆயிர‌ம் வேலைக‌ளுக்கிடையேயும் உட‌னே தேடி சில‌ ப‌ல‌ இணைப்புக்க‌ளைக் கொடுத்தார். //

நன்றி சூர்யா கண்ணன் அண்ணே.

இராகவன் நைஜிரியா said...

// உருப்ப‌டாத‌ அரைகுறை டேம‌ஜ‌ரின் புண்ணிய‌த்தில் டென்ஷ‌ன் கூடிய‌து. //

உங்களுக்குமா?

இராகவன் நைஜிரியா said...

// எந்த‌ இணைப்பு கொடுத்தாலும், குழும‌ம், விள‌ம்ப‌ர‌ம் என்று வ‌டிக‌ட்டிச் சாக‌டித்த‌து.//

இதுக்குதான் நாங்க எல்லாம் தேடுவதே இல்லை.. ஏன் என்றால் அத நீங்க இருக்கீங்களே..

இராகவன் நைஜிரியா said...

// பின்னூட்டங்களும் கூட தரவிறக்க முடிவதால், இடுகைகள் முழுமையாக திரும்பக் கிடைக்கும். //

இது... சொன்னீங்களே கேட்கவே சந்தோஷமா இருக்கு..

நான் போட்ட இடுகைகளை விட பின்னூட்டங்கள் அதிகம்.. (கும்மியா இருந்தாலும்... காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு.. இல்லீங்களா) அது பத்திரமா இருக்குன்னு சொன்னீங்க பாருங்க அதுதான் படிக்க ரொம்ப சந்தோஷமா இருக்கு.

இராகவன் நைஜிரியா said...

// http://bloggerbackup.codeplex.com/Release/ProjectReleases.aspx?ReleaseId=12201

நன்றி சூர்யா. //

உங்களுக்கும், தகவல் கொடுத்த சூர்யா அவர்களுக்கும்

நன்றி.. நன்றி... நன்றி

தமிழ் அஞ்சல் said...

சூப்ப பாஸ் ...இதத்தான் தேடிக்கிட்ட்ருந்தேன்...!

balavasakan said...

ஆகா...வடை போச்சே.....

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/ அது.../

எது?=))

/சம்பளம் ஒழுங்கா கொடுத்தீங்களா?/

அது திருந்தாத கேசுண்ணே.

/அதாவது FIR போடச் சொல்லிச்சு/

ஆமாமா. ஆனா நான் டி.ஐ.ஆர். ட்வெல்த்.

/நம்ம ஊர் அரசியல்வியாதிகள் யாராவது அந்த குழுத் தலைவரா இருப்பாங்களோ?/

எந்த அரசியல் தலை க்யூவில நிக்குது?

/நாங்கெல்லாம் ஒவ்வொரு எழுத்தாகத்தான் அடிப்போம். நீங்க பெரிய ஆள் அண்ணே வரி வரியா அடிக்கறீங்க./

ஆஆஆஆ.தாங்கலண்ணே. :)) அவ்வ்வ்

vasu balaji said...

S.A. நவாஸுதீன் said...

/பகிர்வுக்கு நன்றி சார்./

நன்றி சூரியாவுக்கு:)

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/ Export Duty, அங்க இருக்கிற ஆபீசருக்கு மால் எல்லாம் ஒழுங்கா கொடுத்தீங்களா?/

மால் குடுக்கறது தப்புன்னு கதிர் அடிப்பாரு.

/காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு. இருந்தாலும் நீங்க எழுதுவது எல்லாமே ரத்தினம் தாங்க... அதுல சந்தேகமே வேண்டாம்./

டி.ஏ.எஸ் ரத்தினமா? பொடி வெச்சா எழுதுறேன்=)).

/ஆண்டவர், ஆள்பவர் எல்லோருமே இப்படித்தானா.. போகத ஊருக்கு வழி காண்பிப்பாங்க/

=))லொள்ளு!

/உங்களுக்குமா?/

ஆமாண்ணே.லூசுப்பய.

/இதுக்குதான் நாங்க எல்லாம் தேடுவதே இல்லை.. ஏன் என்றால் அத நீங்க இருக்கீங்களே../

ஆஹா. இது சூர்யாக்கு நன்றி சொல்லத்தான். இது அவர் டிபார்ட்மெண்ட். நியாயமா அவர்தான் வட போச்சேன்னு பின்னூட்டம் போடணும்.=))

/நான் போட்ட இடுகைகளை விட பின்னூட்டங்கள் அதிகம்.. (கும்மியா இருந்தாலும்... காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு.. இல்லீங்களா) அது பத்திரமா இருக்குன்னு சொன்னீங்க பாருங்க அதுதான் படிக்க ரொம்ப சந்தோஷமா இருக்கு./

விட்றுவமா? அதுதானே சான்றிதழ்கள்.

vasu balaji said...

திருப்பூர் மணி Tirupur mani said...

/சூப்ப பாஸ் ...இதத்தான் தேடிக்கிட்ட்ருந்தேன்...!/

=))

vasu balaji said...

Balavasakan said...

/ஆகா...வடை போச்சே...../

அட போகாம இருக்கதானே இது.=))

கிரி said...

என்னுடைய ப்ளாக் ஐ export செய்ய முடியவில்லை இரண்டு நாட்களாக பிரச்சனை செய்கிறது ..என்னவென்று பார்க்க வேண்டும் :-(

vasu balaji said...

கிரி said...

/என்னுடைய ப்ளாக் ஐ export செய்ய முடியவில்லை இரண்டு நாட்களாக பிரச்சனை செய்கிறது ..என்னவென்று பார்க்க வேண்டும் :-(/

அதற்காகத்தான் இது. வேறே வழியில்லை. ஒரு வாரமாச்சி கம்ப்ளெயிண்ட் பண்ணி.

ப்ரியமுடன் வசந்த் said...

சரித்தேன் நைனா உங்கள மாதிரி எழுதுறவிகளுக்கு சரித்தேன்..நன்றிப்பா பகிர்வுக்கு...எங்களுக்கு தொலைஞ்சா ரொம்ப சந்தோசமா இருக்கும் தெரியுமா அப்டியே நாங்களும் காணாமப்போயிடுவோம்ல.....

எப்பிடி...ஹெ ஹெ ஹே....

நிஜாம் கான் said...

அண்ணே! அருமையான செய்தியுடன் சுட்டியும் கொடுத்ததற்கு நன்றிகள் ஆயிரம். எப்போதும் இடுகையிட,எடிட் செய்ய கூகுள் குரோம் மட்டுமே பயன்படுத்துங்கள். எக்ஸ்புளோரர் பயன்படுத்தி எடிட் கொடுத்தால் புதிதாக மானிட்டர் அல்லது மௌஸ் வாங்க வேண்டி வரும்.அவ்வளவு ஆத்திரம் வருதுண்ணே!

vasu balaji said...

பிரியமுடன்...வசந்த் said...

/சரித்தேன் நைனா உங்கள மாதிரி எழுதுறவிகளுக்கு சரித்தேன்..நன்றிப்பா பகிர்வுக்கு...எங்களுக்கு தொலைஞ்சா ரொம்ப சந்தோசமா இருக்கும் தெரியுமா அப்டியே நாங்களும் காணாமப்போயிடுவோம்ல.....

எப்பிடி...ஹெ ஹெ ஹே..../

ஏன். இப்பதான் நீதான் கவிஞனாயிட்டியே.

vasu balaji said...

இப்படிக்கு நிஜாம்.., said...

/அண்ணே! அருமையான செய்தியுடன் சுட்டியும் கொடுத்ததற்கு நன்றிகள் ஆயிரம். எப்போதும் இடுகையிட,எடிட் செய்ய கூகுள் குரோம் மட்டுமே பயன்படுத்துங்கள். எக்ஸ்புளோரர் பயன்படுத்தி எடிட் கொடுத்தால் புதிதாக மானிட்டர் அல்லது மௌஸ் வாங்க வேண்டி வரும்.அவ்வளவு ஆத்திரம் வருதுண்ணே!/

தகவலுக்கு நன்றி நிஜாம்.:)

கலகலப்ரியா said...

http://kalakalapriya.blogspot.com/2009/12/blog-post_01.html

யூர்கன் க்ருகியர் said...

oh.. i see !!

vasu balaji said...

கலகலப்ரியா said...

/ http://kalakalapriya.blogspot.com/2009/12/blog-post_01.html/

என்னா வம்பு இது. சூப்பர்:))

vasu balaji said...

யூர்கன் க்ருகியர் said...

/ oh.. i see !!/

ம்ம்ம்.

புலவன் புலிகேசி said...

உபயோகமான தகவல்கள்...நன்றி

vasu balaji said...

புலவன் புலிகேசி said...

/உபயோகமான தகவல்கள்...நன்றி/

நன்றிங்க.

பின்னோக்கி said...

NHM Writer நீங்க யூஸ் பண்றதில்லையா. நான் ப்ளாக்ல இருக்குற எடிட்டர்ல டைப்படிச்சு, எதோ கீய பிரஸ் பண்ணி, அடிச்ச எல்லாம் போச்சு, ஆட்டோ சேவ் இருக்குறதால, எல்லாம் அழிஞ்சு போச்சு. அதுல இருந்து அத யூஸ் பண்றதில்லை. நோட்பேட்ல அடிச்சு கட் அண்டு பேஸ்ட்டுதான் பண்றது.

பின்னோக்கி said...

நீங்க பேக்கப் எடுக்குறத பத்தி எழுதியிருக்கீங்கன்னு இப்பதான் புரிஞ்சுது :)

vasu balaji said...

பின்னோக்கி said...

/நீங்க பேக்கப் எடுக்குறத பத்தி எழுதியிருக்கீங்கன்னு இப்பதான் புரிஞ்சுது :)/

இல்லைங்க. சிலதெல்லாம் டைம் கிடைக்கிறப்ப டைப் பண்ணி சேமிச்சி வைக்கிறது. அல்லது இடுகை போட்டப்புறம் திருத்த வேண்டி வரலாம் இல்லையா? அப்பொழுது எடிட் ஆப்ஷன் வேலை செய்ய மாட்டங்குது. இடுகையும் போனா என்ன பண்றதுன்னு முன் சாக்கிறதை.

ரோஸ்விக் said...

நல்ல விஷயம் தான். பலரும் பயன்படுத்திக்கொள்வார்கள்.

இன்னும் ஒரு முறையில் நாம் நமது பதிவுகளை தரவிறக்கலாம்.

go to your blogger --> settings --> Basic (tab menu)

there will be three options..."import blog", "export blog", "delete blog".

click the "export blog" you will be able to save all your blogs in .xml format.

vasu balaji said...

ரோஸ்விக் said...

/நல்ல விஷயம் தான். பலரும் பயன்படுத்திக்கொள்வார்கள்./

நன்றி ரோஸ்விக்.

/ go to your blogger --> settings --> Basic (tab menu)

there will be three options..."import blog", "export blog", "delete blog".

click the "export blog" you will be able to save all your blogs in .xml format./

/எக்ஸ்போர்ட் ஆப்ஷனும் வேலை செய்வதில்லை./

Unknown said...

உபயோகமான தகவல்கள்... நன்றி தலைவா...

vasu balaji said...

பேநா மூடி said...

/உபயோகமான தகவல்கள்... நன்றி தலைவா.../

நன்றிங்க.சூர்யாக்கு:)

சத்ரியன் said...

இந்த டென்சன் - ல தான் ஆளைக் காணோமா? சரி சரி. ஆரம்பியுங்க....!

அன்புடன் மலிக்கா said...

நல்ல பயனுள்ள தகவல் வானம்பாடிகள். பகிர்ந்துகொண்டமைக்கு மகிழ்ச்சி..

vasu balaji said...

சத்ரியன் said...

/இந்த டென்சன் - ல தான் ஆளைக் காணோமா? சரி சரி. ஆரம்பியுங்க....!/

தோடா! நாங்க எங்க காணாம போனம்?

vasu balaji said...

அன்புடன் மலிக்கா said...

/நல்ல பயனுள்ள தகவல் வானம்பாடிகள். பகிர்ந்துகொண்டமைக்கு மகிழ்ச்சி../

நன்றிங்க.

thiyaa said...

அன்புடன் நான் வழங்கிய இவ் விருதினைப் பெற்றுக்கொள்ளுங்கள்
http://theyaa.blogspot.com/2009/12/blog-post_02.html

vasu balaji said...

தியாவின் பேனா said...

/அன்புடன் நான் வழங்கிய இவ் விருதினைப் பெற்றுக்கொள்ளுங்கள்
http://theyaa.blogspot.com/2009/12/blog-post_02.html/

மிக்க நன்றி தியா.

tamilnanbarkal.com said...

ஐயா என் வடையும் சேர்த்து போச்சே கண்டுபிடித்து கொடுங்களேன்
beermohamedtamilgrop.blogspot.com
email.id : beermohamed@gamil.com

vasu balaji said...

tamilnanbarkal.com said...

/ஐயா என் வடையும் சேர்த்து போச்சே கண்டுபிடித்து கொடுங்களேன்
beermohamedtamilgrop.blogspot.com/

அந்த மென்பொருள் பயன்படுத்திப் பாருங்கள். நன்றி வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்.