ஒதுக்கப்பட்டவன்
கை கோர்த்து கண் கலங்கிஅழுதபடி என்னை அழாதே என்றவள் நீ!
இன்று அழுகை மட்டுமே
எனக்கு வரமாய் தரும் தேவதையானாய்..
காலை வந்தனம் சொல்லி
உன் பாதம் சமர்ப்பித்த
என் இதயப் பூக்கள்
உன்னால் ஏற்றுக்கொள்ளப்படாமலே
வாடிப்போகின்றன!
உன்னிடமிருந்து
கடிதம் வந்தது
கனவு போலிருக்கும்
சாபம் எனக்கார் தந்தது?
எத்தனை நாள்
எப்படி இருக்கிறாய்
எனக்கேட்க மாட்டாயா
என ஏங்கிச் செத்திருக்கிறேன்?
காத்திருந்து கண்டவுடன்
கட்டியணைக்க கை விரிக்கும்
என்னைக் கடந்து போகும்
கல்மனது உனக்கெப்படி வந்தது?
ஆற்றாமையில்
அடிமனம் கதறும்
ஆண்டவா எனக்கேன்
ஆக்கினை செய்தாய் இப்படியென..
ஆயினும் அதிலுமோர்
ஆறுதல் எனக்கு..
உன் கோபத்துக்கெல்லாம்
சொந்தக் காரன் நான் மட்டும்தானே!
*********
விடியல் ராகம்
ஓர் இனியகாலையில்
முழங்கால் கட்டி
முகம் புதைத்து
ஏதோ சிந்தனையில்
சாளரம் வழியே
பார்த்துக் கொண்டிருக்கும்
உன்னைப் பார்த்தபடி நான்..
உன் கணிணியில் மெலிதாய் கசிகிறது பாடல்
புல்லாய்ப் பிறவி தர வேண்டுமென
என்மனது வேண்டியது
உன் பல்லாய்ப் பிறவிதரவேண்டுமென..
ஆம்..எத்தனை விதமாய்
உன் அனுமதியின்றி
உன் இதழ் சுவைக்கிறது அது.
*********
நல்ல காலம்!
அந்தக் காலம் போல்
கல்லைத் தூக்கவேண்டும்
காளையை அடக்க வேண்டுமென
எனக்கு விதித்திருந்தால்
நீ எனக்குக் கிடைக்காமலே போயிருப்பாய்!
ஒற்றைப் பார்வையில் விழுத்தி என்னை
உனக்குள் அடக்கியவளே!
உனக்கெப்படி நன்றி சொல்வேன்?
********
தாலாட்டு!
தூக்கம் பிடிக்காத ஓர் இரவில்
பாட்டாவது கேட்டபடி
தூங்கலாம் என முயற்சிக்கையில்..
மெலிதாய்க் கசிந்தது பாடல்..
கண்ணோ கமலப்பூவென...
உன் அம்மா இப்படித்தான்
உன்னைத் தாலாட்டி இருப்பாள்
என்ற உன் நினைவில்
முற்றாய்த் தூக்கம் தொலைந்து போனது!
*****
59 comments:
இளமையான கவிதைகள் இந்த மாலை நேரத்தை புரட்டி போடுகிறது ... சார், உங்க கவிதைய படிக்க படிக்க எங்களுக்கும் உங்களோட சேர்ந்து வயசு குறைந்துக்கொண்டே வருது ...
//காத்திருந்து கண்டவுடன்
கட்டியணைக்க கை விரிக்கும்
என்னைக் கடந்து போகும்
கல்மனது உனக்கெப்படி வந்தது?//
:))))
//ஓர் இனியகாலையில்
முழங்கால் கட்டி
முகம் புதைத்து
ஏதோ சிந்தனையில்
சாளரம் வழியே
பார்த்துக் கொண்டிருக்கும்
உன்னைப் பார்த்தபடி நான்..
உன் கணிணியில் மெலிதாய் கசிகிறது பாடல்
புல்லாய்ப் பிறவி தர வேண்டுமென
என்மனது வேண்டியது
உன் பல்லாய்ப் பிறவிதரவேண்டுமென..
ஆம்..எத்தனை விதமாய்
உன் அனுமதியின்றி
உன் இதழ் சுவைக்கிறது அது.//
சூப்பரு..
இப்போவும் காதல் பொங்கி வழியுது
ஆனா இது வீட்ல மட்டும்தான்னு எனக்கு தெரியும் ஹெ ஹெ ஹே
//அந்தக் காலம் போல்
கல்லைத் தூக்கவேண்டும்
காளையை அடக்க வேண்டுமென
எனக்கு விதித்திருந்தால்
நீ எனக்குக் கிடைக்காமலே போயிருப்பாய்!
ஒற்றைப் பார்வையில் விழுத்தி என்னை
உனக்குள் அடக்கியவளே!
உனக்கெப்படி நன்றி சொல்வேன்?//
தபு எட்டிப்பாக்குறார்...
//முற்றாய்த் தூக்கம் தொலைந்து போனது! //
ஓஹ் அதான் ராவெல்லாம் முழிச்சுட்டு இருக்கீகளோ?
//உன் கோபத்துக்கெல்லாம்
சொந்தக் காரன் நான் மட்டும்தானே!..//
பாலா,
பலா.
//ஆயினும் அதிலுமோர்
ஆறுதல் எனக்கு..
உன் கோபத்துக்கெல்லாம்
சொந்தக் காரன் நான் மட்டும்தானே!//
//ஆம்..எத்தனை விதமாய்
உன் அனுமதியின்றி
உன் இதழ் சுவைக்கிறது அது.//
//உன் அம்மா இப்படித்தான்
உன்னைத் தாலாட்டி இருப்பாள்
என்ற உன் நினைவில்
முற்றாய்த் தூக்கம் தொலைந்து போனது! //
கடவுளே என்னை இந்த முதுகவியிடமிருந்து காப்பாற்று....
கிணற்றுத்தவளை எல்லாம் மீள் பதிவா சார்...! அழகா இருக்கு கவிதை..! பசங்க பாடு திண்டாட்டம்..!
நல்ல கிளப்புறீங்களே தல ! எல்லா கவிதையும் நீங்க இன்று அனுபவித்து எழுதியது போல் இருக்கிறது....என்ன விஷயம்? :-))
/நெல்லை எஸ்.ஏ.சரவணக்குமார் said...
இளமையான கவிதைகள் இந்த மாலை நேரத்தை புரட்டி போடுகிறது ... சார், உங்க கவிதைய படிக்க படிக்க எங்களுக்கும் உங்களோட சேர்ந்து வயசு குறைந்துக்கொண்டே வருது .../
நன்றி சரவணக்குமார்
பிரியமுடன்...வசந்த் said...
/:))))/
சிப்பு வருதோ!
/சூப்பரு..
இப்போவும் காதல் பொங்கி வழியுது
ஆனா இது வீட்ல மட்டும்தான்னு எனக்கு தெரியும் ஹெ ஹெ ஹே/
ஆமாம். ஜன்னல்னு சொன்னேனே.
/தபு எட்டிப்பாக்குறார்.../
யோவ். நான் இல்லையா?
/ஓஹ் அதான் ராவெல்லாம் முழிச்சுட்டு இருக்கீகளோ?/
நீ உன் கத சொல்லு ராஜா
சத்ரியன் said...
பாலா,
பலா.
ஆஹா
க.பாலாசி said...
/கடவுளே என்னை இந்த முதுகவியிடமிருந்து காப்பாற்று..../
அடப்பாவி. இதாரு.
கலகலப்ரியா said...
/கிணற்றுத்தவளை எல்லாம் மீள் பதிவா சார்...! அழகா இருக்கு கவிதை..! பசங்க பாடு திண்டாட்டம்..!/
தோ. இல்லை. லொல்லு பண்ணாத. திண்டாடட்டும்.
அன்பின் பாலா
என்ன கவிதைகளில் கலக்குறீங்க
எல்லாமே நல்லா இருக்கு
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
ரோஸ்விக் said...
/நல்ல கிளப்புறீங்களே தல ! எல்லா கவிதையும் நீங்க இன்று அனுபவித்து எழுதியது போல் இருக்கிறது....என்ன விஷயம்? :-))/
கவிதைய கவிதையா பாக்க மாட்டாங்கப்பா:))
இனிமையான கவிதைகள் சார்!!
/// காத்திருந்து கண்டவுடன்
கட்டியணைக்க கை விரிக்கும்
என்னைக் கடந்து போகும்
கல்மனது உனக்கெப்படி வந்தது? ///
இதெல்லாம் போய் கேட்டுகிட்டு,
விடுங்க விடுங்க !
//எத்தனை நாள்
எப்படி இருக்கிறாய்
எனக்கேட்க மாட்டாயா
என ஏங்கிச் செத்திருக்கிறேன்?
//
ம்ம்ம்ம்...
இப்படியெல்லாம் ஏங்கிச் செத்தது ஒரு காலம்....
கிளர்ந்து வருகிறது
// பல்லாய்ப் பிறவிதரவேண்டுமென..
ஆம்..எத்தனை விதமாய்
உன் அனுமதியின்றி
உன் இதழ் சுவைக்கிறது அது.
//
ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்.... எப்படிண்ணா இப்படியெல்லாம்
ஏற்கனவே கேட்ட வரிகள் தானும், ஆனாலும் சுவை
அடடா.... படிக்க படிக்க புதிதாய் சுரக்கிறதே... உறங்கும் காதல்
உங்களுகு கூட மைனஸ் ஓட்டு விழ ஆரம்பிச்சிடுச்சு தலைவரே...
தண்டோரா ...... said...
/உங்களுகு கூட மைனஸ் ஓட்டு விழ ஆரம்பிச்சிடுச்சு தலைவரே.../
ஹி ஹி. நேர்த்திக்கடன் மாதிரி வஞ்சனயில்லாம எங்க மூணு பேருக்கும் போடுவாய்ங்க. 9 ஓட்டு வந்தாதானே போடுவான். இப்பவே ஆரம்பிச்சிட்டாய்ங்களா?
ஈரோடு கதிர் said...
/ம்ம்ம்ம்...
இப்படியெல்லாம் ஏங்கிச் செத்தது ஒரு காலம்....
கிளர்ந்து வருகிறது/
ஓஹோ.
/ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்.... எப்படிண்ணா இப்படியெல்லாம்
ஏற்கனவே கேட்ட வரிகள் தானும், ஆனாலும் சுவை
அடடா.... படிக்க படிக்க புதிதாய் சுரக்கிறதே... உறங்கும் காதல்/
கசியும் மௌனம்..உறங்கும் காதல்..என்னமா வைக்கிறாய்ங்கப்பா பேரு.
cheena (சீனா) said...
/அன்பின் பாலா
என்ன கவிதைகளில் கலக்குறீங்க
எல்லாமே நல்லா இருக்கு
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா/
நன்றிங்க சீனா
Mrs.Menagasathia said...
/இனிமையான கவிதைகள் சார்!!/
நன்றிங்கம்மா.
கேசவன் .கு said...
/இதெல்லாம் போய் கேட்டுகிட்டு,
விடுங்க விடுங்க !/
அதெப்புடீ. கேட்டுட்டாலும்!
//கலகலப்ரியா said...
பசங்க பாடு திண்டாட்டம்..!//
என்ன மாதிரி சின்னப் பசங்களா!!!???
//கலகலப்ரியா said...
பசங்க பாடு திண்டாட்டம்..!//
ஆத்தாடி ஒரு வேள உங்க அண்ணன சொன்னீங்களோ... அவருதான் 36 ஐ 27னு போட்கிட்டு இருக்காருங்கோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!!
ஈரோடு கதிர் said...
/என்ன மாதிரி சின்னப் பசங்களா!!!???/
வரட்டும் வரட்டும்=)).
ஈரோடு கதிர் said...
//ஆத்தாடி ஒரு வேள உங்க அண்ணன சொன்னீங்களோ... அவருதான் 36 ஐ 27னு போட்கிட்டு இருக்காருங்கோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!!//
அது அது.
அண்ணே ஓட்டு போட்டாச்சு...
அப்பாலிக்கா வீட்டுக்கு வந்து மத்த பின்னூட்டங்கள் போட்டுகிறேன்.
அண்ணே ஓட்டு போட்டாச்சு...
அப்பாலிக்கா வீட்டுக்கு வந்து மத்த பின்னூட்டங்கள் போட்டுகிறேன்.
Kalakkal
//ஓர் இனியகாலையில்
முழங்கால் கட்டி
முகம் புதைத்து
ஏதோ சிந்தனையில்
சாளரம் வழியே
பார்த்துக் கொண்டிருக்கும்
உன்னைப் பார்த்தபடி நான்..
உன் கணிணியில் மெலிதாய் கசிகிறது பாடல்
புல்லாய்ப் பிறவி தர வேண்டுமென
என்மனது வேண்டியது
உன் பல்லாய்ப் பிறவிதரவேண்டுமென..
ஆம்..எத்தனை விதமாய்
உன் அனுமதியின்றி
உன் இதழ் சுவைக்கிறது அது.//
Romba rasichen
//ஈரோடு கதிர் said...
//கலகலப்ரியா said...
பசங்க பாடு திண்டாட்டம்..!//
என்ன மாதிரி சின்னப் பசங்களா!!!???//
இல்ல பாலா சார் மாதிரியும்தான்..! அவரும் உங்கள மாதிரியே...... ஒரு காலத்தில... சின்ன பையனா இருந்தவங்கதானுங்களே..! ஒரு வாட்டி இப்டித்தான் என்னோட பாஸ் பேசிக்கிட்டிருக்கிறப்போ.. 'once.. i too was a young boy.. you know.." அப்டின்னாரு... "were you..?" அப்டின்னு கேட்டேன்.. =))
//ஈரோடு கதிர் said...
//கலகலப்ரியா said...
பசங்க பாடு திண்டாட்டம்..!//
ஆத்தாடி ஒரு வேள உங்க அண்ணன சொன்னீங்களோ... அவருதான் 36 ஐ 27னு போட்கிட்டு இருக்காருங்கோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!!//
அண்ணா எல்லாம் ரொம்ப ஜாஸ்தியா சொல்லி இருக்காங்க..! உங்களுக்கெல்லாம் இன்னும் பதினேழுன்னுதானே நெனப்ஸ்..!
அண்ணே...கவிஞர் அண்ணே..
வணக்கமுண்ணே :)
கலகலப்ரியா said...
//ஈரோடு கதிர் said...
//கலகலப்ரியா said...
பசங்க பாடு திண்டாட்டம்..!//
என்ன மாதிரி சின்னப் பசங்களா!!!???//
//இல்ல பாலா சார் மாதிரியும்தான்..! அவரும் உங்கள மாதிரியே...... ஒரு காலத்தில... சின்ன பையனா இருந்தவங்கதானுங்களே..! //
இது சப்போர்ட்டா. நக்கலா. அவ்வ்வ்
/ஒரு வாட்டி இப்டித்தான் என்னோட பாஸ் பேசிக்கிட்டிருக்கிறப்போ.. 'once.. i too was a young boy.. you know.." அப்டின்னாரு... "were you..?" அப்டின்னு கேட்டேன்.. =))//
மாட்னாரா. கதிர் சாம் ப்ளட். யாரையும் விட்டு வைக்காது இந்த புள்ள=))
எம்.எம்.அப்துல்லா said...
/அண்ணே...கவிஞர் அண்ணே..
வணக்கமுண்ணே :)//
ஆஹா. வாங்கண்ணே. நட்சத்திர வாயால கவிஞர் பட்டம்=)). நன்றிங்க அப்துல்லா.
கலகலப்ரியா said...
//ஈரோடு கதிர் said...
/ அண்ணா எல்லாம் ரொம்ப ஜாஸ்தியா சொல்லி இருக்காங்க..! உங்களுக்கெல்லாம் இன்னும் பதினேழுன்னுதானே நெனப்ஸ்..!//
போச்சிடா சாமி. உங்களால நாளைக்கு ஒரு டி.ஆர். படம் ரிலீசு=))
//
ஆயினும் அதிலுமோர்
ஆறுதல் எனக்கு..
உன் கோபத்துக்கெல்லாம்
சொந்தக் காரன் நான் மட்டும்தானே!
//
இப்படி நினைச்சுத் தான் பல பேரு ஏமாந்து போறாங்க...:0))))
எல்லாம் நல்லா இருக்கு...உண்மையை சொல்லுங்க...டீ.ஆருக்கு நீங்க தான Ghost writer? :0))))
படம் - கவிதை இரண்டும் அருமையோ அருமை
ஒவ்வொரு வரிகளையும் ரசித்துப் படித்தேன்
கவிதைகள் அழகு...அதிலும் இரண்டாவது கவிதையில் காதல் தேன் சொட்டுகிறது..பல் போகும் வயதில் பல்லாய் இருக்கனுமா உங்களுக்கு...??
கவிதைகள் அனைத்தும் பிடித்தது....
அது சரி said...
/இப்படி நினைச்சுத் தான் பல பேரு ஏமாந்து போறாங்க...:0))))/
நம்பிக்கைதானே வாழ்க்கை. :)
அது சரி said...
/எல்லாம் நல்லா இருக்கு...உண்மையை சொல்லுங்க...டீ.ஆருக்கு நீங்க தான Ghost writer? :0))))/
ஆஹா! இது வேறையா:))). நான் எழுத வந்தே 9 மாசம்தான் :P
தியாவின் பேனா said...
/படம் - கவிதை இரண்டும் அருமையோ அருமை
ஒவ்வொரு வரிகளையும் ரசித்துப் படித்தேன்/
நன்றி தியா.
புலவன் புலிகேசி said...
/கவிதைகள் அழகு...அதிலும் இரண்டாவது கவிதையில் காதல் தேன் சொட்டுகிறது..பல் போகும் வயதில் பல்லாய் இருக்கனுமா உங்களுக்கு...??
கவிதைகள் அனைத்தும் பிடித்தது..../
நன்றி புலிகேசி.
ஒற்றைப் பார்வையில் விழுத்தி என்னை
உனக்குள் அடக்கியவளே!
உனக்கெப்படி நன்றி சொல்வேன்?///
மிக நல்ல வரிகள்!!
சீலன் பக்கங்கள் said...
/ மிக நல்ல வரிகள்!!/
நன்றிங்க சீலன் முதல் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்.
நம்பமுடியவில்லை... இல்லை... இல்லை... :)
அருமை சார்...
அன்புடன்-மணிகண்டன் said...
/நம்பமுடியவில்லை... இல்லை... இல்லை... :)
அருமை சார்.../
ஓஹோ. ஏனோ. :)) நன்றி.
ஏக்கங்கள் எத்தனை வருடம்? காலடியில் இடப் பட்ட இதயப் பூக்கள் ஏற்றுக் கொள்ளப் பட்டிருந்தால் சிலவருடம் கழித்து கவிதை எதைப் பற்றி இருக்கும்? மையல் கரைந்து மளிகைக் கணக்கு வரும்வரை....!!
//அது சரி said...
எல்லாம் நல்லா இருக்கு...உண்மையை சொல்லுங்க...டீ.ஆருக்கு நீங்க தான Ghost writer? :0))))//
aamaam contract sign pannittaanga..! tr.. ghost aanathukkappuram... ivangathaan t.r... i mean.. writer...!
கலகலப்ரியா said...
//அது சரி said...
/ aamaam contract sign pannittaanga..! tr.. ghost aanathukkappuram... ivangathaan t.r... i mean.. writer...!//
யம்மா. இப்படி பழி வாங்காத. அந்தாளு இப்பவே கோஸ்ட் மாதிரி தான் இருக்கான். அந்தாளு கதை திருடிட்டான்னு சண்ட போட்ட ஆளு. நானே இதுக்கு அது சரிகிட்ட இருந்து உரிமையா விக்கிரமாதித்தன் தலைப்பு எடுத்துட்டேன்:P. இது கவிதை. அது கதைன்னு=)).
ஸ்ரீராம். said...
/ஏக்கங்கள் எத்தனை வருடம்? காலடியில் இடப் பட்ட இதயப் பூக்கள் ஏற்றுக் கொள்ளப் பட்டிருந்தால் சிலவருடம் கழித்து கவிதை எதைப் பற்றி இருக்கும்? மையல் கரைந்து மளிகைக் கணக்கு வரும்வரை....!!//
அது காதலாயின் கடைசி வரையிருக்கும் ஸ்ரீராம்.
வரிகளுக்குள் விழுந்து விழுந்து எழுகிறது கண்கள்..
அருமையாக இருக்கிறது
//அது காதலாயின் கடைசி வரையிருக்கும் ஸ்ரீராம்//
இதனால்தான் சார்... அப்படி சொன்னேன்... :)
அன்புடன் மலிக்கா said...
/வரிகளுக்குள் விழுந்து விழுந்து எழுகிறது கண்கள்..
அருமையாக இருக்கிறது/
நன்றிங்க.
அன்புடன்-மணிகண்டன் said...
//அது காதலாயின் கடைசி வரையிருக்கும் ஸ்ரீராம்//
இதனால்தான் சார்... அப்படி சொன்னேன்... :)
அப்பச் சரி.
Post a Comment