யூத்ஃபுல் விகடன் குட் ப்ளாக்ஸில் சுட்டப்பட்டது
ஏங்க நான் மௌனமா அழுறது உங்களுக்கு கேக்குதாங்க. ம்கும். கேட்டுட்டாலும். ரஜனிக்கும் கமலுக்கும் விருது குடுக்கற வேலையெல்லாம் இருக்கு. டி.வில பார்த்தாவணும். உங்களுக்கு இருக்கிற வேலையில என் அழுகைய வேற தேடி கேக்கப் போறீங்களாகும். நானே சொல்லிடுறேங்க. முடிஞ்சா சேர்ந்து அழுங்க. இல்லாட்டி மா.ஆட..பாருங்க, யூ டியூப்பில.
பேப்பர் படிக்காதடா வானம்பாடின்னு பட்சி சொல்லிச்சி. கேட்டாதானே. எழவெடுத்த பேப்பர படிச்சாதான் காலைல ஒழுங்கா போவுது. மனசுக்குள்ள என்னால்லாம் வில்லங்கமா கேள்விங்க வருது?
- எங்க தலீவரு எவ்வளவு நிதானமா எல்லாம் யோசிச்சி வருத்தப் பட்டு அழுதா, ந்ங்கொய்யால பரதேசி மனசு கேக்குது, தலீவர கேட்டு சொல்லவாம். சகோதரன் கணக்கு கேட்டா வெளிய தள்ளுனதாலதான அவரு கட்சி ஆரம்பிச்சி, ஆதரவு குடுத்து இத்தினி வருஷம் போராடினாங்க. சமாதானமா போய் இருந்தா, தலீவரே சி.எம். ஆ இருந்திருப்பாரு. வேற வழி இல்லாம பிரபாகரன் இவரு சொல்றத கேட்டு போடுங்கம்மா ஓட்டுன்னு போராடி இருப்பர்லடா வானம்பாடி. கேளுங்குது நான் யார போய் கேக்க?
- மாத்தையா மேட்டரு நியாயம்தானடா மனசாட்சிங்குறேன், போடா வெண்ண, போனவாரம் தினத்தந்தில ஈழ வரலாறில வந்திச்சேடா. கிட்டு கத என்னான்னு கேள்றாங்குது.
- ரனில் சொன்னததானடா தலீவரு சொல்றாருங்கரேன். அவன் இருந்தப்ப என்னாடா கிழிச்சிட்டான் கேள்றா புறம்போக்குன்னு திட்டுதுங்க.
- சரிடா. போனது போவட்டும், எதிராளி பலம் துல்லியமா தெரிய வேணாமான்னு கேட்டது நியாயம்தானடான்னா, ஏண்டா பேமானி, ஆளுங்க போனது, ராடார் குடுத்தது, ஆயுதம் குடுத்தது உண்மைதான்னு பேப்பர்ல வருது இதெல்லாம் உங்க தலைவருக்கு தெரியுமா தெரியாதான்னு கேள்றாங்குது.
- ரனில் தோத்ததால செத்தாங்களா, ராஜஎச்சைக்கு பிச்ச போட்டு இடுப்பு புடிச்சதால செத்தாங்களா கேள்றா மாங்கொட்ட மண்டையாங்குது.
- அட சீ! மனசாட்சியாடா நீ. கொஞ்சமாவது ஈரம் இருக்கா. இப்புடி பேசுறியேன்னா, வாணாம்பா, எனக்கு ஈரம் இல்லன்னே வெச்சிக்க. அரைநாள் உண்ணாவிரதத்துக்கு அப்புறம் எத்தினி குழந்தைங்க, பொண்ணுங்க, கிழடுங்க செத்துச்சே எல்லாமே போராடிதான் செத்துச்சா. சகோதர கட்சி கூட இணக்கமாதானே இருந்தாங்க. இப்புடி எல்லாரையும் போட்டு தள்ளாதீங்க. அதுங்கள வர விடுங்கன்னு எதுனா சொன்ன கவனம் இருக்கான்னு துப்புது.
அதெல்லாமாவது பரவால்லைங்க. கடசியா கேட்டுது பாருங்க கேள்வி. ஏண்டா வட்டப்பாற மண்டையா, அத்தினி பேரு செத்தது தெரியல, விழாம போன ஓட்டு கணக்குதானடா தெரியுது. அதனாச்சும் கேள்றாங்குது.
அதனால, உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க. இல்லாட்டி நான்பாட்டுக்கு விருது நிகழ்ச்சில கேட்வாக் பார்த்து அவரை (அட மனசாட்சிங்க) தேத்திக்கிறேன். வர்ட்டா
53 comments:
//ஏண்டா வட்டப்பாற மண்டையா, அத்தினி பேரு செத்தது தெரியல, விழாம போன ஓட்டு கணக்குதானடா தெரியுது. அதனாச்சும் கேள்றாங்குது.//
நல்லா கேளுங்க தலைவா! நாக்க புடுங்குற மாதிரி..., மானங்கெட்ட பரதேசிங்க..,!
//பேப்பர் படிக்காதடா வானம்பாடின்னு பட்சி சொல்லிச்சி. கேட்டாதானே. எழவெடுத்த பேப்பர படிச்சாதான் காலைல ஒழுங்கா போவுது.//
நல்லவேல பேப்பர மட்டும் பார்த்தீங்க....இல்லன்னா இத ஒரு சீரியல் கணக்கா அரைமணிநேரம் நியூஸ்ல காட்டியிருப்பாங்க....
//ரனில் சொன்னததானடா தலீவரு சொல்றாருங்கரேன். அவன் இருந்தப்ப என்னாடா கிழிச்சிட்டான் கேள்றா புறம்போக்குன்னு திட்டுதுங்க.//
அதானே....என்னமோ பழமொழி சொல்லுவாங்க....ஞாபகம்தான் வரமாட்டுது.
உங்க மனசு கேட்கிற கேள்வியெல்லாம் நச்சுன்னு இருக்கு.....
http://veltharma.blogspot.com/2009/11/blog-post_18.html
தலைவா! இத படிச்சிங்களா?
//விழாம போன ஓட்டு கணக்குதானடா தெரியுது//
அதுதானே பொழப்புங்க
:-)
உங்க மனசு கேள்விகள் பலரது கேள்விகளா இருக்கு..வேசம் போடுற நாடகக் காரன் தானே அந்த அரசியல்வியாதி...நல்லா கேட்டீங்க ஐயா...
நொந்து நூடுல்ஸ் ஆகறதத் தவிற வேற உருப்படியா என்ன செய்யமுடியும்?
இப்படி கேள்றாங்குது, திட்ராங்குது, துப்புடாங்குது ன்னு சொல்லி சொல்லியே கேட்டு, திட்டி, துப்பிட்டிங்களே தலைவா!
உருப்படாத டேமேஜர் பர்ராகுடா போட்டு சாவடிக்கிறான் நாசமா போக. தோ வந்துட்டேன்.
சூர்யா ௧ண்ணன் said...
/நல்லா கேளுங்க தலைவா! நாக்க புடுங்குற மாதிரி..., மானங்கெட்ட பரதேசிங்க..,!/
லஞ்ச் அவர்ல கேட்டது. சரியா கேக்கல. ப்ளாக் பண்ண முன்னாடி போடணுமேன்னு போட்டேன். இருங்க.
க.பாலாசி said...
/அதானே....என்னமோ பழமொழி சொல்லுவாங்க....ஞாபகம்தான் வரமாட்டுது.
உங்க மனசு கேட்கிற கேள்வியெல்லாம் நச்சுன்னு இருக்கு...../
படிக்கிறப்பவே பத்திகிட்டு எரியுது.
அண்ணே ஓட்டு போட்டாச்சு...
அப்பாலிக்கா வந்து வச்சுகிறேன் கச்சேரிய..
சூர்யா ௧ண்ணன் said...
/தலைவா! இத படிச்சிங்களா?/
ஆமாங்க பார்த்தேன்
ஈரோடு கதிர் said...
/அதுதானே பொழப்புங்க/
இல்லைங்க. அதனாலதான் செத்தாங்க.
பழமைபேசி said...
/ :-)/
ஆஆஆ. உங்க சிரிப்பானை நீங்களே பயன்படுத்தலை. அதென்னா பழமையும் பேசுறதில்லை. பின்னூட்டத்திலையும் பேசுறதில்லை.
புலவன் புலிகேசி said...
/உங்க மனசு கேள்விகள் பலரது கேள்விகளா இருக்கு..வேசம் போடுற நாடகக் காரன் தானே அந்த அரசியல்வியாதி...நல்லா கேட்டீங்க ஐயா.../
கயமை
S.A. நவாஸுதீன் said...
/நொந்து நூடுல்ஸ் ஆகறதத் தவிற வேற உருப்படியா என்ன செய்யமுடியும்?/
அட நாம நொந்துக்கலாம் பரவால்லைங்க. அங்க வெந்து செத்ததுங்கள நக்கலடிக்கிறது பெரிய மனுசன் பண்ற வேலையா
சூர்யா ௧ண்ணன் said...
/இப்படி கேள்றாங்குது, திட்ராங்குது, துப்புடாங்குது ன்னு சொல்லி சொல்லியே கேட்டு, திட்டி, துப்பிட்டிங்களே தலைவா!/
ம்ம்
விடுங்க விடுங்க....தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு கூட்டம் திரட்டனுமே.....இப்போ பதவில வேற இருக்காரு பெரியவர்....அதனால அய்யோ கொல்றாங்கலேன்னு கத்த முடியாது.....கத்த முடியலேன்னா அப்புறம் ஒரே ஒரு வழிதான் இருக்கு.....அதான் நீலிக் கண்ணீர்....அதான் இந்த முதலை லாம் வடிக்குமே ......அதே அதே....புரிஞ்சுடுச்சா.......அப்போ நான் வர்டா..!
லெமூரியன்... said...
/அதான் இந்த முதலை லாம் வடிக்குமே ......அதே அதே....புரிஞ்சுடுச்சா.......அப்போ நான் வர்டா..!/
முதலை கண்ணீர் வடிச்சா யார் உசிரும் போவாது. இது டேஞ்சரு.
சார் உங்களை பல Blogகளில் பார்த்துள்ளேன். முதல் முறை இன்று தான் தங்கள் வலை பக்கம் வந்தேன். இந்த கட்டுரை மிக சிறப்பாக உள்ளது.
சார் ஒரு சின்ன suggestion. தங்கள் blog- background மற்றும் எழுத்துக்கள் ரெண்டுமே dark கலரில் இருக்கு. இதனால் படிக்க வெகு சிரமம் ஆக உள்ளது. கொஞ்சம் கொஞ்சமா highlight பண்ணி தான் படிக்க வேண்டி இருக்கு. Background - light கலரிலும் எழுத்துக்கள் dark- கலரிலும் வைக்கவும். அது தான் படிக்க எளிதாக இருக்கும். தவறாக என்ன வேண்டாம்.
எனது படைப்புகளும் முதல் முறை யூத் விகடனில் இந்த வாரம் தான் வந்தது. முடிந்தால் படிக்கவும்
கவிதை:
http://youthful.vikatan.com/youth/Nyouth/mohankumar16112009.asp
கட்டுரை:
http://youthful.vikatan.com/youth/Nyouth/mohankumar13112009.asp
Mohan Kumar
http://veeduthirumbal.blogspot.com
//அதெல்லாமாவது பரவால்லைங்க. கடசியா கேட்டுது பாருங்க கேள்வி. ஏண்டா வட்டப்பாற மண்டையா, அத்தினி பேரு செத்தது தெரியல, விழாம போன ஓட்டு கணக்குதானடா தெரியுது. அதனாச்சும் கேள்றாங்குது.//
பாலா,
உங்கள "வழுக்கப்பாறை மைண்ட்ல" வெச்சிக்கறேன். அடுத்த எலக்ஸனுக்கப்பறம் எதிர்க்கட்சி திண்ணையில ( நாசமா போச்சி) பென்ச்சில வொக்காரும் (இங்க பேப்பரெல்லாம் புடிச்சிக்க கூடாது)போது உன்னைய என் கட்சிக்கு கொள்கை பர்ர்ர்ரப்பு செயலாளரா ....
எதுகை மோனை எல்லாம் சரியா வருதான்னு பாத்துக்கறேன். அப்புறம் நெ(..?)ஞ்சுக்கு நீதி யில சேக்கும் போது நல்லா வரனும்ல. அதான்...!
(அந்தாளு அப்படிதான் பாலா யோசிப்பான்)
Mohan Kumar said...
/எனது படைப்புகளும் முதல் முறை யூத் விகடனில் இந்த வாரம் தான் வந்தது. முடிந்தால் படிக்கவும்/
படித்தேங்க.நன்று. முதல் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி
சத்ரியன் said...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ். சத்ரியா. நீங்க நல்லவரா கெட்டவரா..=))
பாலாண்ணா!
எல்லாம் இழந்த பின் மாரடிச்சு அழுவாச்சி காட்டி என்ன பயன்?
சாதனைகள் எத்தனை இருந்தாலும் ஈழம் மனசாட்சியின் நெஞ்சுக்கு நீதியில் வரலாற்று கரும்புள்ளியாகவே பயணம் செய்யும்.
ராஜ நடராஜன் said...
/ பாலாண்ணா!
எல்லாம் இழந்த பின் மாரடிச்சு அழுவாச்சி காட்டி என்ன பயன்?/
அண்ணா நீங்க அது முழுசும் படிச்சிங்களா. அது அத்தனையும் விஷம். சடாரி சாத்தி செருப்பால அடிக்கிற வேலை. ரொம்ப கேவலமா இருக்கு. படிக்கலைன்னா சொல்லுங்க. தினத்தந்தில இருந்து மெயில் பண்றேன்.
இராகவன் நைஜிரியா said...
/அண்ணே ஓட்டு போட்டாச்சு...
அப்பாலிக்கா வந்து வச்சுகிறேன் கச்சேரிய../
வாங்கண்ணே. முடியுறப்போ.
//அவ்வ்வ்வ்வ்வ்வ்வ். சத்ரியா. நீங்க நல்லவரா கெட்டவரா..=))//
பாலா,
"தமிழினத் தலைவன் 'ன்னு சொல்லிக்கிற "தறுதலை" குடும்பத்து அரசியல் மேல சத்தியமா நான் நல்லவம்ப்பா.
கையலாகாத நிலையில் பலகோடிபேர்...
ஹேய்... எங்க நைனா அரசியல்வாதியாகபோறார்...போறார்...
போறார்.....
சத்ரியன் said...
/குடும்பத்து அரசியல் மேல சத்தியமா நான் நல்லவம்ப்பா./
உன் நேர்மைய நான் பாராட்ரேன்.=))
நாஞ்சில் பிரதாப் said...
/கையலாகாத நிலையில் பல கோடிபேர்.../
அதனால தான் கை கால் இல்லாம சில லட்சம் பேர்:(
பிரியமுடன்...வசந்த் said...
/ஹேய்... எங்க நைனா அரசியல்வாதியாகபோறார்...போறார்...
போறார்...../
என்ன பார்த்தா எப்புடீ தெரியுது. நைனானு பாசமா கூப்டு. பதிவுலகம் போதும் நமக்கு. ஓட்டு போடுறேன். பின்னூட்டம் போடுறேன். போரடிச்சா சண்ட கூட போடு.
அரசியல்னு ஏத்தி விட்டு எனக்கு பதவி வோணும் நைனான்னா நான் எங்க போவேன்.
voted... shall read later.. sry.. feeling not well..
அப்படி நல்லா கேளுங்க
ம்ம்ம்.கேளுங்க. கேளுங்க. நல்லா கேட்குறிங்க நியாயத்தை. ஓட்டு போட்டுட்டேன்.
'பிரபாகரன் தன்னோட குடும்பத்தை பற்றி கவலைப்படாம தமிழினத்துக்காக போராடினாரே. இதெல்லாம் தேவையா?
தன்னோட பொண்ணுக்கும் பையனுக்கும் ராஜபக்சே கிட்ட மந்திரி பதவி கேட்டு தள்ளுவண்டியில உட்கார்ந்து கிட்டு அலையாம இப்படி மக்களுக்காக பாடுபட்டு ஏமாந்துபோய்ட்டாரே. பிரபாகரன் குடும்பம் என்ன கதியானதோ' ன்னு இந்த கிழட்டு ஓநாய் ஏன் அழுவுதுன்னு பட்சி கேட்கலியா உங்களை?
சரியாப் போச்சு.........இந்த கெரகத்தையெல்லாம் படிச்சுபோட்டு.....அவஸ்தைப் படமுடியல்ல.....படிக்காமயும் இருக்க முடியல......
அருமை...
அன்புடன்
ஆரூரன்
கலகலப்ரியா said...
/voted... shall read later.. sry.. feeling not well../
ம்ம்
நசரேயன் said...
/ அப்படி நல்லா கேளுங்க/
ஏங்க! என் மனசாட்சி என்ன துப்புறது உங்களுக்கு அவ்வளவு சந்தோஷமா? ஏத்தி வேற குடுக்கிறீகளோ? அவ்வ்வ்
மணிப்பயல் said...
/இந்த கிழட்டு ஓநாய் ஏன் அழுவுதுன்னு பட்சி கேட்கலியா உங்களை?/
அது கேட்டத எல்லாம் இங்க போட்ற முடியுமா?
வாத்துக்கோழி said...
/ம்ம்ம்.கேளுங்க. கேளுங்க. நல்லா கேட்குறிங்க நியாயத்தை. ஓட்டு போட்டுட்டேன்./
என்ன சொல்றீங்களா? என் மனசாட்சிய சொல்றீங்களா? இந்த ஓட்டு குசும்பு வேற=))
ஆரூரன் விசுவநாதன் said...
/சரியாப் போச்சு.........இந்த கெரகத்தையெல்லாம் படிச்சுபோட்டு.....அவஸ்தைப் படமுடியல்ல.....படிக்காமயும் இருக்க முடியல......
அருமை.../
ம்கும். நேத்து நீங்க கண்டிப்பா காய்ச்ச போறீங்கன்னு காத்து கெடந்தேன்.
அண்ணே! எல்லாத்துக்கும் அவரு தான் காரணம்னு வெவரம் தெரிஞ்ச நீங்களும் சொல்லலாமா?
யாரோ ஆப்போசிட் ஓட்டு ஒன்னு குத்திருக்காங்களே! யாரு அது?
தலைப்பு நல்லா இருக்கு. வைரமுத்து வழக்குப் போட்டுறப்போறாரு
இத்தனை நாட்கள் உங்களைத் தொடராதது எவ்வளவு பெரிய தவறு?
மன்னிக்க வேண்டுகிறேன்.
மிக அற்புத எழுத்து ஐயா உங்களுடையது.
தொடர்வேன்.
இப்படிக்கு நிஜாம்.., said...
/அண்ணே! எல்லாத்துக்கும் அவரு தான் காரணம்னு வெவரம் தெரிஞ்ச நீங்களும் சொல்லலாமா?/
நான் அப்படி சொல்லவில்லையே நிஜாம். உண்மைக்கு மாறாக அவரின் கூற்றின் மறுபுறம் சிலவற்றைச் சுட்டியுள்ளேன். இதற்கு அவசியம் ஏன் வந்தது என்பதுதான் புரியவில்லை.
இப்படிக்கு நிஜாம்.., said...
/யாரோ ஆப்போசிட் ஓட்டு ஒன்னு குத்திருக்காங்களே! யாரு அது?/
கருத்து பிடிக்கலைன்னு போட்டிருக்கலாம். யார்னு தெரிஞ்சி என்ன பண்ண?
இப்படிக்கு நிஜாம்.., said...
/தலைப்பு நல்லா இருக்கு. வைரமுத்து வழக்குப் போட்டுறப்போறாரு/
=))
நர்சிம் said...
/ இத்தனை நாட்கள் உங்களைத் தொடராதது எவ்வளவு பெரிய தவறு?
மன்னிக்க வேண்டுகிறேன்.
மிக அற்புத எழுத்து ஐயா உங்களுடையது.
தொடர்வேன்./
நன்றி நர்சிம். நாம் பேசி இருக்கிறோம். ஏனோ நான் என்னை வலைமனையுடன் அறிமுகப் படுத்திக் கொள்ளவில்லை. ஆனால் நான் தவராமல் உங்களைப் படித்து பிரமித்திருக்கிறேன்.
தலைவா ஒவ்வொரு கேள்விக்கும் உங்களுக்கு ஆரத்தி எடுக்கணும் போல இருக்கு. ச்ச்சும்மா பின்னுங்க...வானம்பாடிகள் அடிக்கடி இப்படி கேள்விக்கணைகளைத் தொடுக்கட்டும்...
வாழ்த்துக்கள்.
ரோஸ்விக் said...
/ச்ச்சும்மா பின்னுங்க...வானம்பாடிகள் அடிக்கடி இப்படி கேள்விக்கணைகளைத் தொடுக்கட்டும்...
வாழ்த்துக்கள்./
நன்றி ரோஸ்விக்.
Post a Comment