Wednesday, November 4, 2009

குவாடர் வாழைக்காய்.


காட்சி 1: ஆபீசில ரொம்ப வேலை. முடிச்சி மணி பார்க்குறேன். மணி பத்து. இந்த நேரத்துக்கு மேல புரோட்டா கடையிலதான் ஏதாவது கிடைக்கும். செரிமானமாகாம உடம்பு கெட்டு போகும். சரின்னு 2 ரஸதாளி வாழைப்பழம் சாப்பிட்டு படுத்தேன்.

காட்சி 2: குழந்தைக்கு ஆறுமாசமாச்சிம்மா. இனிமே கொஞ்சம் பழம் கொடுக்கலாம். வேக வைத்த ஆப்பிள், மலைவாழைப்பழம் இதெல்லாம் கூழுணவுடன் சேர்த்து கொடுக்கலாம்.

காட்சி 3: ஏங்க பூஜைக்கு எல்லாம் வாங்கிட்டு வாழைப்பழம் இல்லாம வந்துட்டீங்களே. ஓடிபோய் வாங்கிட்டு வாங்க.

காட்சி 4: உடம்பு பூரணமா குணமாயிடுச்சிங்க. ரொம்ப வீக்கா இருக்கீங்க. நல்ல காய்கறி பழங்கள்னு சாப்பிட்டு ஆரோக்கியம் பார்த்துக்குங்க.


இனிமே இதுக்கெல்லாம் வேலையே இல்லை. போ ராசா. போய் வளமாக் குடிச்சி நலமா இருந்துகன்னு டாக்டரே போதைலதான் சொல்லுவாரு போல.

என்னாடா பினாத்துறான் வானம்பாடின்னு பார்க்குறீங்களா. காலைல எழுந்து பேப்பர படிச்சா இந்த விவசாயிங்க பண்ணுற அனியாயத்த போட்டுருக்கான். டாஸ்மாக்குல ரெண்டு கட்டிங் ராவா அடிச்சா மாதிரி தலை சுத்திப் போச்சு. பேசாம அரசாங்கம் வீட்டுக்கு வீடு டாஸ்மாக் கனெக்சன் குடுத்துட்டா சரியாப் போய்டும். குழந்தைங்களுக்கு க்ரைப் வாட்டர் குடுக்கறதே தடை பண்ணிட்டாங்க. இனிமே குவார்ட்டர் குடுத்து வளர்த்துக்கலாம். வளர்க்கணும்.

மனுசனுக்கு ஆசை இருக்கலாம். பேராசை இருக்கலாமாங்க. 5 விரலும் ஒண்ணா இருந்தா ஏதாவது பண்ண முடியுமா? இயற்கைக்கு எதிரா போய் போய் ரோகம் பெருகி, வருமானமும் பெருகி சம்பாதிக்கிறத டாக்டருக்கு அழுது என்னாத்த கண்டோம். அட போங்க. குடிகாரன் புலம்பல் மாதிரி இருக்குன்னு வஞ்சா நான் என்ன பண்ண? நீங்கதான் படிங்க.




மாப்பு: உங்கூருக்காரங்க நல்ல படியா ஆரம்பிச்சி வெச்சிருக்காய்ங்க. எங்க போய் சொல்லுறது.

47 comments:

ஈரோடு கதிர் said...

//2 ரஸதாளி வாழைப்பழம் சாப்பிட்டு படுத்தேன்//

அடடா... அதுதான் இன்னும் மயக்கமா இருக்கீங்களா....

அண்ணே.... எந்த மருந்தடிச்சாலும் பூச்சி அடங்கல போல இருக்கு... அதுதான் சரக்கு ஊத்துனா... மப்புல மயங்கிரும்னு நெனைச்சிட்டாங்களோ என்னவோ...

MUTHU said...

ஒரு வேலை ரஸ்தாளி வேலையை காட்டிவிட்டதோ

ஈ ரா said...

ஒரு கதையில மதுவில் புழு பூச்சி எல்லாம் சாகும்னு வாத்தியார் சொன்னவுடன், வயிற்றுக்குள்ள போனா அங்கிட்டு இருக்கிற பூச்சி எல்லாம் சாகும்னு ஒருத்தன் சொன்னா மாதிரி இருக்கு....

இனி வாழைபோட்டா வானத்துல மட்டும் மப்பு வேணாம், பூமியிலையும் மப்பு வேணும்போல..

என்னமோ தெரியலப்பா? ஆனாலும் இங்கையும் மிக்சிங் தேவைப்படுதே?

ப்ரியமுடன் வசந்த் said...

ஹி ஹி ஹி

ஒரே காமெடியா போச்சு...

மப்புல...

அகல்விளக்கு said...

நம்ம ஊர்க்காரவுக இம்புட்டு விவரமாவா இருக்காவ...

சொல்லவேயில்ல...

அன்புடன் நான் said...

நல்லாத்தான் ஆராச்சி பண்ணுராங்க.... அதான் ஒருநாள் வயல் பக்கம் போனப்ப பயிரேல்லாம் ஆடிக்கிட்டு இருந்துது...இப்பத்தான் புரியுதுங்க .

பழமைபேசி said...

வணக்கம்;இப்பதாண்ணே எழுந்தேன்! சாயுங்காலம் பார்க்கலாமுங்க...

S.A. நவாஸுதீன் said...

அப்போ இனிமே வாழைப்பழம் குவார்ட்டர் எவ்வளவுன்னுதான் கேக்கனுமோ. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

இராகவன் நைஜிரியா said...

அண்ணே சில வருஷங்கள் முன்னே, பருத்தி பயிருக்கு பூச்சிகளை கட்டுப்படுத்த கோக்கோ கோலா (அ), பெப்சி தண்ணில கலந்து அடிச்சாங்கன்னு படிச்ச ஞாபகம் வருதண்ணே.

vasu balaji said...

கதிர் - ஈரோடு said...

/அண்ணே.... எந்த மருந்தடிச்சாலும் பூச்சி அடங்கல போல இருக்கு... அதுதான் சரக்கு ஊத்துனா... மப்புல மயங்கிரும்னு நெனைச்சிட்டாங்களோ என்னவோ.../

அது சரி. மயங்கீட்டா பரவால்ல. அது மனுசன மாதிரி டாய்னு கிளம்பீட்டா என்ன பண்ண? அவ்வ்வ்

vasu balaji said...

Tamilmoviecenter said...

/ஒரு வேலை ரஸ்தாளி வேலையை காட்டிவிட்டதோ/

இருக்கும். தூக்கமா வருது:))

vasu balaji said...

ஈ ரா said...
/இனி வாழைபோட்டா வானத்துல மட்டும் மப்பு வேணாம், பூமியிலையும் மப்பு வேணும்போல../

ஆஹா. இது சரி

/என்னமோ தெரியலப்பா? ஆனாலும் இங்கையும் மிக்சிங் தேவைப்படுதே?/

ம்கும். கவலைய பாரு

vasu balaji said...

பிரியமுடன்...வசந்த் said...

/ஹி ஹி ஹி

ஒரே காமெடியா போச்சு...

மப்புல.../

ச. தலைப்பு தப்பா வெச்சிட்டேன். மாப்பு ஊரில மப்புன்னு வெச்சிருக்கலாம்.

vasu balaji said...

அகல் விளக்கு said...

/நம்ம ஊர்க்காரவுக இம்புட்டு விவரமாவா இருக்காவ...

சொல்லவேயில்ல.../

ம்கும். மெடலுக்கு சொல்லி இருக்கு. வந்ததும் சொல்லுவாய்ங்க=))

vasu balaji said...

சி. கருணாகரசு said...

/நல்லாத்தான் ஆராச்சி பண்ணுராங்க.... அதான் ஒருநாள் வயல் பக்கம் போனப்ப பயிரேல்லாம் ஆடிக்கிட்டு இருந்துது...இப்பத்தான் புரியுதுங்க /

இந்த ரேஞ்சுல போனா அரசாங்கமே டாஸ்மாக் கம்பேனி தொறக்கலாமே. ரேசன் அட்டையில நபருக்கு தினம் ஒரு ஃபுல்லு.

ஆரூரன் விசுவநாதன் said...

பாலாண்ணே......

வணக்கம்....இந்த உலகத்துக்கு பல விசயங்கள புதுசா கண்டுபிடிச்சு சொன்னதே எங்க ஊருக்காரங்க தானே.

vasu balaji said...

பழமைபேசி said...

/வணக்கம்;இப்பதாண்ணே எழுந்தேன்! சாயுங்காலம் பார்க்கலாமுங்க.../

வாங்க பழமை. நீங்களும் வாழைப்பழம் சாப்டுட்டீங்களோ. இந்த தூக்கம் தூங்கியிருக்கீங்க

vasu balaji said...

S.A. நவாஸுதீன் said...

/அப்போ இனிமே வாழைப்பழம் குவார்ட்டர் எவ்வளவுன்னுதான் கேக்கனுமோ. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்/

ஹி ஹி. 2 வாழைப்பழம் ஒரு ஊருகா பேக்கட்னு வாங்கலாம்.

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/அண்ணே சில வருஷங்கள் முன்னே, பருத்தி பயிருக்கு பூச்சிகளை கட்டுப்படுத்த கோக்கோ கோலா (அ), பெப்சி தண்ணில கலந்து அடிச்சாங்கன்னு படிச்ச ஞாபகம் வருதண்ணே./

இது வேறயா. கக்கூசுதான் கழுவுனாங்கன்னு படிச்சேன்.

vasu balaji said...

ஆரூரன் விசுவநாதன் said...

/பாலாண்ணே......

வணக்கம்....இந்த உலகத்துக்கு பல விசயங்கள புதுசா கண்டுபிடிச்சு சொன்னதே எங்க ஊருக்காரங்க தானே./

வணக்கம். அது வேறயா. =))

பிரபாகர் said...

அய்யா....நம்ம ஆளுங்கள மாதிரி வித்தியாசமா சிந்திக்க இனிமேத்தான் பொறக்கணும்.

பிரபாகர்.

ரோஸ்விக் said...

தலைவா, இதை படிச்சதுமே ரெண்டு வாழைப்பழம் சாப்பிட்டா மாதிரி இருக்குது...அதாவது மப்பு அடிச்ச மாதிரி இருக்கு....ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ ?

நிஜாம் கான் said...

அண்ணே! இனிமே சரக்குக்கு சைடிஸ்ஸா வாழைப்பழம் வாங்க அவசியம் இல்ல. வாழப்பழமே சரக்கா மாறிடிச்சி. இனிமேல் வாழைக்காயும் டாஸ்மாக்ல விக்கப்படுமோ????

பின்னோக்கி said...

//ரஸதாளி

ரஸ்தாளி சாப்பிட்டா அடுத்த நாள் காலைல கஷ்டமா இருக்குமே.. எப்படி சமாளிச்சீங்க :)

vasu balaji said...

பிரபாகர் said...

/அய்யா....நம்ம ஆளுங்கள மாதிரி வித்தியாசமா சிந்திக்க இனிமேத்தான் பொறக்கணும்.

பிரபாகர்./

எதையுமேவா விட்டு வைக்க மாட்டாங்க. அவ்வ்

vasu balaji said...

ரோஸ்விக் said...

/தலைவா, இதை படிச்சதுமே ரெண்டு வாழைப்பழம் சாப்பிட்டா மாதிரி இருக்குது...அதாவது மப்பு அடிச்ச மாதிரி இருக்கு....ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ ?/

அந்த கெமிக்கல் ஆல்கஹால்லதான் கரையும்னு பிராந்தில கலந்தானே. அங்க நிக்கிறான் நம்மாளு.

vasu balaji said...

இப்படிக்கு நிஜாம்.., said...

/அண்ணே! இனிமே சரக்குக்கு சைடிஸ்ஸா வாழைப்பழம் வாங்க அவசியம் இல்ல. வாழப்பழமே சரக்கா மாறிடிச்சி. இனிமேல் வாழைக்காயும் டாஸ்மாக்ல விக்கப்படுமோ????/

ம்கும். ஸ்பெசலா ஆராய்ச்சி பண்ணி முழுமப்பு வாழைப்பழம் தயார் பண்ணுவாங்க. எங்க வேணும்னாலும் ஏத்திக்க வசதி

vasu balaji said...

பின்னோக்கி said...

//ரஸதாளி

// ரஸ்தாளி சாப்பிட்டா அடுத்த நாள் காலைல கஷ்டமா இருக்குமே.. எப்படி சமாளிச்சீங்க :)//

இது வேறயா. அப்புடியெல்லாம் ஆகல=))

தமிழ் அமுதன் said...

//தலைப்பு தப்பா வெச்சிட்டேன். மாப்பு ஊரில மப்புன்னு வெச்சிருக்கலாம்.//

இது ஸூப்பரூ ....!

கலகலப்ரியா said...

இப்டியாவது வளரலாம்னு பார்க்கறீங்க போல... ம்ம்... ட்ரை பண்ணுங்க..

vasu balaji said...

கலகலப்ரியா said...

/இப்டியாவது வளரலாம்னு பார்க்கறீங்க போல... ம்ம்... ட்ரை பண்ணுங்க../

:o இன்னாது. இப்புடி வளந்து என்னாவணும். ஆடிப்போய்ட்டேன். அட சை. ப்ராந்தில இல்லை. நீ போட்ட போடுல. யப்பே.

vasu balaji said...

ஜீவன் said...

/இது ஸூப்பரூ ....!/

வாங்க ஜீவன். ஹி ஹி.

Suresh Kumar said...

அருமையான குவார்டர் வாழைக்காய்

Unknown said...

இது நாள தான் தமிழன பாத்து உலகமே நடுங்குது...

புலவன் புலிகேசி said...

குவாட்டர் 65 ரூவா வாழைப்பழம் 2 ரூவா...63 ரூவா மிச்சம் தான.......??

vasu balaji said...

Shankar said...

/அற்புதமான படைப்புகள் வாழ்த்துக்கள் /

நன்றிங்க.

vasu balaji said...

Suresh Kumar said...

/அருமையான குவார்டர் வாழைக்காய்/

:)). வாங்க சுரேஷ் குமார்.

vasu balaji said...

பேநா மூடி said...

/இது நாள தான் தமிழன பாத்து உலகமே நடுங்குது.../

அப்புடியே நடுங்கிட்டாலும்:))

vasu balaji said...

புலவன் புலிகேசி said...

/குவாட்டர் 65 ரூவா வாழைப்பழம் 2 ரூவா...63 ரூவா மிச்சம் தான.......??/

ம்கும். 2 ரூபாய்க்கு தருவானாக்கு.

Prathap Kumar S. said...

சார் அப்ப இதை ஆளும் அரசு அதிகாரபூர்வா அறிவிச்சுடுவாய்ங்களே... சம்பாதிக்கிறதுக்கு இன்னும் ஒருவழியை கண்டுபிடிச்சு கொடுத்துட்டாய்ஙக.

vasu balaji said...

நாஞ்சில் பிரதாப் said...

/சார் அப்ப இதை ஆளும் அரசு அதிகாரபூர்வா அறிவிச்சுடுவாய்ங்களே... சம்பாதிக்கிறதுக்கு இன்னும் ஒருவழியை கண்டுபிடிச்சு கொடுத்துட்டாய்ஙக./


ஆமாங்க.

thiyaa said...

எப்பிடியெல்லாம் கண்டுபிடிப்புகள் நடக்குது .

வாழ்த்துகள் நண்பரே நல்லாயிருக்கு

சத்ரியன் said...

நண்பா,

இனிமே எல்லாரும் ஆல்கஹால் இல்லாம வாழவே (வாழை) முடியாதா? நான் இனிமே சத்தியமங்கலத்து வாழைப்பழம் சாப்டுக்கறேன். "டாஸ்மார்க்" கடைக்கு போனா கண்டுப்புடிச்ச்டறாங்கப்பா. மாத்து வழி காட்டுணதுக்கு நெறைய புண்ணியம் ராசா உனக்கு.

vasu balaji said...

தியாவின் பேனா said...

/வாழ்த்துகள் நண்பரே நல்லாயிருக்கு/

நன்றி தியா

vasu balaji said...

சத்ரியன் said...

/மாத்து வழி காட்டுணதுக்கு நெறைய புண்ணியம் ராசா உனக்கு./

ஆமாமா. இவருக்கு வாழைப் பழத்துல மேட் இன் சத்தியமங்கலம்னு போடுவாங்க=))

ராஜ நடராஜன் said...

பின்னூட்டங்களும் பதில்களும் மப்பில்லாமல் ரசித்தவை.

பின்னூட்டப் பதில்களில் அசத்துறீங்க போங்க:)

இனி வாழைபோட்டா வானத்துல மட்டும் மப்பு வேணாம், பூமியிலையும் மப்பு வேணும்போல..

நல்லாத்தான் ஆராச்சி பண்ணுராங்க.... அதான் ஒருநாள் வயல் பக்கம் போனப்ப பயிரேல்லாம் ஆடிக்கிட்டு இருந்துது...இப்பத்தான் புரியுதுங்க .

/அப்போ இனிமே வாழைப்பழம் குவார்ட்டர் எவ்வளவுன்னுதான் கேக்கனுமோ. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

/குவாட்டர் 65 ரூவா வாழைப்பழம் 2 ரூவா...63 ரூவா மிச்சம் தான.......??/

ம்கும். 2 ரூபாய்க்கு தருவானாக்கு./

ஹி ஹி. 2 வாழைப்பழம் ஒரு ஊருகா பேக்கட்னு வாங்கலாம்./

/அண்ணே.... எந்த மருந்தடிச்சாலும் பூச்சி அடங்கல போல இருக்கு... அதுதான் சரக்கு ஊத்துனா... மப்புல மயங்கிரும்னு நெனைச்சிட்டாங்களோ என்னவோ.../

அது சரி. மயங்கீட்டா பரவால்ல. அது மனுசன மாதிரி டாய்னு கிளம்பீட்டா என்ன பண்ண? அவ்வ்வ்

/ஒரு வேலை ரஸ்தாளி வேலையை காட்டிவிட்டதோ/

இருக்கும். தூக்கமா வருது:))

ச. தலைப்பு தப்பா வெச்சிட்டேன். மாப்பு ஊரில மப்புன்னு வெச்சிருக்கலாம்.

/நம்ம ஊர்க்காரவுக இம்புட்டு விவரமாவா இருக்காவ...

சொல்லவேயில்ல.../

ம்கும். மெடலுக்கு சொல்லி இருக்கு. வந்ததும் சொல்லுவாய்ங்க=))

/வாங்க பழமை. நீங்களும் வாழைப்பழம் சாப்டுட்டீங்களோ. இந்த தூக்கம் தூங்கியிருக்கீங்க/

/இது நாள தான் தமிழன பாத்து உலகமே நடுங்குது.../

அப்புடியே நடுங்கிட்டாலும்:))(முத்தாய்ப்பு)

vasu balaji said...

ராஜ நடராஜன் said...

/பின்னூட்டங்களும் பதில்களும் மப்பில்லாமல் ரசித்தவை.

பின்னூட்டப் பதில்களில் அசத்துறீங்க போங்க:)/

வாங்கண்ணா.நன்றிங்கண்ணா.