Friday, November 20, 2009

காதலடி நீயெனக்கு..

வானவில் தேவதை!

புகையாய்ப் ப‌னி க‌விந்த‌
ஓர் காலைப் பொழுதில்
தெளிவ‌ற்ற‌ தேவ‌தையாய்
வெண்ணிற‌ச் சூடியில்
ப‌ன்னிற‌ துப்ப‌ட்டாவுட‌ன்
நீ தூர‌த்து வான‌வில்லாய்!

அருகில் வ‌ர
க‌ருமேக‌மாய் கூந்த‌லுக்குள்
செம்ம‌தியாய் உன் முக‌மும்
அசையாத‌ கோவில் தீப‌மாய்
புருவ‌ ம‌த்தியில் தில‌க‌மும்

க‌ருவ‌ண்டுக் க‌ண்ணும்
ரோஜா நிற‌க் காது ம‌ட‌லும்
சிவ‌ந்த‌ உத‌ட்டுக்குள்
வெண்ம‌ணி முத்துக்க‌ளும்

தேன் நிற‌ச் ச‌ரும‌மும்
தாம‌ரைப்பூ நிற‌க்
கையுள்ளும்

வான‌வில்லே
வான‌வில்லேந்தி
வ‌ந்த‌தைக் க‌ண்டு
க‌ட‌க்கும் த‌ருண‌த்தில்

க‌ண்ணுயர்த்தி வின‌வினேன்
தேவ‌தையா நீயென‌
க‌ண்தாழ்த்தி
முறுவ‌லில் சொன்னாய்
உன் காத‌லியென‌!
~~~~~~~~~~~~~~~~
மையெழுத்து!

எல்லோரும் கண்ணுக்கு
மைதான் எழுதுகிறார்கள்
நீ மட்டும் எப்படி
மையல் எழுதுகிறாய்?
மையலெழுதிய கண்ணில் ஏனோ
பொய்யுமெழுதிப் போகிறாயடி
என்னைக் காணாதது போல்!
~~~~~~~~
குழந்தையானோம்!

உன் மடியில் நானும்
என் மடியில் நீயும்
உறங்கும் கணங்களில்
குழந்தையாகி
குழந்தையாக்கும்
விந்தையெங்கு கற்றாயடி செல்லம்?
~~~~~~~~~~~
உயிர்-மெய்!

உன் பெயரில் எல்லாம்
உயிரெழுத்துக்கள்
அதை உச்சரித்தே உயிர் வாழ்கிறேன்
என் பெயரில் எல்லாம்
மெய்யெழுத்துக்கள்
சொல்லிப் பாரென் காதலைச் சொல்லும்
இலக்கணம் பேசாதே என்னவளே
காதல் என்று இலக்கணத்துக்கு கட்டுப்பட்டது?
~~~~~~~~~~~~~~~
தவம்!

மோட்சம் வேண்டி
மோனத் தவமிருந்த
முனிவனைக் கடந்து போனாயா நீ?
உன் வாசம் தந்த தெளிவில்
காதலே மோட்சத்துக்கு வழியென
கதறித் தவிக்கிறான் பார்!
~~~~~~~~~~~~~~~~
என்னவள்!

யுக யுகமாய்
உன்னைக் காதலித்திருக்கிறேன் போலும்..
அதனால்தான் உன்னைக் கண்ட நொடியில்
யாரிவள் எனக்கேட்காமல்
உன்னவள் என்றதென் மனது!

-:-:-:-{}-:-:-:-

100 comments:

சூர்யா ௧ண்ணன் said...

//மையலெழுதிய கண்ணில் ஏனோ
பொய்யுமெழுதிப் போகிறாயடி
என்னைக் காணாதது போல்!//

கவிதை பிரமாதம் தலைவா!

க.பாலாசி said...

//வான‌வில்லே
வான‌வில்லேந்தி
வ‌ந்த‌தைக் க‌ண்டு
க‌ட‌க்கும் த‌ருண‌த்தில்//

ம்ம்ம்....அப்பறம்....இதோ வர்ரேன்....

அகல்விளக்கு said...

kavitha Super Sir.

I doubt !

//யுக யுகமாய்
உன்னைக் காதலித்திருக்கிறேன் போலும்..
அதனால்தான் உன்னைக் கண்ட நொடியில்
யாரிவள் எனக்கேட்காமல்
உன்னவள் என்றதென் மனது!//

paravailla

naan ketkuren

Yaar avvvvvvvvvangaaa ??

க.பாலாசி said...

//க‌ண்ணுயர்த்தி வின‌வினேன்
தேவ‌தையா நீயென‌
க‌ண்தாழ்த்தி
முறுவ‌லில் சொன்னாய்
உன் காத‌லியென‌! //

பொய்யெனப் பெண்ணவள் இயம்பியது
காதருகில் மெய்யெனப்பட்டதோ?

//மையலெழுதிய கண்ணில் ஏனோ
பொய்யுமெழுதிப் போகிறாயடி
என்னைக் காணாதது போல்!//

கண்டதனால் கூட இருக்கலாம்....

//குழந்தையாகி
குழந்தையாக்கும்
விந்தையெங்கு கற்றாயடி செல்லம்?//

ஆகா......ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா....

(இதெல்லாம் சும்மா.....)

//சொல்லிப் பாரென் காதலைச் சொல்லும்
இலக்கணம் பேசாதே என்னவளே
காதல் என்று இலக்கணத்துக்கு கட்டுப்பட்டது?//

கவித....கவித....

//மோட்சம் வேண்டி
மோனத் தவமிருந்த
முனிவனைக் கடந்து போனாயா நீ?
உன் வாசம் தந்த தெளிவில்
காதலே மோட்சத்துக்கு வழியென
கதறித் தவிக்கிறான் பார்!//

மிக அருமையான வார்த்தைக்கோர்வைகள்....

//யுக யுகமாய்
உன்னைக் காதலித்திருக்கிறேன் போலும்..
அதனால்தான் உன்னைக் கண்ட நொடியில்
யாரிவள் எனக்கேட்காமல்
உன்னவள் என்றதென் மனது!//

வீட்டுக்காரம்மா வீட்ல இல்லையோ? ரொம்ப தைரியமா வார்த்தைகள் வருது.....

ப்ரியமுடன் வசந்த் said...

ஸ்ஸ்ஸ்ஸப்பா...

கொசுக்கடிக்குது நைனா ஏதாச்சும் கொசுவத்தி இருந்தா கொரியர்ல அனுப்பி வை..

ப்ரியமுடன் வசந்த் said...

முதல்ல அம்மாவோட மெயில் ஐடி குடு உன்னைய பத்தி அவங்க கிட்ட நல்லவிதமா சொல்ல வேண்டியிருக்கு...

ப்ரியமுடன் வசந்த் said...

இப்பிடியே போச்சு சாப்பாடு போடமாட்டங்கடி வீட்ல..

vasu balaji said...

சூர்யா ௧ண்ணன் said...

/கவிதை பிரமாதம் தலைவா!/

நன்றி தலைவா

vasu balaji said...

க.பாலாசி said...

/ம்ம்ம்....அப்பறம்....இதோ வர்ரேன்..../

இது வேற.=))

vasu balaji said...

அகல்விளக்கு said...

/kavitha Super Sir. /

நன்றி.

/naan ketkuren

Yaar avvvvvvvvvangaaa ??/

நீங்க கேட்டாலும் அதுதான் சொல்லுவாள்
என்னவன் என!

நம்ம கிட்டயேவா?

vasu balaji said...

க.பாலாசி said...

/பொய்யெனப் பெண்ணவள் இயம்பியது
காதருகில் மெய்யெனப்பட்டதோ?/

பவானீஈஈஈ. திருந்தமாட்டங்குறானே..

/கண்டதனால் கூட இருக்கலாம்..../

போஓஓஓஓஒறாஆஆஆஆமை

/வீட்டுக்காரம்மா வீட்ல இல்லையோ? ரொம்ப தைரியமா வார்த்தைகள் வருது...../

தோஓஓஓடா=))

vasu balaji said...

பிரியமுடன்...வசந்த் said...

/ஸ்ஸ்ஸ்ஸப்பா...

கொசுக்கடிக்குது நைனா ஏதாச்சும் கொசுவத்தி இருந்தா கொரியர்ல அனுப்பி வை../

ஏன்=))

vasu balaji said...

பிரியமுடன்...வசந்த் said...

/முதல்ல அம்மாவோட மெயில் ஐடி குடு உன்னைய பத்தி அவங்க கிட்ட நல்லவிதமா சொல்ல வேண்டியிருக்கு.../

ம்கும். என்னாங்கடா. ஒரு கவிதை எழுதினா தப்பா.

vasu balaji said...

பிரியமுடன்...வசந்த் said...

/இப்பிடியே போச்சு சாப்பாடு போடமாட்டங்கடி வீட்ல../

நாம சமைப்போம்ல.=))

இராகவன் நைஜிரியா said...

நல்லாயிருக்கு.

கீப் இட் அப்.

இராகவன் நைஜிரியா said...

கை பரபரக்குது கும்மி அடிக்க..

வேணாம் அப்படின்னு மனசு சொல்லுது... அதனால

நோ கும்மி

இராகவன் நைஜிரியா said...

// புகையாய்ப் ப‌னி க‌விந்த‌
ஓர் காலைப் பொழுதில் //

கார்த்தல பக்கதில் யாராவது உட்கார்ந்து தம்ப் அடிச்சுகிட்டு இருந்தாங்களா?

இராகவன் நைஜிரியா said...

// தெளிவ‌ற்ற‌ தேவ‌தையாய் //

அதுக்குத்தான் கண்ணாடி போட்டு கிட்டு பார்க்கணும் அப்படின்னு சொல்வது..

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/நல்லாயிருக்கு.

கீப் இட் அப்./

நன்றிண்ணே

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/கை பரபரக்குது கும்மி அடிக்க..

வேணாம் அப்படின்னு மனசு சொல்லுது... அதனால

நோ கும்மி/

ஒய் ஒய் ஒய்=))

இராகவன் நைஜிரியா said...

// வெண்ணிற‌ச் சூடியில்
ப‌ன்னிற‌ துப்ப‌ட்டாவுட‌ன்
நீ தூர‌த்து வான‌வில்லாய்! //

எக்ஸ்கியூஸ்மி.. என்னாது இது...

யாரவது வேசம் போட்டு கிட்டு போனவங்களை பார்த்துட்டீங்களா?

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/கார்த்தல பக்கதில் யாராவது உட்கார்ந்து தம்ப் அடிச்சுகிட்டு இருந்தாங்களா?/

ஆஹா. அதான் பனின்னு போட்டேனே

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/அதுக்குத்தான் கண்ணாடி போட்டு கிட்டு பார்க்கணும் அப்படின்னு சொல்வது../

போட்டுதான் இந்த லெச்சணம்

இராகவன் நைஜிரியா said...

// க‌ண்ணுயர்த்தி வின‌வினேன்
தேவ‌தையா நீயென‌
க‌ண்தாழ்த்தி
முறுவ‌லில் சொன்னாய்
உன் காத‌லியென‌! //

தெரியாம சொல்லிட்டாங்க...
விட்டுடுங்க... ஐயோ பாவம்

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/யாரவது வேசம் போட்டு கிட்டு போனவங்களை பார்த்துட்டீங்களா?/

மேல படிங்க

இராகவன் நைஜிரியா said...

மீ த 25

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/தெரியாம சொல்லிட்டாங்க...
விட்டுடுங்க... ஐயோ பாவம்/

அதெப்புடீஈ

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...
இராகவன் நைஜிரியா said...

/யாரவது வேசம் போட்டு கிட்டு போனவங்களை பார்த்துட்டீங்களா?/

மேல படிங்க //

மேல...

படிச்சுட்டேன்.

அப்புறம் வேற அடுத்து என்ன படிக்கணும்.

இராகவன் நைஜிரியா said...

// வான‌வில்லே
வான‌வில்லேந்தி
வ‌ந்த‌தைக் க‌ண்டு
க‌ட‌க்கும் த‌ருண‌த்தில்
//

கார்த்தால எழுந்து பால் பூத்துக்கு போவது இதற்குத்தானா?

இராகவன் நைஜிரியா said...

// எல்லோரும் கண்ணுக்கு
மைதான் எழுதுகிறார்கள்
நீ மட்டும் எப்படி
மையல் எழுதுகிறாய்? //

உங்கள் மேல் மையல் கொண்டாதாலோ?

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/மேல...

படிச்சுட்டேன்.

அப்புறம் வேற அடுத்து என்ன படிக்கணும்./

படிச்சுட்டுதான் லொள்ளா=))

இராகவன் நைஜிரியா said...

// மையலெழுதிய கண்ணில் ஏனோ
பொய்யுமெழுதிப் போகிறாயடி
என்னைக் காணாதது போல்! //

ஆமாம் .. பயங்கரமா பட்டிகாட்டான் யானையைப் பார்க்கிற மாதிரி முறைச்சு பாத்து இருப்பீங்க..

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/கார்த்தால எழுந்து பால் பூத்துக்கு போவது இதற்குத்தானா?/

பால் பூத்தெல்லாம் எங்க இருக்கு இப்ப?

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/ஆமாம் .. பயங்கரமா பட்டிகாட்டான் யானையைப் பார்க்கிற மாதிரி முறைச்சு பாத்து இருப்பீங்க../

பழமொழிய மாத்தப்படாது. முட்டாயி கடை.=))

இராகவன் நைஜிரியா said...

// குழந்தையானோம்!

உன் மடியில் நானும்
என் மடியில் நீயும்
உறங்கும் கணங்களில்
குழந்தையாகி
குழந்தையாக்கும்
விந்தையெங்கு கற்றாயடி செல்லம்? //

அய்ய... என்னங்க இது... அது இயற்கைங்க...

தானா வரும்..

சொல்லித் தெரிவதில்லை... ம... கலை

இராகவன் நைஜிரியா said...

// யுக யுகமாய்
உன்னைக் காதலித்திருக்கிறேன் போலும்.. //

அது சரி...

Known devil is better than unknown angel

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said..
/அய்ய... என்னங்க இது... அது இயற்கைங்க...

தானா வரும்..

சொல்லித் தெரிவதில்லை... ம... கலை/

இது அதில்லண்ணே.

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...
இராகவன் நைஜிரியா said...

/கார்த்தால எழுந்து பால் பூத்துக்கு போவது இதற்குத்தானா?/

பால் பூத்தெல்லாம் எங்க இருக்கு இப்ப? //

இன்னும் யூத் அப்படின்னு நினைப்பா...

பழய பெருங்காய டப்பா வாசம் மாதிரி, யூத் நினைப்புல ஒரு கவிதை போட்டுட்டீங்க.

அதனால நான் பால் பூத்துக்கு போறதுன்னு கேட்டுட்டேன்

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...
பிரியமுடன்...வசந்த் said...

/இப்பிடியே போச்சு சாப்பாடு போடமாட்டங்கடி வீட்ல../

நாம சமைப்போம்ல.=)) //

அண்ணே சமயத்தில நீங்களே வாய் கொடுத்து மாட்டிகிறீங்க..

நீங்க சமைக்கிறது எல்லாம் வெளியில இப்படியா ஓப்பனா சொல்வது...

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...
/அது சரி...

Known devil is better than unknown angel/

ஏன் இந்த கொல வெறி..அவ்வ்வ்வ்=))

பிரபாகர் said...

அய்யா முதல்ல அட்டண்டன்ஸ்... அப்புறம் தான் மத்ததெல்லாம். ஒட்டு போட்டாச்சி... படிச்சிட்டு வந்துடறேன்...

பிரபாகர்.

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/பழய பெருங்காய டப்பா வாசம் மாதிரி, யூத் நினைப்புல ஒரு கவிதை போட்டுட்டீங்க.

அதனால நான் பால் பூத்துக்கு போறதுன்னு கேட்டுட்டேன்/

அது சரி=))

vasu balaji said...

பிரபாகர் said...

/அய்யா முதல்ல அட்டண்டன்ஸ்... அப்புறம் தான் மத்ததெல்லாம். ஒட்டு போட்டாச்சி... படிச்சிட்டு வந்துடறேன்.../


நோடட்

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/நீங்க சமைக்கிறது எல்லாம் வெளியில இப்படியா ஓப்பனா சொல்வது.../

நான் துணி துவைக்கிறது சொல்லவே இல்லையே ஹெ ஹெ. யாருக்கும் தெரியாதே.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

பிரிச்சு மேயுறீங்க.கலக்குங்க.

பிரபாகர் said...

//புகையாய்ப் ப‌னி க‌விந்த‌
ஓர் காலைப் பொழுதில்
தெளிவ‌ற்ற‌ தேவ‌தையாய்
வெண்ணிற‌ச் சூடியில்
ப‌ன்னிற‌ துப்ப‌ட்டாவுட‌ன்
நீ தூர‌த்து வான‌வில்லாய்!
//

இருபத்து ஒரு வயசு காதல் செய்யுற பையனுக்குக்கூட இது மாதிரி எழுத வராதுங்கய்யா....

பிரபாகர் said...

//
அருகில் வ‌ர
க‌ருமேக‌மாய் கூந்த‌லுக்குள்
செம்ம‌தியாய் உன் முக‌மும்
அசையாத‌ கோவில் தீப‌மாய்
புருவ‌ ம‌த்தியில் தில‌க‌மும்
//
கோவில் தீபமாய் திலகம்.... ஆஹா அழகிய கற்பனை..

vasu balaji said...

ஸ்ரீ said...

/பிரிச்சு மேயுறீங்க.கலக்குங்க./

நன்றி ஸ்ரீ.

பிரபாகர் said...

//
க‌ருவ‌ண்டுக் க‌ண்ணும்
ரோஜா நிற‌க் காது ம‌ட‌லும்
சிவ‌ந்த‌ உத‌ட்டுக்குள்
வெண்ம‌ணி முத்துக்க‌ளும்
//
ஆஹா, என்ன சொல்லாடல்!

vasu balaji said...

பிரபாகர் said...

/இருபத்து ஒரு வயசு காதல் செய்யுற பையனுக்குக்கூட இது மாதிரி எழுத வராதுங்கய்யா..../

ஆமாங்க. நேர்ல சொல்லிடுவானோ=))

vasu balaji said...

பிரபாகர் said...

/கோவில் தீபமாய் திலகம்.... ஆஹா அழகிய கற்பனை../

ம்ம்

பிரபாகர் said...

//
தேன் நிற‌ச் ச‌ரும‌மும்
தாம‌ரைப்பூ நிற‌க்
கையுள்ளும்

வான‌வில்லே
வான‌வில்லேந்தி
வ‌ந்த‌தைக் க‌ண்டு
க‌ட‌க்கும் த‌ருண‌த்தில்
//
ம்... என்ன சொல்ல. இது ஒரு பத்து வருஷத்துக்கு முன்னால கிடைச்சிருந்தா?

பிரபாகர் said...

//
க‌ண்ணுயர்த்தி வின‌வினேன்
தேவ‌தையா நீயென‌
க‌ண்தாழ்த்தி
முறுவ‌லில் சொன்னாய்
உன் காத‌லியென‌!
//
கண்ணுயர்த்தி, கண்தாழ்த்தி... அருமை...

vasu balaji said...

பிரபாகர் said...

/ஆஹா, என்ன சொல்லாடல்!/

ஆமாம். ரிஸ்கு. நேரம் சரியில்லைன்னா பல்லாடிப்போகும்=))

பிரபாகர் said...

//
~~~~~~~~~~~~~~~~
மையெழுத்து!

எல்லோரும் கண்ணுக்கு
மைதான் எழுதுகிறார்கள்
நீ மட்டும் எப்படி
மையல் எழுதுகிறாய்?
மையலெழுதிய கண்ணில் ஏனோ
பொய்யுமெழுதிப் போகிறாயடி
என்னைக் காணாதது போல்!
//
உங்களின் கவிதை மேல் எனக்கு மையல் அய்யா...

பிரபாகர் said...

//
~~~~~~~~
குழந்தையானோம்!

உன் மடியில் நானும்
என் மடியில் நீயும்
உறங்கும் கணங்களில்
குழந்தையாகி
குழந்தையாக்கும்
விந்தையெங்கு கற்றாயடி செல்லம்?
//
ம்.... நடத்துங்க... நடத்துங்க

vasu balaji said...

பிரபாகர் said...


//ம்... என்ன சொல்ல. இது ஒரு பத்து வருஷத்துக்கு முன்னால கிடைச்சிருந்தா?//

=))

பிரபாகர் said...

//
~~~~~~~~~~~
உயிர்-மெய்!

உன் பெயரில் எல்லாம்
உயிரெழுத்துக்கள்
அதை உச்சரித்தே உயிர் வாழ்கிறேன்
என் பெயரில் எல்லாம்
மெய்யெழுத்துக்கள்
சொல்லிப் பாரென் காதலைச் சொல்லும்
இலக்கணம் பேசாதே என்னவளே
காதல் என்று இலக்கணத்துக்கு கட்டுப்பட்டது?
//
உயிர்-மெய்... அருமையான விளக்கம் அய்யா...

vasu balaji said...

பிரபாகர் said...

/கண்ணுயர்த்தி, கண்தாழ்த்தி... அருமை.../

நன்றிங்க

பிரபாகர் said...

//
~~~~~~~~~~~~~~~
தவம்!

மோட்சம் வேண்டி
மோனத் தவமிருந்த
முனிவனைக் கடந்து போனாயா நீ?
உன் வாசம் தந்த தெளிவில்
காதலே மோட்சத்துக்கு வழியென
கதறித் தவிக்கிறான் பார்!
//
கதறித் தவிக்கிறான்?... காதல் படுத்தும் பாடு..

vasu balaji said...

பிரபாகர் said...

/உங்களின் கவிதை மேல் எனக்கு மையல் அய்யா.../

அப்ப இவ்வளவு நேரம் சொன்னது மயக்கத்துல தானா அவ்வ்வ்வ்வ்வ்வ்.

vasu balaji said...

பிரபாகர் said...

/ம்.... நடத்துங்க... நடத்துங்க/

ஹிஹி

vasu balaji said...

பிரபாகர் said...

/உயிர்-மெய்... அருமையான விளக்கம் அய்யா.../

ம்ம்ம்.

ஈரோடு கதிர் said...

//பிரபாகர் Says:
ம்.... நடத்துங்க... நடத்துங்க//


ம்ம்ம் பிரபா... பாலண்ணா

எழுதறத பார்த்தா உங்களுக்கு அந்த பில்டப் ஞாபகத்துக்கு வரல!!!???

பிரபாகர் said...

//
~~~~~~~~~~~~~~~~
என்னவள்!

யுக யுகமாய்
உன்னைக் காதலித்திருக்கிறேன் போலும்..
அதனால்தான் உன்னைக் கண்ட நொடியில்
யாரிவள் எனக்கேட்காமல்
உன்னவள் என்றதென் மனது!
//
யுகக் காதல்...? நல்ல விளக்கம் அய்யா! தப்பா நினைச்சிக்காதீங்க.... ஒவ்வொரு வரியும் பாதிப்பா ஏற்படுத்தினதுல.... ஓவரா உணர்ச்சிவசப்பட்டுட்டேன்...

மொத்தத்தில் வழக்கம்போல சூ.............ப்பர்.

vasu balaji said...

பிரபாகர் said...

/கதறித் தவிக்கிறான்?... காதல் படுத்தும் பாடு../

கண்ணீரில்லாத காதல் ஜெயிக்காதே!

vasu balaji said...

ஈரோடு கதிர் said...

/ம்ம்ம் பிரபா... பாலண்ணா

எழுதறத பார்த்தா உங்களுக்கு அந்த பில்டப் ஞாபகத்துக்கு வரல!!!???/

ஆஆஆ. மருந்து குடிக்கும்போது குரங்கு நினைப்பா.

ஈரோடு கதிர் said...

//க‌ண்ணுயர்த்தி வின‌வினேன்
தேவ‌தையா நீயென‌
க‌ண்தாழ்த்தி
முறுவ‌லில் சொன்னாய்
உன் காத‌லியென‌! //


பாருடா.... இது கவிதை...

நீயெல்லாம் ஒரு யூத்... (அட நம்புங்கண்ணே)

வெடிய வெடிய மியூட்ல வச்சி பாட்டு பார்த்தாலும் கவித வராதே

vasu balaji said...

பிரபாகர் said...

/யுகக் காதல்...? நல்ல விளக்கம் அய்யா! தப்பா நினைச்சிக்காதீங்க.... ஒவ்வொரு வரியும் பாதிப்பா ஏற்படுத்தினதுல.... ஓவரா உணர்ச்சிவசப்பட்டுட்டேன்...

மொத்தத்தில் வழக்கம்போல சூ.............ப்பர்./

=)). சரி சரி

ஈரோடு கதிர் said...

//உன் வாசம் தந்த தெளிவில்
காதலே மோட்சத்துக்கு வழியென
கதறித் தவிக்கிறான் பார்!//

யம்மா... இப்படியுமா எழுதுவீங்க

சூப்பர்

vasu balaji said...

ஈரோடு கதிர் said...

/பாருடா.... இது கவிதை...

நீயெல்லாம் ஒரு யூத்... (அட நம்புங்கண்ணே)

வெடிய வெடிய மியூட்ல வச்சி பாட்டு பார்த்தாலும் கவித வராதே/

இது நல்லா இருக்கே.=))

vasu balaji said...

ஈரோடு கதிர் said...
/யம்மா... இப்படியுமா எழுதுவீங்க

சூப்பர்/

நன்றி.

நசரேயன் said...

//யுக யுகமாய்
உன்னைக் காதலித்திருக்கிறேன் போலும்..
அதனால்தான் உன்னைக் கண்ட நொடியில்
யாரிவள் எனக்கேட்காமல்
உன்னவள் என்றதென் மனது!//

ஏன் இப்படி ?

vasu balaji said...

நசரேயன் said...

/ஏன் இப்படி ?/


ஏன் எப்படி?=))

Unknown said...

//அசையாத‌ கோவில் தீப‌மாய்
புருவ‌ ம‌த்தியில் தில‌க‌மும்//

அடடா

//வான‌வில்லே
வான‌வில்லேந்தி
வ‌ந்த‌தைக் க‌ண்டு//

அழகு

//யுக யுகமாய்
உன்னைக் காதலித்திருக்கிறேன் போலும்..
அதனால்தான் உன்னைக் கண்ட நொடியில்
யாரிவள் எனக்கேட்காமல்
உன்னவள் என்றதென் மனது!//

அருமை

அன்புடன் புகாரி

vasu balaji said...

அன்புடன் புகாரி said...

/அருமை

அன்புடன் புகாரி/

நன்றி புகாரி.

கலகலப்ரியா said...

அட அட...! காதல் ரசம் சொட்டுகிறது சார்...! தாமதத்திற்கு மன்னிக்கவும்...! அலுவலகத்திலிருந்து இப்போதான் வந்தேன் ஐயா..!

vasu balaji said...

கலகலப்ரியா said...

/அட அட...! காதல் ரசம் சொட்டுகிறது சார்...! தாமதத்திற்கு மன்னிக்கவும்...! அலுவலகத்திலிருந்து இப்போதான் வந்தேன் ஐயா..!/

ஹி ஹி நன்றி. இதென்னா. ரெண்டாம்க்ளாஸ் பொண்ணு மாதிரி தாமதத்திற்கு மன்னிக்கவும், ஐயா எல்லாம்=))

அது சரி(18185106603874041862) said...

me the 80ththu :0))))

ஈ ரா said...

//யுக யுகமாய்
உன்னைக் காதலித்திருக்கிறேன் போலும்..
அதனால்தான் உன்னைக் கண்ட நொடியில்
யாரிவள் எனக்கேட்காமல்
உன்னவள் என்றதென் மனது!
//

-) சூப்பர்

புலவன் புலிகேசி said...

//உன் மடியில் நானும்
என் மடியில் நீயும்
உறங்கும் கணங்களில்
குழந்தையாகி
குழந்தையாக்கும்
விந்தையெங்கு கற்றாயடி செல்லம்?//

காதல் கசிந்து வழிகிறது ஐயாவுக்கு...அருமை ஐயா..

நர்சிம் said...

காதல் வெள்ளம்..

ஆரூரன் விசுவநாதன் said...

பாலாண்ணே.....கலக்கல்......

ஊடகன் said...

ஐம்பதிலும் காதல் கவிதையா..........

ம்ம்..... நடக்கட்டும்.....நடக்கட்டும்.....

S.A. நவாஸுதீன் said...

அனைத்தும் அருமை சார்

Unknown said...

அண்ணா... என்ன பழைய பீலிங்கா ... வீட்டு அட்ரெஸ் குடுங்கோ ஒரே ஒரு லெட்டர் போடணும்... ஹி ..ஹி..

மணிப்பயல் said...

கவிதைகள் நல்லாத்தான் இருக்குது.
எனக்கு இந்தமாதிரி ரொமான்டிக் கவிதைகள் எழுத வராது.
.....
கனவினிலே வாங்கி வந்தேன்-
காதலிக்காக ஒரு ஏசி காரு.
கண்விழித்துச் சாப்பிட்டேன்-
குண்டானில் பழைய சோறு.
........

போன மாதம் செய்த பொங்கலை
பொட்டலமாய் கட்டி வந்து-
உனக்காக நானே சுடச்சுட செய்தது என்று-
தின்னச் சொன்னாள் என் கையில் தந்து.
தின்னவுடன்—-
பட்டாசு சத்தம்தான்
வயிற்றுக்குள் கேட்குதடி.
போனேன் நொந்து.
கக்கூசு கட்டணத்தில்
கடனாளியானேனே-
காலரா வந்து.

.........

இந்த மாதிரி காமெடி கவிதைகள்தான் எழுத வருது.
அவ்வ்வ்வ்வ்வ்............

vasu balaji said...

நர்சிம் said...

/காதல் வெள்ளம்../

நன்றி நர்சிம்:)

vasu balaji said...

அது சரி said...

/ me the 80ththu :0))))/

:o நீங்களுமா ஸார்=)))

vasu balaji said...

ஈ ரா said...
/-) சூப்பர்/

நன்றி ஈ.ரா

vasu balaji said...

புலவன் புலிகேசி said...

/காதல் கசிந்து வழிகிறது ஐயாவுக்கு...அருமை ஐயா../

கவிதைக்கு;)..நன்றி புலிகேசி

vasu balaji said...

ஆரூரன் விசுவநாதன் said...

/பாலாண்ணே.....கலக்கல்....../

நன்றி ஆரூரன்.

vasu balaji said...

ஊடகன் said...

/ஐம்பதிலும் காதல் கவிதையா..........

ம்ம்..... நடக்கட்டும்.....நடக்கட்டும்...../

ஆஹா.வயசுத்தடை இருக்கா என்னா?

vasu balaji said...

S.A. நவாஸுதீன் said...

/அனைத்தும் அருமை சார்/

நன்றி நவாஸூதீன்

vasu balaji said...

பேநா மூடி said...

/அண்ணா... என்ன பழைய பீலிங்கா ... வீட்டு அட்ரெஸ் குடுங்கோ ஒரே ஒரு லெட்டர் போடணும்... ஹி ..ஹி../

காதலுக்குதான் எதிர்ப்பு வரும் கவிதைக்கு கூடவா

vasu balaji said...

மணிப்பயல் said...

/இந்த மாதிரி காமெடி கவிதைகள்தான் எழுத வருது.
அவ்வ்வ்வ்வ்வ்............/

இது வந்தா அது வந்துடும். முயற்சி திருவினையாக்கும்

தமிழ் அஞ்சல் said...

//உன்னைக் கண்ட நொடியில்
யாரிவள் எனக்கேட்காமல்
உன்னவள் என்றதென் மனது!//





அருமை !

பின்னோக்கி said...

அற்புதம்.
அருமை.

//அசையாத‌ கோவில் தீப‌மாய்
//புருவ‌ ம‌த்தியில் தில‌க‌மும்

என்ன ஒரு அழகான உவமை. கலக்கிட்டீங்க. இந்த மாதிரி ஸ்டைல்ல பொண்ணுங்க இப்ப பொட்டு வைக்குறது இல்லை. நீங்க உங்க சின்ன வயசுல எதோ பொண்ண பார்த்துட்டு எழுதியிருக்கீங்க.

இந்த உவமை மறக்க இயலாது.

vasu balaji said...

திருப்பூர் மணி Tirupur mani said...

/அருமை !/

நன்றி

vasu balaji said...

பின்னோக்கி said...

அற்புதம்.
அருமை.

//அசையாத‌ கோவில் தீப‌மாய்
//புருவ‌ ம‌த்தியில் தில‌க‌மும்

என்ன ஒரு அழகான உவமை. கலக்கிட்டீங்க. இந்த மாதிரி ஸ்டைல்ல பொண்ணுங்க இப்ப பொட்டு வைக்குறது இல்லை. நீங்க உங்க சின்ன வயசுல எதோ பொண்ண பார்த்துட்டு எழுதியிருக்கீங்க.

இந்த உவமை மறக்க இயலாது.//

நன்றிங்க.:)